பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்! |
-க.ராஜ்குமார் |
முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.
அமெரிக்காவிற்கு என்ன நேர்ந்தது? இன்று சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிற் குள்ளும் அமெரிக்க ராணுவம், அனுமதியில்லா மல் அத்துமீறி நுழையலாம். கேட்பாரில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட லாம். பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஐ.நா. சபையின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கலாம். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட் டால் தம்பி சண்டபிரசங்கன் என்பார்கள். அப்படி ஆட்டம் போடும் அமெரிக்காவிற்கு இப் போது என்ன வந்துவிட்டது.? ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார்? அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை தரும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன்? டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன்? அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே! நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே? “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன்? முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன்? இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஏன்? மாற்றம் ஏன்? உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடு களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இடதுசாரி சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு என்ன காரணம்?. பிரான்ஸில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள் ளனர். கீரிஸ் நாட்டில் இடதுசாரிகள் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்காவைச் சுற்றி யுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி வரு கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய்க் கிணறுகள் பொதுவுடைமையாக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சோவியத் ரஷ்யா சிதைந்த இருபது ஆண்டுகள் கடந்த பிறகுதானே நடைபெறுகின்றன. போட்டியே இல்லாத நிலையில் ஏன் முதலாளித்துவம் காலாவதியாகி வருகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட நாடு கள் வளர்ந்துவருவதை ஏகாதிபத்திய அமெரிக் காவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் முழுவதும் பொருளாதார பின்ன டவை முதலாளித்துவ நாடுகள் சந்தித்து வரு கின்ற நிலையில் சீனப் பொருளாதாரம் மட்டும் வளர்ந்து வருகின்றதே, அதற்கு என்ன கார ணம். முதல் இடத்தை நோக்கி சீனாவின் வளர்ச்சி இருப்பதை சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மடி பிச்சையேந்தி நிற்கின்றது என் பதுதானே உண்மை. முதலாளித்துவத்திற்குக் முட்டுக்கொடுக்க முடியுமா? முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள இத்தகையப் போக்கைத்தான் காரல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்னறிந்து நமக்கு தெளிவுபடுத்தினர். முதலாளித்துவம் சுயமாக இயங்கும் தன்மையுடையது. அது பங்கேற் பாளர்களின் விருப்பத்திற்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறது என்பதே மார்க்சியம். மூலதனத் திரட்சி என்பது முதலாளித்துவத்தின் நெருக் கடியின் உச்சகட்டம் என்றும் முதலாளித் துவம் தனக்குத்தானே சவக்குழியை பறித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பகன்றனர். அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் கதி யாக உள்ளது. 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிலிருந்து மிக விரைவில் மீளும் என்று சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் ஆண் டுகள் 4 ஆகியும் முதலாளித்து வீழ்ச்சியி லிருந்து அது மீள முடியாமல் திணறிவருகின் றன. வெறும் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் மெக்ஸிகோ நாட்டில் நடை பெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், கடன் சுமையில் சிக்கித் திவாலாகும் நிலையில் உள்ள 17 ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமையை சரிப்படுத்த ஐஎம்எப்-க்கு 43 ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாடு பங்கேற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பு இதற்காக 7500 கோடி டாலர் நிதியுதவி அளிப்பதாக அறி வித்துள்ளது. இதில் இந்தியா மட்டும் 1000 கோடி டாலர் ( இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ‘அம்மாபாடு அவலம் கும்பகோணத்தில் கோதானம்’ என்று சொல்வதைப்போல; ஒரு நேர உணவோடு உறங்கச்செல்லும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு உதவப் போகிறதாம். அது சரி இப்படி சில நாடுகள் உதவுவதன் மூலம் முதலாளித்துவத்திற்கு (நாடுகளுக்கு) ஏற்பட்ட நெருக்கடியை சரிக் கட்ட முடியுமா என்பதுதான் நமது கேள்வி. எந்த அளவிற்கு தூக்கிப் பிடித்தாலும் முதலா ளித்துவத்தின் வீழ்ச்சியை தடுத்த நிறுத்த முடியாது. இன்று உலகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்ற போராட் டங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. சரித்திரம் திரும்புகிறது ஜி-20 நாடுகள் எடுத்துள்ள முடிவு ‘பிரெட்டன் உட்ஸ் கோட்பாடுகளுக்கு’ முர ணானது என்பதுதான் வேடிக்கையாகும். (பிரெட்டன் உட்ஸ் என்பது ஐ.நா.சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் ஆகிய வற்றை உருவாக்குவதற்காக நடத்திய சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள் பற்றியதாகும்) ஐஎம் எப்-ம் உலகவங்கியும் மூன்றாம் உலக நாடு களின் (இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கள்) நிர்வாகத்தை கண்காணிக்கும் வேலை களுக்காகவும், அத்தகைய நாடுகளுக்கு முத லாளித்துவ நாடுகள் மூலமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தை அனுமதித்து, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நிபந்தனைகள் விதித்து, அந்நாடுகளின் இறையாண்மையை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக ளாகும். ஆனால் இன்று ஐஎம்எப்-க்கு மூன் றாம் உலக நாடுகள் நிதியுதவி செய்து அதன் மூலம் முதலாளித்துவ நாடுகளின் பொருளா தார நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கும் வகை யில், ஜி-20 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் அமைந்துள்ளது. சரித்திரம் திரும்புகிறது என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசை திருப்ப தனது சொந்த நாட்டி லேயே பொது எதிரியாக ‘பயங்கரவாதத்தை’ முன்னிறுத்திய அமெரிக்கா, ஒசாமா பின்லேட னின் கொலைக்குப் பிறகு, ஆப்கானிஸ் தானில் தொடர்ந்து ராணுவத்தை வைத்து பரா மரிக்க முடியாமல் திணறும் நிலைக்கு வந்த பிறகு, மேலும் மேலும் உலக அரங்கில் அம் பலப்பட்டு வருகின்றது. என்ன காரணத்திற் காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதை மீறி அதனை விரிவாக்கம் செய்து, தனக்கு முட்டுக்கொடுக்க அதை பயன்படுத்த அமெ ரிக்கா முயற்சி செய்கிறது. இன்று அதன் கூட் டாளி நாடுகளில் இத்தகைய ராணுவ நட வடிக்கைகளில் தங்கள் நாடு ஈடுபடுவதை மக்கள் விரும்பாமல் கிளர்ந்து எழுந்து போராடு வதும், தங்கள் இராணுவ வீரர்கள் பிறநாட்டில் சென்று செத்து மடிவதை விரும்பாத மக்கள், அவர்களை திரும்பப்பெற வலியுறுத்தியதன் காரணமாக தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் போக்கும் அமெ ரிக்காவை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து கூட்டாளிகள் வில கிச்செல்வதை செய்வதறியாது அமெரிக்கா பார்த்துவருகிறது. பிரச்சனைக்கு காரணம் என்ன? அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உற்பத்திப்பெருக்கம், அதனால் செல்வக் குவிப்பு ஒரு புறமும் வேலை யின்மை, வறுமை பெருக்கம் என மறுபுறமும் சமூகத்தில் சரிசமமற்ற நிலையை உருவாக்கி வரும் இந்த முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பு, “இயற்கையான ஒழுங் கமைப்பு அல்ல” “இயற்கை விதிகளுக்கு உட் பட்டதும் இல்லை”. ஆகவே மனிதகுலம் விடு தலை பெற வேண்டுமெனில் இத்தகைய அமைப்பை தூக்கியெறிய வேண்டிய அவ சியம் உலகம் முழுவதும் இன்று ஏற்பட்டுள் ளது. மார்க்சியக் கோட்பாட்டின்படி. முதலாளித் துவ அமைப்பின் இயக்கம் என்பது அதன் இயற்கையான நிகழ்வுப்போக்கிலிருந்து அதன் முடிவை நோக்கி தவிர்க்க முடியாத அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிச்செல்லும் என்பதே இன்றைய நிகழ்வுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் என்பது உலகம் சோசலிச அமைப்பில் காலடி எடுத்து வைக்கும் நுழைவு வாயில் என்ற எண்ணத் துடன், எழுச்சியுடன் செயல்படுவோம். |
சனி, 30 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...
-
'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், 'ஹே ராம்', ...
-
இப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...
-
போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள் ஆல்பர்ட் ஜான்சன் (27) கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது, அவரது தகப்பனார், ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக