bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 28 ஜூலை, 2017

நீங்கள் உண்ணும் உப்பில் விஷம்?

அயோடின்  ஆபத்துக்கள்

இன்று நாட்டில் பிரபலப்படுத்தப்படும் அயோடின் உப்பிலும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயன கலவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் அயோடின் கலந்த உப்பை பயன் படுத்துவதால், அது நல்ல உணவா? அல்லது விஷமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
xjEeSWPAjZgQliVH
இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.
இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டார்கள். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியை அன்னிய சக்திகள் கிளப்பிவிட்டன நம்முடைய விளம்பர அரக்கர்கள் மக்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. இன்று, சென்னையில் நம் நாட்டின் உயர் மக்கள் பீசாவுக்கும் பர்கருக்கும் அலை மோதுகிறார்கள்.
aboutsalt8
தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.
“இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை…!” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார், ஒரு விஞ்ஞானி. இவர் பன்னாட்டு தொழில் அதிபர்களின் ஆதரவாளர். டாக்டர் இர்வின் என்ற இவர், அமெரிக்க இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்,. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.’உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?
எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு’….ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின. இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.
இந்த நிலையில் சமையலுக்காகப் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலக்க வேண்டும். அப்போதுதான் ‘தைராய்டு நோய்’ வராது என்று மக்களுக்குத் தவறான செய்திகளை அன்னிய சக்திகள் தந்தது. மக்களும் நம்பி விட்டார்கள். பாமர மக்களுக்கு ‘அயோடின் உப்பு’ என்ற இந்த மிகப் பெரும் அபாயம் பற்றி தெரியாது. பன்னாட்டு கம்பெனிகள், பணம் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகின்றன என்பதே உண்மையாக இருக்கிறது.
சாதாரணமாக தமிழக கடற்கரைகளில் அமைக்கப்படும் உப்பளங்களில் இருந்து உற்பத்தியாகும் கல் உப்பைத்தான் இதுவரை மக்கள், தங்கள் உணவுகளில் பயன் படுத்தி வந்தனர். ஆனால், அதில் பல்வேறு தீமை பயக்கும் பொருட்கள் இருப்பதாக மக்களிடம் பரப்பி, அயோடின் கலந்த பொடி உப்பை பாக்கொட்டுகளில் அடைத்து, அதனை கடைகளில் விற்கச்செய்து கோடி கோடியாய் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள், பெரிய தொழில் அதிபர்கள்.
ஆனால், இப்படியாக அயோடின் கலந்த உப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகள், உண்மையில் சரியான தரத்தில் பொடி உப்பை மக்களுக்கு வழங்குகிறார்களா? என்றால்,கேள்விக்குறிதான். இப்போது கல்லுப்பின் பயன்பாடு, இந்திய் கிராமங்களில் கூட அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் பன்னாட்டு தொழில் அதிபர்களின் சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது.
இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன் திரண்டார்கள். மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்: -
‘பொது மக்களே….! நீங்கள் பாக்கெட் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?’.
‘ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள்…. இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.’
‘நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.’
‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.’
ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை.எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.
நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது. அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பலர் மந்தமாகவும், பருத்தும், தைராய்டு வீக்கத்தோடும் இருப்பதைக் கவனித்த ராணுவ அதிகாரிகள், அவர்களுக்கு உணவில் அயோடின் குறைபாடு இருப்பதை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தார்கள். அப்போதுதான் 1924-ல் அயோடின் கலந்த உப்பு உபயோகத்துக்கு வந்தது. அந்தப் பகுதி மக்களுக்கு தைராய்டு பிரச்னை தீர்ந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் பலர் அயோடின் மிகுதியால் ரத்தக்கொதிப்பு,மாரடைப்பு போன்ற வியாதிகளால் அதிக எண்ணிக்கையில் மடிந்தனர் என்பது மருத்துவ சரித்திரம்.
அளவுக்கதிகமாக அயோடின் கலப்பதும், அயோடின் மிகுதி வியாதிகளுக்கு ஒரு காரணம். இவற்றில் ‘ஹாஷிமேட்டோஸ்’என்ற ஆட்டோ – இம்யூன் வியாதி முக்கியமானது. இது, இப்போது உலகெங்கும் பெருகி வருகிறது. அயோடின் வேலை செய்வதற்கு ‘செலீனியம்’ என்ற தாதுப் பொருளும் தேவை. கடல் உப்பில் செலீனியம் உண்டு… அயோடின் உப்பில் இல்லை. செலீனியம் இல்லாத உப்புதான், இந்த வியாதிக்குக் காரணம்.
கல் உப்பு, கடல் நீரில் எடுக்கப்படுகிறது. ‘டேபிள் சால்ட்’என்பதன் மூலம்… கடல் மட்டுமல்ல. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் மிஞ்சும் கழிவுகளிலிருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்பட்டு, பாலிஷ் போட்டு பளபளப்பாக்குகிறார்கள். ஆக,நாம் உபயோகிக்கும் ‘டேபிள் சால்ட்’, கடல் உப்பா, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்புக் கழிவா? என்பதை நுகர்வோர் அறிவதற்கில்லை’’ என்று அதிர்ச்சி தகவலை, ஒரு விஞ்ஞானி வெளியிட்டுள்ளார்.
உண்மையில், நம் அன்றாட உணவில் அயோடின் தாராளமாகக் கிடைக்கிறது. கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள். இவற்றைஎல்லாம் அன்றாட உணவில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தாலே… அயோடின் பற்றாக்குறை தானே ஓடிவிடும்.
மீன் 2 துண்டு – 35 மை.கி
முட்டை 1 – 12 மை.கி
பால் 1 கப் – 56 மை.கி
உருளைக்கிழங்கு 1 – 60 மை.கி
பீன்ஸ் 1/2 கப் – 32 மை.கி
வாழைப்பழம் 1 – 3 மை.கி
நம் ஊர் கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கீரை வகைகள், பழங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு.
தாய்மார்களே, உங்கள் சமையலறைகளில் இருந்து அயோடின் கலந்த உப்பை அப்புறப்படுத்தி விடுங்கள். அது உங்கள் நலமான வாழ்வையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்துப் பரிமாறப்படும் உணவு, பூப்பெய்தும் பருவம் அடையும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே தற்போது பல குடும்பத்தினர், அயோடின் சால்ட்டில் இருந்து, சாதாரண கல் உப்புக்கு மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அயோடின் – உப்பு இருதய இயக்கத்தை சீர்குலைக்கும்
அயோடின் – உப்பு மாரடைப்பு நோய்க்கு வழிவகுக்கும்
அயோடின் – உப்பு மூளையை மந்தமாக்கும்
அயோடின் – உப்பு தைராய்டு வியாதியைத் தோற்றுவிக்கும்
அயோடின் – உப்பு தைராய்டு வீக்கத்தையும் ஏற்படுத்தும்
அயோடின் உப்பே கர்ப்பப்பை நோய்களுக்குக் காரணம்…!
இனி மக்களாகிய நாம்தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்…!”.


 

மாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்?’

ந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களுடையது. 
ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பால்மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 7.5 கோடி. 
இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் ஓரிரு பசு அல்லது எருமை மாடுகள் முதல், அதிகபட்சம் பத்து மாடுகள் வரை  வைத்திருப்பவர்கள்.
உலகின் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்திய பால் பண்ணைத் தொழிலுக்கு உண்டு. மற்ற பல நாடுகளில் சிறு உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் தமது பாலை கார்ப்பரேட் பண்ணைகளுக்குத்தான் விற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. 
இந்தியாவில்தான் பாலை வாங்கி நுகர்கின்ற மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக பால்மாடு வளர்ப்போரின் கைக்குப் போகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் சுமார் 40 விழுக்காட்டை மாடு வளர்ப்பவர்கள் தமது குடும்பத் தேவைக்கே பயன்படுத்தி விடுகின்றனர். 
மீதமுள்ள பால்தான் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு சந்தைக்கு வரும் பாலில் 30% தான் கூட்டுறவு பால் பண்ணைகளுக்கும் தனியார் பால் பண்ணைகளுக்கும் விற்கப்படுகின்றன. 
மீதமுள்ள 70% பாலை உற்பத்தியாளர்கள், அதாவது ‘‘பால்காரர்கள்’’ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள். 
இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமை.
இத்தகைய சிறிய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் குறித்து தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகம் (NDDB) ஒரு கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது. 
மாட்டின் விலை, தீவனம், மருத்துவம், கறக்கும் பாலின் அளவு, கறவை நின்ற மாட்டை விற்றால் கிடைக்கும் வருவாய்  ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு இந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் என்ன என்பதை அது கூறுகிறது.
அந்த கணக்கின்படி, பத்து பால்மாடுகளை வளர்க்கும் ஒருவர் 7 ஆண்டுகளில் பெறக்கூடிய நிகர லாபம் 11.6 லட்சம் ரூபாய். 
இந்த தொகையில் 5.5. இலட்சம் ரூபாய் கறவை வற்றிய மாடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை என்று அந்த கணக்கீடு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது மோடி போட்டிருக்கும் சட்டத்தின்படி மாட்டை விற்கக் கூடாதென்றால், 11.6 லட்சத்தில் 5.5. இலட்சத்தை கழித்து விடவேண்டும். ஏழாண்டுகளுக்கான அவரது இலாபம் 6 இலட்சம் என்று குறைந்து விடும். 

அதாவது, பத்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தால், அவருக்கு கிடைக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.85,000; அல்லது மாதத்துக்கு சுமார் 7,000 ரூபாய்). இது நமது கணக்கல்ல, தேசிய பால் உற்பத்தி கழகத்தின் கணக்கு.
கறவை வற்றிய மாடுகள் குறைந்தது 14 ஆண்டுகள் உயிர்வாழும். அவற்றைப் பராமரிக்க ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் பத்து மாடுகளை 14 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 80 இலட்சம் ரூபாய் தேவை. 
கறவை வற்றிய மாடுகளை விற்கக் கூடாது என்றால், தொழிலை விட்டு ஓடுவது ஒன்றுதான் பால்மாடு வளர்ப்பவர்கள் முன் இருக்கும் வழி.
ஆனால் பால்மாடு வளர்ப்பவர்கள் அந்த தொழிலைக் கைவிட முடியுமா என்பதுதான் கேள்வி.?
பால்மாடு வளர்ப்பது என்பது விவசாயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதி. விவசாயப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடைந்த போதும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதுதான். 
2013 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த பயிரிடும் பரப்போ, 1971−72 இல் 11.9 கோடி ஹெக்டேராக இருந்து, 
2003−இல் 10.7 கோடி ஹெக்டேராக குறைந்து, 
2013−இல் 9.2 கோடி ஏக்கராகத் தேய்ந்து விட்டது. 
ஆனால் கிராமப்புறத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 2003−ஆம் ஆண்டில் 14.7 கோடி குடும்பங்கள். 
அது தற்போது 15.6 கோடி குடும்பங்கள் என உயர்ந்திருக்கிறது.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் வரையறைப்படி 215 சதுர அடி நிலம் கூட இல்லாதவர்கள்தான் நிலமற்றவர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். இந்த கணக்குப்படி நிலமற்றவர்கள் இந்திய மக்கள் தொகையில் 7.4% என்பது அரசு கணக்கு.
இதற்கு நேர் எதிராக 46.7% கிராமப்புற நிலங்கள், 7.4% குடும்பங்களிடம் உள்ளன. 
அதே நேரத்தில் 75.4% விவசாயிகளிடம் குறைந்த பட்சம் 215 சதுர அடி முதல் அதிக பட்சம் ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம்தான் உள்ளது. 
இதுதான் கிராமப்புற நிலவுடைமை குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தரும் சித்திரம். இந்த 75% விவசாயிகள் நிலத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.
சந்தையில் மாடுகள் விற்பதைச் சுற்றிவளைத்துத் தடை செய்திருக்கும் மோடி அரசின் ஆணையைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம். 
2013−ஆம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புற சிறு விவசாய குடும்பங்களில், குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது நகரத்தில் வேலை செய்யப் போய்விடுகின்றனர். 
குடும்பம் உயிரோடு இருக்க அவருடைய சம்பளம்தான் உதவுகிறது.
விவசாய வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்ற கடந்த 15 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் வாழ்வதற்கு கண்டுபிடித்திருக்கும் இன்னொரு முக்கியமான மாற்று வழி பால்மாடு வளர்ப்பு. 
கிராமப்புற கால்நடைகளில் சுமார் 90% சிறு, குறு விவசாயிகளிடம்தான் இருக்கிறது என்கிறது 2011−12க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு. வேறுவிதமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்தான் மிகப்பெரும் அளவில் கால்நடை பொருளாதாரத்தை சார்ந்திருக்கின்றனர்.
இந்தியாவின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தின் ஆண்டு மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். விவசாயப் பயிர் உற்பத்தியின் ஆண்டு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். ஏறத்தாழ பயிர் உற்பத்தியில் பாதி அளவை எட்டிவிட்டது கால்நடை வளர்ப்புத் தொழில். 2015−16இல் விவசாயத்துறை 1.2% தான் வளர்ந்திருக்கிறது. 
கால்நடை வளர்ப்போ ஆண்டுக்கு 15% என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது.
பால்மாடு வளர்ப்பும், கால்நடைப் பொருளாதாரமும்தான் கோடிக்கணக்கான விவசாயிகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன மேற்கண்ட புள்ளிவிவரங்கள். இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு மாடு தருகின்ற பாலின் அளவு உலக சராசரியோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதி அளவே உள்ளது. 
போதுமான தீவனமின்மை, மேய்ச்சல் நிலமின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் இதற்கு காரணம்.
மாடுகளுக்கான பசுமைத் தீவனப் பற்றாக்குறை 63%, வைக்கோல் போன்ற உலர் தீவனங்களின் பற்றாக்குறை 24%, பருத்திக்கொட்டை − புண்ணாக்கு போன்ற மற்ற தீவனங்களின் பற்றாக்குறை 76%. பால்மாடு வளர்ப்புக்கான செலவில் 60 முதல் 70% தீவனங்களுக்கான செலவேயாகும். 
2020−21இல் இந்தியாவின் பால் சந்தை 36% அதிகரிக்கும் என்றும், இதற்கேற்ப தீவனங்கள் உற்பத்தி செய்யப்படவில்லையென்றால், பால் சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் என்றும் கூறுகின்றது ஒரு ஆய்வு.
‘‘ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா’’ என்று பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிடும் அரசால் ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த நாட்டின் பரம ஏழைகள் தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை நிலையில், பலவிதமான எதிர்மறையான சூழல்களை எதிர்கொண்டு, எந்தவிதமான ஊக்கமோ ஆதரவோ கிடைக்காத நிலையிலும் சொந்த முயற்சியில் வாழக் கற்றிருக்கிறார்கள். 
முன்முயற்சியுடன் சவாலை எதிர்கொண்டு தொழில் நடத்தும் ஒருவரைத்தான் நாம் தொழில் முனைவர் என்று அழைக்கிறோம். நம் நாட்டில் சுய தொழில் செய்பவர்கள்தான் அத்தகைய தொழில் முனைவர்கள். ஏழைகளான இந்த தொழில் முனைவோரை வாழவைக்கத் துப்பில்லாத அரசு, அவர்களை மரணத்துக்குத் தள்ளுகிறது.
கறவை வற்றிய மாடுகளை விற்கக்கூடாது என்ற மோடி அரசின் உத்தரவை மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் இப்பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும். 
இந்த உத்தரவு பால்மாடு வளர்ப்பை மட்டும் பாதிக்கின்ற உத்தரவு என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.
விவசாயம் பொய்த்துப் போனதால், கிராமப்புறங்களைவிட்டு வெளியேறிப் பிழைப்புக்காக சென்னை நகரில் குவியும் வட மற்றும் வடகிழக்கிந்திய மாநில இளைஞர்கள். 
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கிராமத்திலேயே நீடிக்க முடியாது. 
இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் பாதி − அதாவது, சுமார் 12.5 கோடி ஏக்கர் நிலம் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ளது. 
பால்மாடு வளர்க்க முடியாது என்றால் இவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தும் தேவையே இல்லாமல், போண்டியாகிப்போன விவசாயிகள் தானாக முன்வந்து நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும் சூழ்நிலையை மோடி அரசின் உத்தரவு உருவாக்கும். தேசிய அளவில் கார்ப்பரேட்டுகள் நடத்தவிருக்கின்ற அம்மணமான நிலப்பறி நடவடிக்கைதான் மோடி அரசு போட்டிருக்கும் இந்த உத்தரவின் நோக்கமா என்ற கேள்வி 
எழுகிறது.
அவ்வாறு சொல்வது கொஞ்சம் மிகையோ என்று முதலில் தோன்றியது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விவரங்களிலிருந்து பார்க்கும்போது, ‘‘ஆம், இது ஒரு மாபெரும் நிலத் திருட்டுக்கான திட்டம்தான்’’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு நோக்கங்களால் உந்தப்பட்ட  நடவடிக்கைகள் போல தோன்றுகின்ற நடவடிக்கைகளின் பின்புலத்தில், வெளியில் தெரியாத பொருளாதார நோக்கங்கள் இருக்கும் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம்.
1991−இல் பாக்தாத் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷிடம் அந்தப் போருக்கான நியாயம் பற்றிக் கேட்டபோது, குவைத் மக்கள் மீது இராக் படையினர் நடத்திய கொலைகளை விவரித்த அம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘‘இந்தப் போரின் தார்மீக நோக்கத்தை அந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.
அப்போது குவைத்தின் எண்ணெய் வயல்களைப் பற்றி புஷ் பேசவில்லை. 
‘‘குவைத்தில் எண்ணெய் வயல்களுக்கு பதிலாக காரட் விவசாயம் நடந்திருந்தால், நாம் எதற்காக அங்கே போரிடப் போகிறோம்?’’ என்று பின்னாளில் கூறினார் அமெரிக்காவின் துணை இராணுவ அமைச்சர் லாரன்சஸ் கோத்.
‘‘புனித பூமியை மீட்பது’’ என்ற பெயரில் ஐரோப்பா நடத்திய சிலுவைப்போரில் படை திரட்டப்பட்ட வெறி பிடித்த கிறித்தவர்கள், உண்மையில் யாருக்குப் பயன்பட்டனர்? 
திருச்சபையின் உலகயாத நலன்களுக்கும் இத்தாலிய வியாபாரிகளுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்குமே அவர்கள் பயன்பட்டனர்.

பசுப் பாதுகாவலர்கள் நடத்திவரும் கொலைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள்.
மனலி சக்ரவர்த்தி, (ஜூன், 2017, ரூபே இந்தியா) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

புதன், 26 ஜூலை, 2017

இந்தியாவில் சிறந்த மாநிலம் குஜராத் அல்ல...

பகலைத் தொடர்ந்து இரவு வரும் என்ற முதுமொழிக்கேற்ப காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுக்கும் மாநிலங்களில் அதற்குப் பதிலாக அநேகமாக அதனை பாஜக கைப்பற்றும் என்று பாஜக ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள். 

ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா இதற்கு முற்றிலும் மாறுபட்டு, நிகரற்ற முறையில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய மாநிலமாக விளங்குகிறது.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சிஅதிகாரத்தில் 32 ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அதன் வாக்கு சதவீதம் 50க்கும் மேலாகும். 
காங்கிரஸ் கட்சிக்கு 36 சதவீதம் வாக்குகள் உண்டு. 
இப்போது அதன்மீது பாஜக கண் வைத்திருக்கிறது. 

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய போது, அதன் பாதிப்பு திரிபுராவிற்கும் சென்றது. அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சுதிப் ராய் பர்மன் திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவினார்.

ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற ஆசையில் காங்கிரசிலிருந்து திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவிய பர்மனுக்கு, இப்போது வேறெங்கிருந்தாவது அதைவிடக் கூடுதலாக ஆதாயம் கிடைக்குமெனில் தாவாமல் இருப்பாரா? 

மிகப்பெரிய அளவில் அவருக்கு ஆதாயம் கிடைத்துள்ளது என்கிறசெய்தி அகர்தலா முழுவதும் பரவியிருக்கிறது. 
தற்சமயம் திரிபுரா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு என்று ஓர் உறுப்பினர் கூட கிடையாது. பர்மன் தன்னுடன் உள்ள 5 உறுப்பினர்களுடன் பாஜகவிற்குத் தாவ இருக்கிறார். இதனை அம்மாநில ஆளுநரான தத்தாகடா ராய்வரவேற்றிருக்கிறார். 

அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக ஊழியர்களே கூட முஸ்லிம்களுக்கு எதிராக மேற்படிஆளுநர் கக்கிய வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் பொது இடத்தில் பன்றிக் கறியைச் சாப்பிடத்தொடங்கினால்தான், அவர்கள் நம்முடன் ‘‘முறையாக ஒருங்கிணைவதாக அர்த்தம்’’ என்று தான் நம்புவதாக ஆளுநர் பேசியிருக்கிறார். பன்றியுடன் அவருக்குள்ள சித்திரங்கள்அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கின்றன. 

உதாரணமாக, முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அவர் விரும்பும் தண்டனைஎன்ன தெரியுமா? 
அவர் கூறும் யோசனையைக் கேட்பவர்கள் தங்கள் மூக்கைப் பிடித்துக்கொள்வார்கள்: ‘‘பன்றித்தோலுடன் அவர்களைச் சுற்ற வேண்டும், பன்றிகளின் மலத்துவாரத்தில் அவர்களின் முகம் இருக்கும்படி வைத்து அவர்களைப் புதைக்க வேண்டும்.’

’இத்தகைய இழிவான வசைமாரிக் கூற்றுகளைக் கேட்டு மாநிலத்தில் 7 சதவீதம் அளவிற்கு இருக்கின்ற முஸ்லிம்கள் ஆத்திரம்அடைந்துள்ளார்கள்.

நிகரற்ற மாநிலம்
இப்படி, பாஜகவின் தூதுவர்கள் திரிபுராவில் குழப்பம் விளைவிக்க முயலும் போதிலும்,திரிபுரா இடது முன்னணியின் ஆட்சியை வீழ்த்த முடியாது என்ற நிலைதான் உள்ளது.இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக திரிபுரா விளங்குவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளபோதிலும், ஊடகங்கள் அதனைக் வெளிக்கொணர விரும்பாததால், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இது குறித்து ஒன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். 

மத்திய சட்ட அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், ‘நான் மிகவும்வியந்து பாராட்டும் முதல்வராக மாணிக் சர்க்கார் விளங்குகிறார்’ என்று ஒரு சமயம் கூறியதை அனைவருக்கும் சொல்லியாக வேண்டும்.
லண்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டெண்ட் ஏட்டின் இதழியலாளர் ஆண்ட்ரு பன்கோம்ப்  அகர்தலா சென்றுவிட்டு, புதுதில்லி திரும்பியபின், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மிகவும் வியந்து போற்றிப் புகழ்ந்தார்: 
‘‘ஒழுங்கமைதி, நேர்த்தி, களங்கமற்ற நிர்வாகத்தில் எவ்விதமான அபத்தமும் நிகழாத மாநிலம்’’ என்றார் அவர்,பார்வையாளர்கள் பலரும் பார்த்திருப்பதைப்போல, அவரும் பார்த்திருக்கிறார். ‘‘சில சமயங்களில் முதலமைச்சர் தனது அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார். அவரதுதுணைவியார், ஒரு பள்ளிக்கூட ஆசிரியராகஇருப்பவர், பள்ளிக்கூடத்திற்கு சைக்கிள்ரிக்சாவை வாடகைக்குஅமர்த்திக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.


’’ திரிபுராவின் மனிதவள வளர்ச்சி அட்டவணை குறித்து எவருக்கேனும் தெரியுமா? அம்மாநிலத்தின் மக்கள் தொகை குறைவுதான். 40 லட்சம்தான்.
கோவா மற்றும் சிக்கிம்ஆகியவைதான் நாட்டில் சிறிய மாநிலங்களாகும். எனினும்கூட, திரிபுராவின் எழுத்தறிவு விகிதம் 96 சதவீதம் ஆகும். குஜராத்தில் எழுத்தறிவு எவ்வளவு தெரியுமா? 83 சதவீதம் மட்டுமே.(நான் கேரளாவை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒருசமயம் அது நிகரற்று விளங்கியமாநிலமாகும்.)

தனிமனித ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும். இதிலும் திரிபுரா நாட்டில் வரலாறு படைத்துள்ளது. குஜராத்தில் இது முறையே 64, 66 ஆகும். திரிபுராவில் பழங்குடியினரிடையே பாலினபாகுபாடு என்பது அரிதிலும் அரிதாகும்.
இவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதில்லை

இதற்கெல்லாம் காரணம் என்ன? 
இங்குஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைமையின் மேதைமைதான். மாநிலத்தில் உள்ள முக்கியமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு, தங்கள் அரசியலில் செயல்படுத்துவதைப் போலவே, நல்லாட்சிவழங்குவதிலும் ஒரு கலையாக செயல்படுவதுதான் காரணம். தங்கள் மார்பை விரிவாக்கிக்காட்டுவதற்குப் பதிலாக, ஏதேனும் பிரச்சனை என்றால் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதற்குப் பதிலாக, மாநிலத்திற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, மேலிருந்து கீழ் வரை ஆராய்கிறார்கள்;

அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்கள்; கட்சிஊழியர்களை அழைத்துப் பேசுகிறார்கள்; மாநிலத்தில் இயங்கும் மூன்று அடுக்குபஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஈடுபடுத்துகிறார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சுயாட்சி கவுன்சில்களையும் பங்கேற்கவைக்கிறார்கள், (இவை மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்காகும், மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் இயங்குபவைகளாகும்). இவ்வாறுஅனைவரது உண்மையான பங்களிப்பினையும் உணர வைத்து, செயல்படுத்துகிறார்கள். இதனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இந்த மாநிலத்தில் மிக முக்கியமான பிரச்சனை, பழங்குடியினரையும், பழங்குடியினரல்லாதவர்களையும் மோதவிடும் பிரச்சனையாகும். இங்கே மன்னராட்சி இருந்த சமயத்தில், பழங்குடியினர்தான் அதிகமாக இருந்தார்கள். ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) உருவானபின்னர், அண்டைப் பகுதிகளிலிருந்த இந்து வங்காளிகள் திரிபுராவிற்கு புலம்பெயர்ந்து வந்தார்கள். 

இதன் காரணமாக இங்கிருந்தபழங்குடியினர் (மொத்தம் 19 பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள்), மாநிலத்தில் சிறுபான்மையினராக மாறிவிட்டார்கள்.
இப்போது மாநிலத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் வங்காளிகள், 30 சதவீதத்தினர் பழங்குடியினராவார்கள்.அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ், வங்காளிகளின் வாக்கு வங்கியை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக வங்காளிகள் - பழங்குடியினர் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது. இத்தகைய இழிவான அரசியலில் பாஜக மட்டும்பின்தங்கிவிடுமா என்ன? எங்காவது எண்ணிக்கையில் குறைவு ஏற்படுமானால், ஒரு பழங்குடியினத்தவர், இன்னொரு பழங்குடியினத்தவருக்கு எதிராக பயன்படுத்தப்படுவார். 
இவ்வாறுதான் இந்த மாநிலம் முன்பு இருந்தது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தசரத் தேவ், எதிர்காலம் குறித்து திட்டமிட்டார். பழங்குடியினர் மத்தியில் எழுத்தறிவை ஏற்படுத்துவதற்காக 1945இல் மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை (ஜன சிக்சா அபியான்) தொடங்கினார். 
அன்றைக்கு ஆட்சியிலிருந்த மகாராஜாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து, 500 ஆரம்பப் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றார்.அது இப்போது பல்கிப் பெருகி, மாநிலத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற அளவில் வியாபித்திருக்கிறது.


நிருபன் சக்கரவர்த்தியின் தொலை தூரப்பார்வை

இத்தகைய அடித்தளத்தின் காரணமாகத்தான் பழங்குடியினர் இம்மாநிலத்தில்கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் வங்காளிகள், காங்கிரஸ் பக்கம் சென்றார்கள். காங்கிரஸ்கட்சி தன்னுடைய பிளவுவாத நிலைப்பாட்டில் திருப்தி அடைந்துவிட்டது. 
ஆனால்,நிருபன் சக்ரவர்த்தி போன்ற ஒரு தலைவர்இம்மாநிலத்திலிருந்த சிக்கலான சமூகஎதார்த்தத்தை நன்குணர்ந்தார். 
பழங்குடியினரின் ஆதரவு இல்லையென்றால், வங்காளிகளின் நிகழ்ச்சிநிரலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்லமுடியாது.

அதேபோல், வங்காளிகளின் உதவியில்லாமல் பழங்குடியினர் முன்னேற முடியாது. 
எனவே, பழங்குடியினர்-பழங்குடியினரல்லாதவர் ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே நமது துயரோட்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. 
அது இரு தரப்பினர் மத்தியிலும் ஆழமாக எடுத்துச் செல்லப்பட்டது.1940களிலும், 50களிலும் கம்யூனிசத்தைக் கையில் எடுத்துக் கொண்ட பழங்குடியினர் இந்த முழக்கத்தை உடனடியாகப் பற்றிக்கொண்டுவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வங்காளிகளும் இம்முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.


இவ்வாறு இடதுசாரிகள் தங்கள் ஒற்றுமைக்கான மேடையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய அதேசமயத்தில், காங்கிரஸ் வங்காளிகள் இடையே கவனம் செலுத்துவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. இதன்காரணமாக கொஞ்சம் தேர்தல் ஆதாயம் என்பது அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆயினும் வாக்காளர்கள் மத்தியில், உண்மையில் மக்கள் மத்தியில், இடதுசாரித் தலைவர்கள் அனைவருமே மிகவும் எளிமையுடனும், எவ்விதமான லஞ்ச லாவண்யங்களுக்கும் இடம் கொடுக்காமலும் இருந்ததானது, வாக்காளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கத் தொடங்கியது.
காங்கிரஸ் எம்எல்ஏவான கோபால் ராய் அவர்களே, ‘‘தனிப்பட்டமுறையில் கம்யூனிஸ்ட்டுகள் லஞ்சலாவண்யத்திற்கு இடம் கொடுக்காதவர்கள் என்பதை மறுக்க முடியாது’’ என்று ஒப்புக்கொள்கிறார்.

1978-88இல் முதல் இடது முன்னணியின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி, முதலமைச்சரின் அலுவலக பங்களாவிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் வெளியேறிய போது, இரண்டு டிரங்கு பெட்டிகளில் - தன்னுடைய துணிமணிகள், புத்தகங்கள் மற்றும் ஒரு ஷேவிங் செட்டுடன் வெளியேறினார். முதல்வரின் வீட்டிற்குத் தேவையான மளிகைசாமான்கள் அவருக்கான ரேஷன் அட்டையிலிருந்துதான் பெறப்பட்டன.

நவீன முதலாளித்துவம் அவரை அநேகமாக ஒரு தீண்டத்தகாதவராகவே கருதியிருக்கும். ஏனெனில் அவருக்கென்று ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. 
அவரது சீடரான, இப்போதைய முதலமைச்சரான மாணிக் சர்க்காரும், மிகவும் சிக்கனமானவர்தான். முதலமைச்சர்மத்திய, மாநிலத் திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார் என்பது நம்பமுடியாததாகத்தான் இருந்தது. நான் அவரை,தாகூரின் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அவருடைய மிகவும் எளிமையான அலுவலகத்தில் சந்தித்தபோது, அவர்மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கையை முடித்து வைத்திருந்தார்.

திட்டங்களை அமல்படுத்துவதில் திரிபுராவிற்கு இணையாக வேறெந்த மாநிலத்தையும் சொல்லமுடியாது. கிளினிக்குகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், தாய்-சேய் பாதுகாப்பு இல்லங்கள், மின்சார விநியோகம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் உள்பகுதிகளைக்கூட இணைத்திடும் சாலைகள் அமைத்தல் - என அனைத்தும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 இவை அனைத்தும், மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்திருந்தன.அப்போது மாநிலத்தின் காவல்துறைத் தலைவராக இருந்த கே.நாகராஜ், ‘மாநிலத்தில் குற்றங்கள் நடப்பது என்பது மிகவும் குறைவாகும்’ என்று கூறி வியந்தார்.
பல்லாண்டுகளுக்கு முன்னாள் ஆட்சிக்கெதிராக பிரிவினைவாதிகளின் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்த மாநிலத்தில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டே வெளியே வர பயந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தில், இது ஓர் அதிசயமாகும். 

‘‘காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பரிபூரண ஒருங்கிணைப்பு நிலவுவதே இதற்கு ஒரே காரணமாகும்.’’ பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தூய்மை பாரதம் திட்டத்தில் என்ன கூறுவாரோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்; 

ஆனால், அவர் தன்னுடைய அதிகாரிகள் எவரையாவது திரிபுராவின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு அனுப்பினார் என்றால், இவ்வளவு குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று அவர்கள் ஆச்சரியத்தில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்வார்கள்.
                                                                                                                            
                                                                                                                                                -சயீத் நக்வி
நன்றி-தி டெக்கான் கிரானிக்கிள்
(தமிழில்:ச.வீரமணி)

செவ்வாய், 25 ஜூலை, 2017

தெளிவான பார்வையையும் தாண்டி.......

 தாமஸ் ஆல்வா எடிசனின் கூற்றின் படி, செயல்படுத்தப்படாத காட்சி அனைத்தும் ஒரு மாயே! நாம் பார்த்த பெரும்பாலான நிறுவனர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பார்வை வைத்திருப்பார்கள், ஆனால் அவர்களிடம் அதற்கான செயல்முறையை கேட்டால் அவர்களின் பதில் குழப்பமாகவோ அல்லது வெறுமையாகவோ இருக்கும்.
நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்க அடித்தளமாக இருப்பது ஒரு சிறந்த பார்வையே ஆகும். ஆனால் அந்த பார்வை நடைமுறையில் செயல்படுத்த முடிந்தவையாய் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நான் எத்தனை விநியோக சேவை App-ஐ என் போனில் இறக்கிய பிறகு நீக்கியிருப்பேன் என்ற கணக்கை நான் இழந்துவிட்டேன். ஏன் என்றால் குறிப்பிட்டவாறு சேவைகள் யாவும் எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு செயல் படுத்த முடியாமல் பல ஆரம்ப தொழில் நிறுவனங்கள் திணறுகின்றனர்.

ஒரு நல்ல வியாபார யோசனை, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமையவில்லை என்றால் அது ஒரு நல்ல நிறுவனமாக முடியாது. ஒரு சிறந்த நிறுவனத்தை தோற்றுவிக்க முறையான திட்டம் வேண்டும், குறுகிய அல்லது நீண்டகால நோக்கங்கள் வேண்டும் மற்றும் சீரான இலக்கு வேண்டும்.
வியாபார போட்டியிலிருந்து உங்களை வேறுபடுத்திப் பாருங்கள்
போட்டியிலிருந்து உங்களை வேறுப்படுத்திக்காட்ட, நீங்கள் தனித்து இருக்க வேண்டும். எல்லா ஆரம்ப நிறுவனங்கள் செய்வது போல, மற்ற நிறுவனங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் அனைத்து தளங்களையும் கையில் எடுக்க கூடாது. தொழிலுக்கு ஏற்றவாறு தனி தன்மையுடன் செயல்பட வேண்டும்
தொழில் தொடங்கும் முன் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தொடர்புகள் தேவை என்றாலும், அதைவிட அடிப்படையான மற்ற விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, தொழில் தொடங்கிய பின், சிக்கலான அல்லது ஒரு தனிப்பட்ட பிரிச்சனைக்கு தீர்வு காணாமல், உங்கள் நிறுவனத்திற்கு அச்சகம் போன்ற அடிப்படையான செயலில் ஈடுப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் தொழில் நிறுவுவதில் ஏதோ தவறு செய்துள்ளீர்.
முறையான செயல்பாடு இல்லை என்றால் நீங்கள் செய்யும் விளம்பரம், லோகோ டிசைன், வலைத்தள உள்ளடக்கம் போன்ற அனைத்து செயலும் பலனற்றதே ஆகும்.
இங்கு பட்டப்படிப்பு ஒரு சிறிய விஷயமே
உணவு தொழில்நுட்ப தொழிலில் நீங்கள் நுழையும்பொழுது, உங்கள் நிறுவனத்திற்கான App-ஐ உருவாக்க ஐஐடி அல்லது ஐஐஎம் பட்டதாரிகள் தேவையில்லை. ஒரு வேலை உங்களிடம் அதற்கான முதலீடு இருந்தால் நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது தேவையில்லை, ஏன் என்றால் நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. பட்டப்படிப்பை பார்த்து வேலைக்கு சேர்க்காமல், உண்மையான திறமைக்கு வேலை வழங்கிடுங்கள். அதன் பலனை கண்டு பிரமித்து விடுவீர்கள். அதனால் உங்கள் பார்வையை உண்மையாக்கும் சிறந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துங்கள்.

வேலை கலாச்சாரம் இலவச உணவு மற்றும் இலவச பானங்களை தாண்டிய ஒன்று
சிறந்த, பளபளப்பான அலுவலகம், தூங்கும் வசதி, இலவச உணவு போன்ற வசதிகள் இருந்தும், சில சமயங்களில் முறிந்து போகும் வேலை கலாச்சாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அடக்குமுறையான வேலை நேரம், சிறந்த HR கொள்கையின்மை போன்ற சில நெருக்கடிகளால் பல நிறுவனங்கள் சுக்குநூறாக உடைகின்றனர்.
இது ஒரு வணிகம், மிக எளிமையான ஒன்று. எனவே அதை அவ்வாறு நடத்தவே முயற்சி செய்யுங்கள். வேலை கலாசாரம், வேலை நேரம், ஊழியரை ஊக்குவித்தல், நட்பு கொள்கைகள் போன்ற அடிப்படையான விஷயங்களை சரி பார்த்து, நல்ல ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில் ஏற்படும் சரிவின் மூலம் கற்றலைவிட, தொழில் தொடங்கும் முன் அதை பற்றி நன்கு ஆராயிந்து பிறகு நிறுவுவதே சிறந்த முறையாகும். ஏற்கனவே தொழில் செய்யும் பல தொழில்முனைவர்களிடம் கற்கும் பாடமே ஒரு ஏணியாய் அமையும்.
உங்கள் தயாரிப்பு மற்றும் செயல்பாட்டில் உங்கள் புத்தி கூர்மை பிரதிபலிக்கட்டும். மற்ற நிறுவனங்களிடம் இருந்து மாறுபட்டு தெரிவதற்காக உங்கள் தொழில் அமைப்பை மாற்ற வேண்டாம்.
                                                                                       
                                        நன்றி:yours stories,
========================================================================================

வியாழன், 6 ஜூலை, 2017

வருங்கால குடியரசுத்தலைவர்...?

பாஜக முன் வைத்துள்ள ராம்நாத் கோவிந்த்  குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.  


அதனால் இவரைப்பற்றி நாம் கொஞ்சம்  அறிந்து கொள்வது நல்லது.

ராம்நாத் கோவிந்த்  தலித் என்று கூறப்பட்டாலும்  நம் தமிழ் நாட்டில் உள்ளது போல உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர் அல்ல.


அவர் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.உத்திர பிரதேச  மாநிலத்தில் அவர் இனம் தலித் பட்டியலில் உள்ளது.அதனால் அவர் தலித்தாக அறியப்படுகிறார்.

மற்றபடி நம்ம ஊர் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இல்லாதவர்.

1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71.

2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 

தலித்துகளுக்கெதிராக இருக்கும் சாதியப் பாகுபாடு குறித்து ராம்நாத் கோவிந்தின் நிலைபாடு என்ன? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பீகார் மாநில ஆளுநரும், தலித்தலைவருமான கோவிந்த் பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கப்பட்டதிலிருந்து பலராலும் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுவதாக இருக்கிறது. 

அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட ‘இந்திய தலித்துகளின் சமூகப் பொருளாதார எதிர்காலம்’ என்ற தலைப்பிலான அறிக்கையானது விக்கிலீக்ஸ் அமைப்பினரால் கசிய விடப்பட்டது. தலித் பாகுபாடு குறித்துஅந்த அறிக்கையில் உள்ள பல தகவல்கள்,தலித்துகள் குறித்து கோவிந்த்தின் நிலைபாடைத் தெளிவுபடுத்தியுள்ளன.

சாதிய அடுக்குநிலையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களாக பி.ஆர்.அம்பேத்கர் போன்ற இந்தியத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட முற்றிலுமாக சாதியை ஒழித்தல் என்ற கருத்தை முன்னிறுத்தாமல், சங்பரிவார அமைப்புகளின் நிலைபாட்டையொட்டி ஹிந்து புராணங்களில் கூறியுள்ளபடி அவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைபாடை கோவிந்த் மேற்கொண்டதாக 2005ஆம் ஆண்டுதயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் ஷெட்யூல்ட் சாதி மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக கோவிந்த் அப்போது இருந்து வந்தார். தலித் அறிஞரும் பல்கலைக்கழகமானியக் குழுவின் முன்னாள் தலைவருமான தோரட், தலித் தலைவராக தனியாக அப்போது இயங்கி வந்தவரும் தற்போதுபாஜகவில் இருப்பவருமான உதித் ராஜ் போன்றவர்களின் கருத்துக்களோடு மாறுபட்டவராக கோவிந்த் இயங்கி வந்தார்.

தலித்துகள் மீதுகாட்டப்படும் பாகுபாடுகள் பொதுவாக கிராமப்புறங்களிலேயே காணப்படுவதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தோரத் முன்வைத்த கருத்துகளுக்கு மாறாக, அத்தகைய பாகுபாடுகள் கணிசமான அளவில் குறைந்திருப்பதாகவும், வேலைக்கு அமர்த்தப்படுவது கூட சாதிகளின் அடிப்படையில் இருப்பதில்லை எனவும் கோவிந்த் கூறினார். 


‘ஒரு தலித்தாகவும், பாஜகவின் உத்தரப்பிரதேச எம்பியாகவும் இருக்கும் ராம்நாத் கோவிந்த் தனது கருத்துகளை அமெரிக்க தூதரகத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத அரசியல் அதிகாரியொருவரிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீது காட்டப்படும் சாதியப்பாகுபாடு என்பது வெகுவாகக் குறைந்துள்ளது மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு உண்மையான அக்கறையுடன் உதவுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இத்தகையபாகுபாடு வீடுகளில் இன்னும் காணப்பட்டாலும் கூட, வேலைக்கு அமர்த்துவதற்கான முடிவுகள் இவ்விதமான பாகுபடுகளின்றி நடப்பதாகவும் அவர் தெரித்தார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு

இடஒதுக்கீடு என்பது பகுதியளவிலேயே வெற்றியடைந்திருப்பதாக கருதிய தோரட், தகுதியுள்ள தலித் ஒருவர் இருந்தால்கூட, உயர்சாதி ஹிந்துக்கள் தலித்திற்குப் பதிலாகசாதி ஹிந்து ஒருவரையே பணியில் அமர்த்துவதாகவும், அதன் மூலமாக தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடு பேணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். 

ஆனால்,கோவிந்த் அவரிடமிருந்து மாறுபடுகிறார். 
தலித்துகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் இடஒதுக்கீடு பெரிய அளவில் வெற்றியடைந்திருப்பதாக கோவிந்த் கூறுவதோடு,தலித்துகளின் மீதான பாகுபாடுகளை அகற்றுவதற்கு தொடக்கக்கல்வியே ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

தொடக்கக்கல்வியில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்களே சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு உதவும் என்ற கருத்தை பெரும்பான்மையான தலித் அறிஞர்கள் ஒத்துக் கொள்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துடையவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக சங்பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் கோவிந்த் கூறுவதைப் போன்ற சீர்திருத்தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவும் என்று கருதுகின்றனர். 

இடஒதுக்கீட்டுச் சட்டங்களின் மூலம்ஐந்து சதவீத தலித்துக்களே பயனடைந்திருப்பதாகவும், நிலவுகின்ற சாதி அமைப்பினால், தலித்துகளில் இன்னும் மிகப் பெரும்பாலானோர் ஊதியம் குறைவாக கிடைக்கும் பயிற்சி தேவைப்படாத வேலைகளிலேயே பணிபுரிந்து வருவதாகவும் தோரட் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

ஆனால், உண்மையில் சாதிப் பாகுபாடு ஏற்படுவதற்கு பொருளாதாரமே அடிப்படைக் காரணமாக இருப்பதாகவும், அது சாதி சார்ந்ததாக இருப்பதில்லை என்று கூறும் கோவிந்த், இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும், இத்தகைய பொருளாதாரப் பாகுபாடுகளை சாதிய அமைப்பு நீட்டித்து தொடர்ந்து வைத்துக் கொள்வதாகவும் கூறுகிறார். 


நிலப்பண்ணைமுறை சார்ந்த ஐரோப்பாவில் இருந்த (சிலவகை வேலைகளை குறிப்பிட்டவர்களே செய்யும்) வாணிபம் செய்யும் குழுக்களோடு சாதிய அமைப்பு முறையை கோவிந்த் ஒப்பிடுகின்றார். வாணிபக் குழுக்களில் வேலை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதாகவும், ஆனால் சாதிய அமைப்பில்தங்கள் பிறப்பின் மூலமே ஒருவர் தான் செய்யவேண்டிய வாணிபத்தை பெறுவதாகவும்கோவிந்த் குறிப்பிடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பல ஆண்டு காலமாக சங்பரிவார அமைப்புகள் கூறி வருவதையே கோவிந்தின் வாதங்கள் மிகத்தெளிவாக பிரதிபலிக்கின்றன.

இடஒதுக்கீட்டிற்கு சாதியை விடுத்து பொருளாதாரப் பின்னணியை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம் என்று 2010ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கள் அரசியலில் எதிர்வாதங்களைக் கிளப்புவதாக இருந்ததை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். தோரட்டின் கருத்துக்களோடு ஒத்துப் போன ராஜ், தனியார் துறைகளில் தலித்துகளுக்கெதிரான பாகுபாடு தொடர்வதால், அமெரிக்காவில் இருப்பதைப் போல தனியார்துறைகளிலும் சமவாய்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறினார். 

‘ஹிந்துமதம் சாதிகளை ஏற்றுக் கொள்வதாக இருப்பதால், அமெரிக்காவில் இனப்பாகுபாட்டை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தை விட அதிக அளவிலான காலம் இந்திய அரசாங்கத்திற்கு சாதிப்பாகுபாட்டை ஒழிப்பதற்குத் தேவைப்படுவதாக இருக்கும்’ என்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வருத்தம் தோய்ந்த காரணத்தை கோவிந்த் அந்த அதிகாரியிடம் முன்வைத்தார்.

இந்தியாவில் இத்தகைய சாதிப்பாகுபாடு என்பது இன்னும் 50 முதல்100 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதாகவும் கோவிந்த் கணித்துக் கூறினார். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சங் பிரிய கௌதம் என்பவரை விட மிகவும் மென்மையாக நடந்து கொள்பவராக கோவிந்த் இருந்தார். 

தனியார் துறைகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு சமவாய்ப்புச் சட்டம் என்பது உதவிகரமானதாக இருக்கும்என்று கௌதம் சொன்ன அதேவேளையில்தான் தனது ஒத்திசைந்து போகும் மென்மையான படிமத்திற்கேற்றாற் போல, அத்தகைய சட்டத்தைக் கோருவதிலிருந்து கோவிந்த் ஒதுங்கி நின்றார். ஆனாலும் கட்சியின் மீது கொண்ட பற்றுறுதியை நிரூபிப்பதற்காக பாஜக மட்டும்தான் தலித்துகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என்று ஆவேசத்துடன் அவர் முழங்கிக் கொண்டிருந்தார்.
ராம்நாத் கோவிந்த்                       மீரா குமார்.


தங்களுக்கென்று மேடை, தனி அமைப்புகளை தலித்துகள் பெற வேண்டிய தேவையிருப்பதாகக் கூறிய தோரட், ராஜ் ஆகியோரிடமிருந்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்த கோவிந்த் உயர்சாதியினருக்கான கட்சி என்றதனது பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு தலித்துகளுக்கான உதவிகளைச் செய்வதற்கு பாஜக தயாராக இருக்கிறது என்பதாகக் கூறினார்.

தலித் மற்றும் இதர தாழ்ந்த சாதியினர் மற்ற சாதியினருக்கு நிகராக கொண்டு வரப்படும் வரையிலும் இந்தியாவால் உலகஅளவில் மாபெரும் சக்தியாக மாற முடியாதுஎனவும், தலித்துகளுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்கு பாஜக போன்ற தேசிய கட்சியால் மட்டுமே முடியும் எனவும் தனது வாதத்தை அவர் முன்வைத்தார். 

நாட்டின் மிகப் பெரிய அரசியலமைப்பு பதவிக்கு வேட்பாளராக கோவிந்தை தேர்வு செய்திருக்கும் முடிவை, தலித்துகளை சமூகத்தில் உள்ளடக்கிக் கொள்வதற்காக காவிசக்திகள் முன்வைத்திருக்கும் மிகப் பெரிய முயற்சியாக, பாஜகவும், அதன் கருத்து முன்னோடியுமான ஆர்எஸ்எஸ்சும் முன்னிறுத்துகின்றன.

சமூக நீதி, அதிகாரம் ஆகியவற்றின் மீது கோவிந்த் கொண்டிருக்கும் கருத்துக்கள், அவரைப் போன்ற விசுவாசமுள்ள, அடிபணியும் தலைவர் ஒருவர், சாதிய அமைப்பு குறித்து தனது பாரம்பரியக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாத சங் பரிவாரின் இயற்கையான தேர்வாகவே இருப்பார் என்பதையேநமக்கு காட்டுகின்றன.

காவி சக்திகளுக்கெதிராக தலித் சக்திகளின் எதிர்ப்பு அலை ஓங்கியுள்ள இந்த அரசியல் சூழலில், பாஜக கோவிந்தை ஜனாதிபதி பதவிக்காகத் தேர்வு செய்திருப்பது என்பது அந்தப் பதவியைப் போலஒரு சடங்காகவே இருக்கிறது.

நன்றி : தி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...