bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 13 ஜனவரி, 2014

உலக நாயகன் ...!தி ராங்கிங் .காம் இணையத் தளம் சிறந்த  நடிகர்கள் என்ற கணிப்புக்கு வாக்குகளை கோரி உள்ளது.

இன்றைய நிலவரப்படி "உலக நாயகன் கமல்ஹாசன் "

4.37,076 வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.Kamal Hassan

பிறர் விபரம் :

அஜித்குமார் -248491

ரஜினிகாந்த்-85915

விஜய் -57518

சூர்யா -48669

விக்ரம் -39326

பவன் கல்யான்-23317

மகேஷ்பாபு 17770
விஜய் சேதுபதி -16996
தனுஷ்-16707
சிவகார்த்திகெயன்-15469  
       
மாதவன்-11889
மோகன்லால்-9988
ஆர்யா-8298
பிரபாஷ்-7396
அல்லு அர்ஜுன் -6669
நாகர்ஜுன்-6241
சிவகுமார்-5371
ஜூனியர் என்.டி .ஆர்.-4554
ராம்சரண்-4259
சத்தியராஜ்-3482
வெங்கடேஷ்-3239
ராஜ்குமார்-3262
சித்தார்த்-3205
பிரபு தேவா -3181


கர்நாடக நடிகர்களில் இறந்து போன நடிகர் ராஜ்குமாருக்கும் வாக்குகளை அளித்துள்ளனர்.
இப்பட்டியலில் ஒரு வாக்குபெற்ற நடிகர்கள் வரை 292 பேர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தளம் இணைப்பு:http://www.theranking.com/who-is-the-best-tamil-actor_r34571?a=google-sem-india-tamalhassan&gclid=CNT-nazY_LsCFUcG4godagkAIA#_=_
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உழவர் தினம் ...?

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த 18-ம் நூற்றாண்டில், உலகின் வலுவான விவசாயப் பொருளாதாரத்தைஅடிப்படையாகக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. விடுதலை க்குப் பின் இந்திய விவசாயப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
 
1960-ல் இந்திய விவசாயம் கடும் வறட்சியைச் சந்தித்தது.
உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. உணவு உற்பத்தியைப் பெருக்க, 1965-ல் பசுமைப் புரட்சி தொடங்கியது.
ஆனாலும், இந்திய விவசாயிகளின் நிலைமை இன்றும் படுமோசமாகத்தான் உள்ளது.
 
காரணம் பசுமைப் புரட்சியின் போது வயல்களில் அதிகப்படியான சக்தி கொண்ட ரசாயன உரங்களை,பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதால் முதலில் வேளாண்மை அதிகரித்தாலும் நிலங்கள் கெட்டு போனது.அதற்காக இன்னும் அதிக கெடுதலான உரங்களும்,பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மேலும் நிலங்களின் உயிர் சக்தி போய்விட்டது.பயிர்களின் சத்துக்களும் இல்லாமல் பொய் விட்டன.இதை மேலும் கெடுக்க மரபணு மாற்றம் செய்யப்பட பருத்தி போன்ற பயிர்களை அந்நிய நாடுகளில் இருந்து கொண்டு வந்து பயிரிட்டு விவாசாயம் பார்த்ததால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 
“விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது.
விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும்.
இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” .எல்லா வகையிலும் சமத்துவமிக்க சமூகத்தை நோக்கி திருவிழாக்களை நகர்த்துவோம்.
தோழமைகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா நல்வாழ்த்துக்கள்...
பால் பொங்கட்டும்... கால் வீங்கட்டும்...
 , “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன.
இது ஒருபக்கம்.மற்றொரு பக்கம் வேளாண் நிலங்கள் எல்லாம் மனைகளாக விற்பனை  செய்யப்படும் கொடுமை ஒரு பக்கம்.ஆக உழவுக்கும் -தொழிலுக்கும் வந்தனை செய்வோம் போய் உழவர்கள் அரசை நிந்தனை செய்யும் காலம் ஆரம்பமாகி விட்டது.
விவசாயத்துக்கு அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டிய அதிகாரிகள் பயிர் சாகுபடி செய்யும் போது திறக்காமல் தொழிற்சாலைகளுக்கு தேவையானபோது மட்டுமே தண்ணீரை திறக்கும் கொடுமை இப்போது.
உழவர்கள் போராடினால் கண்டு கொள்வதும் இல்லை.வேளாண் பொருட்கள் 
விவசாயிகளிடம் அடிமாட்டு விலையில் வாங்கி அதிக விலைக்கு இடைத்தரகர்கள் விற்பது ஒரு புறம்.விவசாயிகளுக்கு பயன்படும் படி உழவர் சந்தை திறந்தால் அதையும் வியாபாரிகளே ஆக்கிரமித்து விட அடுத்து வரும் அரசுகள் அதை மூடுவதும் திறப்பதுமாக உழவர் வாழ்வே இன்று பெரிய கேள்விக்குறி.
Shabeer Sumaiya Rayhan's photo.
அரசும் கண்டு கொள்வதில்லை.நகர்ப்புறம் வேலை தேடி கிராம விவசாயிகள் இடம்பெயரல் விவசாயக் கூலிகள் கிடைப்பதே அரிது.அம்பானிகளுக்கு வருமான சலுகைகள் ஆனால் உர மானியங்கள் வெட்டு.வழங்கும் உரமும் சீன போலி தயாரிப்பு ,தொழிற்சாலைகளுக்கு மட்டும் பயன்படும்படியான தண்ணிர் திறப்பு.விவசாயம் செய்வதை விட ரியல் எஸ்டேட்டுக்கு விற்பதால் அதிக லாபம். 
இவ்வளவு இருந்தாலும் விவசாயம் செய்து இவ்வுலகின் பசியாற்றும் கொஞ்ச நஞ்சம் உழவர்களுக்கும் இன்று நாம் கண்டிப்பாக  தெரிவிக்க வேண்டும்.
 
காரணம் இன்று உழவர் தினம்.!
 
 
 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...