bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

"மே தின வாழ்த்துக்கள்.!"
எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் .
18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம்.
18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது.
அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன.
அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை.அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும்.பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர்.

அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியிருந்தது.தூங்கக்  கூட அனுமதிப்பது கடினமானதாக இருந்தது.
தொழிற்சாலைகளில் இருந்து தப்பித்தால் அவன் குற்றவாளியாக கருதப்பட்டான்.அரசு அவை தேடி கண்டு பிடித்து தண்டணை வழங்கியது .
மீண்டும் தப்பியவன் மாட்டினால் அவன் நெற்றியில் சூட்டுக்  கோ லால்  இலச்னை இட்டு அவமானப் படுத்த ப்பட்டான் .அதன்பின் அவன் மாடு போல் உழைத்தாலும் நரக வாழ்வுதான்.
18-ம் நூற்றாண்டு இறுதியிலும் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர்கள் சிந்திக்கவும்-போராடவும் ஆரம்பித்தனர்.
நெஞ்சில் குமுறிய உழைப்பாளர்கள் ரகசியமாக தங்களுக்கு உழைப்புக்கிடையில் ஓய்வும்,சரியான சாப்பாடும்,இருக்க குடும்பம் நடத்த  தனியாக  இடமும் தேவை என்று முடிவெடுத்து அதற்காக போராட தயாராகினர்.
suran
ஒன்றுமே இல்லாத தாங்கள் இனி இழக்க ஒன்றுமே இல்லை.வென்றால் பொன்னுலகம்தான் என  முடிவெடுத்து கடுமையாக போராடி பல உயிர்களை இழந்து தங்களுக்கான உரிமைகள் சிலவற்றை பெற்றனர்.
அதில் தலையானது 8மணி நேர வேலை.
முதலில் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிலாளர் போராட்டத்தில்  குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்.இந்த  இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.
 அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

"8 மணி நேரம் வேலை "
அது கிடைக்க பல போராட்டங்கள்.ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856-ல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.
 இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் முதல் மைல் கல்.
1896 ஏப்ரல் மாதத்தில் மாமனிதன் "லெனின் 'மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யாவில் தொழிலாளர்  புரட்சி செய்து ஆட்சியையே மாற்றியதற்கும்,கம்யூனிசம்  உண்டானதற்கும் முதல் காரணம்.
தொழிலாளர் வர்க்கம் ஆட்சியையே மாற்றியது ரஷ்யாவில்தான் என்றாலும் "மே-1 தினம்"
தொழிலாளர் தினமாக வடிவானது முதலாளித்துவ அடையாளமான அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.

"கூட்டத்துக்கு வாங்க "
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு  விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக இரு ந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும்1200 தொழிற்சாலைகளில் இருந்து  3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 தொழிலாளர்களின்  வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஊர்வலங்களில் கலந்து கொண்டு அரசை திகைக்க வைத்தனர்.
தொழிலதிபர்களும் அவர்களுக்கு ஆதரவாக அரசும் இணைந்து இந்த தொழிலாளர்களின்  ஒற்றுமையான போராட்டத்தை சிதைத்து தங்கள் வழிக்கு கொண்டுவர திட்டங்கள் தீட்டினர் .தங்கள் ஆட்களை கருங்காலிகளாக வெளியெ வராமல் ஐந்தாம் படையாக தொழிலாளர் கூட்டங்களில்  ஊ டுருவ வைத்தனர்.
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு  கூட்டத்தை நடத்தினர். அங்கு இந்த ஐந்தாம் படையினர் வன்முறையை தூண்டி கலவரமாக வெடிக்க வைத்தனர்.அதை பயன் படுத்திய   காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் நடத்தினர் தொழிலாளர்கள்.
ஆயிரக்கணக்கில்  தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியாக நடைபெற்றது.
அதில் மறைந்திருந்த முதலாளிகள் ஆட்கள்  திடீரென்று காவல் துறையினர் மீது  வெடிகுண்டு வீசினர்.
 அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின் கேட்கவா .வெண்டும் இதற்கென்றே காத்திருந்த காவல்துறையினர்  கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.
 அத்துடன் தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர உட்பட பலரை   கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.நவம்பர் 11,1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் 7 பேர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில்  5 லட்சம் பேர்  கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பை காண்பித்தனர்., அமெரிக்கா முழுவதும் கறுப்பு கொடிகள் எற்றி துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.
 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்தது.
 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
அதன் முதல்  மே முதல் நாள் , சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக உலகமெங்கும் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
நமது இந்தியாவில் சென்னை மாநிலத்தில்தான் முதன் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியான " ம.சிங்காரவேலர்" 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடி செங்கொடியை ஏற்றினார்.
கலைஞர்  மு.கருணாநிதி தான் தமிழ் நாட்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக "மே தின"த்துக்கு அரசு விடுமுறை வழங்கியவர்.
"மே தினப்  பூங்கா "பெயர் சூட்டியவர்.
suran
பல உயிர்களை இழந்து போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் இப்போது தொழிலாளர்கலாலேயே விட்டுக்கொடுக்கப்படுகிறது.அரசும் முன்பை போல் முதலாளிகள் கூட்டணியுடன் உழைப்பவர்களை ஏமாற்ற ஆரம்பித்தள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே தொழிற்சங்க உரிமைகள் பறி போக வைக்கும் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய உதாரணம் ஹுண்டாய் .தொழிற் சங்கம் அமைக்கவும் உரிய கூலி பெறவும் எவ்வளவு பொராட்டங்கள் .தொழிற் சங்கக் கொடியை ஏற்றியதற்காக தொழிற்சங்க தலைவர்
கை விலங்குடன் இழ்த்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தது.
தகவல் தொழில் நுட்ப துறையில் 8 மணி நேரப் பணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.தான் படித்தவன் கணினி நிபுணர் என்ற கனவில் இருப்பவர்கள் தான் போராடி,உயிர் இழந்து பெற்ற தொழிற் சங்க உரிமைகளை காவு கொடுக்கிறார்கள் .
கை நிறைய கிடைக்கும் சம்பளத்துக்காக.
ஆனால் அமெரிக்காவில் ஓபாமா தும்மினால் அடுத்த நொடியில் இவர்கள் வேலை எந்த உத்திரவாதமும் இல்லாமல் பறி போய்விடும் என்ற அபாயத்தை அவர்கள் உணர்ந்தது போல் தெரிய வில்லை.
இவர்களுக்கும் சேர்த்து  
"மே தின வாழ்த்துக்கள்.!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
                          ரஷ்யாவில் ஒட்டப்பட்ட உலகின் முதல் மே தின சுவரொட்டி.

-----------------------------------------------------------------------------------------------

திங்கள், 29 ஏப்ரல், 2013

சீனாவில் இன்ப உலா...?

பெயரைப்பார்த்தால் "கலைமகள்'.ஆனால் முகம்-உருவம்  சீன வடிவம்.உண்மைதான் அவர் சீன்ப்பெண் தான் .அவரின் பெற்றொர் வைத்த பெயர் "சா ஒ ஜி யாங் "
கலைமகள் தமிழ் மொழி மீது கொண்ட ஆவலால் தானே சூட்டிக்கொண்ட பெயர்.
இங்குள்ள தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாயில் நுழையாத எந்த அர்த்தமும் இல்லாத தமிழலல்லாத பெயர்களை வைத்துக்கொண்டிருக்கும் போது அழகிய தமிழ் பெயரை சூட்டியுள்ளார்.
சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தஇவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார்.
 இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாராம்.
 ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.த மிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .
கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார்.
பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் .
பொதுவாக சீன மக்களுக்கு இந்தியா  என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.
suran
இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார்.
 தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .
இவரது முதல் புத்தகமான ‘சீனாவில் இன்ப உலா ‘ என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளது.
கலைமகள் தனது சீ ன அரசிடம் "மற்ற நாடுகளின் எல்லையை தாண்டி தனது சப்பை மூக்கை நீட்ட வே ண்டாம்"என்று சொல்லி வைப்பாரா?

நன்றி:தமிழ் சி என் என் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் மும்பை, ஹைதராபாத். தில்லி, ஜெய்ப்பூர், வாராணசி,பெங்களூர் என பல இடங்களிலும் பயங்க்ரவாதிகள் வைத்த  இவ்வித வெடிகுண்டுகள் மூலம் எண்ணற்றவர்கள் உயிரிழந்துள்ளனர். அண்மையில் பெங்களூரில் வெடித்த வெடிகுண்டு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."
"அம்மோனியம்  நைட்ரேட் "பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் Improvised Explosive Devices  (IED) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த உரத்தை எளிதில் வாங்க முடிகிறது என்பதால் பயங்கரவாதிகள் ரகசிய ஒளிவிடங்களில் அல்லது வீடுகளில் ரகசியமாக் இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க் முடிகிறது.

  இந்த உரம் விற்பதை தடுக்க இயலாது.காரணம் விவசாயம்.
ஆனால் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டுமே.
வழியை ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
அது பற்றிமேலும்  படிக்க "அறிவியல்புரம் "செல்லுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கடவுளைத் தேடி.........,கடவுளின் பெயரால் தான் எத்தனை எத்தனை கட்டுக்கதைகள்.
கடவுள் குறித்த மனிதனின் கற்பிதங் கள் அவனது கற்பனைத் திற னின் உச்சத்தை காட்டுகிறது. கடவுளுக்கு பாமாலை பாடி யும்புராணக்கதைகளாகப் புனைந்தும் தலப்புராணங் கள் என்ற பெயரிலும் எத்தனை எத்தனையோ நூல்கள் வந்துள்ளன.
வந்து கொண் டேயிருக்கின்றன. மறுபுறத் தில் கடவுளை பகுத்தறிவு நோக்கி ஆய்வு செய்யும் நூல் கள் ஒப்பீட்டு அளவில் குறைவே.“காலந்தோறும் பிராமணி யம்” என்ற தலைப்பில் ஆய்வு பெருநூல் ஒன்றை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய ஆய் வாளர் அருணன் அடுத்து கடவுளின் கதையை சொல் லப் புகுந்திருக்கிறார்.
அவரது நூல் “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை” என்ற தலைப் பில் முதல் பாகமாக வெளி வந்துள்ளது. 40 ஆயிரம், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வகையான மதக்கருத்துக் களும் இல்லை என்றும் மத சிந்தனை மனித மூளையில் உதயமாகி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறி யுள்ள முகவுரையுடன் இந் நூல் துவங்குகிறது.
 மரணம் ஏற்படுத்திய பயம், இயற்கையோடு போராடி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய வை தான் கடவுள் குறித்த கற்பிதங்களுக்கு துவக்கப் புள்ளியாக இருந்துள்ளன.
மதம் மற்றும் கடவுள் குறித்த சிந்தனைகள் ஆள்வோரின் கருவிகளில் ஒன்றாகவே காலந்தோறும் இருந்து வந்துள்ளதை இந்நூல் தகுந்த சாட்சியங்களுடன் விளக்குகிறது. தாய்வழிச் சமூகத்தில் பெண் கடவுள்களே முன்னிறுத்தப் பட்டனர். தந்தை வழிச் சமுதா யம் மற்றும் ஆண்டான்- அடிமை சமுதாயம் உருவான நிலையில் பெண்கள், ஆண்களுக்கு அடி மையாக்கப்பட்டதுபோல பெண் கடவுள்களும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

suran
யூ தர்களின் ஆதி மதம் மற் றும் கிறிஸ்தவ- இஸ்லாமிய மதங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தஆய்வு இந் நூலின் தனிச்சிறப்பு எனலாம். தமிழில் இத்தகைய ஆய்வுகள் மிகக்குறைவாகவே மேற் கொள்ளப்பட்டுள்ளன. கடவுள்களும்காலந்தோறும் மாறிக்கொண்டேவந்திருக்கின்றன. சமுதாயத்தின் தேவைக்கேற்ப கடவுள்கள்உருவாக்கப்பட்டி ருக்கிறார்கள்.
 சிந்துவெளி லிங் கமும், வேத வழி ருத்ரனும் ஒன் றாக்கப்பட்டதும் இயற்கை வழி கடவுளான முருகனும், வேத வழி கடவுளான சுப்பிரமணி யனும் ஒன்றிணைக்கப்பட்ட தும் பல்வேறு பெண் கடவுள் கள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்பட்டதும் இந்தநூலில் விரி வாகவும், சுவையாகவும் அல சப்பட்டுள்ளது. இந்தியப் பின்னணியில் மட் டுமின்றி, உலகளாவிய நோக் கில் மதங்களின் தோற்றம் மற் றும் வளர்ச்சி, கடவுளை கருப் பொருளாக கொண்டு விரி வான முறையில் இந்நூலில் அலசப்பட்டுள்ளது.
 குறிப்பாக கிரேக்க சமுதாயம் உருவாக் கிய கடவுள் அதன் வளர்ச்சி, அந்த மரபை எதிர்த்து சாக்ர டீஸ் எனும் மாமேதை கலகக் குரல் எழுப்பி களப்பலியான கதை போன்றவை இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் குறித்த சிந்த னை உருவான பின்னணி மட்டுமின்றி, கடவுள் மறுப்பு குறித்த சிந்தனை உருவான பின்னணியையும் இந்நூல் அலசுகிறது.
கடவுள் இல்லா மதங்களை உருவாக்க முயன்ற வர்கள் கடவுளாக்கப்பட்ட கொடுமையையும் இந்நூல் அலசுகிறது.
suran
"இந்தியாவில் மக்கள் தொகையைப் போலவே கடவுளர்களின் எண்ணிக்கையும் அதிகம்."
பல தெய்வ, பல் உருவ வழி பாட்டிற்கு மாற்றாக ஏகக்கட வுள் உருவான விதம், அதற் குள்ளேயே பல கடவுள்கள் உருவாக்கப்பட்டதற்கான தேவை, அதை எதிர்த்து நடைபெற்ற சித்தாந்த மோ தல்கள் என விரிவான களத் தில் இந்நூல் பயணம் செய் துள் ளது. கடவுள்களின் கதையைக் கேட்டால் இந்தலோகத்தில் மட்டுமின்றி மேலோகத் திலும் வசதியான இடம் உறுதி என்றே எல்லா மதங் களும் ஆசைவலை விரிக்கின் றன.
 கடவுளின் கதை எனும் இந்த நூலை படித்தால் அறி வுத்தளம் விசாலமாகும் என் பது மட்டும் உறுதி. லிங்க வழிபாட்டின் பூர் வீகம் குறித்து இந்தநூல் விரி வாக பேசுவதை படித்த போது, இராமலிங்கம் என்ற எனது பெயரைப் போட சற்று கூச்சமாகத்தான் இருந்தது.
ஆனாலும் வள்ளலாரின் நினை வாகவே இந்தப் பெயரை என் தந்தையார் சூட்டினார் என்று ஆறுதல் பட்டுக் கொண்டேன்.
                                                                                                                    -மதுக்கூர் இராமலிங்கம்,
நூல் விமர்சனம்.
நன்றி;தீக்கதிர். 
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கடவுளின் கதை " -பகுதி 1.

"ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை"


 ஆசிரியர்: அருணன்,

வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்

69- 24 ஏ, அனுமார் கோவில் படித்துறை,
 சிம்மக்கல்,
மதுரை-625001.

பக்கங்கள் : 360.

விலை: ரூ.250/-
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

"வெற்றி-32"

வெற்றிக்கு வழிகள் 32 பற்றிய இடுகை என்று எண்ணிவிட வேண்டாம் .
இந்திய இணையத்தளங்களில் ,இணைய இணைப்புகள் மூலம்   புதிதாக கணினி  வைரஸ் பரவி வருவதாகதெரிகிறது.
 இது 'வின்32' அல்லது 'ராம்னிட்' என்று அழைக்கப்படுகிற கணினி  வைரஸ் வகையை சேர்ந்தது.
 
இணையம் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது.
suran
 இதனை நாம் கிளிக் செய்தால் அது நமது கணிப்பொறியில் உள்ள புரோகிராம் பைல்களை தாக்கும். 
இதன் மூலம் ரகசியமாக உள்ள நமது வங்கி கணக்கு எண், கடவுச் சொற்கள்  போன்ற தகவல்களை திருடிக்கொள்ளும்.அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
மற்ற வைரஸ் அழிக்கும் மென்பொருட்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்  விதமாக இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 வைரஸில் இருந்து பாதுகாக்க  நாம் தரவிறக்கியுள்ள  மென் பொருட்களால் கூட இதனை கண்டுபிடிக்க முடிவதில்லை.
பாதுகாப்பு மென்பொருட்களை அடிகடி புதுப்பித்து கொள்வது, இணையத்திலிருந்து நம்பகம் இல்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
உங்கள் வங்கிக்கணக்குகளை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போதைக்கு அதுதான் இந்த  வைரஸ்களிடமிருந்து  தப்பிக்க வழி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல செய்தி.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது.
அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது.
ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை.
ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது.
ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா?
அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தயாரானவை திரைப்படங்கள் வரிசையில் வரவில்லையா?
அல்லது நூற்றாண்டு விழாவில் திரையிடப்படும் அளவு தகுதி வாய்ந்தவை அல்லாதவையா?
தமிழ் நாட்டில்தான் திரைப்படங்கள் ஆட்சியையே மா ற்றியிருக்கி றது. திரைப்படத்துறைதான் அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜானகி ராமச்சந்திரன் ,ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களை தந்தும் இருக்கிறது.திரைத்துறை தமிழகத்தில்தான் உணர்வுடன் கலந்துள்ளது.அந்த தமிழ்த்திரைப்படங்கள் ஒதுக்கி வைப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.அப்படி நடக்கவும் கூடாது.
அரசு வெளியிட்டப்படியல் முழுமையானதாக இராது என்றே இப்போதுவரை நம்புகிறோம். 

திங்கள், 22 ஏப்ரல், 2013

உலக புத்தக தினம்suran
நேற்று நாம் வாழும் பூமி தினம்.
இன்று நம் வாழ்வை செழுமை படுத்தும் உலக புத்தக தினம்.
மக்கள் தலைவன் "லெனினி"டம் நண்பர் ஒருவர் உங்கள் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டபோது உடனே "புத்தகங்கள் "என்றாராம்.
பிறந்த நாள் அன்று அவர் மீதி அன்பு கொண்ட மக்கள் அனைவரும் புத்தகங்களை பரிசளிக்க எண்ணிக்கை லட்சத்தை தொட்டு விட்டதாம்.
நல்ல புத்தகத்தை போல் நல்ல நண்பன் இல்லை.நல்ல வழிகாட்டியும் இல்லை.
இன்று கணினியும்-இணையம்- மின்னணு புத்தகங்களும் வந்து விட்டாலும் அச்சில் வரும் புத்தகங்களை படிக்கும் இன்பம் தனியேதான்.
டாஸ்மாக்கில் செலவிட்டு போதையை எற்படுத்தி தன்னையே மறக்கும் குடிமக்கள் புத்தகங்களை படிக்கும் போதையை பெற இந்த புத்தக நாளில் வாழ்த்துகிறேன்.முன்னதின் போதை உங்களை மற்றவர்களிடம் சிறுமையாக்கும்.புத்தக போதையோ உங்களை பெருமை படுத்தும் பாதையை தரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
+  காசுக்கு பாதுகாப்பு 

டெல்லியில் விடிந்தால் ஒரு பாலியல் பலாத்கார வன்முறை.
இந்தியாவின் தலை நகரிலே நடக்கும் குற்றங்கள் நம் இந்தியாவையே அசிங்கப்படுத்தி வருகிறது.உலக நாடுகள் ஆய்வு செய்து உலகிலேயே அதிக பாலியல் வன்முறை இந்தியாதான் என்று சான்றிதழ்கள் வரிசையாகத்தருகிறது.
அதை தடுக்க வக்கற்ற இந்திய அரசு உலகிலேயே பெரும் பணக்காரர் வரிசையில் 20-வது இடத்தை தக்க வைத்துள்ள.3000கோடிகளில் குடிசையை கட்டி அதில் வாஸ்து சரியில்லை என்று புலம்பிவரும் ஒரு பண முதலைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை அவர் வீட்டின் கூர்கா வேலையை செய்ய சொல்லுவதும் அவர் போகும்போது பாதுகாப்பு தரக் வைப்பதும் மக்களாட்சி நடப்பதற்கான அறிகுறியாக இல்லை.
முகேஷ் அம்பானி.
அவருக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு, முகேஷ் அம்பானி செல்லும் போதுஅவருக்கு 28 வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர்.

அவர் செல்லும் வாகனத்திற்கு முன், "பைலட்' வாகனம் செல்லும்.பின்னால் திறந்த ஜீப்பில் அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் வாகனங்களில் செல்வர். 
இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும்உண்டு.
உத்தர பிரதேசத்தின் உள்ள, சி.ஆர்.பி.எப். படைப் பிரிவில் இருந்து முதற்கட்டமாக, அம்பானிக்கு பாதுகாப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மும்பையில் உள்ள முகேஷின் 3000கோடி கள்  "அன்டில்லா' வீட்டிற்கு மும்பை காவல்துறை  பாதுகாப்பு வழங்குகிறது.
இப்போது  துணை ராணுவங்களில் ஒன்றான சி.ஆர்.பி.எப்., படைப் பிரிவின் வீரர்கள் இ துவரை மத்திய அரசின் தொழிற்சாலைக[ரெயில்வே,அணுமின் நிலையம்,துறைமுகங்கள்,கண் நீர்த்தொழிற்சாலை போன்ற மு க்கியமான]ளுக்கு மட்டும்தான்  ஒரு பகாசுர  தனியார் நிறுவனத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை. தவறான வழிமுறையும் கூட.அம்பானிகளிடம் கொட்டிக்கிடக்கும் பனக்குவியலுக்கு அவர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை காசு கொடுத்து வைத்துக்கொள்ளலாம் .ஒரு அரசு தனது படைப்பிரிவுகளில் ஒன்றை மக்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் தனி நபரை பாதுக்காக்க அனுப்புவது.அவர் போடும் எச்சில் காசுக்குக்காக த்தான் .இந்த அம்பானி  எப்படி பட்ட தொழில் அதிபர்?
1400 கோடிகள் தொலைத்தொடர்புத்துறையில் ரிலையன்ஸ் அரசை ஏமாற்றியுள்ளது.2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் கையை வைத்து ள்ளது.
நிலக்கரி உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு செயற்கையாக நிலக்கரியை தொண்டி வழங்காமல் தட்டுப்பாட்டை எற்படுத்தி இந்தியாவின் அனல் மின் உற்பத்தியையே கேள்விக்குரியதாக்கி அதிக விலைக்கு தன்னிடமிருந்து மின்சாரத்தையும்,நிலக்கரியையும் விற்கும் அம்பானி.
கோதாவரி,கிருஷ்ணா நதிப்படுகை பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை வைத்து வாராவாரம் பெட்ரோல் விலையை அதிகரிக்க வைத்த அம்பானி.
இயற்கை எரிவாயுவை தான் சொன்ன விலைக்கு வாங்கவில்லை என்பதற்காக பூமியில் இருந்து அதுவும் அரசு இடங்களில் இருந்து எடுத்து விநியோகம் செய்யாமல் அடம் பிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை வாங்க வைத்த மாமனிதன் இந்த அம்பானி .முரைகெடுகள்தான் அம்பானி சாம்ராஜ்யத்தின் அடிக்கல்லே.இல்லாவிட்டால் திருபாய் அம்பானி துபாயில் பெட்ரோல் பல்க்கில் வேலைபார்த்து உழைத்தவர் மகன் உலகில் 20வது பணக்காரனாவது எப்படி நடந்திருக்கும்.?
முறைகேடுகளும் வரி ஏய்ப்பும் தான் இவர் உலக அளவில் 20 வது பணக்காரராக  உருவெடுக்க வைத்துள்ளது.எத்தனை முறை கே டுகள் செய்தாலும்,அரசை -வரியை எய்த்தாலும் அம்பானி கொடுக்கும் தேர்தல் நிதி -கட்சி நிதிதான் காங்கிரசு அரசை இப்படி எடுபிடி வேலையை செய்ய வைத்துள்ளது.மன்மோகன் ,சோனியா கட்சி அளவில் என்னவும் செய்து விட்டு போகட்டும்.மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு எந்திரத்தை அம்பானி வீட்டு காவலுக்கு அனுப்புவது சரியானது அல்ல.
நாடெங்கும் நடக்கும் சிறுமிகள் முதல் கிழவிகள் வரையிலான பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட -வாக்களித்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசு .கட்சி நிதி என்ற எச்சில் காசுக்காக யார்,யார் வீட்டுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது பார்த்தீர்களா?
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------


                           "இந்தியாவின் விஸ்வரூபத்துடன் ஹாலிவுட் ஜுராசிக் பார்க்"

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தங்கம் விலை சரிவு. ஏழைகளுக்கு தொல்லைதானா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பொருளாதார எழுச்சி, தங்க முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் திரும்புவது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம், 22 காரட், ஒரு பவுன் ஆபரணத் தங்கம், 22,240 ரூபாய்க்கு விற்கப்பட்டு, ஏப்ரல், 15ம் தேதி, 20,640 ரூபாய், நேற்று முன்தினம் 19,520 ரூபாயாக குறைந்தது.

  விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என, தகவல் பரவுவதால், உடனடியாக தங்கத்தை வாங்கவும், காத்திருந்து வாங்கவும் பலர் திட்டமிட்டு வருகின்றனர்.
 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை மீது வழங்கப்படும் கடன் தொகை, கிராமிற்கு 1,200 ரூபாய் வரை குறைத்துள்ளனர்.
அரசு வங்கிகளை தொடர்ந்து தனியார் வங்கிகளும்  இதே முடிவை கையாண்டுள்ளன. ஆனால்  தனியார் நகை கடன் வழங்கும், நிதி நிறுவனங்கள், அடகு கடைகளின் நிலை தான் மிக மோசமாகியுள்ளது .
வாடிக்கையாளர் தங்க நகை மீது  95 சதவீதம் வரை கடன் வழங்கி உள்ள தால், தங்கத்தின் விலை சரிவால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.


தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் மற்றும் தனிநபர் பிரிவில், தங்க
நகை கடன் வழங்குகிறது.
 விவசாயிகளுக்கு, 9 சதவீத வட்டியில் இரண்டுலட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குகிறது. சரியான காலக்கெடுவுக்குள்திருப்பி செலுத்தினால் 5 சதவீத வட்டிக்கு, ரிசர்வ் வங்கி விலக்கு
அளிக்கிறது.
தனி நபருக்கு தங்க நகை கடனாக இரண்டு லட்சம் ரூபாய் 10.5சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு, கடந்த வாரம் வரையில் 2,100 ரூபாய் வழங்கப்பட்டது. தங்கம் விலை சரிவால், கிராமுக்கு, 1,700ரூபாய் கடன் வழங்கும் அளவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி தங்க நகைகடன் வழங்கப்படுகிறது .

 தங்கத்தின் விலைக்கும் கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீட 70 முதல், 75 சதவீதமாக உள்ளன.
15 முதல் 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

ஆனால்  வெளிசந்தை  தங்க ம்  விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு 5 முதல்,7 சதவீதம் இழப்புஉணடாகியு ள்ளது.
 தங்கத்தின் விலை  பவு னுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் இறங்கலாம் என்ற தகவல்களால் தங்களின் நிறுவனம்  நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை  அனுப்பித ங்கத்தை திரும்ப பெறும்படியும், அதிகப்படி தங்கள் நிறுவனம் கொடுத்த பணத்தை இழப்பீட்டுதொகையை திரும்ப செலுத்தும் படியும் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாகஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இவை போன்ற நிறுவனங்கள் ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வராததால்
வாடிக்கையாளர்கள் ரிசர்வங்கிஇடம் முறையிட்டு நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது.

சனி, 20 ஏப்ரல், 2013

நாம் தனியே இல்லை
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய அமெரிக்க   விண்வெளி ஆய்வு மையம் நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிகிற து.
கெப்லர்- 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தனர்.
அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து தொடர்ந்து நடந்த  ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டது.
 அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது.
அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.
சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்த இரண்டு கோள்களும் தலா 1.41 மற்றும் 1.61 சுற்றளவை கொண்டுள்ளன.
 இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும்.
 இந்த கோள்கள்  நிலப்பரப்பு அதாவது பாறை போன்ற அமைப்பை கொண்டதா அல்லது வெறும் நீர் அமைப்பை மட்டும் கொண்டதா என்பது குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
  இந்த கோள்கள் உறுதியாக  மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாகத தான்  இருக்கும் என  அவர்கள் தெரிவித்துள்ளனர்  .
இந்த இரண்டும் ஏமாற்றி விட்டாலும் இந்த லட்சக் கணக்கான கோள்கள் வலம் வரும் பால் வீதியிலும்,அதை விட்டால் பி ரபஞ்சத்திலும்  நிச்சயம் உயிர் கள் வாழும் கோள்கள் இருப்பது என்னவோ நிச்சயம்தான்.
பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியே இல்லை. எங்கோ மனிதன் அல்லது அதற்கொப்பான உயிரினங்கள் வாழுந்துதான் வருகிறது.அது வெறும் பரிணாம வளர்ச்சியில் மனிதனை விட முன்னேறியதோ அல்லது மனிதனாக்கிக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும் உயிராக கூட இருக்கலாம்.
நன்றி:அமீம் முகமது.[முகனூல்]

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பெயர் சூட்டல் வேண்டாம் . ------------------------------------------சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரைச் சூட்டியது போல், உள்நாட்டு விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரைச் சூட்டியதுபோல எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று தமிழக சட்டப் பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது போன்று கட்டங்களுக்கு பெயர் சூட்டுவதும்,சிலைகளை நிறுவுவதும் திட்டங்களுக்கு பெயர் கொடுப்பதும் முன்னாள் தலைவர்கள் பெயர்களை பெருமைப்படுத்துவதாக தெரியவில்லை.

முன்னாள் தலைவர்கள்-தியாகிகளை நம்மால் முடிந்த அளவு சிறுமைப்படுத்தவெ இவை உதவுகின்றன.இதுதான் இபோதைய இயல்பு நடவடிக்கையாகி விட்டன.
கண்ண்ணகி சிலையை ஒளித்து வைத்த ஆட்சிதான் இப்போதிய ஆட்சி.ஆட்சியாளர்களே இப்படி யிருந்தால் ?
மக்கள் இளைத்தவர்களா?
அம்பேத்கர்,முத்துராமலிங்கம்,வ.உ .சி. காமராஜர் ,காந்தி போன்றோர் சிலைகள் அவமதிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்களும் தமிழ் நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இது பொன்ற தலைவர்கள் பிறந்த நாட்கள் வந்தாலே அவரின் சாதியினர் கொண்டாடும் விழாக்களால் எத்தனை  உயிர் போகப்போகிறதோ எத்தனை பேருந்துகள் சேதமாகப்போகிறதோ என்ற கவலைதான் மக்களுக்கு வருகிறது.
முன்னாள் தலைவர்கள் எல்லோரும் இருக்கும் போது சீண்ட ஆளில்லாமல் இ ருந்தாலும் அவர்கள் இப்போது தனி ஆள் இல்லை அவர்களுக்கு பின்னர் ஒரு வெறி பிடித்த சாதி சனங்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பெயரால் அரசியல் நடத்தி வாழும் தலைவர்கள் இருக்கிறார்கள்.
மாதாமாதாம் தலைவர்கள் படம்,சிலை,சுவரொட்டி போன்றவை மற்ற தலைவர்களின் அடியாட்களால்[?]அவமானத்துக்குள்ளாகுகிறது.
முன்பு பேருந்து கோட்டங்களுக்கும்,மாவட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைத்து விட்டு பின்னர் எடுத்த கடைக்கு அல்லது வரலாறுக்குப்பின்னர் எத்தனை சாதிய மோதல்கள் ,படுகொலைகள்,வீடுகள் தீவைப்பு,பேருந்துகள் உடைப்பு,சாலி மறியல்கள் இருந்தன என்பதை இப்போதைய முதல்வர் அப்போதும் முதல்வராக் இருந்து கண்டு களித்தவ்ர்தானே .
இப்போதும் தனக்கு பிடித்தவர் பெயர் வைக்க முயற்சிப்பது தவறு.
எம்.ஜி.ஆர்.தமிழகத்தை பொறுத்தவரை சாத்திய பின்னணி கொண்டவர் இல்லையே எனலாம்.
ஏற்கனவே முத்து ராமலிங்கத் தேவர் , பெயரை வைக்கச்சொல்லி ஒரு கூட்டம் போராட்டங்கள் நடத்துகிறது.அதையும் வைத்தால் அடுத்து
அம்பேத்கர்,வ.உ.சி.,பெரும்பிடுகு,இரட்டைமலை,ஒண்டி வீரன் என்று பெயர் வைக்க பெரிய பட்டியலுடன் ஒரு கும்பலே போராட தயாராக கலவரத்தை  கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 உலக நாடுகளில் அந்தந்த இடத்தின் பெயரால் தான் விமான,பேருந்து நிலையங்கள் அழைக்கப்படுகின்றன.
இங்கு தமிழ் நாட்டில்தான் அரசியல் நடத்த பெயர்கள் சூட்டி விளையாடுவது இருக்கிறது.சாதி பின்னணி இல்லாமலே அரசியில் காரணத்துக்காக எம்.ஜி.ஆர்.இறந்தவுடன் கருணாநிதியின் வெண்கலச் சிலையை உடைத்துள்ளார்கள்.காரணம் கருணாநிதியா எம்.ஜி.ஆர் சாவுக்கு காரணம்?
வெறும் அரசியல்.

அந்த காழ்ப்பு அரசியல் இன்னமும் தமிழ் நாட்டில் இறந்து  விடவில்லை.
கருணாநிதி என்ற பெயர் வைத்துக் கொண்டு செருப்பையும் கழற்ற சொன்னதற்காகவே சிறையில் மருத்துவர்களை அடைக்கும் வீரியத்துடந்தான் இருக்கிறது .
ஆட்சி மாற , கட்சி மாற, சமாதிகள் கூட  பல வடிவங்கள் பெரும் இறக்கையுடன் மாறிவிடும்
தங்கத் தமிழ் நாடு இது.
இடங்கள் பெயர்களையே வையுங்கள்.கலவங்க்களுக்கும்-போராட்டங்களுக்கும் இடங்கொடாதீ ர்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...