எஸ். குருமூர்த்தி “மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும்
மார்க்கெட்டும்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். “கிழக்கு” பதிப்பகத் தின்
இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று இவர்
குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும்
வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் “சுதேசி விழிப்புணர்வு இயக்க
நண்பர்கள்” பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ்.
எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர்
என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த
நூலின் முதல்பகுதியில் “லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு
பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்” என்று
உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான
காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது “காரல்
மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே
காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட்
டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல் எழுதி, அதை தமிழிலும் பெயர்த்து வெளியிட
வேண்டும்? முடிந்தது கதை என்று வேறு வேலைக்குப் போயிருக்கலாம் அல்லவா?
முடியவில்லை இவரால். அந்தப் “பழமைச் சின்னமாக” ஆகிப் போனவர் இன்று இவரைப்
புத்தம் புதிய ஆயுதமாய் மிரட்டிக் கொண்டே இருக்கிறார். அத னால் தான் தனது
காட்டத்தையெல்லாம் அந்த மாமேதை மீது காட்டியிருக்கிறார்.மார்க்ஸ் பயனற்றுப்
போனதற்கு மார்க் சிஸ்டுகள் தாம் காரணமாம்!
அடடா! அப்படியென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவரைக் காலமெல்லாம் போற்றி வந்தார்களா? அவரைப் “பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு” என்று புகழ்பாடி வந்தார்களோ? இவர் களது குருஜி கோல்வால்கர் தனது மூன்று எதிரிகளாக வருணித்தது “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” அல் லவா? அவரைக் காலமெல்லாம் தூற்றி வந்தவர்கள் தாம் இப்போதும் தூற்று கிறார்கள் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவார்கள்.
மார்க்ஸ் நல்லவர், மார்க்சிஸ்டுகளே கெட்டவர்கள் - மாமரம் நல்லது, மாங்கனி களே கசப்பானவை - எனும் இந்த அர்த்த மற்ற வாதத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவரால் முடியவில்லை. மார்க்சின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு துரோகம் செய் கிறவர்கள் மெய்யான மார்க்சிஸ்டுகள் அல்ல என்பதால் சட்டென்று மார்க் சையே நேரடியாகத் தாக்கத் துவங்குகிறார்.“காரல் மார்க்சின் பொருள்முதல் வாதச் சித்தாந்தம் முழுவதும் கிறிஸ்தவ அனுபவங்களின் அடிப்படையிலும், அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை யிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்சியச் சிந்த னைக் கட்டமைப்புக்கு கிறிஸ்துவ உல கைத் தவிர்த்து வெளியிலிருந்து குறிப் பிடும்படியான உள்ளீடுகள் ஏதும் கிடை யாது” என்கிறார். மார்க்சியமானது கிறிஸ் துவத்தின் நீட்சியே என்பதாகவும், அத னால் இது முழு உலகத்திற்கும் பொருந் தாது என்பதாகவும் நிலைநிறுத்த மனிதர் துடியாத் துடித்திருக்கிறார்.இந்துத்துவாவாதிகளின் பிறமத வெறுப்பு உலகறிந்ததே. அதை மார்க்சியத் தைக் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தி யிருப்பது தான் இந்த நூலாசிரியரின் தனித்துவம். மார்க்ஸ் வடித்தெடுத்த இயங்கியல் பொருள்முதல்வாதமானது கிறிஸ்துவத்திற்கு மட்டுமல்ல, சகல மதங்களின் ஆத்திகத் தத்துவங்களுக்கும் நேர் எதிரானது. 19ம் நூற்றாண்டிலேயே உலகம் சுருங்கிப் போனது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் உலக ஞானச் சுவடிகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் உள்வாங்குகிற ஒரு தவத்தை மார்க்ஸ் மேற்கொண்டார் என் பதை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். குருமூர்த்தி போல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு அது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.வினோதம் என்னவென்றால், மாமேதை மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிவார், அது பற்றிய சில மதிப்பீடு களைத் தந்திருக்கிறார் என்பதையும் இவரால் மறைக்க முடியவில்லை. ஆனால் “கிறிஸ்துவர்கள் பயன்படுத்திய தகவல்களையே இந்திய நாகரிகத்தை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார்” என்று அங்கும் தனது பிறமத வெறுப்பைக் கக்குகிறார். “குரங்குகளையும், பசுமாடுகளையும் வணங்குவோர்” என்று இந்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டார் என்று மனிதர் பொருமுகிறார். அது உண்மைதானே? இன்றைக்கும் கோமாதா அரசியல் நடத்து கிறவர்கள், இன்றைக்கும் “பஜ்ரங்தள்” என்று அனுமார் சேனை வைத்திருப் பவர்கள் அதற்காகக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.
உண்மையைக் கிறிஸ் தவர் சொன்னால் என்ன, இந்து சொன் னால் என்ன, நாத்திகர் சொன்னால் என்ன, உண்மை உண்மைதானே?ஆனால், மார்க்ஸ் இந்துக்கள் மத்தி யிலிருந்த இந்த விலங்கு வழிபாட்டை மட்டும் சுட்டிக்காட்டியவர் அல்ல. இந்த மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் எப்படிக் கொடூரமாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும் அதே பிரிட்டனில் இருந்து கொண்டு உலக மன சாட்சியாய் முரசறைந்து சொன்னவர். பழைய உலகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒரு புதிய உல கத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றும் வருத்தப்பட்டவர். இங்குள்ள சாதிய கட்டுகள் பற்றிக் கவலைப்பட்டவர். அதை நவீனத் தொழிற்சாலைகளாவது தளர்த்தி விடாதா என்று ஏங்கியவர். அந்த மகத்தான மனிதாபிமானியை கிறிஸ்துவக் குடுவைக்குள் அடைக்கப் பார்க்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின் வேலை எடுபடாது. இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியதை எல்லாம் சேர்த்துவைத்துப் படிக்கிற எவரும் இவரது பித்தலாட்ட வியாக்யானத்தை இடக்கையால் புறந்தள்ளுவார்.“உபரி, லாபம் எனும் கருத்தியலே மார்க்சியப் பொருளாதாரத்தின் அஸ்தி வாரம். மார்க்சின் இந்தக் கருத்தியல் அஸ்திவாரம் அவர் அறிந்திருந்த திடச் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டிராத மிகப் பெரிய அறிவுசார் அமைப்பின் கீழ் புதையுண்டு விட்டது” என்று குருமூர்த்தியார் கொக்கரிக்கிறார்.அரசு வெளியிடும் காகிதப் பணம், அதுபோலத் தனியார்கள் தரும் உண்டி யல்கள் - காசோலைகள், கம்பெனிப் பங்குகள், அவற்றின் மீதான ஊக வணிகம் போன்றவற்றைக் காட்டி, இவை “புரொஃ பெஷனல்கள் எனப்படும் நிபுணர்களால் இயக்கப்படுகிறது” என்பதைச் சுட்டிக் காட்டி, இவற்றில் மார்க்சின் பொருளா தாரக் கோட்பாடு திவாலாகிவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார்.இன்று இவை உலகப் பொருளாதாரத் தில் தீவிர செல்வாக்கை செலுத்துகின் றன என்பது உண்மையே என்றாலும், இவையெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே துவங்கியவை தான். “கிழக்கந்தியக் கம்பெனி” என்று அவர் காலத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் புறப்பட்டு, அவை உலக வர்த்தகத்தை ஆட்டிப் படைக்க முயன்றன. அவற்றின் பங்குகள் ஏற்ற இறக்கமாக எகிறுவதும் நடந்தது. பொருளாதாரத்தில் பண ஊடாட்டத்தின் முக்கியம் பற்றியும் மார்க்ஸ் பேசியிருக்கிறார்.ஆனால், இந்தக் காகிதப் பணங்களும், அவற்றின் மீதான ஊக வணிகங்களும், அவை நிபுணர்களின் துணை கொண்டு நடத்தப்படுவதும், எல்லாம் பொருள் உற்பத்தி எனும் திடச் சொத்து உருவாக் கத்தையே அஸ்திவாரமாகக் கொண்டுள் ளன என்பதையும் அவர் அறிவார். ஒரு சிமிண்ட் கம்பெனியின் பங்கு மதிப்பு ஊக வணிகத்தால் கூடலாம், குறையலாம். ஆனால் அந்தக் கம்பெனி தனது சிமிண்ட் உற்பத்தியைச் சுத்தமாக நிறுத்திவிட்டால் அந்தப் பங்கின் கதி அதோ கதிதான்.
அதன் மீது ஊக
வணிகம் நடக்காது; போட்ட பணத்தில் எவ்வளவு திருப்பி வரும் எனும் கவலையே
மிஞ்சி நிற்கும். இயக்கம்தான் ஊகத்திற்கு வாய்ப்புத் தருகிறது.
உற்பத்திதான் ஊக வணிகத் திற்கு வாய்ப்புத் தருகிறது. பொருள் உற்பத்தி
இல்லையென்றால், திடச் சொத்து உருவாக்கம் இல்லையென்றால் ‘புரோஃபஷனல்களால்
புனையப்பட்ட’ பொருளாதாரம் என்கிறாரே அது இருக் கவே இருக்காது, மணல்
வீடாய்க் கரைந்து போகும். முதலாளிகள் இல்லையென்றால் இந்தப் புரோஃபஷனல்களே
கிடையாது.குருமூர்த்தியோ விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். அதிலும் குரூர
மான முறையில் சொல்கிறார். “பராம்பரிய முதலாளித்துவ முறையில் எவ்வாறு
உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டதோ அதே வகையில் இன்று புதிய வடிவான அறிவுச்
சக்தியினால் இயக்கப்படும் முத லாளித்துவத்தில் புரொஃபஷனல்கள் தான்
முதலாளிகளை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வகை
முதலாளித்துவத்தை மார்க்ஸ் கற் பனை கூடச் செய்து பார்க்கவில்லை” என்கிறார்
மகானுபாவர்.முதலாளிகளிடம் சம்பளம் பெறும் மூளை உழைப்பாளர்களை - அந்த நிபு
ணர்களை - சுரண்டல்காரர்கள் என்றும், மெய்யான சுரண்டலில் ஈடுபடும் முத
லாளிகளை பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் என்றும் சித்தரிக்கும் இந்தக்
குருமூர்த்தி களை மார்க்ஸ் கற்பனை செய்து பார்த் திருக்கமாட்டார் தான்!
வக்கிர புத்தியின் வீச்சு இந்த அளவுக்குப் போகும் என்பது அந்த மகா ஞானியின் கற்பனைக்கும் எட்டாததுதான்.தகவல் தொடர்புத் தொழில் உள்ள நிபுணர்களை கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்களே - அந்த உரிமையோடே அவர்களை வேலைக்கு எடுக்கிறார்களே - இதற்குப் பெயர் “புரோஃபஷனல்களின் சுரண்டலா?” எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிபுணர் என்றாலும் அவரது உழைப்பால் முத லாளிக்கு உபரி மதிப்பு கிடைத்தால் தான் அவரை அதே சம்பளத்திற்கு வைத்துக் கொள்வார்.
இல்லையெனில் சம்பளத்தை வெட்டுவார் அல்லது வெளியே அனுப்பு வார். இதுதான் இப்போதும் நடக்கிறது. இந்த மெய்மை நீடிக்கும் போது மார்க்ஸ் எப்படித் தோற்றுப் போவார்? அவரது கருத்தியல் எப்படிக் காலாவதியாகும்?பொருளுற்பத்தி தான், திடமான சொத்து உருவாக்கம் தான் சகல பொரு ளாதாரச் செயல்பாடுகளுக்கும் அஸ்தி வாரம் என்பதால், அதில் உபரி, லாபம் என்பது கிடைக்கும்போது தான் கார்ப் பரேட் நிறுவனங்கள அதைத் தொடரு கின்றன என்பதும் உண்மை.
லாபம் எனப் படுவது ஏதோ யதேச்சையாகக் கூடுதல் விலை கிடைப்பதால் உருவாவதல்ல. உற்பத்தியில் செலுத்தப்படும் உழைப்புக் கான ஊதியத்தைக் காட்டிலும் அதில் கூடுதல் மதிப்பு உருவாவதால் ஏற்படு வது. வேறு மாதிரியாகச் சொன்னால், கிடைத்த கூடுதல் மதிப்பைக் காட்டிலும் உழைப்பாளிகளுக்கு குறைந்த ஊதியத் தைக் கொடுத்ததால் ஏற்படுவது அது வெறும் புனைவு அல்ல, திடமான மெய்ப் பொருள்.இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கு எவ்வளவுதான் கூடுதல் விலை கிடைத்தாலும் உற்பத்திச் செலவு அதைவிடக் கூடுதலாக இருந்தால் லாபம் கிடைக்குமோ? கிடைக்காது அல்லவா. அதனால் குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்ளவே முயலுகிறார் ஒரு முதலாளி. அந்தப் பொருளுக்கு எதிர்பார்த்த விலையைக் காட்டிலும் கூடுதலான அல்லது குறை வான விலை கிடைப்பது வேறு சில வர்த்த கக் காரணங்களால் நடப்பது. அது அவ ருக்கு இரண்டாம்பட்சம்.
அடிப்படை விஷயம் குறைந்த செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருள். இல்லையென்hறல் உற்பத்தியை நிறுத்திவிடுவார். பல தொழிற் சாலைகள் அவ்வப்போது மூடுவிழா காண்பதற்கான காரணம் இதுதான்.முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை இயங்குநிலை இப்போ தும் தொடரத்தானே செய்கிறது. இப் போதும் மார்க்ஸ் கண்டறிந்து சொன்ன உபரி மதிப்பு எனும் மகத்தான கோட்பாடு செயல்பட்டுக் கொண்டுதானே இருக் கிறது. எங்கே அது புதையுண்டு போனது? பாவம், குருமூர்த்தி யார்! அப்படி அது புதை யுண்டு போக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால், உலகப் பொருளாதார வாழ்வியல் உண்மையோ வேறுமாதிரி யாக உள்ளது.
மார்க்ஸ் மறைந்து ஐம்பது ஆண்டு களில்- 1930களில் - அமெரிக்காவில் “மகாமந்தம்” எனும் பொருளாதார நெருக் கடி வந்தது. அதற்குப் பிறகு முதலாளித் துவ உலகில் பெரிதும் சிறிதுமாக நெருக் கடிகள் அவ்வப்போது வந்து கொண்டே யிருக்கின்றன. இப்போது கூட கிரீஸ், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, நிதி நெருக்கடி, வங்கிகள் மூடல், கடன் சுமை, வெளிநாட்டு வர்த் தகத்தில் குளறுபடி, இதனால் நாடுகளி டையே உரசல்கள், உள்நாட்டு வாழ்வில் வர்க்கங்களிடையே கொடூரமான ஏற்றத் தாழ்வு - இவை இல்லாத முதலாளித்துவ நாடுகள் உண்டா? இதற்கெல்லாம் மூல காரணம் முதலாளித்துவ அமைப்பானது சுரண்டலை அடிப்படையாகக் கொண் டது என்பதே.மார்க்ஸ் எனும் அந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரு முழு மனிதன், மகா தீர்க்க தரிசி. “அவன் சொன்னது சரிதான், சரி தான்” என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அடித்து அடித்துச் சொல்கிறது. அது சங்பரிவாரத்தினரின் காதுகளில் விழ வில்லையென்றால் அவர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள். சரித்திரம் அவர் களைத் தாண்டிச் செல்லும்.
-
அடடா! அப்படியென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவரைக் காலமெல்லாம் போற்றி வந்தார்களா? அவரைப் “பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு” என்று புகழ்பாடி வந்தார்களோ? இவர் களது குருஜி கோல்வால்கர் தனது மூன்று எதிரிகளாக வருணித்தது “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” அல் லவா? அவரைக் காலமெல்லாம் தூற்றி வந்தவர்கள் தாம் இப்போதும் தூற்று கிறார்கள் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவார்கள்.
மார்க்ஸ் நல்லவர், மார்க்சிஸ்டுகளே கெட்டவர்கள் - மாமரம் நல்லது, மாங்கனி களே கசப்பானவை - எனும் இந்த அர்த்த மற்ற வாதத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவரால் முடியவில்லை. மார்க்சின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு துரோகம் செய் கிறவர்கள் மெய்யான மார்க்சிஸ்டுகள் அல்ல என்பதால் சட்டென்று மார்க் சையே நேரடியாகத் தாக்கத் துவங்குகிறார்.“காரல் மார்க்சின் பொருள்முதல் வாதச் சித்தாந்தம் முழுவதும் கிறிஸ்தவ அனுபவங்களின் அடிப்படையிலும், அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை யிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்சியச் சிந்த னைக் கட்டமைப்புக்கு கிறிஸ்துவ உல கைத் தவிர்த்து வெளியிலிருந்து குறிப் பிடும்படியான உள்ளீடுகள் ஏதும் கிடை யாது” என்கிறார். மார்க்சியமானது கிறிஸ் துவத்தின் நீட்சியே என்பதாகவும், அத னால் இது முழு உலகத்திற்கும் பொருந் தாது என்பதாகவும் நிலைநிறுத்த மனிதர் துடியாத் துடித்திருக்கிறார்.இந்துத்துவாவாதிகளின் பிறமத வெறுப்பு உலகறிந்ததே. அதை மார்க்சியத் தைக் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தி யிருப்பது தான் இந்த நூலாசிரியரின் தனித்துவம். மார்க்ஸ் வடித்தெடுத்த இயங்கியல் பொருள்முதல்வாதமானது கிறிஸ்துவத்திற்கு மட்டுமல்ல, சகல மதங்களின் ஆத்திகத் தத்துவங்களுக்கும் நேர் எதிரானது. 19ம் நூற்றாண்டிலேயே உலகம் சுருங்கிப் போனது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் உலக ஞானச் சுவடிகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் உள்வாங்குகிற ஒரு தவத்தை மார்க்ஸ் மேற்கொண்டார் என் பதை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். குருமூர்த்தி போல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு அது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.வினோதம் என்னவென்றால், மாமேதை மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிவார், அது பற்றிய சில மதிப்பீடு களைத் தந்திருக்கிறார் என்பதையும் இவரால் மறைக்க முடியவில்லை. ஆனால் “கிறிஸ்துவர்கள் பயன்படுத்திய தகவல்களையே இந்திய நாகரிகத்தை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார்” என்று அங்கும் தனது பிறமத வெறுப்பைக் கக்குகிறார். “குரங்குகளையும், பசுமாடுகளையும் வணங்குவோர்” என்று இந்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டார் என்று மனிதர் பொருமுகிறார். அது உண்மைதானே? இன்றைக்கும் கோமாதா அரசியல் நடத்து கிறவர்கள், இன்றைக்கும் “பஜ்ரங்தள்” என்று அனுமார் சேனை வைத்திருப் பவர்கள் அதற்காகக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.
உண்மையைக் கிறிஸ் தவர் சொன்னால் என்ன, இந்து சொன் னால் என்ன, நாத்திகர் சொன்னால் என்ன, உண்மை உண்மைதானே?ஆனால், மார்க்ஸ் இந்துக்கள் மத்தி யிலிருந்த இந்த விலங்கு வழிபாட்டை மட்டும் சுட்டிக்காட்டியவர் அல்ல. இந்த மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் எப்படிக் கொடூரமாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும் அதே பிரிட்டனில் இருந்து கொண்டு உலக மன சாட்சியாய் முரசறைந்து சொன்னவர். பழைய உலகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒரு புதிய உல கத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றும் வருத்தப்பட்டவர். இங்குள்ள சாதிய கட்டுகள் பற்றிக் கவலைப்பட்டவர். அதை நவீனத் தொழிற்சாலைகளாவது தளர்த்தி விடாதா என்று ஏங்கியவர். அந்த மகத்தான மனிதாபிமானியை கிறிஸ்துவக் குடுவைக்குள் அடைக்கப் பார்க்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின் வேலை எடுபடாது. இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியதை எல்லாம் சேர்த்துவைத்துப் படிக்கிற எவரும் இவரது பித்தலாட்ட வியாக்யானத்தை இடக்கையால் புறந்தள்ளுவார்.“உபரி, லாபம் எனும் கருத்தியலே மார்க்சியப் பொருளாதாரத்தின் அஸ்தி வாரம். மார்க்சின் இந்தக் கருத்தியல் அஸ்திவாரம் அவர் அறிந்திருந்த திடச் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டிராத மிகப் பெரிய அறிவுசார் அமைப்பின் கீழ் புதையுண்டு விட்டது” என்று குருமூர்த்தியார் கொக்கரிக்கிறார்.அரசு வெளியிடும் காகிதப் பணம், அதுபோலத் தனியார்கள் தரும் உண்டி யல்கள் - காசோலைகள், கம்பெனிப் பங்குகள், அவற்றின் மீதான ஊக வணிகம் போன்றவற்றைக் காட்டி, இவை “புரொஃ பெஷனல்கள் எனப்படும் நிபுணர்களால் இயக்கப்படுகிறது” என்பதைச் சுட்டிக் காட்டி, இவற்றில் மார்க்சின் பொருளா தாரக் கோட்பாடு திவாலாகிவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார்.இன்று இவை உலகப் பொருளாதாரத் தில் தீவிர செல்வாக்கை செலுத்துகின் றன என்பது உண்மையே என்றாலும், இவையெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே துவங்கியவை தான். “கிழக்கந்தியக் கம்பெனி” என்று அவர் காலத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் புறப்பட்டு, அவை உலக வர்த்தகத்தை ஆட்டிப் படைக்க முயன்றன. அவற்றின் பங்குகள் ஏற்ற இறக்கமாக எகிறுவதும் நடந்தது. பொருளாதாரத்தில் பண ஊடாட்டத்தின் முக்கியம் பற்றியும் மார்க்ஸ் பேசியிருக்கிறார்.ஆனால், இந்தக் காகிதப் பணங்களும், அவற்றின் மீதான ஊக வணிகங்களும், அவை நிபுணர்களின் துணை கொண்டு நடத்தப்படுவதும், எல்லாம் பொருள் உற்பத்தி எனும் திடச் சொத்து உருவாக் கத்தையே அஸ்திவாரமாகக் கொண்டுள் ளன என்பதையும் அவர் அறிவார். ஒரு சிமிண்ட் கம்பெனியின் பங்கு மதிப்பு ஊக வணிகத்தால் கூடலாம், குறையலாம். ஆனால் அந்தக் கம்பெனி தனது சிமிண்ட் உற்பத்தியைச் சுத்தமாக நிறுத்திவிட்டால் அந்தப் பங்கின் கதி அதோ கதிதான்.
வக்கிர புத்தியின் வீச்சு இந்த அளவுக்குப் போகும் என்பது அந்த மகா ஞானியின் கற்பனைக்கும் எட்டாததுதான்.தகவல் தொடர்புத் தொழில் உள்ள நிபுணர்களை கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்களே - அந்த உரிமையோடே அவர்களை வேலைக்கு எடுக்கிறார்களே - இதற்குப் பெயர் “புரோஃபஷனல்களின் சுரண்டலா?” எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிபுணர் என்றாலும் அவரது உழைப்பால் முத லாளிக்கு உபரி மதிப்பு கிடைத்தால் தான் அவரை அதே சம்பளத்திற்கு வைத்துக் கொள்வார்.
இல்லையெனில் சம்பளத்தை வெட்டுவார் அல்லது வெளியே அனுப்பு வார். இதுதான் இப்போதும் நடக்கிறது. இந்த மெய்மை நீடிக்கும் போது மார்க்ஸ் எப்படித் தோற்றுப் போவார்? அவரது கருத்தியல் எப்படிக் காலாவதியாகும்?பொருளுற்பத்தி தான், திடமான சொத்து உருவாக்கம் தான் சகல பொரு ளாதாரச் செயல்பாடுகளுக்கும் அஸ்தி வாரம் என்பதால், அதில் உபரி, லாபம் என்பது கிடைக்கும்போது தான் கார்ப் பரேட் நிறுவனங்கள அதைத் தொடரு கின்றன என்பதும் உண்மை.
லாபம் எனப் படுவது ஏதோ யதேச்சையாகக் கூடுதல் விலை கிடைப்பதால் உருவாவதல்ல. உற்பத்தியில் செலுத்தப்படும் உழைப்புக் கான ஊதியத்தைக் காட்டிலும் அதில் கூடுதல் மதிப்பு உருவாவதால் ஏற்படு வது. வேறு மாதிரியாகச் சொன்னால், கிடைத்த கூடுதல் மதிப்பைக் காட்டிலும் உழைப்பாளிகளுக்கு குறைந்த ஊதியத் தைக் கொடுத்ததால் ஏற்படுவது அது வெறும் புனைவு அல்ல, திடமான மெய்ப் பொருள்.இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கு எவ்வளவுதான் கூடுதல் விலை கிடைத்தாலும் உற்பத்திச் செலவு அதைவிடக் கூடுதலாக இருந்தால் லாபம் கிடைக்குமோ? கிடைக்காது அல்லவா. அதனால் குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்ளவே முயலுகிறார் ஒரு முதலாளி. அந்தப் பொருளுக்கு எதிர்பார்த்த விலையைக் காட்டிலும் கூடுதலான அல்லது குறை வான விலை கிடைப்பது வேறு சில வர்த்த கக் காரணங்களால் நடப்பது. அது அவ ருக்கு இரண்டாம்பட்சம்.
அடிப்படை விஷயம் குறைந்த செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருள். இல்லையென்hறல் உற்பத்தியை நிறுத்திவிடுவார். பல தொழிற் சாலைகள் அவ்வப்போது மூடுவிழா காண்பதற்கான காரணம் இதுதான்.முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை இயங்குநிலை இப்போ தும் தொடரத்தானே செய்கிறது. இப் போதும் மார்க்ஸ் கண்டறிந்து சொன்ன உபரி மதிப்பு எனும் மகத்தான கோட்பாடு செயல்பட்டுக் கொண்டுதானே இருக் கிறது. எங்கே அது புதையுண்டு போனது? பாவம், குருமூர்த்தி யார்! அப்படி அது புதை யுண்டு போக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால், உலகப் பொருளாதார வாழ்வியல் உண்மையோ வேறுமாதிரி யாக உள்ளது.
மார்க்ஸ் மறைந்து ஐம்பது ஆண்டு களில்- 1930களில் - அமெரிக்காவில் “மகாமந்தம்” எனும் பொருளாதார நெருக் கடி வந்தது. அதற்குப் பிறகு முதலாளித் துவ உலகில் பெரிதும் சிறிதுமாக நெருக் கடிகள் அவ்வப்போது வந்து கொண்டே யிருக்கின்றன. இப்போது கூட கிரீஸ், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, நிதி நெருக்கடி, வங்கிகள் மூடல், கடன் சுமை, வெளிநாட்டு வர்த் தகத்தில் குளறுபடி, இதனால் நாடுகளி டையே உரசல்கள், உள்நாட்டு வாழ்வில் வர்க்கங்களிடையே கொடூரமான ஏற்றத் தாழ்வு - இவை இல்லாத முதலாளித்துவ நாடுகள் உண்டா? இதற்கெல்லாம் மூல காரணம் முதலாளித்துவ அமைப்பானது சுரண்டலை அடிப்படையாகக் கொண் டது என்பதே.மார்க்ஸ் எனும் அந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரு முழு மனிதன், மகா தீர்க்க தரிசி. “அவன் சொன்னது சரிதான், சரி தான்” என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அடித்து அடித்துச் சொல்கிறது. அது சங்பரிவாரத்தினரின் காதுகளில் விழ வில்லையென்றால் அவர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள். சரித்திரம் அவர் களைத் தாண்டிச் செல்லும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக