bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 30 ஜனவரி, 2013

பூனை வெளியே வந்து விட்டது

சாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் .
இதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
 .தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும்.
ஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.
  .இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல்.
இங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு  உத்திரவிடப்பட்டுள்ளதாம்.
தனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா?
ரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார்?இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்று காவல்துறை சொல்லி வழக்கை எழதி பதிகிறதாம் .அப்படி யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.இவை எல்லாம் சட்டம் ஒழ்ங்கி பிரச்னை என நீதிமன்றத்தில் காட்ட ஆதாரமாக செய்யப்படுகிறதாம்ரசிகர்களை நாகர்கோவில் கார்த்திகை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பிறகு சிலர் வந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்து அலங்கார வளைவுகளுக்கு தீவைக்கின்றனராம்.அதை தடுக்க செல்லும் கமல் ரசிகர்களை அடித்து விரட்டி அந்த தீவைப்பாளர்களௌக்கு பாதுகாப்பு வழ்ங்க்கப்படுகிறதாம் அவர்கள் இசுலாமியர்கள அல்லவாம்.ஆளுங்கட்சி கட்சிக்காரர்கள் போல்தான் தெரிகிறதாம்.இதிலிருந்து பிரச்னை இசுலாமியர்களுக்கும் விஸ்வரூபம் படத்துக்கு முடிந்து இப்போது ஜெயலலிதா கமல்ஹாசனை பலி வாங்கும் படலம் தான் நடப்பதாக தெரிகிறது.
ஆனால் நிச்சயம் படம் வெளிவரும் இதற்கான பலனை ஜெயலலிதா விரைவில் அறுவடை செய்வார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
"வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால் மற்றவர்களுக்கு  இடையூறாக இருப்பதாக "அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார்.

 இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களையும்,பணக்கட்டுகளையும்  கமலிடம் அளிக்க அங்கு கொண்டு வந்திருந்ததாகவும் கமல்ஹாசன் அவற்றை வாங்க மறுத்து களைந்து அமைதியாக செல்லக் கூறினார் என்றும் அங்கிருந்து வந்த  தகவல்கள் கூறுகின்றன.

இது கமல்ஹாசனின் பேட்டி:
"என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை. 
என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. 
எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். 
வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள்.
 அவர்களில் பலர் முஸ்லிம்கள். 
அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. 
என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. தாமதிக்கப்படும் நீதி பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார்.

கீழேயுள்ளது "வினவு"தளம் வெளியிட்ட பதிவு நன்றியுடன் மீள் பதிவிட்டுள்ளேன்.

"விஸ்வரூபம் படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் கெஞ்சியிருக்கிறார்  அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன்.
 நீதிபதி அதை ஏற்கவில்லை. 
எனவே இரவோடு இரவாக 12 மணிக்கு சென்று தலைமை நீதிபதியின் வீட்டு  கதவை  தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.
“இத்திரைப்படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.
“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இசுலாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.
தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.
“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.
“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.
அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.
32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே application of mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.
“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.
“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.
கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பல இசுலாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.
நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

கீழேயுள்ளது கருணாநிதியின் வாதங்கள்: 

தி .மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக விஸ்வரூபம் படத்ததை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை.
ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.
பெரியார் அடிக்கடி  என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது".

இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்துள்ளது .

விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?."
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-

வியாழன், 24 ஜனவரி, 2013

சிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,



இசுலாமியர்கள் எதிர்க்கும் படி விஸ்வருபத்தில் இருப்பது என்ன?

இதோ படம் பார்த்த ஒருவெளி நாட்டில் உள்ள  இசுலாமியர் " பாரூக் அகமது " முகனூலில் எழுதியது.

விஸ்வரூபம்

படம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .
சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .
துப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .
நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .

அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .

கதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .

கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .
இங்கே எந்த இடத்திலும் பயிற்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .

அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .
கதையோடு பார்த்தால் அதை யும் தவறாக சொல்லமுடியாது .

கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு
விட்டோம் .

நான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் .ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது'
 
நன்றி:பாருக் முகமது. 
 
இது  படித்த பின்னரும் மத அரசியல்வாதிகளிடம் சிக்காமல் சிந்திக்கும்பொதுவான  இசுலாமிய நண்பர்கள்  எதிர்ப்பாளர்களின் உள்நோக்கம் பற்றி சிந்தித்து கண்மூடித்தனமான விஸ்வரூப எதிர்ப்புக்கு எதிராக இருக்க வேண்டும் .90 கோடிகள் பணத்தை செலவிட்டு தொழில் ரீதியாக படம் எடுப்பவர்கள் இப்படி மதம் என்றால் நுண் உணர்வுகளுடன் இருப்பவர்களை   காயப்படுத்துவது போல் எடுத்து நட்டப்படுவார்களா?
-----------------------------------===============================---------------------------------------

தடைக்கு தடை ...,



  விஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம்.
இசுலாமிய  இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை.
முன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது.
தற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம்.
அரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல.
படத்தை அவர் பார்த்திருக்க வெண்டும்.
அல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று  விசாரித்திருக்கலாம்.எந்த நடைமுறையும் இந்த விஸ்வரூபத்தில் கடை பிடிக்கப்படவில்லை.இது அரசின் தடையில் உள்நோக்கம் கற்பிக்க வைக்கிறது.
தங்களுக்கு பிடிக்காதவர்களின் படத்துக்கு கூட்டமாக வந்து மனு கொடுத்தால்  அதற்கெல்லாம் தடை விதித்து விடுவார்களா?
தோட்டத்தின் தலையீட்டால்தான் இந்ததடை  அவசரமாக விதிக்கப்பட்டுள்ளது.
இசுலாமிய சகோதரர்களின் வாக்கு வங்கி மட்டுமல்ல.
 ஜெயா டி . வி.க்கு  படத்தை வாங்கியும் படம் டிடி எச் களில் ஒளிபரப்பினால் தனது வருமானம் பாதிக்கும் என்ற காரணம்.சன் டிடி எச் படம் ஒளிபரப்ப வாங்கியுள்ளது.
உதய நிதி ஸ்டாலின் உட்பட சில திமுகவினர் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.போன்ற கண்ணூறுத்தல்கள் .
அதுமட்டுமல்ல கமல்ஹாசன் தன்னை  சந்தித்த கையோடு கருணாநிதி  கலந்து கொண்ட சிதம்பரம் விழாவில் தனது பிரதமர் கனவை கலைக்கும்படி வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரத்துக்குத்தான் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பேசிய கருணாநிதியின் வார்த்தைகளை ஆமோதித்து மேடையில் கைதட்டியது. போதாதா விஸ்வரூபத்துக்கு தடை விதிக்க காரணங்கள்.? இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பு மனு ஒரு பிடியாக கிடைத்துவிட்டது.
இடையில் விளம்பரப்போராளி சீமான் தனது வழக்கமான அவல வாயைத்திறந்துள்ளார்.படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை சரிதான் என்று முழங்கியுள்ளார்.ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமாக அறிக்கை படத்தை பார்க்காமலேயே விடுகிறார்  சீமான்  .
ஈழத்தமிழர்களை வைத்து நடத்திய அரசியல் கட்சிக்கடை வியாபாரம் இல்லாததால்  இப்போது வேறு திசைகளில் திருப்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.அம்மாவுக்கு சிங்கியும் அடிக்க வேண்டியிருக்கிறது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வே ண்டிய அரசே ஒரு சார்பாக தடை விதித்தது அரசியல் காரனங்களால்தான்.
இப்போது விஸ்வரூபம் நீதிமன்றம் போய்விட்டது.
நீதிபதி படத்தை பார்த்து விட்டு தடைக்கு தடை பற்றி பார்க்கலாம் என்றுள்ளார்.
அதுதானே முறையாக இருக்கவும் செய்கிறது.
கமலஹாசன் அரசை எதிர்த்து நீதிமன்றம் போவது தோட்டத்தை கொஞ்சம் அல்ல ரொம்பவே கோபப்படுத்தும்.
திரையரங்கு,விநியோகத்தர்கள்,இசுலாமியர்களுடன் பிரச்னைகளை சந்தித்த கமலுக்கு இப்போது அரசுடனும் போராட்டமா?
suran
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கமல்ஹாசனின் அறிக்கை:
 ---------------------------------------------------------
'என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசார தீவிரவாதம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்'
  எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும்  அதே நேரத்தில்  எனது படம் எந்த வகையில் இசு லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.
அச் சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுகள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக எது மனிதாபிமானமோ அதற்காக நான் பலபடி மேலே  போய் குரல்கொடுத்துள்ளேன்.
மேலும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக  இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தைத் தொடர்ந்து குறி வைத்து இப்படிக் காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

 எந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் தேசபக்தி உள்ள முஸ்லிமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
 இப்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். 
இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 இந்தச் சந்தர்ப்பத்தில் இணையத்தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி."


There is a cultural emergency in India, says Salman Rushdie
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 12 ஜனவரி, 2013

150 கோடிகள் வந்தால்தான் வெற்றிப் படம்.

==========================================
விஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
* கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது.
 இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இ ந்நிலையில் கமல் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படம் தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் வருகிற ஜன-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்தார். ஆனால் அதேசமயம், டி.டி.எச்.இல் வெளியிடும் முடிவு குறித்து இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் கமல் அளித்துள்ள பேட்டி:
" ஒரு தொழில்நுட்ப கலைஞனாக சினிமாவில் நுழைந்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக நடிகனாகிவிட்டேன். சினிமாவில் நான் முழுமையாக திருப்தி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பேன். ஆனால் நான் திருப்தி இல்லாமல், மனநிறையற்றவனாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். நான் தேவை உள்ளவனாக வாழ்கிறேன். ஆனால் சிலர் இதை கண்டுபிடிப்பு என்றோ, சாதனை என்றோ கூறுகின்றனர். நான் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று இறங்குவதே பெரும்பாலான சமயங்களில் என்னைக் காயப்படுத்தி இருக்கிறது. ஒரு சாதனை நிகழ்ந்தால் அதனோடு ஒன்றி வாழ்வேன்.
விஸ்வரூபம் படம் பெரும்பொருட்ச் செலவில் எடுக்கப்பட்ட படம். என்னிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் கொட்டி இப்படத்தை எடுத்துள்ளேன்.
இது என்னுடைய கனவுத்திட்டம்.
 எனது கனவை என்னு‌டன்‌ சேர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சரியாக பணிபுரிந்து உள்ளனர் என நம்புகிறேன். விஸ்வரூபம் படம் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டியாக வேண்டும்.
suran
அப்படி அது தாண்டவில்லை என்றால் நிச்சயம் அது தோல்விப்படம் தான். விஸ்வரூபம் வெளியான முதல்வாரத்திலேயே அந்த வசூல் இலக்கை எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். "
என்று தனது எதிர்பார்ப்பை கமல்ஹாசன் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
நம்பிக்கைதானே வாழ்க்கை!

சாத்தியம் என்பது செயல். வெறும் வார்த்தை அல்ல.
-இது கமல் தனது ரசிகர்களுக்கு கூறிய துதான்.
___________________________________________________________________________________
ஹாலிவுட் அள்ளிய 217 கோடிகள் .
 இந்தியாவில் ஹாலிவுட் படங்களை திரையிடுவதில் முன்னணியில் நிற்கிறது சோனி நிறுவனம்.
2012-ம்  ஆண்டு இந்த நிறுவனம் 12 ஹாலிவுட் படங்களை இந்தியாவில் திரையிட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை மொழி மாற்றம் செய்து திரையிட்டதன் மூலம் சுமார் ரூ.217 கோடியை வசூலித்துள்ளது. 
இதில் 2 படங்கள் அந்த நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. "தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி" படம் வெளியான முதல் வாரத்திலேயே 34 கோடி வசூல் செய்தது சாதனை அளவாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படமான "ஸ்கைபால்" முதல் வாரத்தில் 27.4 கோடி வசூலித்தது. 
கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் 50 சதவிகிதம் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
2013-ல் " டி ஜங்கிள் அன்செயின்டு, ஆப்டர் எர்த், ஒயிட் ஹவுஸ் டவுன், எலிசியம், கேப்டன் பிலிப்ஸ், ஈவில் டெத், க்ரோன் அப்ஸ்&2, தி ஸ்மர்ப்ஸ் "ஆகிய படங்களை திரையிட இருக்கிறது சோனி நிறுவனம். 
மேற்கண்ட 217 கோடிகள் சோனி நிறுவன படங்கள் மட்டுமே .மற்ற நிறுவன ஹாலிவுட் பட வசூல் விபரம் இதுவரை தெரியவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 விசுவாச விருது?
அரசு விருதுகள் அவ்வப்போது வழங்கி தனது ஆதரவாளர்களை குதுகலப்படுத்துகிறது.அப்போது ஆட்சியில் இருப்போர் தங்களுக்கு விருப்பப்ப டுவோர்களுக்கு ஏதாவது ஒரு அறிஞர் அல்லது பழையத்தலைவர்கள் பெயரில் கொஞ்சம் பணத்தையும்,ஒரு பத்திரத்தையும் கொடுத்து கவுரப்படுத்துகிறது .அந்த வகையில் தற்பொது ஜெயா அரசும் தனது விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்தொண்டு மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் . விருதுகள் பெறுவோர் விவரம் வருமாறு:
திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது - கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது- சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர் விருது - தா.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்படும். 
மற்றவர்கள் எப்படியோ அவர்கள் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அவர்கள் சேவை ஆற்றிய விபரம் தெரியாது.
இதில் மணிமொழியன் கட்சிப்  பேச்சாளர். அடுத்தவர் அண்ணன் தா.பா,இவரும் கிட்டத்தட்ட கட்சிக்காரர்தான். ஆனால் வேறு கட்சிப்பெயரில் இருப்பதால் சரத்குமார் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் .
கம்யூனிஸ்ட் கட்சியிலேயே சாதி வாடை யுடன் நடத்துபவர் என்ற நல்ல பெயர் வாங்கியவருக்கு அம்பேத்கர்  விருது என்பது கொஞ்சம் நெடுரல் தான் .
இவரை விட மற்றொரு கட்சியின் தனது ஆதரவாளரான ராமகிருஷ்ணனுக்கு கொடுத்திருக்கலாம்.
அந்த கட்சியிலாவது தீண்டாமை முன்னணி என்ற அமைப்பு இருக்கிறது.உத்தப்பபுரம் போன்று பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி சிறையெல்லாம் சென்றிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் .
ஆனால் அவர்களுக்கு கொடுக்க முடியாத காரணமும் இருக்கிறது.அவர்கள் திடீரென விழித்துக்கொண்டு எதிர்த்துப் பேசுவார்கள்.அந்த காரணம்தான் விருது தா.பா.போன்ற ஜால்ரா விசுவாசிக்கு போயுள்ளது.இவர்தான் விலைவாசியை உயர்த்தி அம்மா வரியை கடுமையாக்கினாலும்,பேருந்து கட்டணம்,பால் விலை என்று எதை செய்தாலும்  அரசை விமர்சிக்காமல் எதிரி கருணாநிதியை மட்டுமே குற்றம் சாட்டி அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பும் பணியை திறம்பட செய்வார்.
என்ன ஒரு குறை என்றால்,அம்பேத்கர் பெயரில் வழங்காமல் அம்மா .அல்லது அம்மம்மா  பெயரில் வழங்கியிருக்கலாம்.அல்லது விருது பெயரையே விசுவாசி விருது என்று வைத்திருக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
suran
 

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஐ.நா,வும்- குறட்டையும்



இரண்டும் வேறு -வேறு பதிவுகள்தான் .
 
இலங்கை இறுதிகட்ட போரின்போது சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சானல்-4 டி.வி காணொளித் தொகுப்பாக வெளியிட்டு உலகில் பரபரப்பை எற்படுத்தியது.அதில் இடம் பெற்ற காட்சிகள் உலகம் முழுவதையும் குலுக்கும் வகையில் இருந்தன.
 அந்த காணொளிகள் ஈழத்தில் ராஜபக்ஷே மேற்கொண்ட இனப்படுகொலைகளை ,கொடுரக்கொலைகளையும்-சிங்களப் படையினர் வெறியாட்டத்தையும் பகிரங்கப்படுத்தியது.உலகநாடுகளை இலங்கைத் தமிழர்கள்
ஒழிப்புஇன் கொடுரத்தை ,ராஜபக்சேயின் போர் குற்றத்தை உணரச் செய்தது.அதற்கு வலுவான ஆதாரமாகவும் அமைந்தது.
ஆனால் இக்கொடுரம் உலக நாட்டாண்மையான ஐ.நா.சபையினரின் கண்களை மட்டும் திறக்கவில்லை.சூடான்,சிரியா,ஈராக்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் தலையை கொடுத்து அந்நாட்டு அரசை மிரட்டி அமைதியை நிலைநாட்டுவதாக கூறும் ஐ.நா.இலங்கைத்தமிழர் பிரச்னையில் மட்டும் தமிழர்கள் மனித வகையினர் இல்லை என்ற சந்தேகத்தில் இருப்பது போல் தெரிகிறது.
கடைசிக்கட்ட அழித்தொழிப்பு நடக்கும் போது தனது பொறுப்பை தட்டிக்கழித்த ஐ.நா.சபை அலுவலர்கள் பற்றிய அறிக்கை அச்சபையின் நடுநிலை உலக சமாதான பொறுப்பை சந்தேகத்திற்கு இடமாக்கி விட்டது.
இப்போது  சானல்-4 டி.வி மேலும் 2 காணொளித்  தொகுப்புகளை இப்போது தயாரித்து வருகிறது.
வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபை மனித உரிமை அமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதற்கு முன் இந்த  காட்சிகளை ஒளிபரப்ப சானல்-4 முடிவு செய்துள்ளது.

இந்த காணொளிக் காட்சிகள் இலங்கைக்கு மேலும் பல சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை அரசு இப்போது கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளது.ஆனால் ஐ.நாவின் மீதுதான் அதன் நோக்கம் பற்றிதான் சந்தேகமாக இருக்கிறது.அங்கு ராஜபக்ஷேக்குத்தான் ஆதரவு உள்ளதாக இதுவரையிலான அதன் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்கள் அடிப்படை யில்  அது இதுவரை சிறுத்துரும்பைக்கூட நகர்த்தவில்லை.இனி நகர்த்தும் என்பதும் சந்தேகமே.
இப்போதும் ஈழத் தமிழர்களை  சிங்களப்படையினர் பாதுகாப்பில்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை .தமிழர்கள் வாழ்விடங்கள்,நிலங்கள் அனைத்தும் சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது.அவர்களின் கோவில்கள் புத்த மடங்களாகவும்,இடித்தும் உருமாற்றமடைகின்றன.
பல்கலைகழகத்தில் கூட நான்கு தமிழர்கள் சந்தித்து பேசினால் உடனே கைது.இது போன்ற அவசரகால மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.இது பற்றியும் ஐ.நா.விடம் நித்தம் குற்றம் சாட்டி கடிதங்கள் போகின்றன.பலன்தான் இல்லை.அந்த கடிதங்கள் இதுவரை நடவடிக்கைகளுக்காக போனதில்லை .போன இடம் குப்பைக்கூடையாகத்தானிருக்கும்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------
குறட்டை 
------------
ஐ.நா.சபைக்கு மட்டுமல்ல சுமாராக 25 வயது முதல் 50 வயதானவர்களுக்கும்  குறட்டை  வருகிறது.
 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருவதாக தெரியவில்லை.
தூங்கும்  போது குறட்டை விட்டுகொண்டிர்ப்பவர்களின் குறட்டை  திடீரென நின்று விடும். அவர்கள் அப்போது சில வினாடிகள்  மூச்சு, பேச்சு இன்றி காணப்படுவார்கள். இந் நிலை   உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில் தூக்கத்திலேயே மாரடைப்பு  ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது .
 குறட்டை இரு வகைப்படும். ஒன்று துங்கும் போது மெல்லியதாக சப்தம் ஏற்படுத்துவது. மற்றொன்று அதிக சப்தத்துடன் குறட்டை விடுவது. அதிக  சப்தத்துடன் குறட்டை விட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதய கோளாறு, வாயு கோளாறு, சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு  ஏராளம் உள்ளன.
 மூக்கில் சுவாச காற்று குறைவாக சென்றால் குறட்டை வரலாம். தொண்டையில் காற்று செல்லும் பகுதி குறைவாக இருந்தாலும்  வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து. மற்ற இரு வகையான குறட்டைகளை  எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம்.
60 வயது கடந்தவர்கள் அதிகமாக குறட்டை விட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு குறட்டையை  கட்டுப்படுத்த நவீன கருவிகள் உள்ளன. இந்த கருவியின் டீயுப்பை மூக்கில் பொருத்தினால் போதும் குறட்டை சப்தம் குறைந்து விடும்.
மூக்கு துவாரங்களில் சதை வளருதல், தொண்டையில் டான்சில் கட்டி அதிகமாக இருத்தல், நாக்கின் பின் பகுதி தடிமனாக இருத்தல், பற்களின்  கீழ்தாடை எலும்பு உள்வாங்கி இருத்தல், உள்நாக்கு பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருத்தல் போன்றவைகளால் குறட்டை அதிகமாக  ஏற்படுகிறது. தூங்கிய போது அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு திடீரென நின்று விடும். அப்போது ஒரு நிமிடம் மூச்சு, பேச்சு இன்றி  காணப்படுவார்கள். இவை உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில்  தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும்.
அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு மறுநாள் சோர்வு ஏற்படும். 
காலையில் தூக்கம் வரும். ஞாபக மறதியும் ஏற்படும். ஏப்பம் விடுவார்கள்.  குறட்டை விட்டால் வயிறு பெருகும். கொழுப்பு சத்து அதிகரித்தால் குறட்டையும் வந்து விடும். உடல் எடையை குறைக்க வேண்டும். நடை பயணம்,  உடற்பயிற்சி செய்யலாம். மூக்கில் சதை வளர்ந்தால் அவற்றினை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். லேசர் மூலம் சதை வளர்ச்சியை  குறைத்து விடலாம்.
 உள்நாக்கு பகுதியில் சதையை குறைக்கவும் லேசரை பயன்படுத்தலாம். காலையில் வந்து அறுவை சிகிச்சை செய்தால்  மாலையில்வீடு திரும்பி விடலாம். இதற்கான நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
குறட்டை விடுவதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் மட்டுல்ல.நமக்கே சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
நாட்டில் மக்கள் நலனை மறந்து குறட்டை விடும் ஆட்சியாளர்களால் நாம் படும் அவலங்களை எண்ணியாவது  நாம்  நமது  குறட்டையை கட்டுப்படுத்தப் பார்ப்போம்.
 -----------------------------------------------------------------------------------------------------------

புல்டோசர் ஓடலை.அந்த டிரைவர் குறட்டை சத்தம்தான் இது.

suran
 

திரையரங்குகளின் "விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியேட்டர் உரிமையாளர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். 
கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தை அவரே நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது ஜன 10ம் தேதி இரவில் டி.டி.எச்-ல் இப்படத்தை ஒளிப்பரப்பு செய்கிறார் கமல். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி ஏர்டெல், வீடியோகான் உள்ளிட்ட டி.டி.எச். நிறுவனங்கள் படத்தை ஒளிப்பரப்பு செய்ய உள்ளனர். 
கமலின் இந்த முடிவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். டி.டி.எச்-ல் படத்தை வெளியிட்டால் அவர்களது படத்தை திரையிட மாட்டோம் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தசூழலில், கோவையில் திரையரங்க  உரிமையாளர்கள் கமலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  விஸ்வரூபம் படத்தை திரையிட சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னையிலும் சில திரையரங்க உரிமையாளர்கள் விஸ்வரூபம் படத்தை திரையிட சம்மதம் தெரிவித்து, அதனை  அறிவிப்பாகவு ம் ஒட்டியுள்ளனர்.
 திருச்சி பகுதி யிலும் ப லர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால் கமல்ஹாசனின் விஸ்வரூபத்துக்கு   திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

ஆனால்  சங்கத்தின் முடிவை மீறி யாராவது விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு அளித்தால், அவர்களுக்கு எங்களால் எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது என்று தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
 இதனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் இரண்டாகும்  சூழலும் உருவாகியுள்ளது.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...