bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

"புத்த" மத அரக்கர்கள்.




ஈழத்தில் ராஜபக்சேயின் கொடுர கொன்றொழிப்பை மறக்க நினைத்தாலும் மறக்க இயலவில்லை.
ஒரு இனத்தையே பூண்டொடு அழித்தொழிக்கும் நிகழ்வல்லவா அது.அந்த கொலைக்களத்திற்கு விடுதலைப்புலிகளின் மீதான கோபத்தை மட்டும் ஒரே காரணாமாக கொண்டு இந்திய மத்திய அரசு பலி வாங்கும் பூசாரிகளாக ஆதரவை கொடுத்து தனது கரங்களையும் ரத்தக்கறையாக்கிக் கொண்டது இன்னும் கொடுமையானது.
அந்த கொடுரங்களில் உச்சமாக 'மாவீரன் பிரபாகரன் 'மகனாக பிறந்த காரணத்தினால் சிங்கள ராணுவத்தால் சின்னஞ்சிறுவன் என்றும் பாராமல் துப்பாக்கிக் குண்டுகளால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட "பாலச்சந்திரன்" கொலை காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கி விட்டது.
இப்படி சிறுவனையும் கொன்ற இந்த படையினர் மனித இனம்தானா என்பதில் சந்தேகம் வ ருகிறது.இவர்கள் அமைதிக்கு வழி கூறிய புத்த மதத்தை சார்ந்த அரக்கர்கள்.
 தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், மாவீரன்  பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை செய்யப்பட்ட விவரத்தை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
 போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது இறந்திருக்கலாம் என்று இதுவரை இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருந்த  சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை இப்போது வெளியான படங்கள் வெளிப்படுத்துகின்றன .
படத்தில் ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் பார்க்கும் அவன் பார்வை கொடுரக்கும்பளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று பார்ப்பது போல் உள்ளது.
அடுத்த படத்தில் அவன் தனது மார்பில்  குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தக் கறைகள இல்லாத நிலையில்  உயிரி ழந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன்  பிரபாகரனின் சின்ன மகன்  எவ்வாறுராஜபக்சேயின் அரக்க கூட்டம்  திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்ற கொடுர  உண்மை உலகிற்கு தெரியவந்துள்ளது.
மனம் படைத்த மனிதர்கள் இதை கண்டு கண்கலங்கி இலங்கை அரக்கர்களையும்,அதற்கு துணை போன சோனியா கும்பலையும் எண்ணி குமுறுவர்.
இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் இலங்கை ராஜபக்சே அரசை கண்டிக்காத-தண்டனை வழங்க வக்கற்ற  ஐ.நா, சபை 
எதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.
சிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளசேனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  
கரிய வாசம் 
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம், உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும்,
 இதற்கு பின்னால் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இருப்பதாகவும்.
 இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லையென என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
நிச்சயம் கொலையையே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இ தில் புதிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லைதான்.
உயிருடன் இருக்கும் சிறுவன் உயிர் இழந்து கிடப்பது எப்படி?
இதற்கு கரிய வாசம் என்ன பதில் சொல்லுவார்.
அது அவன் முன்பு விடுதலைப்புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பாரோ?
நிச்சயம் இதுபோன்ற சிறுவர்கள்வயதானவர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்த ராஜபக்சே கும்பலுக்கு வரும் முடிவும் அவலமாகத்தான் இருக்கும்.அதற்கு துணைபோன கும்பலு க்கும்தான்.
உண்மையில் இதயம் உள்ளவர்கள் இதை கண்டு கண்ணிர் வடிப்பார்கள்.ஆனால் அந்த இடத்தில் பள்ளம் உள்ளவர்களை என்ன சொல்ல.
இத்தனை கொடுமை செய்யும் ராஜபக்சே பக்தனாக இந்தியாவில் தமிழ் நாடு வரை வருகிறான்.அதை இந்த மனிதாபிமான இல்லா மத்திய அரசும் அனுமதிக்கிறது.அதற்கு இங்குள்ள தமிழனும் காங்கிரசுக்காரன் என்ற பெயரில் பதவிக்காக வக்காலாத்து வாங்குகிறான்.
என்ன தமிழனின் இன உணர்வு?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

மின்சாரம் தவிர அனைத்தும் வருகிறது.
தமிழக  அரசு தன்மக்களுக்கு மின்சாரம் மட்டும்தான் தர இயலவில்லை.
ஆனால் மின் கட்டணம் முதல் அனைத்துக்கும்பல மடங்கு  கட்டண உயர்வை மட்டும் தாராளமாக அதிகரித்த து .
இப்போது மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. 
இதுவரை உபயோகித்த மின்சாரத்துக்கு கணக்கு பார்க்க மட்டுமே வீட்டில் இருந்த மீட்டருக்கும் இனி மாத வாடகை வாங்கவும் மிக புரட்சிகரமாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
 இதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.
இதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. 
மேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. 
ஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...