சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க
பொருளாதார எழுச்சி, தங்க முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் திரும்புவது
போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த
வாரம், 22 காரட், ஒரு பவுன் ஆபரணத் தங்கம், 22,240 ரூபாய்க்கு
விற்கப்பட்டு, ஏப்ரல், 15ம் தேதி, 20,640 ரூபாய், நேற்று முன்தினம் 19,520
ரூபாயாக குறைந்தது.
விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என, தகவல்
பரவுவதால், உடனடியாக தங்கத்தை வாங்கவும், காத்திருந்து வாங்கவும் பலர்
திட்டமிட்டு வருகின்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை மீது வழங்கப்படும் கடன் தொகை, கிராமிற்கு 1,200 ரூபாய் வரை குறைத்துள்ளனர்.
அரசு வங்கிகளை தொடர்ந்து தனியார் வங்கிகளும் இதே முடிவை கையாண்டுள்ளன. ஆனால் தனியார் நகை கடன் வழங்கும், நிதி நிறுவனங்கள், அடகு கடைகளின் நிலை தான் மிக மோசமாகியுள்ளது .
வாடிக்கையாளர் தங்க நகை மீது 95 சதவீதம் வரை கடன் வழங்கி உள்ள தால், தங்கத்தின் விலை சரிவால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் மற்றும் தனிநபர் பிரிவில், தங்க
நகை கடன் வழங்குகிறது.
விவசாயிகளுக்கு, 9 சதவீத வட்டியில் இரண்டுலட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குகிறது. சரியான காலக்கெடுவுக்குள்திருப்பி செலுத்தினால் 5 சதவீத வட்டிக்கு, ரிசர்வ் வங்கி விலக்கு
அளிக்கிறது.
தனி நபருக்கு தங்க நகை கடனாக இரண்டு லட்சம் ரூபாய் 10.5சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு, கடந்த வாரம் வரையில் 2,100 ரூபாய் வழங்கப்பட்டது. தங்கம் விலை சரிவால், கிராமுக்கு, 1,700ரூபாய் கடன் வழங்கும் அளவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி தங்க நகைகடன் வழங்கப்படுகிறது .
தங்கத்தின் விலைக்கும் கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீட 70 முதல், 75 சதவீதமாக உள்ளன.
15 முதல் 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆனால் வெளிசந்தை தங்க ம் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு 5 முதல்,7 சதவீதம் இழப்புஉணடாகியு ள்ளது.
தங்கத்தின் விலை பவு னுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் இறங்கலாம் என்ற தகவல்களால் தங்களின் நிறுவனம் நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பித ங்கத்தை திரும்ப பெறும்படியும், அதிகப்படி தங்கள் நிறுவனம் கொடுத்த பணத்தை இழப்பீட்டுதொகையை திரும்ப செலுத்தும் படியும் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாகஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இவை போன்ற நிறுவனங்கள் ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வராததால்
வாடிக்கையாளர்கள் ரிசர்வங்கிஇடம் முறையிட்டு நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக