bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 6 ஜூன், 2013

முடி வளர்ச்சி........?கூந்தலை மூன்று விதமாக பிரிக்கலாம். அவை வறண்ட கூந்தல், எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல்.

*வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு, எப்போதும் முடி காய்ந்து, வறண்டு போயிருக்கும். இந்த கூந்தலை சீவிமுடிப்பது சிரமமான விஷயம். இவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி, விரல் நுனிகளால், 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல் அழுக்கும், தூசும் நிறைந்திருக்கும். இவர்கள், தினமும் கூந்தலை கழுவி அலச வேண்டும். ஹேர் டானிக்கை தினமும் தேய்க்கலாம்.  தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* சராசரி தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள், கூந்தலில் அதிக கவனம் கொள்ள வேண்டும். தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 10 நாட்களுக்கு ஒருமுறை செம்பருத்தி இலை அல்லது பாசிப்பயிறு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி தலையை அலசவும். இவர்கள் அதிகமாக வெயிலில் நடமாடக் கூடாது.
தலையில் வெயில்படுவது முடிக்கு நல்லதல்ல.
தலையில் வளரும் ஒவ்வொரு முடியும், மூன்று முதல் நான்கு மாதங்கள் நீடிக்கும். பின், அது உதிர்ந்து, வேறு முடி முளைக்கும். இந்த வகையில், நாம், 30 முதல் 50 முடிகளை இழக்கிறோம். ஷாம்பூ போட்டு குளிப்பது, கூந்தலை பாதிக்கும் என்பது தவறான கருத்து. ஷாம்பூ, மண்டையோட்டு பகுதியை சுத்தமாக்கி, இறந்த செல்களை அகற்றும்.
கண்டிஷனர் உபயோகிப்பது, கூந்தலை பளபளப்பாக மென்மையாக வைத்திருக்கத்தானே தவிர, அதற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமில்லை.
பிரசவ காலத்தில் முடி உதிர்வது சகஜமே. பிரசவமான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு இப்படி இருக்கலாம். அது தற்காலிகமானது. உடல் சகஜ நிலைக்கு திரும்பியதும், முடி மீண்டும் வளரும்.
சில வகை மருந்து, மாத்திரைகளுக்கும் முடி உதிர்தலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
உதாரணமாக, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு, முடி உதிர்வு அதிகமிருக்கும்.
உடல் இளைக்க, "டயட்டில்' இருப்பவர்களுக்கு, முடி உதிரலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே, "டயட்டை' கடைப்பிடிப்பது நல்லது.
எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவ வேண்டும். சோப் உபயோகிப்பதை தவிர்த்து, "பேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவலாம். உட்கொள்ளும் உணவில் அதிகம் எண்ணெய் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் பருக்களோ, கட்டிகளோ இருக்கும் போது, பேஷியல் செய்வதை தவிர்க்க வேண்டும். பேஷியல் என்பது முகத்திற்கான மசாஜ். எனவே, பருக்களோ, கட்டிகளோ இருக்கும்போது மசாஜ் செய்தால், அது மேலும் அதிகமாகி, முக அழகையே கெடுத்து விடும்.
வைட்டமின், "ஏ.டி.,' சத்து நிறைந்த உணவுகளை, அதிகம் சாப்பிடுங்கள். மாமிச உணவுகளான, ஈரல், மீன் எண்ணெய், பால், வெண்ணெய் போன்றவற்றில், அவை அதிகம் உள்ளன. அதிகமான மன நெருக்கடி, டென்ஷன் அடைந் தாலும், முடி நரைக்கும். டென்ஷனை குறைப்பது நல்லது. முடிந்த அளவு, "ஹேர்டை' உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.
கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து வந்தால், நரைமுடி மறையும்.
வெந்தயத்தை இரவே ஊறவைத்து, மறுநாள் அரைத்து தலையில் தடவி, ஊறிய பின் குளித்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
நனைந்த முடியை, சின்ன சீப்புக்களால் சீவாதீர்கள். பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்துங்கள். இருபது நாட்களுக்கு ஒரு முறை, முடியின் கீழ் பகுதியை அளவாக கத்தரித்து விட்டால், நுனிப்பகுதி முடி முறிந்து போவதை தடுக்கலாம்.
தலைக்கு, "ஷாம்பு' போடுவதற்கு முன், முடியை நன்றாக பிரஷ் செய்யவும். அப்படிச் செய்தால், தலையில் ரத்த ஓட்டம், அதிகரிக்கும். தலையில் இருக்கும் துகள்களும் போய்விடும்.

* அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளியுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளிக்கலாம். வெறும் தேங்காய்ப் பாலை தலைக்கு தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.
* கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக ஒரு கீறல் போடுங்கள். உள்ளே உள்ள கொழ கொழப்பான சோற்று பகுதியில், கையளவு வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம், இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும்.
அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து, நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊறவிட்டு தலைக்கு தினமும் பூசி வர, முடி நன்றாக வளரும். மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.
* புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்கு பூசி, ஊறவைத்தும் குளிக்கலாம். இதேபோல, செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம்.
செம்பருத்தி பூவை, தேங்காய் எண்ணெயில் ஊற போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...