bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்

“I dont want to live in a world where everything that I say, everything I do, everyone I talk to, every expression of creativity or love or friendship is recorded” – Edward Snowden
ஆம் நாம் செய்யும் செயலும், இருக்கும் இடமும் நாம் அறியாமலேயே தொடர்ந்து கண்காணிக்க படுகிறது, அதை அறியாமல் நாமும் அதற்கு துணை நிற்கிறோம். உண்மை என்னவென்றால் நம்மை பற்றி நாம் தெரிந்து கொண்டிருப்பதை விட  அமெரிக்காவில் மவுண்ட் வியூவில் உள்ள ஒரு கணினிக்கு நன்றாக தெரியும். ஒரு கற்பனையான உரையாடல் ஒன்று  இன்று நிஜமாகி கொண்டிருக்கிறது
வாடிக்கையாளர் சேவை: Pizza Hut இற்கு அழைத்தமைக்கு நன்றி, உங்கள் ஆதார் என்னை …
வாடிக்கையாளர்: எனக்கு ஒரு…
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், தங்களின் ஆதார் என்னை பதிவு செய்யவும்
வாடிக்கையாளர்: Ok, 1234-1234-1234
வாடிக்கையாளர் சேவை: மிக்க நன்றி, தங்கள் பெயர் ஆனந்த், உங்கள் மொபைல் நம்பர் 9998887776, உங்கள் வீடு 16, கணேஷ் நகர் 3ஆம் தெரு ஆனால் அதை 10 நாட்களுக்கு முன்  காலி செய்து இப்பொது 45, மேத்தா நகர், பேரூர்ரில் இருக்குறீர்கள்   
வாடிக்கையாளர்: !! சரிதான், எனக்கு ஒரு Non-veg Supreme Pizza, டபுள் சீஸ் வேண்டும்
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் டபுள் சீஸ் உகந்தது அல்ல
வாடிக்கையாளர்: ?? சரி சீஸ் இல்லாமல் குடுங்க, அப்படியே கார்லிக் பிரட் , சிக்கன் விங்ஸ் குடுங்க, மொத்தம் எவ்வளவு
வாடிக்கையாளர் சேவை: மொத்தம் 2500 ருபாய்
வாடிக்கையாளர்: சரி என்னோட கிரெடிட் கார்டில் பணம் செலுத்துகிறேன் நோட் பண்ணிக்கோங்க
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்தாதனால் பிளாக் செய்ய பட்டுள்ளது நீங்கள் பணமாகவே செலுத்திவிடுங்கள்
வாடிக்கையாளர்: ஹ்ம்ம் , எத்தனை மணிக்கு டெலிவர் பண்ணுவீங்க?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் தோழி இன்னும் சற்று நேரத்தில் உங்கள் இல்லத்திற்கு வந்துவிடுவார், கிரிக்கெட் மேட்ச் 5 மணிக்கு ஆரம்பம் அப்பொழுது செய்யலாமா ?
வாடிக்கையாளர் என்னய்யா சொல்ற?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நேற்று இரவு ஏழுமலை ட்ராவெல்ஸில் 10 மணிக்கு கோவை சென்று விட்டனர், அதில் இருந்து சுமார் 8 முறை உங்கள் தோழியிடம் உறையாடினீர்கள், 20 முறை குறுஞ்செய்தி அனுப்பி உள்ளீர்கள் ..
வாடிக்கையாளர்: யோ யோவ் 5 மணிக்கே டெலிவெர் பண்ணுயா
இது மிகை படுத்த பட்ட கற்பனையான உரையாடல் அல்ல, சாத்தியமானதே. கூகிள், Facebook, ஸ்மார்ட் போன் உங்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறது. ஏன் கூகிள் இலவசமாக உங்களுக்கு சேவை அளிக்கிறது? ஏன் என்றால் நீங்கள் தான் அதன் Product, உங்களுக்கு என்ன பிடிக்கும் , நீங்க எங்க இருக்கீங்க இதை அறிந்து உங்களுக்கு தகுந்த பொருளை விளம்பரப்படுத்துவதே அதன் வியாபாரம்.
எந்த ஒரு நுகர்வோர் தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் தேச பாதுகாப்பிற்கு பயன் படுத்த படும் அது போலவே உங்கள் அனைத்து செயல்களும் உளவு அமைப்புகள் கண்காணித்து கொண்டே இருக்கிறது, அதற்க்கான back door நீங்கள் உபயோகிக்கும் எல்லா மென் பொருளிலும் உண்டு. தனி நபர் ரகசியம் பற்றி கூகிள் தலைவர் எரிக் ஸ்கிமிட் கூறுவது நீங்கள் செய்யும் செயல் யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் விரும்பினால் ஒருவேளைநீங்கள் அதை செய்திருக்கவே கூடாது. தனி நபர் சுதந்திரத்தை மீறுவதில் உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா, அதற்க்காக அவர்கள் 2013ஆம்  ஆண்டு ஒதுக்கிய தொகை 52 பில்லியன் டாலர். அமெரிக்காவின் முன்னணி இன்டெலிஜென்ஸ் அமைப்பான NSA , PRISM  என்ற ஒரு ரகசிய ஆபரேஷன் மூலம் எல்லா தகவல் தொழில் நுட்ப அமைப்பிலும் ஊடுருவி உள்ளது.
நீங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத வண்ணம் உங்கள் மின்னஞ்சல்கள் , குறுஞ்செய்திகள் , டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்க படுகிறது. நீங்கள் உதிர்க்கும் ஒரு ஒரு வார்த்தையும் “Hot words” எதிராக சரிபார்க்க படுகிறது, உதாரணத்திற்கு நீங்கள் “ஜிகாத்”, “புனித போர்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் உடனடியாக உங்கள் இருப்பிடம் முதல் நீங்கள் செய்யும் அத்தனையும் இன்டெலிஜென்ஸ் கண்கணிப்பில் வந்து விடும். இதை செய்ய 1000 கணக்கான வல்லுநர்கள் தேவை இல்லை, ஒரு 10*10 அறையில் உள்ள செர்வரில் ஓடிக்கொண்டிருக்கும் அல்கோரிதம் செய்துவிடும். முன்னணி ஆயுத சப்ளயர் லாக்ஹீட் மார்ட்டின் உங்கள் ஒரு புகைப்படத்தை வைத்து உங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர் இணைப்பு
உங்கள் நண்பர் உங்கள் புகைபடத்தை டேக் செய்வது முதல் ஆராய்ந்து உங்களை அடையாளப்படுத்தி விடும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்ப்போம். நீங்கள் அலுவல் காரணமாக மும்பை செல்குறீர்கள், பணியை முடித்து விட்டு மும்பை பங்கு சந்தை அருகில் உள்ள காளை மாட்டு சிற்பத்தின் முன் நின்று செலஃபீ எடுத்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறீர்கள். மறுநாள் தொலைக்காட்சியில் பங்கு சந்தையில் குண்டு வெடிப்பு என்ற ஒரு செய்தி வருகிறது, நாம் தப்பித்தோம் என்று எண்ணி சந்தோசம் அடைந்து இருப்பீர்கள்.
இப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக பங்கு சந்தையை உளவு பார்த்தவனை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிகிறது, அவனின் புகைப்படத்தை அணைத்து CCTV பதிவுகளில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவன் விமானத்தில் சென்னையில் இருந்து நீங்கள் வந்த அதே நாள் அதே விமானத்தில் வந்ததது தெரிய வருகிறது, அவனுடன் வந்த பயணிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் நீங்கள் பனி நிமித்தமாக துருக்கி சென்று வந்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மத்திய அரசை எதிர்த்து போஸ்ட் போட்டது, NEET எதிராக MEME லைக் போட்டது, வேதியல் வகுப்பு முடிந்து வந்த உங்கள் 12 வயது மகன் வெடி குண்டு செய்வது எப்படி என்று கூகிள் செர்ச் செய்தது உங்களை ஒரு தீவிரவாதியாக அடையாளம் காட்ட போதுமானது. இதை ஆதாரமாக வைத்து ஜாமினில் வெளி வர முடியாத வழக்கை தொடுத்து உங்களை வருட கணக்கில் சிறையில் அடைக்க முடியும். 10இல் 9 பொருத்தம் பார்க்கும் விஷயம் அல்ல இது, 5 இருந்தாலே போதுமானது அதுவும் உங்கள் பெயர் அப்துல், ஹமீத் இருந்தால் 2 பொருத்தம் மட்டுமே போதும்.
நான் மேற்சொன்ன நிகழ்வு ஒரு சம்பவம் நடந்த பின் அதை செய்தது யாராக இருக்கும் என்று கண்டுபிடிப்பது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது Weaponized data mining அதாவது ஒரு சம்பவம் நடப்பதற்கு முன் அதை யார் செய்யக்கூடும் என்று அனுமானித்து அதை தடுப்பது. இது தவறான அரசாங்கத்திடம் இருந்தால் எவ்வளவு பெரிய நாசம் விளைவிக்க கூடும், நீங்கள் எதார்ச்சியாக செய்யும் செயலை உங்களுக்கு எதிராக திருப்பப்படும். உங்கள் படைப்பாற்றலை முற்றிலுமாக அளித்து விடும், எதை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை குறைத்து விடும். இந்த தொடர் கண்காணிப்பு எல்லா மனிதனையும் கிரிமினல் வட்டத்தில் கொண்டு வந்து விடும், நீங்கள் செய்யும் 1 லட்சம் விசயங்கைளை ஆராயந்தால் அதில் 10 விஷயமாவது நீங்கள் தேசவிரோத செயலை செய்யும் ஒரு நபராக சித்தரிப்பதற்கான சாத்திய கூறு இருக்கும்.
ஒரு குற்றவாளியை அடையாளம் காண அவன் உருவப்படத்தை கிரிமினல் டேட்டாபேஸ்சில் தேடுவது வழக்கம் அதில் இடம்பெறாத முதல் குற்றவாளிகள் தான் இப்பொழுது அதிகம். அவர்களை Lone Wolf என்று அழைக்கப்படுவர், எந்த அமைப்பின் ஆதரவு இன்றி தானாகவே ஒரு சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு கொண்டு தனியாக செயல் படும் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். அனால் அதற்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது, உங்கள் செயல்பாடுகளை வைத்து நீங்கள் எந்த உணர்வில் இருக்கிறீர்கள் என்று கண்டறியப்படும். Facebookயில் “Feeling” என்ற ஒரு ஸ்டேட்டஸ் உள்ளது அது உங்களிடம் இருந்து உங்கள் தற்போதைய எமோஷன் கண்டுபிடிப்பது. 2012 ஆம் ஆண்டு Facebook  ஒரு எமோஷனல் ஆராய்ச்சியை அதன் 7 லட்சம் வாடிக்கையாளர்களை அவர்களுக்கு தெரியாமலேயே செய்தது. இணைப்பு
அதில் உங்கள் முகப்பில் வரும் செய்தில் ஊடே சில டார்கெட்டேட் வார்த்தைகளை நீக்குவது அல்லது சேர்ப்பது, அதன் மூலம் நீங்கள் இடும் லைக் (அதில் உள்ள பல்வேறு பிரிவு Love , HaHa , Sad, Wow ) ஆராய்வது. இதற்கான நிதியை அமெரிக்கா ராணுவ உளவு அமைப்பு Facebook அளிக்கிறது. இப்படி ஒருவன் என்ன மனநிலையில் இருக்கிறான், எந்த புத்தகம் படிக்கிறான், எதை பற்றி அதிகம் தேடுகிறான் என்று ஒரு உளவியல் ஆராய்ச்சியே நடந்துகொண்டுஇருக்கிறது.
இது அமெரிக்காவில் நடக்கிறது நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று என்னைக் கூடும். தொழில்நுட்ப கட்டமைப்பு அடிப்படையில் பார்த்தால் அது சரியே, நம்மால் ஒரு IRCTC வலைத்தளத்தை லோட் பாலன்ஸ் செய்ய இயலவில்லை. ஆனால் நாம் உபயோகபடுத்தும் மென்பொருள் அமெரிக்கன் தயாரிப்புகள், முன் எப்போதும் இல்லாத அளவு நம் இரு நாட்டிற்கான உறவு அதிகரித்திருக்கிறது குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தகவல் பரிமாற்றத்தில். ஆகையால் டெக்னாலஜி ட்ரான்ஸபெர், கட்டமைப்பு என்று எல்லாம் இந்தியாவிற்கும் வந்து சேரும் அப்பொழுது உலகத்தில் எந்த நாட்டிலும் செய்ய இயலாத ஒரு விஷயத்தை நாம் செய்து முடித்திருப்போம் அது பிறக்கும் குழந்தை முதல் கிழவன் வரை அனைவரின் பயோமெட்ரிக் டேட்டாபேஸ். நம் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ்  முதல்  இறப்பு வரை அனைத்தும் டிஜிட்டலாக index செய்து தேடுவதற்கு தயார் நிலையில் இருக்கும். பிக் பாஸ்சில் 30 கேமெராக்கள் கண்காணிப்பதை போல, நம் வாழ்வின் ஒரு ஒரு நொடியும், நாம் அறியாமல் செய்த தவறுகளும், ஆர்வக்கோளாறினால் செய்யும் செயல்களும்  ஆவணப்படுத்தப்பட்டு அறுவடைக்கு காத்துக் கொண்டிருக்கும்.
சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பது போதாது என்றுதான் தற்போது இந்திய அரசு ஆதாரை அனைத்துக்கும் கட்டாயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.  வங்கிக் கணக்கு முதல் ட்ரைவிங் லைசென்ஸ் வரை, ஆதாரை அறிமுகப்படுத்தியதன் அடிப்படை நோக்கமே, நமது அத்தனை நடவடிக்கைகளையும் கண்காணிப்பில் கொண்டு வருவதுதான்.
இந்த எலெக்ட்ரானிக் சாதனங்கள், நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளதோ இல்லையோ, ப்ரைவசி என்ற நமது தனியுரிமையை மொத்தமாக காவு வாங்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.
“A child born today will grow up with no concept of privacy at all. They will never know what it means to have a private moment to themselves, an unrecorded, unanalyzed though” – Edward Snowden
 நன்றி:சவுக்கு.                                                                                                            ஜீவானந்த் ராஜேந்திரன்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கறுப்புப் பணம் -2

அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அவற்றை அங்கிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போலவும் ஊடகங்களால் ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. கறுப்புப் பணம் பற்றி ஓயாமல் பேசப்பட்டு வருகிறது என்ற போதிலும், ஒரே ஒரு ரூபாய் கறுப்புப் பணத்தைக்கூட வெளிநாட்டு வங்கிகள் எதிலிருந்தும் இந்திய அரசு பறிமுதல் செய்ததில்லை.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பது யார்? “தெரியும், ஆனால் சொல்ல முடியாது” என்கிறார் பிரணாப் முகர்ஜி. தெரிந்தாலும் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்பதே உண்மை நிலைமை. அந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டது என்றும், அதற்கு வரி கட்டவில்லை என்றும் அரசாங்கத்தால் ஒருவேளை நிரூபிக்க முடிந்தால், அதற்கான வரித்தொகையை மட்டும் வசூல் செய்யலாம். அவ்வளவுதான்.
கறுப்புப்பணம் என்பது உலக முதலாளி வர்க்கம் கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்திருக்கும் மூலதனம். இந்தக் கள்ளத்தனத்தைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதற்காகவும், கறுப்பை வெள்ளையாகக் காட்டுவதற்காகவும், பல சொர்க்கத்தீவுகளை உலக முதலாளி வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இத்தீவுகளின் அரசுகள்,  உலக முதலாளித்துவ வர்க்கம், தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் முடியரசுகள்.
அத்தீவுகளிலிருந்து நம் நாட்டுக்குள்ளும் இங்கிருந்து அங்கும் தாவியபடி இருக்கும் மூலதனம் அங்கிருக்கும்போது கறுப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. இங்கே வரும்போது வெள்ளையாகத் தோற்றமளிக்கிறது  என்று இக்கட்டுரையின் முதற்பகுதியை முடித்திருந்தோம்.
வரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு  எது வெள்ளை, எது வரி தவிர்ப்பு  எது வரி ஏய்ப்பு, எது இந்தியா  எது வெளிநாடு என்பன போன்ற  பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின்  67% பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்” என்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு வோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில் விற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச் தொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின் எல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின் கைக்கு மாறியது.
ஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன் நிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது வருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட மறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில் நடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு உரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம், ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச் சேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு கிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.
“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப் பங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம் கட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன் நிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட வல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை செய்தனர்.
ஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சு,  மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து வோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும் வோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில் இருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும்,  இந்தியாவில் உள்ள சொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.
அது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு நிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான் என்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய மூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும், இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான் வருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன், வோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும் கண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ராதாகிருஷ்ணன்.
கறுப்புப்-பணம்ரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடபோன் நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக் கட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு தோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
“இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை நாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில் குமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம். அரசாங்கமோ “இது எங்க ஏரியா, உள்ளே வராதே!” என்று நீதிமன்றத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தது  அதெல்லாம் போன வருசம்! அவர்கள் வேறு நீதிபதிகள்!
இப்போது, “வரி தவிர்ப்பு என்பது மூலதனத்தின் அடிப்படை உரிமை என்றும், வரிவிதிப்பு என்பது மூலதனத்தின் மீதான மரணதண்டனை”  என்றும் (Capital Punishment on Capital Investment – Justice Radakrishnan)  வியாக்கியானம் செய்து வோடாபோனுக்கு வரிப்பணத்தைப் பிடுங்கிக் கொடுக்கிறது உச்ச நீதிமன்றம். “இந்தியா வரியில்லா சொர்க்கமல்ல, வருமான வரிச் சட்டத்தை முன்தேதியிட்டு திருத்தப்போகிறோம்” என்கிறது மத்திய அரசு  இது இந்த வருசம்! இவர்கள் வேறு நீதிபதிகள்!
ஆனால் அரசாங்கம் என்னவோ, அதே அரசாங்கம்தான். ஹட்ச், வோடாபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை எப்படி நடத்தி வந்தனர் என்பது பற்றி இதுவரை ஒன்றுமே அறியாமல் இருந்துவிட்டு, இப்போதுதான் கண்டுபிடித்துள்ளதைப் போலப் பேசுகிறது மே 20ஆம் தேதியன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான ‘வெள்ளை அறிக்கை’.
“மொரிசியஸ், கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் இருந்த பல லெட்டர் பேட் கம்பெனிகளைத் (Post Box Companies) தனது கிளை நிறுவனங்களாகக் காட்டி, அவை மூலம் 1992 முதல் 2006 வரை ஹட்சின்சன் குழுமம் இந்தியாவில் முதலீடு செய்தது. பின்னர் கேமேன் தீவுகளில் அந்நிறுவனம் வைத்திருந்த லெட்டர் பேட் கம்பெனி ஒன்றின் மூலமாக தனது இந்தியத் தொழில் முழுவதையும் வோடபோனுக்கு விற்றுவிட்டது” என்று கூறி கார்ப்பரேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதைப் போல நாடகமாடுகிறது, பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை. எதற்காக இந்த நாடகம்?
தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அரசு இழந்திருக்கும் 11,200 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதனாலும், வோடாபோன் வழக்கில் அரசு சந்தித்திருக்கும் இமாலயத் தோல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்த அரசு வைத்திருக்கும் கள்ளக் கூட்டை அம்பலப்படுத்திவிடும் என்பதனாலும்தான் இந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதைப் போல நடிக்கிறது அரசு.
“தங்கள் செயல்பாடுகளைக் கறுப்புப் பணத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது தங்கள் நிறுவனத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார், வோடாபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ. விட்டோரியோ கொலாவ். வோடபோன் நிறுவனத்தின் வக்கீலான ஹரிஷ் சால்வே, மன்மோகன் சிங்கை சந்திக்கு இழுத்திருக்கிறார். “தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்து விட்டால், முன் தேதியிட்டு சட்டத்திருத்தம் ஏதும் கொண்டுவருவீர்களா?” என்று மன்மோகன் சிங்கிடம் கேட்டாராம் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன். “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு அமல்படுத்தும்” என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தாராம் மன்மோகன் சிங். “கேவலம் 11,200 கோடி ரூபாய்க்காக ஒரு பிரதமர் தான் கொடுத்த வாக்கை மீறலாமா? நம்முடைய தேசத்தைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?” என்று துடிக்கிறார் ‘தேசபக்தர்’ சால்வே.
வோடாபோனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முடக்கும் விதத்தில் முன்தேதியிட்ட  சட்டமொன்றைக் கொண்டு வர முயன்றால், இந்திய அரசின் மீது வழக்கு தொடுத்து சர்வதேச தீர்ப்பாயத்திற்கு இழுப்போம் என்று கூறியிருக்கிறது வோடபோன் நிறுவனம்.
கறுப்புப் பணத்தையும் கார்ப்பரேட் மோசடியையும் நியாயப்படுத்தும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால், அதனைச் சரி செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தைக் காட்டி வருகிறது அரசு. அவ்வளவே!  வோடாபோன் தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்திப் பேசுவதில் தங்களையே விஞ்சி விட்டது குறித்து அலுவாலியாவும் சிதம்பரமும் மகிழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை.
அவ்வப்போது சில நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையைக் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்களெனினும், இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பைத்தான் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. வரி ஏய்ப்பு உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாகச் சட்டபூர்வமானவையாக்கி வருகின்றது  தாராளமயக் கொள்கை.
கறுப்புப்-பணம்
பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கை 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன என்ற உண்மையை இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல குறிப்பிட்டிருப்பதுடன், இது இந்திய முதலாளிகளின் கறுப்புப் பணம், ஞானஸ்நானம் பெற்று வெள்ளைப் பணமாகவும், அந்நிய மூலதனமாகவும் இந்தியாவுக்குள் நுழைவதற்கான ஒரு கொல்லைப்புற வழியாகவும் மாறிவிட்டதாகக் கூறுகிறது.
மொரிசியஸ், கேமேன் தீவுகள்  உள்ளிட்ட பல வரியில்லா சொர்க்கங்களுடன், இந்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதற்கும், கறுப்பை வெள்ளையாக்குவதற்குமான வாய்ப்பை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்காகத்தான்.
மொரிசியஸின் மக்கட்தொகை வெறும் 12 இலட்சம். இந்த சுண்டைக்காய் நாட்டில் இந்தியத் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதற்கோ, இலாபம் ஈட்டுவதற்கோ எதுவும் இல்லை. மேலும் அந்த நாடு, முதலீட்டு ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் ஏதும் இல்லாத வரியில்லா சொர்க்கம் என்பதால், அங்கே வரிவிலக்கு கோருவதற்கான தேவையும் இல்லை. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு இந்தியாவில் வரிவிலக்கு அளிக்கும் ஒரே நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தமே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொரிசியஸ் தீவின் குடியிருப்போராக சான்றிதழ் பெற்று (Tax Residency Certificate), அதன் பின்னர் அங்கே ஒரு லெட்டர் பேடு கம்பெனியைத் தொடங்கி, அக்கம்பெனியின் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வந்தன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.
கறுப்புப்-பணம்இந்த அநீதியைக் காணப் பொறுக்காத சில வருமான வரித்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியையும், வரி செலுத்த தவறியதற்கான அபராதத்தையும் செலுத்துமாறு, 2000வது ஆண்டில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குத் தாக்கீது அனுப்பினர். மறுகணமே மும்பை பங்குச் சந்தை கிடுகிடுக்கத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து வெளியேறப்போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் அரசை அச்சுறுத்தினர். உடனே, அன்றைய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, “மொரிஷியஸில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை” என்று நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (Central Board of Direct Taxes) சார்பில் சுற்றிக்கை அனுப்பி, வரி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தினார்.
இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தது. மேற்கூறிய சுற்றறிக்கை, “இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது என்றும், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது என்ற பெயரில் வரி ஏய்ப்பை ஊக்குவிப்பது” என்றும் கூறி, அதனை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
உடனே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பா.ஜ.க. அரசு, “அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளைக் கொடுத்தே  ஆகவேண்டும்” என்று வாதிட்டது. மேற்கூறிய இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை வரி ஏய்ப்பாகக் கருத முடியாது என்றும், அது வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இதுவும் போதாதென்று, மார்ச் 2003 க்குப்பின் வாங்கி விற்கப்படும் பங்குகள், பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வதாக 2003-04 பட்ஜெட்டில் அறிவித்தார் யஷ்வந்த் சின்கா. 2004இல் ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.  பங்குப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை முற்றிலுமாகவே ரத்து செய்வதாக அறிவித்தார், ப.சிதம்பரம்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சிறிய சிராய்ப்பு ஏற்படும் வகையில் ஒரு சிறிய நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், உடுக்கை இழந்தவன் கை போல, விரைந்து சென்று இடுக்கண் களைந்த காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராகச் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 4,5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரித்தள்ளுபடிகளை வாரி வழங்கும் இந்த அரசுதான், வரியில்லா சொர்க்கங்களின் வழியாக நடத்தப்படும் மறைமுகமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சட்டமியற்றப் போவதாகவும் கறுப்புப் பணத்தை முடக்கப் போவதாகவும் கூறி வருகின்றது.
கறுப்புப்-பணம்-1

புதன், 20 செப்டம்பர், 2017

ஒரு உளவாளியின் கதை

உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல.
தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.
ஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.
பிரித்தானியா அதிகாரத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் போலிஸ்படையில் இணைத்துக்கொண்ட ஓர்வெல், பர்மாவிற்கு அனுப்பப்படுகிறார். அங்கே போலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.
1927 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குத் திரும்பிய ஓர்வெல், அங்கு எழுத்தாளராகும் முடிவிற்கு வருகிறார். அங்கு வேறு தொழிகள் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். தனது வறுமை எவ்வாறு தன்னை தின்றது என்று தனது நூலில் அவரே பின்னதாகக் குறிப்பிடுகிறார்.
முன்னதாக மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.
1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
பிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.
அந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.
1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.
இதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.
ஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பாளனாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள்அதிகரவர்க்கத்தின் மரணக் கிடங்கில் புதைந்து கிடக்கின்றன.. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது,

திங்கள், 18 செப்டம்பர், 2017

கறுப்புப் பணம் .......,(1)

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 
25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.
காமன்வெல்த்ஆதர்ஷ்அலைக்கற்றை ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், அன்னா ஹசாரேயின் தொந்தரவுகளாலும் அவதிப்பட்டு வரும் சூழலிலும்கூட, அத்வானி வகையறா கறுப்புப் பணம் பற்றி நடத்தும் நாடாளுமன்ற அமளிகள் குறித்து காங்கிரசு அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கறுப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி உரையாற்றி அமர்ந்த பின்னர், “கருப்புப் பணத்துக்கு எதிராக ரதயாத்திரை போனீர்களே, அதனால் ஆன பயன் என்ன?” என்று அத்வானியைக் கேட்டார் பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, “சுவிஸ் வங்கிகளில் இருந்து பணத்தைக் கொண்டுவர  இராணுவத்தையா அனுப்ப முடியும்?” என்று நக்கலும் செய்தார்.  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் மீது படையெடுக்கச் சொல்லும் பா.ஜ.க., கறுப்புப் பண விவகாரத்தில் ‘எல்லை’ மீறமுடியாது என்பது காங்கிரசுக்குத் தெரியாதா என்ன?
கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்“கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது வெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. “கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடு” என்று கேட்டுக் கொண்டிருக்கும் அத்வானி உள்ளிட்ட யாரும் இதனை எதிர்த்து மூச்சு விடவில்லை. கறுப்புப் பணம் குறித்த உண்மையான வெள்ளை அறிக்கை இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய நாடுகளின் அரசுகளோ ‘கறுப்பு இந்தியர்களின்’ பட்டியலை இந்திய அரசுக்குத் தரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் இலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில் ஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும் பட்டியலாகும்.
இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளால் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று முதலில் கூறியது மத்திய அரசு. “அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு”என்று கேட்டால், “வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற முடியாது” என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
கையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 3,887 கோடி ரூபாய் வரி  ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம் ஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும்.
பிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில் மற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள் அக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான இரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன. இனி என்ன செய்வது?
கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் உள்ள விவரப்படி சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் அத்தகையோர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்து உண்மை நிலை என்னவென்று ஆராயும்படி தொடர்புடைய வருமான வரி அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாம். (தினமணி  26 டிச.2011) அதாவது சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்துள்ள முதலாளியோ, சினிமா நட்சத்திரமோ, அரசியல்வாதியோ ஒவ்வொரு ஆண்டும் செய்த செலவுகள், அவர்களுடைய வருமானத்துக்கு மீறியதாக இருந்தாலோ, அல்லது வரி கட்டாமல் வருமானத்தை மறைத்திருந்தாலோ அவற்றையெல்லாம் வருமானவரித்துறை கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்தபின், “இத்தனை கோடி ரூபாய் வருமானத்தை நீங்கள் மறைத்திருக்கிறீர்கள். இந்தப் பணத்தைத்தான் நீங்கள் சுவிஸ் வங்கியில் போட்டிருக்கிறீர்கள்” என்று அவர்களை மடக்கி, அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுமாம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொக்கின் காதில் ‘வெண்ணெய்’ என்று சொன்னாலே போதும், அது சரணடைந்து விடும் என்கிறது அரசு.
மிகவும் சிக்கலானதாகச் சித்தரிக்கப்படும் இந்தப் பிரச்சினையை ஒரு  எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு நகைத்திருட்டு வழக்கை நம்மூர் போலீசு எப்படிக் கண்டுபிடிக்கிறது? தன் கையில் உள்ள திருடர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடுகிறது. இன்னொருபுறம், திருட்டு நகைகளை வாங்கும் சேட்டுக் கடைகளை சோதனையிட்டு, நகையைக் கண்டுபிடிப்பதுடன், அதனை அங்கே கொண்டுவந்து விற்ற திருடனையும் கண்டுபிடிக்கிறது.
கறுப்புப் பண விவகாரத்தில் நடப்பது என்ன? குறிப்பிட்ட சேட்டு கடையில் ஒரு திருடன் பத்து பவுன் நகையை விற்றிருக்கிறான் அல்லது அடகு வைத்திருக்கிறான் என்ற விவரம் அரசுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், சேட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார், திருடனும் மறுக்கிறான். சேட்டின் மேல் கைவைக்க முடியாது (படையையா அனுப்ப முடியும்?) என்று சொல்லிவிட்டார் பிரணாப் முகர்ஜி. திருடன் மீதும் அரசு கைவைக்காதாம். குறிப்பிட்ட ஆண்டுகளில் திருடனின் வரவுசெலவு கணக்குகளை வருமானவரித்துறை மூலம் பரிசீலித்து, கணக்கில் காட்டாத வரவு இருந்தால் அதைக் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில், “அந்தப் பணம் திருட்டு நகையை விற்று வந்ததாகத்தான் இருக்க முடியும்” என்று அரசு நிரூபிக்குமாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர்  கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் சட்டபூர்வமான வழிமுறையாம்.
அப்படிக் கண்டுபிடித்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். வருமானவரித்துறை என்ன செய்யும்? சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் 700 இந்தியர்கள் இரகசியக் கணக்கு வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை பிரான்சிடமிருந்து பெற்றிருக்கிறது இந்திய அரசு. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்று அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. எனவே, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாது.
கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்ஒரு குறிப்பிட்ட நபருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என்று வருமான வரித்துறை நிரூபித்து விடுவதாகவும் வைத்துக் கொள்வோம். சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது. ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (FERA) சட்டத்துடைய பல்லைப் பிடுங்கி, அதனை 1999 இல் பெமா (FEMA) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.
எனவே,  எச்.எஸ்.பி.சி (சுவிஸ்) வங்கியில் 438 கோடி ரூபாயை இரகசியக் கணக்கில் வைத்திருந்த 80 இந்தியர்களிடம், “ஐயா, அருள் கூர்ந்து அந்தப் பணத்துக்கு வரியைக் கட்டிவிடுங்கள்” என்று வருமானவரித்துறை கெஞ்சியது. “டேய் முடியலடா, ஓடாதடா” என்று திருடனிடம் மூச்சிரைக்க கெஞ்சும் சிரிப்பு போலீசின் நிலைமைதான்! மனமிரங்கிய அந்த 80 தேசபக்தர்களும் வரி செலுத்திவிட்டார்கள். கொன்னால் பாவம், தின்னால் போச்சு என்ற கதைதான். 438 கோடிரூபாயும் இப்போது வெள்ளையாகிவிட்டது. அந்த 80 பேரின் பெயரைக்கூட அரசு வெளியிடவில்லை. இது கறுப்புப் பணம் தொடர்பான ஒரு கதை. (எகனாமிக் டைம்ஸ், நவ,10,2011)
இலஞ்ச ஊழல்தான் நம் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், ஊழலை ஒழித்துச் சிறந்த அரசாளுமையை வழங்க முடிந்தால் ஏழ்மை ஒழிந்துவிடும், நாடு வல்லரசாகிவிடும் என்ற பிரமையும், 70 இலட்சம் கோடியைக் கைப்பற்றி விநியோகிக்கும் கனவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. குறிப்பாக 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் மற்றும் சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மற்றும் வரிஏய்ப்பு மோசடி என்று குற்றம் சாட்டப்படும் ஹசன் அலி விவகாரம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்வோம். அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, “இவர்களுக்கு உங்கள் நாட்டின் வங்கிகளில் கணக்கு இருந்தால் எமக்குத் தெரிவியுங்கள்” என்று கறுப்புப் பணத்தின் சொர்க்கங்களாக கருதப்படும் சுவிஸ், கேமேன் தீவுகள், வர்ஜின் தீவுகள், மொனாகோ போன்ற பல்வேறு நாடுகளுக்கும் கடிதம் (letter rogatory) அனுப்பியது. ஒரு மரியாதைக்காகக் கூட எந்த நாடும் பதிலளிக்கவில்லை. அதேபோல ஹசன் அலி வழக்கிலும் பல நாடுகளுக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. (தெகல்கா, 23 ஜூலை, 2011)
வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்று ராம் ஜெத்மலானி தொடுத்திருக்கும் வழக்கு, ஜனவரி 19, 2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  லீசென்ஸ்டைன் வங்கியில் 18 இந்தியர்கள் 43.83 கோடி ரூபாய் பணம் போட்டிருப்பதாகவும், அதற்கு  24.26 கோடி ரூபாய் வரியும் அபராதமும் செலுத்துமாறு  கேட்டிருப்பதாகவும்  மத்திய அரசு கூறியது. மேற்படி இந்தியர்களின் பெயரை வெளியிட்டால் அது நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிப்பதுடன், அதன்பின் எந்த விவரத்தையும் பெற இயலாத சூழல் எற்படும் என்றும், லீசென்ஸ்டைன் உள்ளிட்ட பல நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இருப்பதால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார், சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்.
கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்“இவ்வளவுதான் கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரமா? நாம் பிரம்மாண்டமான தொகையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தேசம் சூறையாடப்படுகிறது. இது கற்பனைக்கு எட்டாத குற்றம். இது கலப்படமில்லாத திருட்டு. இப்பிரச்சினை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களைப் பற்றியதல்ல. இது எங்களுக்குப் பெரிதும் கவலையளிக்கிறது” என்றார்கள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகிய நீதிபதிகள். இதன் தொடர்ச்சியாக  கறுப்புப் பணத்தை புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக ஜூலை 4, 2011 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதாக உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். இவ்வாறு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, நிர்வாக எந்திரத்தின் செயல்வரம்புக்குள் தலையிட்டுச் சீர்குலைப்பதாகும் என்றும், இந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் மனு செய்திருக்கிறது, மன்மோகன் அரசு.
திருட்டு, சூறை, கற்பனைக்கு எட்டாத குற்றம் என்று உணர்ச்சிகரமான பல சொற்றொடர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்தாலும், இச்சொற்களுக்கு சட்டரீதியாகவோ நடைமுறையிலோ எவ்விதப் பொருளும் இல்லை. திருட்டுப் பணம், கறுப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுதக் கடத்தல் பணம் என்று என்ன அடைமொழிகளைச் சேர்த்து அழைத்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பல சொர்க்கத் தீவுகளைத் தனித்தனி நாடுகளாக உலக முதலாளித்துவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு இந்தியச் சிறுநகரத்தின் பரப்பளவு கூட இல்லாத தீவுகளும், மக்கள் தொகையாக 10,000 பேர் கூட இல்லாத இடங்களும் இவ்வாறு தனித்தனி நாடுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 70. இந்த 70 நாடுகளின் மொத்த மக்கட்தொகையைக் கூட்டினாலும் ஒரு கோடிப் பேர் கூட வராது. ஆனால், உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த ‘நாடுகளுக்கு’ச் சொந்தம்.
கறுப்பை வெள்ளையாகக் கருதும் இந்த சொர்க்கத்தீவுகளை மூலதனத்தின் மன்னராட்சிகள் என்றும் கூறலாம். எனினும், திருவிதாங்கூர் மன்னர்களைப் போல தம் செல்வத்தை முதலாளிகள் இங்கே புதைத்து வைக்கவில்லை. இது மூலதனம். சுரண்டலில் ஈடுபட்டால் மட்டுமே இது வாழவும் வளரவும் முடியும். எனவே, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதனம், கண நேரத்தில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் தாவியபடியே இருக்கிறது. அங்கிருக்கும்போது கறுப்பாகவும், இங்கிருக்கும்போது வெள்ளையாகவும் அது நம் கண்ணுக்குத் தென்படுகிறது.
(தொடரும்)
_______________________________________
– நன்றி:புதிய ஜனநாயகம்,

புதன், 13 செப்டம்பர், 2017

துளசி மகத்துவம் !

‘‘தெய்வீகத்தன்மை கொண்ட செடியாக வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு பூஜிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். துளசி மணி மாலையை அணியும் பழக்கத்தை நம் முன்னோர் பின்பற்றியதையும் பார்த்திருப்போம்.
 கோயில்களில் அதிகம் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம். இதுபோல் ஆன்மிக வழிபாட்டுக்கான செடி மட்டுமே அல்ல துளசி. 
அதில் ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவகுணங்களும் அடங்கி இருக்கிறது.

‘‘துளசியில் வெண்துளசி, கருந்துளசி என இருவகைகள் உள்ளன. இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும் கூறுவார்கள். காட்டுப் பகுதிகளில் இன்னும் பலவகை துளசிசெடிகள் உள்ளன. உலகமெங்கும் துளசி செடிகள் இருந்தாலும் இந்தியாவில் வளரும் துளசி வகைகளை கிருஷ்ண துளசி, ராம துளசி, பபி துளசி(Babi Tulsi), துருத்ரிகா துளசி(Drudriha Tulsi), துகாஸ்மியா துளசி(Tukashmiya Tulsi) என்று வகைப்படுத்துகிறார்கள்.

இதில் கிருஷ்ண துளசி தொண்டை நோய்கள், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் மற்றும் சருமம் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. 
குஷ்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள ராம துளசி அதிக நறுமணம் உடையது. இது வங்காளம், சீனா, பிரேசில் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.பபி துளசி சமையலில் சுவை மற்றும் நறுமணத்துக்காக சேர்க்கப்படுகிறது. 
துருத்ரிகா துளசி சளி மற்றும் தொண்டை வறட்சிக்கு நிவாரணியாக உள்ளது. 
இது சதைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதால், வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. 
இந்த வகை துளசி நேபாளம், வங்காளம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

துகாஷ்மியா துளசி தொண்டை கோளாறுகள், குஷ்ட நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. இந்த துளசி உடல் எலும்புகளுக்கு வலுசேர்க்க பெரிதும் உதவுகிறது. 
காலையில் வெறும் வயிற்றில் ஐந்து துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 
Eugenol என்கிற வேதிப்பொருளை உள்ளடக்கியது Eugenol Type Tulsi. இந்த வேதிப்பொருள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

. இது குடலின் தசைகளை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, வெண்குஷ்டம், விஷமுறிவு, பூச்சிக்கடி போன்றவற்றுக்கு நிவாரணியாக உள்ளது. தலையில் ஏற்படக்கூடிய பூஞ்சை பாதிப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதோடு, வலி நிவாரணியாக உள்ளது. Anti Viral, Anti Parasitic, Anti Oxident, Anti Insect போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது இந்த வேதிப்பொருள்.

நுரையீரலில் சளி தொந்தரவுகளால் ஏற்படக்கூடிய Lung Congestion பிரச்னைக்கு நிவாரணியாக இருப்பதோடு, Oxidative stress குறைவதற்கு உதவுகிறது. இந்த Oxidative stress உடலில் அதிகரிப்பதால்தான் இளமையில் முதுமை, உடல்வலு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. 
Flavonoids, Proline, Ascorbate போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால், Anti Oxidant ஆக செயல்படுகிறது. மேலும் துளசி Anti Oxidant ஆக செயல்படும் Glutathione என்கிற சத்துப் பொருளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. 
துளசியில் உள்ள Caryophyllene என்கிற வேதிப் பொருள் Anti Inflammatory, Anti Fungal, Anti Aging, Decreases Cytotoxicity போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

Citronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நீரிழிவு, ஆஸ்துமா நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. Citronellol பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. Camphene, Cineole போன்றவை Lung Congestion பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. 
துளசியில் உள்ள அசிட்டிக்அமிலம் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.

சுக்கு, மிளகு, திப்பிலியுடன் (திரிகடுகு) ஒருபிடி துளசியை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி, இருமலை கட்டுப்படுத்துவதோடு, உடல் சோர்வும் நீங்கும். மேலும் இது சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. துளசியுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். 
சிறிதளவு கிராம்புதூள், பச்சை கற்பூரம், உப்பு கலந்து துளசியை பல்லில் வைப்பதால் பல் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் குறைகிறது.துளசி சுவாசத்தில் புத்துணர்வை அளிப்பதோடு, வாய் துற்நாற்றத்தைப் போக்குகிறது. இதய சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் படை நோய்க்கு, துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றை சம அளவு சேர்த்து படை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
துளசியுடன் ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கத்தைச் சேர்த்து ஒன்றாக அரைத்து தலையில் பற்று போடுவதால் தலைவலி குணமாகிறது. 
துளசி இலையை கசக்கி அதை உடலில்தடவினால் கொசு நம்மை நெருங்காது. தேள் கடிக்கு உடனடியாக துளசியை மென்று சாப்பிடுவதோடு, கடிபட்ட இடத்தில் துளசியை கசக்கி தடவ விரைவாக நிவாரணம் கிடைக்கிறது’’ .

                                                                                                        - க.கதிரவன்,

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...