bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 18 ஏப்ரல், 2019

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.

இடதுசாரி அரசியலே தீர்வைத் தரும்
அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி தவிர வேறு குறுக்கு வழி கிடையாது. இன்று  எல்லா நாட்டு மக்களும் பயனடைய புதிய உலக வர்த்தக உறவை உருவாக்க போராடும் நாடுகளோடு நாமும் இணையாமல் மீட்சி இல்லை. சுருக்கமாக இந்த ஞானம் ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும். அல்லது இந்த ஞானம் உள்ளவர்களை ஆட்சி யில் அமர்த்த வேண்டும்.
(2) இடதுசாரிகளின் போராட்டமும், சந்திக்கும் பிரச்சனைகளும்
இன்றையத் தேதியில் அந்நிய முதலீடு என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உருவாக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகையே மீட்கும் ஆற்றல் இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குத்தான் உண்டு. ஆனால் இன்றைய இந்திய அரசின் நிலைபாடு உலகை மீட்க கிடைத்த வாய்ப்பை கவனியாமல் நெருக் கடி குழியில் விழவே சில்லரை வர்த்தகத்திலும் அந்நிய முதலீடு என்கிறது.அதற்கு காரணம், நமது நாட்டு பெருமுதலாளி வர்க்கமும், அவர்க ளால் பராமரிக்கப்படும் அமைச்சர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்களும் அந்நிய முதலீட்டு மோகத்தில் வீழ்ந்து கிடப்பதே
ஒரு காலத்தில் நமது நாட்டு பெரு முத லாளிகள் தங்களது வளர்ச்சிக்கு குந்தகம் விளை வித்த அந்நிய முதலீடுகளை எதிர்த்து  போராடி னார்கள். இன்று கனவு உலகில் சஞ்சரிக்கி றார்கள். சோவியத் யூனியன் மறைவால் மேலை நாட்டு பணத்திமிங்கலங்களோடு  பேரம் பேசும் ஆற்றல் பறி போய்விட்டதை மறந்து விட்டனர். இன்று கூட்டணி வைக்கவும், அவர்களோடு சேர்ந்து உலகளவில் பணத்தை பெருக்க வாய்ப்பு வந்ததாக கனவு காண்கின்றனர். எதையும் பண மாக்கி பெருக்கும் ஆசைதான் தொத்து நோயாக பரவி மேலை நாட்டை உலுக்கி வரும் எதார்த்த நிலையை பார்க்கவே அவர்களுக்கு பிடிக்கவில்லை. வட்டார அரசியல் கட்சிகளும், அதி கார மையத்தை ஆட்டிப்படைக்கும் பெருமுத லாளிகளும் அந்நிய முதலீட்டு வருகையை வரவேற்கிற பொழுது,இடதுசாரி அரசியல் கட்சிகளின் வழி காட்டலில் உழைப்பாளி, விவ சாய மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட   அரசியல் இயக்கமே சரியான தீர்வை காணமுடியும்.
நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள்
அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று பேசிய கட்சிகள் அனைத்தும் நாடாளு மன்றத்தில் எதிர்த்து வாக்களித்து இருந்தால் 282  வாக்குகள் எதிராக பெற்று அரசின் தீர்மானம் தோற்று இருக்கும். அதேநேரம் அரசிற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்காது. இடதுசாரிகள் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானத்தை தோற்கடிக்கவே வியூகம் வகுத்தனர். அரசை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கில்லை என்பதை துவக்கத்திலேயே அறிவித்து தங்களது முயற்சிக்கு ஆதரவு திரட்டினர். இடதுசாரிகள் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு வேண்டு கோள்விட்டனர். நாடாளுமன்றத்தில் உங்களது உறுப்பினர் அளிக்கிற வாக்கால் யார் பயனடைவார்கள் என்பதை பரிசீலித்து வாக்களியுங்கள், அந்நிய முதலீடு என்ன நோக்கத்தோடு வருகிறது என் பதையும் கணக்கிலெடுங்கள். பிற நாட்டு அனுபவங்களை கவனியுங்கள் என்று வலுவான அடிப்படைகளை காட்டி நேர்மையாக போராடின. ஆனால் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக  கூறிய கட்சிகள் சில அதற்கு விசுவாசமாக இல்லை..
அதே வேளையில் கட்சிகளின் வர்க்க தன்மை,  அரசியல் தலைவர்களின் சொல்லிலும் செயலிலும் உள்ள முரண்பாடுகள், இடதுசாரிகளின் எதிர் நீச்சல் எல்லாம் ஊடகங்களின்  உதவியால்  மக்கள் காண நேரிட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்குள் கடந்த 20 வருடங்களாக  உருவாகி வரும் ஒரு அரசியல் அசிங்க கலாசாரத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் அறிய நேர்ந்துள்ளது.
ஒரு அரசியல் நிபுணர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் சொல்லும் செயலும் பல ரகமாக இருந்தது என்பதை பட்டியலிடுகிறார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆளும் அணிக்குள் இருந்துகொண்டே வாயால் எதிர்ப்பு காட்டுகிற கட்சிகள், எதிர்கட்சிகளில் அரசையும் அந்நிய முதலீட்டையும் எதிர்க்கும் கட்சி, அந்நிய முதலீட்டை ஆதரித்து அரசை எதிர்க்கும் கட்சி , எதிர்ப்பதாக கூறி வாக்களிக்க மறுக்கும் கட்சி என்று பலமுனை தர்பாராக நாடாளுமன்றம் விவாதம் நடந்ததாக குறிப்பிடுகிறார். 38 கட்சிகள் அங்கம் பெறும் நாடாளுமன்றத்தில் சில கட்சிகள் நடத்திய கூத்தே அரசின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு திணிப்பு முயற்சிக்கு ஓ போட்டுள்ளது.
543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 254 உறுப்பினர்களே அந்நிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அப்படி வாக்களித்தவர்களிலும்  அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம். ஆனால் அரசை காப்பாற்றவே வாக்களிக்கிறோம் என்று சொன்ன கட்சிகளும் உண்டு.மனசாட்சிபடி வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தால் அந்நிய முதலீட்டை ஆதரித்து மன்மோகன் சிங்கை தவிர, தேர்தலில் சந்திக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு பயந்து யாரும் வாக்களித்திருக்க மாட்டார்கள்.
பொதுமக்களின் மனத் தவிப்பை புரிந்து கொண்ட மம்தா, ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் அந்நிய முதலீடா! எங்க ஏரியா உள்ளே விடமாட்டோம் என்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை நம்பி நிற்கிற  மாநில அரசுகள் அன்றாட செலவிற்கே, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கும், கடனுக்கும் மனுப் போட்டு காத்திருப்பவர்கள் எப்படி தடுப்பார்கள்(!) . அந்நிய முதலீடு என்ன லாரியிலா வருகிறது மாநில எல்லைக்குள் நுழைவதை தடுக்க என்று நிபுணர்கள் முதலமைச்சர்களின் சந்தை பொருளாதார ஞானம் சூன்யமாக இருப்பதை பார்த்து  புருவத்தை உயர்த்தி அவதூறு வழக்கிற்கு பயந்து ஓரமாக நின்று சிரிக்கின்றனர். அந்நிய முதலீடு மொத்த வர்த்தகத்தை கைப்பற்றுவதின் மூலமும், ஆன்லைன் மூலமும் வருகிறது என்பதை காண இயலாத தமிழக முதலமைச்சரின்  முழக்கம் வீறாப்பல்ல வெறும் பசப்பு என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. வால்மார்ட் நுழைவு மூலம் மொத்த வர்த்தகத்தை அந்நிய முதலீடுக்கு பலியிட அனுமதித்த பிறகு சில்லரை வர்த்தகம் என்னவாகும் என்பதை அம்மாவிற்கு நன்றாகவே தெரியும்.
கரன்சி புழக்கத்தை ஒழுங்கமைக்கும் அதி காரம் யார்கையிலே இருக்கிறதோ அவர்களே அந்நிய முதலீடு நுழைவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும். அந்த அதிகாரம்  மத்திய அரசின் கையிலே உள்ளது. மத்திய அரசின் பணப் புழக்க கோட்பாடு மாற்றமே பாதிப்பை தடுக்க முடியும். மாநில அரசுகளின் இந்த வீறாப்பு வெறும் வீண் பேச்சே, மத்திய அரசின்  கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கும் இடதுசாரிகளோடு  நிற்காமல் இந்த வீறாப்பால்  ஒரு துரும்பை கூட  அசைக்க இயலாது.
இன்று இந்தியாவில் உலக அளவில் மவுசுள்ள பங்குகளை கொண்ட பங்கு நிறுவனங்கள் குறைவு. பொதுத்துறை நிறுவனங்களை பங்கு நிறுவனங்களாக மாற்றினாலும் போதாது. மேலும்  சில சரக்குகளே பியுச்சர்களாக  உள்ளன. எனவே இந்திய பங்கு சந்தையில் புகுவதை விட சரக்கு சந்தையில் புகுவது உடனடியாக சாத்தியம் என்பதால் அந்நிய முதலீடுகளை  சில்லரை வர்த்தகத்தில் புகுத்துவது  என்ற பெயரில் மொத்த வர்த்தகத்தை முழுங்க வருகிறது.
அந்நிய முதலீட்டின் நோக்கம் எதுவாக இருந்தாலென்ன, நமக்கு கொஞ்சம் நல்லது நடந்தால் போதாதா? கொஞசம் பேருக்கு வேலையும், கொஞ்சப்பேர்  பணத்தை குவிக்கவும் புதிய வழிகள் பிறக்கின்றன அது போதாதா? என்று பரவலாக  கருதுவதால் ஏற்படும் ஆபத்தையும் இடதுசாரிகட்சிகள் உணர்ந்திருப்பதால்  பொருளாதாரம் பற்றிய ஞானத்தை உழைப்பாளி மக்களுக்கு உணர்த்த விரிவான பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பின்  தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (L.P.G) என்ற முழக் கத்தின் உண்மை பொருள் கொள்ளை அடி (Loot) ஏழையாக்கு (Pauperize) டாலரால் ஆட்சி செய் (Gover) என்பதை அந்த பிரச்சாரம் அம்பலப்படுத் தும். அதோடு தீர்வுகள் பற்றி தெளிவான பார்வையும் கொடுப்பதே அந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். மூலதனம் என்பது ஒரு சொத்தல்ல. அது ஒரு சமூக சக்தி என்ற விஞ்ஞான பார்வையைப் பெற அதன் வரலாற்றை மக்கள் அறிவது அவசியம். அடுத்த பகுதி அதை விளக்குகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள சில வாக்கியங்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. அது மூலதனத்தின் இயக்கத்தை புரிவதற்கு உதவும்.
(3)
மூலதனத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
மேலை நாடுகளில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து பொருளாதாரம் என்றால் பொருள் உற்பத்தி, நுகர்வு, பரிவர்த்தனை, விநியோகம் ஆகிய நான்கு கூறுகளை பற்றியதா அல்லது செல்வத்தை திரட்டும் கலையா என்ற சர்ச்சை நடந்து வருகிறது. ஒரு பக்கம் தத்துவ ஞானிகள் இதுவா, அதுவா என்று மோதிக் கொண்டே இருக்கும் பொழுதே 15ம் நூற்றாண்டிற்கு பிறகு வர்த்தகத்தின் மூலம்  தங்கம் வெள்ளியை  திரட்டுவதே செல்வமாகும் என்ற கருத்து (அதாவது பொரு ளாதாரம் என்றால் செல்வம் சேர்க்கும் கலையே) ஐரோப்பிய சமூகத்தை கவ்வியது. பின்னர் அதுவும் மலையேறி, அரசு உத்திரவாதம் செய்யும்  தாள் பணம் கொண்ட சூட் கேஸ்களே செல்வமானது. இன்று அதுவும் போய் எதையும் வங்கிகளிலே கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் பணமாக்குவதே செல்வமாக கருதும் கட்டத்திற்கு உலகமே வந்துவிட்டது. இந்த திகில் நிறைந்த வரலாற்றை சுருக்கமாக இங்கே பார்ப்பது அவசியம்.
இன்று சினிமாக்கள், இலக்கியங்கள், விஞ்ஞானம் இவைகளே நாடுகளை இணைக்கும் பாலமாகவும் பயன்படுவதைப் போல, 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் கடல் கடந்த வர்த்தகம் என்பன மக்களிடையே பாலமாக இருந்தன. வர்த்தகம் பண்பாடுகளை இணைத்தது. இருக்கிற பொருளை கொடுத்து இல்லாத பொருளை பெற உதவி யது. அதோடு அறிவு வளர உதவியது., இத்தாலி நாட்டு மார்க்கோ போலோ போன்ற  வணிகர் கள் சீனா, இந்தியா வந்து கொண்டு போன தங்கம், வெள்ளியை விட அறிவு சொத்தே , மேற்கே விஞ்ஞானம் பிறக்க வழி கோலியது. இந்திய பூஜ்ஜியத்தை வைத்து தசாம்ச எண் கணித முறை ஐரோப்பாவிற்கு வர்த்தகர்கள் மூலம் போகவில்லையானால் நவீன வானசாஸ்திரம் பிறந்திருக்காது. நவீன வான சாஸ்திரம் இல்லையானால்  ஐரோப்பியர்களால்  7 கடல்களை இணைக்கும் மார்க்கங்களை கண்டு பிடித்திருக்க முடியாது.  நியூட்டனின் கண்டுபிடிப்பே மலிவான தரமான சரக்குற்பத்தி செய்ய வேண்டும் என்ற வர்த்தகர்களின் உந்துதலே அடிப்படை காரணமாகும். படையெடுத்து கொள்ளை அடிக்காமலே தங்கத்தையும் வெள்ளியையும் திரட்டும் வழிகளை  ஐரோப்பியர்கள் புராதன இந்தியாவிடமிருந்தே கற்றனர். தங்க சுரங்கமே அவ்வளவாக இல்லாத இந்தியாவில் படைபலமும் அவ்வளவாக இல்லாத மன்னர்கள் வசம் தங்கம், வெள்ளி மலை போல் திரள வர்த்தகம் உதவியதை கண்டனர்.  இந்தியா காட்டிய வழியில் சரக்கு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தி வர்த்தகம் மூலம் தங்கத்தை திரட்டுவதை பிரிட்டன் முதன்மைபடுத்தியது. மற்ற ஐரோப்பிய மன்னர்கள் கடற் கொள்ளையை முதன்மைபடுத்தினர். ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்களும் விஞ்ஞானத்தை புகுத்தி சரக்குகளை மலிவாக தயாரிக்க போட்டி போட்டனர். பங்கு நிறுவனங்கள் மூலம் தொழில்களை வளர்த்தனர். ஆனால் உழைப்பாளி மக்கள் வறுமையை தழுவ தள்ளப்பட்டனர். இப்பொழுது வர்த்தகம் திசை மாறியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் நாடுகளை அடிமைப்படுத்தினர். இரண்டு உலக யுத்தங்களை, நடத்தினர். சமூகத்தில் நவீன பாட்டாளி வர்க்கமாக உழைக்கும் மக்கள் திரண்டதால் பொருளாதாரம் என்றால் பொருள் உற்பத்தி , நுகர்வு, பரிவர்த்தனை, விநியோகம் இவைகளில் எழும் பிரச்சனைகளை தீர்க்கும் விஞ்ஞானம் என்ற கருத்து முன்னுக்கு வந்தது. மூதனத்தை ஒரு சமூக சக்தியாக கருதியே இயக்க வேண்டும் என்ற கருத்து முன்னுக்கு வந்தது. அதுவே விஞ்ஞான சோசலிசம் ஆனது. அதுவே அரசிலதிகாரத்தை மக்கள் கையில் கொடுக்கும் அரசியலானது.
ஐரோப்பிய, அமெரிக்க பாட்டாளி வர்க்க அரசியல் வீச்சு காரணமாக 19ம் நூற்றாண்டி லிருந்து 1970 வரை குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதை கிரிமினல் குற்றமாக கருதப்பட்டன. மேலை நாட்டு அகராதியில் பக்கெட் ஷாப், பாயிலர் ரூம் போன்ற சொல் தொடர்கள் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் நேர்மையற்ற  ரகங்களை குறிப்பிடும் சொற்களாகும். அங்கு பங்குசந்தை துவங்கிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையால் வாயையும், வயிறையும் கட்டி சேமித்த பணத்தைக் பெருக்க சிலர் கையாளும் வழிகளை குறிப்பிடும் சொற்களே இவைகள்.  அவைகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பதுக்கல், கள்ள சந்தை, கந்து வட்டி எல்லாம் சிறிய அளவில் நடந்தால் இன்றும் கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.  இன்று  அந்த திருட்டு வழிகள் எல்லாம் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பணத்தின் மதிப்பிழப்பை தடுக்கும் விஞ்ஞான வழி என்று ஆக்கப்பட்டுவிட்டன. இந்த ஏமாற்றுக்களை பியுச்சர் பேஸ்டு காமெர்ஸ் போர்ட் போலியோ மெனேஜ்மென்ட் ரிஸ்க் அட்ஜஸ் டெட் பெர்பாமென்ஸ், ஹெட்ஜ்பன்டு டிரான் சாக்சன்ஸ் என்று அழைக்கிறார்கள். தினசரி வர்த்தக செய்தியை கேட்கிறவர்களுக்கு இந்த சொற்கள் புரியாமல் போகாது. மற்றவர்களுக்கு இது ஒரு விடுகதையே.
ஜான்கால்ரெயித் போன்ற சில மேலை நாட்டு பொருளாதார நிபுணர்களே பணத்தை பெருக்க இப்படி ஈடுபடுவதை இன்னோசென்ட் பிராடு என்று குறிப்பிடுகிறார்கள். அர்ஜென்டைனா முன்னாள் ஜனாதிபதி லுலா  இந்தியா வந்திருந்த போது மன்மோகன் சிங் அருகிலே இருக்க நிருபர்களிடம் சொன்னது மேலை நாட்டு முதலாளித்துவம், உலகமயம் என்ற பெயரில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக ஆக்க முயற்சிக்கிறது.
எங்கும் வியாபித்து இருப்பது உழைப்பே!
இன்று முன்பு போல் எந்த நாடும் சரக்கு உற் பத்தியில் தனித்துநிற்க இயலாது. மத்திய ஆசியாவின் பெட்ரோலிய எண்ணெயும், பிற நாடுகளிலிருந்து கச்சாப் பொருளும், உழைப்பு சக்தியும், ஐரோப்பிய விஞ்ஞானமும் இல்லையா னால்  அமெரிக்க பொருளாதார சக்கரம் சுழலாது. பிற நாடுகளிலிருந்து கனிமங்களும் கச்சாப் பொருளும் இல்லையானால் சீனா, ஜப்பான் பொருளாதார சக்கரம் சுழலாது. அது கியுபாவிற்கும், வட கொரியாவிற்கும், இந்தியா விற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருந்தும். குண்டூசியிலிருந்து, விண்கலன் வரை சரக்கு உற்பத்தி என்பது உலகத் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை இணைப்பதின் மூலமே சாத்யம் என்ற நிலை இன்று உள்ளது. இது தான் எதார்த்தமான உலகமயம். இன்று உலகை இணைப்பது பணமல்ல, இந்த உழைப்பு சக்தியே. உழைப்பு சக்தியை பிரதிபலிக்கிற வரைதான் பணத்திற்கு மதிப்பு. அதிலிருந்து துண்டித்து பெருக்க முயன்றால்  அது மதிப்பிழந்து காணா மல் போய்விடும். அதை மேலை நாட்டு நிபுணர்கள் பபுள்( நீர்குமிழி) என்கின்றனர். இதனால் பல கோடி மக்களின் சேமிப்பு காணாமல் போய் நடுத்தெருவிற்கு வருகின்றனர். எல்லாம் இருந்தும் மேலை நாடுகள் தவிக்க காரணம் பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது என்பது பற்றிய அறியாமையும். பேராசையும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதே. உலகம் தழுவிய உழைப் பாளி மக்களின் கூட்டு முயற்சியே  அதாவது அரசியலே முதலாளி வர்க்கத்தின் விறுப்பு வெறுப்பு பேராசை இவைகளுக்கேற்ப தறி கெட்டலையும் மூலதன சக்தியை ஒழுங்கமைக்க முடியும். சமூகத்தில் பெரும்பான்மையினர் உழைப் பால் உயரவே விரும்புகின்றனர், திறமையை காட்டியே புகழ் பெற முயற்சிக்கின்றனர். இவர் கள் அரசியலிலே கை கோர்த்து நின்றால்தான் ஒரு பொன்னுலகை மானுட கூட்டுழைப்பால் உருவாக்க இயலும். அது வரை பூ உலகு உழைப்பாளிகளுக்கு நரகமாகவும், சுரண்டும் கூட்டத் திற்கு சொர்க்கமாகவும் இருக்கும்.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (கார்ல்மார்க்ஸ்-ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
  1. முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின் கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது. மத்திய காலக் கம்யூனிலோ ஏ7 ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது. இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனி யிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் ‘மூன்றாவது வகையின’  34 மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன் பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடி யாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக் குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முத லாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்ப தற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
  2. முதலாளியாக இருப்பதற்கு உற்பத்தியில் தனக்கே உரிய சொந்த அந்தஸ்தை மட்டுமின்றி, ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றிருக்க வேண்டும். மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளைவுப் பொருள். சமுதாயத்தின் பல உறுப் பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே மூலதனத்தை இயங்க வைக்க முடியும். ஆக, மூலதனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சக்தியல்ல; அது ஒரு சமூக சக்தியாகும்.
எனவே, மூலதனம் பொதுச் சொத்தாக, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் சொத்தாக மாற்றப்படும்போது, அதன்மூலம் தனிநபர் சொத்து சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை. சொத்துடைமையின் சமூகத் தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அது தன் வர்க்கத் தன்மையை  இழந்து விடுகிறது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி:மார்க்சிஸ்ட்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-1.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு  யாருக்கு பயனளிக்கும் என்ற கேள்விக்கு விடையைத் தேடுமுன் பொதுவாக மேலை நாட்டு அந்நிய முதலீடுகள் பற்றிய ஞானம் தேவைப்படுகிறது. 
இன்றைய உலகில் பொருளாதாரம் என்றால் பணத்தை பெருக்குவது என்ற பார்வை தான் மேலோங்கி உள்ளது. பணத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி  சரக்குகளை உற்பத்தி செய்து  சந்தை மூலம் லாபம் சம்பாதித்து பணத்தை பெருக்குவது. அடுத்த வழி இப்படி சிரமப்படாமலே பணத்தை பெருக்கும் குறுக்கு வழிகளை தேடி உருவாக்குவது.

அமெரிக்க, ஐரோப்பிய தொழில் முனைவர் களும், அவர்கள் காட்டுகிற வழியில் போகிற இதர நாட்டு தொழில் முதலீட்டாளர்களும், இன்று சங்கடமான சரக்கு உற்பத்தியை தொங்கலில் போட்டுவிட்டு, அல்லது பின்னுக்கு தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வங்கிகளையும், கடன் அமைப்புகளையும் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களால்  செல் போனுக்குள் திணிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர். 

(அமெரிக்க தொழில் மூலம் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் தேச மொத்த வருவாயில் 25 சதமாக இருந்தது12 சதமாக குறைந்து நிதி மூலதன சேவை வருவாய் 10 சதத்திலிருந்து 25 சதமாக உயர்ந்து போனதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்)  இதற்கு உலகமயம் என்ற ஒரு நல்ல பெயரையும் வைத்து விட்டனர். 

 கடல் கடந்த வாணிபத்திற்கு வயது 3 ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கிறது என்பதை மறந்து உலக வங்கி அதன் முயற்சியால்  வர்த்தகத்தில் உலக உறவு வந்தது போல் இந்த பெயரை சூட்டி விட்டது. வரலாறு அறியாதவர்களுக்கு இது புதுமையே!

இப்படி கூறும் பொழுது இன்று சரக்கு உற்பத்தியும், உலக வர்த்தகமும் உலக நாடுகளின் பெரும்பான்மை மக்கள் பங்கேற்கிற முறையில்  முன்னேறியுள்ளன  என்ற உண்மையை புறக் கணித்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. உலக வர்த்தகம் வேகப்பட்டுள்ளது. 
எடையிலும் கொள் அளவிலும் பல ஆயிரம் மடங்கு பெருகி யுள்ளது. அன்றைய வர்த்தகம் கடுகு என்றால் இன்றைய வர்த்தகம் இமயமலை. வங்கிகள், கடன் அமைப்புகள் இல்லாமல் இந்த முன் னேற்றத்தை உலக நாடுகள் பெற்று இருக்க முடியாது என்பதையும் மறுக்க இயலாது.
இன்று இந்த அமைப்புகளை  குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க உதவிடும் கருவிகளாக்கிவிட்டனர் என்பதே நமது குற்றச்சாட்டு. இன்றைய மேலை நாட்டு பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணமாகும். அதைப்பாராமல் இத்தகைய குறுக்கு வழிகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டு கோல் என்ற பார்வை மூடநம்பிக்கையாகும்.
 அப்படி நம்புகிறவர்கள் அதிகார மையங்களில் அமரும் பொழுது ஒரு நாடு நெருக்கடியில் தள்ளப்படுகிறது. மக்களை மறந்து டாலரை பெருக்க நினைப்பதாலேயே  நெருக்கடியை  இன்று அமெரிக்கா சந்திப்பதாக அமெரிக்க நிபுணர்களே எழுதிவருவதை நாம் கவனிக்க வேண்டும்.

 இப்பொழுது மேலை நாடுகளிலிருந்து  நுழைகிற எல்லாவகையான அந்நிய முதலீடுகளும்  பணம் தேடிகளாக மாறிவிட்ட மேலை நாட்டு மக்கள் பிரிவுக்கு குறுக்கு வழிகளில் பணத்தை பெருக்கும் வழிகளை அமைத்து கொடுப்பதே பிரதான நோக்கமாகும்.அமெரிக்க, ஐரோப்பிய பணம் தேடிகளுக்கு இருக்கும் அடங்கா பணப்பசிக்கு உணவாக உலகமே தேவைப்படுகிறது.
 வடஅமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருகிற அந்நிய முதலீடுகள் அனைத்தின் நோக்கமே பணத்தைப் பெறுக்க குறுக்கு வழிகளை உருவாக்குவதே. அங்கிருந்துவரும் அந்நிய முதலீடு புகுந்த நாட்டில் விளைவுகளைப்பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. 
அவர்கள் நாட்டு பணம் தேடிகளின் பணம், பியுச்சர்களிலும், பங்குகளிலும்,  பணவடிவுகளிலும் (ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ்) விளையாடி பெருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது, ராணுவ பாதுகாப்பு கொடுப்பது இவைகளே அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின்  உறுதி, உணர்வு, லட்சியம்  எல்லாம்.
உதாரணமாக விவரம் அறிந்த ஒருவர் அமெ ரிக்காவில் இருந்து கொண்டே இந்திய தங்க சந்தையிலே புகுந்து பல கோடிகளை முடக்கி சில கோடிகளை லாபமாக  தினசரி அறுவடை செய்ய இயலும். அதற்காக அவர் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டியதில்லை. 
 சொல்லப் போனால் அவர் தங்கத்தை கண்ணால் கூட பார்க்க வேண்டியதில்லை. 
அவருடைய புரோக்கர் அவர் சொல்லும் பொழுது  அவர் அணுப்பிய டாலரை ரூபாயாக மாற்றி இங்கேயே தங்கத்தை வாங்கி அவர் சொல்லும் பொழுது இங்கேயே விற்பார். ரூபாயாக இருக்கும் லாபம் மீண்டும் டாலராக மாற்றப்பட்டு அவர் கணக் கிலே ஏறிவிடும்.பியுச்சர்களையும், பங்குகளையும் இதே போல் வாங்கி விற்று லாபத்தை குவிக்க முடியும். 

ஆனால் எப்பொழுது வாங்கவேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்ற மர்மத்தை தாண்ட துணிய வேண்டும். இப்படி சூதாடக் கூடிய முதலீட்டாளர்கள் அமெரிக்க மக்கள் தொகையில் 4ல் ஒருவர் (சுமார் 8 கோடி மக்கள்) என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு என் பதின் உள் பொருள் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பியுச்சர்மயமாக்கி பணம் தேடிகள் பணப்பெருக்க சூதாட்டத்திற்கு கொடுத்து விடுவது என்பதே.
 சுருக்கமாக சொன்னால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்றால் மொத்த வர்த்தகத்தையும்  முழுங்குவது என்பதே. 
இப்பொழுது பெட்ரோலுக்கு நேரும் கதி  கத்திரிக்காய் முதல் கடுகு வரை எல்லா பொருள் களுக்கும் வரும் என்று பொருள்.

அந்நிய முதலீடு ஜிபூம்பாவா? அல்ல!
மாபெரும் ஊடகங்களிலும் மாபெரும் சர்ச்சைகள் நடக்கின்றன. பொதுவாக ஊடக சர்ச்சைகள் உண்மையை தேட மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இந்த சர்ச்சைகள் மக்களை குழப்புகிறது. 
ஒரு பக்கம் சில்லரை வர்த்தகர் களுக்கு அந்நிய முதலீட்டால் வரும் ஆபத்துக் கள் பட்டியலிடப்படுகின்றன. ஏதோ அவர் களுக்கு மட்டும் பாதிப்பு வருவது போல் பய முறுத்துகின்றனர். 
மறு பக்கம் அதனால் வரும் நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. விவசாயி தனது பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை கிடைப்பதால் கட்டுப்படியான விலை கிடைக்கு மென விளம்பரம் செய்கின்றனர். அவனது விவசாய இடு பொருள்களின் விலைகள் என்ன வாகும் என்பதை மறைக்கின்றனர்.
இதில் மத்திய அரசின் அமைச்சர்களும் விடு கிற பீலாவிற்கு எல்லையே இல்லை.

 அந்நிய முதலீடு ஒரு ஜீபூம்பா என்கின்றனர், அது கண் இமைக்குமுன் கிராமங்களை இணைக்கும் சாலை களை கட்டிவிடும், எல்லா கிராமங்களிலும் விவசாயப் பொருட்கள் கெடாமல் இருக்க குளிர் பதன ஏற்பாடுகள் அமைத்து கொடுத்துவிடும். அதிவேக குளிர்பதன லாரிகள், அதிவேக குளிர் பதன கூட்ஸ் ரயில்கள் சர்வதேச சந்தையில் நமது காய்கறிகளும் பூக்களும் மலிவு விலையில் கிடைத்திட  ஜம்போ விமான சர்வீஸ் எல்லாவற்றையும் வேகமாக கட்டி கொடுத்துவிடும் என் றெல்லாம் சரடு விடுகின்றனர்.
சென்ற ஆண்டில் அமெரிக்க இந்திய முதலீட்டாளர்கள் அமைப் பில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க முத லாளிகள் உங்க நாட்டிலே மின்சாரம் முதல் போக்குவரத்து வரை மோசமாக இருப்பதை சரி செய்யுங்கள்  நாங்கள் வருகிறோம் என்று சொன்னவர்கள்  இன்று சில்லரை வர்த்தகத்தில் நுழைவோம் என்று சொல்வதின் மர்மமென்ன? 
அதைப் புரியும் ஞானம், நம் நாட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கோ, டாலர் வெறி கொண்ட லையும் முதலாளிகளுக்கும் கிடையாது.

 மேலை நாட்டு சந்தை நிலவர தகவல்களை ஆழ்ந்து பரிசீலித்தால் மேலை நாடுகளின் பணவடிவில் இருக்கும் சேமிப்புகள் மதிப்பிழப்பதால் ஏற்படும் பண புழக்க நெருக்கடியை சமாளிக்கவே அது வருகிறது  என்ற உண்மை புலப்படும்.
ஏற்கனவே இந்தியாவில் அந்நியமுதலீடு எதில் விழுந்திருக்கிறது, எவ்வளவு வந்திருக்கிறது என் பதை கவனித்தாலே போதும் 2012ம் ஆண்டு நிலவரப்படி அந்நிய முதலீடு 1.796 லட்சம் கோடி வந்துள்ளது . இது முழுவதும் பங்குகள் கடன் பத்திர முதலீடுகளே தவிர அடிப்படைவசதி களை கட்ட வரவில்லை. (ஆதாரம்: பிரண்ட் லைன் ஜனவரி11,2013)
இவ்வாறு முதலீடு செய்பவருக்கு பணப் பெருக்க வழிகளை புதிது புதிதாக உருவாக்காமல் இருந்தால். அவரது பணவடிவில் இருக்கும் சேமிப்பு  மதிப்பிழந்துவிடும் என்று மேற்கத்திய பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். 
ஆனால், அந்த சேமிப்புகள் உலகை மேய போவ தால் அங்கு  வேலையில்லா திண்டாட்டத்தை யும், சம்பளம் வெட்டையும் கொண்டுவருவதை அவர்கள் கணக்கிலே கொள்வதில்லை.

இப்பொழுது நடப்பதென்ன?

உலக நாடுகளின் பொருளாதார ஆற்றலை பணத்தைப் பெருக்கும் குறுக்கு வழிக்கு இழுத்து விடும் நோக்கோடு இன்று அமெரிக்காவின் தலைமையில்  உலக வர்த்தக அமைப்பு செயல் பட்டு வருகிறது. 
இதன் வேலை உலக நாடுகளை எதையும் பணமாக்கும் முறைக்கு  பக்குவப் படுத்துவதுதான். எல்லா தொழில்களையும், பங்கு நிறுவனங்களாக ஆக்க அது வற்புறுத்து கிறது. தனி நபருக்கோ அரசிற்கோ அந்த நிறு வனத்தின் மீது உரிமை கொண்டாட  இடமளிக்க கூடாது என்கிறது.  
எல்லா சரக்குகளும், சேவை களும் பியுச்சர்களாக  ஆக்கப்பட வேண்டும் என்கிறது.

 தனி நபர்கள் பங்குகளையும், பியுச்சர் களையும் சுதந்திரமாக வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கும் உரிமை அடிப்படை உரிமையாக ஆக்கப்படவேண்டும் என்கிறது.
 தங்களது சேமிப்பை பெருக்க விவரம் தெரியாதவர்கள் இதற்கென சந்தை நிபுணர்கள் நடத்தும் ஹெட்ஜ் பன்ட், மியூச்சுவல்பன்ட் உதவியை பெற்று காலை ஆட்டிக் கொண்டே சம்பாதிக்க சட்டம் இருக்க வேண்டும். இதற்கு பெயர்தான் தாராள மய தனியார் மயமாக்கலாகும்.
இத்தகைய தாராள தனியார்மய இலக்கோடு மேலை நாடுகளின் வங்கிகள் நிதி நிறுவனங்கள் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் மூலம்  பல நாடுகளில் புகுந்தன. உலக வங்கி தரும் புள்ளி விபரப்படி 1980ல் 52 நாடுகளில் தான் பங்குச் சந்தை  செயல்பட்டன. 
இன்று 142 நாடுகளில் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் உலகளவில் பங்குகளிலும் சரக்கு களிலும் அந்நிய நாடுகளில் மூதலீடு செய்வதில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா.

 பங்கு களிலும், இதர பணவடிவுகளிலும் வெளி நாடு களில் அமெரிக்கர்களின் முதலீடு 14 டிரில்லி யன்(14 000.000,000,000,) டாலரை தாண்டிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெளிநாடுகளின் முதலீடுகளை கணக்கிட்டால் 90 சதம் அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் ஜப்பான் நாடுகளிலிருந்து வருபவைகளே. 
இந்திய பங்குச் சந்தையில் புரளும் பங்குகளின் எண்ணிக்கை போதாத காரணத்தால் சரக்குகளையும் பியுச்சர் களாக ஆக்கிட வற்புறுத்தி வருகிறது.
தாதுக்களும், இயற்கை வளங்களும் நிறைந்த இந்தியாவையும் இந்த வட்டத்திற்குள் தள்ளி விட்டால் டாலர்  முதலீட்டாளர்களுக்கு  வாய்ப்புகள் பல மடங்கு பெருகும். 
இவைகள் எல்லாம்  ஓரே நாளில் இங்கு வந்து விடாது  என்பதை அவர்கள் அறிவர். முதலில் வேலை தேடும் உணர்வை படுக்கவைத்து, படுத்துக்கிடக்கிற பணம் தேடி உணர்வை மக்களுக்கு அணிச்சை செயலாக ஆக்க வேண்டும். அடுத்து இதற்கான தொடர்பு கொள்ளும் கருவிகள், வங்கி அமைப்புகள், விலை நிலவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் பற்றிய ஆரூடங்கள் இவைகளை பரப்புகிற நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கென படிப்பு முறைகள் புகுத்திட வேண்டும்,.
 பவுதீக விஞ்ஞானத்தின் அணுவிற்குள் இருக்கும் இயக்கங்களை கணக்கிடும் குவாண்டம் விதிகளை சந்தைக்கும் பிரயோகித்து ஊசலாடுகிற பங்குகள் விலை, சரக்குகளின் விலைகள் பற்றி  ஆரூடம் சொல்லும் முறைக்கு  விஞ்ஞான சாயம் பூசி மக்களை மயக்க வேண்டும்.
பதஞ்சலி


எதையும் பணமாக்கலாம் யார் வேண்டுமானாலும் பணக்காரனாக ஆகலாம் என்ற மாயை பரவ ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். தள்ளு வண்டிக்காரர் தனவந்தரானார், உனது முட்டாள்தனமே உனது வறுமைக்கு காரணம் என்றெல்லாம் ஊடகங்கள் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். 
பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு, ஆசையை வளர்க்க வேண்டும், வரி ஏய்ப்புக்களையும், இதர தில்லுமுல்லுகளையும் அரசை இதமாக அணுகவைக்கவும், லஞ்சமும் ஊழலும் வேலைகள் சுழுவாக நடக்க உதவுகிறது என்ற மயக்கத்தை புலம்பிக் கொண்டே ஏற்க வைக்கவும் அது தான் மானுட இயல்பு என உள வியல் ஆய்வு  கூறுவதாக  கூலி நிபுணர்களைக் கொண்டு செய்தி பரப்ப வேண்டும். 

 எதையும் பணமாக்கலாம் என்பதை காட்ட வேண்டும். உதாரணமாக கடந்த காலங்களில் ஆடம்பர திருமணங்கள் என்றால் பொருட் செலவு. ஆனால் இன்று மகிழ்ச்சியூட்டும் தொழிலாக்கப் பட்டு பணம் சம்பாதிக்கும் ஏற்பாடாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மாற்றிவிட்டன.
 ஐஸ்வர்ய ராய், சிநேகா, திருமண சடங்குகள் நல்ல விலை போனதாக கிசு கிசுக்கள் உள்ளன.
 மூளையை கசக்காமலே, உடலை வருத்தாமலே, அதிருஷ்டம் ஒருவனை பணக்காரனாக்கிவிடும் என்ற நம்பிக்கையை, வதந்திகளாக பரவ விட்டுவிட வேண்டும்.

மத நம்பிக்கைகளை வலுப்படுத்தும் கருத்துக்களை தத்துவம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்ட வேண்டும். உழைப்பே  மானுடத்தின் உயிர் நாடி என்ற சோசலிச லட்சியத்தை இழிவுபடுத் திக் கொண்டே இருக்க வேண்டும். 
வரலாற்றை சிதைத்து சோசலிசம் என்றால் ஒரு பயங்கரம் என்று பயமுறுத்திக்கொணடே இருக்க வேண் டும். வரலாற்றையும், வர்க்க போராட்ட அரசி யலையும் மறைத்து எல்லா மற்றங்களும், டார் வின் இயற்கையின் தேர்வு விதிப்படி நடப்பதாக விஞ்ஞான கண்டுபிடிப்புக்களைக் கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் தனி மனிதனின் மூளையில் அழுக்குகளை சேர்க்க வேண்டும்.பாதுகாப்பற்ற உணர்வை அவனது உந்து சக்தியாக ஆக்க வேண்டும்.

மேலை நாட்டு முதலாளித்துவம் ஊடகங்கள் வாயிலாக இத்தகைய நடவடிக்கைகளில் திட்ட மிட்டே ஈடுபடுகிறது.
 தூதுவர்கள் மூலம், ஆட்சி யாளர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருமுதலாளிகளையும்,அதிகாரிகளையும் அணுகி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறது. இதில் பாலியல் அடிமைகளின் பங்கு அளப் பரியது.சமீபத்தில் வால்மார்ட் என்ற நிறுவனம் மெக்சிகோவிலும், இந்தியாவிலும் ஆதரவு திரட்டிய முறைகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது எதெற்கென்றால்  பிசினசில் இதெல் லாம் சகஜம் என்ற உணர்வை காலப்போக்கில் உருவாக்கும் திட்டமே.
 இன்று உலக நாடுகளில் பெரும்பகுதி அரசு கள் உலக வங்கியின் பிடியில் மயங்கி கிடக்கின்றன. இதனால் அமெரிக்க ஜனாதிபதி தயவில் பல சிறிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சியும்,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாடாளுமன்றத்தை நடைப்பிணமாக்கும் சுரண்டும் வர்க்க ஆட்சியும் நடப்பதை காணலாம். 
ஆனால் அவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் அதன் விளைவு தற்காலிக மானதே என்பதை இன்றையச் செய்திகள் உறுதி செய்கின்றன.


இந்த நாடுகளில் மக்களின் போராட்ட அலைகள் அடிப்பதை காணலாம் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயன்படாமல் போவதால் வர்க்க போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் தீவிரமடைவதை காணலாம்.
உலக வங்கியை நம்பி மோசம் போகும் நாடுகளில் இந்தியா, மெக்சிகோ முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மறுபக்கம் உலக வங்கியின் சொல் பேச்சை கேட்டு  மக்களை தவிக்கவைத்த அரசுகள் இருந்த அர்ஜென்டைனா, பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகளில் மக்கள் மேலை நாட்டு அந்நிய முதலீடெனும் காட்டு வெள்ளத்தை சமாளித்து உலக வர்த்தக உறவை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் தலைமையை உருவாக்கிவிட்டதையும் காணலாம். 
அந்த நாடுகள் மீது நாட்டோ ராணுவம் தாக்கு தல் தொடுக்க தயாராய் வருவதையும் பத்திரிகை கள் தெரிவிக்கினறன. 
அதேநேரம் யுத்தத்தில் நேரடியாக ஈடுபடுவது லாபகரமான சேவை தொழில் அல்ல என்ற சங்கடமும் அவர்களுக்கு இருப்பது தெரிகிறது. எனவே இந்தியா- பாகிஸ் தான், இந்தியா – சீனா, இஸ்ரேல்- அரபு நாடுகள், கொலம்பியா – வெனிசுலா, மோதலுக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு கலவரத்திற்கு உதவுவது ராணுவசேவை லாபகரமான தெழிலாகிவிடும் என்பதால் அந்த முயற்சியிலும் ஈடுபடுவதை உலக அரசியலை கவனிப்பவர்களால் உணர முடியும். 
அதே வேளையில் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள் மூலதனம் எனும் சமூக சக்தியை ஒழுங்கமைக்கவும், புதிய உலக வர்த்தக உறவை உருவாக்கவும் போராடி வருகிறார்கள் .அவர் களது முயற்சிகளோடு நமது முயற்சிகளையும் இணைப்பதன் மூலமே வெற்றி அடைய முடியும்.
                                                                                                               -வரும்.
நன்றி:மார்க்சிஸ்ட்.
 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...