bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

கையெழுத்து கலை. கையெழுத்து கலை.

                                                          கிராபாலஜி
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். 
இக்கையெழுத்தை நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்கள் முடிவுசெய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். 
உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன்.
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார்வம் மிக்கவர்கள். 
அதிக நம்பிக்கை உள்ளவர்கள். 
அதிகாரப் பிரியர்கள்.
  சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
இவர்கள்.
எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள், எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள். 
நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள். 
எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள், எந்தப் பிரச்னைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்கும், மனஉறுதி படைத்தவர்கள்.
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள், சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள். சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள். 

எழுத்துக்களை நீட்டி, நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள், எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
 எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள், வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள். எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
 எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள், குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள். எழுதும்போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப் போக்குடையவர்கள்.
உங்கள் கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் குணம் தீர்மானிக்கப்படுவது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 
மிக மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் எழுத்தில் உள்ள நல்ல கருத்துக்களால் புகழ் பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். 
அழகான கையெழுத்தை உடையவர்கள் பலர், இன்று மாதக்கடைசியானால் பிறரிடம் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். 
ஆகவே, அவரவர்களின் திறமை, பேச்சு சாதுர்யம், படிப்பு, அனுபவம், புத்திசாலித்தனம் ஆகியவைதான், அவரது ஆளுமை, வாழ்வில் சிறந்த மனிதராக மாறுவது ஆகியவற்றை தீர்மானிக்கிறது. 

===========================================================================

 
’எதையும் எழுதி தொலைச்சிடாதே.பிறகு நம்ம கையெழுத்தை வச்சி நாம நினைக்கிறத கண்டு பிடிச்சுருவாங்க. 


===========================================================================

உயிர் காக்கும் மருந்துகள்.


மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது  முக்கியம்.
ஆனால் சாதாரண தலைவலி என்று கடைகளில்  இரண்டு ரூபாய்க்கு மாத்திரை வாங்கி  சாப்பிட்டு விட்டு வேலையை பார்க்கப் போவதை கூட டாக்டரிடம் சென்றால் இன்றைய நிலையில் ஸ்கேன் முதல் தன்னிடம் உள்ள அவ்வளவு பரிசோதனை கருவிகளுக்கும் வேலை வைத்து நம்மிடம் கையில் உள்ள காசுகளை எல்லாம் பிடுங்கி விட்டு சாதாரண வலி நிவாரண மாத்திரை,அதற்கு துணை மாத்திரை என்று எழுதி வாங்க வைத்து விட்டு தங்கள் கமிசனை மருந்துக்கடைக் காரர்களிடம் வாங்கிக்கொள்ளும் அளவில்தானே இன்றைய மருத்துவர்கள் உள்ளனர்.
காசு போவதை விட அவரகள்  செய்யும் பரிசோதனைகள் அறிக்கைகள் எப்படி வருமோ என்ற பயமும் நம்மை  உயில் எழுதுவைக்க யோசிக்கும் அளவு மனதளவில் பலவீனமாக்கி விடுவதுடன் அன்றைய நாளையும் நமக்கு வீணாக்கி வேலைகளையும் கெடுத்து விடுகிறார்களே?என்று இன்னமும் பெட்டிக்கடைகளை மருந்து வாங்க நாடுவோர் கூறும் நியாயமும் நியாயமாகத்தான் தெரிகிறது.

 ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில் உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் வாழ்வியல் முறை  டாக்டர் ஜி.பக்தவத்சலம்.

தலைவலி, சளி உட்பட பல நோய்களுக்காக, டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்கக் கூடாது.
இதனை, மருத்துவர்கள் 'Over The Counter Prescription' என்று குறிப்பிடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்று   பல பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் இடங்களில், தலைவலிக்கான தைலம், பாரசிட்டமால், குரோசின்,

டோலோ650, வைட்டமின் மாத்திரைகள் போன்றவை டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாராளமாக கிடைக்கும். அவைகளை அவசரங்களுக்கு வாங்கி உபயோகிக்கலாம்.
அதேவேளையில், தூக்க மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பெனிசிலின், எரித்ரோமைசின் போன்ற மருந்துகளை வாங்கக் கூடாது.  உங்களால் எளிதாக வாங்கவும் முடியாது.
சட்டப்படி விற்கவும் கூடாது.

மருத்துவ உலகில் சில மாத்திரைகள் உயிர் காக்கும் மருந்துகள் அல்லது முதலுதவி அளிக்கக்கூடிய மாத்திரைகள் ( Loading Dose) எனக் குறிப்பிடப்படுகின்றன.
இவற்றில், டிஸ்பிரின்  325 மில்லிகிராம் (Disprin 325 mg), அட்டார்வாஸ்டாடின் 80 மில்லிகிராம் (Atorvastatin 80 mg), குளோபிடாப்150 மில்லிகிராம் (Clopitab 150 mg) ஆகியவை மிகமிக முக்கியமானவையாகும்.
 இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து Loading   Dose என்று அழைக்கப்படுகின்றன.

மாரடைப்பு நோயாளிகள் இந்த  மாத்திரைகள் வரிசையில், டிஸ்பிரின் 325 mg,  அட்டார்வாஸ்டாடின்  80 mgஆகியவற்றில்  ஒன்றையும், குளோபிடாப் 150 mg மாத்திரை இரண்டினையும் தங்களுடைய சட்டைப்பையில் எப்போதும் தயாராக வைத்திருப்பது நல்லது.அவர்கள் உயிரை அவசர காலத்தில் இவை காக்கும் .
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், நாற்பது வயதினைக் கடந்தவர்கள், பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் (80 கிலோவுக்கு மேல்), ரத்தத்தில் தீமை உண்டாக்கும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதய நோய்க்கு ஆட்படுபவர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சுமையோடு வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளலாம்.

 நெஞ்சுப்பகுதியில் அசவுகர்யமான உணர்வு, நெஞ்சு எரிச்சல், உடல் அசதி, செரிமான குறைபாடு, வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான நெஞ்சு வலி, தாடை மற்றும் கழுத்துப்பகுதியில் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு மெல்ல மெல்ல வலி பரவுதல், குளிர்ச்சியான தட்பவெப்பம் உள்ள இடத்திலும் வியர்வை பெருக்கெடுத்தல், உடல் பிசுபிசுப்பு, நடக்கவும், மாடிப்படிகளில் ஏறவும் சிரமப்படுதல் உட்பட மூச்சுவிட கஷ்டப்படுதல், தலைசுற்றல், மயக்கம், படப்படப்பு இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள். 

இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

அதோடு மட்டுமில்லாமல்மாரடைப்பு பயத்தில் நடக்கவோ, ஓடவோ, வண்டி ஓட்டவோ கூடாது.

 அமைதியாக படுத்துக்கொள்ள வேண்டும்.

இவை ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, மாரடைப்பின் தீவிர தன்மையைக் கட்டுப்படுத்தும்.
மாரடைப்பு வலி குறைந்தவுடன் காலதாமதம் செய்யாமல், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் உடலில் தென்படும்போது,  நீங்கள் உட்கொள்ளும் இந்த மருந்துகள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற உயிர் காக்கும் அவகாச ஒரு மணிநேரத்தை 3 மணி நேரமாக மாற்றும் சக்தி கொண்டவை.

ஒருவருக்கு மாரடைப்புஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.
அவைதான் மேலே கூறிய அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள்  ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.அறிகுறிகளின் தீவிரம் சற்று குறைந்த வுடன் மருத்துவமனை சென்று தேவையான சிகிச்சைகளை மருத்துவரிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் உங்கள் உயிர் பாதுகாக்கப்படும்.
- விஜயகுமார்
நன்றி:குங்குமம் டாக்டர்.
================================================================================================

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...