bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 17 ஜூன், 2012

'கார்க்கி"


எழுத்தும் புரட்சியும்...........,


பேராசிரியர்ஆர்.சந்திரா
18.6.1936... ஆயிரக் கணக்கான எழுத் தாளர்களை இடது சாரி அரசியலின் பால் ஈர்த்தமார்க்சிம் கார்க்கி மறைந்த நாள். அவர் மறைந்து முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இன் றும் தொடர்கிறது. கார்க்கியின் இயற்பெயர் அலெக்சாண்டர் பெஷ்கோவ்.
சுரன்

16.3. 1868ல் நிழ்னி நோவ் கோர்டானில் பிறந்த கார்க்கி யின் தந்தை கப்பல் நிறுவன ஏஜெண்ட். கார்க்கி ஐந்து வயதில் தந்தையை இழந் தார். அவரது தாய் மறுமணம் செய்து கொண் டார். கார்க்கி, பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்.பதினோறு வயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி கார்க்கி, ‘காநான்’ என்ற சிறிய கிராமத்திற்கு சென்று ரொட் டிக் கடையில் ரொட்டி சுடும் பணியை செய்தார். அப்போது (டடப) லேண்ட் அண்டு லிபர் டிக்ரூப் என்ற புரட்சிகர குழு விவசாயிகளுக்கு கல்வியளிக்க, கிராமங் களுக்கு இளைஞர்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் நடத்திய கூட்டங்களும், நிகோலாய் செனிஷ் வ்ஸ்கி, பீட்டர் லவ்ரோவ், அலெக்சாண் டர் ஹெர்சன், கார்ல் மார்க்ஸ், ஜார்ஜ் பிளெஹானவ் ஆகியோரின் எழுத்துக் களும், கார்க்கி சோஷலிச, புரட்சிகர கருத்துக்களை உள்வாங்க உதவின. கிராமத்தில் ரொட்டிசுடும் வாசிலி செமெ னோவும் தாய் கார்க்கி மார்க்சிஸ்டாக உருவானதில் பங்காற்றியதாக கார்க்கி எழுதியுள்ளார்.
1887 இனவெறி
1887ல் இனப்படுகொலை நடப்பதை கண்டு கார்க்கி அதிர்ச்சி அடைந்தார். அவர் இறக்கும் வரை, இனவெறிக் கெதிராக பிரச்சாரம் செய்ததற்கு அச்சம் பவம் காரணமாக இருந்தது. தொழிலாளர் விடுதலைக்குழு என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றிய கார்க்கி 1889ல் புரட்சிகர சிந்தனைகளை பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். ‘ஒக்ரானா’ உளவு பிரிவு கார்க்கியை போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.1891ல் கார்க்கி ட்ரைபிள்ஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு ரயில்வே யார்டில் பெயின்ட்டராக பணிபுரிந்தார்.
சுரன்

முதல் சிறுகதை
1892ல் ‘மகர்சுத்ரா’ என்ற முதல் சிறு கதையை எழுதினார். அது ‘கவ்கஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் எழுதினார். மிகுந்த வரவேற்பை பெற்ற அச்சிறுகதை ‘ரஷ்யன் வெல்த்’ என்ற பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. அரசியல் ,இலக்கியம் பற்றி அவர் நிறைய எழுதத் தொடங்கினார். 1895ல் ‘பைதவே’ என்ற தலைப்பில் தினமும் செய்தித் தாளில் தொடர்ந்து எழுதினார். அப்பகுதி யில் நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், தொழிற்சங்க செய்திகள், ரஷ்யாவில் அதிகரித்து வரும் அந்நிய முதலீடு என பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றியும் எழுதினார்.சமூக சீர்திருத்தங்களைக் கோரி கார்க்கி நிறைய எழுதியுள்ளார். “26 ஆண்களும் ஒரு பெண்ணும்” என்ற சிறுகதை அதற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும். இலக்கியத்தின் நோக்கம் என்ன? கார்க்கி கூறுகிறார்: “ இலக்கியம் என்பது மனிதன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை கொள்ள வும், உண்மையை நோக்கி செயல்பட வும், மக்களிடமுள்ள மோசமான விஷ யங்களை எதிர்க்கவும், கோபம், வீரம், வெட்கம்... என அனைத்து உணர்வு களும், மனிதனை நல்லவனாக மாற்றச் செய்வதே யாகும்”1898ல் கார்க்கியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அவரது கதைகளின் நாயகன், நாயகி ஏழைகளாக ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். அவர் வெளிப்படையாக விஷயங்களை எழுதியதும், குறிப்பாக போலீசாரை தாக்கி எழுதியதும், உளவுப்பிரிவின் கவனத்தை ஈர்த்தாலும், கார்க்கிக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கை கண்டு உளவுத்துறை அவரை கைது செய்யத் தயங்கியது.
ரஷ்ய புரட்சிக்கு உதவி
சுரன்

கார்க்கி “ சோஷலிச புரட்சியாளர் கள்” ,சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆகிய அன்றைய சட்ட விரோத அமைப்புகளுக்கு ரகசியமாக உதவி செய்தார். கட்சியின் நிதியாக நிறைய நன்கொடை வழங்கியது மட்டுமின்றி இஸ்க்ரா போன்ற புரட்சிகர பத்திரிகை கள் வெளிவர உதவினார். புரட்சிக்கு கார்க்கி ஆற்றிய பங்கைப் பற்றி குறிப் பிட்ட ஒரு போல்ஷ்விக் “ஒவ்வொரு மாதமும், கட்சிக்கு நிதியளித்ததுடன், ப்ரிண்ட்டிங் ஷாப் செயல்பட தொழில் நுட்ப உதவி (சட்டவிரோதமான) புரட்சி கர கட்டுரைகளை கொண்டு சேர்த்தல், புரட்சியாளர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல், உதவி செய்வோரின் முகவரி களை சேகரித்து கட்சிக்கு அனுப்பி வைத்தல்.... என ஏராளமான பணிகளை செய்தார். 4.3.1901 அன்று களானில் , மாணவர்களை போலீஸ் தாக்குவதைக் கண்ட கார்க்கி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதற்காக, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டார். சிறையில் அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டால் பிரச்சனையாகும் என பயந்து, அவர் விடுதலை செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரது கடிதங்கள், அவரது செயல்பாடு என அவரின் ஒவ்வொரு அசைவும் கண் காணிக்கப்பட்டது. ‘க்ரிமியா’ செல்ல அவருக்கு அனுமதி கிடைத்து, அங்கு செல்கையில் வழிமுழுவதும் பானர்களு டன் மக்கள் வரவேற்றனர். விசாரணை யின்றி நாடு கடத்தப்படுகிறார் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.1902ல் கார்க்கி இலக்கிய அகாத மிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதை கேள்வியுற்ற நிக்கொலஸ் கடும் கோப மடைந்தார். அவரது வயது, செயல்பாடு ஆகியவை, அத்தகைய தேர்வுக்கு லாயக் கில்லை என்றும் போலீஸ் கண்காணிப் பில் உள்ள அவரை தேர்வு செய்யக் கூடா தென்றும் நிக்கொலஸ் கூறினார். கல்வி அமைச்சருக்கு கார்க்கியின் தேர்வை ரத்து செய்யும் படி அவர் உத்தரவிட்டார். கார்க்கியின் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 
சுரன்

இதை எதிர்த்து அகாதமியிலுள்ள பல இலக்கியவாதிகள் ராஜிநாமா செய்தனர். 22.1.1905 அன்று நடைபெற்ற சம்பவங் கள் கார்க்கியை மிகவும் பாதித்தன. வன்முறை பற்றிய அவர் பார்வை மாறி யது. கார்க்கி “ரத்தம் தோய்ந்த ஞாயிறு ” பற்றி எழுதுகையில் , “ 200 கண்கள் மட்டும் ரஷ்யாவுக்குதேவைப்படுகிறது....” என்று குறிப்பிட்டார். அரசுக் கெதிராக மக்களைத் தூண்டுவதாக கார்க்கி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.1906ல் கார்க்கி ஐரோப்பா, அமெரிக் காவுக்குச் சென்றார். நண்பர்களிட மிருந்து கட்சிக்கு நிதி திரட்டினார். ஆனால், அங்கு அவரைப்பற்றி துஷ்பிரச் சாரம் செய்யப்பட்டது. ஹெச். ஜி. வெல்ஸ் போன்றவர்கள் கார்க்கிக்கு உதவினார் கள். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கார்க்கி “அமெரிக்கன் ஸ்கெட்சஸ்” என்று அமெரிக்கா பற்றி எழுதினார். அமெரிக்காவில் நிலவும், கடுமையான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களைப் பற்றி எழுதிய கார்க்கி “யாருக் காவது உடனடியாக சோஷலிஸ்டாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். 1907ல் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஐந்தா வது மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது லெனின், டால்ஸ்டாய் ஆகியோரை சந் தித்தார். முதல் உலகப்போரை எதிர்த்தார். தேசப் பற்று அற்றவர் என முத்திரை குத் தப்பட்டார்.
இறுதிநாட்கள்
சுரன்

1915ல் இலக்கிய இதழ் ஒன்றைத் துவங்கினார். 1906ல் எழுதிய ‘தாய்’ 1908ல் வெளிவந்த ‘கன்ஃபெஷன்ஸ்’ (ஒப்புதல் வாக்கு மூலம்) 1909ல் வந்த “ஒகுரோவ் நகரம்” ஆகிய மூன்றுமே கார்க்கிக்கு பெரும் புகழைச் சேர்த்தன. அதிலும் ‘மதர்’ தாய் ஏராளமான மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலா கும்.இன்றும் உலகெங்கும் மாக்சிம் கார்க்கி என்றவுடன் நினைவுக்கு வரு வது தாய் நாவலே. தாய் நாவலைப் படிக் காமல் , பேசாமல் நவீன இலக்கியவாதி இருக்கவே முடியாது.18.6.2012ல் அவர் மறைந்து 76 ஆண் டுகள் நிறைவு பெறுகிறது. ரொட்டி சுடு பவராக, பெயின்ட்டராக வாழ்க்கையைத் துவங்கி, தலைசிறந்த இலக்கிய வாதி யாக மரணமடைந்த கார்க்கிக்கு செவ் வணக்கம்!

நன்றி:'தீக்கதிர்'
____________________________________________________________________________________________________________
உலகமே புத்தகம்
ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
இந்த நூலுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி, வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள் என்று கேட்டார்.
'நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன்' என்றார்.
_________________________________________________________________________________________
சுரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...