bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முல்லை பெரியாறு நாள்!


சிறிய மூளை இந்தியர்கள் 

ஐதராபாத் ஐஐடி.,யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நியூராலஜி இந்தியா என்ற இதழில், இந்திய மூளை வரைபடங்கள் கொண்ட ஆய்வு கட்டுரை வெளியிட்டனர்.

இது தான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அட்லஸ் எனப்படும் இந்திய மூளை வரைபடமாகும்.

அந்த ஆய்வு கட்டுரையில், மேற்கத்திய நாட்டு மக்களின் மூளையுடன் ஒப்பிடுகையில், சராசரியாக இந்தியர்களின் மூளையின் உயரம், அகலம் மற்றும் எடை ஆகியவற்றில் சிறியதாக இருக்கிறது.

 மேலும், அல்சைமர்ஸ் போன்ற மூளை தொடர்பான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கு மூளை சிறியதாக இருப்பது உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 1886.அக்டோபர், 29.

முல்லை பெரியாறு  

ஒப்பந்தம் கையெழுததான நாள்!

அன்றைய மதுரை மாவட்டம் என்பது இன்றைய திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கியது.

 அது அன்றைய மதுரை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக, வறட்சியின் கோரக் கரங்களில் அகப்பட்டிருந்த கொடுமை காலம் . 

தண்ணீர் பஞ்சம் எங்கும் தலைவிரித்தாடியது.

இக்கொடுமைக்கு முல்லைப் பெரியாறு எனும் அணை மூலம், விடை காண பிள்ளையார் சுழியிட்டது, 

1886ம் ஆண்டின் இதே அக்., 29ம் நாள் தான்.

வைகை வளப்படுத்தாத கிழக்குச் சீமையை, மேற்கில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாய் கலந்த நதியை, தமிழகம் பக்கம் திருப்பி, ஐந்து மாவட்டங்களை வளப்படுத்த, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒப்பந்தமிட்டது அந்நாளில் தான்.
விடுதலைக்குப்  பின், இது தமிழகம், கேரளத்திற்கான ஒப்பந்தமானது. 
 இதுவே, முல்லைப் பெரியாறு அணை அமைய வித்திட்டது.
ஒப்பந்தப்படி, அணையின் உச்ச நீர்மட்டமான, 155 அடிக்கு நீர் தேக்கினால், எவ்வளவு பரப்பளவு நீர் தேங்குகிறதோ, அவ்வளவு நிலமும், தமிழகத்திற்கு, 999 ஆண்டிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. 

அதாவது, 8,591 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி, நம் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
தேக்கடி பகுதியில், 104 அடியில் போடப்பட்டுள்ள சுரங்கம் மூலம், தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பவும் வழி செய்தது. இன்னும் பல உரிமைகளை, தமிழகத்திற்கு வழங்கியது, இந்த உன்னத ஒப்பந்தம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.
 படிப்படியாக, நம் உரிமைகளை கேரளாவிடம் பறிகொடுக்கிறோம். நீர் எடுக்கும் உரிமை தவிர, பழைய உரிமைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
நமக்கு, 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய, 8,591 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை, ஒரு புறத்தில் கேரளா ஆக்கிரமித்து வருகிறது. 
தேக்கடி படகு குழாம் அமைத்து, சுற்றுலா மூலம் சம்பாதிக்கிறது. 
அதை சுற்றியுள்ள பகுதிகளில், விடுதிகள் கட்ட அனுமதி கொடுத்து, 'கல்லா' கட்டுகிறது. 
முல்லைப் பெரியாறு அணையால், கேரளாவிற்கு சுற்றுலாவைத் தவிர, வேறு பலன் எதுவும் இல்லை. 
ஆயினும், நம் குத்தகை நிலத்தில் கை வைத்து, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அணையில், 140 அடியில் இருந்து, 155 அடி வரையிலான நீர்ப்பிடிப்பு பகுதியின் பல இடங்களில், கேரளா ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
 இதில், 600 ஏக்கர் வரை நாம் இழந்திருக்க வாய்ப்புள்ளது.நவீன தொழில்நுட்பங்கள், சேட்டிலைட் மூலம், எளிதில் நம் எல்லையை கணிக்க முடியும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதை பரிசீலனை செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை முழுக்க, முழுக்க தமிழகத்தின் நலன் கருதி கட்டப்பட்ட அணை. ஆனால், 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வகையில், கேரள அரசு நடந்து கொள்கிறது. இதற்கு எதிராக, தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்.
 இழந்த உரிமைகளை மீட்க, தனித் திட்டத்தை வகுக்க வேண்டும். 
தனி அதிகாரிகள் மூலம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரளாவின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, 'சர்வே' நடத்த வேண்டும்.
 நீதிமன்றம் சென்றோ, சாதுர்யமான பேச்சு மூலமோ, உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் இல்லை என்றால் நம்புவீர்களா. மதகுகளை இயக்க, அதிகாரிகளின் அலுவலகங்கள், குடியிருப்புகள், தெரு விளக்குகளுக்கு, வல்லக்கடவில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
 2000வது ஆண்டு, மின்சார ஒயரில் அடிபட்டு, யானை இறந்தது. உடனே, மின் இணைப்பை கேரளா துண்டித்தது.அதே ஆண்டில், தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வதாக, தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான செலவை, மூன்று தவணைகளில் செலுத்தியது. 
கேரள மின் வாரியம் முன்வந்தாலும், வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது.
இதனால், 20 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை, கும்மிருட்டில் கிடக்கிறது. 'ஜெனரேட்டர்' உதவியுடன், நிலைமையை நம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை தொடரும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை, கேரள போலீசாரே மேற்கொள்கின்றனர்.
இது, அணைப் பராமரிப்பு பணி மேற்கொள்ள செல்லும், நம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு இடையூறாக உள்ளது. 
எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, தமிழக அரசு கோரியது. 
'இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. ஆனால், இதுவரை இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சமீபத்தில் தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பிற்கு பின், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 பல்வேறு உரிமைகளை நாம் மீட்க வேண்டியுள்ளது. 
முதல் கட்டமாக அணைப் பகுதிக்கு மீண்டும் மின் சப்ளை வழங்க, கேரளா முன்வந்துள்ளது.இதற்காக, தமிழகம், 13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 
முறையாக பணம் செலுத்தியதும், மீண்டும் மின் இணைப்பு வழங்க, கேரளா பணிகளை துவங்கும். நம் இதர உரிமைகளையும் படிப்படியாக மீட்டெடுக்க, காலம் கனிந்துள்ளது.

பென்னி குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, ராட்சத சுவர் போன்ற அமைப்புடையது. அதை பலப்படுத்த, முன்பகுதியில் கான்கிரீட் கலவை சரிவாக கொட்டப்பட்டு, முட்டு கொடுக்கப்பட்டது.

 அதே போன்று, பேபி அணையை பலப்படுத்தவும், 1998ல் இருந்து, தமிழக அரசு போராடி வருகிறது. இதற்கும் கேரள அரசு அனுமதி மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 136 அடியில் இருந்து, 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தியதோடு, 152 அடி வரை நீர் தேக்கும் வகையில், பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்காக, 7.85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்த தமிழக அரசு, பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதியும் வழங்கியது. இப்பணிக்காக, 25 மரங்கள் வரை வெட்ட வேண்டியுள்ளது. 
இதை காரணம் காட்டி, கேரள வனத்துறை அனுமதி மறுக்கிறது. 

பேபி அணையை பலப்படுத்தினால், நீர்மட்டத்தை உயர்த்தும் வாய்ப்பு, தமிழகத்திற்கு கிடைத்துவிடும். இதனால், சுற்றுலா பகுதிகள் நீரில் மூழ்கி, தொழில் பாதிக்கும் என கேரளா அச்சப்படுகிறது. 
மத்திய அரசு மூலம், இதற்கும் நம் மாநில அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். 

மேலும், பலப்படுத்தும் பணிக்கு, பொருட்களை கொண்டு செல்ல, வல்லக்கடவில் இருந்து, பேபி அணை வரை, 6 கி.மீ.,க்கு சாலை அமைக்க வேண்டும். 
இதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிறது கேரளா.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------
 
இது என்ன சோதணை?


திங்கள், 28 அக்டோபர், 2019

நடந்தது என்ன?என்னதான் நடந்தது ?

இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

 இந்தக் குற்றச்சாட்டு குறித்து, செபி மற்றும் வேறு சிலகண்காணிப்பு அமைப்புகளும் விசாரிக்க இருக்கின்றன. புகார் சரியென்றால், நிர்வாகம் செய்திருப்பது சாதாரண தவறல்ல.
பலரையும் அவர்களுடைய பணத்துக்கு தவறான முடிவுகள் எடுக்க வைக்கும், உள்நோக்கமுள்ள செயல்பாடு; தங்கள் பதவிகளை, சம்பளத்தை, வருங்கால வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள செய்திருக்கும் திட்டமிட்ட தவறான செயல்; நேர்மையான நிர்வாகிகள் செய்யக்கூடிய புரொபஷனல் செயல் அல்ல.

குற்றம் நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான் இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை வரவழைக்கும்.
இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

என்னதான் நடந்தது ?

தனியார், பங்குதாரர், பிரைவேட் லிமிடெட் என்று நிறுவன அமைப்புகளுக்கும் பப்ளிக் லிமிடெட் அமைப்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.

பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்போரான புரமோட்டர்கள் வசம் இருப்பதால், அவர்களின் நிர்வாகத் திறமை, வேகம், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனம் சிறப்பாகவோ அல்லது சுமாராகவோ செயல்படும்; லாபமீட்டும். இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜ்மென்ட்.
 புரமோட்டர்கள் அந்த நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகள் இன்போசிஸ் போல 14 சதவிகிதமோ அல்லது டி.எல்.எப் போல 74 சதவிகிதமோ... புரமோட்டர்கள், நிறுவனத்தின் போர்டு மூலம் முடிவு செய்கிற விதமே தலைமை நிர்வாகிகள் மற்றும் டாப் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 வியாபாரம் அதன் விரிவாக்கம் மற்றும் மற்ற முக்கிய முடிவுகளை எல்லாம் டாப் மேனேஜ்மென்ட் எடுக்கும்.
 தங்கள் பணத்தை, பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு முதலீடாக கொடுத்தவர்களுக்கு, நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத் தடுக்கும், மாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு. கணிசமான பங்குகள் வைத்திருக்கும் LIC போன்ற இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்களாக இருந்தால் மட்டும் நிர்வாகத்தின் சில முடிவுகளை மாற்ற முடியும், தடுக்க முடியும்.

 மற்றபடி அதிலும் குறிப்பாக ரீடெய்ல் இன்வெஸ்டார் எனப்படும் சிறு முதலீட்டாளர்கள், நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கொடுப்பதை வாங்கிக் கொண்டும் மட்டுமே இருப்பவர்கள்.

 நிறுவனத்தையும் வியாபாரத்தையும் போர்டு மூலம் நடத்தும் புரமோட்டர்கள் அல்லது அவர்கள் நியமித்த நிர்வாகிகள் செய்வது எல்லாம் நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே என்றும், அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியான முறையில்தான் செய்யப்பட்டிருக்கின்றன என நம்பும் நிலையில்தான் ஏனைய பங்குதாரர்கள் இருக்கிறார்கள்.

 நிறுவனம் செய்யும் வியாபாரம், லாபம் போன்றவற்றைப் பொருத்து நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற நிலையில் வியாபாரம் லாபம் குறித்த தகவல்கள் அதி முக்கியமாகின்றன.
நிறுவனத்தின் வியாபாரம், லாபம் நஷ்டம் குறித்த தகவல்கள், அதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும்.
அதாவது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், ஈடுபடவிரும்பும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்குசந்தைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
 எப்படி? சரியான தகவல்களாக. ஒரே நேரத்தில். அனைவருக்கும் ஒன்றுபோல தெரிவிக்கப்பட வேண்டும்.
தவிர, தகவல்கள் அடிப்படையில் பங்குகள் வாங்குவதும் விற்பதும் நடைபெறுவதால், அந்த தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
அதை உறுதி செய்யத்தான் இன்டர்னல் ஆடிட்டர், எக்ஸ்டெர்னல் ஆடிட்டர், மேனேஜ்மென்ட் கமிட்டி, போர்டு என்று பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நிறுவனம் பணம் செலவு செய்கிறது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்தால், லாபம் செய்தால், பெரும் லாபம் செய்தால் என்று ஒவ்வொரு போக்கிற்கும், பங்குகள் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பங்குகளை சிலர் விற்பார்கள், வேறு சிலர் வாங்குவார்கள்.
அப்படி, பலருடைய பணம் இந்தத் தகவல்களை வைத்து பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்படுகிறது.
லாபமோ நஷ்டமோ பார்க்கிறது.
 வெளியிடப்படும் தகவல்களால் பங்கு விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாப நட்டம் தவிர, அந்த விதம் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகளுக்கு, இங்கிரிமெண்ட், போனஸ், பதவி உயர்வுகள், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் போன்றவையும் முடிவுசெய்யப்படும். நிறுவனத்தின் பங்கு விலைகள் உயர்வதால் புரமோட்டர்கள் சொத்து மதிப்பு கூடும் அல்லது குறையும். அந்த பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் NAV மாறும்.

இவ்வளவும் நிர்வாகிகள் கொடுக்கும் நிதிநிலை தகவல்களால் நடப்பவை. இவற்றைத்தான் இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO சரியாக செய்யவில்லை.
 உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

கழிவு நெகிழியில் இருந்து எண்ணை ?


அமெரிக்காவில் இல்லினாய்ஸில் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் போயிப்பெல்மயரும் அவருடைய சகாக்களும், கேரிபேக் தயாரிக்க பயன்படுத்தும் - சிதைக்க முடியாத - பாலிஎத்திலின் என்ற நெகிழியில்(பிளாஸ்டிக்கின் ) பிணைப்புகளை உடைக்கக்கூடிய ரசாயன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பாலிமர் ``சிதைக்கப்பட்டு'' திரவமாக மாற்றப்படுகிறது. ஏசிஎஸ் மத்திய அறிவியல் இதழில் இந்தக் குழு, முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டது.
பாலிமர் அணுக்களை மெட்டல் நானோதுகள்கள் மூலம் சிதைத்து - ரசாயன திரவமாக மாற்றுவதாக, முன்னேறிய இந்த கிரியா ஊக்கி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
 இந்தத் திரவத்துக்கு பயன்பாடு, மதிப்பும் இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்'' என்று பேராசிரியர் போயிப்பெல்மெயர் கூறுகிறார். அர்கோன் தேசிய ஆய்வகம் மற்றும் ஆமெஸ் ஆய்வகங்களில் இருந்து சிலரும் இணைந்ததுதான் அவருடைய குழு. இதை என்ஜின்களில் எண்ணெயாகப் பயன்படுத்த முடியுமா என்று அந்தக் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.

``இந்தப் பொருட்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம் - இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் - ஒரு மதிப்பு உள்ளது. சுற்றுப்புறங்களில் அதை நாம் வீசி எறிந்துவிடக் கூடாது. அதை எரித்துவிடவும் கூடாது.''
இந்த ஆய்வு அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருந்தாலும், தொடக்க நிலையில்தான் இருக்கிறது - கேரிபேக் மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தை நமது கார்களில் ஊற்றக்கூடிய நாள் விரைவில் வராமல் போய்விடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வகையில் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க வகையில் மாற்ற முடியும் என்ற பெரிய தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
ரசாயனத் துறை நிபுணர்கள், ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று கண்டறிவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், உலகெங்கும் தினமும் ஒரு மில்லியன் டன் அளவுக்குப் புதிய பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

சாதாரணமாகப் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பாலிமர்களை இணைக்கும் வலுவான நீண்ட பிணைப்புகள்தான், குறிப்பிட முடியாத பயனுள்ள தன்மைகளுக்கு அடிப்படையாக உள்ளன.
 அவைதான் பிளாஸ்டிக்கின் வலு மற்றும் நீடித்த உழைப்புக்கு இயற்பியல் ரீதியிலான பலத்தைத் தருகின்றன. ஆனால் அவைதான் கெட்ட பெயருக்கும் காரணமாக உள்ளன.
அவை அழிவதற்கு மிக நீண்ட காலம் ஆகிறது என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே, அந்த பிளாஸ்டிக்கை மதிப்புமிக்க ஏதாவது ஒரு பொருளாக மாற்றினால் - எரிபொருள் அல்லது புதிய பொருட்களாக மாற்றினால் - அது நம்பிக்கை தரும் வணிக முயற்சியாக இருக்கும்.
 ரசாயன மறுசுழற்சி என்று அது கூறப்படும் - இயந்திர முறையில் மறுசுழற்சி செய்வதில் இருந்து இது முழுக்க மாறுபட்டது.
நமது பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசும்போது, நாங்கள் அதைத்தான் பெருமளவு சார்ந்திருக்கிறோம். இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு, உருக்கி, சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. அதே வகையிலான பிளாஸ்டிக்கில் புதிய பொருட்களைத் தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.
பாலித்தீனை வெட்டுகின்ற பிளாட்டின சிறிய துகள்கள், ரசாயன நீர்மமாக அதனைமாற்றுகிறது.

இந்த நடைமுறையும் அந்தப் பொருளை அழிப்பதாக இருக்கிறது. எனவே குறிப்பிட்ட முறைகள் வரை பிளாஸ்டிக் பாட்டில்களை இதுபோல மறுசுழற்சி செய்ய முடியும்.

ரசாயன மறுசுழற்சி என்பது, ரசாயன ரீதியில் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது - சற்று புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ``பிரிட்டனில் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதன் அங்கமாக ரசாயன மறுசுழற்சி இருக்க வேண்டும்'' என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஹென்றி ராய்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஷேவர் கூறுகிறார்.
ஆனால் இது இயந்திர முறை மறுசுழற்சியைவிட பின்னடைவு கொண்டது, ஏனெனில் இதில் எரிசக்தி அதிகமாக தேவைப்படுகிறது என்று அவர் விளக்குகிறார்.
``இந்த சிறப்பான ஆய்வையும் (நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளது) கூட 300 டிகிரி செல்சியஸில் 30 மணி நேரத்துக்கும் மேல் செய்ய வேண்டியுள்ளது.''
``குப்பைத் தொட்டியில் வெவ்வேறு வகையான கழிவுகள் நமக்குக் கிடைக்கிற நிலையில், கலப்பான கழிவுகள் மூலம் நமக்கு நிறைய கிடைக்க ரசாயன மறுசுழற்சி முறையில் வாய்ப்பு உள்ளது.''
``இவற்றை ஒன்றாக சேர்த்து நாம் நிலைமாற்றம் செய்யும்போது, பிரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், புதிய பொருள் மதிப்பு மிக்கதாக ஆகிறது.''


இந்த முயற்சியில் தொழிற்சாலைகளில் நிறைய முயற்சிகள் நடக்கின்றன. பிளாஸ்டிக்கை சிதைத்து எரிபொருளாக அல்லது புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கான கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு, தொழிற்சாலை மூலம் லாபகரமான நடைமுறைகளை உருவாக்க முன்னணி ரசாயன தொழிற்சாலை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாஸ்டிக் எரிசக்தி போன்ற பிரிட்டனை சேர்ந்த புதிய சுற்றுச்சூழல் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 10 புதிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளன.
 பிளாஸ்டிக்கை எரிபொருளாக சிதைப்பதற்கு, ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை அதிக வெப்பத்துக்கு ஆட்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பாலிமரின் அணுக்களை சிதைத்து, பழைய அணுக்களாகப் பிரிப்பதன் மூலம், புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதை கச்சாப் பொருளாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட வேறு பல தொழில்நுட்பங்களை வெவ்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக பெருமளவு முதலீடு செய்யப்படுவதால், புதிதாக உருவாக்கப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் உள்ளன.
உண்மையில், ரசாயன மறுசுழற்சி - நம்பிக்கை தருவதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் - அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் எந்த வகையில் பயனுள்ளவாறு பயன்படுத்தப் போகிறோம் என்ற புதிருக்கான சிறிய விடையாக இது இருக்கும் என்று பேராசிரியர் ஷேவர் கூறுகிறார்.
``பல பிளாஸ்டிக் பொருட்கள் சிறப்பாக இயந்திர முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன'' என்கிறார் அவர். ``இதே நிலையில் இதைத் தொடர வேண்டும் ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாதபோது, இந்த வலுவான பிணைப்புகளை மீண்டும் கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு நாம் மாற முடியும்.''

வெள்ளி, 18 அக்டோபர், 2019

பகவான்களுக்கே வந்த சோதனை!

ல்கி பகவான் – அம்மா பகவான் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
 கேள்விப்படாதவர்கள் குறைவுதான்!
தமிழகத்தில் பகவான்களுக்கா பஞ்சம்?

 16-10-2019, 17-10-2019 அந்தப் பகவான்களின் ஆசிரமங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றிருகின்றன.
 என்ன இது பகவான்களுக்கே வந்த சோதனை என்கிறீர்களா?
என்ன செய்வது?
கலியுகத்தில் கல்கியாவது?
பகவானாவது?
முதலில் இந்த கல்கி பகவானின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, பின்னர் இந்த ‘ரைடு’ வரலாற்றைப் பார்க்கலாம்.

 பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார்.
டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான் இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார்.

சென்னையில் தனது படிப்பை முடித்த விஜயகுமார், 1971 ல் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஒரு பணியில் சேர்கிறார். அவர் எல்.ஐ.சி யில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு அறிமுகமான தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள்தான் இன்றைய கல்கி பகவானிற்கு விதை என்றே கூறலாம்.
 ஜே.கே வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

சென்னையில் வசித்து வந்த விஜயகுமார் எனும் சாதாரண எல்.ஐ.சி. ஏஜெண்ட், கடந்த 1989-ம் ஆண்டில் திடீரென ஒருநாள், “நான்தான் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம்” என்று தன்னைத்தானே அவதார புருஷனாக அறிவித்துக் கொண்டார்.
சென்னை பூந்தமல்லி அருகே நேமத்தில் சிறிய அளவில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கிய விஜயகுமார் என்ற ”கல்கி பகவானின்” புகழ் நாளடைவில் தமிழகம் முழுவதும் பரவியது.
அது மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவரது புகழ் பரவியது.

விளைவாக குறுகிய காலத்திலேயே இம்மூன்று மாநிலங்களிலும் ஆசிரமங்களையும், ஆசிரமங்களின் பெயரில் சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார்.
தியான பிசினஸை டெவலப் செய்ய தனது மனைவியையும் அம்மா பகவானாக அறிவித்து கல்லா கட்டினார்.

ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் தனது ஆசிரமத்தின் தலைமை நிலையத்தை பலநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார்.
தற்போது அந்த ஆசிரமம் முழுக்க அவரது புத்திரனான, கிருஷ்ணாஜி மற்றும் மருமகள் பித்ராஜியின் கைகளில் இருக்கிறது.
ஆசிரமங்கள் என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா?
 பிரேமானந்தா தொடங்கி லேட்டஸ்ட் நித்தியானந்தா வரை சர்ச்சை இல்லாத ஆசிரமங்கள் ஏது?
 கல்கி பகவானின் ஆசிரமமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை.

பணம் பெருத்த பக்தர்களுக்கு ஆசிரம உணவில் தொடர்ச்சியாக போதை வஸ்துகள் கலந்து கொடுக்கப்பட்டு அவர்கள் மனநிலை பிறழ்ந்த சூழலில் அங்கு ஆடுவது போன்ற பல்வேறு வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
அங்கு பல பேர் அடிமைகளாக சிக்கியுள்ளனர் என்றும் பல ஆதாரங்கள் வெளிவந்தன.
ஆனால், அவை அனைத்தும் சிறிதுகாலம் பேசப்பட்டு அப்படியே மாயமாக மறைந்துவிட்டன.
அந்த அளவிற்கு செல்வாக்கு கொண்டவர் நமது கல்கி பகவான்.

அதுமட்டுமல்ல, ஆந்திராவில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டு ஆசிரமத்தின் பெயரில் முழுங்கியது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆசிரமத்தின் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு ‘பக்தாள்களின்’ தொடர்புகள் மூலம் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாஜி கர்நாடகாவில் ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள், சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் பங்கு முதலீடு என பல்வேறு தொழில்களைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், பலநூறு கோடி சொத்துக்கள் வருமான வரித்துறையை ஏமாற்றி சேர்த்திருப்பதாகவும் கூறி, நேற்றும் இன்றும் கல்கி பகவானின் ஆசிரமங்களிலும், அவரது மகனின் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருக்கும் 40 ஆசிரமக் கிளைகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது.
கணக்கில் காட்டாத சில நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்களும், சில கோடி ரூபாய்கள் கணக்கில் காட்டாத பணமாக சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 மீத விவரங்கள் முழுமையாக சோதனை முடிந்த பின்னர்தான் தெரியவருமாம்.
இதற்கு முன்னர் தமிழகத்தில் சேகர் ரெட்டி, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., விஜய பாஸ்கர் என பல பெரும்புள்ளிகள் வீட்டிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் குறித்து இதைவிட சுவாரசியமான பல விவரங்கள்  ஏற்கெனவே தெரிய வந்திருக்கின்றன.

ஆனால், சேகர் ரெட்டி புதிய 2000 ரூபாய் நோட்டை வெள்ளைப் பணமாகத்தான் வைத்திருந்தார் என்று ‘நிறுவி’ வருமான வரித்துறை அந்த பிரச்சினையை முடித்துக் கொண்டது ஊருக்கே தெரியும்.
விஜயபாஸ்கர், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் வீட்டு ரெய்டு கதைகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அனைத்தும் ஊத்தி மூடப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டன.

ஸ்ரீஸ்ரீ முதல் ஜக்கி வரை கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரும் ஆளும் பாஜக-வின் புகழைப் பாடி, பாஜகவின் ஆதரவோடு தங்களது சாம்ராஜ்ஜியங்களை விரிவடையச் செய்துவரும் சூழலில், கல்கி பகவானின் ஆசிரமங்களில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனைகள் கவனிக்கத்தக்கவை.

மோடி 1 ஆட்சியிலிருந்தே வருமானவரித்துறை சோதனைகளில் உள்ள பொதுவான அம்சம் ஒன்றே ஒன்றுதான். பாஜகவின் கைகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடுமியைப் பிடித்துக் கொடுப்பது மட்டுமே அவற்றின் நோக்கம் ஆகும். அந்த வகையில், இந்த சோதனைகளும் கல்கி பகவானின் குடுமியை பாஜகவின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் என்பதை இனி நடக்கவிருக்கும் சம்பவங்கள் எடுத்துக் கூறலாம்.

இந்துத்துவ கருத்தாக்கம் கொண்ட மோடி அரசு, ஒரு சாமியாருக்குக் குடைச்சல் கொடுக்குமா என வாசகர்கள் யோசிக்கலாம். ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராச்சாரியை களி தின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!
/-----------------------------------------------------------------------------------------------------------------------------------

தக்காளி சட்னி தெரியும், 
ஆனால்  இனிப்பு சுவை கலந்த தக்காளி சட்னி?
 இதோ உங்களுக்காக

தேவையானவை: 

தக்காளி – 5
பேரிச்சை – 5
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 11/2 மேஜைக்கரண்டி
மசாலா பொடி – 11/2 தேக்கரண்டி
இஞ்சி – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மாங்காய் பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 21/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில் இந்த மசாலா பொடியையும் சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
 பின் அதில் துருவிய இஞ்சி, நறுக்கி வைத்த தக்காளி, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.
இதில் தக்காளி நன்கு வதங்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் சர்க்கரை நன்கு கரைய வேண்டும், மேலும் இந்த கலவை கெட்டியாக வரும்வரை வைத்திருக்கவும்.
 அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான பதத்தில் கிடைக்கும்வரை மிகமான சூட்டில் வைத்திருந்து பின் இறக்கி பரிமாறவும்.
/-------------------------------------------------------------------------------------------------------------------------------/-
உடற்கட்டு தான் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தந்தது. அவரின் உடற்கட்டு பார்ப்பதற்கு, ஹோலி கொண்டாடுவதைப் போல கூட்டம் சேரும்.

துவக்கத்தில், அதிக மசாலா சேர்த்த இந்திய உணவுகள், சல்மானின் விருப்ப உண இருந்தன.
என்றைக்கு, 'பிட்'டாக இருக்க வேண்டும் என விரும்பினாரோ, அன்றே, மொத்த உணவு பழக்கத்தையும் மாற்றி விட்டார்.
'எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், நாம் சாப்பிடும் உணவு தான், நம்மை, 'பிட்'டாக வைக்கும்' எனச் சொல்லும் சல்மான், தினமும் உடற்பயிற்சி மூலம், 3,000 கலோரிகளை எரிக்கிறார். 20 ஆண்டுகளாக, அசாதாரண உடற்கட்டை பராமரிக்கும் சல்மானின், ஒர்க் - அவுட், வேறு யாராலும் நினைத்து பார்க்க முடியாதது.
தினமும், மூன்று மணி நேரம் ஜிம்மில்இருப்பர் 
 2,000 சிட் - அப்ஸ்,
1,000 புஷ் - அப்ஸ், வயிறு தசைகளுக்கு,
 500 அசைவுகள்...
தவிர, 10 கி.மீ., துாரம் சைக்கிளிங்&
ஜாகிங்... இது தான், சல்மான் கான்!
--------------------------------------------//////////////////////////////--------/---------------------------------------------
அசுரன்.
 பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 இந்தத் திரைப்படம் சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாக படத்தை பார்த்த பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி ட்வீட் செய்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதனை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். 
அதில், அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு 'ஆஹா, அற்புதம் என கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 
அதில், ' மருத்துவர் ராமதாஸ் , தற்போது 'முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! 
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

"முரசொலி அலுவலகம் தலைமுறை தலைமுறையாக தனியாருக்குச் சொந்தமான நிலம். 
அது பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார். !
இல்லையென்றால் ராமதாசும் அவர் மகனும் விலகத் தயாரா.?"
--மு.க.ஸ்டாலின் .


/--------------------------------------------------------------------------------/------------------------------------------------

செவ்வாய், 15 அக்டோபர், 2019

வெள்ளையர்க்கு "இரு வேண்டுகோள்கள்"
85 ஆண்டுகளுக்கு முன்பு,

1931 மார்ச் 23, .

பகத் சிங் ,ராஜ்குரு,சுக்தேவ் ஆகியோர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். 

பகத்சிங் வீரமரணம் அடையும் போது, அவருக்கு வயது 23 மட்டுமே. 
வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்க, அவரது நலம் விரும்பிகளும் குடும்ப உறுப்பினர்களும் பிரிட்டன் அரசாங்கத்திடம் அவரை மன்னிப்பு கேட்கக் கோரினாலும் பகத்சிங் மறுத்துவிட்டார்.

தனது கடைசி விண்ணப்பத்திலும், சாட்சியத்திலும், காலனித்துவ அரசுக்கு எதிராக போரை நடத்தியதாக அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் உண்மையாக இருக்க வேண்டும் என்றும், தன்னை தூக்கிலிடக்கூடாது; மாறாக, துப்பாக்கி முனையில் மூலமே தன்னுடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பிரிட்டிஷ் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகளின்” சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்ற ஒரு இந்தியாவுக்கான அவரது பார்வையை அவரது ஆவணம் முன்வைக்கிறது.
[இந்தி] தேசியவாத அறைகூவலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி கையிலெடுத்துள்ள நேரத்தில், பகத்சிங்கின் நாட்டுப்பற்றுமிக்க அணுகுமுறை மற்றும் பார்வையை ‘இந்துத்துவா’ கருத்தாக்கத்தின் தோற்றுவிப்பாளரும் சங்க பரிவாரின் முன்னணியாளருமான ’வீர்’சாவர்க்கருடன் ஒப்பிடுவது பயனுள்ளது.

தனது புரட்சிகர நடவடிக்கைக்காக, 1911-ம் ஆண்டில் அந்தமானிலுள்ள செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர், தனது 50 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், தன்னை விடுதலை செய்யுமாறு முதல்முதலாக மன்னிப்புக் கடிதம் எழுதினார்.

அடுத்ததாக 1913-ம் ஆண்டில் மற்றும் 1921-ம் ஆண்டில் இந்திய சிறைக்கு மாற்றப்படும் முன்பாக, இறுதியாக 1924 -ம் ஆண்டில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். ”என்னை விட்டுவிடுங்கள். நான் விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு காலனித்துவ அரசாங்கத்திற்கு உண்மையாக இருப்பேன்” – இதை தான் அவரது மன்னிப்புக் கடிதங்கள் சுமந்தன.

சாவர்க்கரின் வாக்குறுதிகள் ஒரு தந்திரம் என்று அவரது இந்துத்துவா ஆதரவாளார்கள் கூறுகின்றனர்.
 ஆனால் உண்மையில்  அப்படி இல்லை .
காரணம் அந்தமான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு பிரிட்டனுக்கு தான் அளித்த வாக்குறுதிகளுக்கு உண்மையாக சாவர்க்கர் நடந்து கொண்டார் என்றும் முஸ்லீம் லீக்கின் “இரு நாடுகள் கோட்பாட்டின்” இன்னொரு வடிவமான ’இந்துத்துவா” பிளவுவாத கோட்பாட்டின் மூலம் உண்மையில் பிரிட்டிஷுக்கு அவர் உதவி செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

 பகத்சிங்கின் கடைசி விண்ணப்பமும்,
வீ.டி.சாவர்க்கர் 1913 -ம் ஆண்டு எழுதிய விண்ணப்பமும் 
உண்மை நகல்கள் இங்கே தரப்படுகிறது.

பகத்சிங்கின் கடைசி விண்ணப்பம்

லாகூர் சிறைச்சாலை, 1931
பெறுனர் : பஞ்சாப் ஆளுனர்
ஐயா, பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்: 1930 அக்டோபர் 7 -ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் எச்.இனால் பிரகடனப்படுத்தப்பட்டு, லாகூர் சதி வழக்கு சிறப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட எல்.சி.சி. தீர்ப்பாயம் (LCC Tribunal) என்ற பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னன் எச்.எம். ஜார்ஜுக்கு எதிராக போர் தொடுத்ததுதான் எங்களுக்கெதிரான முதன்மையான குற்றச்சாட்டு.

நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு இரண்டு முன் அனுமானங்களை வைக்கிறது :
முதலில் இந்திய தேசத்திற்கும் பிரிட்டனுக்கும் போர் நடக்கிறது என்பதையும் இரண்டாவதாக, நாங்கள் உண்மையில் அந்தப் போரில் பங்கேற்றோம், எனவே நாங்கள் போர்க் கைதிகள் என்றும் அது கூறுகிறது.
இரண்டாவது முன் அனுமானம் கொஞ்சம் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது.
முதல் முன் அனுமானத்தை பொறுத்தவரை, நாங்கள் சில விவரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிடுவது போன்ற போர் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
ஆயினும் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு நாங்கள் மேற்கொண்டு விளக்க விரும்புகிறோம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படும் வரை எங்கள் யுத்தம் தொடரும்.
அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாகவும் இருக்கலாம். இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம் அல்லது இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம்.
 பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு இயந்திரத்தைக் கொண்டோ அல்லது கலப்பறற இந்திய இயந்திரத்தைக் கொண்டோ அவர்கள் தங்கள் நயவஞ்சகமான சுரண்டல்களை நடத்தி வரலாம்.
சலுகைகளாலும் சமரசங்களாலும் இந்திய சமுதாயத்தின் மேல்தட்டுத் தலைவர்களை வென்றெடுப்பதில் முயற்சி செய்து வெற்றியும் பெற்று, அதன் மூலம் புரட்சி அணிகளிடம் ஒரு தற்காலிக மனச்சோர்வை உங்களது அரசாங்கம் ஏற்படுத்தினாலும் பரவாயில்லை.

போரின் கடுமையினால், இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னனிப்படையான புரட்சிகர [சோசலிச] கட்சி காணாமல் போனாலும் பரவாயில்லை.
தலைவர்கள் எங்களுக்காக வெளிப்படுத்திய பரிவுக்கு தனிப்பட்ட முறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். ஆயினும் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஏதுமற்ற ஏழை பெண் தொழிலாளிகளை, காலாவதியாகிப் போன தங்களது கற்பனாவாத அகிம்சை வழிபாட்டு முறைக்கு எதிராக இருப்பதாக கூறி, அவர்கள் குறித்து தங்களது சமாதான பேச்சுவார்த்தையில் குறிப்பிடக் கூட செய்யாமல் புறக்கணித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தங்களையும், தங்களது கணவர்கள், தமையன்கள் மற்றும் நெருக்கமான அனைவரையும் தியாகம் செய்துள்ள அந்த கதாநாயகிகளை சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று உங்களது அரசாங்கம் கூறியுள்ளது.
உங்களது தரகர்கள், அவர்களது கட்சியின் புகழை கெடுக்க எவ்வளவு தான் குனிந்து அவர்களுக்கு புலப்படாத பாத்திரங்கள் மீது அடிப்படையற்ற அவதூறுகளை  புனைந்தாலும்  பரவாயில்லை.
  போர் தொடரும்.

இது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். இப்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ, முற்றிலும் கிளர்ச்சியூட்டும்படியாகவோ அல்லது மரண போராட்டமாக கூட அது இப்போது ஆகலாம்.
இரத்தம் சிந்தும் போராட்டமோ அல்லது அமைதியான போராட்டமோ எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். ஆனால் பொருளற்ற அற்பமான இந்த சித்தாந்தங்களை கருத்தில் கொள்ளாமல் போர் இடைவிடாமல் நடத்தப்படும்.
சோசலிச குடியரசு அமைக்கப்படும் வரை,புதிய வீரியத்துடனும் அதிக துணிவுடனும் தீர்மானகரமாகவும் இது நடத்தப்படும்.
 தற்போதைய சமூக ஒழுங்கமைப்பானது புதிய ஒரு செழிப்பான சமூக ஒழுங்கமைப்பினால் மாற்றப்படும் வரையிலும், ஒவ்வொரு வகையான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மனிதநேயம் உண்மையான மற்றும் நிரந்தர அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும் வரையிலும் இந்த போர் தொடரும்.
மிக விரைவில் எதிர்காலத்தில் இறுதி போரானது நடத்தப்பட்டு இறுதி தீர்வு வரும்.
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்ச்சி போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த போர்.
திரு [ஜதின்]தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதி சரணின் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்புக்குரிய சந்திரசேகர் ஆசாத்தின் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணிசெய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே எங்களது எளிய தியாகங்கள்.
எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்து விட்டதால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றிவிடுவீர்கள். ஏனெனில் உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே உலகின் உயரிய நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம் தானே!!
எங்கள் விசாரணையே, அதற்கு ஒரு சான்று.
மேலும் உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நாங்கள் உங்கள் அரசிற்கு எதிராகப் போர் தொடுத்துள்ளோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள்.
ஆதலால் எங்களைப் போர் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுட்டுக் கொல்வது போல், எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு ஆணையிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.”

இப்படிக்கு,
பகத் சிங்.
(இந்த விண்ணப்பத்தை பகத் சிங் ஆராய்ச்சி குழு (shahidbhagatsingh.org) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது)
 வீ.டி சாவர்க்கரின் விண்ணப்பம்:
செல்லுலார் சிறை, அந்தமான், 1913
பெறுனர்: இந்திய அரசின் உள்துறை உறுப்பினர்
உங்களின் முன் பின்வரும் விடயங்களை அளிக்க இறைஞ்சுகிறேன்:
(1) ஜூன் 1911 -ல் எனது தரப்பின் மற்ற கைதிகளுடன் தலைமை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் ஆபத்தான “D” குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டேன்; மீதமுள்ளவர்கள் “டி” என வகைப்படுத்தப்படவில்லை. பின்னர் நான் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் மற்றவர்கள் இல்லை.
 அந்த நேரத்தில் என் கைகளில் இரத்தப்போக்கு இருந்தாலும் நான் சணல்திரிக்கும் வேலை, எண்ணெய் ஆலை போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தபட்டேன்.
எல்லா நேரங்களிலும் எனது நடத்தை சிறப்பாக இருந்தபோதிலும், இந்த ஆறு மாதங்களின் முடிவில் என்னுடன் வந்த மற்றவர்கள் விடுவிக்கப்பட்டாலும் நான் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
(2) சலுகைக்காக நான் விண்ணப்பித்த போது, நான் ஒரு சிறப்பு வகுப்பு கைதி என்று கூறப்பட்டதால் அதனை பெற முடியவில்லை.
 நல்ல உணவு கொடுக்குமாறு எங்களில் யாராவது கேட்டால் “நீங்கள் சாதாரண குற்றவாளிகள் மட்டுமே, மற்றவர்கள் சாப்பிடுவதை தான் நீங்களும் சாப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டது. எனவே ஐயா, தனிவகை இன்னல்களுக்காகவே என்னை சிறப்புக் கைதியாக வகைப்படுத்தப்படுத்தியிருப்பதைக் நீங்கள் காணமுடியும்.
 
(3) குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளியே அனுப்பப்பட்டபோது என்னையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நான் அவர்களது பிரச்சினைக்குரியவன் என்பதால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் என்னை விடுவிக்க ஆணை வந்த பிறகு வெளியில் இருந்த சில அரசியல் கைதிகளால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன்.

(4) நான் இந்திய சிறைகளில் இருந்திருந்தால், இந்நேரத்தில் அதிக நன்மதிப்பை பெற்றிருப்பேன், அதிக கடிதங்களை அனுப்பியிருக்கலாம், வருகைகளையும் பெற்றிருக்கலாம்.
நான் ஒரு நாடு கடத்தப்பட்டவராக இருந்திருந்தால், இச்சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதுடன பிணையையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்திய சிறைச்சாலை அல்லது காலனி ஒழுங்குமுறை அனுகூலங்களோ எதுவும் எனக்கு இல்லை; இரண்டின் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

(5) எனவே, தயைக் கூர்ந்து என்னை இந்திய சிறைகளுக்கு அனுப்பியோ அல்லது மற்றவர்களை போல நாடு கடத்தியோ இந்த கொடுமையான சூழ்நிலைக்கு முடிவு கட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்தவிதமான முன்னுரிமைகளையும் கேட்கவில்லை.
ஆனால் ஒரு அரசியல் கைதியாக உலகின் எந்தவொரு சுயாதீனமான நாடுகளின் நாகரிக நிர்வாகத்திலும் இதை எதிர்பார்க்க முடியும். மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்குமா? என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை எனக்கு சாத்தியமற்றதாக்குகிறது.
ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும்.
தயை கூர்ந்து, (ஒன்று) என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்.
அங்கே என்னால் (a) நன்மதிப்பை பெற முடியும்.
 (b) அங்கு என்னைப் பார்ப்பதற்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் வருவார்கள். ஒவ்வொருமுறையும் அருகிலுள்ளவர்களையும் நெருக்கமானவர்களையும் பார்ப்பது எத்தனை கொடுப்பினை என்பது கெடுவாய்ப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.
(c) எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டபூர்வமானது இல்லையென்றாலும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அடைவதற்கான உரிமை கிடைக்கும்.
 (d) மேலும் அதிகபடியான கடிதங்கள் மற்றும் வேறு சிற்சில நன்மைகள் கிடைக்கும்.
 எனக்கு பிணை வழங்கி எனது குடும்பத்தினரை இங்கே வரவழைக்க முடியும்.
அதன் பிறகு எனது சொந்த தவறுகளுக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க வேண்டும், மற்றவர்களுக்கு அல்ல. இதை நான் கேட்பது ஒரு பரிதாபமான நிலை – இது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை!

ஒருபுறம், சுறுசுறுப்பான சில 20 இளம் இந்திய புரட்சிகர போராளிகள்.
மறுபுறம், காலனிய குற்ற விதிமுறைகள்.
 இது விடுதலை உணர்வையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உரிமையையும் கீழாக்குகிறது.

மாட்சிமை தாங்கிய தங்களுக்கு 1911-ம் ஆண்டு நான் எழுதிய கருணை மனுவை பரிசீலிக்கவும் இந்திய அரசாங்கத்திற்கு அதை அனுப்பவும் நினைவூட்ட அனுமதிக்க வேண்டும்?
இந்திய அரசியலின் சமீபத்திய போக்கும் அரசாங்கத்தின் இணக்கமான கொள்கையும் அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் ஒரு முறை திறந்துவிட்டிருக்கின்றன.

1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது.
ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன்ஆங்கில  அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதால் நாங்கள் சிறையில் இருக்கும் வரை நூற்றுக்கணக்கான இந்திய குடும்பங்களில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. 
 ஆனால், நாங்கள் விடுதலையடைந்தால் அவர்கள் மேலும் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பார்கள்.

அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். 
என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். 
ஆனால், என்னை சிறையிலேயே வைத்திருந்தால் எந்த பயனும் இல்லை.
மாட்சிமை தாங்கியவர் மட்டுமே கருணையுள்ளவராக இருக்க முடியும்.

 இந்த ஊதாரிக்கு வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?

மாட்சிமை தாங்கிய தாங்கள் இந்த விவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வி.டி சாவர்கர்.நன்றி : தி வயர்
 தமிழாக்கம் : சுகுமார்

திங்கள், 14 அக்டோபர், 2019

பொருளாதாரம்`நோபல் பரிசு' பெற்ற அபிஜித் பானர்ஜி ?

இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்!.

இன்றைய உலகின் மிக அவசரமான பிரச்னைகளில் ஒன்று வறுமை.
 வறுமையால் உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகள் இன்னும் நோய்களால் இறக்கின்றனர்.
உலகின் பாதி குழந்தைகள் இன்னும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.

 இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசுகள் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைதிக்கான பரிசு தவிர மற்ற நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மதுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
"அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

``இவர்கள் நடத்திய ஆராய்ச்சி உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இருபது ஆண்டுகளாக இவர்களின் புதிய சோதனை அடிப்படையிலான அணுகுமுறை பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. இது இப்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகும்" எனக் கூறி மூவரையும் நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளது.

இந்த சோதனை முயற்சியில் முக்கிய பங்குவகித்தவர் அபிஜித் பானர்ஜி.
கடைசியாக கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெற்ற இந்தியர்.
அவருக்குப் பிறகு இந்தியர்கள் யாருக்கும் நோபல் கிடைக்காத நிலையில் கொல்கத்தாவின் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் பானர்ஜிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 58 வயதாகும் அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.
இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார் அபிஜித்.
அதிலும் தந்தை தீபக்கை போலவே பொருளாதாரத்தை தேர்வு செய்து படித்துள்ளார்.
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார்.

 பின்னர் 1988ல் பி.ஹெச்டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே குடியுரிமை அமெரிக்க குடிமகனாகி விட்டார்.
அவர் இப்போது வெளிநாட்டு வாழும் இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்.
இருப்பினும் இந்திய மரபணுவில்  என்பதால் நாம் கொஞ்சம் மகிழலாம்..

அமெரிக்க  குடியுரிமை பெற்ற கல்பனா சால்வாவை இந்தியர் என்று நம்பிக்கொண்டாடுவதைப்போல்தான் இவரையும் கொண்டாடுகிறார்கள்.கல்பனா அமெரிக்காவிலேயே  விண்வெளிக்கு ஏற்கனவே பறந்துள்ளார்.ஆனால்   என்று கொண்டாடுகிறோம்.அதுவரை அவரைப்பற்றி யாருக்குமே .
அதுபோல்தான் .
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி முடித்த இவர் தற்போது மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக  பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
தொடர்ச்சியாக வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் கவனம் செலுத்தி வரும் அபிஜித்துக்கு ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல் நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார்.
 கடந்த 2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் மற்றும் செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை மையத்தை நிறுவியுள்ளார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
 மாசேசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும்போது இதே நிறுவனத்தில் இலக்கிய பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், கொல்கத்தாவில் தன் சிறுவயது தோழியாக இருவருமாக அருந்ததி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
 இவர்களுக்கு ஒரு மகனும் இருந்தார்.

ஆனால், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் மனைவி விவாகரத்து பெற்றுவிட 2016ல் மகனும் உயிரிழந்துவிட்டார்.
இதன்பின்புதான் தன்னுடன் ஆராய்ச்சி செய்து வந்த எஸ்தர் ட்யூப்லோவுடன் வாழ்ந்து வருகிறார் அபிஜித். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிரெஞ்சு பெண். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் மற்றும் குறைந்த வயதில் (46 வயது) பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் எஸ்தர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு அரசுப்பேருந்தா?இந்து முன்னணி பேரூந்துகளா?
" தீவிர அரசியலா.ஊ....கு..ம் "
இப்போதைய அரசியல், கருத்துச் சுதந்திரம், போலி செய்திகள் என சினிமாவை கடந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் சித்தார்த்.

"நான் தீவிர அரசியலுக்கு வரமாட்டேன். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
 இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் திட்ட முடியாது.
 இப்போது தவறு யார் செய்கிறார்கள் என்று பார்க்காமல்.. தவறு என்ன என்று பார்த்து என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன்." என்றார்.

மேலும், "என் சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. தேடித் தேடி படிப்போம். கருத்துக் கணிப்புகளைப் பார்ப்போம்.
ஆனால், இப்போது எல்லாம் கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர விரும்பவில்லை.

கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது.
 கருத்து கூறினால் பயனாக இருக்குமென்றால் கருத்து கூறலாம். கும்பலாகக் கத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை." என்றார் நடிகர் சித்தார்த்.
இப்படித்தான்  ஆண்டுகளுக்கு முன்புவரை கமல்ஹாசனும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------ஞாயிறு, 13 அக்டோபர், 2019

மாமல்லபுர சந்திப்பு

தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் முக்கியமான லாகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய-சீன பிரதமர்கள் சந்திப்பு ,பேச்சு வார்த்தை,ஒப்பந்தம் நடந்துள்ளது.

இந்த சந்திப்பு, இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை குறைக்குமென நம்பப்படுகிறது.
தற்போதுள்ள பதற்றத்திற்குக் காரணம் சீனா என இந்திய மக்களும், இந்தியா என சீன மக்களும் கருதுகின்றனர்.
 இரண்டு நாடுகளுக்கு இடையே என்ன பதற்றம்?

 டோக்லாம் பகுதிதான் இப்போது இருநாடுகள் இடையே நிலவும் முரணுக்குக் காரணம் .

 சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் 'சும்பி பள்ளத்தாக்கு' பகுதியில் சீனா அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.

சீனா, பூடான் இரண்டுமே டோக்லாம் பகுதிக்கு உரிமை கோருகின்றன. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப் பகுதியை பயன்படுத்துகின்றனர்.

சீனா இங்கு சாலையை உருவாக்கி, ஆயுதங்களைக் குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. அது ராணுவரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கான பாதையும் இங்கிருந்தே செல்கிறது.
அகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்த பாதை, இந்தியாவில் 'சிலிகுரி பாதை' அல்லது 'சிக்கன்ஸ் நெக்' என்று அறியப்படுகிறது. இந்த பாதை சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.

சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும் இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, 'பிரிட்டன் இந்தியா'வால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.

1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பூடானும் ஒன்று. அப்போதிருந்தே, இந்தியா மற்றும் பூடான் இடையே நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.

பூடானின் எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே 'நட்பு ஒப்பந்தம்' ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் 'வழிகாட்டல்' பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியா-பூடான் இடையிலான நட்பு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு 2007இல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவின் வழிகாட்டுதல்கள், இறையாண்மை மூலம் மாற்றியமைக்கப்பட்டது.

பூடான் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. பூடானில் ஏற்படும் எந்தவிதமான பதற்றமும் அதன் எல்லைகளை மாற்றியமைக்கலாம், இந்தியா ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
 இந்தியாவின் தலையீடு இல்லாமல் பூடானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பீஜிங் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த விசயத்தில் இந்தியா மற்றும் பூடானின் நிலை தெளிவாக இருப்பதாக, ஜூன் மாதம் 30ம் தேதியன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 16-ஆம் தேதியன்று டோக்லாம் வந்த சீனாவின் கட்டுமானக் குழுவினர் டோக்லாமில் சாலைகளை அமைக்க முயன்றனர்.
அதன்பிறகு, ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, சீன ராணுவத்திடம் ராயல் பூடான் ராணுவம் கூறியது.
டோக்லாம் பகுதியிலிருந்த இந்திய ராணுவ வீரர்களும் பூடான் தரப்பு கருத்துக்கு ஆதரவாக பேசி, தற்போதைய நிலையில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று கூறினார்கள்.
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் ஆட்சேபனையைத் தெரிவித்தார். பூடான் தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருக்கிறது.
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
சீனாவின் அண்மை நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளும், தற்போதைய நிலையில் மாறுதல்களையும் ஏற்படுத்துவதும் இந்தியாவின் பாதுகாப்புக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகச் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள் ஆலோசனைகளுக்குப் பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் எல்லை இருக்கும் பகுதியில் ஒருதலைபட்சமான நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.
இரு நாடுகளுக்கு இடையிலான வேறு இதர தவறான புரிதல்களும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

சீனா மற்றும் இந்தியாவுக்கான பதற்றத்தை அதிகரிப்பது போட்டி மட்டுமல்ல, 1962ம் ஆண்டு சீனாவுடனான போரில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியிலிருந்து மீளமுடியாத இந்தியாவின் பரஸ்பர வெறுப்பும் ஒரு காரணம் என்று சீன நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது 1962 இல்லை, 2017 என்று குறிப்பிடும் இந்தியா, இந்தப் பதற்றத்தை ராணுவத்தால் எதிர்கொள்ளமுடியும் என்று கூறுவதற்கு வேறு காரணம் இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உட்பட சீனாவை தீவிரமாக எதிர்க்கும் குழுவிற்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகச் சீனா கருதுகிறது.

சீனா-பாகிஸ்தானின் நெருக்கம் இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் பரிமாற்றத்தையும் தவறு என்கிறது இந்தியா.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுபொருள் விநியோகக் குழு போன்ற சர்வதேச குழுக்களில் இந்தியா உறுப்பினராவதற்குச் சீனா வேண்டுமென்றே தடை ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகிறது.
பீஜிங்கில் மே மாதம் நடைபெற்ற 'வலயமும் பாதையும்' மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்து கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு உதாரணம் என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் அதிகரித்தாலும், ஒன்றை மற்றொன்று தவறாகப் புரிந்து கொள்ளும் போக்கும் தொடர்கிறது.

 இப்படியான சூழலில்தான் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த சீன -இந்திய பிரதமர்கள் சந்திப்பு முக்கியத்துவம்பெற்று உழைக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
                                                                                                                                                                                                                    நன்றி:பி.பி.சி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியா
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
 ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11,
 எக்ஸிகியூயோபாக்டீரியம் உண்டே ஸ்ட்ரைன் டிஆர்14 ஆகிய
இரண்டு வகை பாக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில் கண்டறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கோப்பைகள், உறிஞ்சு குழல்கள், பொட்டலம் இடும் தாள்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றன.
 இதன் காரணமாக நீர் நிலைகள் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் சூழலியல் சீர்கேடு ஏற்படுகிறது.

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டு பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை கார்பன் ஆதாரமாக பயன்படுத்துவதுடன், பையோபிலிம்கள் எனும் ஒருவித உயிர் மென்படலத்தை உருவாக்கி பாலிஸ்டைரீனின் பண்புகளை மாற்றிவிடுகின்றன.
பாலிஸ்டைரீன் சங்கிலிகளை உடைக்க ஹைட்ரோலைசிங் என்சைம்களை வெளியிடுவதன் மூலம் இயற்கையான சிதைவுறுதலுக்கு இந்த பாக்டீரியாக்கள் வழி செய்கின்றன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரூபா மஞ்சரி கோஸ், பேராசிரியர் பிரியதர்ஷினி தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவினருக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இதன் மூலம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை இயற்கையான முறையின் மூலம் மட்க செய்யும் கனவு நனவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை 2022ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் தடை செய்யும் இந்திய அரசின் நோக்கத்துக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் துணையாக இருக்கும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு உயிரியல் தீர்வு காணும் வகையில் இந்த இரண்டு வகை பாக்டீரியாக்களின் வளர்சிதை மாற்றம் குறித்து ஆராயும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஷிவ் நாடார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 8 அக்டோபர், 2019

முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !

  இந்திய தேர்தல்?
தவறாகிப்போன தேர்தல் முறை.தற்போது நடப்பவை உண்மையான மக்கள் வாக்களிப்பா?என்ற ஐயம் பலருக்கு வருகிறது.
அதற்கு மூலக்காரணமே தற்போது இந்திய தேர்தல் ஆணையமாக அமைந்து விட்டதுதான் வேதனை.
பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் மக்களைக் கவரும் திட்டங்களை அறிவுக்கு வரை காத்திருந்து குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது முதல் அசிங்கம்,தமிழகத்தில் திமுக,அதிமுக இரண்டும் ஆட்சியைப்பிடிப்பதில் சமமாக முன்னேறி வரும்போது வாக்கு என்னணிக்கை ஆரம்பித்த ஒன்னரை மணி நேரத்திலியேலே பிரதமராக இருந்த மோடி,முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றதற்கு?வாழ்த்து தெரிவித்ததால் ஆரம்பித்தது அடுத்த அலங்கோலம்.
அரசு : கார்ப்பரேட்டுகளின் சேவகன்
அதுவரை திமுக முன்னேறிக்கொண்டிருந்த இடங்களில் எல்லாம் 40 வாக்குகள் முதல் 3600 வாக்குகள் வரையில் முன்னணி பெற்று அதிமுக  வென்றதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகள் கிட்டத்தட்ட 60.
அங்குள்ள மக்களுக்கே அதிர்சி என்றால் வேட்பாளர்கள் நிலை.?
அதன் ஒரு சோறு பதம்தான் ராதாபுரம்.வென்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரை  இன்று நீதிமன்ற மறு வாக்கு எண்ணிக்கையால் துன்பத்துரை யாகி உள்ளார்.
சரி .இனி கார்பரேட்களால் தேர்தல் முறை எப்படி வழைக்கபப்டுகிறது.வெற்றியைதீர்மானிப்பது கார்ப்பரேட்களாக இருந்தாலும்,தங்களுக்குப் பிடித்த ஆட்சியை உருவாக்குவதும் அவர்கள்தான் என்பதைப்பார்க்கலாம்.
இது 2014 "புதியஜனநாயகம்" ஏப்ரல்  இதழில் "செல்லம்" எழுதிய கட்டுரையின் மறு பகிர்வு.

“ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல்கள்தான்; தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுகிறார்கள்; நாடாளுமன்றம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த நிறுவனம்” என்றவாறு தேர்தல்கள், நாடாளுமன்றம் பற்றிய நம்பிக்கையை முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் பொதுமக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். ஓட்டுக்கட்சிகள் கிரிமினல்மயமாகியிருப்பது; ஓட்டுச் சீட்டு அரசியலே பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான எளிதான வழியாக, பிழைப்புவாதமாக மாறியிருப்பது; எங்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள் பெருத்துப் போயிருப்பது என இந்த அமைப்புமுறை அழுகிப் போயிருப்பதைக் காணும் மக்கள், இந்த தேர்தல்கள், ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்துவரும் நிலையிலும், தேர்தல்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அமைப்பு முறையை விட்டால் வேறு மாற்று இல்லை என்றே இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சீரழிந்து போயிருப்பதற்கு ஓட்டுக்கட்சிகள், அதனின் தலைவர்கள், தனிப்பட்ட அதிகாரிகள் ஆகியோரின் மீது பழிபோட்டுவிட்டு, இந்த அமைப்பு முறைக்கும் அக்கேடுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என இவர்கள் வாதிடுகிறார்கள். ஓட்டுக்குப் பணம் வாங்காமல், கட்சிகளைப் பாராமல், சாதி – மதச்சார்பு இல்லாமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் போல மக்களுக்குச் சேவை செயக்கூடிய அமைப்பு வேறு எதுவும் கிடையாது என இவர்கள் உபதேசிக்கிறார்கள்.
ஊழல், அதிகாரமுறைகேடுகள் உள்ளிட்ட கேடுகள் அனைத்தையும் தானாகவே திருத்திக் கொள்ளும் வாய்ப்புகள் (ஜன் லோக்பால் போன்றவை) இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் கொட்டிக் கிடப்பதாகக் கூறி இவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்.
“நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும் திரைச்சீலை” என்ற லெனினின் வரையறுப்புக்கு முற்றிலும் எதிராக, “மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதில் நாடாளுமன்றம் உயர்ந்த அமைப்பு வடிவமாகும். எனவே, இந்திய நாடாளுமன்றம் முடமாகிப் போனால், இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” என எச்சரிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா.
அரசனை விஞ்சிய ராஜ விசுவாசி!

உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு

“மாற்றம் வேண்டும்” என்ற அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறும் படித்த நடுத்தர வர்க்கத்தினர்கூட, தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக இன்னொரு கட்சியைப் பதவியில் அமர்த்தினால் மாற்றம் வந்துவிடும் எனப் பாமரத்தனமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைப் புரிந்து வைத்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் நாட்டை ஆளுவதாகக் கூறப்படுவதே ஒரு வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்திற்குச் சட்டமியற்றும் அதிகாரம்தான் உண்டே தவிர, அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அப்பால் தனித்து இயங்கிவரும் அதிகார வர்க்கத்திற்குத்தான் உண்டு. மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களையும் இந்த அதிகார வர்க்கம்தான் வடிவமைத்துத் தருகிறது. இந்த அதிகார வர்க்கம் நாடாளுமன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயேச்சையாக இயங்கக் கூடியது. இந்த அதிகார வர்க்கத்தை நியமிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது.
இதுவொருபுறமிருக்க, தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றத் தின் நடவடிக்கைகளை ஒருமுறை அலசிப் பாருங்கள். இந்திய மக்களின் மீது மானிய வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு எனப் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கிய அதேசமயம், ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, அதன் மூலம் அக்கும்பல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அதிரடி இலாபம் அடையவும் ஏற்பாடு செய்து கொடுக்கும் கருவியாக நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் உண்மை தெரிய வரும்.
இந்திய நாடாளுமன்றம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் நலன்களைப் பாது காக்கும் கருவியாக இருப்பதை ஓட்டுக் கட்சிகளின் சொந்த விருப்பு வெறுப்பாக, ஓட்டுக்கட்சிகள் மக்கள் மீது அக்கறையற்று இருப்பதன் வெளிப்பாடாகவோ சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. 1990- களில் புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசின் கட்டுமானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடு இது.


1947-க்குப் பிந்தைய இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தனியார்மயத்திற்கு முன், தனியார்மயத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 
தனியார்மயத்தின் முன்பு இந்திய நாடாளுமன்றம் டாடா, பிர்லா, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ குடும்பங்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவந்த போதும் நாட்டின் சுதேசித் தொழில்களையும், இயற்கை வளங்களையும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிடமிருந்து காக்கும் அரைகுறையான சுதேசி பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை நிலவியது. 
இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பெயரளவிலான அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருந்தது. 
மேலும், மக்கள் நல அரசு எனத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே ஒப்புக்குச் சப்பாணியாகச் சில நடவடிக்கைகளை – கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியமான சேவைகளை அரசின் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது – எடுத்து வந்தது.
1991-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசு, உலக வங்கியின் கட்டளைகளை ஏற்று இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கத் தொடங்கிய பின், இந்திய நாடாளுமன்றத்தின் பெயரளவிலான அதிகாரமும் சுயேச்சைத் தன்மையும் முற்றிலும் பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, மக்கள் நல அரசு என்ற முகமூடியையும் கழட்டிவிட்டது.
அதனைத் தொடர்ந்து “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த நாள் தொடங்கி, இந்திய நாடாளுமன்றமும், அரசின் பிற உறுப்புகளும் அந்நிய நிதி மூலதனத்தின் கட்டளைகளை நிறைேவற்றும் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டன.
நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுகூட, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே, அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நடந்து முடிந்தது.
 இந்தச் சம்பவம் ஒன்றே இந்திய நாடாளுமன்றம் இனி சோளக்காட்டு பொம்மை போன்றது என்பதை எடுத்துக் காட்டியது.

“காட்” ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் நாட்டின் மீது திணிக்கப்பட்டபோதும், நரசிம்ம ராவ் அரசிற்குப் பின் பதவிக்கு வந்த, போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி அரசும், அதற்குப் பின் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் முந்தையதைவிட விசுவாசமாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தன.
குறிப்பாக, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாலும் சென்று, 640 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய-அமெரிக்க இராணுவக் கூட்டு ஒப்பந்தமும்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல்தான் மன்மோகன் சிங் அரசால் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் சிவில் அணுஉலைகளைக் கண் காணிக்கும் அதிகாரத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு அளித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களை தாஜா செய்வதற்காகவே, அணுசக்தி கடப்பாடு மசோதா நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வோடோஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏப்பு செய்த விவகாரம் அம்பலமான பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பொது வரி தவிர்ப்பு விதிமுறைகளை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் இப்புதிய விதி முறைகளைத் தீவிரமாக எதிர்த்தவுடனேயே, அதனை அமலுக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டது.
“மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர்” என மேற்கத்திய ஊடகங்கள் அபாயச் சங்கை ஊதியவுடனேயே சில்லறை வர்த்தகம் தொடங்கி ஆயுதத் தளவாட தயாரிப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்தார், மன்மோகன் சிங்.
உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை விதிகள் (TRIPS) மற்றும் நிதி முதலீட்டு விதிகளுக்கு (TRIMS) மாறாக, இந்திய நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிவிட முடியாது. இந்தியா எந்தெந்த பொருட்களை எவ்வளவு இறக்குமதி செய்ய வேண்டும்; எந்தெந்த பொருட்களை எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உலக வர்த்தகக் கழகம்தான் தற்பொழுது தீர்மானிக்கிறது.
 பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், உலக வங்கியின் நிபந்தனைப்படி இயற்றப்பட்ட ஒன்றாகும். 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ரசியாவின் சீஸ்டெமா நிறுவனமும், நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனமும் அறிவித்துள்ளன.
உண்மையான அரசாங்கம் இவர்களைப் போன்ற நிபுணர்களின் கைகளில்: வங்கித்துறை சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் நரசிம்மன்; வறுமைக்கோடை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ரங்கராஜன்; எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவது குறித்த கமிட்டியின் தலைவர் நந்தன் நிலகேனி; வரி தவிர்ப்பு விதிமுறைகள் கமிட்டியின் தலைவர் பார்த்தசாரதி ஷோமே.

இந்திய அரசிற்கு மேலான சூப்பர் அரசாங்கமாக ஏகாதிபத்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.


1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், அதுகாறும் அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்த துறைகள் சிலவற்றுள் இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய தொழில் கழகங்களும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன. இப்படி நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடைவதற்கு வசதியாக அத்துறையில் இருந்துவரும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் தள்ளப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் இலாபத்தையும் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் படலம் ஆரம்பமானது.
 பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்குத் தரகு முதலாளிகளின் நம்பகமான விசுவாசியான அருண் ஷோரி அமைச்சராக்கப்பட்டார். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன விலைக்கு விற்கலாம் என்பதைக்கூட நாடாளுமன்றத்திற்குப் பதிலாக ஏகாதிபத்தியவாதிகள்தான் முடிவு செய்தனர்.
 2100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மாடர்ன் புட்ஸ் 104 கோடி ரூபாய்க்கும், 5,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பால்கோ 551 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதிலிருந்தே இரண்டாவது கட்டத்தில் நடந்த பகற்கொள்ளையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்து, கண்ணுக்குத் தெரியும் ஆற்றுத் தண்ணீர், இரும்பு, நிலக்கரி, இயற்கை எரிவாயு, மீத்தேன் தொடங்கி கண்ணுக்குத் தெரியாக அலைக்கற்றைகள் ஈறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வரைமுறையும் இன்றி இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழங்களுக்கும் ஒதுக்கீடு செயும் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் கட்டும் காண்டிராக்டுகள் மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது தொடங்கி குப்பை வாருவது வரையுள்ள அனைத்துப் பொதுப் பணிகளையும் தனியாரிடம் அயல்பணியாக ஒப்படைப்பது; அரசும்-தனியாரும் கூட்டுச் சேர்ந்து (Public Private partnership projects) அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; சிறப்புப் பொருளாதார மண்டல வளையங்களை உருவாக்குவது; உள்நாட்டு தொழில்களில் குறிப்பாக பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவது; அவற்றுக்கு வரிச் சலுகைகளும் வரித் தள்ளுபடிகளும் அளிப்பது என அடுத்தடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன.

இந்தத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசே விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து கொடுத்தது; கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கு வசதியாக பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக பொதுத்துறை வங்கிகளின் கடன் விதிகள் தளர்த்தப்பட்டன; வட்டி வீதம் குறைக்கப்பட்டது.
 முதலீடுகளைக் கவர்வது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரித் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன.

இப்படியான சலுகைகளை அளிப்பதன் மூலம்தான் நாட்டில் தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும் என அரசு வாக்குறுதிகளை அள்ளிவிட்டது.

 இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பல்லிளித்துப் போவிட்டதை இப்பொழுது அரசே ஒப்புக் கொண்டு விட்டது.
நாடு போண்டியாகி நிற்கும் அதேசமயம் அரசின் செல்லப்பிள் ளைகளான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி, அடானி, மித்தல் உள்ளிட்ட ஒரு சில இந்தியத் தரகு முதலாளிகளோ உலகின் சூப்பர் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றனர்.
விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும் ஒட்டுண்ணி போல, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் முட்டைப் பூச்சி போல, இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாட்டின் பொதுச் சொத்துக்களை, இயற்கை வளங்களை, பொதுமக்களின் சேமிப்புகளை, உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக அரசின் ஆதரவு அரவணைப்போடு உருவாகியுள்ளனர்.

நாடாளுமன்றம் இந்த ஒட்டுண்ணித்தனம் நிறைந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் பார்த்து வருகிறது.
 இதைச் செய்து கொடுக்கும் நம்பகமான விசுவாசிகள்தான் அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிப்பதற்கு திமுக மட்டும தானா லாபி செய்தது ?
பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தூக்கி கடாசப்பட்டு, அவரிடத்தில் வீரப்ப மொய்லி உட்கார வைக்கப்பட்டதன் பின்னே முகேஷ் அம்பானியின் கரங்கள் இருந்தன.

வீரப்ப மொய்லி இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து, அம்பானியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.நிதி மந்திரி ப.சிதம்பரம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எனத் திரும்பும் பக்கமெல்லாம் ஏகாதிபத்திய விசுவாசிகளால் இந்திய அரசாங்கம் நிரம்பி வழிவதை யாரும் கண்கூடாகப் பார்க்கலாம். 
மாண்டேக்சிங் அலுவாலியா உலக வங்கியிலும், ரகுராம் ராஜன் சர்வதேச நாணய நிதியத்திலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவிட்டு இறக்குமதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவ்வளவு ஏன், உலக வங்கியில் குப்பை கொட்டியவர், ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நம்பகமான ஏஜெண்ட் என்பதால்தான் மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதிமந்திரியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதம மந்திரியாகவும் முடி சூட்டப்பட்டார்.
இதுவொருபுறமிருக்க இந்தியத் தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனங்களைச் சேர்ந்த விசுவாசமான அதிகாரிகளும் கொல்லைப்புற வழியாக மேலவை உறுப்பினராக நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவது இன்று ஒரு போக்காக வளர்ந்து வருகிறது.
மேலும், அரசு அமைக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் தரகு முதலாளிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்களைத் தரகு முதலாளிகளும், அதிகார வர்க்க கமிட்டிகளும், ஏகபோக நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும்தான் வகுத்துக் கொடுக்கிறார்கள்.
இதன் அடிப்படையில்தான் இன்று சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவன அதிகார வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 இதுபோல தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அதிகார வர்க்க கமிட்டிகள் தீர்மானிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால், வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்யவும், சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாராளமயத்தைப் புகுத்தவும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் கமிட்டி;
 சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்கள் தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் நந்தன் நிலகேனி கமிட்டி;
தரகு முதலாளித்துவ நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா கமிட்டி;
வங்கித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நரசிம்மன் கமிட்டி
 என்றவாறு அனைத்து நிலைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கு ஏற்றவாறு அதிகார வர்க்க கமிட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மைய அரசு அமைத்து வருகிறது.
 இந்த கமிட்டிகள் தான் உண்மையான அரசாங்கமாகவும், அவை தரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றமும் இன்று செயல்பட்டு வருகின்றன.

அரசியல்வாதிகளிடம் காணப்படும் சுயநலம், ஊழல் ஆகிய ஒழுங்கீனங்களைக் காட்டி, தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் நிறைந்த அதிகார வர்க்கத்தின், துறை சார்ந்த நிபுணர்களின் கைகளில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அளித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என இந்த மாற்றத்தைப் புதிய தாராளவாதக் கொள்கை நியாயப்படுத் துகிறது.
அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சமூக பொறுப்புகள், கடப்பாடுகள் அனைத்தும் களையப்பட்டு, அவை மேலும் மேலும் ஆழமாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செயும்படி மாற்றப்பட்டிருப்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் கிரிமினல்மயமாகியிருப்பதைவிட கொடிய அபாயம் நிறைந்தது இந்த மாற்றம். எனினும், முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் ஊழல் இல்லாத நல்லாட்சி, சிறந்த அரசாளுமை ஆகிய மயக்கு வார்த்தைகளைக் கொண்டு இந்த பேரபாயத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசு கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட் சி, ஐக்கிய முன்னணி ஆட்சி எனப் பல வண்ண கூட்டணிகள் மாறிமாறி ஆண்டபோதும், தனியார் மய-தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கூட்டணிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.
 சொல்லப்போனால், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்கிடையே யார் முந்தி என்ற போட்டிதான் அக்கூட்டணி ஆட்சிகளுக்கிடையே நிலவி வந்தது.
இப்படி தனியார்மயக் கொள்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி ஆட்சி நடத்துவதைத்தான் ஆளுங்கும்பல் நிலையான ஆட்சி என வரையறுக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது பற்றி இந்திய மக்களைவிட, ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகள்தான் அதிகம் கவலை கொள்கின்றனர்.
தங்கள் விருப்பத்துக்கு மாறான கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனைக் கவிழ்த்து விடவும் தயாராக இருக்கிறது அக்கும்பல். “சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொண்டு, ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டமின்றி ஆட்சியமைக்க முற்பட்டால், அது நிதி முதலீட்டாளர்களை வெளியேறத் தூண்டுவதாக அமைந்துவிடும்.
அப்படிபட்ட நிலை இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செயும்; வெளிநாடுகளிலிருந்து பெறும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுவதைத் தாமதப்படுத்தும்” என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது, மூடி (Moody) என்ற ஏகாதிபத்திய ரேட்டிங் நிறுவனம்.

எனவே, தேர்தல்களுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகளின், இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலின் ஆட்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இருக்க முடியாது.
 அதனால் நடைபெறவுள்ள தேர்தல் என்பது இந்தத் தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ நியாயத்தைக் கற்பிக்கும் மோசடி தவிர வேறெதுவும் கிடையாது என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...