bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 28 ஜூன், 2013

"மோடி"-"மந்திரம் "?

"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."
ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
 அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
 துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
 ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.
ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான  கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்ணதாசன்---!

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், எழுதியிருக்கிறார். திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி.
இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன், 6. ஏ.எல்.சீனிவாசன், 7. சொர்ணம்பாள், 8. முத்தையா (கண்ணதாசன்), 9. சிவகாமி.
9 குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார். முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தை இல்லாத உறவினர்களுக்கு, குழந்தைகளை சுவீகாரம் செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன் கண்ணப்பனையும், ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசனையும் பங்காளிகளுக்கு சுவீகாரம் செய்த கொடுப்பதற்கு சாத்தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.
அப்போது ஏ.எல்.சீனிவாசன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதார். அதனால், முத்தையா (கண்ணதாசன்), 'அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச் செல்கிறேன்' என்று முன்வந்தார். 
அவர், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்துப்பிள்ளையாகச் சென்றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி 'கம்பன் அடிப்பொடி' சா.கணேசன், கண்ணதாசனுக்கு தாய்மாமன் ஆனார். (தத்து கொடுக்கப்பட்ட கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாசலம். இவர் பிற்காலத்தில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து, பல படங்களுக்கு கதை- வசன ஆசிரியராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.)
கண்ணதாசனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது, அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை நிறுத்தினார். அவர் படிக்கும்போது பள்ளியின் ஆசிரியராக இருந்தவர், 'நீ உருப்படமாட்டாய்' என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார்.
'அவர் சொன்னதின் பலனாகத்தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்' என்று கண்ணதாசன் பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது குறிப்பிடுவார். 1944-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த 'திருமகள்' பத்திரிகை ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின. 1945-ல் 'திரை ஒளி' பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய 'சண்ட மாருதம்' என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். 
'சண்ட மாருதம்' ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் இடம் பெற்றார். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மந்திரிகுமாரி' படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார். கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.
'சண்டமாருதம்' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் பாடல் ஆசிரியர் ஆக முன்னேற முடியாது என்று கண்ணதாசன் கருதினார். எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவை சென்றார். அங்கு ஜுபிடர் நிறுவனம், கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ஷனில் 'கன்னியின் காதலி' என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜுபிடரின் மானேஜராக இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின் பேரில், அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.
'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதிக்கொண்டு போய், டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார், கண்ணதாசன். பாடல் டைரக்டருக்கு பிடித்து விட்டது. அந்தப் பாடலை, கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம் பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலே 'ஹிட்' ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த 'ரத்ன தீபம்' என்ற படத்தை தமிழில் 'டப்' செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர் கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார். 1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் 'தென்றல்' என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். 
 
அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன. 1954-ல் நேஷனல் புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனி, ஆங்கிலப்படம் ஒன்றின் கதையை தழுவி 'அம்மையப்பன்' என்ற படத்தை தயாரித்தது.
சரித்திரப் பின்னணியுடன் இதன் திரைக்கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார். இதே கதையை மாடர்ன் தியேட்டர்சார் 'சுகம் எங்கே' என்ற பெயரில் சமூகப் படமாகத் தயாரித்தார்கள். கே.ஆர். ராமசாமி, சாவித்திரி நடித்த இப்படத்தை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும், ஏ.கே. வேலனும் எழுதினார்கள்.
இரண்டு படங்களின் கதைகளும் ஒரே மாதிரி இருந்ததுடன், சில கட்டங்களில் வசனமும் ஒரே மாதிரி இருந்தது! இதனால் கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் உரசல் ஏற்பட்டது. இருவருடைய கருத்து மோதல்களும், 'முரசொலி'யிலும், 'தென்ற'லிலும் எதிரொலித்தன.


ஐம்பத்தைந்து வயதில் சரித்திரப் புகழை நாட்டி,​​ நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.​
கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா , கண்மணி, சுப்பு உள்ளிட்ட 3 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம் உள்ளிட்ட 3 மகள்களும் உள்ளனர்.கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்.
 இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி.

 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்
சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​
திரைப்பட பாடலாசிரியராகக் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சொந்தமாக படக்கம்பெனி தொடங்கி, படத்தயாரிப்பில் ஈடுபட்டார். சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் பெரும் சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது.
'மாலையிட்ட மங்கை', கண்ணதாசன் தயாரித்த முதல் படம். இது வெற்றிப்படம். பட உலகில் இருந்து விலகி இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு, இப்படம் புதுவாழ்வு அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோரமாவை, திரை உலகில் அறிமுகப்படுத்திய படம் இதுதான். 1959-ல் சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த இந்த படம், தமிழின் முதல் டெக்னிக் கலர் படம்.
வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இப்படம், அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டது.   
அதோடு மோதுகிற விதத்தில், 'சிவகங்கை சீமை' என்ற படத்தை கண்ணதாசன் தயாரித்தார். கட்டபொம்மனுக்கும், சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை சித்தரிப்பவை. 'சிவகங்கை சீமை'யில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, வளையாபதி முத்துகிருஷ்ணன், குமாரி கமலா, எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதை-வசனத்தை கண்ணதாசன் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். இது, கறுப்பு- வெள்ளை படம். படம் தயாரானதும், அதை ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு கண்ணதாசன் போட்டுக்காட்டினார். 
படத்தைப் பார்த்த ஏவி.எம்., 'படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், கட்டபொம்மன் படத்துடன் மோதவேண்டாம். அந்த படம் வெளியாகி, 2 மாதங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்யுங்கள்' என்று யோசனை தெரிவித்தார். இதை கண்ணதாசன் கேட்கவில்லை. கட்டபொம்மனும், சிவகங்கை சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளிவந்தன.
சிவாஜிகணேசனின் அற்புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண்ணைக் கவரும் வண்ணம்- இவற்றால், கட்டபொம்மன் ஓகோ என்று ஓடியது. 
ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக இருந்தும் கட்டபொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்தது. சிவகங்கை சீமையால் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட நஷ்டம் கொஞ்சம்தான்.
ஆனால் அதற்கு அடுத்தபடியாக, சந்திரபாபுவை கதாநாயகனாகப் போட்டு எடுத்த 'கவலை இல்லாத மனிதன்' என்ற படம், அவரை பயங்கர நஷ்டத்திற்கு உள்ளாக்கியது.
இதுபற்றி அவரே தன் சுயசரிதையில் எழுதியிருப்பதாவது:-
'சிவகங்கைச் சீமை'யில் எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம்தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால், வலிமையான விதி என்னை மேலும் மேலும் இழுத்தது. அது என் சிந்தனைகளைக் கெடுத்தது. சிவாஜி நடிக்கவும், பீம்சிங் டைரக்ட் செய்யவும் என்னிடம் ஒப்புக்கொண்டிருந்தும் கூட, நான் அவர்களை வைத்து எடுக்காமல், `கவலை இல்லாத மனிதன்' என்றொரு படத்தை ஆரம்பித்தேன்.
அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. என்னுடைய `பார்ட்னர்' மனம்போன போக்கில் கையெழுத்துப் போட்டுக் கடன் வாங்கினார். அன்று சிவாஜி வாங்கியதை விட அதிக தொகை கொடுத்து சந்திரபாபுவை போட்டேன். 'சிவகங்கை சீமை'யால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும், சந்திரபாபு படுத்திய பாடும் என்னை நிம்மதி இழக்கச் செய்த நிலையில் கதையை ஒழுங்காக எழுதாமல், 'கவலை இல்லாத மனிதன்' படத்தை எடுத்தேன்.
நன்றி இல்லாத ஊழியர்கள், பொறுப்பில்லாத பார்ட்னர், எல்லாருமாகச் சேர்ந்து பணத்தைப் பாழாக்கினார்கள். சந்திரபாபு தன் வழக்கப்படி, பேசிய தொகைக்கு மேல் கேட்டுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். அந்தத் துயரங்களையும், அவமானங்களையும் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய `கிளைமாக்ஸ்' கட்டத்தை, நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தைக் கொலை செய்தோம். முழுமுதற்காரணம் சந்திரபாபு.
தொழிலைப் பொறுப்பாகவும், நாணயமாகவும் செய்யாதவர்கள் ஒரு கட்டத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு தொழிலுக்காக ஏங்குவார்கள்.
 தன் குணத்தாலேயே தன்னைக் கெடுத்துக்கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்.
 தொழிலை மட்டும் பொறுப்பாகச் செய்து வரும் என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஒரு நாள் படத்தின் `ஷூட்டிங்'கிற்கு சந்திரபாபுவை அழைப்பதற்கு அவர் வீட்டிற்குப் போயிருந்தேன். அன்றைக்கு எனக்கேற்பட்ட தலைகுனிவு ஆறாத புண்ணாக இன்றைக்கும் இருக்கிறது.
அன்று காலை ஏழு மணிக்கு 'ஷூட்டிங்.' எடுக்கப்பட வேண்டியதோ 'கிளைமாக்ஸ்' கட்டம். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனா அத்தனை பேரும் `செட்'டிற்கு வந்துவிட்டார்கள். பேசிய தொகைக்கு மேல் இருபதாயிரம் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருந்தும் கூட, சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்பதாலே அதிகாலையில் குளிக்கக்கூட இல்லாமல் நானே அவர் வீட்டிற்குப் போனேன். அவர் தூங்குவதாகச் சொன்னார்கள். நான் வெளியில் சோபாவில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, பையனைக் கூப்பிட்டு, 'சந்திரபாபு எழுந்துவிட்டாரா?' என்று கேட்டேன்.
'அவர் பின்பக்கமாக, அப்பொழுதே போய்விட்டாரே' என்றான் பையன். இந்த அவமானம் மட்டுமல்ல. படம் என்ன ஆகுமோ என்ற பயம், கடன்காரர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்ற கவலை - எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டன. பிறகு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும், அண்ணன் டி.எஸ்.பாலையா அவர்களும் காரை எடுத்துக்கொண்டு, சந்திரபாபுவைத் தேடி அலைந்ததை என்னால் மறக்கமுடியாது. 1960 செப்டம்பர் மாதம் படம் வெளியானபோது என்னை கடன்காரனாக நிறுத்தின.
அன்றைய கணக்குப்படி ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன். பின்நாளில் வட்டி ஏறி, ஏழு லட்சமாகப் பரிணமித்தது. தோல்விகளையும், துயரங்களையும் தாங்கிக் கொள்வதில் எனக்குப் பழக்கம் உண்டு; சிறு வயதில் இருந்தே அந்த அனுபவம் உண்டு. ஆகவே, `கவலை இல்லாத மனிதன்' படத்தின் தோல்வி என்னை விரக்தி அடையச் செய்யவில்லை. ஆனால், அது உருவாக்கிக் கொடுத்த ஆறு லட்ச ரூபாய்க் கடன், அடிக்கடி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது என் கம்பெனியின் பெயரில் பதினோரு கார்கள் இருந்தன. ஏழு `பியட்' கார்கள், இரண்டு `ஹிந்துஸ்தான்' கார்கள், ஒரு `பிளைமவுத்' கார், ஒரு `ஸ்டேஷன் வேகன்' கம்பெனிக்கு எதிரே அந்தக் கார்களை நிறுத்தி வைத்தால் கம்பெனியில் ஏதோ விழா நடப்பது போல் தோன்றும். அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக்கொண்டு, பாக்கி அனைத்தையும் கார் மீது பணம் கொடுத்தவர்களின் வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டேன்.
சில கார்களின் மீது இரண்டாயிரம், மூவாயிரம்தான் பாக்கி இருந்தது என்றாலும், அந்தக் கார்களை விற்று மீதிப்பணத்தைக் கொடுக்கும்படி அவர்களிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டேன். யார் கொடுப்பார்கள்? அப்படி நாணயமானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஏதோ இரண்டொருவர் இரக்கப்பட்டுக் கொஞ்சத் தொகை கொடுத்தார்கள்; மற்ற அனைத்துமே போய்விட்டன. கம்பெனி வீட்டைக் காலி செய்து, இருந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து வீட்டிலே போட்டேன்.
சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய ஆடையணிமணி உபகரணங்களை எல்லாம் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். வேலையாட்களையெல்லாம் நிறுத்திவிட்டேன். படம் எடுப்பதை நிறுத்திவிட்டேன், கம்பெனியை மூடிவிட்டேன் என்றதும், சுமார் முப்பது கடன்காரர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். 
காலையில் ஒரு ஜப்தி, மாலையில் ஒரு ஜப்தி என்று வந்து கொண்டே இருந்தது. அனைத்தையும் நான் சமாளித்தேன்.
மூன்று மாதங்களுக்குள்ளாக 34 வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர் வி.பி.ராமனிடம் போனேன். 'ஒரு வருஷத்துக்குள் பணம் சம்பாதித்து கடனை கட்ட முடியுமா?' என்று கேட்டார் அவர். 'முடியும்' என்றேன். ஒரு பக்கம் கடன் வந்தால், ஒரு பக்கம் வரவு வரவேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி விழுந்தபோது, இந்தப்பக்கம் ஏராளமான படங்களுக்கு சந்தர்ப்பம் வந்தது. நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு, பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று! இவ்வாறு கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
'கவலை இல்லாத மனிதன்' படத்துக்குப்பிறகு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த கே.முருகேசனுடன் கூட்டு சேர்ந்து, 'வானம்பாடி' என்ற படத்தை கண்ணதாசன் எடுத்தார்.   இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. 
கண்ணதாசனுடைய கடனில் ஒரு பகுதியை அடைக்க இப்படம் உதவியது. பின்னர், கோவை செழியனுடன் சேர்ந்து 'சுமை தாங்கி' என்ற படத்தைத் தயாரித்தார்.
 இந்தப்படமும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.
'மொத்தத்தில் அப்போதெல்லாம் ஏராளமாகப் பணம் புரண்டு விளையாடிற்றே தவிர, கையிலே தங்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன். 1962-ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது. அதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் கதை-வசனம் எழுதிய 'இரத்தத் திலகம்' என்ற படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
இப்படத்தில் ஒரு காட்சியில், 'பழைய மாணவர் முத்தையா'வாக கண்ணதாசன் தோன்றி, 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்று பாடுவார். 1964-ல் மீண்டும் சொந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்டார், கண்ணதாசன்! படத்தின் பெயர் 'கறுப்பு பணம்' பாலாஜி, டி.எஸ்.பாலையா, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இப்படத் தில் முக்கிய வேடத்தில் கண்ணதாசனே நடித்தார். 
 
படம் சுமாராகத்தான் ஓடியது. 
'கவலை இல்லாத மனிதன்' அனுபவத்திற்குப் பிறகும் சொந்தப்படம் தயாரித்தது பற்றி கண்ணதாசன் பின்னர் எழுதும்போது, 'ஒரு தவறு செய்துவிட்டு, அது தவறு என்று தெரிந்தபின்னும், மீண்டும் அதே தவறை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 22 ஜூன், 2013

தரமானதுதானா... தனியார் கல்வி?

                                                                                                                                     என்.பகத்சிங்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் துவங்கியுள்ளன.
தாத்தா - பாட்டி முதல் அத்தை - மாமா வரை எல்லோரும் பிள்ளைகள் பெறும் மதிப்பெண் கள் மீதே கவனமாக இருந்து, எதிர்பார்ப்பு களில் வெற்றிகண்டவர்களாகவும், ஏமாந்த வர்களாகவும் இருப்பர்.

 மதிப்பெண்கள் பெறு வதும் மட்டுமே கல்வியின் இறுதி வெற்றியாக கருதும் மனோபாவம் இவர்களுக்கு எங் கிருந்து வந்தது? என்ற கேள்வி நெடு நாளாகவே இருந்து வருகிறது.
 ஒரு மாண வரின் அறிவுத்திறனை எங்கிருந்தோ, யாரோ ஒருவரால் வழங்கப்படும் மதிப்பெண்கள் சரியாகத் தீர்மானிக்குமா? அந்த அளவுகோல் சரியானது தானா?
மதிப்பெண்கள் மட்டுமா : மதிப்பெண் பெற்றுத்தரும் சமூக அங்கீ காரம் மிக முக்கியமாக மாற்றப்பட்டதின் விளைவுதான் மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் இன்றைய மனோநிலை. மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரின் வீடு களில் மதிப்பெண் அதிகமாகவும், குறைவாக வும் பெற்ற மாணவர்களைவிட அவர்தம் குடும் பத்தினர் தேர்வை யுத்தகளமாகவும், மதிப் பெண்ணை வெற்றிச் சின்னமாகவும் கருது கின்ற மனப்பாங்கு கொண்டவர்களாகவே மாறியுள்ளனர்.
 பள்ளியிறுதி தேர்வில் பிள்ளைகள் 1,150க்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் பெற் றோர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகின்றனர். மதிப்பெண்ணுக்குப் பின்னால் ஒரு மாயை யை ஏற்படுத்தி அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நடப்புச் சூழலில் ஒரு மாணவருக்கு பின்னால் இந்த வகுப்பினரின் முழு குடும்பமும் உழைக்கிறது.
அதிக மதிப்பெண் பெறுவதே தரமான கல்வி என்ற முடிவுக்கு வருபவர்களின் இந்த மனோ பாவத்திற்கான ஊற்றுக்கண் இந்தியாவின் கல்விக் கொள்கை, வேலைவாய்ப்புக் கொள் கை, தொழிற்கொள்கை, பொருளாதாரக் கொள் கை ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது. தர மான கல்வி பற்றிய சிந்தனையோட்டத்தை ஊடகங்களும் திறமையாக, கல்வி குறித்த பேட்டிகள், கல்வியாளர்களின் விளக்கம், கல்விமலர், கல்வி கண்காட்சியென உரு வாக்கி நடத்துகின்றன.

தனியார் பள்ளிகள் : ஓசூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, நாமக் கல், பெருந்துறை, ஈரோடு முதலிய பகுதி களில் புற்றீசல்கள் போல தனியார் பள்ளிகள், பள்ளியிறுதித் தேர்வுக்கான மாணவர்களை மட்டுமே தயார் செய்து வருகின்றன.
அதிலும் நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணைகள் நடத்தும் உரிமையாளர்கள், பண்ணைகளை உபதொழிலாக சுருக்கிக் கொண்டு பள்ளிகள் நடத்துவதை முதன்மைத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
 பஸ், லாரி கட்டும் பெரும் முதலாளிமார்களும் இத்தகைய பள்ளிகளில் பாகஸ்தர்களாக சேர்ந்துள்ளனர். நாமக்கல் பகுதியே கல்விச் சேவையில் கல்லாகட்டி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பத் தாம் வகுப்புத் தேர்வு முடிவுதான் இவர்களின் பள்ளி கல்வித் தொழிலுக்கான திறவுகோல். இந்தாண்டு பத்தாம் வகுப்பில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் முன்னு ரிமை. 480க்கு மேல் எடுத்து முதலில் வரும் 100 பேருக்கு கல்விக் கட்டண சலுகை என கவர்ச்சியான விளம்பரங்கள் நாமக்கல் வெளி யிடும் பள்ளிகளில் பிளஸ் 2க்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ. 1,78,000/- (விடுதி கட் டணம், கல்விக் கட்டணம் உட்பட) இரண் டாம் ஆண்டுக்கு ரூ.2,00,000 இந்தத் தொகை யையும் டிடியாகவோ, செக்காகவோ கட்ட முடியாது. பணமாகத்தான் கட்ட வேண்டும்.

இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரத்திற்கும் மேல் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும். விடுதிகளில் தங்கி வேலை செய் பவர்களுக்குத்தான் இங்கு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என பணியமர்த்தப்படுகிறார்கள். காலை 5 மணிக்கு இவர்களின் பணி துவங்கி யோகா, உடற்பயிற்சி, காலை படிப்பு, வழிபாடு, உணவு, வகுப்புகள், உணவு, விளையாட்டு, சலவை, குளியல், சிற்றுண்டி, மாலை படிப்பு, வீட்டுப்பாடம், இரவு உணவு, இரவு படிப்பு என அட்டவணை ஒன்றின்படி இரவு 11 மணி வரை இவர்களின் பணிநீள்கிறது. இவர் களுக்கு விடுப்பு என்பதே கிடையாது. ஞாயிற் றுக்கிழமைகளில் தங்கள் கீழ் உள்ள மாண வர்களைப் பார்க்க வரும் பெற்றோர்களுக்கும், தொலைபேசியில் அழைக்கும் பெற்றோர் களுக்கும் பிள்ளைகளின் கல்வி, நலன் தொடர்பான விசாரணைகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஓய்வு என்பதே கிடையாது.
 மாண வர்களுக்கும் இதேநிலைதான். தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், இரவுபடிப்பு, காலை படிப்பு, வகுப்புகள் என மாணவர்களும், ஆசிரி யர்களும் கசக்கி பிழியப்படுகின்றனர். இத னால்தான் மாநில அளவிலான இடங்களை இந்தப் பள்ளிகளால் பெற முடிகிறது. இந்த மாணவர்கள் மருத்துவம், பொறியியலிலும் அதிக இடங்களை ஆக்கிரமிக்கின்றனர். கலை அறிவியல் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.

ஆங்கில மோகம் : மெக்காலோவின் கல்விக் கொள்கை ஆங்கிலத்தை அறிவுசார் மொழியாகவும், ஆங்கிலேயர்களை அறிவு சான்றவர்களாக வும் அன்றைக்கு முன்னிறுத்தியது. இதனால் மேலை நாட்டுச் சிந்தனை, பொருள் உற்பத்தி நுகர்வு, உணவுமுறை, கண்டுபிடிப்பு, பழக்க வழக்கம், விளையாட்டு, கொண்டாட்டம் என அனைத்தும் உயர்வானதாக நமக்குள் திணிக் கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் வெற்றிக்கான மொழி என ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. ஆங்கில மோகம் மிக வேகமாகப் பரவியதற்கு அது சமூக மதிப்பாக மாறிப் போனது மட்டு மல்ல, கல்வி உலகளாவிய வணிகமானதும் தான் காரணம்.1970களில் தமிழகத்தில் பள்ளிக் கல்விக்குள் தனியாரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. சிறு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும், பள்ளிக் கல்வி யில் முதலீடு செய்வது லாபகரமானது என பள்ளிகளைத் தொடங்கினர். இன்று கார்ப்ப ரேட்டுகளும் இத்தொழிலில் ஈடுபடுகின்ற னர். 2001ல் இப்பள்ளிகளுக்கு தனி இயக்கு நரகம் உருவாக்கிய பிறகு தனியார் பள்ளிக ளின் எண்ணிக்கை 15,657 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு களில் 2000 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டுகளில் 210 மாணவர்களும், 2010 முதல் 2012 வரையிலான இரண்டு ஆண்டு களில் மட்டும் 64 பேரும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இவர்களில் 203 மாணவர்கள் தனியார் பள்ளி களில் பயின்றவர்கள். 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில இடம்பிடித்த 13 பேரில் 12 பேரும், பத்தாம் வகுப்பில் மாநில இடம்பிடித்த 198 பேரில் 179 பேரும் தனியார் பள்ளி மாணவர்கள்.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 92 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர் என்பதி லிருந்தே பள்ளிக் கல்வித்துறையில் தனியார் களின் ஊடுருவலை விளங்க முடியும்.சில ஊடகங்கள் இந்தத் தேர்வு முடிவுக ளை வைத்துக் கொண்டு கல்வி நிறுவன முத லாளிகளுக்குச் செய்யும் சேவை வெகுதுரிதம். உயர்கல்வியில் மருத்துவமும், பொறியியலும் அதி உன்னத கல்வியாக இவர்களால் உரு வகப்படுத்தப்படுகிறது. பள்ளி தேர்வு முடிவு களை ஒட்டி இந்த பணிகளை ஊடகங்கள் துவக்குகின்றன.

மதிப்பெண்களை மட்டும் முதன்மைப்படுத்தி பேசுவதும், கல்வி ஆலோ சகர்கள் என்ற சிலரைக் கொண்டு உரைகள் நிகழ்த்தப் பெறுவதையும், கண்காட்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதையும், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இருக் கும் போட்டிகளை விவரிப்பதும், விண்ணப் பிக்கும்முறை, வேலைவாய்ப்பு முதலியன பற்றி திரும்ப திரும்பச் சொல்வதுமாக மிகப் பெரிய சித்தரிப்புகளைச் செய்கின்றன.


வசதிபடைத்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களாக (கடன் வாங்கி) தங்களை கருதி கொள்கிற பெற்றோர்கள் ஒரு புறம். ஏழை, எளிய மக்களின் பிரதிநிதிகளான பெற் றோர்கள் ஒருபுறமென கல்வி இருவேறு கூறு களாகப் பிரிந்து கிடக்கிறது. முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக செலவு செய்து தங்கள் பிள்ளைகளை பொறியாளர்களாகவும், மருத்து வர்களாகவும் உருவாக்க முயல்கின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிள்ளைகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயின்று அர சுத்துறை பணித்தளங்களான கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, வங்கித்துறை போன்ற துறைகளில் பணிகளில் சேருகின் றனர்.
முதலாம் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் களும், பொறியாளர்களும் தனியார்த்துறை களிலேயே பணிகளில் சேருகின்றனர். ஆக பணியமர்வு தளங்களும் இரு வேறு கூறுக ளாக தனியார் பள்ளிகளால் பிரிக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பொறியாளர்களும், மருத் துவர்களும் பணத்தைக் கொட்டி செயற்கை யாக, ஊதி பெரிதாக்கப்பட்டு மனப்பாட முறை களால் உருவாக்கப்படுவதால் அவர்களின் சிந்தனையோட்டம் இந்திய இயல்பு களுக்குள் பொருந்தாமல் வேறுபட்டு நிற் கிறது.
ஆங்கில மோகம், அன்னியர்களுக்கு சேவை என்ற அடித்தளங்களிலேயே இவர் களின் இத்தகைய பள்ளிக் கல்வி இவர்களை உருவாக்குகிறது.கண்ணுக்குத் தெரியாமல் இவ்வாறு உரு வாக்கப்படும் இருவேறு சமூகம், ஏற்றத் தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கவே வழி வகுக்கும். புதிய சிக்கல்களை உருவெடுக்க வைக்கும். இவற்றினைக் களைவதுதான் உண்மையான கல்வியாளர்களின் நீண்ட பணியாக இருக்கும்.


கட்டுரையாளர் : அகில இந்திய இன்ஷ்யூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------   
முகனூலில்  முத்திரை பதிந்தவை.
----------------------------------------------------
 நன்றி :எதிரொலி

கனவுக்கன்னியும் காகிதப்புலிகளும்!


தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பானிய சர்வதேச கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவியை நாடியிருக்கிறார்.


இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ஜப்பானிய அமைப்பின் அதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்தபோது ஜெயலலிதா தனது கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் "2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு" என்கிற ஜெயலலிதாவின் "கனவு திட்டத்தின்" இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அந்த இரண்டாம் பாகத்தில் ஜெயலலிதா பட்டியலிடப்போகும் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவி தேவை என்று ஜெயலலிதா கோரியதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


http://m.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-seeks-jica-aid-for-infrastructure-projects/article4833407.ece/?maneref=http%3A%2F%2Fm.thehindu.com%2Fnews%2Fnational%2Ftamil-nadu%2F%3Fmaneref%3Dhttp%253A%252F%252Fwww.thehindu.com%252F%253Fmstac%253D0


இந்த செய்திக்குறிப்பில் ஜப்பானிய நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் பல்வேறு உள்கட்டுமான பணிகளும் பட்டியலிடப்பட்டு, இதற்கு ஜப்பானின் நிதி உதவி அளிக்கப்பட்டதற்கு ஜெயலலிதா சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் முக்கியமான உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் எந்த ஆட்சியில் துவக்கப்பட்டவை என்று கூர்ந்து பார்த்தால் அவை ஒன்று திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை அல்லது திமுக ஆட்சியில் வேகப்படுத்தப்பட்டவை என்பது புரிபடும். இந்த பட்டியலில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டாலே தமிழ்நாட்டின் உள்கட்டுமான நிர்மாணிப்பில் திமுக அரசின் பங்களிப்பு என்ன என்பது புரிபடும்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் எப்படி புறக்கணிக்கப்பட்டது என்பதையும், தற்போதைய ஜெயலலிதா அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் எப்படி பின்னுக்குத் தள்ளப்பட்டு, உலகில் வேறு எங்குமே உருப்படாத மோனோரயில் திட்டம் எப்படி பலவந்தமாக சென்னையில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தாலே, திமுக என்கிற கட்சியும், கருணாநிதி என்கிற அதன் தலைவரும் என்ன செய்தார், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எப்படியெல்லாம் பயன்பட்டார் என்பதையும், ஜெயலலிதா என்கிற திரைப்பட நடிகை எப்படி அரசியலையும், ஆட்சியையுமே மிகப்பெரிய கண்காட்சியாக மாற்றி மோசடி செய்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
இப்போது கூட சென்னையின் மிகமுக்கிய உள்கட்டுமான திட்டமான மதுரவாயல்—சென்னை துறைமுக மேம்பால விரைவு சாலைத்திட்டத்தை தனது முட்டாள் தனத்தால் முடக்கிப் போட்டிருப்பவரும் சாட்சாத் ஜெயல்லிதா தான். இந்த லட்சணத்தில் இந்த ஜெயலலிதா புதியதாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட ஜப்பானிய நிதிஉதவி கேட்கிறார் என்றால் எதனால் சிரிப்பது என்று தான் தெரியவில்லை.


அதுவும் இவர் ஜெப்பானிடமிருந்து எதற்காக நிதிஉதவி கேட்கிறார் என்றால், இவர் வெளியிடவிருக்கும் “2023இல் தமிழ்நாடு” என்கிற “கனவு திட்டத்தின்” இரண்டாவது பாகத்தில் இனிமேல் சொல்லவிருக்கும் திட்டங்களுக்கு நிதிதேவை என்று கேட்டாராம்.


ஜெயலலிதாவின் “கனவு” திட்டத்தின் இரண்டாவது பகுதி இனிமேல் தான் வரப்போகிறது என்றால் இவர் ஏற்கெனவே வெளியிட்ட “கனவு” திட்டத்தின் முதல்பகுதியின் நிலை என்ன என்று உங்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பு. அவரது “கனவின்” முதல் பாகத்தை அவர் மிகுந்த விமரிசையாக சென்ற ஆண்டு வெளியிட்டார். வழக்கம்போல இந்திய தமிழக ஊடகங்களெல்லாம் “ஆஹா அம்மா கனவு கண்டுவிட்டார்; தமிழ்நாடு ஓஹோவென முன்னேறப்போகிறது” என்று கொண்டாடி மகிழ்ந்தன.

http://www.ndtv.com/article/tamil-nadu/tamil-nadu-cm-releases-vision-tamil-nadu-2023-document-188860


“அம்மா கனவின்” முதல் பாகம் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகி, அந்த கனவின் எந்த பகுதி நிறைவேறி பொதுமக்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதை “அம்மாவின் அடிமைகள்” யாராவது தயவு செய்து விளக்கிச் சொன்னால் தேவலாம். எதிரொலியின் பார்வைக்கு அம்மா கண்ட கனவின் எந்த பகுதியும் நிதர்சமானதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.


மாறாக இந்த ஒரு ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட மலிவுவிலை இட்லிக்கடைகள் மாநிலமெங்கும் விரிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக இப்போது மலிவு விலை காய்கறிக்கடைகள் திறந்திருக்கிறார். இவையும் மாநிலமெங்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கலாம். இதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா? வீழ்ச்சியின் அறிகுறியா என்பதை சுயமாக சிந்திக்கத் தெரிந்த சுயமரியாதை உள்ள தமிழர்களின் சுயமுடிவுக்கே எதிரொலி விட்டுவிடுகிறது.
மற்றபடி, “அம்மா கனவின்” முதல் பாகத்துக்கே மலிவு விலை இட்லிகடையும், காய்கறிகடையும் திறக்கும் சூழல் உருவாகியிருக்கிறது என்னும்போது, அவர் “கனவின்” இரண்டாவது பாகத்தை வேறு விரைவில் வெளியிடப் போகிறேன் என்கிறார். அப்படி அவர் வெளியிட்டால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் மலிவாக கிடைக்குமோ என்று எதிரொலிக்கு பயமாக இருக்கிறது.


ஆனாலும் என்ன, வெள்ளித்திரையின் இந்த முன்னாள் கனவுக்கன்னியின் ஆட்சியை, வாங்கும் அரசு விளம்பர காசுக்காக புகழ்ந்து தள்ள காகிதப்புலிகளாம் தமிழ்நாட்டு ஊடகங்கள் காத்திருக்கும்வரை, ஜெயலலிதா செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.


நாளுக்கொன்றாக காட்சியை மாற்றினாலே போதும். நேற்றைய காட்சியும் இன்றைய காட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டால்கூட அவருக்கு ஒரு பிரச்சனையும் வராது. காரணம் இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் தான், இந்த முன்னாள் கனவுக்கன்னியின் நாளைய கனவு என்னவாக இருக்கும் என்று பொழிப்புரையை எழுதியே இன்றைக்கு அவரை காப்பாற்றும் காகிதப்புலிகளாயிற்றே! கைவிடமாட்டார்கள். அவர் தொடர்ந்தும் “கனவு” காணலாம்! கரம்பாய்ப் போவது தமிழ்நிலம் தானே?

செவ்வாய், 18 ஜூன், 2013

மோடி குறித்து அத்வானி


                                                                                                                  - ஹரிஷ் தாமோதரன்
குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்துவது நாட்டிற் கும் நல்லதல்ல, பி.ஜே.பிக்கும் நல்லதல்ல. அதே போன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6-ம் நாள் தான், தனது வாழ்க்கை யிலேயே சோகமான நாள் என அத்வானி கூறி யதையும் நான் என்றும் நம்பியதில்லை. அத்வானி ஒரு ‘ஹிந்துத்வா மிதவாதி என்று சொல்வதையும் நான் ஏற்பதில்லை. அது என்ன ‘ஹிந்துத்வா மிதவாதி?


 ‘நல்ல தாலிபான்கள்’ என்று சொல்லி அமெரிக்கர் கள் தங்கள் தேவைக்காக தாலிபான்களின் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி வருகிறார் களே அது போன்றது தான் இந்த மிதவாதி வர் ணனையும். ‘ஹிந்துத்வா என்பது மக்களை பிளவுபடுத்தும் சித்தாந்தம். 
மகாத்மா காந்தி, பண்டித நேரு, பாபா சாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிரதிபலித்த உயர்ந்த கருத்தோட்டங்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத சித்தாந்தம் அது. அத்வானியிடம் நாம் ஒரு விஷயத்தினை மட்டும் சந்தேகிக்க முடியாது. அது கட்சியின் மீது அவருக்கு இருக்கும் விசுவாசம். குப்பை யாய்க் கிடந்ததை பெரும் அமைப்பாக மாற்றி யவர். இதுதான் அவரை 2014 மக்களவைத் தேர்தல்களில் மோடியை பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்துவதை எதிர்க்க வைத்தது. 86 வயதில் அவர் பிரதமராக ஆசைப்படுவதாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. குஜராத் திற்கு வெளியேயுள்ள இந்திய வாக்காளர் களின் நாடித் துடிப்பை அறிந்தவர் என்பதால் தான் அவர் மோடியை எதிர்க்கிறார்.

சரிந்த காவி !: 1999ல் மக்களவைத் தேர்தல்களில் 182 இடங்களைப் பெற்ற பி.ஜே.பி 2004ல் 138, அதைத் தொடர்ந்து 2009ல் 116 எனத் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது. இடங்கள் மட்டு மல்லாது, இதே காலத்தில் தேசிய அளவில் அதனுடைய வாக்கு விகிதங்களும் 23.75 சதவீதத்திலிருந்து 18.88 சதவீதமாகக் குறைந் திருக்கிறது. இந்த செல்வாக்குச் சரிவிற்கு யாராவது ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றம் சாட்டலாம் என்றால் அது மோடியாக மட்டுமே இருக்க முடியும். 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடி யின் ஆட்சியில் நடைபெற்ற அந்தப் படு கொலைகள், முதன் முதலாக தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் வெளிப்படுத் தப்பட்ட முஸ்லிம் மக்களின் கோபம், இவை அனைத்தும் தேர்தல்களில் வெளிப்பட்டன. சிறுபான்மை மக்கள் மத்தியில் அது ஒரு புது விதமான எதிர்ப்பு வடிவத்தினை உருவாக்கி யது. பி.ஜே.பிக்கு வாக்களிப்பது இல்லை என் பதைத் தாண்டி, அக்கட்சியினைத் தோற் கடிக்கும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது என்ற புதிய வாக்களிப்பு உத்தியும் தோன்றியது. 2004 தேர்தல்களில் இது தெளிவாக வெளிப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அது மட்டுமல் லாமல், அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், திரிணாமூல், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தத்தம் மாநிலங்களில் மண்ணைக் கவ்வின. முஸ்லிம்களின் இந்த வாக்களிப்பு உத்தியின் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பயனடைந்தன.
கூட்டாளிகளை இழந்து தனிமையில் ... : 15 முதல் 20 சதவிதம் வரையிலான சிறு பான்மை மக்கள் இவ்விதம் வாக்களிக்கத் தொடங்கி விட்டனர் என்றவுடனேயே, கூட் டாளிகள் பி.ஜே.பியைக் கைகழுவி விட்டனர். சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே பி.ஜே.பியுடன் சேர்ந்து நின்றன. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் கூட, மோடியை பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டது. 2009 தேர்தல்களும் ஏறக்குறைய 2004 முடிவுகளை மீண்டும் உறுதி செய்யும் வகை யில் தான் இருந்தன. இந்தத் தேர்தல்களில் மோடியை விட வருண் காந்தியின் மதவெறிப் பேச்சுக்கள் குறைந்த பட்சம் உத்தரப் பிரதேசத் தில் பி.ஜே.பியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தன.இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பி.ஜே.பி அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வரை தெற்கில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில், அது தூக்கி வீசப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத் தில் இப்போது மூன்றாவது இடத்திற்காக காங் கிரசுடன் போட்டியில் இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு முறி யும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அது பல இடங்களில் தோல்வியைத் தழுவும். 2009 தேர்தல்களில் கூட, பி.ஜே.பி வெற்றி பெற்ற இடங்களில் பாதி எண்ணிக்கை முஸ்லிம்கள் அதிக எண்ணிக் கையில் இல்லாத மேற்கு மற்றும் மத்திய இந்தி யாவில் இருந்து தான் என்பது குறிப்பிடத் தக்கது. விவரங்களை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

குஜராத்துக்கு வெளியே பிஜேபிக்கு சுமை யாக இருப்பவர் மோடிதான். பிஜேபி கட்சிக் குள் இருப்பவர்களில் இந்த உண்மையினை அறிந்த ஒரே நபர் அத்வானிதான். பிஜேபி கட் சிக்கு தனது கூட்டணியின் தளத்தை விரிவு படுத்திட அனைவராலும் பெருமளவில் ஏற் றுக் கொள்ளத்தக்க ஒரு நபரை முன்னிறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அத்தகைய ஒரு நபரை முன் னிறுத்தியதால்தான் தமிழகம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற முடிந்தது. பல தேர்தல் களங்களை சந்தித்த அனுபவத் தின் பின்னணியில்தான் அத்வானி இவ்வாறு கருதுகிறார்.மோடியின் ஆட்சியில் கடந்த பத்தாண்டு களில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, 2002 படுகொலைகள் என்ற பிசாசினை விரட்டி அடித்துவிடுமென பிஜேபியின் தத்து வார்த்த ஆசானான ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதனால்தான் அத்வானியின் அறிவார்ந்த ஆலோசனையை ஏற்காததோடு, அவரை அவமானப்படுத்தியும் உள்ளது. “வளர்ச்சியின் சிற்பி” என்ற மிகைத் தோற்றம் மோடிக்கு இருப்பதன் காரணமாக பிஜேபிக்கு இந் தியா முழுவதும் 175லிருந்து 200 வரையிலான இடங்கள் அக்கட்சிக்கு மட்டுமே கிடைக்கு மென நம்புகிறார்கள். மேலும், கூட்டணியில் முன்பிருந்த கட்சிகள் மீண்டும் பிஜேபியை நோக்கி வருவதற்கான நிர்பந்தத்தை இது ஏற்படுத்தும் எனவும் நம்புகிறார்கள்.
வளர்ச்சி குறித்த மாயை! : குஜராத்தின் வளர்ச்சி குறித்து பேசும் போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மோடி குறித்து சரடு விடுபவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் குஜராத் வளர்ச்சியடைந்தது என்றும் பி.டி. பருத்தியின் வெற்றி குஜராத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மிகைப்படுத்துகின் றனர். ஆனால் ராஜ்கோட் மெசின் டூல்ஸ், டீசல் என்ஜின் தொழில் மற்றும் சூரத், பாவ்நகரி லுள்ள செயற்கை வைரத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி அமுல், அம்பானி, அதானி, நிர்மா, டோரெண்ட், ஜைடஸ் கேடிலா, ஐபிசிஎல், ஜிஎஸ்எப்சி அல்லது ஜிஎன்எப்சி போன்ற தொழிற்சாலைகள், மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பே அம்மாநிலத்தில் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்ப தாக எவரேனும் உரிமை கொண்டாட முடியு மென்றால் அது ஏற்கனவே பின்தங்கிய மாநிலங்களாக உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்களாக மட்டுமே இருக்க முடியும். சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் வெறும் 5 இலட்சம் டன்னாக இருந்த கோதுமை கொள்முதல், அவ ரது ஆட்சிக் காலத்தில் 85 இலட்சம் டன்னாக அதிகரித்தது. அது மட்டுமின்றி மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை யைக் காட்டிலும் கூடுதலாக குவிண்டாலுக்கு நூறு ரூபாயை விவசாயிகளுக்கு அவரது அரசு அளிக்கிறது. இதே போன்று, சத்திஸ்கரில் அரிசி கொள்முதலில் முன்னேற்றத்தை ராமன் சிங் அரசு சாதித்துள்ளது. மேலும் ரேசன் கடைகளே இல்லாதிருந்த அந்த மாநிலத்தில் செயல்படுகின்ற பொது விநி யோக அமைப்பினை அவர் உருவாக்கியுள் ளார்.
குஜராத் ஒன்றும் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் போன்று பின் தங்கிய மாநிலம் அல்ல. குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் படாடோபமான பேச்சு களுக்கு அத்வானி இதனையே எதிர்வாதமாக வைத்தார். இரண்டாவதாக, பழைய கால பாவங்கள் அதைச் செய்தவர்களை பழி தீர்க்காமல் விடுவதில்லை என்பது வரலாறு உணர்த்தும் செய்தி. இதுவும் அத்வானிக்குத் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு இட்டுச் சென்ற அத்வானி யின் 1990 ரத யாத்திரை அவப் பெயரிலிருந்து அவர் இன்னும் மீள முடியவில்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே? அதைத் துடைத்தெறியும் முயற்சியில் அவர் முகமது அலி ஜின்னாவைப் பாராட்டப் போக, ஆர். எஸ்.எஸ் கோபத்தை சம்பாதித்துக் கொண்ட தும் அதன் காரணமாக அதன் கட்டளைக்குப் பணிந்து அவர் பிஜேபி தலைவர் பதவியினை ராஜினாமா செய்ததும் தானே மிச்சம்? வரலாற்றினை மறுபடைப்பு செய்வதே அல்லது அதன் போக்கை மாற்றுவதே மோடியினால் கண்டிப்பாக இயலாது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக பிஜேபிக்கு பாதகமாகவும், மூழ்கும் கப்பலான காங்கிரசுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.


தமிழில் : எம். கிரிஜா நன்றி - பிசினஸ் லைன் 12-06-2013

திங்கள், 17 ஜூன், 2013

நரேந்திரமோடி[குஜராத்] உண்மை நிலை:


இந்தியாவின்  பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை, பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. 

நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா எங்கேயோ போய்விடும் என்று கூ று கின்றனர் .அவரின் நிர்வாகத் திறமை எப்படி உள்ளது?
குஜராத் அவரின் ஆட்சியில் என்ன நிலமையில் உள்ளது.?
கொஞ்சம் பார்ப்போம்!
அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன?
.
- க.ஆனந்தன்

பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

விவசாயிகளுக்கு எதிரானவர்:
தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489 விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 
2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10 மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.
பருத்தி உற்பத்தி
ஆண்டு
உற்பத்தி (ஹெக்டேருக்கு)
2007-08
775 கி.கி
2008-09
650 கி.கி
2009-10
635 கி.கி
2011-12
611 கி.கி
ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு
குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. அன்னிய மூலதனம்:
தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில்  முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)
மகராஷ்ட்ரா
254624
டெல்லி
155722
கர்னாடகா
45021
தமிழ்நாடு
40297
குஜராத்
36913
                       
வைப்பரண்ட் குஜராத்:
ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல்  தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும். முதலீடுகளை அதிகமாக சொல்ல வைத்து, அதற்காக எக்கச்சக்க சலுகைகளைக் கொடுக்கிறது அந்த அரசு. மொத்தத்தில் நமக்கும் பெப்பே, நம் பணத்துக்கும் பெப்பே காட்டுகின்றன அந்த கம்பெனிகள்.
வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)
ஆண்டு
வாக்குறுதி
நிறைவேற்றப்பட்டது
2003
66068
37746
2005
106160
37939
2007
465309
107897
2009
1239562
104590
2011
2083049
29813
தனிநபர் வருமானம்:
குஜராத்தில் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கு ஜி.டி.பி. வளர்ச்சி என்பது மிகவும் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அங்கு தனிநபர் வருமானம் மிகவும் என்று நினைக்கத் தூண்டப்படுகின்றனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் குஜராத் முதல் 5 இடங்களில் கூட கிடையாது. டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இது மக்களின் உண்மையான வருமானத்தை கணக்கிட சரியான அளவில்லை என இடதுசாரிகளின் கருத்து முற்றிலும் உண்மை என்றாலும் முதலாளித்துவக் கணக்குப்படியே கூட குஜராத் கதை வேறாகத்தான் உள்ளது.  
தனிநபர் வருமானம் 2010-11   (ரூபாயில் வருடத்திற்கு)
டெல்லி
108876
மகாராஷ்ட்ரா
62729
கோவா
102844
ஹரியானா
59221
சண்டிகர்
99487
அந்தமான்
54765
பாண்டி
79333
குஜராத்
52708
ஆதாரம்: திட்ட கமிஷன்

தொழிலாளர் ஊதியத்தில் நிலைமை:
தனிநபர் வருமானம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையில் அங்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை ஒரு அளவு கோளாக எடுத்துப் பார்த்தாலும் மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற தினக் கூலிகளை வைத்தே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு தொழிலாளர்கள் ஊதியம் பணி நிலைமைகள் போன்றவற்றிற்கு சங்கம் அமைத்து கோரிக்கை வைப்பது கிட்டதட்ட முடியாது என்பதே நிலைமை. அதற்கு முக்கிய காரணம் பணிகளில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் அங்கு ஆண்டுக் கணக்காக பதலிகளாக தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இந்நிலையில் மிக அதிகமான ஜி.டி.பி. உள்ள மாநிலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாகும். அது நகர்ப்புற தொழிலாளர்கள் கூலி நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம். 
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசீய மாதிரி சர்வேயின் புள்ளி விவரப்படி அங்கு நாளொன்றுக்கு கூலி ரூ.218/- குஜராத்திலோ நகரப்புறத்தில் ஒரு நாள் கூலி வெறும் ரூ.106/- தான். கிராமப்புறத்திலும் ஒரு நாள் கூலி இந்தியாவிலேயே அதிகம் பஞ்சாப்பில் தான். இங்கு ஒரு நாள் கூலி ரூ.152/- குஜராத் நாட்டில் 12 வது இடத்தில் உள்ளது அங்கு ஒரு நாள் கூலி (கிராமப்புறத்தில்) வெறும் ரூ.83/- ஆகும். மிக அதிக ஜி.டி.பி. மிகக் குறைந்த ஒரு நாள் ஊதியம் என்பது சுரண்டலின் அளவைக் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு விகிதம்
தொழில்துறையில் மிகவும் அதிகமான வளர்ச்சி அடைந்தால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமே. ஆனால் வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த வளர்ச்சியும் இன்றி குஜராத் இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள வளர்ச்சி நிலங்களை விவசாயம் செய்யாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் தற்போது நிதி இருந்தாலும் மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இது இட்டு செல்கிறது. வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடங்களை தங்கள் வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால் பத்திரப் பதிவு கட்டணமும் கிடையாது. மோடியின் வர்க்க அரசியல் செயல்படும் விதம் இதுதான். 

குழந்தைகள் ஊட்டச்சத்து  மிக மோசமான மாநிலங்களில் ஒன்று
தொழிலாளர்களின் குறைவான ஊதியம் மற்றும் மிக மோசமான வாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மால்நியுட்ரிஷன் என அழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு தொழிலாளர்களிடமும் அவர்தம் குழந்தைகளிடமும் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள் 2012 புள்ளவிவர மதிப்பீடு என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.  
  1.            இந்த அறிக்கையின் படி குஜராத்தில் 40 முதல் 50 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. இது ஒன்றே குஜராத் வளரச்சி என்ற மாயையை வெடித்து சிதற வைக்க போதுமானது. இவ்வாறான மிகக் குறைவான எடையுள்ள குழந்தைகள் மிக அதிகமாக உள்ள இதர மாநிலங்கள் மேகாலாயா, சட்டீஸ்கர், உ.பி. மற்றும் ஒடிசா. ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கை 2011 குஜராத்தில் கிட்டதட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எடை குறைவான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவான குழந்தைகள் மிகமிகக் குறைவாக உள்ள மாநிலம் மேகாலயா.

2.            இங்கு 19.9 சதவீதம் குழந்தைகள் எடைகுறைவாக உள்ளது. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடைகுறைவாக உள்ள மாநிலங்கள்: ம.பி.(60), ஜார்க்கண்ட்(56) மற்றும் பீகார் (55.9)

3.            40 சதவீதத்திற்கு மேல் 50 சதவீதத்திற்குள் உள்ள மாநிலங்கள்: குஜராத் மேகாலயா சட்டீஸ்கர உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா. (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் -மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தை இறப்பு விகிதம்:
குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் விகிதத்தின் அடிப்படையிலான பட்டியலில் குஜராத் 11-வது இடத்தில் தான் உள்ளது. அதாவது 1,000 குழந்தைகள் பிறப்பிற்கு 44 குழந்தைகள் இறக்கின்றன. கிராமப்புறத்தில் மிகக் குறைவான மருத்துவ வசதிகள் உள்ள நிலையில் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பதனால் இவர்களின் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் மாநில வாரியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதல் குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரண்டில் ஒன்று (ஐம்பது சதவீதம்) ஊட்ட சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டள்ளன.  குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டில் மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது... குஜராத்தில் மூன்றிலொரு தாய்மார்கள் மிக மிக குறைவான ஊட்டசத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது.    
குழந்தை இறப்பு விகிதம் (ஆயிரம் குழந்தைப் பிறப்பிற்கு) 2010
மத்திய பிரதேசம்
62
மேகலயா
55
உத்திரபிரதேசம்
61
சட்டீஸ்கர்
51
அஸ்ஸாம்
58
பீகார்
48
ராஜஸ்தான்
55
ஆந்திரா
46
மகராஷ்ட்ரா
55
ஹரியானா
48
குஜராத்
44
ஆதாரம்: (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் - மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)
 
குழந்தைகள் கல்வி:
ஆர்.எஸ்.எஸ். தனது நாசகார மதவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் கேந்திரமான துறை கல்வித் துறையாகும். இருப்பினும் இங்கும் பாசிச மோடியின் கார்ப்பரேட் கலாச்சாரமே மேலோங்கி உள்ளது. உயர் கல்வியில் அன்னியப் பல்கலைக் கழகங்களோடு பங்குதாரர்களாக செயல்பட வேண்டும் என்று மோடி தனது அரசின் கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார். பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும்  நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (8-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் பயணிப்பதுதான்.
பள்ளிக் கல்வியில் தொடரும் ஆண்டுகள்
1
கேரளா
11.33
10
ஆந்திரா
9.66
2
ஹிமாச்சல் பிரதேசம்
11.05
11
பீகார்
9.58
3
தமிழ்நாடு
10.57
12
அஸ்ஸாம்
9.54
4
உத்தரகாண்ட்
10.23
13
சட்டீஸ்கர்
9.31
5
மகராஷ்ட்ரா
9.86
14
ராஜஸ்தான்
9.19
6
பஞ்சாப்
9.80
15
உத்திரபிரதேசம்
9.19
7
ஜார்கண்ட்
9.68
16
மத்திய பிரதேசம்
8.95
8
ஹரியானா
9.68
17
மே.வங்கம்
8.87
9
கர்னாடகா
9.75
18
குஜராத்
8.79
ஆதாரம் : யு.என்.டி.பி.

வறுமை ஒழிப்பில் ஒடிசாவைவிட பின்தங்கிய மாநிலம்
தேசீய மாதிரி கணக்கெடுப்பு 2004 முதல் 2010 ஆண்டு வரைக்கான காலக் கட்டத்தில் ஒடிசா மாநிலமே 20.2 சதவீதத்துடன் வறுமைக் குறைப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தோ 8.6 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஜி.டி.பி வளரச்சியைக் கொண்டுள்ள மாநிலமாகும். கரிப் கல்யாண் மேளா என்பன போன்று மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக நடைபெற்றன என்றாலும் உண்மையில் வறுமை ஒழிப்பிற்கான கறாரான திட்டமிடல் ஏதுமில்லை. 
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 2004-க்கும் 2010-க்கும் இடையே வீழ்ச்சி (சதவீதத்தில்)
மாநிலம்
சதவீதம்
மாகாராஷ்ட்ரா
13.7
தமிழ்நாடு
12.3
கர்னாடகா
9.7
ராஜஸ்தான்  
9.6
குஜராத்         
8.6
ஆந்திரா
8.5
ஆதாரம்: தேசீய மாதிரி கணக்கெடுப்பு இருப்பிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்:
குஜராத்தில் இருப்பிடம் உணவு துணி ஆகியவற்றின் விலை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் தேவைகளுக்காக செலவுகள் நாட்டிலேயே குஜராத் 8 வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 16.7 வீடுகள் பொது குழாய்களையே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத கிராமம் மிக அதிகமாக உள்ளது. அதே போன்று கிராமப்புறத்தில் 67 சதவீதம் பேர்களும் நகர்ப்புறத்தில் 69 சதவீதம் பேர்களும் பொது இடங்களையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றன. 
மாசுக்கட்டுப்பாடு:
குஜராத்தில் ஒரு தொழில் செய்பவருக்கு அளிக்கப்படும் முழு சுதந்திரமே அவர் நிலம் நீர் காற்று என எதை வேண்டுமானாலும் தான் விரும்புகிறவரை மாசுபடுத்தலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது (புத்தகத்தில் இருந்தாலும் மோடியின் மாநிலத்தில் அவை எள்ளவும் பயன்படுத்தப்பட மாட்டாது). சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் ஆலங் துறைமுகத்தில் பிரான்சு தேசத்தின் விமானந்தாங்கி கப்பல் கிளமன்சு உடைப்பதற்காக வந்ததே ஞாபகம் உள்ளதா? அதனை தடுத்த நிறுத்த சமூக ஆர்வலர்கள்தான் முயன்றார்களே தவிர, கடைசி வரை குஜராத் அரசு அந்தக் கப்பலை உடைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. பொதுவாக நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை அளக்க சி.இ.பி.ஐ (Comprehensive Environmental Pollution Index) பயன்படுத்தப்படுகிறது. இதில் 70 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாகும். இதன் அர்த்தம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அந்த நிலம் தானாக சரிசெய்யும் அளவைத் தாண்டிவிட்டது என்பதாகும். மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி குஜராத்தின் அங்கிலேஷ்வர் மற்றும் வேப்பி பகுதிகள் நாட்டின் மிக அதிகமான மாசுபட்ட 88 நகரங்களில் முதலிடங்களில் உள்ளன. அங்கிலேஷ்வர் பெற்றுள்ள குறியீட்டெண் 88.50. வெப்பி 88.09 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் 88 நகரங்களில் 8 நகரங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதி நீண்ட காலமாக நிலக்கரி சுரங்கங்களால் மிகவும் மாசுபட்ட பகுதியாக அறியப்படும் பகுதியாகும். அந்தப் பகுதி 13 வது இடத்தில்தான் உள்ளது.
 
suran
முடிவுரை:
மோடி முதல்வாரன பிறகு குஜராத்தில் நடைபெறும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிசோதனைகள் இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசிற்கான முன்னோட்டமாகும். இங்கு ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்று தொழில் வளர்ச்சி இருக்கும். ஜி.டி.பி. வளர்ச்சி இருக்கும் ஆனால் மனித வளர்ச்சி குறியீடு மிக மோசமாக இருக்கும். குஜராத்தின் மோசமான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு அதன் சமூகப் பார்வையான மிக ஏழ்மையில் உள்ள தலித் பழங்குடியினர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர்களை உதாசீனப்படுத்தும் போக்கின் நேரடி விளைவாகும். அவர்கள் பயன்படுத்தும் பொது கல்வி, சுகாதாரம் மருத்துவம், வேலைவாய்ப்பு உரிமை, குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றில் அரசு விலகிவருவதனால் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே நாம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், அவர்கள் கொள்கைகளை கவனமுடன் பார்ப்போம். ஏனென்றால், இது நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல் நமது எதிர்காலத்திற்கான முதலீடு.
suran

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...