bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 28 மே, 2019

நாடாளுமன்றத்தில் உயர்சாதி ஆதிக்கம்


தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், ஒரு முக்கியமான உரையாடல் சமூகதளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய மக்களவையில் இருக்கும் சாதிகளின் பிரதிநிதித்துவம் பற்றிய உரையாடல்.

பா.ஜ.க நிலைநிறுத்துவதன் பின்னணி.


சமீபத்தில் நடந்திருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அசுர பலத்துடன் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் முயற்சிகள் படுதோல்வி அடைந்த தென் இந்தியாவில், தமிழ்நாடு முக்கியமான மாநிலம். தனக்கான அரசியல் என்னவென்று எல்லா காலத்திலும் தொடர்ந்து தமிழ்நாடு பறைசாற்றியே வந்திருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.,வின் தலைமையில் அமைந்திருக்கும் அரசாங்கம் யாருக்கான அரசாங்கமாக அமைகிறது என்பதை அவதானிப்பதிலிருந்து உண்மையை நாம் பெற்றிட முடியும்.

பா.ஜ.க தலைமையில் அமையவிருக்கும் மக்களவையில், பெரும்பான்மையான பிரதிநிதிகள் உயர்சாதியினர். சமூகதளங்களில் தொடங்கிய உரையாடலைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
அக்கட்டுரையில், பா.ஜ.க.,வின் உயர்சாதித்தன்மையைத் தோலுரித்து காட்டியிருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க போட்டியிட்ட 147 பொது தொகுதிகளில் இருந்து 80 உயர்சாதி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் 33 பேர் பிராமணர்கள்.
30 பேர் ரஜபுத்திரர்கள்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்க காரணமாக இருந்தன. இந்தி மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையெடுக்க தொடங்கிய பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையத் தொடங்கி தற்போதைய மக்களவையில் மிக குறைந்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
அதற்கு இந்தத் தேர்தலில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி தோல்வியே எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் இந்தி பேசும் மாநிலங்கள் தற்போது உயர்சாதிகளின் கையிலிருக்கின்றன என்பது உவப்பான செய்தி அல்ல.

கலைஞரின் ஆதரவோடு வி.பி சிங் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளே தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான அரசியலை முன்னெடுக்கும் தேவையை உருவாக்கியது.

ஆனால், உயர்சாதி ஆதிக்கத்துக்கு எதிரான சித்தாந்தமாக அந்த தேவை உருமாறாமல் தேங்கியதால், தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவமும் வளர்ச்சியும் இந்தி பேசும் மாநிலங்களில் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இனி வரும் இந்திய அரசியலுக்கான அடிப்படையாக இருக்கவிருக்கும் காரணியை, இந்தப் பிரதிநிதித்துவ திருட்டை ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.
 இந்தி பேசும் மாநிலங்களில் 20%க்கும் குறைவாகவே இருக்கிற உயர்சாதிகள், பிற சாதியினருக்கான பிரதிநிதித்துவத்தை அபகரித்து அதிக பிரதிநிதித்துவத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதற்கான ரகசியம் ஒன்றுதான். ‘இந்து’ என்கிற அடையாளத்தை சொல்லி, தாங்களும் பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றே என்ற மாயையை உயர்சாதி பா.ஜ.க உருவாக்கியது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகளை வென்று நாடாளுமன்றத்துக்கு செல்கையில் தாங்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் என்றுமே ஒன்றில்லை என நிரூபித்திருக்கிறார்கள்.
‘இந்து’வுக்கும் ‘இந்துத்துவ’த்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
இந்து மதத்தில் இருக்கும் பெரும்பாலானோர் உயர்சாதி அல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளே. ‘உயர்சாதியினர் அதிகாரத்துக்கு வர வேண்டும். ஓட்டு போடுங்கள்’ என பா.ஜ.க வாக்கு கேட்டால், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

 ‘இந்து’ என சொல்லி தங்களை பெரும்பான்மையுடன் இணைத்து கொள்ளும் நாடகத்தை நடத்தினால் மட்டுமே வாக்கு விழும். அதையே இந்தி மாநிலங்களில் பா.ஜ.க சாதித்திருக்கிறது என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
‘இந்து’க்கள் வணங்கும் கடவுளரை, ‘இந்துத்துவம்’ பேசும் உயர்சாதியினர் வணங்க மாட்டார். ‘இந்துத்துவ’ கடவுளை கருவறையில் நின்று ‘இந்து’க்கள் வணங்க முடியாது. இந்துக்கள் பேசும் மொழி இந்துத்துவ கடவுளருக்கு புரியாது.
 இந்துத்துவ கடவுளர் பேசும் மொழி இந்துக்களுக்கு புரியாது. இந்துக்களை இந்துத்துவர்கள் தீண்டக்கூட மாட்டார்கள்.
இந்த உண்மைகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் புரியாமல் இல்லை.
சாதியை தூக்கிக்கொண்டு மக்களிடம் சென்றால், வீழ்த்தப்பட்டுவிடுவோம் என்பதைத் தெரிந்துகொண்டு, சாமானிய மக்களிடம் அவர்கள் மதத்தை தூக்கிச் செல்கிறார்கள்.
 அதுதான், அவர்களுக்கு வட நாட்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த வித்தியாசம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்ததால்தான் இந்துத்துவத்தை தேர்தலில் தீண்டவே இல்லை.
இனி வரும் இந்திய அரசியல் இந்துத்துவத்தை முன்னிறுத்தியே இருக்கப் போகிறது.

அதை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் எந்தவித எல்லைக்கும் செல்லும். குறிப்பாக இந்திய நாட்டின் பெரும்பான்மைக்கு அதிகாரமும் கல்வியும் வாழ்க்கையும் மறுக்கப்படும். அதை மறக்கடிக்க வேறு வதந்திகள் பரப்பப்பட்டு மக்கள் திசை திருப்பப்படுவார்கள்.
இடஒதுகீட்டுக்காக முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கான சூழலை மீண்டும் இந்தியா மீது பா.ஜ.க‌ திணிக்கும்.
அதை எதிர்க்க பெரியார் கண்ட தமிழ்நாட்டிலிருந்து திராவிடச் சிந்தனை வடக்குக்கு நீளூம்.
அதுவே இந்த பேராபத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கான ‘விடுதலை’.
                                                                                                                                            -
-ராஜசங்கீதன்
 நன்றி:-கலைஞர் செய்திகள்.

திங்கள், 27 மே, 2019

மக்கள் வாக்குகள் அல்ல.

 வெற்றி தந்தது!
த்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜகவை, கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றது காங்கிரஸ்.

அமோக வெற்றி இல்லையென்றாலும், காங்கிரசின் வெற்றி மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், முடிவோ முற்றிலும் வேறொன்றாக இருந்தது.
மொத்தமுள்ள 29 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

மீதமுள்ள 28 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே காவியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தபோதும் பாஜகவின் இந்த வெற்றி எப்படி, யாரால் சாத்தியமானது?

இந்தி பேசும் மாநிலங்களில் சமூகத்தின் அடிவரை ஊடுருவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ் -தான் பாஜகவின் வெற்றிக்கு முழுக் காரணி.
இத்தனைக்கும் பல பாஜக வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்தரப்பு பாஜகவினர் போராட்டங்களையெல்லாம் நடத்தினர்.
பதவியில் இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததால் பலர் அதிருப்தியில் தேர்தல் பணியாற்றவில்லை.


 போபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யா தாக்கூரை-ஐக் கூட பல பாஜகவினர் விரும்பவில்லை.
 பல பாஜக தலைவர்கள் அவருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட செல்லவில்லை. இப்படி உட்கட்சி பூசல்கள் ஒருபுறம் இருந்தபோதும்கூட இந்த வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.

இவர்கள் வெற்றிக்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்-கத்தின் நான்கு துணை அமைப்புகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
வன்வாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான், பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய நான்கு அமைப்புகள் ஒவ்வொரு நாளும் பெண்களையும் இளம் வாக்காளர்களையும் சந்தித்து மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்.

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பே ‘தேர்தல் பணி’யில் இறங்கிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மால்வா தெரிவிக்கிறார். “நாங்கள் ஆறு மாதத்துக்கு முன்பே பணியைத் தொடங்கிவிட்டோம். எந்த அரசியல் கட்சி பற்றியோ, சாதி பற்றியோ பேசவில்லை. பதிலாக, ‘தேசியவாத’த்தையும் ‘தேச பாதுகாப்பை’யும் பேசினோம்.
அனைத்து துறைகளிலும் சமூக வளர்ச்சி குறித்துப் பேசினோம். 
இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் யார் நிற்கிறார்களோ அவர்களுக்காக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டோம்” என்கிறார் அவர்.

“மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பின்னால் இருந்து பணியாற்றினார்கள். பல மாநிலக் கட்சிகளுடன் பேசி, அவர்களை ஒருங்கிணைக்க பல கூட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்” என ஒரு காங்கிரஸ் தலைவர் தெரிவிக்கிறார்.
சில பாஜக வேட்பாளர்கள் முற்றிலும் புதியவர்கள், அவர்கள் வென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதல் காரணமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலைப்பின்னல்தான் என்கிறார் அவர்.

“மோடி அலைக்கு அடுத்து, ஆர்.எஸ்.எஸ். வித்தியாசத்தை உண்டாக்கியது” என்கிறார் மற்றொரு காங்கிரஸ் தலைவர்.  “ஆர்.எஸ்.எஸ்.தான் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கையில் வைத்திருந்தது” என்கிறார் காங்கிரஸ் பிரச்சாரக்குழு தலைவர்.


ம.பி.-யின் முன்னாள் முதல்வரும் காங்கிரசின் முக்கிய தலைவருமான திக்விஜய்சிங், பிரக்யா சிங் தாக்கூரிடம் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
அந்தத் தொகுதியில் பிரக்யாவின் வெற்றிக்காக சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர்.

 மால்வா நிமாரில் ஆறு மாதங்களுக்கு முன்புதான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது ஆழமான கால் தடத்தைப் பதித்திருந்தது. ஆனால், அதை உடைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். காவி தொண்டர் படை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிப்ரவரி 19 – 22 வரை இந்தூரில் முகாமிட்டு, மூத்த தொண்டர்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்ற ஊக்கம் கொடுத்திருக்கிறார்.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், “எங்களுடைய ஆட்கள் அதிகாலையிலேயே களத்துக்குச் சென்றுவிட்டார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இந்தூருக்கு அதிக கவனம் செலுத்தினோம்.
 நாங்கள் திட்டமிட்டோம், வீடு வீடாக பிரச்சாரத்தில் இறங்கினோம்” என்கிறார்.
தேச பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றி வாக்காளர்களின் கருத்தைக் கேட்க படிவங்களைக்கூட ஆர்.எஸ்.எஸ். விநியோகித்திருக்கிறது.
 “வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி…” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.

ம.பி., குஜராத், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி கண்டதற்கும் அந்த மாநிலங்களில் சமூகத்தின் ஆழம் வரை பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ். என்னும் நஞ்சே காரணம்.
 இவர்களைப்போல் பணமதிப்பிழப்பு,விவசாயிகள் தற்கொலை,ஜிஸ்.டி ரபேல் ஊழல்,பாதுகாப்பை படைவீரர்கள் மீது தாக்குதலை தவிர்க்காதது போன்ற பல  மோடிக்கு எதிரானவை இருந்தாலும் அதை மக்களிடம் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கொண்டு செல்லாதது மிகப்பெரிய தோல்வியை தந்துள்ளது.
ராகுல் காந்தியைத் தவிர பெரிய தலைவர்கள் ஒருவரும் சரியான முறையில் பரப்புரை மேற்கொள்ளாததும்,தமிழ் நாட்டைப்போல் வலுவான இந்துத்துவா எதிர்ப்பு கட்டணியை அமைக்காததும் ,மம்தா பானர்ஜி,மாயாவதி ,முலாயம் சிங் போன்றோர் தாங்கள் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் அலைந்ததுமே அவர்களுக்கு தோல்வியை தந்தது.உள்ளது போச்சு நொள்ளைக்கண்ணா என்றாகி விட்டது.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பனி மட்டுமே வெற்றியை மோடிக்கு தூக்கித்தரவில்லை.
பாரதிய தேர்தல் ஆணையத்தின் மோசடித்தனமான வாக்குப்பத்திவ் எந்திரங்கள் மாற்றல் பணித்தான் முக்கிய காரணம்.



-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 10 மே, 2019

ஷேக்கினா.

 கேரள தொலைக்காட்சிகளில் ஒரு கத்தோலிக்க ஜிகினா !
 கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை !

ண்டைய எபிரேயு மொழியில் “ஷேக்கினா” (Shekinah) என்கிற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. கூடு அல்லது இருப்பிடம் அல்லது வசிப்பிடம் என்பது ஒரு அர்த்தம்.
 இந்த வார்த்தை பைபிளில் கிடையாது.

பண்டைய ரப்பானிய இலக்கியத்தில் உண்டு.

பண்டைய யூத மதத்தில் இருந்த பல்வேறு போக்குகளில் ஒன்றான கப்பாலிசத்தில் (kabbalism) இதே ஷேக்கினா என்கிற வார்த்தைக்கு இறையின் பெண் தன்மை கொண்ட (ஸெஃபிரா) புனிதமான ஒளி அல்லது நிலவின் ஒளி என்கிற ஒரு பொருளும் உண்டு.

இப்போது இந்த வார்த்தையைப் பற்றி ஆராய்வதல்ல எமது நோக்கம்.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி கேரள கத்தோலிக்கத் திருச்சபையின் பின்புலத்தில் துவங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியின் பெயர் ஷேக்கினா.

 பாலியல் வல்லுறவுக் குற்றங்கள், ஊழல்கள் எனத் தொடர்ந்து கேரள கத்தோலிக்க திருச்சபை அம்பலப்பட்டு, அதன் பெயர் கிறிஸ்தவர்களிடையே நாற்றமெடுக்கத் துவங்கியிருக்கும் நிலையில் தங்களைக் குறித்து நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த தொலைக்காட்சியை துவங்கியுள்ளதாக இது குறித்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடும் தனது ஒளிபரப்பைத் துவங்கியுள்ள இத்தொலைக்காட்சியில் பிற வணிக விளம்பரங்கள் இல்லை (இப்போதைக்காவது) என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒற்றுமைக்கான செய்தி, நம்பிக்கை மற்றும் புனிதம்” போன்றவற்றை மக்களிடையே பரப்புவதே தமது நோக்கம் என தொலைக்காட்சியின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது கேரளாவில் மட்டும் ஒளிபரப்பாகும் இந்தத் தொலைக்காட்சியை ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாடெங்கும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளதாம்.

“விசுவாசிகள் கெட்ட செய்திகளால் சோர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களிடையே நற்செய்தியைப் பரப்புவதன் மூலம் ஆற்றுப்படுத்தும் வேலையை ஷேக்கினா தொலைக்காட்சி மேற்கொள்ளும்” என்கிறார் அதன் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கருமாத்ரா.
 கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்பட்டு வரும் ஷேக்கினா மினிஸ்ட்ரீஸ் எனும் திருச்சபையைச் சேர்ந்த போதகராக இருக்கிறார் சந்தோஷ் கருமாத்ரா.
கேரள கத்தோலிக்க வட்டாரத்தில் அறியப்பட்ட பெருந்தலைகளான கார்டினல் ஜோர்ஜ் அலெஞ்சாரி, மறைமாவட்ட ஆயர் (ஆர்ச் பிஷப்) பேசிலியோ க்ளெமீஸ் மற்றும் திருவனந்தபுரம் ஆர்ச் பிஷப் சூசை பாக்கியம் ஆகியோரின் முன்னிலையில் இந்த தொலைக்காட்சியின் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது.
இதில் அலெஞ்சாரி ஊழல் புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஷப் ஃப்ரான்கோ முலக்கல்

கேரள கத்தோலிக்க திருச்சபையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் இழிபுகழ் பெற்ற பிஷப் ஃப்ரான்கோ முலக்கல்.
 பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் மறை மாவட்ட ஆயராக இருந்த முலக்கல், கோட்டையத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்தில் ஈடுபட்டவர்.
 கைது செய்யப்பட்ட முலக்கல் தற்போது பிணையில் விடப்பட்டுள்ளார்.

முலக்கலின் மீது பாலியல் குற்றம் சுமத்திய கன்னியாஸ்திரி, அப்பிரச்சினைக்குப் பின்னர் திருச்சபை பெருச்சாளிகளால் அடைந்த துன்பங்களை பட்டியலிட்டு மாளாது. அவரது குற்றச்சாட்டுகளுக்கு திருச்சபை தொடர்ந்து செவிமடுக்க மறுத்ததோடு அல்லாமல், அவரையே குற்றவாளிபோல் நடத்தியது.

பணி பறிக்கப்படுவது, மிரட்டல் என திருச்சபையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையிலேயே அவர் ஊடகங்களை நாடினார்.
ஊடகங்களின் மூலம் முலக்கல் அம்பலமானதைத் தொடர்ந்து மக்களிடமும் – குறிப்பாக கிறுஸ்தவர்களிடமும் – ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்தே முலக்கலின் மீதான சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இன்றைக்கும் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரியின் ஒழுக்கத்தை கேடாக சித்தரிக்கும் வேலையில் திருச்சபை ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம், கைது செய்யப்பட்ட முலக்கல் பிணையில் வெளியான போது அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர் திருச்சபையினர்.
 என்றாலும், பொதுமக்களிடையே பெயர் நாறிப் போயிருப்பதால் தற்காலிகமாக முலக்கலை “ஆன்மீகப்” பணிகளில் இருந்து விடுவித்திருப்பதாக அறிவித்துள்ளது வாடிகன்.

திருச்சபையின் வெள்ளுடை பொறுக்கிகளின் காமக் களியாட்டங்களை மறைக்கும் திரைச்சீலையாகவே ஷேக்கினா தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. என்றாலும், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார் அதன் நிர்வாக இயக்குனர் கருமாத்ரா.
தங்களுடைய தொலைக்காட்சி மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் கூலி வேலை செய்யும் சாதாரண மக்களுடைய நிதிப் பங்களிப்புடன்தான் துவங்கப்பட்டுள்ளது என்கிறார் கருமாத்ரா.
கருமாத்ராவின் நைச்சியமான விளக்கத்தை ஷேக்கினா தொலைக்காட்சியின் புரவலர்கள் பட்டியலே அம்பலப்படுத்துகின்றது.

 கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்ட ஆயர்கள் ஆண்ட்ரூ தாழத், ஜோசஃப் கலதிபரம்பில், ரஃபேல் தாட்டில், சாமுவேல் மார் போன்றோர் ஷேக்கினா தொலைக்காட்சியின் புரவலர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். துவக்க நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர்கள் கருத்து ரீதியில் ஆதரவாக இருப்பார்களே ஒழிய தொலைக்காட்சியின் கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டார்கள் என பதிலளித்துள்ளார் கருமாத்ரா.

 முலக்கல் விவகாரத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்கிய கருமாத்ரா, தங்கள் தொலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடைய எல்லா தரப்பினரின் குரல்களுக்கு இடமளிக்கும் என்றும் அந்த வகையில் முலக்கல் தனது தரப்பு உண்மைகளை விளக்க வாய்ப்பளித்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கத்தை “அப்பன் குதிருக்குள் இல்லை” என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஷேக்கினா என்பது இறைவியின் ஒளி என்கிறது பண்டைய யூத மதத்தின் ஷப்பாலா மரபு; இவர்களோ திருச்சபை மைனர்களின் களியாட்டங்களுக்கு பிடிக்கும் விளக்கின் ஒளி என்கிறார்கள்.

நமக்கு கடவுளின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை – உண்மையில் கடவுள் இருப்பது உண்மையெனில் ஷெஃபீராவின் ஒளி முதலில் இந்த அயோக்கியர்களை அல்லவா பொசுக்கியிருக்க வேண்டும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...