bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 27 பிப்ரவரி, 2013

ராஜபக்சேயின் போர் குற்றம்.

புதிய தீர்மானம்?

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
 இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
 இதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 இந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.
 பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று போர்க்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட இருப்பதால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பார்வை திரும்பும். இதன் மூலம் இலங்கையின் முகமூடி கிழித்து எறியப்படும். அதற்கு எதிரான பிடி மேலும் இறுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.
ராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடு மைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறுவன் பாலச்சந்திரனைகொன்று

விடக்கூ றியதெ இனத்துரோகி கருணாதானாம். 
அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அவர்களை இங்கிலாந்து அரசு இலங்கைக்கு  திருப்பி அனுப்பி வருகிறது. அவ்வாறு இலங்கை திரும்பிய பின்புஅவர்களை  சிங்கள ராணுவம் , போலீசார்  சித்ரவதைகள் செய்வ தாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் டேவிட் மேபம் கூறுகையில், இங்கிலாந்து அரசு இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் மாற்றம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மாவீரன் பிரபாகரன் தமிழீழம் எனக் காட்டும் இடங்கள்தான் இன்று தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட இடங்களாக மாறிய சோகம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

1,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள  பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என ஒருவர் மட்டுமே உறுப்பினராகவும் -தலைவராகவும் ,தொண்டராகவும் உள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால்  பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரை எந்த கிறுக்கனும் கூட ஆதரிப்பதில்லை என்றும் தெரிந்தே இவர் அவ்வப்போது தனது தத்துவங்களை உளறிக்கொண்டிருக்கிறார்.அவற்றை வெளியிடவும் சில பத்திரிகைகள் இருக்கிறது. 
சில நாட்களுக்கு முன்பு மாவீரன் பிரபாகரன் இளைய மகன் சிங்கள ராணுவத்தால் கொடுரமாகக் கொல்ல ப்பட்டதை  கூட நியாயப்படுத்தி இந்த அரசியல் ஞானி அறிக்கை விட்டிருந்தார்.பிரபாகரன் தீவிரவாதி கொடுரமானவர் அவர் மகனும் அப்படித்தானே இருப்பான் என்று அரிய ஆய்வை வெளியிட்டிருந்தார்.
இப்போது எங்கள் சந்தேகம் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமி அப்பா ஒரு கிறுக்கராகவா வாழ்ந்து மறைந்தார் என்பதுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தளங்களை ஊடுருவி தாக்குபவர்கள் [ஹாக்கர்கள் ]இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தை  பதிவேற்றம் செய்து இலங்கை ஊடக அமைச்சக  இணையத்தளத்தை தாக்கியுள்ளனர். 
“H4x Or HUSSY' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள  இந்த  தாக்குதல் நடத்துபவர்கள், 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்  இடம்பெற்ற கொடூரங்கள்  பற்றிய ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஒன்றை இந்த இணையத்தில் பதிவெற்றியுள்ளதாக தெரிகிறது.
"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து !    அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு! என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உடனே அரசு செயல்பட்டு  இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.மின் உற்பத்தியில் தமிழகத்தின் அக்கறை....?
  சரியாக தீபாவளி,பொங்கல்  போன்ற விழாக்காலங்களிலும்,முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளிலும் மட்டும் தமிழகம் முழுக்க மின்தடை இன்றி அல்லது அதிக நேரம் மின்சாரம் இருக்கிறது.அது முடிந்தவுடன் மீண்டும் அதிக நேரம் மின்தடை.காரண்ம் காற்றாலை கை கொடுத்தது என்று கூறிவருகிறார்கள்.அது என்ன பண்டிகைக்காலம் மட்டும் வீசும் காற்று - அப்போது மட்டும் மின்சாரம் தயாரிக்கும்  காற்றாலைகள் ?
இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. 
ஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது.புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. இப்போதைய கடும் மின் தட்டுப்பாடு காலத்தில் கூட தமிழக அரசு இது பொன்ற திட்டங்களை கண்டு கொள்ள வில்லை.நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
படம்&தகவல்  நன்றி:தினமலர்.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். 
கேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும்  செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிக மின்தடையால் திணறி வரும் தமிழ் நாட்டில் இங்குள்ள அரசு இந்த திட்டாங்க்கள் எதையும் நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் கண் மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
மின் தடைக்கு காரணம் சென்ற ஆட்சியின் அலங்கோலம் என்று குற்றம் சாட்டிக்கொண்டு கையை கட்டிக்கொண்டிருப்பது சரியா?
அவர்கள் அலங்கோலம் என்றுதானே உங்களை மக்கள் கொண்டுவந்து ஆட்சி செய்ய கூறி வைத்திருக்கிறார்கள்.
 ஆனால் குற்றம் சாட்டுவதை தவிர மின்னுற்பத்திக்கு இதுவரை இன்றைய ஆட்சியாளர்கள் எ துவும் இதுவரை  செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

சனி, 23 பிப்ரவரி, 2013

உலகம் சில படங்களில் .........,


பிள்ளைய போட்டு தாண்டுதேன் .பிராபாகரன் மகன் தானே சுட்டுக்கிட்டுதான் செத்து போனான்.பக்சே கூட வேணாம்னு தடுத்துபார்த்தும் முடியலையாம் .அதனால்தான் இந்திய அரசால் கருத்து சொல்ல முடியல.

 "ஒரு ரூபாய்க்கு  அம்மா இட்லி கொடுத்தது நம்ம காய்கறி வியாபாரம் கவு ந்திட்டே.நாமே காலி பண்ணிற வேண்டியதுதான். "
முன்னால வால்  முளைச்ச ஆள்மாதிரி பின்னால கொம்பு முளைச்சவர்?


இது நிர்வாண திருவிழா வில் கூடிய நிர்வாணிகள்.


"அந்த குண்டு வெடிப்புக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் கிடையாது"


"சும்மா,சும்மா  சுனாமி வருமா,வராதான்னு கேட்டு தொந்தரவு செய்யாதே".



 "இந்த ஹெலிகாப்டர் வாங்குனத்தில் சம்மந்த ப்பட்டவர் யாருன்னு தெரியுமா?கொண்டா  காதில் சொல்லுறேன்."



 அந்த தலைவரை கைது செய்திட்டாங்க போலிருக்கு .ரத்த ஆறு ஒடுது பாரேன்.
விலையில்லாம கொடுக்குற ஆட்கள் நம்மை பிடிக்கவாராங்க ஓடு .
புறம்போக்கு நிலம் எங்க கிடைச்சாலும் வளைச்சிடுனு தலைவர் சொல்லிட்டாரு.
இதை தலையில் போட்டிருந்த வீரர் கதி என்னவாயிருக்கும்?

இந்த பீப்பாய்  முழுக்க  வித்தாதாங்க டாஸ்மாக்கில  வேலை நீடிக்கும்.இதான் இன்னைக்கு இலக்காம்.
காவேரியில இப்போ கர்நாடகா தண்ணிய திறந்து விடமாட்டாங்கபயமில்லை ன்னு சொன்னியே?
இந்த தடவையாவது இலக்கு பக்கத்திலேயாவது போய் வெடிக்கட்டும் இறைவா.
 கொண்டுபோய் வைக்கதுக்குள்ள டிபன்பாக்ஸ் குண்டு வேடிச்சிருச்சே?
பாஸ்ட் புட் டப்பாவிலே வச்சிட்டேன்.
 ஒருவழியா லோக்பால் மசோதாவ முடிச்சிட்டோம்.
"சரி போதும்.
படத்தை வச்சிட்டு மொக்கை போடுவதை நிறுத்து...இல்லே.."

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

வண்டியிலே போய் கொண்டிருக்கும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் பேசாதீர்கள் .அல்லது வண்டியை ஓரங்கட்டி நின்று பேசிவிட்டு கிளம்புங்க.இதை எத்தனை முறை எத்தனை பேர்கள் சொன்னாலும் புரியாதவர்களுக்கு "அலைபேசியில் வண்டியில் செல்லும்போதே பேசியதால் "அலங்கோலமாக சாலையில் கிடக்கும் நண்பரை பாருங்கள்.இவர் மனைவி,குழந்தைகள் என  குடும்பம் இவர் வீட்டுக்கு வரும் நேரத்தையல்லவா எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
பார்க்கவே கோரம்.தேவையா இந்நிலை.?
இவரின் இந்த அலைபேசி செயலால் உயிரை இழந்தது மட்டுமா?இனி அவர்களின் வாழ்வு?எதிர்கால திட்டங்கள் ?ஆசைகள்?
சிறிது நேரம்தானே-சாலையில் எதிரே போக்குவரத்தே இல்லையே-நான் எப்படியும் திறைமையாக பேசிக்கொண்டே வண்டியை செலுத்தி விடுவேன்.இது பொன்ற நினைப்புகளை இனி விடுங்கள்.சாலையின் மீது மட்டுமே கவனம் கொள்ளுங்கள்.நாம் சரியாக சென்றாலும் திடீர் என்று நடக்கும் சாலை  விபத்துக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
"அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்?என்று சும்மாவா எழுதி வைக்கிறார்கள்.
முகனூலை தனது அலைபேசியில் பார்த்திருக்கிறார் என்பது கீழேயுள்ள அலைபேசியால் தெரிகிறது.
இதை முக நூலில் பகிர்ந்தவர் 'சுபத்ரா'.ஜி 
---------------------------------------------------------------------------------------------------------------

புதன், 20 பிப்ரவரி, 2013

அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு

'இன்று நடக்கும் வேலை நிறுத்தம் தேவை இல்லாதது.
அதில் வங்கி ஊழியர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்'
இது மத்திய நிதி யமைச்சக   திருவாக்கு.
இன்றைய அகில இந்திய இரு நா ட்கள் வேலை நிறுத்தம் முதாலாவதாக மத்திய சோனியா அரசின் தவறான நடைமுறைகளை கண்டித்து நடப்பது. இதுவரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்று எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளுமே இந்திய நாட்டு மக்களுக்கு ஆபத்தை தருவதாகவும் -துன்பத்தை தருவதாகவும் அந்நிய குறிப்பாக அமெரிக்க நாட்டுக்கு மட்டும் நன்மை தருவதாக்கவுமே இருக்கிறது.
இந்த போராட்டம் யா ரோ -யாருக்காகவோ நடத்துவது போல் பெருவாரியான மக்கள் இருப்பது போல் தெரிகிறது 
மாதம் மாதம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும்  ,வங்கி ஊழியர்களுக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன அவசியம்?
அவர்களும் இந்த இந்திய குடிமக்கள்தானே அரசியலில் இல்லாவிட்டாலும் இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது .
நாம் அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு  என்று குடிசை வாழ் மக்களும் எண்ண இயலாது .
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு சார்பில் அறிவிக்கும்போது அரிசி  -காய்கறி விலையில் இருந்து அனைத்துப பொருட்களுமே விலை தன்னால் உயர்கிறது .பேருந்து கட்டணம் முதல் ரெயில் கட்டணம் வரை உயர்கிறது.
மானியம் கொடுக்க வக்கில்லாததால் அனைத்து பொருட்களுக்கும் மானியத்தை நிறுத்துகிறோம் என்கிறார்கள் .
உரத்துக்கு மானியத்தை நிறுத்தியதால் வேளாண் பொருட்கள் உற்பத்தி வி லை உயர்ந்து சாதாரண வகை அரிசியே  இன்று கிலோ 40/-க்கு போ ய் விட்டது.
மானியம் அனைத்தும் நிறுத்தினால் அரசுக்கு 4000 கோடிகள் மிச்சமாம்.
இதில் லாபக் கணக்கு பார்க்கும் மத்திய பொருளாதாரப்புலிகள் 14000 கோடிகள் அம்பானி,டாடா இன்னும் அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அதுதான் அரசுக்கு அவர்கள் தர வே ண்டிய பணத்தை  தள்ளுபடி செய்துள்ளது .
பலகோடி மக்களுக்கு போய் சேர வே ண்டிய மானியம் கொடுக்க யோசிக்கும் மன்மோகன் சிங்  சில பணமுதலைகளுக்கு மட்டுமே லாபம்தரும் இந்த 14000 கோ டிகளை தள்ளுபடி செய்தது ஏ ன்?
மத்திய அரசின் மனதில் மக்களுக்கு சேவை-நல்லது செய்யும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது.அவர்கள் சேவை முழுக்க அம்பானி,அமெரிக்க வகையறாக்களுக்கு மட்டும்தான்.பதவியில் இருப்பதே  பண முதலைகளின் கால்களை வருடி விடத்தான்.
லட்சம் கோடிகள் கணக்கில் முறைகேடுகள் செய்யத்தான்.
அதற்கு பக்க பலமாக முலாயம்,மாயாவதி,லாலு,கருணாநிதி ,நிதிஷ்குமார்,நவீன் பட்நாயக்,போன்ற எதிர்கட்சிகள்[?] மற்றும் கூட்டணி கட்சிகள் இருக்கிறது.
இவர்களை எதிர்ப்பதுபோல்  இருந்தாலும் இவர்களின் இந்த சீர்திருத்தங்களுக்கு தன்னால் முடிந்த அளவு மறைமுக ஆதரவை தந்து மக்களவையை முடக்கி வைத்து மசோதாக்களை நிறைவேற்றிட பாஜக  உதவி வருகிறதுஆக நம்மை ஆள்வது காங்கிரசு கூட்டணி அல்ல.
அமெரிக்கா மற்றும் அம்பானி-அணில் அகர்வால் -இந்துஜா-டாடா  போன்ற இந்திய பகாசுர 
 முதலாளிகள்தான் .
இப்போது  ரேசன் பொருட்களுக்கு மானியத்தை கொடுப்பது ரேசன் கடைகளை மூடி விடும் திட்டம்தான்கொஞ்ச்ச நாட்களுக்கு மட்டுமே உங்கள் பணம் உங்கள் கையில்.அதன்பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்.
இந்த போராட்டத்தினால் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது அதன் அமைச்சர்கள் பேச்சில் தெரிய வருகிறது.
முன்பும் இது போன்ற இந்திய வேலை நிறுத்தம் நடக்கும் போது அதை கண்டு கொள்ளாத  மத்திய அரசு இப்போது பேச்சு வார்த்தைக்கு வர ச்சொல்வதும்சம்பளத்தை பிடிப்போம் என்று மிரட்டுவதும் அதன் வெளிப்பாடுகள்தான் .
அதற்கு காரணம் முந்தைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கைதான் கிட்டத்  தட்ட   ஒரு கோடி பேர்கள் அதில் கலந்து கொண்டதுதான்.
 ஆட்டோ ஓட்டுபவர்களை மத்திய அரசின் பெட்ரோல் விலை கொள்[ளை ]கை பாதிக்கவில்லையா?
விவசாயிகளை மத்திய அரசின் உர மானிய வெட்டு நீர் கொள்கை பாதிக்க வில்லையா?
அரசு ஊழியர்களை புதிய ஒய்வூதிய திட்டம், அடிக்கடி உயரும் விலை வாசிக்கேற்ப அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய நிலை பாதிக்கவில்லையா?
தொடரும் மின் வெட்டு ,அனைத்தும் தனியார் மயத்தாலும் அனைத்து இனங்களுக்கும் போட்டு தாக்கும்  சேவை வரி யாலும் அனைவரும் பாதிக்கப்பட வில்லையா?
கிராமங்களில் 28 ரூபாயும், நகரங்களில் 35 ரூபாயும் செலவிட்டால் அவர்கள் வறுமைக்கோட்டில் இல்லை என்ற அநியாயம் கூலி வேலைக்காரர்களை பாதிக்கவில்லையா? 
இவை எல்லாவற்றையும் விடபூமியில்  நிலக்கரியில் இருந்து வானில் ஹெலிகாப்டர்-வளி மண்டலத்தில்  2ஜி அலைவரிசை என்று மண்ணில் இருந்து விண்வெளி வரை  அனைத்திலும் லட்சம் கோடிகளில் கை நனைக்கும் ஆளுங்கட்சியினர் இப்போது குடிக்கும் தண்ணிரிலும் நீர்க்கொள்கை என்று தனியார் மயமாக்கிட கை வைக்கப் போகிறார்களே .
இப்போதும் கூட இந்திய உழைக்கும் மக்கள்  தனது  எதிர்ப்பை இது போன்ற வேலை நிறுத்தங்களில் காட்டாவிட்டால் ....
இனி காட்டுவதற்கும் -இழப்பதற்கும் ஒன்றுமே இல்லாமல் போய் விடும்.!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒன்றும் கண்டு கொள்ளவேண்டாம் .
சிறுவன் பாலச்சந்திரன் படு கொலையில் இந்திய அரசு கருத்தோ- கண்டனமோ தெரிவிக்க ஒன்றுமில்லையாம் .
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் அது பற்றி கேட்டபோது ", சம்பவம் தொடர்பான படத்தை தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாக கூறினார். 
தற்போது இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முக்கியமான அண்டை நாடு என்றும். போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டதாகவும்"
 சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். நல்லவேளை .படத்தை பார்த்தேன் ரசித்தேன் ,சிரித்தேன்.பின் கிழித்துப்போட்டேன்.என்று முந்தைய கருணாநிதி பாணியில் சொல்லாமல் விட்டார் .
மாலத்தீவு உள்நா ட்டு பிரச்னையில் முன்னாள் பிரதமர் நஜிமுக்கு தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்து மாலத் தீவு உள்நாட்டு விவகாரத்தில் தலையை நீட்டியுள்ள இந்தியாவுக்கு ஈழத்தமிழர் என்றால் ஏன் இந்த பாரபட்சம்.ஒரு சிறுவனின் அநியாயக் கொலை கூட இந்திய அரசின் மனதை பாதிக்கவில்லையா?எங்கோ இருக்கும் கனடா,ஆஸ்திரெலியா  ஆகியவற்றிற்கு இருக்கும் மனிதாபிமானம் சோனியா கட்சியினருக்கு இல்லாமால் போ ய் விட்டதே.
ஒருவகையில் ஈழத்தமிழர் ஒழிப்பில் ரா ஜபக்சே யுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட
சோனியா கட்சியினரிடம் மனிதாபிமானத்தை  அதுவும் தமி ழர் விடயத்தில்
எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறுதான் .

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

"உலக அளவி"ல் பட வரிசை "பத்து,"

உலக அளவில் செய்தியாளர்களால் வெளிடப்பட்ட  புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.
அந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,


இந்த புகைப்படம் 2012-ம்,ஆண்டில் வெளியான படங்களில் பொதுவான  செய்தி  படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..


20-11-2012 -ல்  காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 1-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
14-4-2012சிரியாவில் அரசு படையினரால் கடத்தி கொல்லப்பட்ட தந்தையின் அருகில் மகள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2-ம் பரிசு பெற்ற பொது செய்திப் படம் .
31-7-2012 சிரியா கலவரத்தில் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்களை போட்டுக்கொடுத்தவரை  கலவரக்காரர்கள் போட்டு தாக்கும் போது ,


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 3-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
17-4-2012 சூடான் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட  போர் வீரன் வான் அடக்கம் செய்யப்பட்டபோது.
ஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா?
தேர்வான  படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் தேர்வான சில படங்கள,






நம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...