bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 24 பிப்ரவரி, 2011

செயற்கை பெட்ரோல்


பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல்உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறுகையில், இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 10 ரூபாய்க்கே கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

புதன், 23 பிப்ரவரி, 2011

கிரிக்கெட் கிறுக்கு பற்றி,,

       இன்று அனேகம் பேரைஆட்டிப்படைக்கும் கிரிக்கெட் போபியா வியாதியைப் பற்றி நமது”செங்கொடி” இனையத்தில் வெளியான இக்கட்டுரையை மீள வெளியிடுகிறோம்.

இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

. ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருத
   தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான்.

ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் விட ஒரு விளையாட்டு நம் கவனத்தை விழுங்கிவிட முடிவது எப்படி நம்முள் இயல்பாய் ஏற்பட்டிருக்க முடியும்? மகிழ்வாய் வாழ்வது, சொகுசாய் வாழ்வது எனும் இரண்டின் வேறுபாட்டையும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வியின் பொருளைச் செரிப்பது சற்றுக் கடினம் தான். காரணம், நம்முடைய விருப்பங்கள் நம்மீது திணிக்கப்படுபவை என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறிந்துகொண்டிருக்கவில்லை. விளையாட்டு என்பது நம்முடைய உற்பத்தித் திறனைச் சார்ந்து அதனை மேம்படுத்திக்கொள்ள நாம் ஈடுபடும் ஒரு கலைவடிவம் என்பது மாறி தொழில்நுட்பமும் சந்தை வணிகமும் அதில் கலந்து விளையாட்டு என்பது உற்பத்திப் பொருளான போது நாம் அதன் நுகர்வு அடிமையாகிப் போனோம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடப்படும் கால்பந்து விளையாட்டு இங்கு எந்தக் கவனத்தையும் ஈர்க்காத ஒன்றாக இருக்கிறது. பல நாடுகளில் கிரிக்கெட் என்ற ஆட்டமே அறிமுகமாகியிருக்கவில்லை. இந்த இரண்டு இடங்களின் மக்களையும் பொதுவான ஒரு ஒப்பீடு செய்து பார்த்தாலே அந்தத்தப் பகுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுகள் எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டு கொள்ளை லாபமீட்டும் தொழிலாக நடந்துவருகிறது என்பது புரியும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் எந்தப்பகுதியில் விளையாடினாலும் நேரடியாகக் க்காணும் வசதி முதலாக‌, அனைத்து செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக இது குறித்த செய்திகளை வெளியிட்டு மக்களின் நினைவெல்லையிலிருந்து அகன்றுவிடாதவண்ணம் இருத்திவைப்பது ஈறாக அத்தனை வழிகளிலும் இது மக்களின் மனதில் பதியவைக்கப்படுவதினாலேயே சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆழமான புரிதல் இல்லாத யாரும் இதில் தனிப்பாட்ட விருப்பம் எதையும் கொண்டுவிட முடியாது.

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஆயிரக்கணக்கான கோடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளன. விளையாடுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் உட்பட இதில் செலவு செய்யப்படும் அனைத்திற்கும் பகரமாக பலமடங்குகளில் லாபமீட்டாவிட்டால் இந்த விளையாட்டு சீந்துவாரின்றிப் போகும். ஆனால் அவ்வாறில்லாமல் மேலும் மேலும் இதில் கொட்டப்படுவதிலிருந்தே இது எந்த அளவுக்கு வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கிரிக்கெட் விளையாட்டில் கோடிகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதுதான். உலக அளவில் கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 70 விழுக்காடு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. பெப்சி, கோக், நைக் ஷூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் 30லிருந்து 40 கோடி பேர்வரை காண்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரங்களாக மீண்டும் மீண்டும் காட்டி பதியவைக்கப்படுவதன் மூலமே இந்த விற்பனை சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர்ச்சியாக பார்க்கவைப்பதற்காகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சரி, இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்படும் பணத்தை அந்த நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகளாகத்தான் வகைப்படுத்துகின்றன. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் கிரிக்கெட்டிற்காக செலவிடப்படும் தொகையும் அடக்கம். அதையும் உள்ளடக்கித்தான் விலை தீர்மானிக்கப்படுகிறது. என்றால் அந்தப் பணத்தைச் செலுத்துவது யார்? சந்தேகமென்ன மக்கள் தான். சுற்றிவளைத்து மக்களிடம் இருக்கும் கிரிக்கெட் மோகம் மக்களைச் சுரண்டி முதலாளிகளிடம் சேர்க்கும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்றோ, தேசபக்தியின் அடையாளம் என்றோ கூற முடியுமா?

லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து வீழ்ந்தபோது ஏற்படாத‌ சோகமும், கோபமும் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த விதத்தில் இது தேசபக்தி? ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் வாழும் நாடு எனும்போது ஏற்படாத அவமானம் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த அடிப்படையில் இது தேசபக்தி? இந்தியர்கள் விளையாடினால் எதிரில் யாராக இருந்தாலும் தோற்க வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகும்? ஐ.பி.எல் போட்டிகளின் போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னைச் சார்ந்த அணியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதே விளையாட்டு வீரன் அவ‌னுடைய நாட்டு அணியில் விளையாடும் போது எதிரியாக பார்ப்பது விளையாட்டா? வெறியா? இதை எப்படி தேசபக்தி என்பது?
இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது, தவிரவும் விளையாடுபவர்கள் பணத்திற்காகவே விளையாடுகிறார்கள். இதன் மீது தேசியம் வெளிப்பூச்சாக பூசப்பட்டிருக்கிறது. நமக்கு கிரிக்கெட் மீதான மோகம் வற்றிவிடக்கூடாது என்பதற்காக பூசப்பட்ட வெளிப்பூச்சு தான் இந்திய அணி என்பது

மட்டுமல்லாது, வெளியில் தெரியும் அத்தனை பகுதிகளிலும் விளம்பரங்களை எழுதி நடமாடும் விளம்பரத்தட்டியாக நின்று ஆடுபவனை நாட்டுக்காக விளையாடுபவன் என்பது எந்த வகையில் பொருந்தும்? மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்ஸிங் தொடங்கி அனைத்து ஊழல்களிலும் ஈடுபட்டு விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதா? வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு மட்டையிலிருக்கும் நிறுவனந்த்தின் பெயரை கேமராவில் காண்பித்தால் அதற்கு தனியே காசு என விளையாட்டை அவர்கள் தொழிலாக்கி விட்டிருக்க, சொந்த வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கும் இரசிகனை என்னவென்பது?

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு மக்களிடம் சேவை வரி விதிக்கிறது. ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சேவை என்று கூறி பிசிசிஐ எனும் தனியார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை கிரிக்கெட் இரசிகன் என்னவென்று புரிந்து கொள்வான்?

கிரிக்கெட் எனும் விளையாட்டைச் சூழ்ந்திருக்கும் இவை எதும் எந்த விதத்திலும் சலனப்படுத்தாது, அதில் அடிக்கப்படும் ஃபோர்களும் சிக்ஸர்களும் மட்டும் பரவசத்தைத்தரும் எனக் கூறும் ஒரு ரசிகன் மனிதனாக இருக்கமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க இதைவிட பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாது.
                                               நன்றி;செங்கொடி[24.02.2011]

சூரிய மண்டல எல்லை காண

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.
விண்வெளியில் அது பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு பதினேழு  கிலோமீட்டர்கள். பரந்த இந்தப் பேரண்டத்தில் நம்மைத் தவிர வேறு ஏதேனும் உயிரி னங்கள் உள்ளனவா என்ற மனித குலத்தின் விடையில்லா வினாக்களுக்கு விடை தேடி ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் மனித இனத்தின் செய்திகள் தங்கத் தகடு மற்றும் ஆடியோ வடிவிலு
ம், சூரியக் குடும்பத்தின் வரைபடம் அதில் பூமியின் இடம் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இத்தனை தூரத்திலிருந்து இன்னும் சிக்னல்களை நமக்கு அது அனுப்பிக்கொண்டே உள்ளது. அதை வைத்து அது தற்போது இருக்குமிடத்தை விஞ்ஞானிகள் அறிகின்றனர். தற்போது அது டெர்மினேஷன் ஷாக் எனப்படும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையினை அடைந்துவிட்டது. சூரிய மண்டலமெங்கும் வீசும் சூரியப் புயல் புளூட்டோ கிரகத்தினை எல்லாம் தாண்டி ஒரு இடத்தில் சட்டென்று குறைகிறது. அதுவே சூரிய மண்டல எல்லை என்று கணிக்கப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் வாயேஜர் அனுப்பிய சமிக்ஞைகள் அது பயணிக்கும் இடத்தில் சூரிய காற்றின் வேகம் பூஜ்யம் என்று காட்டியது. அதை வைத்து இன்னும் சில ஆண்டுகளில் வாயேஜர் சூரிய மண்டலத்தினைக் கடந்து பேரண்டத்தினுள் பிரவேசிக்கும் என்று விஞ்ஞானிகள் அறிகின்றனர்.
இதைப் போல வாயேஜர் 2 எனும் இன்னொரு ஆளில்லா விண்கலத்தை வாயேஜர்- 1-க்கு எதிர்ப்புறமாக அதே 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசா ஏவியது. வினாடிக்கு பதினைந்து கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதற்கும் இம்மாதிரி விளைவினை இன்னும் சில ஆண்டுகளில் சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

மலேசியா வாசுதேவன்


மறைந்தும் மறையாத கிராமத்து கீத குரல்                  மிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தன் கீத குரலால் 20 ஆண்டுகள் தமிழ் மக்களை தன் வசம் இறுக்கி வைத்திருந்தவர் பாடகர் மலேசியா வாசுதேவன். கடந்த 20 ஆண்டுகளாக தான் தமிழக இசை தட்டுகளில் அவரின் குரலை அவ்வளவாக கேட்க முடியவில்லை. மற்றப்படி அவரின் கீத குரல்க்கு இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

1944ல் மலேசியாவில் பிறந்த வாசுதேவன் அங்கு நாடக நடிகராக இருந்தார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 1970ல் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த வாசுதேவன்க்கு நடிகராகும் வாய்ப்பு கிட்டவில்லை. இருந்தும் 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனுக்கான முகவெட்டு இல்லை. ஆனால் அவரின் குரல் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி க்கு பிடித்து போனதால் பின்னணி பாடகர் வாய்ப்பு தந்தார். அவரின் முதல் படமான மெட்ராஸ் டூ டெல்லி படம் வெளிவரவில்லை. இருந்தும் அவரின் குரல்க்கு உள்ள ஈர்ப்பு தன்மையை மனதில் கொண்டு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வீ. திரையில் வந்த முதல் பாடல், பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில் ஜீ.கே.வெங்கடேஷ் என்பவரின் இசையில் பாலு விக்கற பத்தம்மா என்ற கானா பாடல். அந்த கால கட்டத்தில் நண்பர்களாக கை கோர்த்தவர்கள் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர். மூவரும் ஒன்றாக தங்கியிருந்து வாய்ப்பு தேடினார்கள்.  

1976க்கு பின் இசை சாம்ராஜ்யம் நடத்திய இளையராஜா வாசுதேவனுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்புகளை தந்தார். இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் மேடை பாடகராக பல மேடைகளில் ஏறி பாடி அக்குழுவிற்க்கு புகழ் சேர்த்தார். 

பாரதிராஜாவின் 16 வயதினிலேயேவில் மலேசியா வாசுதேவன் பாடிய ஆட்டுக்குட்டி மூட்டையிட்டு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன்பு சகலாகல வல்லவனில், கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி என்ற பாடல் இன்றளவும் கிராமத்து ராக்கிங் பாடல். அதேபோல் அடி ஆத்தாடி………… என கடலோர கவிதைகள் படத்தில் பாடப்பட்ட அந்த வாய்ஸ் தான் அந்த படத்தின் உயிர் நாடியே.                                                                                                                                                            -ராஜ்ப்ரியன் நன்றி;நக்கீரன்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

மொழிகளின் மரணம்......

                                                                                                                                                               -பேராசிரியர் ஆர். சந்திரா
26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

“ரெமோ” என்ற மொழி ஒரிசா மாநிலத்திலுள்ள ‘போண்டா’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் களால் பேசப்படுகிறது. தற்போது இம்மொழியை பேசுவோர் 5000 பேர் மட்டுமே. இந்த இனமக்கள் தற் போது ‘ஓரியா’ மொழியை பேசத் துவங்கி விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த மொழி (ரெமோ) மறைந்து விடுமென கணிக்கப்பட்டுள்ளது.

2009ல் யுனெஸ்கோ நிறுவனம் “அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் வரைபடத்தை” வெளியிட்டது. அதில், அழியும் அபாயம் உள்ள மொழிகள், அழிந்து விட்ட மொழிகள் என உலகின் மொழிகளை வகைப்படுத்தியுள்ளது. 2,473 மொழிகள் இதில் அழியும் அபாயத்தில் உள்ளன என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்ச யம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழி கள் அழியும் அபாயம் உள்ளவை என்ற பட்டி யலிலும் உள்ளன.

பழங்குடி இன மக்கள் பேசுகின்ற பல மொழிகள் ‘தாய்மொழி’ என்று கருதப்பட்டு அதிகாரபூர்வமாக “மொழி” என்ற வரையறைக்குள் வருவதில்லை. இது தவிர நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அன் றாட வாழ்க்கைத் தேவைகளையொட்டியும் பொரு ளாதார நிர்ப்பந்தங்களினாலும், அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாகக் கருதப்படும் மொழியை கற்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தம், குடி பெயர்வு அதிகரித்துள்ள சூழலில், குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசு கின்ற மொழிகள் சிறிது, சிறிதாக மறைந்து விடு கின்றன.

மைசூரிலுள்ள இந்திய மொழிகள் கழகம் (சிஐ ஐஎல்) மொழிகள் அழியும் அபாயத்தைக் கருதி, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யுனெஸ்கோ நிறு வனம் தயாரித்த வரைபடத்திற்கு உதவிய இந்த அமைப் பின் இயக்குனர் உதயநாராயணசிங், “உலக நாடுக ளின் நிலையோடு ஒப்பிடுகையில், தாய் மொழி அழி யும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யுனெஸ்கோ வரைபடம் வெளியிடப் பட்ட உடனேயே மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் மற்றும் மிக வும் பழமையான மறைந்து வரும் மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள கமிட்டி அமைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சி. ஐ. ஐ.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சச் தேவா “சமூகரீதியில் ஓரங்கட்டப்படுகின்ற மக்க ளுக்கு அவர்களுடைய கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் ஆயுதமாக மொழி பார்க்கப்படுகிறது” என்கிறார்.

மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங் களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்தமானில் மறைந்த போவா சீனியருக்கு அப்பகுதியிலுள்ள செடி, கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நன்கு தெரியும். மொழி ஆய் வாளர் அபியும் அவரது குழுவினரும் போவா சீனியருடன் பேசி, அந்த விஷயங்களை எல்லாம் சேகரித்து, ஆவணப்படுத்தும் முயற்சியை மேற் கொண்டுள்ளனர். அந்தமானில் பின்பற்றப்பட்டு வந்த பிரத்யேக பழக்கங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பதற் கான வரலற்று சான்றுகள் நிறையவே உள்ளன. இன்று அந்தமானிலும் ‘இந்தி’ பிரதான மொழியாக மாறி விட்டது. இந்தி கற்பது பொருளாதார ரீதியில் முன் னேற உதவி செய்தவாக அம்மக்கள் கருதுகின்றனர். எனவே முன்பு பேசப்பட்டு வந்த மொழிகள் மறைந்து வருகின்றன.

1894 - 1928 வரை இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் குறித்து ஜி.ஏ. க்ரியர்சன் என்பவர் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள மொழிகளுடன் 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது? குறிப் பிட்ட ஒரு மொழியை குறைந்தது 10000 பேர் பேசி னால்தான், அது ‘மொழி’ என்கின்ற வரையறைக்குட் பட்டதாக கருதப்படும். 2001 மக்கட்தொகை கணக் கெடுப்பின்படி, பட்டியலிடப்படாத 100 மொழிகள் 3 விழுக்காடு இந்திய மக்களால் பேசப்படுகின்றன. (அதாவது 3 கோடி பேரைவிட அதிகம்) “இந்த மொழிகள் பாதுகாக்கப்படாவிட்டால், அமெரிக்க ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழிகளுக்கு சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட கதிதான் ஏற்படும்” என மொழியியல் வல்லுநர் கிரிகெரி ஆண்டர்சன் கூறி யுள்ளதை யுனெஸ்கோவும் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் அழியும் நிலையிலிருந்த ‘பிலி’ (க்ஷடைi) என்ற மொழியின் பாதுகாப்பு பணியை மேற் கொண்டுள்ள காஞ்சிபடேல் “ஒரு மொழி பாதுகாக் கப்பட மூன்று விஷயங்கள் முக்கியமானவை 1. அந்த மொழியை பயிற்றுவிப்பது, 2, அந்த மொழியில் இலக் கியங்களை வெளியிடுவது, 3 இதர மொழிகளை பேசு வோரிடையே குறிப்பிட்ட மொழி பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்” என்கி றார். மொழி ஆய்வாளர் அபி, “ஒன்று - முதல் மூன்று வகுப்புகள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய் மொழி மூலம் கல்வி அளித்து, அத்துடன் அந்த மாநில மொழியைக் கற்பிக்க வேண்டும். 4ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை அறிமுகப் படுத்தலாம்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

மொழியை அரசியல் ஆதாயங்களுக் கென பயன் படுத்தப்பட்டுள்ளதற்கான வரலாற்று சான்றுகள் நிறைய உள்ளன. சமீபகாலமாக பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழி

கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று மாவோயிஸ்டு கள் குரலெழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பழங் குடி மக்களை தங்கள் வசம் வென்றெடுக்க கருதுகின் றனர். மத்திய இந்தியாவில், மாவோயிஸ்டுகள் கட் டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பட்டியலிடப்படாத, ஆனால் 20 லட்சம் மக்கள் பேசும் ‘கோந்தி’ மொழி மூலம் கல்வி அளிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத் தில்தான் கோந்தி மொழி பேசுவோர் அதிகமாக உள் ளனர். இருப்பினும்,ஒரு பள்ளிபாட நூல் கூட இது வரை அந்த அரசால் வெளியிடப்படவில்லை. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்தபின், தற் போது, அம்மாநில அரசு கோந்தி, கொர்க்கு, சத் தீஸ்கரி, ஹல்பி, சர்குஜிய ஆகிய மொழிகளில், 3,4, 5ம் வகுப்புகளுக்கான பாடநூல்களை வெளியிட்டுள் ளது. இது பழங்குடி இன மக்களிடையே பெரும் வர வேற்பை பெற்றுள்ளது.

பட்டியலில்வராத மொழிகளை பாதுகாக்க ‘பாஷா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்வி என்பவர் மொழி பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுவருகிறார் ‘புதன்’ என்ற கலைக்குழு அமைக் கப்பட்டு பாடல், நாடகங்கள் மூலம் மொழிகளை பாது காக்கும் நடவடிக்கைகளை ‘பாஷா’ அமைப்பு மேற் கொண்டுள்ளது. ‘ஹிம்லோக்’ என்ற அமைப்பு இமா லயப் பகுதிகளில் பேசப்படும் பட்டியலிடப்படாத மொழி

களை காக்க, நூல்கள், வார, மாத இதழ்களை வெளி யிட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் ‘மண்டரி’, ‘ஹோ’, ‘அசுர்’, ‘க்ரியா’ ‘குருக்ஸ்’ போன்ற அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்க ‘ஜார்கண்டி பாஷா சாகித்ய சன்ஸ்க்ருதி அக்ரா’ என்ற அமைப்பு அம்மாநில எழுத்தாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த அமைப்பு சார்பில் 25 நூல்கள் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

‘ஜோகர் திசும் கபர்’ என்ற மாத இதழ் மூலமாக வும், மொழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 13ம் நூற்றாண்டின் போது வட கிழக்கு சீனாவிலிருந்து அசாம் வந்த ‘அஹாம்’ இன மக்கள் அசாமிய மொழியை பேச ஆரம்பித்து, இன்று ‘அஹாம்’ மொழி அழியும் தருவாயில் உள்ளது. எனவே திப்ருகர் பல்கலைக்கழகத்தில் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஆங்கில பேராசிரியர் பிரசன்னஸ்ரீ ‘குர்ரு’ இன மக்களின் வரலாற்றை ஆராய்ந்து, அவர்கள் மொழிக்கு எழுத்து வடி வங்களை கண்டுபிடித்து, உயிர் கொடுத்துள்ளார். ஆந் திரா, ஒரிசா மாநிலங்களில் கொண்டா - டொராமொழி பரவ லாக பேசப்பட்டாலும், பழங்குடி மக்கள் ‘ஓரியா’ மொழியை பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்த மொழியை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ‘சந்தால்’ இனமக்கள் பெங்காலி பேச ஆரம்பித்து விட்டனர். தற்போது, ‘ஒல்சிக்கி’ என்ற அவர்கள் மொழியில் பேச ஊக்கு விக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மொழிகள் அழிந்து வருவதை கவ னித்து, “லிவிங் டங்க்ஸ்” (அமெரிக்க அமைப்பு) “சர் வைவல் இன்டர் நேஷனல்” (பிரிட்டிஷ் அமைப்பு) “சொரோ சொரோ” (பிரெஞ்சு அமைப்பு) ஆகியவை ஆய்வு செய்து மொழி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியக் குடியரசு இந்தியாவில் பேசப் படும் மொழிகளை பிரதிபலிக்க வேண்டும். இந்தியா வில் பேசப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழி கள் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப் படுத்துகின்றன. ஒருதுருவ உலகம், உலகமயம் ஆகிய கொள்கைகள் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடாமல் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள் ளப்படவேண்டும். மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்ப தால், மொழிகளை பாதுகாப்போம்!
                                                                                                                                                                                 நன்றி;தீக்கதிர்

ஒமியோபதி சில கூற்றுகளும்-உண்மைகளும்

கூற்று 1 : ஹோமியோபதி நிரூபிக்கப்படாத விஞ்ஞானம்.
உண்மை : பரிசோதனை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் கிளினிக்கல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்தது ஹோமியோபதி, கடந்த 200 ஆண்டுகளில் பல்வேறுநோய் அறிகுறிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளின் குணப்படுத்தும் திறன் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் கிளினிக்கல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் ஹோமியோபதியைத் தோற்றுவித்தவர்தான் அலோபதி என்ற பெயரை உருவாக்கினார். அவரை பரிசோதனை மருந்தியலின் தந்தை என்று அலோபதி மருத்துவர்கள் கருதுகின்றனர். ஹோமியோபதி நன்கு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகும்.
கூற்று 2 : ஹோமியோபதி மருந்துகள் வெறும் சர்க்கரை மாத்திரைகள்தான். அவற்றுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் கிடையாது. மருந்து போன்ற வெற்று மாத்திரைகளாகவே அவை செயல்படுகின்றன.
உண்மை : ஆம், வெள்ளை நிற சர்க்கரை மாத்திரைகளுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் இல்லைதான். ஆனால் இவை ஆல்கஹால் அடிப்படையிலான மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் வாகனங்களாகச் செயல்படுகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், ஹோமியோபதி மருந்துகளை நேரடியாகவோ, தண்ணீரில் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருந்துகள் உலகமெங்கும் விஞ்ஞான முறைப்படி ஆராயப்பட்டு, பலவகையான நோய்களுக்கு பயன்மிக்க மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவை மருந்து போன்ற வெற்று மாத்திரைகள் அல்ல.
கூற்று 3 : ஹோமியோபதி மெதுவாகச் செயல்படக் கூடியது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், ஜலதோஷம் போன்ற திடீர் அல்லது உடனடி நோய்களில் இவற்றை பயன்படுத்த முடியாது.
உண்மை : இது போன்ற நோய்களிலும் ஹோமியோதி விரைந்து செயல்படுகிறது. தொற்று நோய், காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றைத் திறம்படக் குணப்படுத்துக் கூடியது. துரதிர்ஷ்டவசமாக, குறுகிய கால பிரச்சனை நீண்ட கால நோயாக மாறும் போது தான் மக்கள் ஹோமியோபதியை நாடுகின்றனர். இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கு நீண்ட காலம் ஆகிறது. மேலும், ஹோமியோபதியை நாடி வருவது பெரும்பாலும் முடக்குவாதம், அலர்ஜி ஆஸ்துமா, நோயாளிகளே. இத்தகைய நோய்களை குணப்படுத்தும்போது எந்த மருத்துவ முறையானாலும் நீண்ட காலமே ஆகும்.
கூற்று 4 : ஹோமியோபதி எந்த ஒரு கோளாறையும் குணப்படுத்தக் கூடிய ‘மந்திர மருந்து’.
உண்மை : மற்ற எந்த ஒரு மருத்துவத்தையும் போல ஹோமியோபதி மருத்துவ முறைக்கும் சில வரம்புகள் உண்டு. உதாரணமாக, அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள நோய்களையும், பல் வியாதிகள் போன்றவற்றையும் ஹோமியாபதி குணப்படுத்தும்
கூற்று 5 : ஹோமியோபதி டாக்டர்கள் மருத்துவத் துறையில் முறையான பயிற்சி பெறாத அரைகுறை மருத்துவர்கள்.
உண்மை : உலகின் பெரும்பாலான பகுதிகளில் தகுதிவாய்ந்த டாக்டர்கள் ஹோமியோபதி மருத்துவம் செய்கின்றனர். இந்தியாவில் 178க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளில் ஹோமியோபதி படிப்பில் பட்ட வகுப்புகளும், 33 கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட வகுப்புக்களும் கற்பிக்கப்படுகின்றன. தற்போது நாட்டில் 2,17,000க்கும் கூடுதலான பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.
கூற்று 6 : ஹோமியோபதி சிகிச்சை எடுக்கும் போது கண்டிப்பான பத்திய உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
உண்மை : சில நோயாளிகளிடம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காபி, தேனீர், புகையிலை, மது போன்றவற்றைத் தவிர்க்கும்படி கூறப்படுகிறது. ஏனெனில், இவை ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் மது மற்றும் புகையிலைக் கட்டுப்பாடு உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.
கூற்று 7 : நீண்ட காலநோய்களுக்குத் தான் ஹோமியோபதி பயனளிக்கும்.
உண்மை : பெரும்பாலும் அப்படித் தான். எல்லா மருந்துகளும் தோற்றுப் போகிறபோது ஹோமியோபதி பயனளிக்கிறது. ஆனால் இந்தக் கருத்தின் உண்மை என்னவென்றால், எல்லா மருந்துகளும் தோல்வியுற்றுபோது தான் மிகவும் தாமதமாக ஹோமியோபதியிடம் மக்கள் வருகின்றனர். பல ஆண்டுகள் அலோபதி சிகிச்சை எடுத்தபிறகு ஒரு நோய் தீராத நோயாகிறது. எனவே தொடக்கத்தில் இருந்தே ஹோமியோபதி சிகிச்சை எடுப்பதால் உண்டாகும் காலத்தை விட அதிகக் காலம் எடுப்பது இயல்பே.
கூற்று 8 : சர்க்கரை நோய் இருந்தால் ஹோமியோபதி பயன்படுத்த முடியாது.
உண்மை : அப்படி அல்ல. சின்னஞ்சிறு சர்க்கரை உருண்டைகளை உட்கொள்வதால் பெரிய விளைவு ஏற்பட்டு விடாது. சில உருண்டைகளில் இருப்பதை விட அதிக அளவு சர்க்கரையை அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்கிறோம். மிகவும் முற்றிய நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் தண்ணீரில் ஹோமியோபதி திரவ மருந்தை கலந்து சொட்டுக்களாக எடுக்கலாம்.
கூற்று 9 : எல்லா வகையான நோய்களுக்கு அதே வெள்ளை மாத்திரைகளைத்தான் ஹோமியோபதி டாக்டர் தருகின்றனர். அவை எப்படி பயன்மிக்கதாக இருக்கும்?
உண்மை : நோயின் தன்மையைப் பொறுத்து சர்க்கரை உருண்டைகளில் வெவ்வேறு திரவ மருந்துகளை ஹோமியோபதி டாக்டர்கள் கலந்து தருகின்றனர். மருந்தை எடுத்துச் சென்று சேர்க்கும் வாகனங்களாகத் தான் சர்க்கரை உருண்டைகள் பயன்படுகின்றன. 1100 க்கும் அதிகமான வெவ்வேறு மருந்துக் கரைசல் ரகங்களில் இருந்து, நோயாளியின் நோய் நிலைமைக்கு ஏற்ற மருந்தை டாக்டர் தேர்வு செய்கிறார்.
கூற்று 10 : ஹோமியோபதி மருந்துகளினால் உண்மையிலேயே பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லையா ?
உண்மை : பொதுவாக, ஹோமியோபதியில் 30CH மற்றும் அதற்கும் மேற்பட்ட வீரியத்தில் உள்ள மருந்துகளை கொடுக்கும் போது பக்கவிளைவு ஏற்படுவது இல்லை. எனினும் 1X, 2X போன்ற குறைவான வீரியம் உள்ள சில வகை டிங்க்சர்களையும் மாத்திரைகளையும் பயன்படுத்தும்போது சிற்சில பக்கவிளைவுகள் உண்டாகலாம்.
மக்களுடைய மனங்களில் ஹோமியோபதி பற்றிய பற்பல சந்தேகங்களும் புதிர்களும் உள்ளன. சில பொதுவான சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறோம்.
                                                    நன்றி : SCHWABE வெளியீடு

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

Dec
31
  

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்
எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட மார்பக எக்ஸ்ரே படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லா தெரிவிக்கின்றார். மேலும் இதனை தான் ஆணித்தரமாக நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.
இதனை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சில விடயங்கள் இன்னும் விசித்திரமானவை.
இப் பெண்மணி அண்மையில் தனது வலது மார்பில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முகங்கொடுத்திருந்தார்.
அந்த சிகிச்சைக்கு முன் தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைக்குச் சென்றுள்ளார். 
இதன் போது முன் பின் அறிமுகமற்ற ஒருவர்கரேனை அணுகி "நீ குணப்படுத்தப்படுவாய்" என இயேசு கிறிஸ்து தெரிவிக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளார். 
எனினும் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும்வரை அதை அறிமுகமற்ற ஒருவரின் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் தெரிவிக்கின்றார். 
இதனால் இயேசு கிறிஸ்து தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஆனால் அவருக்கு நோய் குணமானதாகத்தெரியவில்லை. மூட நம்பிக்கைக்கு இந்தியா மட்டுமில்லை மேலை நாடுகளும் விதிவிலக்கில்லை. எக்ஸ்ரே படத்தில் எடுக்கும் போது ஏற்படும் கோளாறுக்கெல்லாம் ஏசுநாதர் பொறுப்பேற்க முடியுமா? 
கிராமத்து சொலவடைதான் நினைவுக்கு வருகிறது “கேப்பையில்  நெய் வடிகிறது என்றால்,,,,,,,,,,  

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கொசுவைக் குறைக்க,,,,,,


 
கொசுவை உண்ணும் சிலந்தி
கொசுவை உண்ணும் சிலந்தி
கொசுவை உண்ணும் சிலந்திவகை ஒன்று மனித வியர்வை வாடையால் ஈர்க்கப்படுகிறது என்பதை தாம் கண்டறிந்துள்ளதாக கென்யாவில் பணியாற்றிவரும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க பிரதேசத்து துள்ளியோடும் சிலந்தியினம், மனிதர்கள் பயன்படுத்திக் களைந்துபோட்ட காலுறையின் வாடையால் ஈர்க்கப்பட்டு அவற்றில் போய் தஞ்சம் அடைகின்றது என்றும், துவைத்து வைக்கப்பட காலுறைகளில் இவை சென்றடைவது இல்லை என்றும் தாம் கண்டறிந்துள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வியர்வை வாடை வரும்போது அந்த வாடைக்குரிய பாலூட்டி விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழுகின்ற கொசுக்கள் இரையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பி சிலந்திகள் வருகின்றன என்று தாம் நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிலந்திகளுக்கு வீட்டில் இடம் தந்தால் வீட்டில் கொசுத்தொல்லை குறையும் அதனால் மலேரியாவில் இருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படும் என்று கென்யர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
 சரி கொசு போய்விடும்.சிலந்தித்தொல்லை அதிகமாகிவிடுமே.
 அதற்கு என்ன செய்யலாம்ன்னு ஆராய்ச்சியை இப்பவே துவக்கிடுங்க.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

.நா.மன்ற கௌரவ தூதராக கமல்
கமலஹாசன்
கமலஹாசன்
எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கையில் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சினிமா நட்சத்திரம் கமலஹாசன், "ஹெச்.ஐ.வி. தொற்று வந்தவர்கள் பாவிகள் அல்ல" என்கிறார்.
தமிழகத்தின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஐ.நா.மன்றத்தின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், பிபிசி பண்பலை ஒலிபரப்புக்காக பேட்டி காணப்பட்டார்.
எய்ட்ஸ் வந்தவர்களை அங்கீகரிக்காத சமூகம் 'ஜன்னல் இல்லா வீடு' என்றும் அங்கு சுவாசிக்க முடியாது என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவிக்கிறார்.
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதோடு மனிதாபிமான உணர்வையும் தூண்டிவிடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சனி, 12 பிப்ரவரி, 2011

மாரடைப்பின் பின்னர் சுயமாக புதுப்பித்துக் கொள்ளும் திறனைப் பெறுமா மனித இதயம்? 
சீப்ரா எனப்படும் மீன் வகையின் இதயமானது மாரடைப்பின் பின்னர் தானாக புதிப்பித்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதைப் போல மனித இதயமும் அத்தகைய திறனைப்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வின மீன்களின் இதயத் திசுக்களானது மாரடைப்பின் பின்னர் தானாக மீள உருவாகுவதாகவும் இவ்வுத்தியை பயன்படுத்தி மனிதனின் இதயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாட்களை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


அம்மீனினத்தின் இதயத்தசைகளின் 20 % சுமார் 2 வாரங்களிலேயே குணமடைவதாகவும் இதற்கான முக்கிய காரணம் அவற்றின் இதயத்தில் காணப்படும் 'மொசைன் பீடா-4' எனப்படும் ஒருவகை புரத மூலக்கூறு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பொதுவாக மனித இதயமானது 4 இதயவறைகளைக் கொண்டுள்ளது. சீப்ரா மீன்களின் இதயமானது 2 இதயவறைகளைக் கொண்டுள்ளது.


எனினும் மனித இதயமானது அதிக மூல உயிரணுக்களை கொண்டுள்ளதால் இவற்றைத் தூண்டுவதன் மூலம் அம் மீனினத்தைப்போல மனிதனின் இதயத்திற்கும் புத்துயிரளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஜீவா என்றொரு கவிஞர்

                                 

தோழர் ப. ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமி ழக அடையாளமாகவே இன்றும் பார்க்கப்படுகிறார். பேசப்படுகிறார்; அவரது உணர்ச்சியூட்டும் பேச் சாற்றல் குறித்து சம காலத்தவர்கள் சொன்னவை களும், குறித்தவையும் காலத்தால் அழியாதவை. சிந்தனையைக் கிளர்த்தும் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் படிக்கப்படும்; பேசப்படும். அரசி யல், சமூக, கலை இலக்கிய, பண்பாட்டுத் தளங் களில் அவரின் தனித்த ஆளுமை என்றென்றும் கோபுரத்து விளக்காய் திகழும்.

அவருடைய பாடல்கள் ஒன்றிரண்டு திரும்பத் திரும்ப மேடைகளிலும் எழுத்துகளிலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பாடல்களை மட் டுமே அவர் எழுதினாரா? அல்லது கவிதை, பாடல் தளத்தில் அவரது சாதனைகள் உரிய அங்கீகாரம் பெறவில்லையா?

“காலுக்குச் செருப்புமில்லை... கால்வயிற்றுக் கூழுமில்லை...” என்ற பாடலும்; “கோடிக்கால் பூத மடா... தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்ற பாட லும் பிரபலமான அளவு பிற பாடல்களோ கவிதை களோ தற்போது அதிகம் பேசப்படாமல் இருப்பது ஏன்?

வெளித் தோற்றத்துக்கு மிக எளிதாகத் தோன்றும் இக்கேள்விகள் ஆழமான சமூக அரசியல் பண்பாட்டு வேர்களை நமக்கு அடையாளம் காட்டுவனவாக அமையும்.

1906ஆம் ஆண்டு பிறந்த ஜீவா 1963-ல் மறைந் தார். 1917 தொடங்கி 1963 வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்வில் இயங்கியவர். இவர் இளமையிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். அவர் தனது பதினாறு வயதில் பாடியதாகக் கூறப்படும் ஒரு பாடல் நமக்கு முன் ஆவணமாக உள்ளது.

“இது ஜெயம் இது ஜெயமே - இனி

ஈசன் நேசமதால் தேச பாடமிகும்...”

எனத் தொடங்கும் இந்தப் பாடலில் கடைசி வரிக்கு முந்தைய வரியில் பாமிகுஞ் சொரிமுத்தன் பணிந்தேன் கூவி” என தன் இயற்பெயர் சொரி முத்தன் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

“வரும் புதிய தமிழகத்தில் வறுமையுண்டா?

வஞ்சகமும் பஞ்சைகளும் வாழ்வதுண்டா?’

எனத் தொடங்கும் ‘புதிய தமிழகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய விருத்தங்களே அவர் எழு திய கடைசிக் கவிதை என ஆவணப்படுத்தப்பட் டுள்ளது.

இந்த விருத்தங்களில் இறுதியாக அவர் எழுப்பு கிற கேள்விகள் இன்றும் நம்மீது சட்டையாகச் சுழன் றடிக்கிறது.

“வரும் புதிய தமிழகத்தில் சாதியுண்டா?

வருணாசிரமம் பேசும் வம்பருண்டா?

இரு பழிசார் சேரி அக்ரகார முண்டா?

இழந்தோனும் எத்தனுமிங் கிருப்பதுண்டா?

பெரும்பொருளைச் சூறையிடும் கோயிலுண்டா?

பீடைமதக் கூத்தடிக்கும் பித்தருண்டா?

அரும்புமெழில் அறிவியலால் வாழ்வோர் ஆங்கு

அறியாமைப் படுகுழிகள் அணுக மாட்டா”

இந்தக் கவிதையோடு மொத்தம் 122 படைப்புகள் கவிதைகளும் பாடல்களுமாக நமக்குக் கிடைக் கின்றன.

இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன; 48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோஷலிசம் சார்ந்து எழுந்தவை; கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல் கள் 7; புரட்சி பற்றிய பாடல்கள் 5; இதுபோக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6, சுயமரியாதை, பகுத் தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல் கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1, என பத்து வகைப்பாடுகளில் அவற்றை நாம் அணுக லாம். இன்னும் நுட்பமாக வகைப் பிரித்தால் மேலும் சில கூடும். எனினும் இங்கு நம் கட்டுரைத் தொட ருக்கு ஏதுவாக இவ்வகைப்பாடு அமைக்கப்பட் டுள்ளது.

பொதுவாக இயக்கம் சார்ந்த பாடல்கள், அல் லது ஒரு தேவையின் பொருட்டு அப்போதைக்கு எழுதப்படும் பாடல்கள் அந்தத் தேவை முடிந்ததும் மறைந்துபோகும் அல்லது மக்கள் மறந்துவிடுவர். எதிர்கால இலக்கியப் பெட்டகத்திலும் அதற்கான இடம் பெரிதாக இருக்காது. பலவற்றுக்கு இடமே கிடைக்காது. ஆனால் ப. ஜீவானந்தம் பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன. மீண்டும் இப்போது இசைக்கப்பட்டாலும் அதன் உயிர்த்துடிப்பும் தேவையின் நிறைவும் அதில் வெளிப்படும்.

“உங்களுடைய பேச்சு வன்மையைத் தமிழகம் கேட்டுவிட்டது; தியாகத்தையும் தமிழகம் நன்கு அறியும்; நீங்கள் பிரச்சாரங்களிலும் போராட்டங் களிலும் ஈடுபடுவதை நிறுத்தி, தயவு செய்து தமிழன் நன்மையடையும் பொருட்டு உங்கள் உணர்ச்சி களைப் பாடல்களாக எழுதித் தள்ளுங்கள்”

இப்படி வேண்டுகோள் வைத்தவர் சாதாரண ஆள் அல்ல; அறிஞர் அண்ணாவால் அக்ரஹாரத்து அதிசய மனிதர் எனப் பாராட்டப்பட்ட வ.ரா. என் பதுதான் முக்கியம். (எந்தப் பாடலில் மூழ்கி இக் கருத்தை வெளியிட்டார் என்பதை பிறிதொரு இடத் தில் பார்ப்போம்.) ஒரு வேளை வ.ராவின் வேண்டு கோளை ஜீவா ஏற் றிருந்தால் தமிழ கம் ஜீவாவின் கவிதை, பாடல் அடைமழையில் திக்கு முக்காடி யிருக்குமோ!

ஜீவா பாடல் களை மேடைகளில் பாடவும், மேற்கோள் கள் காட்டவும் முற்போக்கு கலை இலக்கியவாதிகள் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கான தேவை இன்று உள்ளது. ஜீவாவின் பாடல்களில் அதற்கான காரமும் சாரமும் உண்டு. அவற்றைப் பருகினால் புரியும் அருமை பெருமை எல்லாம்.

“பெண்ணைக் கன்னா பின்னா வாய்ப்

பேசித் திரியும் வம்பர்

கன்னத்தோர் அறைவிழ வேண்டும்/வேறென்ன வேண்டும்”

“சின்னத் தனமாய்ப் பெண்ணை/சித்தரிக்கும் நூற்களை

இன்றே நெருப்பிலிட வேண்டும்/வேறென்ன வேண்டும்”

மக்கள் பாடகனுக்கே உரிய கோபமும், வார்த் தைகளின் வீச்சும் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பும் ஜீவானந்தம் கவிதைகளில் பாடல்களில் அடிநாத மாக உள்ளன.

இவர் பாடல்கள் பொதுவாக கொள்கைப் பிடிப் போடு பிறந்தவை. அவர் சரியென ஏற்றதை தயங் காமல் மூடி மறைக்காமல் பூடகமாய் பேசிக் குழப் பாமல் மென்று விழுங்காமல் தேங்காயை உடைத் தது போல உடைத்துக்கீறிக் காட்டுவதுதான் தனிச் சிறப்பு.

“எதிர்ப்பும் ஏற்பும் எதற்கும் உண்டு” என்ற தெளிவும்; “அறிவியல் வாதம் பெறில் முன்னேற்றம்” என்ற பார்வையும் 1920ல் இவர் எழுதிய சுய மரியாதைச் சொன் மாலையில் துலக்கமாய் உள் ளது. ஆகவே அவரது கவிதைகள் யாருக்காக எதற் காக எழுதப்பட்டதோ அதற்கொப்ப வீறுடன் பேசின.

இவர் பாடல்கள் சமூகத்தில் புரையோடிய புண்களை கீறி அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை நிகர்த்தவை..
                                                                                                  சு.பொ.அகத்தியலிங்கம்
  நன்றி;தீக்கதிர்,                     

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விஜய்[யம்]

                                           நடிகர் விஜய் பொங்கி எழுந்துவிட்டார். தமிழக மீனவர் படுகொலைக்குப் பழிவாங்கக்கிளம்பிவிட்டார். இனி இலங்கை கடல் படையினர் அவ்ளோதான்.பலகால பிரச்சினைக்கு இளையதளபதியால்தான் ஒருவிடிவு காலம் பொறக்குது.
 ஆமாம். இலங்கைபடையினரால் கொல்லப்பட்ட மீனவரைப்பார்த்து துக்கம் விசாரித்துவிட்டு அப்படியே ரசிகக் கண்மணிகளுடன் ஒரு நடை[பேரணி]போகிறாராம். இதுவரை எத்தனை மீனவர்கள் இலங்கைகாடையரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அப்போது எல்லாம் இந்த நடிகருக்கு மீசை [இருந்தால்]துடித்திருக்கவேண்டாமா.?இப்போது தான் தமிழக மீனவர் துயரம் தெரிந்ததா?ஒட்டுக்கட்சிகள்தான் இப்போது மிகவும் உணர்ச்சியாக இருக்கிறார்கள். காரணம் நெருங்கிவரும் தேர்தல். இவருக்கு  உணர்ச்சி இப்போது பொங்கக்காரணம்.?இவர் அரசியலில் குப்பைக்கொட்டும்  நேரம் நெருங்கிவிட்டதுதான்.
 கொஞ்சம் இளைஞர்கள் படம் பார்த்த வேகத்தில் ‘”தலைவா” என்று கத்திவிட்டால் போதும்.இந்த நடிகர்களுக்கு அரசியல் கிறுக்கு பிடித்து விடுகிறது அது இந்த தமிழ்நாட்டின் சாபக்கேடு.
தனது படங்கள் ஒடவில்லை.காவலன் படம் வெளியிட சில சிக்கல்கள்.
அப்பாவையும் ,மகனையும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் நிலைக்கு  தள்ளி  விட்டது அப்பாவும் ,மகனும் போய் நின்ற இடம் போயஸ். உனது படம் நன்றாக இருந்தால் தன்னாலே வெளியாகி ஒடாதா?உனக்கு பார்வையாளர் மத்தியில் வரவேற்பு இருந்தால் எவன் குறுக்கிட்டு படத்தை நிறுத்தமுடியும்.
 படம் வாங்க ஆள் இல்லை என்றால் தாமதம் ஆகத்தானே செய்யும் .
               அரசியலில் இறங்கிவிட்டு முழித்துக்கொண்டிருக்கும் பாக்கியராஜ்,ராஜேந்தர் ,முழிக்கத்தயாராகிக்கொண்டிருக்கும் விஜய்காந்த்,சரத்குமார்,கார்த்திக் பட்டியல் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்,க்கு இணையா கொடிகட்டிய அமரர் சிவாஜி இவர்களைக் கொஞ்சம் அப்பாவும் ,மகனும் நினத்துப்பார்க்கக்கூடாதா?
 எம்.ஜி.ஆர்,கதையே வேறு. காங்கிரஸ்,தி.மு.க,என்று ஆரம்பம் முதலே
 அரசியல் பின்னணி உண்டு.உன்னப்போல் குடித்து,புகைத்து நடித்தவர் அல்ல.
 படங்களில் அப்பாவை பெயர் சொல்லி மரியாதைக்குறைவாக நடிப்பவர் அல்ல.பெண்களை மிக உயர்வாகக் காண்பிப்பவர். இது போன்ற நடிப்புகளால்
 ஒட்டுமொத்த தமிழக மக்கள் அபிமானம் பெற்றவர்.
 என்னவோ, தம்பி விஜய் அரசியல் சேற்றில் கால் வைக்கும் முன் நன்கு  யோசி காரணம் அதனால் பாதிப்படையப்போவது நீ மட்டுமல்ல.உன் ரசிகர்கள்,  அவர்கள் குடும்பம் மட்டுமல்ல, இந்த தமிழகமும் தான். விஜய்காந்த்தையே சமாளிக்க தமிழகமக்கள் திண்டாடுகிறார்கள். இதில் நீவேறு சேர்ந்து,,,,,,,,,,,
 பாவம் தமிழகம் ,எங்களைப்போன்ற தமிழகமக்களைப்பார்த்து  இரக்கம்  வரவில்லையா,,,?

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கமல்-செல்வா கூட்டணி..

கதையின் ஒரு வரியை கேட்டு செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுத்த கமல்!
 "ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'இரண்டாம் உலகம்' படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதில் தீவிரவாதி வேடம் ஏற்கிறார் கமல்.
இன்னொரு ஆயிரத்தில்ஒருவனாகவோ,மன்மதன் அம்பாகவோ எடுத்து பார்ப்பவர்களை கொடுமைப்படுத்தாமல் இருந்தா சரி,
 

திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஓட்டு முக்கியம் இல்லை,-கமல்

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு ஒன்றை நடிகர் கமல்ஹாஸன் தொடங்கியுள்ளார். "ஓட்டுக்களைச் சேகரிப்பது முக்கியம் அல்ல. மனிதர்களை சேகரிப்பதுதான் முக்கியம்" என்று அந்த அமைப்பின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று நடந்தது. இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.
திருமண மண்டபம் வெளியே சாலையில் போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறிய மண்டபம் என்பதால் குறைவான ரசிகர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர்.
திருமண மண்டபத்தின் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கமல்ஹாசன் காலை 10.30 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், உலக நாயகன் வாழ்க, கமல் வாழ்க என்று உற்சாக மிகுதியில் குரல் எழுப்பினார்கள். கமல்ஹாசன், ரசிகர்களின் வரவேற்பை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற விழாவில், இளைஞர் அமைப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியையும் வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:
"ரசிகர் மன்றம் இருக்கும்போது புதிதாக இளைஞர் அமைப்பு என்ற அமைப்பை என்ன காரணத்திற்காக தொடங்க வேண்டும் என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், மனிதர்களைச் சேகரிப்பதுதான் முக்கியம். ஓட்டுக்களைச் சேகரிப்பது முக்கியம் அல்ல.
நமது மன்றத்தின் பணிகள், செயல்கள் என்ன என்று செயல்விளக்க கூட்டங்களில் ஏற்கனவே பேசி இருக்கிறேன். எனவே, அதைப்பற்றி எல்லாம் இங்கு சொல்ல தேவையில்லை. ரசிகர்களைச் சந்திப்பதற்கான ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். இங்கே மண்டபத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதைப் பார்த்தேன். சாலையில் யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதுதான் முதல் பணி.
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18-க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையைக் குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை `சோசியல் மெசேஜ்' என்று சொல்வார்கள். அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது.
நாம் எல்லோரும் ஒருநாள் பிப்ரவரி 14ஆம்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை சரியாகிவிடும். அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளை செய்தால் போதும். அதற்கு மேல் போகத்தேவையில்லை.
நாம் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களைச் செய்ய வேண்டும். மற்றவர்களைக் குறைசொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்."
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
இந்தப் புதிய இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழா முடிவடைந்த பிறகு கமலுடன் ரசிகர்கள் ஒவ்வொருவராக போட்டோ எடுத்துக்கொண்டனர்.
 நடிகர்கள் ஒவ்வொருவராக கட்சி ஆரம்பிக்கும் போது கமல் வித்தியாசமாக
செய்துள்ளார்.இது இளைஞர் அமைப்பாகவே இருக்குமா? அல்லது இளைஞர்
அணியாக மாறிவிடுமா,,,,,? 

அணு உலையால் ஏற்பட்ட ஆபத்து

பறவைகளுக்கு பாதிப்பு
பறவைகளுக்கு பாதிப்பு
செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்தில் காணப்படும் பறவைகளின் மூளை அளவானது 5 சதவீதம் வரையில் குறைவாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த பகுதியில் காணப்பட்ட சுமார் 48 இனங்களை சேர்ந்த 550 வகையான பறவைகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி பிளோஸ் ஒன் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
நார்வே, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு ஆலையின் நான்காவது உலை வெடித்து சிதறியது.
இதனை தொடர்ந்து வடக்கு துருவத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் கதிர்வீச்சின் தாக்கங்கள் காணப்பட்டன.
விபத்து ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். எனினும் கதிர் வீச்சின் தாக்கம் இந்த பகுதியில் உள்ள உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உயிரினங்களின் வகைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே போன்று கதிர் வீச்சு உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிய உயிரினங்களின் மரபணுக்கள் சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் தான் பறவைகளின் மூளைகள் கிட்டதட்ட 5 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பல பறவைகள் முட்டையாக இருக்கும் கட்டத்தில் அழிந்துள்ளன.
பறவைகள் கடுமையான சூழ்நிலைக்கு உள்ளாகும் போது தங்களுடைய உடல் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு. உதாரணமாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் சக்தியை சேமிப்பதற்காக தங்கள் உடலின் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு.
ஆனால் மூளையை சுருக்குவது என்பது ஒரு புதிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இது கதிர்வீச்சினால் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிந்தால், பறவையின் மற்ற உடல் பாகங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். 
 பறவைகள் மட்டுமா பாதிக்கப்பட்டிருக்கும். மனிதன் நிலை? ஏற்கனவே குறை பிரசவம்,ஊனமுற்றகுழந்தைகள்  பிறந்துகொண்டிருக்கின்றன. எவ்வளவுதான் 
 அழிவுகள் இருப்பினும் அணு உற்பத்தியை மட்டும் உலகநாடுகள் நிறுத்தப் 
 போவதில்லை,,

வானத்தில் குப்பை

 
பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக,9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது. எனினும் இந்த செயற்கைக்கோள் 2020ல் தான் தயாராகும்.
 குப்பையைப் போடும் வேகம் அதிகம். ஆனால் சுத்தம் செய்ய ஆமை வேகமா?
         அதற்குள் குப்பை இன்னும் அதிகமாகிவிடுமே?

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வேம்பு இனிப்பு செய்தி

இன்று மிகப் பிரபலமான தாவரப் பூச்சிக் கொல்லியாக வேம்பு திகழ்கிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உழவர்கள் வேப்ப இலைகளை தானியங்களுடன் கலந்தும், சாக்குப் பைகளை வேம்புக் கரைசலில் முக்கி எடுத்துக் காயவைத்தும் தானியங்களைச் சேதம் செய்யும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து வந்தனர்.

வேப்பம் பிண்ணாக்கு பயிர்களை கரையான், மற்ற பூச்சிகளின் தாக்குதலில் இருநூது பாதுகாப்பு அளித்தது. இதனை நிலத்தில் இட்டு பயன்படுத்துவதைவிட பயிர்களுக்குத் தெளித்துப் பயன்படுத்துவது மேலும் பல நன்மைகளைக் கொடுப்பதாக இருந்தது.

வேப்ப இலைகள் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இடுவதன் மூலம் அதிலுள்ள வேதிப் பொருட்கள் நேராக பயிர்களுக்கு வேர்களின் மூலம் ஊடுருவிப் பரவி நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.

வேம்பு சுற்றுச்சூழலை பாழ்படுத்துவதில்லை. இதனைப் பயிர்களுக்குத் தெளிப்பதால் பயிர்களுடன் தொடர்பு கொள்ளும் பறவைகள், தேனீக்கள், மண்புழுக்கள், எறும்புகள், சிலந்திகள் போன்ற உயிரினங்களுக்கு எவ்விதத் தீங்கையும் விளைவிப்பதில்லை. இது நீரின் மூலமாகப் பரவி மீன்களைப் பாதிப்பதில்லை.

வேம்பில் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பது மிக எளிது, செலவு பிடிக்காதது. விவசாயிகள் தயாரிக்கும் வேப்ப எண்ணெய்க் கரைசல், பூச்சிக்கொல்லிக் கம்பனிகளால் குறிப்பிட்ட வேதிப் பொருட்களைப் பிரித்து தயாரிக்கும் பூச்சிக் கொல்லியைவிடச் சிறந்தது.

1962ஆம் ஆண்டு டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பிரதான் என்பவர், வேம்பில் பூச்சிகளை உண்ணவிடாமல தடுக்கும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அதன் பின்னர் மேலை நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் வேம்பு தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்தனர். இதன்மூலம் மேலும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

பத்து வகையான வண்டினங்கள், பத்து வகையான ஈக்கள், இருபத்தைந்து வகையான பட்டாம்பூச்சிகள், புழு இனங்கள், ஒன்பது வகையான வெட்டுக்கிளி இனங்கள், பல்வேறு வகையான அசுவிணி இனங்கள், பூஞ்சைகள், இலையைத் தாக்கும் புழுக்கள், செம்பேன்கள், நூற்புழுக்கள், கரையான்கள் போன்ற மொத்தம் 200 உயிரினங்கள் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. செடியின் பல பாகங்களை தாக்கிச் சேதப்படுத்தும் பூச்சிகள், வேம்பில் வீரியத் தன்மை காரணமாக கொல்லப்படுகின்றன. உண்ணவிடாமல் தடுக்கப்படுகின்றன. பூச்சிகள் ஊனமுற்றவையாகவும் ஆக்கப்படுகின்றன. அத்துடன் முட்டைகளும் அழிக்கப்படுகின்றன.

செயற்கை முறையில் வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள வீரியத் தன்மை உள்ள வேதிப் பொருட்கள் பூச்சிகளின் இனப்பெருக்கத் தன்மை அல்லது சுவாச மண்டலம் அல்லது நரம்பு மண்டலம் இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன. இதனால் பூச்சிகள் அந்த ஒரு அபாயத்தை எதிர்கொள்ளும் தகவமைப்பை நாளடைவில் பெற்றுவிடுகிறது.

வேம்பு மற்றும் மற்ற தாவங்களில் தயாரிக்கப்படும் கரைசல்களில் பல வேறு வகையான வீரியத் தன்மையுள்ள வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இவை ஒரே சமயத்தில் பூச்சிகளின் அனைத்து உடலியல் இயக்க மண்டலங்களையும் தாக்கிச் சேதம் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒட்டுமொத்தத் தாக்கி அழிக்கும் தன்மையை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் தன்மையை பூச்சிகள் உருவாக்கிகாள்ள வேண்டுமானால் ஒரே சமயத்தில் அனைத்துத் தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் திறனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது சாத்தியமே இல்லை. இதன் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது விவசாயிகள் வெற்றிகரமாக வேம்பை பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வேம்பைப் பொருத்தவரை ஒரு சில குறைபாடுகள் உள்ளன. இதில் உள்ள வீரியத் தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் வெயிலில் சிதைந்துவிடுவதால் அடிக்கடித் தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
 நம் தமிழகதில் எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுடையது வேப்பமரம்.அதனாலோ என்னவோ நம்மவர்கள் வேப்பமரத்தை மிக சாதாரணமாக எண்ணிவிடுகின்றனர்,அதை நம்
வீடுகளில் வளர்ப்பது கோடைவெப்பத்தில் இருந்து நம்மை காப்பற்றுவதுடன், மாசு பட்ட காற்றை
சுத்தமாக குளிர்ச்சியாகத் தருகிறது. 
டெல்லியில், ஜனவரி மாதத்தில் ஸ்காட்ச் விற்பனை 82,368 பாட்டில்களாக இருந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மட்டும் டெல்லியில் 6864 கேஸ் ஸ்காட்ச் விற்பனையாகியுள்ளது. ஒரு கேஸ் என்பது 12 பாட்டில்களைக் கொண்டதாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5462 கேஸ் விற்பனையாகியிருந்தது.

இதற்கிடையே, புகழ் பெற்ற ஸ்காட்ச் வகைகளை போலியாக தயாரித்து விற்பனைக்கு விட்டு வந்த ஒரு கும்பலை டெல்லி போலீஸார் பிடித்துள்ளனர்.

டெல்லியைப் பொறுத்தவரை 15 வகையான ஸ்காட்ச் பிராண்டுகள் விற்பனையாகின்றன. அதே அளவுக்கு போலி ஸ்காட்சுகளும் நகரை வலம் வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

’சைக்கோ ‘பயம்ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்
உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு படமாகவே கருதப்படுகிறது.
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய அந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்தது.
சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு உலகுக்கு, பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.
சைக்கோ படத்தில் ஜெனட் லே
 ஜெனட் லே
சைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம் அது.
அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு பெண்மணி பணத்தை திருடிவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். பின்னர் அதற்கான விலையையும் அவர் கொடுக்க வேண்டியதாகிறது.
ஹிட்ச்காக்கும் ஜெனட் லேயும்

அந்தப் படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக் நல்ல ஒசைகளை ஆராதிக்கும் குணம் கொண்டவராக இருந்தார். மேலும் அருமையான இசை அமைப்பாளரான பெர்ணாண்ட் ஹெர்மானை அவர் பணிக்கு அமர்த்திக் கொண்டார்.
தனது ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று அவர் உணர்ந்திருந்தார். அதுவும் குறிப்பாக அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் ஹிட்ச்காக் நிபுணராக இருந்தார்.
அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
           ஹிட்ச்காக்  எத்தனையோ படங்கள் இயக்கி புகழின் உச்சிக்கு சென்றாலும்
 அவர் பெயரைக் கூறியதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ’சைக்கோ’தானே,,,,,,

செல் பேசியா? கொல்பேசியா?


செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.

மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.

ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.

அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
                     இதனால்
 மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.

செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்..." என பரிந்துரைத்துள்ளது.

மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக்குழு பலமாக எச்சரித்துள்ளது.
 

செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.

மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.

அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.

இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக 'இந்திய டெலிகிராப் சட்டம் 1885'-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.

இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்... அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.

மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.

உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.

இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
  
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம்.
           நுகர்வோர் சுய பாதுகாப்புதான் நல்ல பயனைத்தரும்.எவ்வளவோ
 எடுத்துக்கூறியும் இன்னமும் வாகனங்களில் செல்லும்போது செல்பேசியில்
 பேசிக்கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...