bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 30 ஜூன், 2019

நம்ம ஊரு பரவாயில்லை .

வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் நாம் 100 டிகிரி 105 டிகிரி வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறோம்.

பொதுவாகவே ஆசிய நாடுகளில் வெயில் அதிகம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் குளிர்ந்த தட்பவெப்பமே நிலவும்.
தற்போது  சுற்றுச்சூழல் மாசு, உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பாவிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக பல்கேரியா, போர்த்துகல், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், வடக்கு மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 110 டிகிரியை தாண்டியது.
நேற்று 7 வது நாடாக பிரான்ஸ் உச்சபட்ட வெப்பநிலை 115 டிகிரியை சந்தித்தது.

பிரான்சின் கல்லார்கூஸ் நகரில் 115 டிகிரியை நேற்று எட்டியது.
 கடந்த 2003ம் ஆண்டு இங்கு 111 டிகிரி பதிவானதே இதுவரை உச்சபட்சமாக இருந்தது.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஐரோப்பியாவின் மத்திய பகுதிகளில் நேற்று வெப்பநிலை 113 டிகிரியை எட்டியது. வெளியேறிய மக்கள்இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்கள், நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
நகரங்களில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.கடந்த 2003ம் ஆண்டு இதே போன்று வெப்பநிலை உயர்ந்ததில் 15 ஆயிரம் பேர் வரை இறந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் முதியவர்கள். 

எனவே இந்த ஆண்டும் அதுபோன்று நிகழக்கூடாது என்பதற்காக அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

பாரிஸ், லியான், மார்செல்லி நகரங்களில் மாசு ஏற்படுத்தும் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் காட்டுத்தீ பரவி வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் 600 வீரர்கள், 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.பிரான்ஸ் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அக்னஸ் பஸ்யன் விடுத்துள்ள அறிக்கையில், 'கடும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
ஆனால் அங்கு அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மதிப்பதில்லை.
 இதனால் கடந்த சில நாட்களாக நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களே காரணம்ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், உலக வெப்ப மயமாதலே இத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதை தவிர்க்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக காலாவதியான, நீண்ட காலம் இயக்கப்பட்ட வாகனங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். மனிதர்களின் வரைமுறையற்ற சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் போக்கே இதற்கு முக்கிய காரணம், என குறிப்பிட்டுள்ளது.

 ஐரோப்பிய சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், கணிக்க முடியாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
 இதனால் பல நோய்கள் ஏற்படலாம்.

குறிப்பாக குழந்தைகள், முதியோர் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
வீட்டில் இருக்கும் குழந்தைகள், முதியோரை வெளியே அனுப்ப வேண்டாம்.
அவர்களுக்கு தேவையான குளிர்ந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு அரசுத்துறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வெப்ப நோய்களுக்கு தேவையான மருந்துகள் கைவசம் இருக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் அவ்வப்போது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
நம்ம ஊரு பரவாயில்லை என்றுதான் இயற்கையை கொண்டாட வேண்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 23 ஜூன், 2019

ஏண்டா நாய்களா

 கம்னாட்டி பசங்களா.

தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை  ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது,
டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்யை கேவலமாக பேசியது,
 இப்படியெல்லாம் கழுவி கழுவி ஊத்திய பிறகு அதே திமுகவோடு கூட்டணி வைத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அதுகுறித்து விளக்கமளித்த அன்புமணி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியது.
ஒருகட்டத்தில் கேள்வி கேட்கும் நிருபரைப் பார்த்துக் கோபமாகப் பேசிவிட்டு எஸ்கேப் ஆனது என மிகப்பெரிய சம்பவம் நடந்தது. 

இந்த நிலையில் பாமகவின் ஒரு பிரிவான தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இதுதொடர்பாக பாமக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “ஊடகங்கள் எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்வுக்குப் பதிலடி கொடுக்கவும், சமூகரீதியாக எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவே இந்தக் கூட்டம் என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் இறுதியாக பேசிய ராமதாஸ், “டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிகை. அதன் நிருபர் இங்கு இருக்கிறான்.
 அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான்.
 அப்போது நான், தம்பி இந்த கேள்விக்கு நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன்.
திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய்.
 இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம்.
இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் என்றேன்.

உடனே அனைவரும் எழுந்து என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டனர்.
100 தடவை இதனை கேட்டுவிட்டீர்கள் என்றேன்.
 101வது தடவை கேட்டால் பதில் சொல்ல வேண்டியதுதானே என்று ஒருவன்  சொல்றான்.
அப்படியென்றால் ராமதாஸ் என்றால் மரம்வெட்டி என நிரூபிக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று கடுமையாகப் பேசினார்.

கடைசியாக பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்த அவர்; ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா,
 நான் வைத்த மரத்தை வந்துபாருங்கள் ஒரு வருடமாகிறது இதுவரை எந்த நாயும் வந்து பார்க்கவில்லை. அறக்கட்டளை மூலமாக வனமே வைத்துள்ளேன் என அசிங்க அசிங்கமாக பேசினார்.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 லட்சுமி நாராயனண்

முன்னாள் டிஜிபி  வி.ஆர்.லட்சுமி நாராயனண்  வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.வயது 91.

இவருடைய சகோதரர் புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சுரேஷ் என்ற மகனும், உஷா ரவி மற்றும் சீதா என்ற மகள்களும் உள்ளனர்.


மதுரையில் இவர் முதன்முதலாக டி எஸ்பியாக பதவியேற்றபோது முதல்வராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து பெரியார்,ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என பல தலைவர்களுடன் பணியாற்றிய பெருமை படைத்தவர் விஆர் லட்சுமி நாராயனண்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவசரநிலை(எமர்ஜென்சி) அடக்குமுறைகளுக்காக  இந்திரா காந்தியைக் கைது செய்தவவர் லட்சுமி நாராயனண்

லட்சுமி நாராயண்  1945ம் ஆண்டு சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.
 1951ம் ஆண்டு சிவில் சர்வீஸ் எழுதிய அணியைச் சேர்ந்தவர் இவர்.

தன்னுடைய போலீஸ் பணியை மதுரையில், ஏ.எஸ்.பி.யாக துவங்கியவர்.
பின்பு மத்திய புலனாய்வுத்துறையின் இணை இயக்குநராக செயல்பட்டார் லட்சுமி நாராயணன்.

எமெர்ஜென்ஸி காலம் முடிவுக்கு வந்த பிறகு, மொரார்ஜி தேசாய் ஆட்சியின் கீழ் இந்திரா காந்தியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கைது செய்தார் லட்சுமி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராவின் வீட்டிற்கு சென்ற லட்சுமி நாராயணன், ராஜிவ் காந்தியிடம் உங்கள் தாயாரை நீங்களே சரணடைச் சொல்லுங்கள்.
என்னால் ஒரு காவல்துறை அதிகாரி போன்று நேருவின் வாரிசையும், இந்தியாவின் முன்னாள் பிரதமரையும் கைது செய்ய இயலாது என்று கூறினார்.
சரணடைந்த இந்திரா அவரிடம், உங்களின் கைவிலங்குகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவரோ நான் உங்களுக்கு கீழ் விசுவாசமாக கடமையாற்றியுள்ளேன்.
உங்கள் கைகளால் இரண்டு முறை மெடல்கள் வாங்கியுள்ளேன் என்று கூறிய அவர், கை விலங்குகளை எடுத்துவர மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இவரை புலனாய்வுத்துறை இயக்குநராக பணியில் நியமிக்க முடிவு செய்தார்.
அதன் பின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். லட்சுமி நாராயணனை தமிழகத்தின் டி.ஜி.பியாக அறிவித்து அவரை தமிழகத்திற்கு திருப்பி பெற்றுக் கொண்டார்.
1985ல் பணி ஓய்வு பெற்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 18 ஜூன், 2019

இரு நூற்றாண்டுக் கதை.

"மாநில  மொழிகளுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உயர்நிலை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிற மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசு பள்ளிகளில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை நினைவு கொள்ள வேண்டும்."
இரு நூற்றாண்டுக் கதை. 

1833ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி கிறித்தவ மிஷினரிகளின் செயல்பாட்டை கட்டுபடுத்த தவறியது. கிறித்தவத்தை பரப்புவதற்கான மிஷினரிகள் படையெடுத்தன, குறிப்பாக தென் இந்தியாவை இலக்கு வைத்தன.
தென் இந்தியாவில் மிஷினரிகள் அதிகம் கால்பதித்தன என்பதை இரு மேற்கொள்கள் மூலம் கூறலாம்.

"1832ஆண்டுக்குள் 40,000க்கும் மேற்பட்ட கிறித்தவ துண்டுப்பிரசுரங்கள் தமிழில் அச்சிடப்பட்டன.
 அவை 1852ஆம் ஆண்டிற்குள் 2,10,000 ஆகின." (எம்.எஸ்.எஸ் பாண்டியனின் பிராமின் & நான் பிராமின், புத்தகம்)
"1852ஆம் ஆண்டில், மெட்ராஸில் 1185 மிஷனரி பள்ளிகளில் 38,000 மாணவர்கள் இருந்தனர். ஆனால் பாம்பே மற்றும் வங்காள பரசிடென்சியை சேர்த்து 472 பள்ளிகள் இருந்தன அதில் 18,000 மாணவர்கள் பயின்றனர்." (எஸ்.நாரயணின் தி ட்ரவிடியன் ஸ்டோரி புத்தகம் )
இவை அனைத்தும் கிறித்தவ மதம் குறித்த செய்திகளை பரப்புவதற்கு மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

இந்து மதக் கடவுள்களையும், நம்பிக்கைகளையும் இழிவு படுத்துவதன் மூலம் இந்துக்கள் மதம் மாறுவதற்கு தெரிவிக்கும் எதிர்ப்பதை குறைக்கலாம் எனவும் கருதப்பட்டது.
வேதங்கள், புராணங்கள், மற்றும் சங்கர அத்வைத தத்துவம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற பிராமணர்கள், ஐரோப்பிய மற்றும் பிரிட்டனின் கலாசாரத்தை தெரிந்தவர்கள் இதை எதிர்க்க முற்பட்டனர்.

சமஸ்கிரத மொழியில் உள்ள "ஆரியர்கள்" என்ற பதத்துடன் தங்களின் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளும் பிராமணர்கள், "பாரம்பரியம்" என்ற பெயரில் அவர்களின் "பழமையான சாதி அதிகாரங்களை" நடைமுறைப்படுத்தினர். மேலும் ஆங்கிலத்தில் உள்ள புலமையின் காரணமாக "காலனித்துவ நிறுவன அமைப்பின் அதிகாரத்தை நவீனமாக செயல்படுத்தினர்." (எம்.எஸ்.எஸ் பாண்டியன்).

காலனித்துவ நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை விளக்குகிறார் எழுத்தாளர் நாராயண்: "1892ஆம் ஆண்டிலிருந்து 1904ஆம் ஆண்டிற்குள் இந்திய சிவில் சேவையில் தேர்வாகிய 16 பேரில் 15 பேர் பிராமணர்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட 27 பொறியாளர்களில் 21 பேர் பிராமணர்கள்."
ஆரிய பரம்பரை மற்றும் சமஸ்கிரத கலாசாரம் ஆகியவற்றை கொண்ட பிரமணர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்கள், அந்த சமயத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெறுபவர்களில் 67 சதவிகிதம் பேர் பிராமணர்களாக இருந்தனர்.

அரசு பணிகள், தலைமைச் செயலகம் மற்றும் பிற மாவட்ட நிர்வாகத்திலும் அவர்கள்தாம் அதிகம் இருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் ஆகியவையும் கிட்டதட்ட அவர்கள் கட்டுபாட்டிலேயே இருந்தன. பிரபலமான பத்திரிகையாளர்கள் பிராமணர்கள்; ஏன் தனியார் வர்த்தகங்களிலும் அவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்தினர்.
இதற்கான எதிர்ப்பு சீக்கிரமே வந்தது. 1916ஆம் ஆண்டு டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறி "பார்பனர் அல்லாதார் கொள்கை பிரகடனம்" ஒன்றை வெளியிட்டனர்.


1916ஆம் ஆண்டு, மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார்.
தமிழில் உள்ள சமஸ்கிரத கலப்பு மற்றும் தமிழ் சொற்கள் அல்லாத சொற்களை நீக்குவதற்காக அந்த அமைப்பை தொடங்கினார். இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சியாக உருவெடுத்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸியில் இருந்த பிராமணர்களை அதிகமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வலுவான ஒரு சவாலை கொடுக்க தொடங்கியது.
மகாத்மா காந்தியின் பரிந்துரையால் 1918ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தி பிரசார சபா, தமிழின அடையாளம் குறித்து அரசியல் மொழி தொடர்பாக ஏற்பட்டிருந்த எதிர்ப்பானதை மேலும் வளர்த்தது.

ஒருகாலத்தில் காங்கிரஸ், பிராமணர்கள், ஆரியர்கள், வட இந்தியர்கள், சமஸ்கிரதம் மற்றும் இந்தி திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக இருந்து வந்த நிலை திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு வித்திட்டது.
சமூக, மொழி கலாசாரத்துக்கான எதிர்ப்புரட்சி உச்சத்தை அடைந்தபோது 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

நீதிக்கட்சி தேர்தல்களில் தடுமாறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம் அதனை பின்னுக்கு தள்ளியது. அதன்பின் 1938ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவரானார் பெரியார். அதனை திராவிட கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்தார்.
மெட்ராஸ் மாகாணாத்தின் முதலமைச்சராக இருந்த காந்தியவாத பிராமணராகிய ராஜாஜி, 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி சுதேசமித்ரன் பத்திரிகையில், "இந்தி கற்றுக் கொண்டால் மட்டுமே தென் இந்தியர்கள் பிற மக்களின் மத்தியில் மதிப்பை பெற முடியும்," என எழுதினார்.
இதனை அரசு ஆணையாகவும் அவர் பிறப்பித்தார். அதன்பின் இடைநிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார்.
இதுவே தமிழர்கள் மத்தியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திட்டது.
 இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நடைபெற்றது.
அதுவே தமிழ்நாட்டு அரசியலின் வரைபடத்தையும் மாற்றியது என்று கூறலாம்.

இந்த அரசாணைக்கு எதிராக நீதிக்கட்சி மற்றும் முஸ்லிம் லீக்கால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் படை 42 நாள் பேரணியை தொடங்கியது.
அது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. திருச்சியிலிருந்து மெட்ராஸ் வரை நடைபெற்ற அந்த பேரணி 239 கிராமங்கள் மற்றும் 60 நகரங்களில் சென்றது.
அந்த பெரிய பேரணியில் 50,000 பேர் கலந்து கொண்டனர்.
"தமிழர்கள் கண்ணீர் சிந்தும்போது ஆரியர்கள் சிரிக்கின்றனர்." மற்றும் "பிராமண சமூகம் தமிழ்த்தாயை கொல்கிறது" என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்தி எதிர்ப்பு மாநாடுகள் அந்நாட்களில் இயல்பான நிகழ்வுகளாக இருந்தன. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு படை உருவானது. பெண்கள் நடத்திய மாநாட்டில் ஈ.வெ.ராமாசாமிக்கு 'பெரியார்' என பட்டம் வழங்கப்பட்டது. அந்த பெயராலேயே அவர் பெரிதும் அழைக்கப்பட்டார்.
தமிழர்களுக்கே தமிழ்நாடு என்னும் வார்த்தையை உருவாக்கி தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.
அமெரிக்க வாழ் இந்திய எழுத்தாளரான சுமதி ராமசாமி, "இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பலதரப்பட்ட சமூக அரசியல் கொள்கைகளை ஒன்றிணைத்தது. மத சீர்த்திருத்தவாதிகள் மற்றும் கடவுள் மறுப்பாளர்களை ஒன்று சேர்த்தது. இந்தியாவை ஆதிரிப்பவர்கள் திராவிட இயத்தை ஆதரித்தார்கள்.


 பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாத கவிஞர்கள், மக்களுக்கான துண்டு பிரசுரம் வழங்குபவர்கள் மற்றும் கல்லூரி மாணர்வர்களை அது இணைத்தது." என்றார்.
முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவரான பி.கலிஃபுல்லா, "நான் ராவுத்தராக இருந்தாலும், என்னுடைய தாய் மொழி தமிழ்தான் உருது அல்ல. அதில் எனக்கு எந்தவித அவமானமும் இல்லை. நான் பெருமைப்படுகிறேன்," என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் கூட இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினர். ஆனால் ராஜாஜி விடாப்பிடியாக இருந்தார்.

அதன்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் கருத்தை கேட்காமல் அவர்களின் போரில் இந்தியர்களை ஈடுபட வைக்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களும் பதவி விலகியபோது, அவர்களுடன் சேர்ந்து ராஜாஜியும் தனது பதவியை 1939ஆம் ஆண்டு பதவி விலகினார். அதன்பின் மெட்ராஸின் ஆளுநராக இருந்த எர்க்ஸ்கின் அந்த அரசாணையை திரும்பப்பெற்றார்.
அதன்பின் அவர், "இந்த மாகாணத்தில் கட்டாய இந்தி ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இது நிச்சயமாக பெருமளவிலான மக்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது," என்று வைஸ்ராயிடம் தெரிவித்தார்.

 இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால் அந்த முடிவை 15 வருடங்களுக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதாவது 1965ஆம் ஆண்டிற்கு. அந்த காலம் வந்தபோது, திமுக பொது செயலராக இருந்த சி.என்.அண்ணாதுரை, "இந்தியை திணிப்பவர்களுக்கு எதிராக போர்த் தொடுப்பது தமிழ் மக்களின் கடமை," என தெரிவித்தார்.

அதன்பின் இரண்டு மத்திய அமைச்சர்கள் (அழகேசன், சி.சுப்பிரமணியம்) பதவி விலகிய பின்பும் கூட காங்கிரஸ் முதலைமைச்சர் பக்தவச்சலம் மத்தியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி அரசுடன் இணைந்து தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை கொண்டுவந்தனர். அது பல கலவரங்களுக்கும், பலர் தங்களை மாய்த்துக் கொள்ளவும் வித்திட்டது.

1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்தல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழக்க காரணமாக அமைந்தது
அதன்பின் இந்திரா காந்தி தலையிட்டு ஆட்சி மொழி சட்டத்தை 1968ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அதனால் அடுத்த அரை நூற்றாண்டுக்கு இந்த போராட்டம் தணிந்தது என்றே சொல்லலாம்.

தற்போது மு.க. ஸ்டாலின் சொன்னதுபோல் கஸ்தூரி ரங்கன் கமிட்டி "தேன் கூட்டின் மேல் கல்லெறிந்துள்ளது." இந்தி இந்துத்துவா மீண்டும் எழுந்தால் 1937-40 மற்றும் 1965 ஆண்டு நடந்த போராட்டங்கள் மீண்டு உயிர்பெரும். இது இந்திய நாட்டிற்கு ஓர் எச்சரிக்கையாகும்.
நன்றி :பிபிசி.

சனி, 1 ஜூன், 2019

ஒடிஷாவின் மோடி?

மோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர்.
ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது.

64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது.

ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது.

அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்..
. அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம்.
கையிருப்பு தொகை 15,000.

அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் பல குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார்.
இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும்.
 அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

 இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள்.

 இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர்.
 இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர் சாரங்கிதான்.

அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன. 

தினமலர்,தினமணி ,தமிழ்திசை ,விகடன் போன்ற  பாஜக ஆதரவு இதழ்கள் திட்டமிட்டே சாரங்கியை மகாத்மா அளவுக்கு பொய்யான உருவை உருவாக்கி வருகினற்னர்.

ஆனால் ஒடிஷாவின் மோடி என்பது சரிதான்.காரணம் ரெயிலோ எரிப்பையும்,அதைத்தொடர்ந்த கல்;கலவரத்தையம் திட்டமிட்ட செய்து குஜராத்தில் மதவெறியை கொழுந்து விட்டு எரியசெய்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுவருபவர்கள்தானே மோடி ,அமித்ஷா கும்பல்.

ஆனால் உண்மை வெளிவந்தே தீரும்.
 எல்லாமே பொய்தான்.
நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிதியமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

 இதில் ஏராளமானோர் தமிழக பாஜகவினர். இதை நம்பி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான தமிழருக்கு வாழ்த்துகள் என்றும் கூறிவருகின்றனர்.

ஆனால் இவையனைத்தும் பொய்.

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி, 1970 முதல் 1971 வரை அவர் அப்பதவியில் இருந்தார்.
 வறுமையை ஒழிப்போம் என சூளுரைக்கொண்ட இந்திரா அரசில்தான் இந்தியாவிலிருந்த 14 வணிகரீதியிலான வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

அந்த 14 வங்கிகளும் முதன்மையான வங்கிகள்.

இந்திரா கொண்டுவந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்தியா எங்கும் பரவியது. அந்த தேர்தலில்கூட இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்,
 ‘நான் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறேன், எதிர்கட்சியினர் என்னை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டார்.

 இப்படியாக பல வரலாறுகளைக்கொண்டது அவரது அந்த பதவிக்காலம். 

ஆனால் இப்போது நிர்மலாதான் முதல் நிதியமைச்சர் என்றும் கூறுகின்றனர்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நிர்மலா சென்றமுறை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.
 அப்போதும் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலர் கூறினர். 

ஆனால் 1975 களிலும், 1980 முதல் 1982 வரையிலும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் அதே இந்திராகாந்திதான். 

எல்லாமே பொய்தான். வரலாற்றை தங்களுக்கேற்றார் போல் புதிதாக எழுதுவதுதான் பாஜகவின் பனி.
அதற்குத்தான் அறிவியல் படத்தை விட சோதிடம் முக்கியமானது என்ற வரை மோடி இந்தியாவின் கல்வி அமைச்சராக்கியுள்ளார்.

அவர் வந்தவுடனே மும்மொழித்திட்டத்தை இந்தியா முழுக்க கட்டாயமாக்கியிருக்கிறார்.
இந்தி,ஆங்கிலம் கட்டாயம்.அத்துடன் மாநில மொழியை வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...