bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 30 ஜூன், 2012


பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்!
-க.ராஜ்குமார்
முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.

அமெரிக்காவிற்கு

என்ன நேர்ந்தது?

இன்று சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிற் குள்ளும் அமெரிக்க ராணுவம், அனுமதியில்லா மல் அத்துமீறி நுழையலாம். கேட்பாரில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட லாம். பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஐ.நா. சபையின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கலாம். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட் டால் தம்பி சண்டபிரசங்கன் என்பார்கள். அப்படி ஆட்டம் போடும் அமெரிக்காவிற்கு இப் போது என்ன வந்துவிட்டது.? ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார்? அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை தரும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன்? டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன்? அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே! நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே? “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன்? முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன்? இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஏன்?

மாற்றம் ஏன்?

உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடு களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இடதுசாரி சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு என்ன காரணம்?. பிரான்ஸில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள் ளனர். கீரிஸ் நாட்டில் இடதுசாரிகள் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்காவைச் சுற்றி யுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி வரு கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய்க் கிணறுகள் பொதுவுடைமையாக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சோவியத் ரஷ்யா சிதைந்த இருபது ஆண்டுகள் கடந்த பிறகுதானே நடைபெறுகின்றன. போட்டியே இல்லாத நிலையில் ஏன் முதலாளித்துவம் காலாவதியாகி வருகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட நாடு கள் வளர்ந்துவருவதை ஏகாதிபத்திய அமெரிக் காவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.

உலகம் முழுவதும் பொருளாதார பின்ன டவை முதலாளித்துவ நாடுகள் சந்தித்து வரு கின்ற நிலையில் சீனப் பொருளாதாரம் மட்டும் வளர்ந்து வருகின்றதே, அதற்கு என்ன கார ணம். முதல் இடத்தை நோக்கி சீனாவின் வளர்ச்சி இருப்பதை சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மடி பிச்சையேந்தி நிற்கின்றது என் பதுதானே உண்மை.

முதலாளித்துவத்திற்குக் முட்டுக்கொடுக்க முடியுமா?

முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள இத்தகையப் போக்கைத்தான் காரல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்னறிந்து நமக்கு தெளிவுபடுத்தினர். முதலாளித்துவம் சுயமாக இயங்கும் தன்மையுடையது. அது பங்கேற் பாளர்களின் விருப்பத்திற்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறது என்பதே மார்க்சியம். மூலதனத் திரட்சி என்பது முதலாளித்துவத்தின் நெருக் கடியின் உச்சகட்டம் என்றும் முதலாளித் துவம் தனக்குத்தானே சவக்குழியை பறித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பகன்றனர். அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் கதி யாக உள்ளது. 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிலிருந்து மிக விரைவில் மீளும் என்று சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் ஆண் டுகள் 4 ஆகியும் முதலாளித்து வீழ்ச்சியி லிருந்து அது மீள முடியாமல் திணறிவருகின் றன. வெறும் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் மெக்ஸிகோ நாட்டில் நடை பெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், கடன் சுமையில் சிக்கித் திவாலாகும் நிலையில் உள்ள 17 ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமையை சரிப்படுத்த ஐஎம்எப்-க்கு 43 ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாடு பங்கேற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பு இதற்காக 7500 கோடி டாலர் நிதியுதவி அளிப்பதாக அறி வித்துள்ளது. இதில் இந்தியா மட்டும் 1000 கோடி டாலர் ( இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ‘அம்மாபாடு அவலம் கும்பகோணத்தில் கோதானம்’ என்று சொல்வதைப்போல; ஒரு நேர உணவோடு உறங்கச்செல்லும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு உதவப் போகிறதாம். அது சரி இப்படி சில நாடுகள் உதவுவதன் மூலம் முதலாளித்துவத்திற்கு (நாடுகளுக்கு) ஏற்பட்ட நெருக்கடியை சரிக் கட்ட முடியுமா என்பதுதான் நமது கேள்வி. எந்த அளவிற்கு தூக்கிப் பிடித்தாலும் முதலா ளித்துவத்தின் வீழ்ச்சியை தடுத்த நிறுத்த முடியாது. இன்று உலகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்ற போராட் டங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

சரித்திரம் திரும்புகிறது

ஜி-20 நாடுகள் எடுத்துள்ள முடிவு ‘பிரெட்டன் உட்ஸ் கோட்பாடுகளுக்கு’ முர ணானது என்பதுதான் வேடிக்கையாகும்.

(பிரெட்டன் உட்ஸ் என்பது ஐ.நா.சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் ஆகிய வற்றை உருவாக்குவதற்காக நடத்திய சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள் பற்றியதாகும்) ஐஎம் எப்-ம் உலகவங்கியும் மூன்றாம் உலக நாடு களின் (இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கள்) நிர்வாகத்தை கண்காணிக்கும் வேலை களுக்காகவும், அத்தகைய நாடுகளுக்கு முத லாளித்துவ நாடுகள் மூலமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தை அனுமதித்து, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நிபந்தனைகள் விதித்து, அந்நாடுகளின் இறையாண்மையை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக ளாகும். ஆனால் இன்று ஐஎம்எப்-க்கு மூன் றாம் உலக நாடுகள் நிதியுதவி செய்து அதன் மூலம் முதலாளித்துவ நாடுகளின் பொருளா தார நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கும் வகை யில், ஜி-20 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் அமைந்துள்ளது. சரித்திரம் திரும்புகிறது என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசை திருப்ப தனது சொந்த நாட்டி லேயே பொது எதிரியாக ‘பயங்கரவாதத்தை’ முன்னிறுத்திய அமெரிக்கா, ஒசாமா பின்லேட னின் கொலைக்குப் பிறகு, ஆப்கானிஸ் தானில் தொடர்ந்து ராணுவத்தை வைத்து பரா மரிக்க முடியாமல் திணறும் நிலைக்கு வந்த பிறகு, மேலும் மேலும் உலக அரங்கில் அம் பலப்பட்டு வருகின்றது. என்ன காரணத்திற் காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதை மீறி அதனை விரிவாக்கம் செய்து, தனக்கு முட்டுக்கொடுக்க அதை பயன்படுத்த அமெ ரிக்கா முயற்சி செய்கிறது. இன்று அதன் கூட் டாளி நாடுகளில் இத்தகைய ராணுவ நட வடிக்கைகளில் தங்கள் நாடு ஈடுபடுவதை மக்கள் விரும்பாமல் கிளர்ந்து எழுந்து போராடு வதும், தங்கள் இராணுவ வீரர்கள் பிறநாட்டில் சென்று செத்து மடிவதை விரும்பாத மக்கள், அவர்களை திரும்பப்பெற வலியுறுத்தியதன் காரணமாக தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் போக்கும் அமெ ரிக்காவை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து கூட்டாளிகள் வில கிச்செல்வதை செய்வதறியாது அமெரிக்கா பார்த்துவருகிறது.

பிரச்சனைக்கு காரணம் என்ன?

அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உற்பத்திப்பெருக்கம், அதனால் செல்வக் குவிப்பு ஒரு புறமும் வேலை யின்மை, வறுமை பெருக்கம் என மறுபுறமும் சமூகத்தில் சரிசமமற்ற நிலையை உருவாக்கி வரும் இந்த முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பு, “இயற்கையான ஒழுங் கமைப்பு அல்ல” “இயற்கை விதிகளுக்கு உட் பட்டதும் இல்லை”. ஆகவே மனிதகுலம் விடு தலை பெற வேண்டுமெனில் இத்தகைய அமைப்பை தூக்கியெறிய வேண்டிய அவ சியம் உலகம் முழுவதும் இன்று ஏற்பட்டுள் ளது. மார்க்சியக் கோட்பாட்டின்படி. முதலாளித் துவ அமைப்பின் இயக்கம் என்பது அதன் இயற்கையான நிகழ்வுப்போக்கிலிருந்து அதன் முடிவை நோக்கி தவிர்க்க முடியாத அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிச்செல்லும் என்பதே இன்றைய நிகழ்வுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் என்பது உலகம் சோசலிச அமைப்பில் காலடி எடுத்து வைக்கும் நுழைவு வாயில் என்ற எண்ணத் துடன், எழுச்சியுடன் செயல்படுவோம்.

" தீக்கதிர் " -இதழ் பொன் விழா,,,,,,.


ஊடக பூதமும் நம் கை ஆயுதமும்
-சு.பொ.அகத்தியலிங்கம்
“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை. ஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.

வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறது? நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா? வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந் தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது.

சுயமரியாதைத் தோழர்களின் பிரச் சார வலிமை என்னை வியக்க வைக் கிறது. இப்படியே போனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அடுத்து கூறினார்- அவர்கள் சமூகசீர்திருத்தத்தோடு சமத்து வப் பொருளாதாரப் பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார்.
சுரன்


இந்த பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் ஏடுகளே! ஏடுகள் இல்லாமல் விடு தலைப் போராட்டமும் இல்லை. ஏடுகள் இல்லாமல் திராவிட இயக்கமும் இல் லை. ஏடுகள் இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கமும் இல்லை. தமிழகத்தைப் போல் அரசியல் சார்பு ஏடுகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம்.

* தேசிய இயக்க ஏடுகள்

* திராவிட இயக்க ஏடுகள்

* பொதுவுடைமை இயக்க ஏடுகள் என சில வருடங்கள் முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக் கம் அறக்கட்டளையும் இணைந்து தொடர் கருத்தரங்குகளை சில வாரங்கள் நடத்தின. ஆம் அவ்வளவு விரிவும் ஆழமும் கொண்ட வரலாறு இந்த ஏடு களுக்கு உண்டு.

அந்த வரலாற்று நெடுஞ்சாலையில் ‘தீக்கதிர்’ என்கிற அக்னிக்குஞ்சு பயணம் புறப்பட்டு ஐம்பதாவது ஆண்டில் நுழைவது சாதாரணச் செய்தியா?

சமுதாய வரலாற்றில் வேண்டு மானால் ஐம்பதாண்டு, நூறாண்டு என்ப தெல்லாம் சிறிய காலகட்டமாக இருக்க லாம்.

தனிமனித வாழ்வில் 75 ஆண்டே பெரிது எனலாம்.
சுரன்


ஐம்பதாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. இன்று ஏடுகள் நடத்துவது சுலபமல்ல. மிகப் பெரிய செலவு கொண்ட நடவடிக்கை. மறு புறம் ஊடகங்கள் ஆதிக்கம் ஊதிப் பெருத்துவிட்டது. பொய்யை மெய் யென்றும் மெய்யை பொய்யென்றும் நம்பவைக்கும் பேராற்றல் கொண்ட பூதமாக அவை எழுந்துள்ளன. ஆகவே இப்போது “ஏடுகள் நடத்துவதும்” “பிரச்சாரம் செய்வதும்” மிக நுட்பமான சவாலான பணி.

இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயத்தை முன்னறி வித்து, போர்க்களத்தில் ‘பைலட் ஸ்குவாடு’ செல்வதுபோல் முன்சென்ற “தீக்கதிர்” ஐம்பதாண்டில் அடியெடுத்து வைக்கும் அரிய தருணத்தில் இன்றைய சவால்களை சற்று ஆழ்ந்து கவனிப்பது அவசியமாகும்.

மேற்குவங்கத்தில் நிலச்சீர் திருத்தத்தை அமல்நடத்தியதில் மார்க் சிஸ்ட் கட்சி அரசு மகத்தான சாதனை புரிந்தது; ஆனால் அதி அற்புதமான அந்தச் செயலை எந்த ஊடகமும் பாராட்டவும் இல்லை; மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இல்லை. ஆனால் நந்திகிராமம், சிங்கூர் பிரச்சனையை பூதாகரமாக்கி கம்யூனிஸ்டுகள் விவ சாயிகளின் எதிரி; நிலத்தை பறிப்பவர்கள் என்ற திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டனவே!

இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுக்கான போரில் - மக்கள் ஒற்றுமைக்கான போரில் கம்யூ னிஸ்டுகளை விட அதிகம் உயிர்த் தியாகம் செய்த கட்சி எது? கம் யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட போது தமுக்கடிக்காத ஊடகங்கள், தனி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி அதில் கட்சியினரை மாட்டி வைத்து, கம்யூனிஸ்டுகளின் அரசியல் கொலைவெறி என கேரளா முழுவதும் ஆளும் வர்க்கமும் ஊடகமும் செய்யும் விஷமப் பிரச்சாரத்தை என்னென்பது?

பத்தாயிரம் மலைவாழ் மக்கள் சென்னையில் பிருந்தா காரத் தலைமை யில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வென்றதை செய்தியாக வெளியிடாத ஊடகங்களே அதிகம். 
சுரன்


மேற்குவங்கமாயினும், கேரளமாயினும், கம்யூனிஸ்டுகள் வலிமையாக இருப்பது பன்னாட்டு சுரண்டல் கூட்டத்துக்கும் உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்துக்கும் மதவெறியர் களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இடதுசாரிக் கருத் துக்களை, அவர்களது செயல்பாட்டுக்கு தடையாகப் பார்க்கிறார்கள். இடதுசாரி களை ஒழித்துவிட்டால் அவர்களின் ஆதிக்கமும் கொள்கையும் தங்கு தடையின்றி நடக்கும் அல்லவா? ஆம், இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு களை அள்ளிவீச ஊடகங்களை கைப் பிள்ளை ஆக்குகிறார்கள். குறிப்பாக இடது சாரிக் கருத்துக்களின் மையப்புள்ளியாக செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொச்சைப்படுத்துவதும்; இதுவும் ஊழல் கட்சி, இதுவும் பதவி வெறியர் கூடாரம்; இதுவும் சமூக விரோதிகள் மேடை; இவர்கள் இப்போது கொள்கையை இழந்துவிட்டார்கள். காலத்துக்கு ஒவ்வாத வறட்டுக் கோ ஷங்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது என மக்களின் பொதுப்புத்தியில் விதைக்க ஊடகங்கள் படாதபாடுபடு கின்றன.

நீண்ட கட்டுரைகள் ஒரு சாராருக்குப் போதும்; ஆனால் செய்திகளூடே தன் விஷமக் கருத்தையும் கலந்து விதைத் தால் எளிதாக கருத்துகள் மக்களின் பொதுப்புத்தியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்படியே செயல்படுகிறார்கள். இந்த ஊடகங்கள் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருப்பதால், தவறான கருத்து களும் திசை திருப்பும் தகவல்களும் மிக எளிதில் மக்களின் மனதில் பதி யவைக்கப்பட்டு விடுகின்றன. இதனை அழித்து சரியான சித்திரத்தைத் தீட்டு வது அவ்வளவு எளிதல்ல.

ஆம், அந்த சவால்மிக்கப் பணியில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் எது? நமது சொந்த ஏடு மட்டும்தானே!

ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது இயற்பியல் சக்தி யாகும் என்று மார்க்ஸ் கூறியது இப்போது சாலப்பொருந்தும்; அந்த கருத்துப்போரில் ஆளும் வர்க்க ஊடகங்களை நம்பி இறங்க முடியுமா? உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா? இதை நாம் உணர்ந்தாக வேண் டாமா?
சுரன்


ஒரு கட்சிக்கு கொள்கையை, கருத் தை பிரச்சாரம் செய்வதைவிட முதன் மைப் பணி வேறென்ன இருக்க முடியும்?

பத்திரிகை, பிரசுரங்கள் படிப்பதையும் விற்பதையும் தவிர வேறு எது தலையாயப் பணியாக இருக்க முடியும்?

தீக்கதிரை பாதுகாப்போம்...

தீக்கதிரை பலப்படுத்துவோம்...

தீக்கதிரை செழுமைப்படுத்துவோம்...

தீக்கதிர் பொன்விழாவை ஊரெங்கும் கொண்டாடுவோம். தீக்கதிரை வீடு தோறும் கொண்டு செல்வோம்!

இது பொன்விழா சபதமல்ல; பொன் னுலகம் காணப் பூணும் புரட்சிகர சபத மாகும்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

நடிகர் விஜய்க்கு ஒரு மடல்,இல்லை கடிதாசி

அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்ற கடை நிலை பொது சனத்திலிருந்து தம்பி கோவணான்டியின் வேண்டுகோள் கடிதம்.
தங்களின் நேர்காண்லை ஆவியில் (ஆனந்த விகடனில்) கண்டு விட்டு நேற்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமே வரவில்லை.

தமிழகத்தின் அடுத்த காவலனுக்கா இந்த நிலை என மனசு வலித்துக் கொண்டே இருந்தது.

காவலன் படம் ரீலீஸ் ஆகக் கூடாதென சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த‌தாக மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தீர்கள். முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான் அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என்ற கேள்வியுடன் உங்களின் அரசியல் அரிதார ஆசையை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன? ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

காவலன் படம் ரீலீஸ் ஆகவில்லை அதற்கு ஆளும் கட்சி காரணம் எனவும் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அதற்கு உதாரணமாக குறிப்பிட்டிருந்தீர்கள்.....ஒட்டு மொத்த சினிமாவின் ஆதங்கம் இது. நான் சொல்லிட்டேன் நிறைய பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க எனவும் கூறியிருந்தீர்கள்......
நிற்க!

உங்களிடம் சில கேள்விகள்..........

உங்களின் படம் ரீலீஸ் ஆகவில்லை என்றவுடன் ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்ப‌டும் நீங்கள் தானே அண்ணா எங்கள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி. எங்களிடமே குளிர்பானமாக பாட்டிலில் அடைத்து கொடுத்து, எங்கள் மண்ணையும், மக்களையும் நாசப்படுத்திய பன்னாட்டு கம்பெனியுடன் சேர்ந்து எங்களை கானாவிலே கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது உங்களுக்கு தெரியவிலையா நாடே நாசமாகப் போகிறது என்று?...........

ஜெயக்குமாரின் உடல் மிதந்த வங்கக் கடலில் கடப்பாறை நீச்சல் அடித்து சுறாவாய் நீங்கள் வெள்ளித் திரையில் தோன்றிய போதும், பார்க்க முடியாத அந்தப் படத்தை சகோதர தொலைக்காட்சி வெற்றிப்ப‌டம் வெற்றிப்ப‌டம் என நிமிஷத்துக்கு நிமிஷம் விளம்பரப்படுத்தி...ஒட்டு மொத்த தமிழக மக்களும் இந்த படத்தினால் மோட்சம் அடைந்ததாக சித்தரித்ததே அப்போது உங்களுக்கு தெரியவில்லையா தமிழ்நாடே நாசமாகப் போகிறது என்று?........

என்றைக்காவது ,அத்தியாவசிய‌ப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உத்தப்புரம் பிரச்சனை. , முல்லைப் பெரியாறு பிரச்சனை. என மக்களின் பிரச்சனைக் குறித்து நீங்கள் எதாவது பேசியதுண்டா?....... இலங்கை இனப் படுகொலைக்காக உண்ணாவிரதம் இருந்தீர்கள் ஆனால் அதைப் ப்ற்றி கூட சில நண்பர்கள் வேறு மாதிரி கதைக்கிறார்கள்....உண்மை உங்களுக்கே வெளிச்சம்........ மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, உங்களின் காவலனுக்கு காவல் எனும் போது மட்டும்
ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுவது நியாயமா?

உங்களைப் போன்ற நடிக‌ர்களுக்கு ஒரு நாள் உண்ணாவிரதத்திலேயே எல்லாம் முடிந்து விடிகிறது. ஆனால் எங்களைப் போன்ற கோவணான்டிகளுக்கு மூணு வேளை உணவு என்பது கூட விரதம் தான்.

முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான், அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என பேட்டியளித்து அரசியலில் களம் காண நினைக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

இந்த கடிதத்தை எப்படி முடிப்பது என தெரியவில்லை, ஆவி நேர்காணலில் நீங்கள் கூறிய வரிகளை உங்களிடமே கடன் வாங்கி முடிக்கிறேன்..........

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பக்கத்தை படித்து விட்டு என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம்...எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம், இந்த வலைப் பக்கத்தை கரப்ட் கூட செய்யலாம்.......வாழ்க உங்களை வாழவைக்கும் ரசிக தெய்வங்கள்

அண்ணா எனது வேண்டுகோள் எல்லாம்.........
மக்களை நினை
மக்களுக்காக உழை
மக்களுக்காக வாழு நாளைய சரித்திரத்தில் மக்களே உங்களை இடம் பெறச் செய்வார்கள்.

பின் குறிப்பு.....
அண்ணா இந்த கடிதத்தை படித்து விட்டு பத்திரப்படுத்தி வைக்கவும்...... ஏனெனில் யார் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அரங்கேற்றினார்களோ அவர்களது தொலைக்காட்சியில் காவலன் வெற்றி பெற்றதற்காக‌ ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்....

ஆளும், கட்சி மீதான கோபம் போச்சா???????????அடுத்த படம் 3 இடியட்ஸ் .............புக் ஆயிடுச்சு (நன்றி ஆ.வி)

இடியட்ஸ் இந்த கோவணாண்டியும் அவன் கூட்டாளிகளும் தான்.......

நன்றி அண்ணா....
இப்படிக்கு தம்பி
கோவணாண்டி
                                                                                                                                                     நன்றி;தமிழ் குறிஞ்சி

ஞாநி ‘ஓ’ ஞாநி


ஞாநிமிகப் பெரிய எழுத்தாளர் சமுகசிந்தனையாளர்.இதுதான் எனது முந்தையக்கருத்து.அவரது அலைகள்,தீம்தரிகிட,இதழ்கள் மற்றும் அவர் பொறுப்பேற்று நடத்திய தினமணி ,ஜூனியர் போஸ்ட் போன்றவை அப்படித்தான் என்னைக் கருதவைத்தன.
ஆனால் அவருக்கும் மனதின் ஒரத்தில் சில பிற்போக்கான எண்ணங்கள் உள்ளது
என்பது சமிபகாலங்களில் அவரையும் அறியாமல் வெளியாகிவிட்டது. அவருக்கு தமிழ் ,தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களை என்னகாரணமோ பிடிக்காது.அவர்களை எந்தவகையிளாவது மட்டம் தட்டி பத்திரிகைகளில் எழுதிவிடுவார். குட்டு,சொட்டு,மொட்டு என்று எழுதித்தள்ளிவிடுவார்.
ஆனால் அவரிடமே சில குட்டுக்கான அவலங்கள் உண்டு.
தான் நடத்திய தீம்தரிகிட இதழில் முன்பு தலையங்கம் பக்கம் கீழே ஒரு அறிவிப்பு இருக்கும். அது’குமுதம் இதழ் எழுத்தாளர் உரிமையை பறிப்பதால்
அவர்களைத்தவிர மற்றவர்கள் இதழில் இருந்து படைப்புகளை எடுத்தாளலாம்.’என்பதாகும்.அப்படி எழுதிய அவரே சில காலம் கழித்து அதே குமுதம் இதழில் தனது’ஓ’பக்கத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். குமுதம் எழுத்தாளர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டதா? இல்லை,ஞாநி தான் தனது நிலையில் இருந்து திண்டாடிவிட்டார்.
தமிழிழம் அவரைப்பொறுத்த மட்டில் வெற்றுக்கோசம்.அதைவிட ஈழம் வருவதை அவரும்,ராம்[இந்து]மும் பக்சேவைவிட அதிகமாக விரும்பவில்லை.
அதற்கு அவர் தமிழ் நாட்டில் இல்லாமல் கர்நாடகத் தமிழர்களால் விரட்டப்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதல். அங்குள்ள தமிழர்கள் கேள்விக்கு பதில் கூற பயந்து கூட்டத்திற்கு வராமல் போய்விட்டது முக்கியநிகழ்வுதான்.ஆனால் அவர் இன்னும் தனது சக்திமிக்க பேனாவால் விசம் கக்காமல் இருப்பாரா? அதுதானே முக்கியம்.

'கார்க்கி"


எழுத்தும் புரட்சியும்...........,


பேராசிரியர்ஆர்.சந்திரா
18.6.1936... ஆயிரக் கணக்கான எழுத் தாளர்களை இடது சாரி அரசியலின் பால் ஈர்த்தமார்க்சிம் கார்க்கி மறைந்த நாள். அவர் மறைந்து முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இன் றும் தொடர்கிறது. கார்க்கியின் இயற்பெயர் அலெக்சாண்டர் பெஷ்கோவ்.
சுரன்

16.3. 1868ல் நிழ்னி நோவ் கோர்டானில் பிறந்த கார்க்கி யின் தந்தை கப்பல் நிறுவன ஏஜெண்ட். கார்க்கி ஐந்து வயதில் தந்தையை இழந் தார். அவரது தாய் மறுமணம் செய்து கொண் டார். கார்க்கி, பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்.பதினோறு வயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி கார்க்கி, ‘காநான்’ என்ற சிறிய கிராமத்திற்கு சென்று ரொட் டிக் கடையில் ரொட்டி சுடும் பணியை செய்தார். அப்போது (டடப) லேண்ட் அண்டு லிபர் டிக்ரூப் என்ற புரட்சிகர குழு விவசாயிகளுக்கு கல்வியளிக்க, கிராமங் களுக்கு இளைஞர்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் நடத்திய கூட்டங்களும், நிகோலாய் செனிஷ் வ்ஸ்கி, பீட்டர் லவ்ரோவ், அலெக்சாண் டர் ஹெர்சன், கார்ல் மார்க்ஸ், ஜார்ஜ் பிளெஹானவ் ஆகியோரின் எழுத்துக் களும், கார்க்கி சோஷலிச, புரட்சிகர கருத்துக்களை உள்வாங்க உதவின. கிராமத்தில் ரொட்டிசுடும் வாசிலி செமெ னோவும் தாய் கார்க்கி மார்க்சிஸ்டாக உருவானதில் பங்காற்றியதாக கார்க்கி எழுதியுள்ளார்.
1887 இனவெறி
1887ல் இனப்படுகொலை நடப்பதை கண்டு கார்க்கி அதிர்ச்சி அடைந்தார். அவர் இறக்கும் வரை, இனவெறிக் கெதிராக பிரச்சாரம் செய்ததற்கு அச்சம் பவம் காரணமாக இருந்தது. தொழிலாளர் விடுதலைக்குழு என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றிய கார்க்கி 1889ல் புரட்சிகர சிந்தனைகளை பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். ‘ஒக்ரானா’ உளவு பிரிவு கார்க்கியை போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.1891ல் கார்க்கி ட்ரைபிள்ஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு ரயில்வே யார்டில் பெயின்ட்டராக பணிபுரிந்தார்.
சுரன்

முதல் சிறுகதை
1892ல் ‘மகர்சுத்ரா’ என்ற முதல் சிறு கதையை எழுதினார். அது ‘கவ்கஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் எழுதினார். மிகுந்த வரவேற்பை பெற்ற அச்சிறுகதை ‘ரஷ்யன் வெல்த்’ என்ற பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. அரசியல் ,இலக்கியம் பற்றி அவர் நிறைய எழுதத் தொடங்கினார். 1895ல் ‘பைதவே’ என்ற தலைப்பில் தினமும் செய்தித் தாளில் தொடர்ந்து எழுதினார். அப்பகுதி யில் நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், தொழிற்சங்க செய்திகள், ரஷ்யாவில் அதிகரித்து வரும் அந்நிய முதலீடு என பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றியும் எழுதினார்.சமூக சீர்திருத்தங்களைக் கோரி கார்க்கி நிறைய எழுதியுள்ளார். “26 ஆண்களும் ஒரு பெண்ணும்” என்ற சிறுகதை அதற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும். இலக்கியத்தின் நோக்கம் என்ன? கார்க்கி கூறுகிறார்: “ இலக்கியம் என்பது மனிதன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை கொள்ள வும், உண்மையை நோக்கி செயல்பட வும், மக்களிடமுள்ள மோசமான விஷ யங்களை எதிர்க்கவும், கோபம், வீரம், வெட்கம்... என அனைத்து உணர்வு களும், மனிதனை நல்லவனாக மாற்றச் செய்வதே யாகும்”1898ல் கார்க்கியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அவரது கதைகளின் நாயகன், நாயகி ஏழைகளாக ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். அவர் வெளிப்படையாக விஷயங்களை எழுதியதும், குறிப்பாக போலீசாரை தாக்கி எழுதியதும், உளவுப்பிரிவின் கவனத்தை ஈர்த்தாலும், கார்க்கிக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கை கண்டு உளவுத்துறை அவரை கைது செய்யத் தயங்கியது.
ரஷ்ய புரட்சிக்கு உதவி
சுரன்

கார்க்கி “ சோஷலிச புரட்சியாளர் கள்” ,சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆகிய அன்றைய சட்ட விரோத அமைப்புகளுக்கு ரகசியமாக உதவி செய்தார். கட்சியின் நிதியாக நிறைய நன்கொடை வழங்கியது மட்டுமின்றி இஸ்க்ரா போன்ற புரட்சிகர பத்திரிகை கள் வெளிவர உதவினார். புரட்சிக்கு கார்க்கி ஆற்றிய பங்கைப் பற்றி குறிப் பிட்ட ஒரு போல்ஷ்விக் “ஒவ்வொரு மாதமும், கட்சிக்கு நிதியளித்ததுடன், ப்ரிண்ட்டிங் ஷாப் செயல்பட தொழில் நுட்ப உதவி (சட்டவிரோதமான) புரட்சி கர கட்டுரைகளை கொண்டு சேர்த்தல், புரட்சியாளர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல், உதவி செய்வோரின் முகவரி களை சேகரித்து கட்சிக்கு அனுப்பி வைத்தல்.... என ஏராளமான பணிகளை செய்தார். 4.3.1901 அன்று களானில் , மாணவர்களை போலீஸ் தாக்குவதைக் கண்ட கார்க்கி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதற்காக, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டார். சிறையில் அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டால் பிரச்சனையாகும் என பயந்து, அவர் விடுதலை செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரது கடிதங்கள், அவரது செயல்பாடு என அவரின் ஒவ்வொரு அசைவும் கண் காணிக்கப்பட்டது. ‘க்ரிமியா’ செல்ல அவருக்கு அனுமதி கிடைத்து, அங்கு செல்கையில் வழிமுழுவதும் பானர்களு டன் மக்கள் வரவேற்றனர். விசாரணை யின்றி நாடு கடத்தப்படுகிறார் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.1902ல் கார்க்கி இலக்கிய அகாத மிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதை கேள்வியுற்ற நிக்கொலஸ் கடும் கோப மடைந்தார். அவரது வயது, செயல்பாடு ஆகியவை, அத்தகைய தேர்வுக்கு லாயக் கில்லை என்றும் போலீஸ் கண்காணிப் பில் உள்ள அவரை தேர்வு செய்யக் கூடா தென்றும் நிக்கொலஸ் கூறினார். கல்வி அமைச்சருக்கு கார்க்கியின் தேர்வை ரத்து செய்யும் படி அவர் உத்தரவிட்டார். கார்க்கியின் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 
சுரன்

இதை எதிர்த்து அகாதமியிலுள்ள பல இலக்கியவாதிகள் ராஜிநாமா செய்தனர். 22.1.1905 அன்று நடைபெற்ற சம்பவங் கள் கார்க்கியை மிகவும் பாதித்தன. வன்முறை பற்றிய அவர் பார்வை மாறி யது. கார்க்கி “ரத்தம் தோய்ந்த ஞாயிறு ” பற்றி எழுதுகையில் , “ 200 கண்கள் மட்டும் ரஷ்யாவுக்குதேவைப்படுகிறது....” என்று குறிப்பிட்டார். அரசுக் கெதிராக மக்களைத் தூண்டுவதாக கார்க்கி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.1906ல் கார்க்கி ஐரோப்பா, அமெரிக் காவுக்குச் சென்றார். நண்பர்களிட மிருந்து கட்சிக்கு நிதி திரட்டினார். ஆனால், அங்கு அவரைப்பற்றி துஷ்பிரச் சாரம் செய்யப்பட்டது. ஹெச். ஜி. வெல்ஸ் போன்றவர்கள் கார்க்கிக்கு உதவினார் கள். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கார்க்கி “அமெரிக்கன் ஸ்கெட்சஸ்” என்று அமெரிக்கா பற்றி எழுதினார். அமெரிக்காவில் நிலவும், கடுமையான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களைப் பற்றி எழுதிய கார்க்கி “யாருக் காவது உடனடியாக சோஷலிஸ்டாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். 1907ல் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஐந்தா வது மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது லெனின், டால்ஸ்டாய் ஆகியோரை சந் தித்தார். முதல் உலகப்போரை எதிர்த்தார். தேசப் பற்று அற்றவர் என முத்திரை குத் தப்பட்டார்.
இறுதிநாட்கள்
சுரன்

1915ல் இலக்கிய இதழ் ஒன்றைத் துவங்கினார். 1906ல் எழுதிய ‘தாய்’ 1908ல் வெளிவந்த ‘கன்ஃபெஷன்ஸ்’ (ஒப்புதல் வாக்கு மூலம்) 1909ல் வந்த “ஒகுரோவ் நகரம்” ஆகிய மூன்றுமே கார்க்கிக்கு பெரும் புகழைச் சேர்த்தன. அதிலும் ‘மதர்’ தாய் ஏராளமான மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலா கும்.இன்றும் உலகெங்கும் மாக்சிம் கார்க்கி என்றவுடன் நினைவுக்கு வரு வது தாய் நாவலே. தாய் நாவலைப் படிக் காமல் , பேசாமல் நவீன இலக்கியவாதி இருக்கவே முடியாது.18.6.2012ல் அவர் மறைந்து 76 ஆண் டுகள் நிறைவு பெறுகிறது. ரொட்டி சுடு பவராக, பெயின்ட்டராக வாழ்க்கையைத் துவங்கி, தலைசிறந்த இலக்கிய வாதி யாக மரணமடைந்த கார்க்கிக்கு செவ் வணக்கம்!

நன்றி:'தீக்கதிர்'
____________________________________________________________________________________________________________
உலகமே புத்தகம்
ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
இந்த நூலுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி, வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள் என்று கேட்டார்.
'நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன்' என்றார்.
_________________________________________________________________________________________
சுரன்


நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...