கடவுளின் பெயரால் தான் எத்தனை எத்தனை கட்டுக்கதைகள்.
கடவுள் குறித்த மனிதனின் கற்பிதங் கள் அவனது கற்பனைத் திற னின் உச்சத்தை காட்டுகிறது. கடவுளுக்கு பாமாலை பாடி யும்புராணக்கதைகளாகப் புனைந்தும் தலப்புராணங் கள் என்ற பெயரிலும் எத்தனை எத்தனையோ நூல்கள் வந்துள்ளன.
வந்து கொண் டேயிருக்கின்றன. மறுபுறத் தில் கடவுளை பகுத்தறிவு நோக்கி ஆய்வு செய்யும் நூல் கள் ஒப்பீட்டு அளவில் குறைவே.“காலந்தோறும் பிராமணி யம்” என்ற தலைப்பில் ஆய்வு பெருநூல் ஒன்றை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய ஆய் வாளர் அருணன் அடுத்து கடவுளின் கதையை சொல் லப் புகுந்திருக்கிறார்.
அவரது நூல் “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை” என்ற தலைப் பில் முதல் பாகமாக வெளி வந்துள்ளது. 40 ஆயிரம், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வகையான மதக்கருத்துக் களும் இல்லை என்றும் மத சிந்தனை மனித மூளையில் உதயமாகி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறி யுள்ள முகவுரையுடன் இந் நூல் துவங்குகிறது.
மரணம் ஏற்படுத்திய பயம், இயற்கையோடு போராடி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய வை தான் கடவுள் குறித்த கற்பிதங்களுக்கு துவக்கப் புள்ளியாக இருந்துள்ளன.
மதம் மற்றும் கடவுள் குறித்த சிந்தனைகள் ஆள்வோரின் கருவிகளில் ஒன்றாகவே காலந்தோறும் இருந்து வந்துள்ளதை இந்நூல் தகுந்த சாட்சியங்களுடன் விளக்குகிறது. தாய்வழிச் சமூகத்தில் பெண் கடவுள்களே முன்னிறுத்தப் பட்டனர். தந்தை வழிச் சமுதா யம் மற்றும் ஆண்டான்- அடிமை சமுதாயம் உருவான நிலையில் பெண்கள், ஆண்களுக்கு அடி மையாக்கப்பட்டதுபோல பெண் கடவுள்களும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.
யூ தர்களின் ஆதி மதம் மற் றும் கிறிஸ்தவ- இஸ்லாமிய மதங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தஆய்வு இந் நூலின் தனிச்சிறப்பு எனலாம். தமிழில் இத்தகைய ஆய்வுகள் மிகக்குறைவாகவே மேற் கொள்ளப்பட்டுள்ளன. கடவுள்களும்காலந்தோறும் மாறிக்கொண்டேவந்திருக்கின்றன. சமுதாயத்தின் தேவைக்கேற்ப கடவுள்கள்உருவாக்கப்பட்டி ருக்கிறார்கள்.
சிந்துவெளி லிங் கமும், வேத வழி ருத்ரனும் ஒன் றாக்கப்பட்டதும் இயற்கை வழி கடவுளான முருகனும், வேத வழி கடவுளான சுப்பிரமணி யனும் ஒன்றிணைக்கப்பட்ட தும் பல்வேறு பெண் கடவுள் கள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்பட்டதும் இந்தநூலில் விரி வாகவும், சுவையாகவும் அல சப்பட்டுள்ளது. இந்தியப் பின்னணியில் மட் டுமின்றி, உலகளாவிய நோக் கில் மதங்களின் தோற்றம் மற் றும் வளர்ச்சி, கடவுளை கருப் பொருளாக கொண்டு விரி வான முறையில் இந்நூலில் அலசப்பட்டுள்ளது.
குறிப்பாக கிரேக்க சமுதாயம் உருவாக் கிய கடவுள் அதன் வளர்ச்சி, அந்த மரபை எதிர்த்து சாக்ர டீஸ் எனும் மாமேதை கலகக் குரல் எழுப்பி களப்பலியான கதை போன்றவை இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் குறித்த சிந்த னை உருவான பின்னணி மட்டுமின்றி, கடவுள் மறுப்பு குறித்த சிந்தனை உருவான பின்னணியையும் இந்நூல் அலசுகிறது.
கடவுள் இல்லா மதங்களை உருவாக்க முயன்ற வர்கள் கடவுளாக்கப்பட்ட கொடுமையையும் இந்நூல் அலசுகிறது.
"இந்தியாவில் மக்கள் தொகையைப் போலவே கடவுளர்களின் எண்ணிக்கையும் அதிகம்." |
கடவுளின் கதை எனும் இந்த நூலை படித்தால் அறி வுத்தளம் விசாலமாகும் என் பது மட்டும் உறுதி. லிங்க வழிபாட்டின் பூர் வீகம் குறித்து இந்தநூல் விரி வாக பேசுவதை படித்த போது, இராமலிங்கம் என்ற எனது பெயரைப் போட சற்று கூச்சமாகத்தான் இருந்தது.
ஆனாலும் வள்ளலாரின் நினை வாகவே இந்தப் பெயரை என் தந்தையார் சூட்டினார் என்று ஆறுதல் பட்டுக் கொண்டேன்.
-மதுக்கூர் இராமலிங்கம்,
நூல் விமர்சனம்.
நன்றி;தீக்கதிர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கடவுளின் கதை " -பகுதி 1.
"ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை"
ஆசிரியர்: அருணன்,
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்
69- 24 ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல்,
மதுரை-625001.
பக்கங்கள் : 360.
விலை: ரூ.250/-
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக