bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

"மே தின வாழ்த்துக்கள்.!"
எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் .
18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம்.
18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது.
அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன.
அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை.அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும்.பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர்.

அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியிருந்தது.தூங்கக்  கூட அனுமதிப்பது கடினமானதாக இருந்தது.
தொழிற்சாலைகளில் இருந்து தப்பித்தால் அவன் குற்றவாளியாக கருதப்பட்டான்.அரசு அவை தேடி கண்டு பிடித்து தண்டணை வழங்கியது .
மீண்டும் தப்பியவன் மாட்டினால் அவன் நெற்றியில் சூட்டுக்  கோ லால்  இலச்னை இட்டு அவமானப் படுத்த ப்பட்டான் .அதன்பின் அவன் மாடு போல் உழைத்தாலும் நரக வாழ்வுதான்.
18-ம் நூற்றாண்டு இறுதியிலும் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர்கள் சிந்திக்கவும்-போராடவும் ஆரம்பித்தனர்.
நெஞ்சில் குமுறிய உழைப்பாளர்கள் ரகசியமாக தங்களுக்கு உழைப்புக்கிடையில் ஓய்வும்,சரியான சாப்பாடும்,இருக்க குடும்பம் நடத்த  தனியாக  இடமும் தேவை என்று முடிவெடுத்து அதற்காக போராட தயாராகினர்.
suran
ஒன்றுமே இல்லாத தாங்கள் இனி இழக்க ஒன்றுமே இல்லை.வென்றால் பொன்னுலகம்தான் என  முடிவெடுத்து கடுமையாக போராடி பல உயிர்களை இழந்து தங்களுக்கான உரிமைகள் சிலவற்றை பெற்றனர்.
அதில் தலையானது 8மணி நேர வேலை.
முதலில் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிலாளர் போராட்டத்தில்  குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்.இந்த  இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.
 அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

"8 மணி நேரம் வேலை "
அது கிடைக்க பல போராட்டங்கள்.ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856-ல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.
 இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் முதல் மைல் கல்.
1896 ஏப்ரல் மாதத்தில் மாமனிதன் "லெனின் 'மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யாவில் தொழிலாளர்  புரட்சி செய்து ஆட்சியையே மாற்றியதற்கும்,கம்யூனிசம்  உண்டானதற்கும் முதல் காரணம்.
தொழிலாளர் வர்க்கம் ஆட்சியையே மாற்றியது ரஷ்யாவில்தான் என்றாலும் "மே-1 தினம்"
தொழிலாளர் தினமாக வடிவானது முதலாளித்துவ அடையாளமான அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.

"கூட்டத்துக்கு வாங்க "
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு  விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக இரு ந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும்1200 தொழிற்சாலைகளில் இருந்து  3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 தொழிலாளர்களின்  வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஊர்வலங்களில் கலந்து கொண்டு அரசை திகைக்க வைத்தனர்.
தொழிலதிபர்களும் அவர்களுக்கு ஆதரவாக அரசும் இணைந்து இந்த தொழிலாளர்களின்  ஒற்றுமையான போராட்டத்தை சிதைத்து தங்கள் வழிக்கு கொண்டுவர திட்டங்கள் தீட்டினர் .தங்கள் ஆட்களை கருங்காலிகளாக வெளியெ வராமல் ஐந்தாம் படையாக தொழிலாளர் கூட்டங்களில்  ஊ டுருவ வைத்தனர்.
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு  கூட்டத்தை நடத்தினர். அங்கு இந்த ஐந்தாம் படையினர் வன்முறையை தூண்டி கலவரமாக வெடிக்க வைத்தனர்.அதை பயன் படுத்திய   காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் நடத்தினர் தொழிலாளர்கள்.
ஆயிரக்கணக்கில்  தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியாக நடைபெற்றது.
அதில் மறைந்திருந்த முதலாளிகள் ஆட்கள்  திடீரென்று காவல் துறையினர் மீது  வெடிகுண்டு வீசினர்.
 அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின் கேட்கவா .வெண்டும் இதற்கென்றே காத்திருந்த காவல்துறையினர்  கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.
 அத்துடன் தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர உட்பட பலரை   கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.நவம்பர் 11,1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் 7 பேர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில்  5 லட்சம் பேர்  கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பை காண்பித்தனர்., அமெரிக்கா முழுவதும் கறுப்பு கொடிகள் எற்றி துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.
 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்தது.
 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
அதன் முதல்  மே முதல் நாள் , சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக உலகமெங்கும் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
நமது இந்தியாவில் சென்னை மாநிலத்தில்தான் முதன் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியான " ம.சிங்காரவேலர்" 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடி செங்கொடியை ஏற்றினார்.
கலைஞர்  மு.கருணாநிதி தான் தமிழ் நாட்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக "மே தின"த்துக்கு அரசு விடுமுறை வழங்கியவர்.
"மே தினப்  பூங்கா "பெயர் சூட்டியவர்.
suran
பல உயிர்களை இழந்து போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் இப்போது தொழிலாளர்கலாலேயே விட்டுக்கொடுக்கப்படுகிறது.அரசும் முன்பை போல் முதலாளிகள் கூட்டணியுடன் உழைப்பவர்களை ஏமாற்ற ஆரம்பித்தள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே தொழிற்சங்க உரிமைகள் பறி போக வைக்கும் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய உதாரணம் ஹுண்டாய் .தொழிற் சங்கம் அமைக்கவும் உரிய கூலி பெறவும் எவ்வளவு பொராட்டங்கள் .தொழிற் சங்கக் கொடியை ஏற்றியதற்காக தொழிற்சங்க தலைவர்
கை விலங்குடன் இழ்த்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தது.
தகவல் தொழில் நுட்ப துறையில் 8 மணி நேரப் பணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.தான் படித்தவன் கணினி நிபுணர் என்ற கனவில் இருப்பவர்கள் தான் போராடி,உயிர் இழந்து பெற்ற தொழிற் சங்க உரிமைகளை காவு கொடுக்கிறார்கள் .
கை நிறைய கிடைக்கும் சம்பளத்துக்காக.
ஆனால் அமெரிக்காவில் ஓபாமா தும்மினால் அடுத்த நொடியில் இவர்கள் வேலை எந்த உத்திரவாதமும் இல்லாமல் பறி போய்விடும் என்ற அபாயத்தை அவர்கள் உணர்ந்தது போல் தெரிய வில்லை.
இவர்களுக்கும் சேர்த்து  
"மே தின வாழ்த்துக்கள்.!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
                          ரஷ்யாவில் ஒட்டப்பட்ட உலகின் முதல் மே தின சுவரொட்டி.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...