bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 22 ஏப்ரல், 2017

போதை அடிமைகளை

போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள்

ஆல்­பர்ட் ஜான்­சன் (27) கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்டு இருந்த போது, அவ­ரது தகப்­ப­னார், யாருமே நினைத்­துக் கூட பார்க்க முடி­யாத காரி­யத்­தைச் செய்­தார். 
சேனா­பதி மாவட்­டத்­தில் உள்ள ஒரு பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய ஆல்­பர்ட் ஜான்­ச­னின் தகப்­ப­னார், அவ­ரது மகனை (ஆல்­பர்ட் ஜான்­சனை) 2011ல் போலீ­சில் பிடித்­துக் கொடுத்­தார். மாணவ பரு­வத்­தி­லேயே ஆல்­பர்ட் ஜான்­சன் போதைக்கு அடி­மை­யா­னார். 
இந்த பழக்­கத்­தில் இருந்து விடு­பட வைக்க செய்த முயற்சி தோற்­றுப் போன பிறகு, வேறு வழி­யில்­லா­மல் போலீ­சார் வசம் ஒப்­ப­டைத்­தார்.
கிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தில் சிகிச்சை பெற்று வரும் ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கை­யில், “தின­சரி வேலை முடிந்து வந்­த­வு­டன் அவர் என்னை அடிப்­பார். எனது போதை பழக்­கம், அவ­ருக்கு கௌரவ குறைச்­ச­லாக இருப்­ப­தாக நினைத்­தார். 
மற்ற தகப்­ப­னார்­களை போலவே, அவ­ரும் சிறை­யில் அடைத்­தால், எனது போதை பழக்­கம் நீங்கி விடும் என்று கரு­தி­னார் என்று நினைவு கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை மருந்­துக்கு அடி­மை­யா­ன­வர்­கள் ஹெச்.ஐ.வி.,நோயால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதே போல் தனது மக­னும் ஹெச்.ஐ.வி., நோயால் பாதிக்­கப்­பட்டு விடு­வான் என்று அவ­ரது தகப்ப­னார் பயந்து போயுள்­ளார்.
ஆல்­பர்ட் ஜான்­சன் தகப்­ப­னார் கரு­தி­யது போல் சிறைச்­சாலை குற்­ற­வா­ளி­களை திருத்­தும் இட­மாக இல்லை. 
ஆல்­பர்ட் ஜான்­சன் சிறை­யில் தீவி­ர­வா­தி­யு­டன் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவர் 2012ல் ஜாமீ­னில் வெளியே வந்த பிறகு, மணிப்­பூ­ரில் உள்ள மிக ஆபத்­தான தீவி­ர­வா­தி­கள் குழு­வில் ஐக்­கி­ய­மா­னார். அந்த தீவி­ர­வாத குழு­வின் பெயர் ‘கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை’ [People’s  Revolutionary Party of Kangleipak- – PREPAK].  இந்த தீவி­ர­வாத குழு­வில் ஆல்­பர்ட் ஜான்­சன் கற்­றுக் கொண்ட முதல் பாடம் மிரட்­டல் கடி­தம் எழு­து­வது. 
“நான் வர்த்­த­கர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு மிரட்டி பணம் கேட்டு கடி­தம் எழு­து­வேன். இதை கூரி­யர் மூலம் அனுப்­பு­வோம். மிரட்­ட­லுக்கு பயந்து பணம் கொடுத்­தால், அதில் 10 சத­வி­கி­தம் எனக்கு கொடுப்­பார்­கள்” என்று கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். இவ்­வாறு கிடைக்­கும் பணத்தை போதை மருந்து வாங்க பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்.
“சிறை­யில் அடைத்­தால் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் திருந்தி விடு­வார்­கள் என்ற பலர் நினைக்­கின்­ற­னர். இது மிக தவ­றான எண்­ணம். 
போதை பழக்­கத்­தில் இருந்து விடு­பட பல பெற்­றோர், அவர்­க­ளது பிள்­ளை­களை சிறை­யில் அடைக்­கின்­ற­னர். இவ்­வாறு சிறை­யில் அடைக்­கப்­ப­டு­ப­வர்­க­ளில் பெரும்­பா­லோரை தீவி­ர­வாத இயக்­கங்­கள் சேர்த்­துக் கொள்­கின்­றன” என்று நோலினி காந்தா கூறு­கின்­றார். 
இவர் கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் என்ற அமைப்பை சேர்ந்­த­வர். தற்­போது மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை தொடர்­பான வழக்­கு­க­ளில் 250 இளை­ஞர்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.
கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை ஆல்­பர்ட் ஜான்­ச­னுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்­தது. ஆனால் அவ­ரது உடல்­நி­லையை கருதி, இதில் இருந்து விலக்கு அளித்­தது. அதற்கு பதி­லாக இம்­பா­லுக்கு அனுப்பி பணக்­கா­ரர்­களை மிரட்டி பணம் பறிக்­க­வும், தீவி­ர­வாத குழு­விற்கு ஆட்­களை சேர்க்­கும் பொறுப்பை அளித்­தது. 
இவரை போலீஸ் 2015ல் கைது செய்து சிறை­யில் அடைத்­தது. நோயா­ளி­யாக உள்­ள­தற்­கா­க­வும், ஹெச்.ஐ.வி தொற்று இருக்­கும் சாத்­தி­யக்­கூறு இருப்­ப­தால், ஜாமீ­னில் வெளியே அனுப்­பி­யது. தனக்கு பரி­சோ­த­னை­யில் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என்­பது தெரிய வந்­தது என்று ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கின்­றார்.
போதை புனர்­வாழ்வு மையத்­தின் கண்­கா­ணிப்­பா­ளர் இரான்­டனா சிங், இவர் மற்­ற­வர்­கள் பயன்­ப­டுத்­திய ஊசியை போதை மருந்து ஏற்­றிக் கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தால், ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­தற்கு அதிக வாய்ப்பு உள்­ளது. 
நாங்­கள் உன்­னிப்­பாக கண்­கா­ணித்து வரு­கின்­றோம் என்று அவர் தெரி­வித்­தார்.
மணிப்­பூர் மாநி­லத்­தில் கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை போன்ற தீவி­ர­வாத குழுக்­கள், ஹெச்.ஐ.வி நோய், போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களை கவ­னித்து, அவர்­களை தங்­கள் இயக்­கத்­தில் சேர்த்­துக் கொள்­கின்­றன.
லாய்ஸ்­ராம் தீபக் (23) போதைக்கு அடி­மை­யா­ன­வர் அல்ல. 
இவ­ருக்கு அவ­ரது பெற்­றோ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்­பட்­டது. 2002ல் தந்­தையை பறி­கொ­டுத்­தார். அதற்கு அடுத்த வரு­டம் தாயா­ரை­யும் பறி­கொ­டுத்­தார். 
அதன் பிறகு தனிமை வாழ்க்கை. மூன்று வரு­டத்­திற்கு முன், மக்­கள் விடு­தலை குழு (People’s Liberation Army)  என்ற தீவி­ர­வாத குழு­வி­டம் இருந்து, இவ­ருக்கு கடி­தம் வந்­தது. அந்த கடி­தத்­திற்கு நான் பதில் எழு­த­வில்லை. அந்த குழு­வைச் சேர்ந்த சிலர், எனது வீட்­டிற்கு வந்­த­னர். அவர்­கள் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ வேண்­டும். 
 அதிக அளவு பண­மும், நல்ல வேலை கொடுப்­ப­தா­க­வும் கூறி­னார்­கள்.
இதனால் சமூகத்தின் புறக்கணிப்பில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்கள். நான் தனிமையில் இருப்பதால், அவர்கள் கூறிய காரணங்கள் எனக்கு பிடித்தது. ஆனால் பாதுகாப்பு படையினர் பிடித்து விடுவார்கள் என்பதால் பயந்தேன்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.
மணிப்பூர் எல்லை பகுதியில் இருக்கும் அண்டை நாடான மியான்மரில் இருந்து மக்கள் விடு­தலை குழு இயங்­கு­கின்­றது. 
இந்த குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் லாய்ஸ்­ராம் தீபக்­கிற்கு சுமார்ட் போன், லேப்­டாப், மோட்­டார் பைக், மாதம் ரூ.25 ஆயி­ரம் சம்­ப­ளம் தரு­வ­தாக ஆசை காட்­டி­யுள்­ள­னர். “அவர்­கள் என்னை அவர்­க­ளது தீவி­ர­வாத குழு­வில் சேர்த்­துக் கொள்ள முயற்சி செய்­த­னர். 
நான் அவர்­க­ளி­டம் இதை முத­லில் நிறுத்­துங்­கள். நான் சேர­மாட்­டேன் என்று கூறி­ய­தற்கு பிறகு, அவர்­கள் எனக்கு போன் செய்­வதை நிறுத்­திக் கொண்­ட­னர்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.
தீபக் பள்­ளி­யில் படித்­துக் கொண்டு இருக்­கும் போது, அவ­ருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்­பது பற்றி கூறப்­பட்­டுள்­ளது. 
அன்­றி­லி­ருந்து கஷ்­ட­கா­லம் ஆரம்­பித்து விட்­டது. “நான் பள்­ளியை விட்டு நின்­று­விட்­டேன். தற்­போது எனது நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் மட்­டுமே என்னை வந்து பார்க்­கின்­றார். நான் எனது இறுதி நாளை எதிர்­பார்த்­துக் கொண்­டுள்­ளேன். ஒரு­வேளை ஒவ்­வொ­ரு­வ­ருமே அந்த நாளுக்­காக காத்­தி­ருக்­க­லாம்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.
மணிப்­பூர் மாநி­லத்­தில் சேனா­பதி, தமி­லாங், சுர்­சான்­பூர், சன்­டால், தொவ்­பால், கிழக்கு இம்­பால், மேற்கு இம்­பால் ஆகிய மாவட்­டங்­க­ளில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட ஏரா­ள­மான ஆண்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.  
கிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 5 ஆயி­ரம் பேர் தீவி­ர­வாத குழுக்­க­ளில் இணைந்­துள்­ள­தாக மதிப்­பிட்­டுள்­ள­னர். இதை விட அதி­க­மா­னோர் சேர்ந்­துள்­ள­தற்கு வாய்ப்பு உள்­ளது.
ஏன் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­வர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­கின்­ற­னர் என்ற கேள்­விக்கு, இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­வ­தற்கு முக்­கிய கார­ணம் பணம் கிடைக்­கும் என்­ப­தால் அல்ல. இவர்­கள் சமு­தா­யத்­தில் இருந்து ஒதுக்­கி­வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். 
மணிப்­பூ­ரில் இவர்­களை மக்­கள் சாப­மாக கரு­து­கின்­ற­னர். 
இதுவே இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் அடைக்­க­லம் ஆவ­தற்கு கார­ணம் என்று மக்­க­ளுக்கு மருத்­துவ வசதி செய்து கொடுக்­கும் தன்­னார்வ தொண்­டர்­கள் கூறு­கின்­ற­னர்.
தொவ்­பால் என்ற நக­ரத்­தைச் சேர்ந்­த­வர் தோபி ஓனாம். இந்த பெண்­ம­ணி­யும் ஹெச்.ஐ.வி தொற்­றுக்கு ஆளா­ன­வர். 
இவர் மருந்து, நல்ல வச­தி­யான வாழ்க்­கை­யால் சமா­ளித்­துக் கொள்­கின்­றார். இவர் இதே நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் உதவி செய்து வரு­கின்­றார்.
பிசான்­பூ­ரைச் சேர்ந்த பிமலா தேவிக்கு (36) 2006ல் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், அவ­ரது கண­வர் வீட்­டில் இருந்து விரட்­டப்­பட்­டார். 
இவ­ரது கண­வர் போதை பழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன­வர். இவ­ரி­டம் இருந்து பிமலா தேவிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்­பட்­டுள்­ளது.
“எனது மாமி­யார் தனது மக­னுக்கு போதை பழக்­கம் இருப்­பதை திரு­ம­ணத்­திற்கு முன்பு மறைத்­து­விட்­டார். எனது கண­வர் 2004ல் இறந்து விட்­டார். 
எனது கண­வர் இறப்­பிற்கு நானே கார­ணம் என்று குற்­றம் சுமத்தி என்னை வீட்­டில் இருந்து விரட்­டி­னர். நான் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தேன். எனக்­கும் நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், ஒரே­ய­டி­யாக வீட்டை விட்டு விரட்டி விட்­ட­னர் என்று கூறும் பிமலா தேவி, தற்­போது பெற்­றோர் வீட்­டில் தங்­கி­யுள்­ளார். இவ­ரது மக­ளு­டன் இவரை முற்­றத்­தில் ஒதுக்கு புற­மான இடத்­தில் தங்க வைத்­த­னர். இவர் கண­வர் வீட்­டாற் மீது வழக்கு தொடர்ந்­தார்.
 சென்ற வரு­டம் இவ­ரது கண­வர் சொத்தை பிமலா தேவிக்கு கொடுக்­கும்­படி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.  
மணிப்­பூர் மாநில அரசு ஹெச்.ஐ.வி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எத்­தனை பேர் என தெரி­விக்க மறுக்­கின்­றது. கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் அமைப்பை சேர்ந்த நோலினி காந்தா, தங்­கள் அமைப்­பி­டம் அரசு பகிர்ந்து கொண்ட தக­வல்­படி 42 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக கூறு­கின்­றார். 
ஆனால் அரசு கூறு­வதை விட பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அதி­கம். ஒரு லட்­சம் பேர் வரை பாதிக்­கப்­பட்டு இருப்­பார்­கள் என்று கூறு­கின்­றார்.
கண­வ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட நய­தோபி ஓனாம், “ திரு­ம­ணத்­திற்கு முன் நோய் தொற்று இருப்­பதை தெரி­விக்­காத கார­ணத்­தி­னால், அவ­ரது மனை­வி­யும் மூன்று அல்­லது நான்கு குழந்­தை­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். 
இதுவே மணிப்­பூர் மாநி­லத்­தின் யதார்த்த நிலை என்று தெரி­வித்­தார்.
மணிப்­பூர் மக்­கள்­நல (சுகா­தார) துறை இயக்­கு­நர் பி.கே.சிங், “ தற்­போது நிலைமை மாறி­யுள்­ளது. பல தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து அரசு பல புனர்­வாழ்வு மையங்­களை அமைத்­துள்­ளது. இவை நன்கு செயல்­ப­டு­கின்­றன. 
முன்பு ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கிரா­மத்­தி­னர் மரத்­தில் கட்டி வைத்­த­னர் என்று தெரி­வித்­தார். தீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட எத்­தனை பேரை, அவர்­க­ளின் இயக்­கத்­தில் சேர்த்­துள்­ளன என்­பது பற்­றிய விப­ரம் தெரி­யாது என்­றும் சிங் தெரி­வித்­தார்.
மணிப்­பூர் குழந்­தை­கள் நல பாது­காப்பு அமைப்­பைச் சேர்ந்த கெய்­சம் பிர­தீப் குமார், “நாங்­கள் பெரிய அள­வி­லான சவாலை எதிர் கொள்ள வேண்­டி­ய­துள்­ளது. 
ஒரு புறம் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முறை­த­வ­றிய செக்ஸ் உறவு வைத்­துக் கொள்­வதை நிறுத்த வேண்­டி­ய­துள்­ளது. மற்­றொரு புறம் அவர்­க­ளின் செக்ஸ் உரி­மை­யை­யும், குழந்­தை­கள் பெற்­றுக் கொள்­ளும் உரி­மை­யை­யும் பாது­காக்க வேண்­டி­ய­துள்­ளது. 
இவை இரண்­டும் ஒன்­றுக் கொண்று முரண்­ப­டு­கி­றது.
கடந்த 30 ஆண்­டு­க­ளில் குழந்­தை­கள் உட்­பட ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட மூன்று தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். இந்த நோயால் பாதிக்­கப்­பட்டு வெளியே தெரி­யா­மல் உள்ள குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் உள்­ள­னர். 
இவர்­கள் தொடர்ந்து புறக்­க­ணிப்­புக்கு ஆளா­வ­து­டன், யாரு­டைய பரா­ம­ரிப்­பும் இன்­றி­யும் உள்­ள­னர். இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது.
இது சமூக நெருக்­க­டியை உண்­டாக்­கு­கி­றது. 
தீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை சேர்த்­துக் கொள்­வ­தால் நிலைமை மோச­மாக மாறி­வ­ரு­கி­றது. இதை தடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இல்­லை­யெ­னில் மீட்க முடி­யாத நெருக்­கடி உண்­டா­கும் என்று” என்று அவர் தெரி­வித்­தார்.

                                                                                                                                                        -  நன்றி:  ரபி பானர்ஜி,
                                                                                                                                                                        தி வீக் வார இத­ழில் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...