bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 31 மே, 2013

புகையிலை எதிர்ப்பு




புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
 பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
 இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

 மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.
 புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. 
இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. 
இவற்றில் 43 புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.
அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுகின்றனர்.
உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும், ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது. 
படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. 
இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. 
புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.
 புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். 
சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 
2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 
3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.
 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். 
எனினும், இதனால் கிடைக்கும் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
"உடலுக்கு அபாயமான புகையிலை பழக்கத்‌தை கைவிட ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அதனால் கிடைக்கும் பலன் ஒன்றேனும் உண்டா?
இனியும் அப்பழக்கத்‌தை தொடர ஒரு உருப்படியான காரணம் சொல்ல முடியுமா?"

------------------------------------------------------------------------------------------------------------------------------------
"புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.
600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரம்
 ----------------------------------------------------------------------------------------------------
பொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க, முதல் முறையாக வரும் 4ம் தேதி விலைவாசியுடன் இணைந்த ரூ.1,000 கோடி மதிப்பீட்டிலான பங்குகளை மத்திய அரசு வெளியிடுகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஆண்டு வெளிநாட் டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான அளவு அந்நியச் செலாவணி செலவாகிறது.

இதை தடுத்து நிறு த்த மாற்று திட்டங்களை அமல்படுத்தி பொது மக்களை கவர வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
 இதன்படி, பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரத்தை (ஐஐபி) வெளியிட மத்திய அரசு தீர்மானித்தது. ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பீட்டிலான ஐஐபி வெளியிடப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த பங்கு பத்திரங்களின் முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். இது விலைவாசி புள்ளியுடன் இணைந்தது என்பதால், விலைவாசி அதிகரித்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இதனால் முதலீடு செய்தவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அதாவது, தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் விலையேற்றத்துக்கு ஏற்ப லாபம் கிடைப்பது போல், இந்த பங்கு பத்திரத்தின் முதிர்வு தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக ரூ.1,000 கோடிக்கு ஐஐபியை வரும் 4ம் தேதி வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘விலைவாசி புள்ளியுடன் இணைந்த மத்திய அரசின் பங்குகள்,2023’ வரும் 4ம் தேதி வெளியிடப்படும். இதில் 20 சதவீதம் வரை சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முடிவு செய்யப்பட்ட ஏலத்தொகையின் அடிப்படையில் இந்த பங்குகள் ஏலம் விடப்படும். 10 ஆண்டு முதிர்வு காலத்தை இப்பத்திரங்கள் கொண்டிருக்கும். மத்திய அரசின் கடன்வாங்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பங்கு பத்திர வெளியீடு அமையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக, மத்திய அரசின் கடன் தொகை பங்கு வெளியீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், தற்போது ஐஐபியில் 20 சதவீதம் வரை ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு மாத இறுதி செவ்வாய்க்கிழமைகளில், அடுத்தடுத்து ஐஐபிகள் வெளியிடப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக அக்டோபரில் ஐஐபி வெளியிடப்படும். அது முற்றிலுமாக சில்லரை முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட உள்ளது.

suran

செவ்வாய், 28 மே, 2013

"அய்யா தெரியாதையா"

"கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது "
--என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.

இந்த விவாதத்தின் போது,  ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.

எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.

எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 
ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார்
அவருக்கு தன் துறை சார்ந்த அனைத்து நடப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது புதிய திட்டங்களை அறிவிக்கும் கடமை உண்டு.
ஆனால் என்ன நடக்கிறது?
அந்தந்த துறை அமைச்சருக்கே தெரியுமோ தெரியாதோ பல புதிய அறிவிப்புகளை முதல்வரே சட்டசபை விதி 110ன் கீழ் அனைத்து துறையின் சார்பாக படிக்கிறார்.
அதுவும் "என் தலைமையின் கீழுள்ள"
"என் அரசு" என்று வரிக்கு வரி சொல்கிறார்
அப்படியிருக்க தனக்கு தெரியாமலே உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு வந்தது என சொல்வதுபொருத்தமாக தெரிகிறதா?

இந்த அம்மையாருக்கு தெரியாமலேயே யாரோ ஒருத்தர் , தேர்தல் சமயத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள். இதே அம்மையாருக்கு தெரியாமல் யாரோ ஒருத்தர், சென்னை - அண்ணா நகர் - நினைவு வளைவை உடைக்க பார்த்தார்கள். இப்போ கூட ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஆங்கிலத்தை புகுத்தப்பார்த்தார்கள். எல்லா சமயங்களிலும் அம்மையார் திடீர் திடீரென்று விழித்துக்கொள்வதால் ... நல்ல வேளை... தமிழகம் தப்பித்துக்கொள்கிறது.

ஆனால் இப்படி அடிக்கடி நடக்கிறதே.
 அந்த யாரோ ஒருவர் யார். ?
  இவர் டான்சியில் தான் போட்ட கையெழுத்தை தனது இல்லை என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

பேஸ்புக் தள பயன்பாடு இலவசம்

நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.
பேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது.
 Foursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏர்டெல் நிறுவனம், தங்களின் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் தளத்தை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதி கொடுத்தது. ரிலையன்ஸ் மாதம் ரூ. 16 பெற்றுக் கொண்டு, பேஸ்புக் தளத் தொடர்பினை வழங்கியது. முதல் முறையாக, நோக்கியா போன்ற மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகையினைத் தருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இங்கு, வரும் ஜூன் மாதம் வர்த்தக ரீதியாக வெளியாக இருக்கும், நோக்கியா ஆ
ஷா 501 போனுடன் இந்த சலுகைக் கட்டாயமாகக் கிடைக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
மூளையில் இரத்தக் கசிவு
-------------------------------------------------------
ஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.
மனிதக் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை இந்த நோயாளிகளின் மூளையில் செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களது உடல் அசைவுகளிலும், விழாமல் நிற்பதிலும், சுற்றியிருப்பதை உணர்ந்துகொள்வதிலும் முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், இந்த சிகிச்சையால் பாதகமான மாற்றம் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது.
இந்த முன்னேற்றங்களைக் கண்டு தாம் வியந்துபோயுள்ளதாக பரிசோதனை மேற்கொண்ட எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த சிகிச்சை முறையின் தீர்க்கமான முடிவாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
நோயாளிகளுக்கு குருத்து அணுக்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலகில் நடந்துவரும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
குடிப்பழக்கத்திற்கு 
அடிமையானவர்களை மீட்க புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "மருந்தை உட்கொள்வதின் மூலம் 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும் " என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.

குடிகளால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது. மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, "செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது" என்று கூறப்பட்டுள்ளது.

suran

சனி, 25 மே, 2013

"மெகா ஊழல்?'

ஐக்கிய முற்போக்குக்கூட்டணி -2 அரசின் நான்காண்டுகள் நிறை வடைந்துள்ளதையொட்டி அரசின் சாதனைப் பட்டியலை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளியிட் டுள்ளனர்.
இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைகள் தவிர கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள சரத் பவார், அஜித் சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கூட்ட ணியை வெளியிலிருந்து ஆதரிப்ப தாக கூறிக்கொள்ளும் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.
 கூட்டணி ஆட்சி பதவியேற்றபொழுது அதில் இடம் பெற்றிருந்த திமுக, திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆபத்து வரும்போதெல் லாம் மத்திய புலனாய்வுத்துறை விரட்ட, வேறு வழியில்லாமல் உறுதி யான ஆதரவு அளித்துவரும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. நியாயமாக இந்த விழாவில் மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநரும் பங்கேற்றிருக்கவேண்டும். ஏனென் றால், மத்திய புலனாய்வுத்துறையின்புண் ணியத்தில்தான் இந்த அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக் குக்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும், பெரும்பான்மை இருப்பதுபோன்ற தோற்றத்தை மத்திய புலனாய்வுத்துறை உதவி யுடன்தான் காங்கிரஸ் கட்சி ஏற் படுத்தி வருகிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை மட்டுமன்றி கூட் டணியில் இடம் பெற்றிருந்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சி களும் கூறிவந்தன.
ஆனால், வாக் கெடுப்பின்போது திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை ஆதரித்ததற்கு மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகளே கார ணம் என்பதை நாடறியும்.
 பிரதமருக்கும், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்திக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமன்றி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் சத்தியம் செய்திருக்கிறார்.
அவர்கள் கூறுவது உண்மைதான். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீட்டை அனுமதிப்பது உட்பட நாட்டை நாசமாக்கும் முடிவுகளை இவர்கள் அனைவரும் இணைந்து தான் எடுக்கிறார்கள். அமெரிக்கா வுக்கு காவடி தூக்குவதிலும், கூட்ட மாக அரோகரா போடுவதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு துவங்கி, மானியத்தில் மண் அள்ளிப் போடுவது வரை எல்லா முடிவுகளும் கூட்டாகத்தான் எடுக்கப்படுகின்றன. பொதுவாக மன்மோகன் சிங் அதிகம் பேசுவதில்லை என்று ஒரு கருத்து உண்டு. அதிலும் அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைவு என்ற குறையும் உண்டு.
இந்தக் குறையை விழாவில் நிவர்த்தி செய் திருக்கிறார் அவர்.
 "ஸ்பெக்ட்ரம், நிலக் கரி ஊழல் குற்றவாளிகள் தண்டிக் கப்படுவார்கள் "என்று அவர் கூறிய போது, கூட்டத்திலிருந்தவர்கள் மட்டுமன்றி- மன்மோகன் சிங்கே மன துக்குள் அடக்கமுடியாமல் சிரித்திருப்பார்.
 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்ற வாளிகளைத் தண்டிக்க பிரதமர் மன் மோகன் சிங் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்ந்து எடுத் துரைத்து வருகிறார். அனைத்து முடிவு களையும் பிரதமரைக் கேட்டுத்தான் எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளதி லிருந்தே குற்றவாளிகள் யார் என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரிந்திருக் கும். அப்படியென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எளிது தானே.
நிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்ற பொழுது அந்த அமைச்சகம் பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே மத்திய புலனாய்வுத்துறையின் அறிக் கையை வாங்கி திருத்திக்கொடுத்த தில் பிரதமர் அலுவலத்திற்கும் பங்கு உண்டு என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.அநேகமாக குற்றவாளிகளின் பெயர்களை சேர்ப்பதற்காகத்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கையை திருத்திக்கொடுத்தது என்று நம்பலாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த வுடன் எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டு ஊழலும் வெளிவந்தது.
அந்த துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதுதான்.
ஆனால், பின்னர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்ட தாகக் கூறி ஒரே அமுக்காக அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது. அந்த ஊழலிலும் குற்றவாளிகளைத் தண்டிக்க மன்மோகன் சிங் நட வடிக்கை எடுப்பாரேயானால் நாட்டு மக்கள் அவரை பாராட்டுவார்கள்.
தகவலறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை யெல்லாம் இடதுசாரிகளின் ஆதர வுடன் செயல்பட்ட முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டவை.
\மன் மோகன் சிங் வார்த்தையில் கூறுவ தானால் அவர் இடதுசாரிகளின் கொத்தடிமையாக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை. இந்த ஆட் சியில் அவர் சுதந்திரமாக , அதாவது அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்சியின் சாதனை உலக மகா ஊழல், பன் னாட்டு நிறுவனங்களுக்கு அனைத் துத் துறைகளிலும் நடைபாவாடை விரிப்பது ஏழைகளின் உணவைப் பறித்து பணக்காரர்களுக்கு பந்தி வைப்பது போன்றவைதான்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான்காண்டுகள் நிறைவு சிறப்பு முறைகேடு ! ......!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதையடுத்து "இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
வீரப்ப மொய்லி
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா:
 "இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்  தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.  ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாவது ஆண்டில் 12 அமெரிக்க டாலர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு எம்எம்பிடியு இயற்கை எரிவாயு விலையை 14 டாலர்கள் என்ற ரீதியில் உயர்த்தலாம் என்று வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளார்.
குருதாஸ்தாஸ் குப்தா

மொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ்  நிறுவனம் பேரம் பேசி வருகிறது.
இந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்.
 ஆனால், அந்த முடிவால்  
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
இந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.
இந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை "மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?'' - என்று கூறினார்.
மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------



வெள்ளி, 24 மே, 2013

எடை அதிகமா ?

உங்கள் எடை அதிகமா ?

உடல் எடையைக் குறைப்பதற்காக இன்று பல பேர் ஒற்றைக் காலில்நிற்கிறார்கள்.
 
 உடல் எடையைக் குறைப்பதற்கு இதைச் சாப்பிடுங்கள்.இதைச் சாப்பிடாதீர்கள் என்று டி.வி., ரேடியோ, இணையதளம், நாளிதழ், பக்கத்துவீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் என ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொடுக்கிறார்கள். 
ஆனால் மனோதத்துவ ரீதியாக இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவது?
நான் அதிகமாக சாப்பிடுவதில்லை, ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கான மனவியல்
 ரீதியிலான ஆலோசனை.
 உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். 
ஆனால் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி குறைவான கலோரிகளையே குறைத்திருக்கும்.
 குறைவான தூக்கம் மேற்கொண்டு அதிகாலையிலே எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உண்டு.
 உடற்பயிற்சிக்காக தூக்கத்தைத் தொலைக்கக் கூடாது. 
சரியான தூக்கமில்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டால், வளர்சிதை மாற்றம் குறைந்து, அதிகம் பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுத்தால் சாப்பிடுவது அதிகரிக்கும். எனவே,உடல் எடையும் அதிகரிக்கும்.
 "சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். எடை குறைவதற்கான சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை குறையவில்லை' என்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும். 
சத்தான உணவாக இருந்தாலும், அதிகமாக உட்கொண்டால் எடை தானாக அதிகரிக்கும்.
அதிகமாக சாப்பிட்டால் தானே எடை அதிரிக்கும். குறைவாக சாப்பிடுவோம் என்று நினைத்தால் அதுவும் தவறுதான்.
 அவரவரின் உடலுக்கென்று குறிப்பிட்ட அளவு சாப்பாட்டை உட்கொள்ள வேண்டும். அதைவிட குறைவாகச் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் குறைந்து உடல் எடை கூடிவிடும்.
சாப்பாட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். 
ஆனால் நாம் தினந்தோறும் குடிக்கும் பானங்கள் உடல் எடையைக் கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 
மது அருந்துவதினால் அதிக கலோரிகள் உடலில் சேர்கின்றன. 
அதே போன்று குளிர்பானங்கள்,  விலையுயர்ந்த மென்பானங்களும் கலோரிகளை அதிகரிக்கிறது. 
சாப்பாட்டைப் போன்று குடிக்கும் பானங்களிலும் கவனம் செலுத்துங்கள். 
சர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை தவிர்த்துவிடுங்கள்.
உடல் எடையைக் குறைக்க மனோதத்துவ ரீதியிலான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
உடல் பருமனானவர்களைக் கொண்டு பரிசோதனை செய்த பிறகே முடிவை அறிவித்துள்ளனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கண்ணாடி முன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுபவர்கள், தானாக உணவின் அளவை குறைத்துவிடுவார்களாம். 
சாப்பிடும்போது அவரவரின் உடல் பருமனைப் பார்த்தால் அது உளவியல் ரீதியாக பாதித்து, அவர்கள் உணவின் அளவைக்குறைப்பார்கள்.
 அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் மதியம் சாப்பிடப் போகும்போது ஆண், பெண் இருபாலினத்தவரும் சேர்ந்தே சாப்பிடுதல் நலம். எதிர் பாலினத்தவர் உடன் இருக்கும்போது அதிகம் சாப்பிடத் தோன்றாது என்கிறது ஆய்வு.
 வெளியில் சாப்பிடச் செல்லும்போது பணத்தைக் கையில் எடுத்துச் செல்லுங்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையெல்லாம் பயன்படுத்த வேண்டாம். 
கையில் இருந்து பணத்தைக் கொடுத்துச் சாப்பிட்டால்தான், எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்குவோம். 
கார்டில் "ஸ்வைப்' செய்தால் தேவையில்லாததையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களையும் அதிகம் வாங்குவோம் என்கிறது உளவியல் ஆராய்ச்சி.
 வீட்டில் சாப்பிடும்போது ஓய்வு நேரத்திற்கு அணியும் தொள தொள ஆடைகளை அணிந்து சாப்பிட வேண்டாம். 
ஏனென்றால் அவ்வாறு தொள தொள ஆடைகளினுள் நாம் மெலிந்து தெரிவோம். அதனால் அதிக அளவில் சாப்பிடத் தோன்றுமாம். எனவே நம் அளவிற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளை அணிந்து சாப்பிடுங்கள்.
 பொதுவாக வீட்டு உள்சுவர்களுக்கு வெளிர் நீல நிற வண்ணத்தை அடிப்பதுண்டு. ஏனென்றால் அது மனதிற்கு அமைதியைத் தரும் நிறம்.
 நீல நிறத்திற்கு உடல் எடை குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது.
 வெளிர் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பசியை அடக்குகிறது. 
 மஞ்சள், சிவப்பு நிறங்கள் பசியைத் தூண்டுகிறது. 
 சுவர், சாப்பாட்டு மேஜை விரிப்பு என சாப்பாட்டு சம்பந்தப்பட்டவற்றை நீல நிறமாக மாற்றலாம்.
 பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. 
தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.
குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
 அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை.
டையைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள்.
 இது தவறான அணுகுமுறை.
உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். 
பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
 அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும், பாதிப்பும் ஏற்படாது.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். 
வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். 
அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது  தவறு .

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
 திடஉணவின் அளவை குறையுங்கள். 
அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். 
குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.
சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
 
 இப்படி எல்லாம் செய்தும் உங்கள் எடை குறைய வில்லை என்றால்?
உங்கள் எடை மேலும் கூ டாமல் பார்த்துக் கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

நீர் மருத்துவம்


தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
மருத்துவ முறைகள்:
*  நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
*  பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்)
*  45 நிமிடங்களுக்குப் பின் உங்களின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
*  காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கு எந்தவிதமான ஆகாரங்களும் உட்கொள்ளக் கூடாது. (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
*  ஒர் முறையில் 4 டம்ளர் தண்ணீரை அருந்த முடியாத முதியோர் அல்லது நோயாளிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி நாளடைவில் 4 டம்ளர் அளவு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதனால் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி சுகம் பெற்று ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்களும்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்களும்
சர்க்கரை வியாதிக்கு - 30 நாட்களும்
மலச்சிக்கல் - 10 நாட்களும்
புற்றுநோய் - 180 நாட்களும்
காச நோய் - 90 நாட்களும்
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை .
 என்றாலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை .
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக், இது சம்பந்தமாக காங்கிரஸ் மன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
"நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட துணை நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துக்கொண்டும், வரி விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு நாட்டில் இருந்தும் செயல்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும் வரி செலுத்தாமல் தப்புவதில் தன்னிகரற்ற கில்லாடியாக ஆப்பிள் விளங்குவதாக "
-இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய செனெட் குழுவின் தலைவரான செனெட் உறுப்பினர் கால்ர் லெவின் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு, 19 மே, 2013

தமிழக சட்டப் பேர வை

நடந்து முடிந்த சடடமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் ஒரு பார்வை.

தமிழகத்தின் 2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் 41 நாட்கள் நடந்தது. 
204 மணிகள்  10 நிமிடங்கள் இத்தொடர் நடத்துள்ளது. 
வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக கெள்வி கேட்கவோ,வாதங்கள் செய்யவோ முடியாத  110வது விதியின் கீழ்  43 அறிக்கைகளில பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இரண்டாண்டு  ஆட்சியில் இதுவரை  110 விதிகளின் கீழ் 104 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வாரியம் அமைக்கும் சட்டம் ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதங்களுக்கு தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர். 
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ஸ்டாலின், புஷ்ப லீலா ஆல்பன், கே.சி.பழனிசாமி ஆகியோரைத் தவிர 19 பேர் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளுக்கு பேச போதிய காலம் ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 
ஆளும் கட்சிக்கு தோழமையாக இருக்கும்,ஜெயலலிதாவை வாழ்த்தியே பேசும் இரு  கம்யூனிஸ்ட்கள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட தங்கள் தொகுதி,மக்கள் நலன் பற்றி கூட பேச இயலவில்லை என  குற்றச்சாட்டை வைக்கின்றன.
துறை வாரியான மானியக் கோரிக்கை மீது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போதும் கூட  அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிட்டு சம்பந்தமில்லாமல் திமுக ஆட்சியையும்,கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் பேசி மேலும் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அளித்தோம். 
 பெயருக்கு சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆலோசனையில் உள்ளன என கூறியே, அவற்றை விவாதத்துக்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வதில்லை.
கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் சட்டசபை விதி 110ன் கீழ், அறிக்கைகளைப் படிக்கத் துவங்கி விடுவார். முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும், அதற்கு, கட்சி வாரியாக எம்.எல்.ஏ.,க்களும் எந்த துறையில் முதல்வர் அறிக்கை வாசித்தாரோ, அத்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர், முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பர்.

இதற்காக, சபை நேரத்தில் 1:30 மணி நேரம் முதல் 2:00 மணி நேரம் வரை போய்விடும். அதன்பின், துறைகளின் மானியக் கோரிக்கை மீது, விவாதம் துவங்கிவிடும். "ஜீரோ நேரம்' என்பதே   ஜெயலலிதாவின்  சட்டசபையில்  இல்லை.
 இதனால் முக்கியப் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.ஜெயலலிதாவை பாராட்டி பேசினால் மட்டுமே எவ்வளவு நேரமும் பேச சபாநாயகர் அனுமதிப்பார்.முதல்வரும் அமைச்சர்களும் அப்போது இடை மறித்து பேசுவதும் இல்லை."இவ்வாறு  கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ க்கள்  கூறுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின், கடைசி இரு நாட்களை தே.மு.தி.க.,புறக்கணித்தது. "அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும்- நடக்கும் சட்டசபைக்கு வருவதால்  என்ன பயன் ? "அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர்மட்டும்  எதிர்கட்சி  எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத குறையைப் போக்க இருந்து ஆனால்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். "எதிர்க்கட்சிகளை சபையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் "
இது  அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியான புதிய தமிழகம் விடுத்த கோரிக்கை .
" பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த, 204 மணி நேரம், 10 நிமிடத்தில், முதல்வர் மற்றும் அரசை வாழ்த்த மட்டும் 180 மணிகளுக்கு மேல்  பெரும்பகுதி நேரம் செலவிடப்பட்டதாகவும் இதில் திமுகஆட்சி ,அதன்  தலைவர் கருணாநிதியை கேலி செய்ததும் ,முதல்வர் ஜெயலலிதா பேசியதும் அடங்கும்."என்று கடைசிவரை சட்டமன்றம் சென்ற  எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ""தி.மு.க., அரசால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, கடந்த இரு ஆண்டுகளாக அரசு செயல்பட்டுள்ளது. அதற்கு, வாழ்த்துகின்றனர். இதை, ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு மனசு வரவில்லை'' என ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அப்படி வாழ்த்துவது நாட்டில் மக்களிடமிருந்தல்லவா,அதுவும் மனதின் ஆழத்தில் இருந்து  வர வேண்டும் .தங்களை ,தாங்களே வாழ்த்துவது என்பதற்கு வேறு  பெயர் .ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 17 மே, 2013

`நீர் விளையாட்டு’


                                                                                                                                                                                                             

பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடி யிருப்புகள் பற்றிய விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. “ராஜா, ராணிகளைப் போல் வாழ ஆசையா? 
 உங்கள் கனவு இல்லம் இதோ.. சொகுசான, விசாலமான குடி யிருப்புகள்.. ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு நீச்சல் குளம்..” என்ற வாசகங்கள் வண்ணமயமான பானர்களை அழகாக அலங்கரிக்கின்றன. 
ஏராளமான தண் ணீரைச் செலவழித்து நீர்ச்சறுக்கு விளை யாட்டு நடத்தும் பூங்காக்கள் முளைக் கின்றன. தண்ணீரையும் மின்சாரத்தையும் செலவழித்து பனிப்பாதைகள் உருவாக்கப் பட்டு பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கெல் லாம் தண்ணீர் பிரச்சனையே அல்ல. 
தாராளமாகக் கிடைக்கிறது. 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1972-இல் ஏற்பட்ட வறட் சிக்குப் பிறகு தற்போது வந்திருக்கும் கடும் வறட்சிப் பகுதிகளில்தான் இந்த `நீர் விளையாட்டு’ நடந்து கொண்டிருக்கிறது. 
அந்த மாநிலத்தில்தான் ஆயிரக்கணக் கான கிராமங்கள் தண்ணீர் லாரிகள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந் தால் அவை தினமும் வரும். இல்லை யெனில் வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ வரும். தண்ணீர்க் குடங்களைத் தூக்கிக் கொண்டு ஓடியபடி அவற்றை தரிசனம் செய்யலாம். 
குடியி ருப்புகளில் முளைக்கும் நீச்சல் குளங் களுக்கும் வெளியே வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கும் தொடர்பே இல்லாதது போல் “எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என்ற பாவனையுடன் மக்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக் கின்றனர். இருபதாண்டுகளுக்கு முன் தண்ணீர் பூங்காக்களும், தீம் பார்க்குகளும் எங்கும் பரவியதை மாநிலம் மகிழ்ச்சி யோடு வரவேற்றுக் கொண்டாடத் தொடங்கியது. இன்று 7000 கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடு கிறது. 
கிட்டத்தட்ட 5 லட்சம் மாடுகள் மாட்டுப் பண்ணைகளில் கிடைக்கும் தண்ணீரை நம்பியிருக்கின்றன. போதிய தண்ணீர் கிடைக்காததால் வேறு வழி யின்றி வந்த விலைக்கு மாடுகள் விற்கப் படுகின்றன. 
 பல அணைகளில் தண்ணீர் 15 சதம் மட்டுமே இருக்கிறது. 
வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட கிராமங் களுக்கு அரசு ஏற்பாடு செய்த தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. மற்ற பல்லாயிரம் கிராமங்கள் தனியார் தண்ணீர் லாரி உரிமை யாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுத் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றன. மத்திய அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கை அமுலான பிறகு அரசு தற்போது செய்துவரும் இந்தப் பணி யிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளும். 
பிறகு எல்லாமே தனியார்கள்தான்.
 ஓஸ்மனா பாத் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்னொரு காட்சி . தேவையான தண் ணீரை எங்கிருந்தாவது கொண்டு வரும் வேலை குடும்பத்தில் ஒருவருக்கு முழு நேரப் பணியாக ஒதுக்கப்படுகிறது. 
சைக் கிள்கள், மாட்டு வண்டிகள், மோட்டார் பைக்குகள், ஜீப்புகள், லாரிகள், வேன்கள், டாங்கர்கள் என பல்வேறு வாகனங்களில் தண்ணீர் கொணரப்படுகிறது. பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையிலும், இடுப்பிலும், தோள்களிலும் சுமந்து வரு கின்றனர். 
 பரத் ராட் என்பவர் நான்கு பிளாஸ்டிக் குடங்களைத் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவில் கட்டிக் கொண்டு தனது வயல்களுக்குத் தேவையான 180 லிட்டர் தண்ணீரைக் கொணர மூன்று முறை பயணம் செய்கிறார்.
 மாதம் 600 கிலோமீட்டர் பயணம் செய்து பெட்ரோ லுக்கு 800 ரூபாய் செலவழிக்கிறார். இது ஓர் உதாரணம் மட்டும்தான்.

1972-க்கும் 2013-க்கும் உள்ள ஒரே வித்தியாசம் தற்போதைய வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதுதான். 
கடந்த 15 ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான தண்ணீர் திருப்பிவிடப் பட்டது. சொகு சான வாழ்க்கைக்கு மக்களைத் தயார் செய் யும் தனியார் கம்பெனிகள் தண்ணீரை உறிஞ்சத் தொடங்கின.
 கிராமங்களி லிருந்து நகரங்களுக்கு தண்ணீர் இடம் பெயர்ந்தது. தண்ணீருக்காக கிராம மக்கள் ரத்தம் சிந்தவும் நேர்ந்தது.
 2011-இல் பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி சிஞ்ச் வாடிற்கு தண்ணீர் கொண்டுபோவதற்காக தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத் தியதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களது எழுச்சி துப்பாக்கிக் குண் டுகளை வைத்து அடக்கப் பட்டது. 
மூன்று விவசாயி கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். ‘கொலை முயற்சி’ வழக் கில் 1200 பேர் கைது செய் யப்பட்டனர்.
   இப்படிப்பட்ட தண்ணீர் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் .அதை அரசுதான் செய்ய வேண்டும் .
இந்த லட்சணத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்க மத்திய மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு வருகிறது.அதை சோதனையாக செய்து பார்த்த  பராகுவே  மக்களின் கலவரத்தாலும் ,உயிர் பலிகளாலும் தனியார் மயத்தை கைகழுவி விட்டது. இந்தியாவிலும் தண்ணீர் அரசியலை மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் ,இல்லையெனில் அதனால் மிகுந்த அபாயத்தை அரசும் -மக்களும் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்.

                                                                                                                                                                            -பேராசிரியர் கே. ராஜு
 





புதன், 15 மே, 2013



மே 5.சிந்தனையாளர் "காரல் மார்க்ஸ்" பிறந்த தினம் இன்று..
-----------------------------------------------------------------------------------------------------
மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .
போராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் .
மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் .

இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார் .


அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .

வர்க்கபேதமற்ற,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் அவர் ஏங்கல்ஸ் வரிகளில்

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்...

காலத்தை வென்று அவரின் அவர் பெயர் நிலைத்து நிற்கும் "

மார்க்ஸ் எனும் மாமனிதரின் பிறந்த நாள் இன்று.

                                                                                                                                - பூ.கொ.சரவணன்,

நன்றி:விகடன்  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மே 3, 2013 - அ ன்று  இந்திய சினிமாவின் நூற்றாண்டு தினம்ஆரம்பம் . 
1913-ம் ஆண்டு மே -3 அன்றுதான்  'ராஜா ஹரிச்சந்திரா' எனும் முதல் இந்திய சினிமா வெளிவந்தது.
"ராஜா  அரிச்சந்திரா "வில் ஒரு காட்சி 

 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...