bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 2 மே, 2013

"புலிகளின் புதிய தலைவர்,"?

இப்போது  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புதிய தலைவர் பொறுப்பெற்றுள்ளதாக
 கொழும் பிலிருந்து வெளியாகும் "தினமின' பத்திரிகையில்  செய்தி வெளியாகியுள்ளது.

இவர்தான் இப்போது மாவீரன் பிரபாகரனுக்குப் பதிலாக தலைமை ஏற்றுள்ளாராம்.உலகம் முழுக்க சிதறி கிடக்கும் விடுதலைப்புலிகளை ஒரு கட்டுக்குள் கொணரும் பணியை இப்போது செய்து வருகிறாராம்.
இப்போது   கைது செய்து இலங்கை கொண்டுவர இலங்கை புலானாய்வுப் பிரிவு சர்வ தேச காவல்துறையின் உதவியை கோரியுள்ளதாம்.இந்தோனேசியாவில் இருந்து தேடுதல் வேட்டை கனரகசியமாக நடக்கிறதாம்.
சீலன் என அடையாளப்படுத்தப்பட் டுள்ள  இந்தப் புதிய தலைவர்,பிரபாகரன் தலைமையின் போது  கேபி என்ற குமரன் பத்மநாதனுக்கு அடுத்த நிலையில் ஆயுதக் கடத்தலுக்குப் பொறுப்பாக இருந்தார் என்றும் இவரே இப்போது புலிகள் அமைப்பை வழிநடத்துகிறார்" -என்றும் "தினமின" செய்தி மேலும் கூறுகின்றது.

இந்த "புலிகளின் புதியத் தலைவர் "செய்தி

உண்மையானதா?

அல்லது ராஜபக்ஷே வயிற்றில் புளியை கரைக்க

உண்டாக்கப்பட்ட செய்தியா ??

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 சொல்லுங்கண்ணே,சொல்லுங்க .....
"முகேஷ் அம்பானி "என்னும் தனிநபர் ஒருவருக்கு சோனியாவின் காங்கிரசு அரசு பாதுகாப்பு அளிப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 சாதாரண மக்களுக்கு உரிய பாதுகாப்பினை இ ந்த அரசு அளித்திருந்தால் டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார். 
தனிநபரான முகேஷ் அம்பானியின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தும் அரசு தனக்கு வாக்களித்த,வரியும் செலுத்தும்  பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்"

என்று   உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் காங்கிரசுக்கு கோடிக்கணக்கில் கட்சி வளர்ச்சி{?}நிதியை அள்ளித்தருகிறார்களா என்ன?
அல்லது கே.ஜி ,நிலக்கரி,எரிவாயு,தொலைத்தொடர்பு என்று சகலத்திலும் முறைகேடுகளையும்,வரி ஏ ய்ப்புகளையும்  செய்து விட்டு அதை போக்க கோடிக்கணக்கில் பணத்தை அடுக்கி நாற்காலிகளுக்கு  முட்டு கொடுக்கிறார்களா என்ன?
பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் உண்டாகும் ஒரு லாபத்தை இந்த நீதிபதிகள் மன்மோகன் சிங் அரசுக்கு சுட்டி காட்ட முடியுமா??
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 காந்தியாரின் ரா [ஆய்]வுகள்.?

காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக" கிராக்கெட் . காம்" என்ற அமெரிக்க இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
. அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த  காந்தியை சிலர் புனிதராக மக்களிடம்  கொண்டாடுகின்றனர்.

ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
 காந்தி ஆசிரம விதிப்படி, அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும்.
ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தான் இவ்வளவு நுண்ணறிந்து செய்தியாக அமெரிக்க இணையத்தளம் வெளியிட வேண்டுமா? காந்தியே தனது கட்டுரைகளில் இதை எழுதித் தொலைத்திருக்கிறாரே .
அந்த அ சிங்கத்தை இப்போது கிளறி என்னவாகப்போகிறது.
இதெல்லாம் ஆய்வு அல்லது ஆராய்ச்சி  சம்பந்தப்பட்ட விடயம்.விட்டுத் தொலையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...