bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தகுதி நீக்கம்

"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்."
                                                                                               -இந்திய தேர்தல் ஆணைய சட்டம்&விதிகள் .


தான் வெற்றி பெற கிட்டத்தட்ட அவர்களின் கணக்குப்படியே 90 கோடிகளை மக்களுக்கு கையூட்டாக கொடுத்துள்ளார்.தினகரன்.( உண்மையில் 200கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.)கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

அவரின் அடிமைகளே அவரை மாட்ட வைத்துள்ளனர்.


இதற்காக தேர்தல் ஆணையம் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை நிறுத்திவைப்பது என்பது தவறான முடிவு.தினகரனை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.

அதுதான் இது போல் பணத்தை இறைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற எண்ணும் அரசியல்வியாதிகளுகு சரியான பாடமாக அமையும். 

தேர்தல் ஆணையம் மீது ஒரு பயம் வரும்.

ரா.கி,நகர் தேர்தலில் தினகரன் ஒன்று தான் வெல்ல வேண்டும்.அல்லது தேர்தலையே ஒத்தி வைத்து தான் தப்பிக்க வேண்டும் என்றுதான் இவ்வாளவு பகிரங்கமாக தேர்தல் அலுவலர்கள்,அரசு அதிகாரிகள்,காவல்துறை துணையுடன் பணத்தை அள்ளி வீசுகிறார்.


அவர் போன்ற பணபலத்தால் வெற்றியை பெற எண்ணுபவர்களை தேர்தல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்தால் ஒழிய வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாகஅதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது. 

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தலில்  
தி.மு.க., சார்பில், மருதுகணேஷ்,அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர்.  
 மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.

எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. 

இதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.

இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.
 நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை நிறுத்துவது  என முடிவு செய்யப்பட்டது. 
ஆனால் இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தைத்தான் காட்டுகிறது.
வானளாவ அதிகாரம் வைத்திருக்கும் ஆணையம் தனது விதிகளை மீறி வாக்கு சேகரிப்பவர்களை அந்தத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தடை போட்டு தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.
வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஆணையம் இது போன்ற தகுதி நீக்கம் ஆணையை பிறப்பித்தால்தான் அந்த வேட்பாளருக்கும், கட்சிக்கும்  பணம்கொடுப்பது பற்றி ஒரு பயம் வரும்.
தான் தோற்றுவிடக்கூடாது என்று பணத்தை வாரி இறைக்கும் தினகரன் போன்றோருக்கு இது போன்ற தேர்தல் ஆணைய தேர்தல் நிறுத்தம் ஆணை ஒரு நல்ல வாய்ப்பு.
இப்போது எதற்காக தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்டதோ அதே பணம் வழங்கல் அடுத்த தேர்தலிலும் நடக்கத்தானே செய்யும்.

இதே முறைதவறிய தினகரன் அடுத்து நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு இதே தவறைத்தானே செய்வார்?
எனவே தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அங்குள்ள ஜால்ரா அதிகாரிகள்,காவல்துறையினரை ஒட்டு மொத்தமாக மாற்றும் ஆணையை தயாரித்து விட்டு தேர்தல் நடைமுறையை அறிவித்து அவர்களை உடனே பணியில் சேர வைக்க வேண்டும்.

ராஜேஷ் லக்கானி,சுதீப் ஜெயின்,சந்திப்பு சக்ஷேனா,பிராவின் குமார் என்று ஒரு கடசி ஆதரவு அதிகாரிகளை ஆளுங்கடிசி தரும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்காமல் கண்டிப்பான இ.ஆ.ப, அதிகாரிகள் பட்டியலை தயாரித்து சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கடசிகள் அணைத்திடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.

தன்னிடம் அதிகாரங்களை குவித்து வைத்துள்ள தேர்தல் ஆணையம் தனது சட்ட திட்டங்களை உடைக்கும் தினகரன் போன்ற வாக்குக்கு  பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யாமல்,மேலும் ஒரு தேர்தலில் நிற்க கூடாது என்று தடை விதிக்காமல் இப்படி தேர்தலையே நிறுத்துவது மூட்டை பூச்சியை நசுக்காமல் வீட்டையே கொளுத்துவது போல்.


கையில் உள்ள சொற்ப காசையும் போட்டு தேர்தல் பனி செய்த மற்ற வேட்பாளர்கள் உழைப்பு,பணம் , முழுக்க வீண் தானே.


"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்."

என்பது தேர்தல் ஆணைய விதி.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தஞ்சை,அரவக்குறிச்சி போல் அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டி என்றால் பணம் கொடுத்தவர்கள் அங்கு வென்றது போலத்தானே இங்கும் தினகரன் வெற்றி பெறுவாரா.அதைத்தான் தேர்தல் ஆணையம் விரும்புகிறதா?

எதிர்க்கட்ச்சிகள் கூப்பாட்டுக்குத்தான் இந்த கண்துடைப்பு ஒத்திவைப்பா?

அதோடு தேர்தல் ஆணையத்தின் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க வக்கற்ற கையாலாகாத்தனத்தையும் இந்த தேர்தல் நீக்கம் காட்டிவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...