bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 24 ஜூலை, 2013

ஸ்டெம் செல்


suran


நம் உடலில் உள்ள பாகங்கள் நோய்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படும்போது   உதவுபவை ஸ்டெம் செல்கள்தான்.
புற்றுநோய், மாரடைப்பு, அல்சீமர்ஸ், எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கி, உடல் பாகங்களுக் கான மாற்று பாகங்களை  சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்வது வரையிலான பல அதிச யங்களை நிகழ்த்தி வருகின்றன ஸ்டெம் செல்கள்.  உடலின் எல்லா வகையான உயி ரணுக்களையும், உற்பத்தி செய்யும் திறனுள்ள  கரு ஸ்டெம் செல்கள் களின் ஊற்றான கருக் களை சிதைக்காமல், கருஸ்டெம் செல்களை உற்பத்தி செய்ய முடியாது.
இதனால் கருத விர்த்த உடலின் இதர பகுதிகளில் உள்ள ஸ்டெம்செல்களைக் கொண்டு உடலின் பல்வேறு வகையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதும், தோல் உயிரணுக்கள் உள்ளிட்ட பல உயிரணுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கியபின் அவற்றை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதுமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவாரசிய மாக, தாய்ப்பால் சுரக்கும் மார்பக திசு மற்றும் தாய்ப்பாலில் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற ஸ்டெம்செல்கள் இருக்கின்றன எனும் ஆச்ச ரியமான அறிவியல் உண்மையை கண்டுபிடித் திருக்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் பொடெய்னி ஹசியா டோவ்.
இதுவரை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின்களின் களஞ்சியம் என்று எண்ணப்பட்டு வந்த தாய்ப்பாலில் ஸ்டெம் செல்களும் இருக்கின்றன.என்பதை உறுதி செய்துள்ளது இந்த ஆய்வு. 
கருஸ்டெம் செல்களுக்கு  நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இனி கருக்களை சிதைத்துத்தான் ஸ்டெம் செல்களை எடுக்க வேண்டும் என்ற நடைமுறைச் சிக்கலுக்கு டாட்டா சொல்லி விடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் 70 சதவிகித பெண்களின் தாய்ப்பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஸ்டெம்செல்களில், கரு ஸ்டெம் செல்களில் உள்ள பல மரபணுக்கள்  செயல் படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 
முக்கியமாக, சோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், எலும்பு, நரம்பு, இதயம், மற்றும் கணைய உயிரணுக்களாக வளர்ந்து, பின் அந்தந்த தசைகளாகவும் வளர்ச்சி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் சுவாரசியமாக, சில தாய்ப்பாலில் உள்ள உயிரணுக்களில் சுமார் 30 சதவிகிதம் உயிரணுக்கள் ஸ்டெம் செல்களாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
குரங்குகள் மற்றும் எலிகளின் மீதான ஆய்வுகளில், இத்தகைய தாய்ப்பால் ஸ்டெம் செல்கள் ரத்தத்தில் சென்று கலப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சரி, இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல் களால் என்ன பயன் ?  
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், குழந்தை களின் உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்கிறார் ஆய்வாளர் ஹாசியா டோவ்.
தாய்ப்பால் ஸ்டெம்செல்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம் அவற்றிலிருந்து உருவாகும் பல்வேறு வகையான உயிரணுக் கள், ஸ்டெம்செல் சிகிச்சைகளுக்கு தகுதியானவை என்பது முதலில் நீருபிக்கப்பட வேண்டும்.
 அதன் பிறகு, தாய்ப்பால் ஸ்டெம்செல்களைக் கொண்டு, சிதைந்துபோன இதய தசைகளை மீண்டும் வளர்த்தெடுப்பது, நரம்புச் சிதைவு நோய்களுள் ஒன்றான அல்சீமர்ஸ் போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான வளர்ச்சி திறனுள்ள ஸ்டெம் செல்கள் என்றால் அவை விந்தகம் மற்றும் சூலகம் ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கும் என்றே எண்ணப்பட்டு வந்தது ஆனால் தற்போது, அத்தகைய ஸ்டெம்செல்கள் தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசு, எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடலின் இதர பகுதிகளிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக, இதுவரை குழந்தைகளின் வளர்ச் சிக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தாய்ப்பால், இனி உயிர்காக்கும் பல ஸ்டெம்செல் சிகிச்சை களுக்கும், பயன்படப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய் தரும் "பயோக்லிட்டசோன்'
-----------------------------------------------------------
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், குறைந்த செலவில் கிடைத்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, கட்டுப்படுத்தி வந்தன

"பயோக்லிட்டசோன்' (Pioglitazone) வகை மாத்திரைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நடுத்தர வயது மற்றும் வயோதிகர்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய்க்கு, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின், நூற்றுக்கணக்கான மாத்திரைகள், சந்தையில் உள்ளன. இவற்றில், "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள், மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தன.
suran
 இந்நிலையில், "இவ்வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதால், நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகிறது' என, சில மருத்துவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, சந்தையில் விற்கப்பட்டு வந்த, 30க்கும் மேற்பட்ட, "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள் விற்பனைக்கு, மத்திய அரசு, கடந்த மாதம், 18ம் தேதி, தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் உள்ளிட்டோருக்கு, கடந்த வாரம், "நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

 நீரிழிவு நோய்க்கு, சந்தையில், நூற்றுக்கணக்கான மாத்திரைகள் உள்ளன. தற்போது, தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை மாத்திரையை, உட்கொண்டு வந்த நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைப்படி, மாற்று வகை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், "குறைந்த செலவில் கிடைத்து வந்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தன' என்ற கருத்தும், மருத்துவர்கள் மத்தியில் நிலவுகிறது.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதால், இம்மாத்திரைகள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
suran
இம்மாத்திரையின் தன்மை குறித்து, பல மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையான நீரிழிவு நோயாளிகளின் பயன்பாட்டில் இம்மாத்திரை உள்ளதால், இது குறித்து வாய் திறக்கவும், சில டாக்டர்கள் தயங்குகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இம்மாத்திரை குறித்து, முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

நோய்க்கான மருந்து, மாத்திரைகளும், பலகட்ட பரிசோதனைகளுக்கு பின் தான், விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த, "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளால், நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்
வருவதாக கூறி, இதன் விற்பனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கணக்கில் இம்மாத்திரைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகள் மத்தியில், புற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்க்கரை நோய் 
உள்ளவர்கள் கவனிக்கவும்:
 கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியாக  பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு விடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

செவ்வாய், 23 ஜூலை, 2013

கறுப்பு ஜுலை

'நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்"

ஆனால் மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.
 
குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.
 
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 29 ஆவது நிறைவு ஆண்டு.

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது.
வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

பழிக்கு பழி : -

பலர் பலியில் முடிந்தது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

தூண்டப்பட்ட உணர்வுகள்

இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.
suran
இக்கலவரத்தின் காரணமாக பலர் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர்

ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.
இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

சிறையிலும் தாக்குதல்

suran
நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.
பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.
இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் 
இன்றும் கருதப்படுகிறது.
--

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ச [தி] வால்கள்.

ஆட்டோ மொபைல் தொழில் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருந்து வந்த மிச்சிகனின் மாகாணத்தின் டெட்ராய்ட் என்ற தொழில் நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மிச்சிகன் மாகாண ஆளுநர் சார்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா, இந்த மனு சட்டவிரோதமானது, இது ஓய்வூதியதாரர்களை மிரட்டும் நடவடிக்கையாகும்.

 எனவே திவாலனதாக அறிவிக்கக் கோரும் மனுவை மாகாண அரசு திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழில் நகரமாக மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரம் விளங்கி வந்தது.
suran

உலக அளவில் ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கி வந்த இந்த நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வசித்த 2 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த நகரத்தை விட்டு வெளியேறி மாற்று இடங்களை தேடிச்சென்று விட்டனர். தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். அரசின் பொதுச்சேவைகள் முற்றிலும் செயலிழந்து இருக்கிறது.
 நகரத்தில் இருந்து 78 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
 கடந்த பத்தாண்டுகளாகவே இந்த நகரம் மிகப்பெரிய பொருளதார நெருக்கடியில் சிக்கி சரிவை சந்தித்து வந்தது. இதனை மீட்பதற்காக அமெரிக்கா அரசு பல்வேறு மீட்புத் திட்டங்களை அறிவித்து நிதி உதவி வழங்கி வந்தது. இருந்து போதிலும், அந்நகரம் முழுமையாக மீளவில்லை.
இதனால் தற்போது டெட்ராய்ட் நகரத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைக்கூட பாதுகாக்க முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது. அந்நகரம் சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனில் மூழ்கியிருக்கிறது. இதில் ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மட்டும் 900 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த நெருக்கடியின் காரணமாக நகர நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.இந்நிலையில் கடன்காரர்களுக்கு கடனை திருப்பித் தரும் நடவடிக்கை நகரத்தின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. பின்னர் கடன் திருப்பிச் செலுத்தவேண்டியவர்களை அழைத்து அவசாரகால மேலாளர் கெவியன் ஓர் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் ஒரு டாலருக்கு 10 சென்ட் என்ற அடிப்படையில் மட்டுமே தற்போதைய நிலவரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியும். இதனை அரசு நிர்வாகத்தில் இருந்து பணம் பெற வேண்டியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு இரண்டு ஓய்வூதிய திட்டங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டெட்ராய்ட் நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து தக்க வைத்துக் கொள்ள, நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை என கெவியன்ஓர் தெரிவித்ததோடு, பெடரல் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஓர் மனுவை வெள்ளியன்று தாக்கல் செய்தார். அதில் நகரம் அதிக அளவில் கடனில் மூழ்கியிருக்கும் நகராக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தற்போது ஓய்வூதியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை, மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை அரசின் சொத்துக்களை விற்று செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வகையில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மெச்சிகன் பெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா இந்த மனு சட்டவிரோதமானது.
suran
இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கையாக அமையும். எனவே தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மிச்சிகன் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மிச்சிகன் மாகாண ஆளுநர் ரிக் ஸ்டைர் தெரிவித்திருப்பதாவது: அவசர காலத்து மேலாளர் கெவியன்ஓர் திவால் அறிவிப்பை நீதிமன்றத்தில் இருந்து விரைவில் பெற்று வருவார்.
அதன் பின்னர் அரசின் சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படும். நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து வேறுபட்ட நிலையில், அடிப்படையில் இருந்து மறு கட்டுமானத்தை நிறுவ வேண்டும். அதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தற்போதைய அவசர நிதிதேவையை பூர்த்தி செய்ய திவாலானதை அங்கீகரித்து எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அமிப்ருன்டேஜ் தெரிவித்திருப்பதாவது, டெட்ராய்ட் நகர நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டெட்ராய்ட் நகர நிர்வாகத்தில் இருந்து பணம் பெறவேண்டியவர்கள் நகரத்தின் மிகத்தீவிரமான நிதிபற்றாக்குறை பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தின் மீட்புக்கு வெள்ளை மாளிகை முடிந்த அளவு உதவி செய்யும், டெட்ராய்ட் நிர்வாகத்திற்கு முழுமையாக துணை நிற்கும்.
suran
 அதன் மூலம் டெட்ராய்ட் நகரை அமெரிக்காவின் மிக முக்கிய நகரமாக மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் வெள்ளை மாளிகை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 அமெரிக்காவின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி இந்தியாவை இழுத்துச்செல்லும் மன்மோகன்-ப.சி,கூட்டம் இதை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லையா?கண்க்கில் எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் பணியே அமேரிக்கா சொல்வதை அப்படியே எற்றுக்கொள்வதுதான்.இறங்கிய டாலரின் மதிப்பை எற்றத்தானெ இந்தியாவில் பெட்ரோலிய விலையை 10நாட்களுக்கு ஒருமுறை எற்றி விலைவாசிகளை பார்க்க வைத்து ரூபாயின் மதிப்பை இறங்க வைத்தது அமரிக்கா.
11ஆண்டுகள் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரபுலிகள் ஆட்சியில் இருந்தும் பணத்தின் மதிப்பு சரிந்து -பண வீக்கம்தான் அதிகரித்துள்ளது.அதை மன்மோகன் சிங்கே திறவா தன் வாயை திறந்து ஒப்புக்கொண்டு பயமில்லை என்று கூடவே அருள்வாக்கும் தந்துள்ளார்.
இதற்கு காரணம் என்.எல்.சி .பங்குகளை விற்காததுதான் .அதனால்தான் பணத்தின் மதிப்பு இறங்கி விட்டது என்றும் கூட சொல்வார்.ப.சி.க்கும்சொனியா,மன்மோகனுக்கும் பொருளாதர சீர்திருத்தம் என்றாலே லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் ,அந்நிய ர்களுக்கும் விற்று தீர்ப்பதுதான் .
இப்போது என்.எல்.சி.பங்குகளை தனியார்க்கு விற்பதை துத்திய பெருமை தனக்கும்,தனது தலைமையிலான ஆட்சிக்கும்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லிவருகிறார்.அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் வருகிறார்கள்.இடதுகளும் குறிப்பாக தாபா.பரணி பாடி வருகிறார்.
ஆனால் வெற்றி பெற்றது என்.எல்.சி. தொழிலாளர்களோ,ஜெயலலிதாவோ அல்ல.
மன்மோகன் சிங் காங்கிரசு அரசுதான்.
அவர்கள் திட்டமீட்டது போல் 5%பங்குகளை வெளியெ விற்று விட்டார்கள்.இது அவர்களின் சாதனைதான்.பின்னர் இது போன்று தனியார்களுக்கு விற்பதூ எளிது .
ஜெயாவை நம்ப முடியுமா?
முன்பு ஸ்பிக் பங்குகளை முத்தையா செட்டியாருக்கு தாரை வார்த்தவ்ர்தான் இவர்.அதற்கு கையெழுத்திட மறுத்த சந்திரலேகா [இ.ஆ.ப.]மீது எழும்பூரில் வைத்து திராவகம் வீசப்பட்டதே.அதை மறக்க முடியுமா?
தமிழக அரசின் பல நிறுவனங்கள் மூலம்  வாங்கப்பட்ட பங்குகள் சத்தமின்றி,போராட வழியின்றி புழக்கடை வழியாக விற்கப்படும் நாளும் தூரத்தில் இல்லை.
மொத்தத்தில் என்.எல்.சி.பங்குகள் விற்கப்பட்டு விட்டன.தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர்.
அதேபோல் இன்று ஓய்வூ திய பணம் கொடுக்க வலித்துப்போ ய்  அமேரிக்கா ஒரு நகரையே திவால் என்கிறது.
அமேரிக்கா சொல்லியபடி இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த மன்மோகன் சிங்கும் அந்த பணத்தை தனியார் குறிப்பாக அம்பானியின் ரிலயன்ஸ் கேப்பிடலில் கையடிக்கப்போகிறது .பின் தங்கள் பங்காக செலுத்திய பணத்தை கூட பெற முடியாமல் இங்குள்ள தொழிலார்களும்,அரசு ஊழியர்களும் தினறப்பொகிறார்கள்.அப்படி வரும் காலத்தில் நிச்சயமாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருப்பதும் சந்தேகம்.ஆனால் மக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் ,அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமமும்,கையில் திவால் அறிக்கையும் மட்டும் நிச்சயம்.அதற்குத்தான் இந்த டெட்ராய்ட் வழி காட்டியுள்ளது.
suran

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 8 ஜூலை, 2013

" தோழர் ஜோதிபாசு"

"இந்தியத் தொழிற்சங்க மையத்தின் 14ஆவது மாநாடு, அதன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்தியப் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டை 2013 ஜூலை 8 முதல் 2014 ஜூலை 8 வரை கொண்டாடுமாறு அனைத்து சிஐடியு சங்கங்களுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. அதனையொட்டி சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் எழுதியுள்ள கட்டுரை இங்கு தரப்படுகிறது."
இந்தியத் தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசியல்வானின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசு, 1914 ஜூலை 8 அன்று பிறந் தார். அவரது பெற்றோர்கள் இன்றைய வங்க தேசத்தின் டாக்கா மாவட்டத்திலிருந்து வந்தவர்களாவார்கள்.
அவரது தாயார் ஓர் உயர் மத்திய வர்க்க நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை டாக்ட ராக பணிபுரிந்தவர். தோழர் ஜோதிபாசுவே தன் நினைவுக் குறிப்புகளில் கூறியிருப்பதைப்போல, ‘‘அவருடைய குடும்பத்தில் அரசியல் வாடை வீசியதாகத் தெரியவில்லை.’’ ஆயினும், ‘‘தங்களுடைய குடும்பத்தார் மத்தியில் அரசியல் ஒரு மையப் பொரு ளாக இல்லாதிருந்த போதிலும்கூட, அந் தக்காலத்தில் செயல்பட்டு வந்த புரட்சி யாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அவர் கள் வைத்திருந்ததை உணர முடிந்தது”.புரட்சிகர இயக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழ்நிலை, சிட்டகாங் ஆயுதக்கிடங்கு புரட்சியாளர்களால் சூறை யாடப்பட்டது, காந்திஜியின் உண்ணாவிர தம், மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய உரைகள் போன்ற வற்றின் மூலமாக அவர் அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார்.
தன்னுடைய நினைவுக்குறிப்புகளில் ஜோதிபாசு, நேதாஜியின் பொதுக்கூட்டங் களில் அவரும் அவரது சகோதரரின் மக னும் போலீசாரிடம் அடிவாங்கியது குறித் துக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘பொதுக்கூட் டம் நடைபெற்ற இடம் முழுவதும் ஒரு போர்க்களம் போலவே காட்சி அளித்தது. குதிரைப்படையினர், சாதாரண போலீஸ் காரர்கள், போலீஸ் சார்ஜண்டுகள் என அனைத்துவிதமான போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். சார்ஜண்டுகள் எங்களைத் தடிகளால் தாக்கத் தொடங்கிய போது, பாதுகாப்புக்காக ஓடக் கூடாது என்று தீர்மானித்தோம். அவ்வாறு எங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், சில குண்டாந்தடிகள் எங்கள் முதுகைப் பதம்பார்த்த போதும்கூட, நாங்கள் நடந்தே சென்றோம், ஆனால், நாங்கள் பயந்து ஓடவில்லை, நாங்கள் வேகமாக எங்கள் தந்தையின் அறையை நோக்கி சுறுசுறுப் பாக நடந்து சென்றோம்,’’ என்று ஜோதி பாசு கூறுகிறார். பிற்காலத்தில் அனைத்து சவால் களையும் எதிர்கொள்ளக்கூடிய அளவிற் குத் தலைமைப்பண்பை வளர்த்துக் கொண்ட தோழர் ஜோதிபாசு, இவ்வாறு தான் 16 வயது இளம் மாணவனாக இருந்த போதே, விடுதலை இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலையுடன் இருந்திருக்கிறார்.
லண்டனில் : 1935இல் ஜோதிபாசு தன்னுடைய பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றார். லண்டனில் நான்காண்டு காலம் அவர் சட்டம் பயின்ற காலத்தின்போதுதான் வி.கே. கிருஷ்ணமேனன் தலைமையில் அங்கு மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிவந்த இந்தியன் லீக் அமைப்பானது அவரை நன்கு வார்த்தெடுத்தது. இந்த கிருஷ்ண மேனன்தான் பிற்காலத்தில் நேரு அமைச் சரவையில் கேபினட் அமைச்சராக இருந் தவர். பின்னர், ‘லண்டன் மஜ்லிஸ்’ என் னும் ஓர் அமைப்பு உருவானது, ஜோதிபாசு அதன் முதல் செயலாளராக இருந்தார். இந்த அமைப்பானது இந்திய விடுதலை இயக்கத்திற்காக ஆதரவினைத் திரட்டி வந்ததோடு, இந்தியாவிலிருந்து வரும் தேசியத் தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தது. இதன் மூலம் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பல தலைவர் களுடன் அவருக்குத் தொடர்பு கிடைத்தது. ஜோதிபாசு உட்பட இந்திய மாணவர்கள் பலர் அப்போது லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மற்றும் மார்க்சிய சிந்தனை யாளர்களின் கூட்டங்களாலும் கவரப்பட் டார்கள். ஜோதிபாசு லண்டனில் செயல் பட்டுக் கொண்டிருந்த கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்.
அவரது தேர்வுகள் முடிந்தவுடனேயே, அதன் முடிவுகள் வெளியாவது வரை காத் துக் கொண்டிருக்காமலேயே, 1940களின் முற்பகுதியில் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார், இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக (பாரிஸ்டராக)த் தன்னைப் பதிவுசெய்து கொண்டபோதிலும், கம்யூ னிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக முனைப்புடன் செயல்படவும் தொடங்கி னார்.1944இல் வங்கம் - நாக்பூர் ரயில்வேத் தொழிலாளர் சங்கத்தை அவர் உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவ்வாறு அவர் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட தானது, அவர்தம் இறுதி நாட்கள் வரை யிலும் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில்தான் ஜோதி பாசு தேர்தல் களத்திலும் நுழைந்தார், 1946இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் போது, அவர் ரயில்வேத் தொழிலாளர்கள் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து நின்றவர், ஹுமாயூன் கபீர். அவரும் ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவராவார். இவரை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரித்தது.அவரது நீண்டகால சட்டமன்றப் பணி கள் இத்தேர்தலிலிருந்து தொடங்கியது. இத்தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தபோதும் அவரால் இதில் வெற்றி பெற முடிந்தது. 1946இல் நடந்த தேர்தல் அனுபவங்கள் குறித்து அவர் கூறியது மிகவும் இனிய ஒன்றாகும்.‘‘முதலாளித்துவ தேர்தல்கள் எப்படி இருக்கும் என்பதை நான் பங்கேற்ற முதல் தேர்தலிலேயே நன்கு தெரிந்துகொண் டேன். தேர்தல் களத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் இது. ஒரு பக்கத்தில் வாக்குகளை எவ்விலை கொடுத்தேனும் வாங்கிட வேண்டும் என்று கடுமையான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன.
ஆனால் அதே சமயத்தில் மறுபக்கத் தில் நேர்மை என்றால் என்ன, கொள் கைக்காக அர்ப்பணித்துக் கொள்வது என் றால் என்ன என்பதையும் நான் பார்த்தேன். வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த ரயில் வேத் தொழிலாளர் எவரும் என்னை ஏமாற்றி விடவில்லை. நம் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, விடாமுயற்சி மற் றும் நேர்மை ஆகிய அனைத்தும் சேர்ந்து என் வெற்றியை உத்தரவாதப்படுத்தின. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ரயில்வேத் தொழிலாளர்களின் வெற்றியாகும்.’’ 1946 தேர்தலின் படிப்பினைகள் மற்றும் வெற்றி பின்னர் அவர் போட்டியிட்ட சட்டமன்றத் திற்கான அனைத்துத் தேர்தல்களின் போதும் அவருக்கு உதவியது.1962 முதல் 1967 வரையிலான காலம் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கி யத்துவம் உடையதாகும். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி பிளவுண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. ஜோதி பாசு, கட்சியின் ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தான் இறக்கும் வரையிலும் கட்சியின் உயர்ந்த அமைப் பான அதில் இடம் பெற்றிருந்தார்.
suran
மக்கள் நல அரசாங்கங்கள் : 1967ஆம் ஆண்டு பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைப் பார்த்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தோல்விக் குப்பின் அமைந்த புதிய அமைப்பின் சிற்பி யாக ஜோதிபாசு திகழ்ந்தார். அங்கு நடை பெற்ற மும்முனைப் போட்டியில், காங் கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மற்ற இரு முன்னணிகள் என்பவை ஒன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை யிலும், மற்றொன்று வங்காள காங்கிரஸ் தலைமையிலும் அமைந்தவைகளாகும். பின்னர் இவ்விரு முன்னணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி அரசாங்கம் என்று அமைத்து, வங்காள காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வராகவும், ஜோதிபாசு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்கள். இவ்வாறு வங்கத்தில் நீண்ட நெடிய கூட்டணி அரசாங்கத்தின் வரலாறு தொடங்கியது.இந்த அரசாங்கம் எட்டு மாதங்களே நீடித்தது. ஆயினும், டிராம் கம்பெனி தேசிய மயம், மக்கள் இயக்கங்களை நசுக்கு வதற்காக மிகவும் அரக்கத்தனமாகப் பயன்பட்டு வந்த மேற்குவங்க பாதுகாப்புச் சட்டம் ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வரலாறு படைத்தது. மேலும் இந்த அர சாங்கமானது தொழில் தகராறுகளின் போது மேனேஜ்மெண்ட்டிற்கு ஆதரவாக ஒருசார்பு நிலை எடுக்கக்கூடிய விதத்தில் காவல்துறை பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் பிரகடனம் செய்தது.
1969இல் நடைபெற்ற அடுத்த தேர்தல்களின்போது இரண்டு முன்னணி களும் இணைந்து காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டன. ஜோதிபாசு தன்னுடன் உள்துறை மற்றும் காவல்துறையை வைத்துக்கொண்டு மீண்டும் துணை முதல்வரானார். இந்த அரசாங்கம் மாநிலத் தில் நிலச் சீர்திருத்தங்களுக்கான அடிப் படையை விதைத்தது. மக்கள்நலன் சார்ந்த பல்வேறு முடிவுகளையும் மேற்கொண் டது. இந்த அரசாங்கமும் 13 மாதங்கள் அளவிற்கே நீடித்தது. 1970 மார்ச் 29 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இக்காலகட்டம் மேற்கு வங்க வரலாற் றில் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராகவும் அதன் ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களுக்கு எதிராகவும் நக்சலைட் இயக்கம் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத்தது. 1970 மார்ச் 31 அன்று பாட்னா ரயில்நிலையத்தில் அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவன் சுட்டான், ஆயினும் அக்குண்டு அவரை அழைத்துச் செல்ல வந்த தோழர் ஒருவர் மீது பட்டு அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப் பட்டார். ஜோதிபாசு தன் கையில் சிறிய காயங்களுடன் தப்பினார்.

சிஐடியு உதயம் : தொழிற்சங்க அரங்கிலும், புதிய நிகழ்ச் சிப் போக்குகள் ஏற்பட்டன. பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்ட பிரம்மாண்டமான போராட்டங்கள் அந்தச் சமயத்தில் ஏஐடியுசி-இன் தலை மைப்பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் அணுகுமுறை குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக மத்தியத் தொழிற்சங்கம் ஒன்றை அமைப் பது குறித்து விவாதிப்பதற்காக அகில இந்திய தொழிற்சங்க மாநாடு ஒன்றிற்கு அறைகூவல் விடுப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் பி.டி. ரணதிவே, பி.ராமமூர்த்தி, போன்றவர் களுடன் ஜோதிபாசுவும் முன்னின்று இதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் இயங்கி வந்த மேற்கு வங்க மாகாண தொழிற்சங்க கவுன்சில் இந்நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தது. கல்கத்தாவில் இதற்காக நடைபெற்ற மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக ஜோதி பாசு இருந்தார். 1970 மே 28 அன்று நடைபெற்ற மாநாட் டில் வரவேற்புரையாற்றுகையில், மேற்கு வங்கத்தில் உள்ள நிலைமைகள் குறித்து மிகவும் விரிவாகவும், இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களும் குறுகிய காலத்தில் ஏற்படுத்திய சாதனைகள் குறித்தும் விவரித்தார். ஸ்தாபக மாநாட்டில் ஜோதிபாசு சங் கத்தின் செயற்குழு உறுப்பினராக வும், இரண்டாவது மாநாட்டில் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலை வர் பொறுப்பில் இருந்து அவர் தன் இறுதி நாட்கள் வரை சிஐடியு-விற்கு வழிகாட் டினார். ஜோதிபாசு 1970க்குப்பின் மிகவும் கொந்தளிப்பாக இருந்த காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக் குத் தலைமை வகித்தும், நாட்டிலும் மேற்குவங்க மாநிலத்திலும் சிஐடியு-வை ஒரு வலுவான அமைப்பாக உருவாக்கு வதற்கு வழிகாட்டியும் செயல்பட்டார்.மேற்குவங்க மக்களின் போராட்டங்
கள், 1970-77க்கு இடைப்பட்ட ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற் றும் இதர வெகுஜன அமைப்புகளின் எண் ணற்ற தலைவர்களும் ஊழியர்களும் கொல் லப்படுதல் ஆகியவை வரலாற்றின் பகுதி களாகும். இவ்வளவு கொடுமைகளையும் மேற்குவங்க உழைக்கும் மக்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று போராடி ஜனநாயகத்தை மீட் டெடுத்து இறுதியில் வெற்றிவாகை சூடினர்.
இடது முன்னணி அரசாங்கங்கள்
1977இல் முதல் இடது முன்னணி அரசாங்கம் அமைந்தது, தோழர் ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையில் இடது முன்னணி அரசாங்கம் ஒன்று மொத்தத் தில் 34 ஆண்டுகள் ஆட்சியி லிருந்தது என் பது உலகில் வேறெங்கும் நடக்காத வரலாறா கும். ஜோதிபாசு இந்தியாவில் மிகவும் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராகப் பணியாற்றி மகத்தான வரலாற்றை உருவாக்கினார்.மேற்கு வங்க இடது முன்னணி அரசாங் கங்களின் சாதனைகள் என்பவை ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் என்பதிலிருந்து துவங்கியது என்பதை அனை வரும் அறிவார்கள். 1977இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே ஜோதிபாசு, ‘‘இந்த அர சாங்கம் தலைமைச் செயலகத்தி லிருந்து (Writers Building) மட்டும் இயங்கி டாது’’ என்று பிரகடனம் செய்தார். மாநில அரசுகளுக்கு உள்ள வரையறை கள்(limitations) குறித்தும் மேற்குவங்க மக் களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டது. ஒரு நேர் காணலில் இடது முன்னணி அர சாங்கத்தின் அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், ‘‘இது ஒன்றும் சோசலிஸ்ட் பொருளாதார அமைப்பு அல்ல. எங்களால் வானளாவிய உறுதிமொழிகளை மக்க ளுக்கு அளித்திட முடியாது. எங்களால் என்ன செய்ய முடியுமோ, அவற்றைத்தான் நாங்கள் அவர்களிடம் சொன் னோம். ஒரு விஷயத்தை எங்களால் செய்ய முடியாது. அது என்னவெனில் அடிப்படை மாற்றங்களை எங்களால் கொண்டுவர முடி யாது. ஏனெனில், நாங்கள் ஒன்றும் மேற்கு வங்க குடியரசை நடத்திடவில்லை. நாங்கள் இந்தியாவில் ஓர் அங்கம்.’’ மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடது முன்னணி அர சாங்கம் நாட்டில் இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தைக் கட்டுவதில், மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை, குறிப் பாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர் களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதில், அளப்பரிய பங்களிப்பினைச் செய்திருக்கிறது.
மக்கள் நலனுக்காக
2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இடது முன்னணிக்குப் பின்ன டைவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர், ‘‘வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அவர் களில் சிலர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும், அது தற்காலிகமானதுதான். ஆனாலும் நாம் திரும்பத் திரும்ப மக்களிடம் போய்க்கொண்டே இருப்போமானால், அவர் களின் அன்புக்குப் பொருத்தம் உடையவர் களாக உண்மையிலேயே நாம் மாறுவோமே யானால், நிச்சயமாக அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள். சென்ற பஞ் சாயத்துத் தேர்தல் களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் நம்மைத் தோற்கடித்த வர்கள், மீண்டும் நம் பக்கம் வருவார்கள்,’’ என்று கூறினார்.மேற்குவங்கத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பணி யாற்றிக்கொண்டிருந்த தலைவர்களுக்கு ஜோதிபாசு கோடிட்டுக் காட்டிய உடனடிப் பணி இதுவேயாகும். எழுதாண்டுகளுக்கும் மேலாக அவர் தன் பொதுவாழ்க்கையில் எத்தகைய உன்னத லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி நம் முன்னே உள்ளது.
தோழர் ஜோதிபாசு 2010 ஜனவரி 17 அன்று நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார் என்ற போதிலும்,
 நாம் நம்முடைய லட்சியங்களை எய்திட அவரது வாழ்வும் போதனைகளும் நமக்கு நிச்சயமாக என்றென்றும் வழிகாட்டும். ‘‘மக்களை நேசிப்பதைவிட வாழ்வில் மதிப்பிடற்கரிய செயல் வேறெதுவு மில்லை. மாபெரும் லட்சியங்களுக்காக நம் வாழ்வைத் தியாகப்படுத்திக் கொள்ள எப்போதுமே நாம் தயாராக இருக்கிறோம்... காலம் எல்லாம் எவ்விதக்குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேனே என்ற வருத்தம் வதைப்பதற்கு நாம் இடம் அளித்திடக் கூடாது.
 இத்தகைய எண்ணம் எப்போதும் நம் அடிமனதில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கவேண்டும்’’ 
என்று கூறிய அவரது உயர்ந்த சிந்தனையை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. மாபெரும் புரட்சி யாளர் தோழர் ஜோதிபாசு விடுத்துச் சென் றுள்ள உயரிய சிந்தனைகள் என்றென்றும் நமக்கு வழிகாட் டட்டும்.

தோழர் ஜோதிபாசு புகழ் நீடூழி வாழ்க!

நன்றி :தீக்கதிர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

செவ்வாய், 2 ஜூலை, 2013

'நிதாகத்' ---"நெய்வேலி"

இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.
துபாயில் பணம் சம்பாதிக்கும் கனவை சிதறடித்த இந்த நிதாகத் சட்டம்.70000 இந்தியர்களை மூட்டை கட்டி நாடு திரும்ப  வைத்து விட்டது.இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

 எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'.
வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம்தான் நிதாகத். 
இந்த சட்டப்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்தால் கண்டிப்பாக 10 சதவீதம் உள்நாட்டு அரபுக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

நாளை முதல் அந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சவுதியில் 17 லட்சத்து 89 ஆயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
சவுதி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையை தக்கவைத்து கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் நாளை முடிகிறது. அதன் பிறகு முறையான ஒர்க்பெர்மிட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் அவசர சான்றிதழ் பெற்று சவுதி அரசு மூலம் விசா வாங்கி உடனடியாக நாடு திரும்பலாம். இந்த கெடுபிடிகளால் 75 ஆயிரம் இந்தியர்கள் அவசர சான்றிதழ் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏராளமான தொழிலாளர் குவிகிறார்கள். இதையடுத்து 4-ந்தேதி வரை இந்திய தூதரகம் விடுமுறை இல்லாமல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பூகோள வரை படத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுதான் சவுதி. 5 மாதம் கடும் குளிர், 5 மாதம் கடும் வெயில், 2 மாதம் நம் நாட்டு சீதோஷ்ண நிலையையும் கொண்டுள்ளது.
நேரப்படி அந்த நாட்டுக்கும் நமக்கும் சுமார் 2 1/2 மணி நேரம்தான் வித்தியாசம். சவுதிக்கு சென்றால் சீக்கிரம் லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலை, தச்சு வேலை, கடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள். சவுதிக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும் நம்மவர்கள் அங்கு சந்திப்பது பேரதிர்ச்சி.

ஒட்டகம், ஆடு மேய்த்தல், தோட்ட வேலை செய்தல், ரோடுகளை பெருக்குவது, நிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்குகிறார்கள். அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள். வெயிலில் காய்ந்தும், குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும் பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமே, குடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாக கண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி உழைக்கிறார்கள்.
ஊருக்கு திரும்பினால் பாரின்ல இருந்து என்னடா வாங்கி வந்தே? என்று உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை மொய்த்து விடுகிறார்கள்.
 தனது சோகத்தை சொல்லி அவர்களது அன்பையும், எதிர்பார்ப்பையும் ஒரு நொடியில் தகர்க்க மனமில்லாமல், ஸ்பிரே, சோப்பு, துணிமணிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து மகிழ்விக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறு சிறு ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட் வழங்க வேண்டும்.
ஆனால் 6 மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.

20 சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல், சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான ஒர்க் பர்மிட் இருக்காது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூலம் சென்று அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களுக்கும், சட்டப்படி உரிய அனுமதியுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
பொதுவாக அரேபியர்கள் கடினமான வேலை செய்யமாட்டார்கள். கொத்தனார், தச்சர், முடி திருத்துதல், காய்கறி கடைகளில் வேலை பார்ப்பது, சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைக்கு செல்கிறார்கள்.
கொத்தனார்கள் எல்லாம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்கள். 
அங்கு வேலை பார்ப்பது போல் நம் நாட்டில் வேலை பார்த்தால் போதும் பல மடங்கு சம்பாதிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் செல்கிறார்கள்.
இனிமேல் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவுதான்.
நுணுக்கமான வேலை தெரிந்தவர்கள், டாக்டர்கள், கப்பல் என்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.
சட்டப்படி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இல்லை.
இதையடுத்து, 90 ஆயிரம்  இந்தியர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 65 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வமாக சவுதியில் தங்கவும், கம்பெனிகளில் வேலை தேடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சவுதி அரசு விதித்துள்ள காலக்கெடு நாளையுடன் முடிவதால் தொடர்ந்து அங்கேயே அவர்கள் தங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், இதுகுறித்து சவுதி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி 
                                                                                                                                                                                      - ஜி.சுகுமாறன்
நிறு வனத்தின் 5 சதமானம் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சர வை ஒப்புதல் வழங்கி விட்டது. நெய்வேலி நிறுவன அதிபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் 5 சதமானம் பங்கு விற்பனை மூலம் ரூ. 700 கோடி க்கு மேல் பணம் வரும் என்றார்.
 தற்போது ரூ.466 கோடி மட்டுமே வரும் என்கிறார்.
 மத்தி ஆட்சிபொதுத்துறைகளை சீரழிக்கவே முயற்சிக் கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பி.ஜே.பி. ஆட்சிகாலத்தில் நெய்வேலியின் 10 சதமானம் பங்குகளை விற்கவேண்டும் என முயற்சித்தது. பின் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் தற்போதைய அரசு நெய்வேலி யின் 10 சதமானம் பங்குகளை விற்க முயற் சித்தது.
ஆனால் இந்த இரண்டு முயற்சி களும் நெய்வேலி தொழிலாளர்களின் ஒன்று பட்ட போராட்டத்தால் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் மத்திய அரசு 5 சதமானம் பங்கு களை விற்க முயற்சிக்கின்றன. இதையும் நெய்வேலி தொழிலாளர்கள் ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைந்து போராடி முறியடிப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.
மத்திய ஆட்சியாளர்கள் இம் முடிவை தொழிற்சங்கங்களோடு பேசித்தான் எடுத்தது என பொய்யைப் பரப்பி வருகின்றனர்.
அங் குள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், அதி காரிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து மாவட்ட மக்களை திரட்டி தமிழக தொழிலாளி வர்க்கத்தின் துணையோடு வலுவான போராட்டங்களுக்குச் செல்வது என முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்படின் காலவரை யற்ற வேலை நிறுத்தத்திற்கும் தயாராகிவிட் டனர்.
 அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மத்திய அரசின் இம்முடிவை வன்மையாக கண்டித்துள்ளன.
நெய்வேலி உருவான வரலாறு :
நெய்வேலி நிறுவனம் உருவாகியிருக்கும் இடம் முன்காலத்தில் சிறுசிறு கிராமங் களைக்கொண்டது.
 இங்கு ஜெம்புலிங்க முத லியார் என்கிற நிலக்கிழாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது கறுப்பாக வித்தி யாசமாக வரும் மண்ணைக் கண்டறிந்த முத லியார் இதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத் தார்.
 தமிழக அரசு இது பழுப்பு நிலக்கரி என கண்டறிந்தது. அதன் உபயோகங்களையும் ஆய்வு செய்தது. பின் மத்திய அரசும் தமிழக அரசும் பல ஆய்வுகள் செய்து மிக ஆழத்திலிருக்கும் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வது இலாபகரமாக இருக் காது என இத்திட்டத்தை கைவிடப்பட்டது.
அக்காலத்தில் பழுப்பு நிலக்கரியை பயன் படுத்தி மின் உற்பத்தியில் மிகப்பெரிய முன் னேற்றத்தை கண்ட நாடு கிழக்கு ஜெர்மன்.
வேறு சில பணிகளுக்காக கிழக்கு ஜெர்மன் செல்லவேண்டியிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சிறப்பு அனுமதிபெற்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி கட்டியை கிழக்கு ஜெர்மன் எடுத்து சென்று அங்குள்ள நிபுணர்களுடன் விவாதித் ததில் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற் பத்தி செய்யலாம் எனவும் இத்திட்டம் இலாபகரமாக இயங்க வாய்ப்புள்ளது எனவும் கண்டறிந்து அதை அன்றைய காங்கிரஸ் அரசை ஏற்கவைத்தார்.
 இத்திட்ட முதலீட்டிற்கு பெரும் நிதி தேவைப்பட்டது. இன்று நான் நீ என்று முந்திக் கொண்டு கபளீகரம் செய்யத் துடிக்கும் முதலாளிகளோ அல்லது நாடுகளோ இத் திட்ட உருவாக்கத்திற்கு நிதி வழங்க மறுத் தனர்.
நேரு அரசு முதலில் அமெரிக்காவை நாடியது.அமெரிக்கா இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்தது.
பின் அன்றைய கம்யூனிஸ்ட்  சோவியத் யூனியனை நாடியது.
சோவியத் யூனியன் முக மலர்ச்சி யுடன் முன் வந்து நிதி உதவி அளித்தது மட்டு மல்ல மின் உற்பத்தி நிலையத்தை தானே முன்வந்து நிர்மாணித்துத் தருவதற்கும் முன் வந்தது. அந்த அடிப்படையில்தான் நெய் வேலி நிறுவனம் உருவானது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1467 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆண்டுதோறும் இலாபம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 600 மெகாவாட் உற்பத்தியில் துவங்கி தற்போது இங்கு மட்டும் 2470 மெகாவாட் உற்பத்தி செய்யும் வல்லமை பெற்றுள்ளது.
 இதுமட்டுமல்ல குஜராத், உத்தரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி துவங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தூத்துக்குடியில் தமிழக மின் திட்டத்தோடு இணைந்து மின் உற்பத்தி துவங்கவும், சீர்காழி போன்ற இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் திட்டங்கள் உள்ளன. மேலும் தென் இந்தியா வின் மின்சார தேவையின் பெரும் பகுதியை இந் நிறுவனம் செய்துவருகிறது.
 வளர்ந்து வருகின்ற இந்நிறுவனத்தின் 5 சதமானம் பங்குகளை விற்க ஏன் மத்திய அரசு துடிக் கிறது. இதன்மூலம் வெறும் ரூ.466/- கோடியே கிடைக்க வாய்ப்புள்ளது.
 பொதுத்துறை பங்கு விற்பனை என்பது இந்திய நாட்டின் இறையான்மையை விற்ப தாக மாறிவிடும். அண்மைக்காலமாக உலக பொருளாதார மீட்சியில் வளர்ந்த/வளரும் நாடுகள் தத்தளிக்கின்ற நிலையில் இந்தியா சற்று தாக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் இங்குள்ள உற்பத்தி முறையில் உள்ள விகிதாச்சாரமே.
தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், வங்கி கள், மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கங்கள் இன் னும் மக்கள் சொத்தாகவே உள்ளதால் இந்திய பொருளாதாரம் இதர நாடுகளைப்போல் பெரும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
 கடந்த பட்ஜெட்டில் ரூ.30,000 கோடிக்கு மேல் பொதுத்துறை பங்குகளை விற்கவேண் டும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி விற்றுவரும் பணத்தை வைத்து பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையை சரி செய்ய போகிறார்களாம்.பற்றாக்குறை ஏன் வந்தது? கடந்த பட் ஜெட்டில் பற்றாக்குறை ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம். இது தொகையாக பார்த்தால் ரூ.5,20,000 கோடி. இதே பட்ஜெட் டில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு பெரும் பண முதலைகளுக்கு வரி இனங்களில், வட்டி சலுகைகளில், வராக்கடன் தள்ளுபடி என, ஏற்றுமதி/ இறக்குமதி சலுகைகள் என பல்வேறு இனங்களில் இவர்களுக்கு ரூ.5,73,000 கோடி வழங்கியுள்ளனர்.
உண் மையிலேயே மத்திய அரசு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு இச்சலுகை வழங்கவில்லை எனில் ரூ.53,000 கோடி உபரி பட்ஜெட்டாக மாறியிருக்கும்.
முதலாளிகளுக்கு மீண்டும் பணக்குவியல் : பங்குவிற்பனையை ஊக்குவிப்பதற்கு இரண்டுகாரணங்கள் உள்ளன.
ஒன்று இலா பத்தில் இயங்கும் பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்பதும், பங்கு விற்பனை மூலம் வரும் பணம் முத லாளிகளுக்கு சலுகைகள் என்கிற பெயரில் மீண்டும் முதலாளிகள் கைகளுக்கே இப் பணம் சென்று விடுகின்ற ஒரு செப்படி வித்தையும் இதற்குள் மறைந்திருக்கிறது.
எனவே பங்கு விற்பனை எந்த விதத்திலும் நாட்டுக்கு உகந்ததல்ல.
 பொதுத்துறைகள் நாட்டு பொருளா தாரத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, பேரிடர் கள் ஏற்படும் போது அவைகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் இந்நிறுவனங்கள் முன் வருகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மை. தமிழகத்தை தானே புயல் தாக்கிய போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடர்பு கொள்ள பிஎஸ்என்எல் சேவை மட்டுமே இயங்கியதே தவிர வேறு எந்த தனியார் செல் சேவையும் இயங்கவில்லை.
 காரணம் பிஎஸ்என்எல் செல் சேவையை தவிற மற்ற அனைத்து தனியார் செல் சேவை களும் தங்களது செல் சேவை இயந்திரங்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதால் அனைத் தையும் நிறுத்திவிட்டன.
 இவர்களுக்கு இலாபம் தான் குறிக்கோள் மக்கள் சேவை அல்ல.
 அண்மையில் உத்தரகாண்டில் ஏற் பட்ட நிலச்சரிவு வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாக்க அங்கு மாட்டிக் கொண்ட மக்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் தனது டிக்கெட் கட்டணத்தை 50 சதவீதமாக குறைத்து சேவை செய்கிறது. மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது இலாபம் மட்டுமே குறிக்கோள். மக்கள் உயிர் அல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிட் டனர். இப்படி மக்கள் சேவை யில், பேரிடரின் போது மக்களைப் பாதுகாக்க, கிடைக்கும் இலாபம் அனைத்து நாட்டு நலனுக்காக பயன்படுத்தும் பொதுத்துறையை பாதுகாக்க முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையை பேணுவோம்.
 அரசின் கொள்கைகளை முறியடிப்போம். தேச நலனை பாதுகாப்போம்.

கட்டுரையாளர் : சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச்செயலாளர்

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...