bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 8 ஜூலை, 2013

" தோழர் ஜோதிபாசு"

"இந்தியத் தொழிற்சங்க மையத்தின் 14ஆவது மாநாடு, அதன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்தியப் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டை 2013 ஜூலை 8 முதல் 2014 ஜூலை 8 வரை கொண்டாடுமாறு அனைத்து சிஐடியு சங்கங்களுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. அதனையொட்டி சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் எழுதியுள்ள கட்டுரை இங்கு தரப்படுகிறது."
இந்தியத் தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசியல்வானின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசு, 1914 ஜூலை 8 அன்று பிறந் தார். அவரது பெற்றோர்கள் இன்றைய வங்க தேசத்தின் டாக்கா மாவட்டத்திலிருந்து வந்தவர்களாவார்கள்.
அவரது தாயார் ஓர் உயர் மத்திய வர்க்க நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை டாக்ட ராக பணிபுரிந்தவர். தோழர் ஜோதிபாசுவே தன் நினைவுக் குறிப்புகளில் கூறியிருப்பதைப்போல, ‘‘அவருடைய குடும்பத்தில் அரசியல் வாடை வீசியதாகத் தெரியவில்லை.’’ ஆயினும், ‘‘தங்களுடைய குடும்பத்தார் மத்தியில் அரசியல் ஒரு மையப் பொரு ளாக இல்லாதிருந்த போதிலும்கூட, அந் தக்காலத்தில் செயல்பட்டு வந்த புரட்சி யாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அவர் கள் வைத்திருந்ததை உணர முடிந்தது”.புரட்சிகர இயக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழ்நிலை, சிட்டகாங் ஆயுதக்கிடங்கு புரட்சியாளர்களால் சூறை யாடப்பட்டது, காந்திஜியின் உண்ணாவிர தம், மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய உரைகள் போன்ற வற்றின் மூலமாக அவர் அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார்.
தன்னுடைய நினைவுக்குறிப்புகளில் ஜோதிபாசு, நேதாஜியின் பொதுக்கூட்டங் களில் அவரும் அவரது சகோதரரின் மக னும் போலீசாரிடம் அடிவாங்கியது குறித் துக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘பொதுக்கூட் டம் நடைபெற்ற இடம் முழுவதும் ஒரு போர்க்களம் போலவே காட்சி அளித்தது. குதிரைப்படையினர், சாதாரண போலீஸ் காரர்கள், போலீஸ் சார்ஜண்டுகள் என அனைத்துவிதமான போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். சார்ஜண்டுகள் எங்களைத் தடிகளால் தாக்கத் தொடங்கிய போது, பாதுகாப்புக்காக ஓடக் கூடாது என்று தீர்மானித்தோம். அவ்வாறு எங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், சில குண்டாந்தடிகள் எங்கள் முதுகைப் பதம்பார்த்த போதும்கூட, நாங்கள் நடந்தே சென்றோம், ஆனால், நாங்கள் பயந்து ஓடவில்லை, நாங்கள் வேகமாக எங்கள் தந்தையின் அறையை நோக்கி சுறுசுறுப் பாக நடந்து சென்றோம்,’’ என்று ஜோதி பாசு கூறுகிறார். பிற்காலத்தில் அனைத்து சவால் களையும் எதிர்கொள்ளக்கூடிய அளவிற் குத் தலைமைப்பண்பை வளர்த்துக் கொண்ட தோழர் ஜோதிபாசு, இவ்வாறு தான் 16 வயது இளம் மாணவனாக இருந்த போதே, விடுதலை இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலையுடன் இருந்திருக்கிறார்.
லண்டனில் : 1935இல் ஜோதிபாசு தன்னுடைய பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றார். லண்டனில் நான்காண்டு காலம் அவர் சட்டம் பயின்ற காலத்தின்போதுதான் வி.கே. கிருஷ்ணமேனன் தலைமையில் அங்கு மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிவந்த இந்தியன் லீக் அமைப்பானது அவரை நன்கு வார்த்தெடுத்தது. இந்த கிருஷ்ண மேனன்தான் பிற்காலத்தில் நேரு அமைச் சரவையில் கேபினட் அமைச்சராக இருந் தவர். பின்னர், ‘லண்டன் மஜ்லிஸ்’ என் னும் ஓர் அமைப்பு உருவானது, ஜோதிபாசு அதன் முதல் செயலாளராக இருந்தார். இந்த அமைப்பானது இந்திய விடுதலை இயக்கத்திற்காக ஆதரவினைத் திரட்டி வந்ததோடு, இந்தியாவிலிருந்து வரும் தேசியத் தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தது. இதன் மூலம் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பல தலைவர் களுடன் அவருக்குத் தொடர்பு கிடைத்தது. ஜோதிபாசு உட்பட இந்திய மாணவர்கள் பலர் அப்போது லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மற்றும் மார்க்சிய சிந்தனை யாளர்களின் கூட்டங்களாலும் கவரப்பட் டார்கள். ஜோதிபாசு லண்டனில் செயல் பட்டுக் கொண்டிருந்த கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்.
அவரது தேர்வுகள் முடிந்தவுடனேயே, அதன் முடிவுகள் வெளியாவது வரை காத் துக் கொண்டிருக்காமலேயே, 1940களின் முற்பகுதியில் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார், இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக (பாரிஸ்டராக)த் தன்னைப் பதிவுசெய்து கொண்டபோதிலும், கம்யூ னிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக முனைப்புடன் செயல்படவும் தொடங்கி னார்.1944இல் வங்கம் - நாக்பூர் ரயில்வேத் தொழிலாளர் சங்கத்தை அவர் உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவ்வாறு அவர் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட தானது, அவர்தம் இறுதி நாட்கள் வரை யிலும் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில்தான் ஜோதி பாசு தேர்தல் களத்திலும் நுழைந்தார், 1946இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் போது, அவர் ரயில்வேத் தொழிலாளர்கள் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து நின்றவர், ஹுமாயூன் கபீர். அவரும் ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவராவார். இவரை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரித்தது.அவரது நீண்டகால சட்டமன்றப் பணி கள் இத்தேர்தலிலிருந்து தொடங்கியது. இத்தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தபோதும் அவரால் இதில் வெற்றி பெற முடிந்தது. 1946இல் நடந்த தேர்தல் அனுபவங்கள் குறித்து அவர் கூறியது மிகவும் இனிய ஒன்றாகும்.‘‘முதலாளித்துவ தேர்தல்கள் எப்படி இருக்கும் என்பதை நான் பங்கேற்ற முதல் தேர்தலிலேயே நன்கு தெரிந்துகொண் டேன். தேர்தல் களத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் இது. ஒரு பக்கத்தில் வாக்குகளை எவ்விலை கொடுத்தேனும் வாங்கிட வேண்டும் என்று கடுமையான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன.
ஆனால் அதே சமயத்தில் மறுபக்கத் தில் நேர்மை என்றால் என்ன, கொள் கைக்காக அர்ப்பணித்துக் கொள்வது என் றால் என்ன என்பதையும் நான் பார்த்தேன். வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த ரயில் வேத் தொழிலாளர் எவரும் என்னை ஏமாற்றி விடவில்லை. நம் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, விடாமுயற்சி மற் றும் நேர்மை ஆகிய அனைத்தும் சேர்ந்து என் வெற்றியை உத்தரவாதப்படுத்தின. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ரயில்வேத் தொழிலாளர்களின் வெற்றியாகும்.’’ 1946 தேர்தலின் படிப்பினைகள் மற்றும் வெற்றி பின்னர் அவர் போட்டியிட்ட சட்டமன்றத் திற்கான அனைத்துத் தேர்தல்களின் போதும் அவருக்கு உதவியது.1962 முதல் 1967 வரையிலான காலம் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கி யத்துவம் உடையதாகும். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி பிளவுண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. ஜோதி பாசு, கட்சியின் ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தான் இறக்கும் வரையிலும் கட்சியின் உயர்ந்த அமைப் பான அதில் இடம் பெற்றிருந்தார்.
suran
மக்கள் நல அரசாங்கங்கள் : 1967ஆம் ஆண்டு பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைப் பார்த்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தோல்விக் குப்பின் அமைந்த புதிய அமைப்பின் சிற்பி யாக ஜோதிபாசு திகழ்ந்தார். அங்கு நடை பெற்ற மும்முனைப் போட்டியில், காங் கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மற்ற இரு முன்னணிகள் என்பவை ஒன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை யிலும், மற்றொன்று வங்காள காங்கிரஸ் தலைமையிலும் அமைந்தவைகளாகும். பின்னர் இவ்விரு முன்னணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி அரசாங்கம் என்று அமைத்து, வங்காள காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வராகவும், ஜோதிபாசு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்கள். இவ்வாறு வங்கத்தில் நீண்ட நெடிய கூட்டணி அரசாங்கத்தின் வரலாறு தொடங்கியது.இந்த அரசாங்கம் எட்டு மாதங்களே நீடித்தது. ஆயினும், டிராம் கம்பெனி தேசிய மயம், மக்கள் இயக்கங்களை நசுக்கு வதற்காக மிகவும் அரக்கத்தனமாகப் பயன்பட்டு வந்த மேற்குவங்க பாதுகாப்புச் சட்டம் ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வரலாறு படைத்தது. மேலும் இந்த அர சாங்கமானது தொழில் தகராறுகளின் போது மேனேஜ்மெண்ட்டிற்கு ஆதரவாக ஒருசார்பு நிலை எடுக்கக்கூடிய விதத்தில் காவல்துறை பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் பிரகடனம் செய்தது.
1969இல் நடைபெற்ற அடுத்த தேர்தல்களின்போது இரண்டு முன்னணி களும் இணைந்து காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டன. ஜோதிபாசு தன்னுடன் உள்துறை மற்றும் காவல்துறையை வைத்துக்கொண்டு மீண்டும் துணை முதல்வரானார். இந்த அரசாங்கம் மாநிலத் தில் நிலச் சீர்திருத்தங்களுக்கான அடிப் படையை விதைத்தது. மக்கள்நலன் சார்ந்த பல்வேறு முடிவுகளையும் மேற்கொண் டது. இந்த அரசாங்கமும் 13 மாதங்கள் அளவிற்கே நீடித்தது. 1970 மார்ச் 29 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இக்காலகட்டம் மேற்கு வங்க வரலாற் றில் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராகவும் அதன் ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களுக்கு எதிராகவும் நக்சலைட் இயக்கம் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத்தது. 1970 மார்ச் 31 அன்று பாட்னா ரயில்நிலையத்தில் அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவன் சுட்டான், ஆயினும் அக்குண்டு அவரை அழைத்துச் செல்ல வந்த தோழர் ஒருவர் மீது பட்டு அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப் பட்டார். ஜோதிபாசு தன் கையில் சிறிய காயங்களுடன் தப்பினார்.

சிஐடியு உதயம் : தொழிற்சங்க அரங்கிலும், புதிய நிகழ்ச் சிப் போக்குகள் ஏற்பட்டன. பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்ட பிரம்மாண்டமான போராட்டங்கள் அந்தச் சமயத்தில் ஏஐடியுசி-இன் தலை மைப்பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் அணுகுமுறை குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக மத்தியத் தொழிற்சங்கம் ஒன்றை அமைப் பது குறித்து விவாதிப்பதற்காக அகில இந்திய தொழிற்சங்க மாநாடு ஒன்றிற்கு அறைகூவல் விடுப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் பி.டி. ரணதிவே, பி.ராமமூர்த்தி, போன்றவர் களுடன் ஜோதிபாசுவும் முன்னின்று இதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் இயங்கி வந்த மேற்கு வங்க மாகாண தொழிற்சங்க கவுன்சில் இந்நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தது. கல்கத்தாவில் இதற்காக நடைபெற்ற மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக ஜோதி பாசு இருந்தார். 1970 மே 28 அன்று நடைபெற்ற மாநாட் டில் வரவேற்புரையாற்றுகையில், மேற்கு வங்கத்தில் உள்ள நிலைமைகள் குறித்து மிகவும் விரிவாகவும், இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களும் குறுகிய காலத்தில் ஏற்படுத்திய சாதனைகள் குறித்தும் விவரித்தார். ஸ்தாபக மாநாட்டில் ஜோதிபாசு சங் கத்தின் செயற்குழு உறுப்பினராக வும், இரண்டாவது மாநாட்டில் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலை வர் பொறுப்பில் இருந்து அவர் தன் இறுதி நாட்கள் வரை சிஐடியு-விற்கு வழிகாட் டினார். ஜோதிபாசு 1970க்குப்பின் மிகவும் கொந்தளிப்பாக இருந்த காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக் குத் தலைமை வகித்தும், நாட்டிலும் மேற்குவங்க மாநிலத்திலும் சிஐடியு-வை ஒரு வலுவான அமைப்பாக உருவாக்கு வதற்கு வழிகாட்டியும் செயல்பட்டார்.மேற்குவங்க மக்களின் போராட்டங்
கள், 1970-77க்கு இடைப்பட்ட ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற் றும் இதர வெகுஜன அமைப்புகளின் எண் ணற்ற தலைவர்களும் ஊழியர்களும் கொல் லப்படுதல் ஆகியவை வரலாற்றின் பகுதி களாகும். இவ்வளவு கொடுமைகளையும் மேற்குவங்க உழைக்கும் மக்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று போராடி ஜனநாயகத்தை மீட் டெடுத்து இறுதியில் வெற்றிவாகை சூடினர்.
இடது முன்னணி அரசாங்கங்கள்
1977இல் முதல் இடது முன்னணி அரசாங்கம் அமைந்தது, தோழர் ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையில் இடது முன்னணி அரசாங்கம் ஒன்று மொத்தத் தில் 34 ஆண்டுகள் ஆட்சியி லிருந்தது என் பது உலகில் வேறெங்கும் நடக்காத வரலாறா கும். ஜோதிபாசு இந்தியாவில் மிகவும் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராகப் பணியாற்றி மகத்தான வரலாற்றை உருவாக்கினார்.மேற்கு வங்க இடது முன்னணி அரசாங் கங்களின் சாதனைகள் என்பவை ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் என்பதிலிருந்து துவங்கியது என்பதை அனை வரும் அறிவார்கள். 1977இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே ஜோதிபாசு, ‘‘இந்த அர சாங்கம் தலைமைச் செயலகத்தி லிருந்து (Writers Building) மட்டும் இயங்கி டாது’’ என்று பிரகடனம் செய்தார். மாநில அரசுகளுக்கு உள்ள வரையறை கள்(limitations) குறித்தும் மேற்குவங்க மக் களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டது. ஒரு நேர் காணலில் இடது முன்னணி அர சாங்கத்தின் அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், ‘‘இது ஒன்றும் சோசலிஸ்ட் பொருளாதார அமைப்பு அல்ல. எங்களால் வானளாவிய உறுதிமொழிகளை மக்க ளுக்கு அளித்திட முடியாது. எங்களால் என்ன செய்ய முடியுமோ, அவற்றைத்தான் நாங்கள் அவர்களிடம் சொன் னோம். ஒரு விஷயத்தை எங்களால் செய்ய முடியாது. அது என்னவெனில் அடிப்படை மாற்றங்களை எங்களால் கொண்டுவர முடி யாது. ஏனெனில், நாங்கள் ஒன்றும் மேற்கு வங்க குடியரசை நடத்திடவில்லை. நாங்கள் இந்தியாவில் ஓர் அங்கம்.’’ மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடது முன்னணி அர சாங்கம் நாட்டில் இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தைக் கட்டுவதில், மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை, குறிப் பாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர் களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதில், அளப்பரிய பங்களிப்பினைச் செய்திருக்கிறது.
மக்கள் நலனுக்காக
2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இடது முன்னணிக்குப் பின்ன டைவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர், ‘‘வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அவர் களில் சிலர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும், அது தற்காலிகமானதுதான். ஆனாலும் நாம் திரும்பத் திரும்ப மக்களிடம் போய்க்கொண்டே இருப்போமானால், அவர் களின் அன்புக்குப் பொருத்தம் உடையவர் களாக உண்மையிலேயே நாம் மாறுவோமே யானால், நிச்சயமாக அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள். சென்ற பஞ் சாயத்துத் தேர்தல் களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் நம்மைத் தோற்கடித்த வர்கள், மீண்டும் நம் பக்கம் வருவார்கள்,’’ என்று கூறினார்.மேற்குவங்கத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பணி யாற்றிக்கொண்டிருந்த தலைவர்களுக்கு ஜோதிபாசு கோடிட்டுக் காட்டிய உடனடிப் பணி இதுவேயாகும். எழுதாண்டுகளுக்கும் மேலாக அவர் தன் பொதுவாழ்க்கையில் எத்தகைய உன்னத லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி நம் முன்னே உள்ளது.
தோழர் ஜோதிபாசு 2010 ஜனவரி 17 அன்று நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார் என்ற போதிலும்,
 நாம் நம்முடைய லட்சியங்களை எய்திட அவரது வாழ்வும் போதனைகளும் நமக்கு நிச்சயமாக என்றென்றும் வழிகாட்டும். ‘‘மக்களை நேசிப்பதைவிட வாழ்வில் மதிப்பிடற்கரிய செயல் வேறெதுவு மில்லை. மாபெரும் லட்சியங்களுக்காக நம் வாழ்வைத் தியாகப்படுத்திக் கொள்ள எப்போதுமே நாம் தயாராக இருக்கிறோம்... காலம் எல்லாம் எவ்விதக்குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேனே என்ற வருத்தம் வதைப்பதற்கு நாம் இடம் அளித்திடக் கூடாது.
 இத்தகைய எண்ணம் எப்போதும் நம் அடிமனதில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கவேண்டும்’’ 
என்று கூறிய அவரது உயர்ந்த சிந்தனையை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. மாபெரும் புரட்சி யாளர் தோழர் ஜோதிபாசு விடுத்துச் சென் றுள்ள உயரிய சிந்தனைகள் என்றென்றும் நமக்கு வழிகாட் டட்டும்.

தோழர் ஜோதிபாசு புகழ் நீடூழி வாழ்க!

நன்றி :தீக்கதிர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...