bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 18 அக்டோபர், 2019

பகவான்களுக்கே வந்த சோதனை!

ல்கி பகவான் – அம்மா பகவான் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
 கேள்விப்படாதவர்கள் குறைவுதான்!
தமிழகத்தில் பகவான்களுக்கா பஞ்சம்?

 16-10-2019, 17-10-2019 அந்தப் பகவான்களின் ஆசிரமங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றிருகின்றன.
 என்ன இது பகவான்களுக்கே வந்த சோதனை என்கிறீர்களா?
என்ன செய்வது?
கலியுகத்தில் கல்கியாவது?
பகவானாவது?
முதலில் இந்த கல்கி பகவானின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, பின்னர் இந்த ‘ரைடு’ வரலாற்றைப் பார்க்கலாம்.

 பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார்.
டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான் இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார்.

சென்னையில் தனது படிப்பை முடித்த விஜயகுமார், 1971 ல் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஒரு பணியில் சேர்கிறார். அவர் எல்.ஐ.சி யில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு அறிமுகமான தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள்தான் இன்றைய கல்கி பகவானிற்கு விதை என்றே கூறலாம்.
 ஜே.கே வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

சென்னையில் வசித்து வந்த விஜயகுமார் எனும் சாதாரண எல்.ஐ.சி. ஏஜெண்ட், கடந்த 1989-ம் ஆண்டில் திடீரென ஒருநாள், “நான்தான் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம்” என்று தன்னைத்தானே அவதார புருஷனாக அறிவித்துக் கொண்டார்.
சென்னை பூந்தமல்லி அருகே நேமத்தில் சிறிய அளவில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கிய விஜயகுமார் என்ற ”கல்கி பகவானின்” புகழ் நாளடைவில் தமிழகம் முழுவதும் பரவியது.
அது மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவரது புகழ் பரவியது.

விளைவாக குறுகிய காலத்திலேயே இம்மூன்று மாநிலங்களிலும் ஆசிரமங்களையும், ஆசிரமங்களின் பெயரில் சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார்.
தியான பிசினஸை டெவலப் செய்ய தனது மனைவியையும் அம்மா பகவானாக அறிவித்து கல்லா கட்டினார்.

ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் தனது ஆசிரமத்தின் தலைமை நிலையத்தை பலநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார்.
தற்போது அந்த ஆசிரமம் முழுக்க அவரது புத்திரனான, கிருஷ்ணாஜி மற்றும் மருமகள் பித்ராஜியின் கைகளில் இருக்கிறது.
ஆசிரமங்கள் என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா?
 பிரேமானந்தா தொடங்கி லேட்டஸ்ட் நித்தியானந்தா வரை சர்ச்சை இல்லாத ஆசிரமங்கள் ஏது?
 கல்கி பகவானின் ஆசிரமமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை.

பணம் பெருத்த பக்தர்களுக்கு ஆசிரம உணவில் தொடர்ச்சியாக போதை வஸ்துகள் கலந்து கொடுக்கப்பட்டு அவர்கள் மனநிலை பிறழ்ந்த சூழலில் அங்கு ஆடுவது போன்ற பல்வேறு வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
அங்கு பல பேர் அடிமைகளாக சிக்கியுள்ளனர் என்றும் பல ஆதாரங்கள் வெளிவந்தன.
ஆனால், அவை அனைத்தும் சிறிதுகாலம் பேசப்பட்டு அப்படியே மாயமாக மறைந்துவிட்டன.
அந்த அளவிற்கு செல்வாக்கு கொண்டவர் நமது கல்கி பகவான்.

அதுமட்டுமல்ல, ஆந்திராவில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டு ஆசிரமத்தின் பெயரில் முழுங்கியது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆசிரமத்தின் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு ‘பக்தாள்களின்’ தொடர்புகள் மூலம் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாஜி கர்நாடகாவில் ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள், சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் பங்கு முதலீடு என பல்வேறு தொழில்களைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், பலநூறு கோடி சொத்துக்கள் வருமான வரித்துறையை ஏமாற்றி சேர்த்திருப்பதாகவும் கூறி, நேற்றும் இன்றும் கல்கி பகவானின் ஆசிரமங்களிலும், அவரது மகனின் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருக்கும் 40 ஆசிரமக் கிளைகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது.
கணக்கில் காட்டாத சில நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்களும், சில கோடி ரூபாய்கள் கணக்கில் காட்டாத பணமாக சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 மீத விவரங்கள் முழுமையாக சோதனை முடிந்த பின்னர்தான் தெரியவருமாம்.
இதற்கு முன்னர் தமிழகத்தில் சேகர் ரெட்டி, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., விஜய பாஸ்கர் என பல பெரும்புள்ளிகள் வீட்டிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் குறித்து இதைவிட சுவாரசியமான பல விவரங்கள்  ஏற்கெனவே தெரிய வந்திருக்கின்றன.

ஆனால், சேகர் ரெட்டி புதிய 2000 ரூபாய் நோட்டை வெள்ளைப் பணமாகத்தான் வைத்திருந்தார் என்று ‘நிறுவி’ வருமான வரித்துறை அந்த பிரச்சினையை முடித்துக் கொண்டது ஊருக்கே தெரியும்.
விஜயபாஸ்கர், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் வீட்டு ரெய்டு கதைகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அனைத்தும் ஊத்தி மூடப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டன.

ஸ்ரீஸ்ரீ முதல் ஜக்கி வரை கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரும் ஆளும் பாஜக-வின் புகழைப் பாடி, பாஜகவின் ஆதரவோடு தங்களது சாம்ராஜ்ஜியங்களை விரிவடையச் செய்துவரும் சூழலில், கல்கி பகவானின் ஆசிரமங்களில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனைகள் கவனிக்கத்தக்கவை.

மோடி 1 ஆட்சியிலிருந்தே வருமானவரித்துறை சோதனைகளில் உள்ள பொதுவான அம்சம் ஒன்றே ஒன்றுதான். பாஜகவின் கைகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடுமியைப் பிடித்துக் கொடுப்பது மட்டுமே அவற்றின் நோக்கம் ஆகும். அந்த வகையில், இந்த சோதனைகளும் கல்கி பகவானின் குடுமியை பாஜகவின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் என்பதை இனி நடக்கவிருக்கும் சம்பவங்கள் எடுத்துக் கூறலாம்.

இந்துத்துவ கருத்தாக்கம் கொண்ட மோடி அரசு, ஒரு சாமியாருக்குக் குடைச்சல் கொடுக்குமா என வாசகர்கள் யோசிக்கலாம். ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராச்சாரியை களி தின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!
/-----------------------------------------------------------------------------------------------------------------------------------

தக்காளி சட்னி தெரியும், 
ஆனால்  இனிப்பு சுவை கலந்த தக்காளி சட்னி?
 இதோ உங்களுக்காக

தேவையானவை: 

தக்காளி – 5
பேரிச்சை – 5
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 11/2 மேஜைக்கரண்டி
மசாலா பொடி – 11/2 தேக்கரண்டி
இஞ்சி – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மாங்காய் பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 21/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில் இந்த மசாலா பொடியையும் சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
 பின் அதில் துருவிய இஞ்சி, நறுக்கி வைத்த தக்காளி, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.
இதில் தக்காளி நன்கு வதங்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் சர்க்கரை நன்கு கரைய வேண்டும், மேலும் இந்த கலவை கெட்டியாக வரும்வரை வைத்திருக்கவும்.
 அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான பதத்தில் கிடைக்கும்வரை மிகமான சூட்டில் வைத்திருந்து பின் இறக்கி பரிமாறவும்.
/-------------------------------------------------------------------------------------------------------------------------------/-
உடற்கட்டு தான் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தந்தது. அவரின் உடற்கட்டு பார்ப்பதற்கு, ஹோலி கொண்டாடுவதைப் போல கூட்டம் சேரும்.

துவக்கத்தில், அதிக மசாலா சேர்த்த இந்திய உணவுகள், சல்மானின் விருப்ப உண இருந்தன.
என்றைக்கு, 'பிட்'டாக இருக்க வேண்டும் என விரும்பினாரோ, அன்றே, மொத்த உணவு பழக்கத்தையும் மாற்றி விட்டார்.
'எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், நாம் சாப்பிடும் உணவு தான், நம்மை, 'பிட்'டாக வைக்கும்' எனச் சொல்லும் சல்மான், தினமும் உடற்பயிற்சி மூலம், 3,000 கலோரிகளை எரிக்கிறார். 20 ஆண்டுகளாக, அசாதாரண உடற்கட்டை பராமரிக்கும் சல்மானின், ஒர்க் - அவுட், வேறு யாராலும் நினைத்து பார்க்க முடியாதது.
தினமும், மூன்று மணி நேரம் ஜிம்மில்இருப்பர் 
 2,000 சிட் - அப்ஸ்,
1,000 புஷ் - அப்ஸ், வயிறு தசைகளுக்கு,
 500 அசைவுகள்...
தவிர, 10 கி.மீ., துாரம் சைக்கிளிங்&
ஜாகிங்... இது தான், சல்மான் கான்!
--------------------------------------------//////////////////////////////--------/---------------------------------------------
அசுரன்.
 பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 இந்தத் திரைப்படம் சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாக படத்தை பார்த்த பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி ட்வீட் செய்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதனை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். 
அதில், அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு 'ஆஹா, அற்புதம் என கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 
அதில், ' மருத்துவர் ராமதாஸ் , தற்போது 'முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! 
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

"முரசொலி அலுவலகம் தலைமுறை தலைமுறையாக தனியாருக்குச் சொந்தமான நிலம். 
அது பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார். !
இல்லையென்றால் ராமதாசும் அவர் மகனும் விலகத் தயாரா.?"
--மு.க.ஸ்டாலின் .


/--------------------------------------------------------------------------------/------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...