bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 ஜனவரி, 2019

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

நிதியமைச்சர் பணிக்கு எதிராக செயல்படும் அருண் ஜேட்லி!

சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.
தீபக் கோச்சார்,           சாந்தா கோச்சார்,         வேணுகோபால் தூத்.


சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை.
சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.

அனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.
திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார்.

தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.
“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன்.

ஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி.

இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர்.

இந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?
2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார்.

 வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது.
இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.
சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை.
ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார்.

ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்.
கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க  வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.

  சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.

“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல.  சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது,  அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது.  மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.

 கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர்.
மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார்.
 இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
 


                                                                                                                     -கலைமதி
 நன்றி :வினவு.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

நன்றிக்கடன்


ரூ. 20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெற்றதிலும் பாஜக-வே முதல் இடத்தில் உள்ளது. 2017-18-ம் ஆண்டுகளில் ரூ. 437.04 கோடி தனிநபர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் பெற்றுள்ளது பாஜக. தேசிய கட்சிகளின் மொத்த நன்கொடையில் பாஜக மட்டும் 93 சதவீதத்தை பெற்றுள்ளது.  இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் ரூ. 20 ஆயிரத்தும் மேற்பட்ட நன்கொடையாக ரூ. 26. 658 கோடியைப் பெற்றுள்ளது.

ளும் பாஜக அரசு இந்த ஆண்டும் அதிக நன்கொடைகள் பெற்ற கட்சி என ‘பெயர்’ பெற்றுள்ளது. ஆனால், கருப்பு பணம் – ஊழல் – நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
ரூ. 553 கோடிக்கு மேல், பெயர் தெரியாத மூலங்களிடமிருந்து பாஜக நன்கொடை பெற்றிருக்கிறது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆளும் பாஜக 2017-2018 ஆண்டில் தனது மொத்த நன்கொடைகளில் 80 சதவீதம், பெயர் தெரியாத மூலங்களிடமிருந்து பெற்றிருக்கிறது.
ஐந்து தேசிய கட்சிகளின் பெயர் தெரியாத மொத்த நன்கொடை (ரூ. 136.06 கோடி) மூலங்களை விட இது நான்கு மடங்கு அதிகம் என்கிறது இந்த அறிக்கை.
தேசிய கட்சிகள் வருமான வரி தாக்கல் செய்ததில் ரூ. 20 ஆயிரத்துக்கு கீழே நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை குறிப்பிடவில்லை.
 தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை பெறுவது, கூப்பன்கள் விற்பனை, நிவாரண நிதி, இதர வருமானம், தன்னார்வலர்களின் பங்களிப்பு, கூட்டங்கள்/பேரணிகள் மூலம் கிடைக்கும் பங்களிப்பு உள்ளிட்டவை பெயர் தெரியாத மூலங்கள் என கட்சிகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. தன்னார்வலர்களின் பங்களிப்பு என உள்ளதில் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பது குறித்த விவரங்களை கட்சிகள் அளிக்கவில்லை.


“ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழே தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை அளித்த தனிநபர்கள் அல்லது அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் விவரங்கள் வெளியிடத் தேவையில்லை.
 விளைவாக, 50 சதவீத நன்கொடையாளர்களின் விவரங்கள் தெரியவில்லை.
 அவர்கள் ‘பெயர் தெரியாத’ மூலங்களாகவே சுட்டப்படுகிறார்கள்.
தேசிய தகவல் ஆணையம் தேசிய கட்சிகளை 2013 ஜூன் மாதம் முதல் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டுவந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்கிறது தேர்தல் கண்காணிப்பகத்தின் அறிக்கை.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய ஏழு தேசிய கட்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்த மற்ற ஆறு கட்சிகளின் 2017-18-ம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 1,293.05 கோடி.

மொத்த வருமானத்தில் ரூ. 467.13 கோடி நன்கொடையாளர்களின் விவரங்களோடு உள்ளது.
 ரூ. 136. 48 கோடி சொத்துக்களின் விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பதிப்பக வருமானம் மற்றும் கட்சி வரியின் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 47 சதவீதம் தெரிந்த வழியிலும் மீதமூள்ள 53% பெயர் தெரியாத மூலத்திலிருந்தும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. தேர்தல் பாண்டுகள் மூலமாக மட்டும் ரூ. 689.44 கோடி நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் (2004-05 முதல் 2017-18வரை) தேசிய கட்சிகள் ரூ. 8721.14 கோடியை பெயர் தெரியாத மூலங்களிலிருந்து பெற்றிருக்கிறது என்கிறது கண்காணிப்பகத்தின் அறிக்கை.

ஆக மொத்தத்தில், கருப்பு பணத்தை ஒழிக்க வந்த மோடி ரூ. 500 கோடி பணத்தை யாரென்றே தெரியாத நபர்களிடம் கிட்டத்தட்ட கருப்பு பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளார் என்பதும் கார்ப்பரேட் நலன்களுக்காக ஓடி..ஓடி உழைத்ததில் ரூ. 400 கோடி அளவுக்கு அவர்கள் நன்கொடையாக நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

அதோடு, தேர்தல் நிதி தில்லுமுள்ளுகளில் மோடியின் கூட்டாளிகளாக மற்ற தேசிய கட்சிகளும் இருக்க விரும்புகின்றனர்.
அதனால்தான் தேசிய கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவருவதில் இவர்கள் முனைப்புக் காட்டவில்லை என்பது தெரியவருகிறது.

கலைமதி
நன்றி: அவுட் லுக்

கொடநாடு கொலைகாரர்கள்.?சனி, 26 ஜனவரி, 2019

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ....

சார்லி சாப்லின் 2 படம் அதற்குள் இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியும் அதற்கான அதிகாரமும்,வசதியும் அரசுக்கு உண்டு.
ஆனால் படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு நிதிமன்றம்   தடை என்ற வேடிக்கையோடு முடிந்து விடுகிறது.
மற்றப்படங்களை வெளியிட நீதிமன்றம் என்ன அனுமதியா வழங்குகிறது.?
தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய முகவரியை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.அதனால் முடக்க முடியவில்லை என்கிறது அரசு.
சைபர் கிரைம் துறையை கையில் வைத்திருக்கும் அரசு இப்படி சொல்வது வேடிக்கை.
மோடிக்கோ,பழனிசாமிக்கோ மிரட்டல் வந்தால் சிலமணி நேரங்களில் கண்டு பிடிக்கும் சைபர் கிரைம் இதை மட்டும் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

புதிய படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இனிய புதிய முகவரியை சாதாரண மக்கள் கூட கண்டுபிடித்து படத்தை தரவிறக்கி பார்க்கிறார்கள்.
ஆனால்  அரசு ...?

தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு சினிமா உலகுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. 
தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரிக்காகவே இணையத்தை மொய்க்கும் கூட்டமும் அதிகரித்தபடியே இருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல… உலக சினிமாவுக்கே மிரட்டல்தான்!
 கோடிகளை கொட்டி எடுக்கப்படும் சினிமாக்களை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது.

சினிமாப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனதுமே தியேட்டர் ஊழியர்களையோ, வினியோகஸ்தர் தரப்பு ஆட்களையோ பிடித்து முழுப் படத்தையும் ‘காபி’ செய்து ஆன் லைனில் வெளியிடுவதுதான் தமிழ் ராக்கர்ஸின் வேலை.
 தமிழ் படங்களில் இருந்து ஹாலிவுட் படங்கள் வரை, எந்த மொழிப் படமும் இவர்களின் கோரப் பிடியில் இருந்து தப்புவதில்லை.

இதற்காக உலகம் முழுவதும் தங்கள் ஆட்களை வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். 
திருட்டுத்தனமாக இதில் புதுப்படங்களை பார்க்க சினிமா ரசிகர்கள் அலை மோதுகிறார்கள்.
இதனால் இந்த இணையதளத்திற்கு விளம்பரங்கள் மூலமாக வருமானம் கொட்டுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்து பலமுறை அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நீதிமன்றங்களும்கூட புதுப் படங்களை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதித்து பல முறை உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. 
எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இயங்க முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டால், உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வெப்சைட் முகவரியில் கூடுதலாக ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் லட்சக்கணக்கான திருட்டு அபிமானிகளில் ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது. 
இதனால் இந்த இணையதளத்தை முழுமையாக தடை செய்ய முடியாமல் அரசாங்க இயந்திரமே தடுமாறி நிற்பதுதான் நிஜம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் புதிய முகவரிகள் வேகமாக பறிமாறப்பட்டுவிடுகின்றன. தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணம் முதல் பாப் கார்ன் வரை தியேட்டர்காரர்களின் கொள்ளை ஆகியவற்றை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.


தியேட்டர்களில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது சரி! 
அதை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துவதுமுடியாதுதான்.

ஆனால் அதே திரையங்கு உரிமையாளர்கள்தான் தமிழ் ராக்கர்ஸுக்கு புதிய படங்களை பதிவு செய்யவும் உதவுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இதை எல்லாம் ஒழிக்கத்தான் கமல்ஹாசன் தனது படத்தை திரையரங்குகள் மற்றும் சேனல்கள் மூலம் ஒரே நேரத்தி வெளியிட்டால் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்வது தானாகவே குறைந்துவிடும்.

படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கள் வீட்டிலேயே பார்க்க முடியும்.

குடும்பம் திரையரங்குக்கு செல்வதால் ஏற்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு மீதமாகும் என்றார். கட்டாயமாக அங்குதான் வாங்க வேண்டிய தண்ணீர் பாப்கார்ன்,காபிக்கு செலவாகும் ஆயிரங்களை மீதமாக்கலாம்.

அப்போது அவரைத்திட்டித் தீர்க்காத திரையரங்கினரே கிடையாது.ஒரு ஞாயிறு நாள்தான் சானலில் படம் ஒளிபரப்பாகும் .தேவையானவர்கள் மட்டுமே பணம் செலுத்தி படம்பார்க்க முடியும்.

மற்ற நாள்களில் திரையரங்குகளித்தான் பார்க்க முடியும்.திரும்ப பார்க்க ஆவல் உள்ளவர்களும் திரையரங்குதான் செல்ல வேண்டும்.இதனால் திரையரங்குகளும்பாதிக்கப்படாது.
தயாரிப்பாளருக்கு சேனல்  மூலம் பல கோடிகளில் வருமானம் வரும்.
கமல்ஹாசனுக்கு அன்று உருவான எதிர்ப்பு அவரை மவுனியாக்கி விட்டது.

திரையுலகின் பல மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் கமல்ஹாசன்தான்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு,ஏவிட் முறை படக்கோர்ப்பு (எடிட்டிங்) ,டிடிஎஸ்,நேரடி ஒலிப்பதிவு ,ஏவியேஷன் காமிரா என்று இன்று அனைவரும் அனுபவிக்கும் வசைகளை முதன்முறை தனது படங்களில் தைரியமாக உபயோகித்து அறிமுகம் செய்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் என்பது மறுக்க முடிய உண்மை.

காலத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இடர்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பும் அதே திரையுலகில் இருந்துதான் கிடைக்கிறது.

திருடனாய்ப்  பார்த்து திருந்தா விட்டால் ....

====================================================

வியாழன், 24 ஜனவரி, 2019

துரோகத்தின் உச்ச கட்டம்!

புறக்கணிக்கப்படும் "எச்.ஏ.எல்" நிறுவனம்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 17.1.2019 நாளிட்ட ஊடகச் செய்தியை பெருமகிழ்ச்சியோடு மறுநாளே 18.1.2019 முதல் பக்கத்தில் தீக்கதிர் தமிழ் ஏடு மட்டும் முழு தொழில்நுட்ப விபரங்களுடன் வெளியிட்டிருந்தது.
தற்காப்பு உற்பத்தியில் சர்வதேச தர மின்னணுவியலுடன் கூடிய சண்டை விமானதயாரிப்பில் இது பெருமைக்குரிய சாதனைதான். அதிகஉயரத்தில் பறந்தபடியே நகரும் இலக்கை எந்த திசையிலிருந்தும் தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் ஆயுதம் பொருத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹெலிகாப்டரின் சோதனை வெற்றிஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி உள்ளாற்றலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தமகிழ்ச்சிகரமான வெற்றிக்காக நமது டிஜிட்டல் சக்திமான் மோடிஜி அன்றைய தினமே எச்ஏஎல் நிறுவனத்தைவாழ்த்தி செய்தி வெளியிட்டிருந்தாரா இல்லையா என்பதைபிரபல செய்தித் தாள்களிலிருந்து அறியமுடியவில்லை.

எச்ஏஎல் நிறுவனத்தின் திறன்
இம்மாதம் முதல் வாரத்தில் எச்ஏஎல் முன்னாள் தலைவர் அசோக் சக்சேனா ஒரு ஆங்கில செய்திநிறுவனத்திற்கு தனது கட்டுரையை அனுப்பியிருந்தார்.
அதில் “இப்போதும் மோசமாகிவிடவில்லை; அரசுக்கும்அரசுக்குமான (இண்டர் கவர்ன்மெண்ட்டல் அக்ரிமெண்ட்) ஒரு ஒப்பந்தத்தின் மூலம் எல்லா ரபேல் ரகபோர் விமானங்களையும் நமது எச்ஏஎல் நிறுவனத்திலேயே தயாரிக்க முடியும்” என கூறியிருந்தார்.

நவீன சண்டை விமானங்களான எஸ்யு.30 எம்கேஐ (இது நமது வான்படையின் நட்சத்திர போர் விமானம் ரபேலுக்கு இணையானது) மிக் 29 பிரஞ்ச் ஜாகுவார் விமானங்களை தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தயாரித்த அனுபவமிருப்பதால் ரபேலை தயாரிப்பதற்கான நிறுவனஉள்ளாற்றல், அனுபவம், தகுதி எல்லாமே நமது எச்ஏஎல்நிறுவனத்திடம் உள்ளது.

 பிரெஞ்ச் நிறுவனமான டசால்ட்டுடன், ஒரு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் போட்டு எச்ஏஎல்-இல் ரபேல் தயாரிக்கப்பட்டால் பராமரிப்பு, பழுது பார்த்தல், அதற்கான வசதிகள், பயிற்சி வசதிகள், எஞ்சின்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, சிறந்த சிக்கன செலவின தீர்வு, புதிய விமானங்களை குறைந்த செலவில் தயாரிக்கும் வாய்ப்பு உருவாகும் எனவும் சக்சேனா எழுதியிருந்தார்.
 9.1.2019 அன்று பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரையில், எச்ஏஎல்-இன் திறன்குறித்த சந்தேகங்களை அசோக் சக்சேனா நிராகரித்துள்ளார் என்ற முன்னுரையுடன் அச்செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மோடி அரசுதான் எச்ஏஎல் குறித்த அந்த துரோக பிரச்சாரங்களை சந்தேகங்களை தொடர்ந்து செயற்கையாக உருவாக்கிவந்தது என்பதும் அந்த அழுத்தத்தில்தான் சக்சேனா தனது கட்டுரையில், தான்விரும்பும் தீர்வோடு எழுதியிருந்தார் என நாம் கருதலாம்.

பாதுகாப்பு அமைச்சரின் உள்நோக்கம்

13.9.2018 அன்று பிடிஐ நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் “முந்தையஅரசின் ஒப்பந்தத்தில் 126 ரபேல் விமானங்களை தயாரிக்க.. வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அவைகளை தயாரிப்பதற்கான திறமையை எச்ஏஎல் கொண்டிருக்கவில்லை” என்று பகிரங்கமாக கூறினார். (டைம்ஸ் குழுமச் செய்தி 13.9.2018)

தனது கார்ப்பரேட் கூட்டாளியான ரிலையன்ஸ் அம்பானிக்காகவே குறுகியகாலத்தில் நரேந்திர மோடி எச்ஏஎல் நிறுவனத்தை புறக்கணித்து அந்த வாய்ப்பினை தற்காப்பு உற்பத்தியில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாரி வழங்கினார்.
 இது மட்டுமின்றி, மிக அதிக விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும், இந்த சண்டை விமானஊழல் விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல, தற்காப்பு உற்பத்தி மற்றும் சர்வதேச ஆயுத விற்பனை சந்தையிலும் கடந்த இரண்டு வருடங்களாக அம்பலப்பட்டு நிற்கிறது.
'தேஜஸ்' போர் விமானம்.எச்.ஏ.எல்.

சக்சேனா கட்டுரை வெளியான ஒரு வாரத்தில்எச்ஏஎல் தனது விமான பொறியியல் மற்றும் மின்னணுவியல் ஆற்றலை மோடி அரசின் கன்னத்தில் அறைந்தாற்போல் நிரூபித்துள்ளது. ரபேல் ஊழல் அம்பலமாகியிருக்கும் இத்தருணத்தில் எச்ஏஎல்-இன் இந்த வெற்றி,இந்தியா முழுவதும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 1965, 1971 யுத்த ஜாம்பவான்களுக்கும் (றுயசஎநவநசயளே) விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கும் நாட்டை நேசிக்கக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எச்ஏஎல் நிறுவனத்திற்கு திறமையில்லை என நிர்மலா சீதாராமன் தில்லி செய்தியாளர் சந்திப்பில் பேசியதையும் சக்சேனாவின் 9.1.2019 தேதியிட்ட அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தையும் எச்ஏஎல்-இன்17.1.2019 சாதனையையும் இணைத்து புத்திசாலியானஊடகவியலாளர்கள் நேரடி பேட்டி ஒன்றில் நிர்மலா சீதாராமனின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவார்களா?


எது நிரந்தர தீர்வு?

பாதுகாப்பு உற்பத்தியை லாப வெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கும் மிக மோசமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.
இது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும்சமூக வாழ்வியல் போன்ற துறைகளில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஆசிய கண்டத்தின் அமைதியை சீர்குலைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான நிரந்தர தீர்வு என்ன?அருகாமையில் ரஷ்ய - சீன அனுபவங்கள் நம் கண்முன்னே உள்ளன. உலகில் ஆயுத உற்பத்தி ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் ரஷ்யா உள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை துணை நிறுவனங்களாகவும் சந்தையில் கூட்டு பங்கு நிறுவனங்களாகவும் உள்ளன. ஆனால்அவை எல்லாம் ரோஸ்டக், யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன், யுனைடெட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் போன்றபிரம்மாண்டமான பாதுகாப்பு உற்பத்தி அரசு நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தும் ரஷ்ய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன.

பாதுகாப்பிற்காக 150.2 பில்லியன் டாலர் ஒதுக்கீடுசெய்யும் இரண்டாவது நாடு சீனா. இதில் பெரும்பகுதியை தனது சொந்த பாதுகாப்பு உற்பத்தி வளர்ச்சிக்காகசீனா செலவிடுகிறது.
உலகின் மிகச்சிறந்த 22 பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் மக்கள் சீனத்தின் அரசு நிறுவனங்களாகும். இதில் முதல் பத்து நிறுவனங்களில் சீனத்தின் அரசு நிறுவனங்களான சிஎஸ்ஜிசி, ஏவிஐசி மற்றும் நாரின்கோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
 1998லிருந்து 2017 வரை தளவாட ஏற்றுமதி 211 விழுக்காடு உயர்ந்து முதன்முறையாக உலகின்முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.


ஆரவாரமின்றி முன்னேற்றம்

சீனத்தின் அரசு நிறுவனமான செங்டு விமான தயாரிப்புநிறுவனம் ஆரவாரமே இல்லாமல் ஐந்தாம் தலைமுறை ஜே.20 ரக போர் விமானங்களை தயாரித்து தனது படையணிகளில் இணைத்து விட்டது.
 சீனத்தின் பாதுகாப்பு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்து வருவதுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் நான்காம் தலைமுறை மிக்.29 மற்றும் எஸ்யு.30 எம்கேஐ போர் விமானஉற்பத்தியில் ஏற்கனவே உற்பத்தி அனுபவம் மற்றும் உள்ளாற்றல் பெற்றுள்ள எச்ஏஎல்-ஐ புறக்கணித்து விட்டு,தகுதியில்லாத ரிலையன்சை அங்கீகரித்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திக்கும் நாட்டிற்கும் மோடி இழைத்த துரோகத்தின் உச்சமாகும்.

சர்வதேச தரஅரசுத்துறை நிறுவனங்களான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஏ) பாரத் டைனமிக்ஸ், பெல் போன்ற ஆராய்ச்சி உற்பத்தி நிறுவனங்கள்இணைந்து ராணுவத்திற்கான நாக், திரிசூல்,ஆகாஷ், பிரம்மோஸ், ப்ரித்வி போன்ற ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள், வான் தற்காப்பு மின்னணுகருவிகளை உற்பத்தி செய்து வருகின்றன.

கார்ப்பரேட்டுகளிடம் சிக்கிய ‘மேக் இன் இந்தியா’

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.
மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.

இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.

 மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.
 இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
                                                                                                                                                                                                                                              - சுஜித் அச்சுக்குட்டன்

புதன், 23 ஜனவரி, 2019

எப்படி கையாளப் போகிறோம் ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை

ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.
 சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்;
இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது என்று சொல்லலாம்.
 பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.

சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக இருக்கும். 
பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. 

 இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன.

அந்தந்த சூழலில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட் தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள்.
ஆனால், மக்கள் இதை விரும்புகின்றனர்.
மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன் என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார்.
சாராம்சத்திலும் தன்மை அளவிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?

இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை.

இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.

உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில் இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது.
தற்போது வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.

வெப் 1.0, வெப் 2.0 மற்றும் வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு சாரமாக புரிந்து கொள்வோம்.
வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை கொண்டதாக (Uni Directional) இருக்கும் –
 அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர் அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு (வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம் என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள் அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் (இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்).
 இப்போது வளர்ந்து வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் – அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.
இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.
வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால் ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார் கட்டுரையாளர்.
இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக முன்வைக்கின்றனர்.

 இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள் அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.
வேய்நித் பால்த்ரோ.
வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.
இதில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
 இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள் குறித்தும் பாடம் எடுக்கிறார்.
பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் டொனால்டு டிரம்ப். அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.
வழமையான அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில் இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில் அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப் பெரிய அளவுக்கு கைகொடுத்தது.

தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன.
 இதன் விளைவாக சமீப காலமாக போலி அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. ச
மூக வலைத்தளங்களே இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.


இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்” வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன.

இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார்.

அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத் தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும் என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.
இதன் எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம். பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக” ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர். வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல் கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.

இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி வருகின்றன.

நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள் சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு பெண் அநியாயமாக இறந்தே போனார்.
இந்தப் போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம்.

 அல்லது இந்த சூழலை மாற்றப் போராடலாம்.
 நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை.

அதில் சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும் சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம் கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.
என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
                                                                                                         நன்றி:   வினவு -சாக்கியன்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

எச்.ராஜா வை வாரிய சரித்திரன்

இப்படியா ராஜாவை வாரி விடுவது.
காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம்.
இது கொஞ்சம் அதிகப்படிதான்.
ஆனாலும் சுவாரிசமாக இருந்தது.
ரஜினி பேசுவதுபோல் எச்ச.ராஜாவிடம் குரல் மாற்றி பேசி போட்டு வாங்கியிருக்கிறார்கள்.
அந்த அட்மின் விவகாரம் உண்மைபோலவே பெருகிறார்.

சனி, 19 ஜனவரி, 2019

மூளை சுறுசுறுப்பாக...,

அலுவலகத்தில் தினமும் 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

துக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகளும் மிக அவசியம். எந்தெந்த உணவுகள் நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக்க உதவும் எனத் தெரிந்துகொள்வோம்.


காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளையின் கொழுப்பு அமிலச் சங்கிலியை உறுதியாக்குகிறது. தினமும் இரவு, ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
 ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவது தவறு.
 சிறிது நேரம் கழுத்து சாப்பிடலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முட்டை, மீன், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் டொகோசஹெக்ஸேனாய்க் ஆசிட் (Docosahexaenoic acid) எனும் அமிலச் சுரப்பு அதிகரிக்கிறது.
இந்த அமிலம், மூளை நரம்புகளைத் தூண்டி, மூளையின் செயல்திறன் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது.
 நம் ஊரில் கிடைக்கும் வஞ்சிரம், நெத்திலி மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவு பெறமுடியும்.
மேலை நாடுகளில் பிரபலமான சால்மன் மீனுக்கு இணையான சத்து இவற்றில் அடங்கியுள்ளது. 
முட்டையில் உள்ள கோலின் சத்து, தண்ணீரில் கரையக்கூடியது.
இது, மூளை நரம்புகளைச் சுறுசுறுப்பாக்குகிறது.
வாரத்துக்கு மூன்று நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

 முழுதானியங்கள், இதய ரத்தநாளங்களைப் பாதுகாப்பதுடன், மூளையின் ரத்தஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அறிவுக்கூர்மை, நினைவுத்திறன் அதிகரிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைவரும் இவற்றைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சப்பாத்தி, களி, சம்பா கோதுமை உப்புமா உள்ளிட்ட உணவுகளை இரவு உணவாகச் சாப்பிடலாம்.

 பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அசைவ ரெசிப்பிகள் தயாரிக்கும்போது, பட்டையைச் சேர்க்க வேண்டும்.
செரிமானத்துக்குப் பயன்படும்.
 உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
அறிவுக்கூர்மையை அதிகரிக்கும்.

மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுவது, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள். இவை இரண்டும் யோகர்ட் என்னும் கெட்டித் தயிரில் உள்ளது.
 இதனை மதியச் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். யோகர்ட் செரிமானமாகத் தாமதமாவதால், இரவில் இதனை சாப்பிடக் கூடாது.
லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்கள், இதனைத் தவிர்க்க வேண்டும்.
இதற்கு மாற்றாக மீன், முட்டை, காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மரு உள்ளவரா?
கொலாஜன், ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவற்றை போக்க வழிகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும்.
 இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

 ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும்.
 இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அகோரி

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். 
 எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள். 


இப்படியாக இந்திய சமூகத்தின் விளிம்பின் வாழும் இந்த இந்து சாமியார்கள் அகோரிகள் என்று அறியப்படுகிறார்கள். சமஸ்கிருதத்தில் அகோரி என்றால் 'பயமில்லாத' என்று அர்த்தம். 
ஆனால், இவர்கள் செய்யும் சடங்குகளின் கதைகள் பலரின் உள்ளே ஆர்வத்தையும், வெறுப்பையும், பயத்தையும் வர வைக்கும்.


ஆன்மீக ஞானத்தை அடைந்து, கடவுளுடன் ஒன்றாக இணைவதற்காக அனைத்தையும் கடந்து இருப்பதே அவர்களின் பொதுவான வழக்கம். 

மற்றவர்களுக்கு பெரும் மனத்தடை இருக்கும் ஒரு விஷயத்தை உடைப்பதே அகோரிகளின் அணுகுமுறை. பொதுவாக இது நல்லது, இது கெட்டது என்ற சாதாரண கருத்துகளை இவர்கள் ஏற்க மாட்டார்கள்.

மனித மாமிசத்தை உண்ணுவது, தங்களின் மலத்தை உண்ணுவது என அவர்கள் ஆன்மீக வாழ்க்கை பல அபாயகரமான வழக்கங்களை கொண்டதாகும். ஆனால், இதையெல்லாம் செய்தால், ஒரு மேம்பட்ட நிலையை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இன்று இவர்கள் பின்பற்றும் வழக்கங்களைப் பார்க்கும்போது, சமீப சில நூற்றாண்டுகளுக்குள் இவை தொடங்கி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அகோரி என்ற வார்த்தையே 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.

7ஆம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்ட கபாலிக (மண்டை ஓட்டை ஏந்தி இருப்பவர்கள்) துறவிகளின் அநேக பழக்கங்கள் உடைய அகோரிகளாக இருந்துள்ளனர். அவர்கள் மனிதர்களை உயிர்பலி கொடுக்கும் வழக்கத்தைக்கூட கடைபிடித்து வந்தார்கள். 

மற்ற சில இந்து சாமியார்களைப் போல, அகோரிகளுக்கு இடையே எந்த ஒருங்கிணைப்பும் கிடையாது. பெரும்பாலும் தனிமையிலேயே வாழும் அவர்கள் வெளி மனிதர்களை அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். தனது சொந்த குடும்பத்தினரிடம்கூட எந்த தொடர்பையும் வைத்திருக்க மாட்டார்கள். 

பெரும்பாலான அகோரிகள் கீழ் சாதி என்று கூறப்படும் சாதிகளில் இருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
பல்வேறு அகோரிகள், வெவ்வேறு விதமான அறிவாற்றலுடன் இருப்பார்கள். சிலர் நல்ல கூர்மையான அறிவுடன் இருப்பார்கள். ஒரு அகோரி நேபால் நாட்டு அரசரின் ஆலோசகராகக் கூட இருந்தார்,.


அகோரிகள் சரியாக புரிந்து கொள்ளப்படாதவர்கள்.

அகோரிகள் இயற்கையோடு சேர்ந்து மிக எளிமையாக வாழக்கூடியவர்கள். எந்த கோரிக்கைகளும் அவர்களுக்கு கிடையாது. அனைத்தையும் ஒரு உச்சத்தின் வெளிப்பாடகவே அவர்கள் பார்க்கிறார்கள். யாரையும் அல்லது எதனையும் அவர்கள் வெறுக்க மாட்டார்கள்.
 அதனால்தான் கொல்லப்பட்ட விலங்கின் மாமிசத்திற்கும், மனித மாமிசத்திற்கும் இடையில் அவர்கள் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதனை அவர்கள் உண்வார்கள்.
அகோரிகள் வழிபாட்டின் முக்கியமான மற்றொரு பகுதி விலங்குகளை பலி கொடுப்பது.


கஞ்சா புகைத்துக் கொண்டு, மிகுந்த உற்சாகமான நிலையில் கூட, சுய விழிப்புணர்வுடன் இருக்க அவர்கள் முயல்வார்கள்.

ஒரு சில குறைவான மக்களே, அகோரி நம்பிக்கையை உண்மையாக பின்பற்றுக்கின்றனர். 

கங்கையில் குளிக்க கும்பமேலாவுக்கு வருகை தரும் பலரும் தன்னை அகோரிகள் போல காட்சிப்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது. 

அங்கு வரும் சுற்றுலா வாசிகள் மற்றும் பக்தர்களிடம் இருந்து பணம் வாங்க அகோரிகளாக நடிப்பார்கள் என்கின்றனர். 

அங்கு வரும் பக்தர்கள் அவர்களுக்கு பணம் மற்றும் உணவு வழங்குவார்கள், ஆனால், உண்மையான அகோரிகள் பணத்தை அலட்சியம் செய்வார்கள்.

அழிக்கும் கடவுள் என்று அறியப்படும் சிவன் மற்றும் அவரது மனைவி சக்தியை தான் முக்கியமாக அகோரிகள் வணங்குவார்கள். வட இந்தியாவில் ஆண் அகோரிகளை மட்டுமே காண முடியும். ஆனால், மேற்கு வங்காளத்தில் பெண்களும் அகோரிகளாக வாழ்வதை காண முடியும். பெண் அகோரிகள் உடை அணிந்திருப்பார்கள். 
தென்னிந்தியாவில் அகோரிகள்  இல்லை.சிலர் இருக்கலாம்.அவர்களும் மக்களிடம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மறைவாகவே இயங்குகின்றனர்.ராஜராஜன் காலத்தில் இருந்ததாக தெரிகிறது.
பகுத்தறிவு கொஞ்சம் அதிகமாகவே தென்னிந்தியப்பகுதிகளில் இருப்பதால் கூட இருக்கலாம்.வட இந்தியாவில் பழமைவாத இந்து மூட நம்பிக்கைகள் பரவலாகவே இருக்கிறது.அகோரிகள் அங்கு பெருக காரணம்.

பெரும்பாலான மக்களுக்கு சாவு குறித்த அச்சம் உண்டு. உடல் தகனம் செய்யப்படும் மைதானங்கள் இறப்பைக் குறிப்பவை. அதுதான் அகோரியின் தொடக்கப்புள்ளி. அவர்கள் சாதாரண ஒரு மனிதனின் அறநெறிகளையும் மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்த விரும்புகிறார்கள்.

அகோரிகள் குறித்த அனைத்து விஷயங்களும் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை அல்ல. 

கடந்த சில தசாப்தங்களில், பல வழக்கங்கள் மாறியுள்ளன. அவர்கள் தொழு நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் தொடங்கியுள்ளனர்.
மனிதர்கள் தொடவே தயக்கம் காட்டும் ஒரு சமூகத்தினருடன் அகோரிகள் பணிபுரிந்து வருகிறார்கள்என்கிறார் மின்னிசோடாவை சேர்ந்த மருத்துவ மற்றும் கலாசார மானுடவியலாளரான ரொன் பேரட்.

தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட தொழு நோயாளிகள் பலர், வாரணாசியில் அகோரிகளால் நடத்தப்படும் மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு ஆயூர்வேத முறையில் இருந்து நவீன மேற்கத்திய மருத்துவ முறையில் கூட சிகிச்சை வழங்கப்படுகிறது.
"மருந்துகளும் அவர்களது ஆசிர்வாதங்களும் ஒன்றாக கிடைக்கிறது."
அகோரிகள் சிலர் செல் போன்கள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். 
இப்போது அகோரிகள் வெளியிடங்களுக்கு செல்லும்போது குறைந்தளவிலாவது ஆடைகள் அணிய ஆரம்பித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் இந்து மதத்தை பின்பற்றினாலும் அனைவருக்கும் ஒரே விதமான நம்பிக்கை இருப்பதில்லை.
எத்தனை அகோரிகள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் என்றாலும் சில ஆயிரக்கணக்கில் இவர்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 பல தரப்பட்ட சாமியார்களை பார்த்த இந்திய மக்களுக்கு, அகோரிகளை பார்த்தால் பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம். 

இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளதாக ஒருசில அகோரிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கும் ஒரு மனத்தடை இருக்கிறது.
"சடங்கிற்காக பாலியல் தொழில் செய்பவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். ஆனால், ஒருபாலுறவை அங்கீகரிக்க மாட்டார்கள்" என்கிறார் மருத்துவர் மலின்சன்.
மேலும் அவர்கள் இறக்கும்போது, மற்ற அகோரிகளால் அவர்கள் உடல் உண்ணப்படாது. சாதாரண மக்களை போல அவர்கள் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும்.

                                                                                                    உதவி:தமிழோசை.
வெள்ளி, 18 ஜனவரி, 2019

கோலார் வைர வயல்


‘மன்மத ராசா’ பாடல் ரசித்துப்பார்த்தவர்களுக்கு அந்த அடுக்கடுக்கான மணல் மலை ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.
அப்பாட்டு எடுக்கபப்ட்ட இடம்தான் சுருக்கமாக கே.ஜி.எஃப் எனப்படும் கைவிடப்பட்ட கோலார் தங்க வயல்.

  கே.ஜி.எஃப்.  என்று கோலார் தங்க வயல் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படம்கூட வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது.

இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80% தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள் காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண் தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பல லட்சம் டன் தங்க மண் எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் 


சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு.

பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா?
இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன.

அதேபோல், அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான்.
 இந்தக் குறியீடுகளின் கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றனர்.

நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின.
தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில் நிறுத்தப்பட்டுவிட்டது.

சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு.
ஒருவேளை இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல் இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம்.
ஆனால் அங்கு கோலார் தங்க வயல் தொழிலாள தமிழர்களுக்கு  வேலை கிடைக்குமா?.
 அணில் அகர்வால் பாதுகாப்பு படை
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கனவு கண்டவர்களைக்கூட வீடு புகுந்து கைது செய்யும் அரசு, வாராவாரம் எல்லா நாளிதழ்களிலும் வரும்  ஸ்டெர்லைட் ஆதரவு விளம்பரங்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஏன்?
இந்த விளம்பரம் கொடுத்தவர்கள் தூதுக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்.இந்த சங்கங்கள் யாரால் உருவாக்கப்பட்டது,வரவு-செலவு கணக்கு என்ன?
இந்த விளம்பரம் கொடுக்க எவ்வளவு செலவு?
அந்தத்தொகை வந்த வழி என்ன?அரசு அனுமதித்த விதிகளின்படி பெறப்பட்டதா?
என்று அரசு கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.


ஸ்டெர்லைட் நாசகார பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்துக்களை ஆவணப்படம் எடுத்தவரை உடனே நாட்டை விட்டு வெளியேற்றி ஆணையிட்டு அவர் பேட்டி எடுத்தவர்கள் பட்டியல்படி அனைவரையும் மிரட்டிய காவல்துறை இவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.


அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் "ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிராகவோ யாரும் பேசக்கூடாது.மனுக்களை தரக்கூடாது,குறிப்பாக சுவரொட்டி போன்ற விளம்பரங்களையும் செய்யக் கூடாது "என்று ஆணை பிறப்பித்துள்ளார்.


அது ஸ்டெர்லை எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமேதானா?
ஸ்டெர்லை ஆதரவாளர்கள் கருத்தரங்கு,ஊர்வலம்,விழாக்கள்,விளம்பரங்கள் என்று நடத்துவது காவல்துறை கண்களுக்கு தெரியவில்லையா?

அவைகளை மட்டும் அனுமதிப்பது ஏன்?

அரசே மக்கள் நலனுக்காக ஸ்டெர்லைட்டை செயல்படவிடமாட்டோம் என்கிறபோது அதிகாரிகளும் ,காவல்துறையும் யாருக்கு துணையாக இருக்கவேண்டும்.

மக்களுக்கா?
ஸ்டெர்லைட்டுக்கா? 

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக செயல்படுகிறதா தமிழக காவல்துறை?
இது தமிழக காவல்துறையோ?
அணில் அகர்வால் பாதுகாப்பு படையா? 

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் குரல் இதுதான்.
", ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசசாமி அரசு சொல்லுவதைத்தான்  நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லி வருகிறோம். 
இப்படி கூறுவது தவறு என்றால் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மீது 107 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரையும்  கைது செய்வார்களாஇந்த காவல்துறையினர்.?

 


செவ்வாய், 8 ஜனவரி, 2019

தொடரும் 3 கன்டெய்னர்களின் மர்மம் !2016 சட்டமன்ற தேர்தலின் போது, மே 13-ம் தேதி தேர்தல் அதிகாரிகள் வாகன
சோதனையில் ஈடுபட்டபோது 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருப்பது
கண்டறியப்பட்டது.

 டெல்லியில் இருந்து அருண்ஜெடலிதான் முதலில் வாயைத்திறந்து அது வங்கியின் பணம் என்றார்.அதன்பின்னரே கோவை ஸ்டேட் வங்கி அந்த பணத்திற்கு உரிமை கோரியது.

ஆனாலும் அந்த வங்கி சமர்ப்பித்த அதற்கான ஆவணங்கள் முறையானதாக இல்லை.

கண்டெய்னர் லாரிகளின் எண்கள் தவறாக இருந்தது.
பாதுகாப்புக்கு வந்தவர்கள் காவல்துறை சீருடை இல்லாமல் அனுமதி பெறா  துப்பாக்கி வைத்திருந்தனர்.அவர்களும் காவல்துறை வாகனத்தில் வராமல் தனியார் சொகுசு கார்களில் வந்தனர்.

அதைவிட ஐயம் தந்தது.தேர்தல் பார்வையாளர்கள் அக்கண்டெய்னரை சாலையில் பரிசோதிக்க நிறுத்தியபோது வேகமாக நிறுத்தாமல் சென்றதுதான்.துரத்தியே அந்த லாரிகளை மடக்கினர்.

தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாயுடன்
பிடிபட்ட இந்த 3 கன்டெய்னர்களின் மர்மமும், உண்மையான பின்னனியும் இன்று வரை
விடை தெரியாமல் இருந்து வருகிறது.

புதன், 2 ஜனவரி, 2019

சாமானியனா மோடி ?

பொய்கள் மட்டுமே மோடி.!

2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி.

இதுவரை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை.
 
"பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். 
அதுவும் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். "
2 ஆயிரத்து 21 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். 
ஒன்றுமே சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.
 
வெளிநாடு செல்லும் பிரதமர்கள் செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். 
அப்போது தெரிவிக்கும் விவரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட வாடிக்கை.
 
ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது பயணத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகிவிட்டது. 
அதிகபட்சமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது பெருமைகளை முழக்கிவிட்டு வந்திருக்கிறார், செல்ஃபி பிரதமர் என்று பெயரெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
 
உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி நேரம் விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் என்றும் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியிருக்கிறார்.
 
அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான செய்தியாளர் பேட்டியாக நினைத்துவிடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம் கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். 
பிறகு அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்துவிட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால் எடிட் செய்துவிட்டு ஔிபரப்பாகிற பேட்டி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
 
 இந்திய நாடாளுமன்றத்தில் அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை மோடி மறந்துவிட்டார். 
அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப் போலவும் பதில் கூறியிருக்கிறார்.
 
நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே வராத இவர், இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் எப்படித்தான் கூசாமல் போலியாக பேசுகிறாரோ தெரியவில்லை.
 
இந்தப் பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் மோடி. 
அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தேர்தலில் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையிலான போட்டி என்று பெருமை பீற்றியிருக்கிறார்.
மோடி என்ற தனி மனிதனின் வெற்றியாகவே 2014 வெற்றியை பில்டப் செய்தார்கள். 
நிஜத்தில் அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை கூட்டணியாக சேர்த்தே பாஜக தேர்தலை சந்தித்தது
 
இப்போதும் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.
 
உண்மை இப்படி இருக்க, மோடி அகங்காரத்துடன் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 
சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில் தவிர்த்துவிட்டு, தெலங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார். 
அங்கு முக்கியக் கட்சியாக டிஆர்எஸ்சுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக மறைக்கிறார்.
 
ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக கூறியிருக்கிறார் மோடி. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்த தீர்ப்பு பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். 
அப்படி அவர் மறைத்த விஷயத்தை எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
 
பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். 
காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில் உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார விவகாரங்களில் சிக்கிய பாஜக எம்எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏஎன்ஐ நிருபர் எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பொய்யை அள்ளி வீசியிருக்கிறார் மோடி.
 
மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் பொய்களையே அள்ளி விதைத்திருக்கிறார் மோடி.
                                                                                                                                                                                                                                           
-ஆதனூர் சோழன் 
இதுவரை இக்கேள்விகளை ராகுல்காந்தி வெளியில் மட்டுமல்ல ,மக்களவையில் பலமுறை எழுப்பியுள்ளார்.அதுவும் பிரதமர் மோடி முன்னேயே.
ஆனால் இதுவரை மோடி பதில் சொல்ல வாயே திறக்கவில்லை.
தன்னைப்பார்த்து கண்ணடித்ததையும்,கட்டியணைத்ததையும் குற்றமாகக்கூறியுள்ளார்.
தான் ஏழைத்தாயின் மகன்,தேநீர் விற்றவன் என்று கண்ணர் வடிக்கிறார்.
உடனே வெளியே போய் பாஜக கூட்டங்களில் காங்கிரஸ் மீது குற்றங்களை சுமத்துகிறார் .
அதில் 90 % பொய்கள்தான்.
மோடி  தேநீர் விற்றதாகக் கூறப்படம் ரெயில் நிலையமே அவர் கூறும் காலத்தில் இல்லை.அதற்குப் பின்னர்தான் கட்டப்பட்டது என்ற உண்மை வெளியாகி மோடியின் பொய் முகத்தில் கரியைப்பூசிவிட்டது

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...