1,ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
இலங்கை பீதியடையத் தேவையில்லை என ஒருவர் மட்டுமே உறுப்பினராகவும்
-தலைவராகவும் ,தொண்டராகவும் உள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர்
சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
இதனால் பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரை எந்த கிறுக்கனும் கூட ஆதரிப்பதில்லை
என்றும் தெரிந்தே இவர் அவ்வப்போது தனது தத்துவங்களை
உளறிக்கொண்டிருக்கிறார்.அவற்றை வெளியிடவும் சில பத்திரிகைகள் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மாவீரன் பிரபாகரன்
இளைய மகன் சிங்கள ராணுவத்தால் கொடுரமாகக் கொல்ல ப்பட்டதை கூட
நியாயப்படுத்தி இந்த அரசியல் ஞானி அறிக்கை விட்டிருந்தார்.பிரபாகரன்
தீவிரவாதி கொடுரமானவர் அவர் மகனும் அப்படித்தானே இருப்பான் என்று அரிய
ஆய்வை வெளியிட்டிருந்தார்.
இப்போது எங்கள் சந்தேகம் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமி அப்பா ஒரு கிறுக்கராகவா வாழ்ந்து மறைந்தார் என்பதுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தளங்களை ஊடுருவி தாக்குபவர்கள் [ஹாக்கர்கள் ]இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற
யுத்த குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தை பதிவேற்றம் செய்து இலங்கை ஊடக அமைச்சக
இணையத்தளத்தை தாக்கியுள்ளனர்.
“H4x Or HUSSY' என்று தம்மை
அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இந்த தாக்குதல் நடத்துபவர்கள், 2009 ஆம்
ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின்
இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற கொடூரங்கள் பற்றிய ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஒன்றை இந்த இணையத்தில் பதிவெற்றியுள்ளதாக தெரிகிறது.
"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து ! அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு! என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உடனே அரசு செயல்பட்டு இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து ! அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு! என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உடனே அரசு செயல்பட்டு இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.மின் உற்பத்தியில் தமிழகத்தின் அக்கறை....?
சரியாக
தீபாவளி,பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும்,முதல்வர் ஜெயலலிதா பிறந்த
நாளிலும் மட்டும் தமிழகம் முழுக்க மின்தடை இன்றி அல்லது அதிக நேரம்
மின்சாரம் இருக்கிறது.அது முடிந்தவுடன் மீண்டும் அதிக நேரம்
மின்தடை.காரண்ம் காற்றாலை கை கொடுத்தது என்று கூறிவருகிறார்கள்.அது என்ன
பண்டிகைக்காலம் மட்டும் வீசும் காற்று - அப்போது மட்டும் மின்சாரம்
தயாரிக்கும் காற்றாலைகள் ?
இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட்
மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின்
உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும்
எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு
விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு
பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம்,
தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை,
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
ஆனால், எந்தப்
பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளாமல், அப்படியே
கிடப்பில் போட்டது.
இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால்
ரத்து செய்யப்பட்டு விட்டது.புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை.
இப்போதைய கடும் மின் தட்டுப்பாடு காலத்தில் கூட தமிழக அரசு இது பொன்ற
திட்டங்களை கண்டு கொள்ள வில்லை.நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த அதே
நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள்
அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும்,
எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில்,
எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427
மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளது.
படம்&தகவல் நன்றி:தினமலர். |
தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000
மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது,
தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120
மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட்,
கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில்,
330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,
எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390
மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில்
தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம்.
கேரள மாநிலம்
காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில்,
விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற
இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும்
நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிக மின்தடையால் திணறி வரும் தமிழ்
நாட்டில் இங்குள்ள அரசு இந்த திட்டாங்க்கள் எதையும் நிறைவேற்ற முனைப்பு
காட்டாமல் கண் மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
மின் தடைக்கு காரணம் சென்ற ஆட்சியின் அலங்கோலம் என்று குற்றம் சாட்டிக்கொண்டு கையை கட்டிக்கொண்டிருப்பது சரியா?
அவர்கள் அலங்கோலம் என்றுதானே உங்களை மக்கள் கொண்டுவந்து ஆட்சி செய்ய கூறி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் குற்றம் சாட்டுவதை தவிர
மின்னுற்பத்திக்கு இதுவரை இன்றைய ஆட்சியாளர்கள் எ துவும் இதுவரை
செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக