bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 2 மே, 2011

ஒசாமாவைத் தீர்த்த ஒபாமா....

ஒசாமா பின்லேடன் உயிரிழந்து விட்டார்.                                                                                                  2001ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் திகதி அமெரிக்கா தாக்குதல் சம்பவம் மற்றும் பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஒசாமா பின்லேடன், அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி.
சிறிது நேரத்திற்கு  முன்னர் அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமாவினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போதே ஒசாமா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும். அவரது உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பின்லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க இராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.
பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.

இஸ்லாமிய முறைப்படி உடல் அடக்கம் நடந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடலில் உடலை வீசியது அமெரிக்கா.

மெரிக்காவினால்தான் ஒசாமா பின் லேடன் வளர்த்துவிடப்பட்டான்.ஆப்கானிஸ்தானை சோவியத் ரஷ்யாவின் பிடியில் இருந்து தான் கைப்பற்றவே ஒசாமாவை அமெரிக்கா தேர்ந்தேடுத்தது.
அவனுக்குத்தேவையான தீவிரவாதப் பயிற்சிக்களை அமெரிக்காதான் கற்றுக்கொடுத்தது.
ஏராளமான பொருளுதவியும்,ஆயுத உதவியும் செய்தது. கொரில்ல முறையில் சோவியத் படையுடன் மோதினான் ஒசாமா.
கடைசியில் சோவியத் சிதைந்து போனது.வரம் கொடுத்த அமெரிக்காவையே எதிரியாக்கிக் கொண்டது தாலிபான்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் மூலம் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாகிவிட்டான். முதலில் பத்து லட்சம் பின்25 லட்சம் மில்லியன் ஒசாமாவின் தலைக்கான விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்தது. இன்று அவன் கதை முடிந்தது.ஆனால் பாகிஸ்தானின் இரு வேட நடிப்புதான் இக்கதையில் மிக நன்றாக இருந்தது.
ஒரு பக்கம் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒசாமாவைத்தேடியது[?] மறு பக்கம் அவனுக்கு தனி பங்களா அமைத்து பாதுகாத்தது. இரு வேடங்களிலும் ஆஸ்கார் அளவிற்கு தூள் பறத்தியது.
         அமெரிக்கா அப்படியே அங்கிருக்கும் இந்திய தீவிரவாதி தாவூத் இப்ராகிமையும் கண்டு பிடிக்குமா?

ஒசாமா பின் லேடன்
அல்கைதா அமைப்பின் தலைவர், நிறுவநர் என்ற வகையில் கடந்த பல ஆண்டுகளாக எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் ஒசாமா பின்லேடன்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு மேற்குலகில் வாழும் பலரைப் பொறுத்தவரை உலக பயங்கரவாதத்தின் வடிவமாக அவர் திகழ்கிறார். ஆனால், ஏனையவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு காதாநாயகன். ஜிகாத் புனிதப் போரின் பெயரால், உலகின் இரண்டு வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய ஒரு உண்மையான முஸ்லிம் அவர்.

சவுதியில் கட்டுமானத் தொழில் துறையில் பிரபலமாக விளங்கும் ஒரு செல்வந்த குடும்பத்தின் ஒரு மகனாகப் பிறந்த பின்லேடன், பல வகைகளிலும் மிகுந்த செல்வச் செழழிப்புடன் வாழ்க்கையை நடத்தியவர். சவுதி அரேபிய வீதிகளில் 80 வீதமானவற்றைக் கட்டியது இந்த குடும்பத்தின் கட்டுமான நிறுவனந்தான். 52 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் 17 வது குழந்தையாக, 1957 இல் பிறந்தவர் ஒசாமா பின் லேடன்.


பாகிஸ்தான் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்
பாகிஸ்தான் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்
ஆனால், ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்த போது, முஜாஹிதீன் அமைப்பில் இணைந்து அங்கு போராடச் சென்று விட்டார் பின்லேடன். அங்கு தன்னை பின்பற்றிய அரபுக்களுடன் இணைந்துதான் பின்னாளில் அவர் அல்கைதாவை உருவாக்கினார்.

பின்னர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த அவர், சவுதி ஆட்சியாளர்கள், குவைத் மண்ணில் இருந்து சதாம் ஹூசைனின் படைகளை விரட்டுவதற்காக சவுதி மண்ணில் அமெரிக்க படைகளை இடம் தரவே, அதனை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.

1998 இல் அவர் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எதிராக போரை பிரகடனம் செய்தார்.

பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் என்று வேறுபாடின்றி அனைத்து அமெரிக்க இலக்குகளும் தாக்கப்படும் என்று தனது மத ஆணையில் அவர் தெரிவித்திருந்தார்.


அதே ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட பல குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பின்லேடன் இருந்ததாகவே பரந்துபட்ட அளவில் நம்பப்பட்டது. அதற்குப் பதிலாக அதிபர் கிளிண்டனின் நிர்வாகத்தால், அவரது ஆப்கானிஸ்தான் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பிவிட்டார். அந்த தளத்தின் மீது ஏவுகணை தாக்குவதற்கு சற்று முன்னர்தான் அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

2000 ஆம் ஆண்டில் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'யூ எஸ் எஸ் கூல்' என்ற பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க போர்க்கப்பலில் அவரது அல்கைதா அமைப்பு ஒரு பெருந்துவாரத்தை போட்டு விட்டது.

அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் பயணிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கிலும், வாசிங்டனிலும் மோதச் செய்து பெருந்தாக்குதல்களை அல்கைதா அமைப்பினர் நடத்தினார்கள். அதனை அடுத்து ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ் உறுதிபூண்டார்.


ஆனால், அவரது தலைக்கு 27 மில்லியன் டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை ஒரு உன்னதராக ஆராதிக்கும் மக்கள் பலைரைக் கொண்ட பாகிஸ்தானில், ஆப்கான் எல்லை ஓரமாக இருக்கும் பழங்குடியின மக்கள் அவர் மீது மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால், தன்னை தேடுபர்வகளை பல காலமாக அவர் ஏமாற்றி வந்தார்.

உலகிலேயே மிகவும் அதிகமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மிகவும் அபூர்வமாக அறிக்கைகளை இணையத்தில் பிரசுரித்து வந்தார். அத்துடன் தனது அல்கைதாவின் ஆன்மீக தலைமைத்துவத்தை தன்னை ஆலோசனை கூறி வழிநடத்துபவரான எகிப்திய இஸ்லாமியவாதியான டாக்டர். அய்மன் அல் ஷவாஹிரி அவர்களிடம் பின்லேடன் விட்டுவிட்டார்.

ஆனால், மேற்குலகின் மற்றும் மிதவாத அரபு நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான வன்செயல்களுக்கு தன்னை பின்பற்றும் எண்ணிக்கையில்லாதவர்களை இட்டுச் சென்ற ஒருவராக, தான் இறந்த பல வருடங்களின் பின்னரும் அவர் கருதப்படுவார்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...