bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

"வெற்றி-32"

வெற்றிக்கு வழிகள் 32 பற்றிய இடுகை என்று எண்ணிவிட வேண்டாம் .
இந்திய இணையத்தளங்களில் ,இணைய இணைப்புகள் மூலம்   புதிதாக கணினி  வைரஸ் பரவி வருவதாகதெரிகிறது.
 இது 'வின்32' அல்லது 'ராம்னிட்' என்று அழைக்கப்படுகிற கணினி  வைரஸ் வகையை சேர்ந்தது.
 
இணையம் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது.
suran
 இதனை நாம் கிளிக் செய்தால் அது நமது கணிப்பொறியில் உள்ள புரோகிராம் பைல்களை தாக்கும். 
இதன் மூலம் ரகசியமாக உள்ள நமது வங்கி கணக்கு எண், கடவுச் சொற்கள்  போன்ற தகவல்களை திருடிக்கொள்ளும்.அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
மற்ற வைரஸ் அழிக்கும் மென்பொருட்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்  விதமாக இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 வைரஸில் இருந்து பாதுகாக்க  நாம் தரவிறக்கியுள்ள  மென் பொருட்களால் கூட இதனை கண்டுபிடிக்க முடிவதில்லை.
பாதுகாப்பு மென்பொருட்களை அடிகடி புதுப்பித்து கொள்வது, இணையத்திலிருந்து நம்பகம் இல்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
உங்கள் வங்கிக்கணக்குகளை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போதைக்கு அதுதான் இந்த  வைரஸ்களிடமிருந்து  தப்பிக்க வழி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல செய்தி.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது.
அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது.
ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை.
ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது.
ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா?
அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தயாரானவை திரைப்படங்கள் வரிசையில் வரவில்லையா?
அல்லது நூற்றாண்டு விழாவில் திரையிடப்படும் அளவு தகுதி வாய்ந்தவை அல்லாதவையா?
தமிழ் நாட்டில்தான் திரைப்படங்கள் ஆட்சியையே மா ற்றியிருக்கி றது. திரைப்படத்துறைதான் அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜானகி ராமச்சந்திரன் ,ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களை தந்தும் இருக்கிறது.திரைத்துறை தமிழகத்தில்தான் உணர்வுடன் கலந்துள்ளது.அந்த தமிழ்த்திரைப்படங்கள் ஒதுக்கி வைப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.அப்படி நடக்கவும் கூடாது.
அரசு வெளியிட்டப்படியல் முழுமையானதாக இராது என்றே இப்போதுவரை நம்புகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...