ஊடக பூதமும் நம் கை ஆயுதமும் |
-சு.பொ.அகத்தியலிங்கம் |
“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை. ஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.
வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறது? நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா? வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந் தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது. சுயமரியாதைத் தோழர்களின் பிரச் சார வலிமை என்னை வியக்க வைக் கிறது. இப்படியே போனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அடுத்து கூறினார்- அவர்கள் சமூகசீர்திருத்தத்தோடு சமத்து வப் பொருளாதாரப் பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார். இந்த பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் ஏடுகளே! ஏடுகள் இல்லாமல் விடு தலைப் போராட்டமும் இல்லை. ஏடுகள் இல்லாமல் திராவிட இயக்கமும் இல் லை. ஏடுகள் இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கமும் இல்லை. தமிழகத்தைப் போல் அரசியல் சார்பு ஏடுகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம். * தேசிய இயக்க ஏடுகள் * திராவிட இயக்க ஏடுகள் * பொதுவுடைமை இயக்க ஏடுகள் என சில வருடங்கள் முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக் கம் அறக்கட்டளையும் இணைந்து தொடர் கருத்தரங்குகளை சில வாரங்கள் நடத்தின. ஆம் அவ்வளவு விரிவும் ஆழமும் கொண்ட வரலாறு இந்த ஏடு களுக்கு உண்டு. அந்த வரலாற்று நெடுஞ்சாலையில் ‘தீக்கதிர்’ என்கிற அக்னிக்குஞ்சு பயணம் புறப்பட்டு ஐம்பதாவது ஆண்டில் நுழைவது சாதாரணச் செய்தியா? சமுதாய வரலாற்றில் வேண்டு மானால் ஐம்பதாண்டு, நூறாண்டு என்ப தெல்லாம் சிறிய காலகட்டமாக இருக்க லாம். தனிமனித வாழ்வில் 75 ஆண்டே பெரிது எனலாம். ஐம்பதாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. இன்று ஏடுகள் நடத்துவது சுலபமல்ல. மிகப் பெரிய செலவு கொண்ட நடவடிக்கை. மறு புறம் ஊடகங்கள் ஆதிக்கம் ஊதிப் பெருத்துவிட்டது. பொய்யை மெய் யென்றும் மெய்யை பொய்யென்றும் நம்பவைக்கும் பேராற்றல் கொண்ட பூதமாக அவை எழுந்துள்ளன. ஆகவே இப்போது “ஏடுகள் நடத்துவதும்” “பிரச்சாரம் செய்வதும்” மிக நுட்பமான சவாலான பணி. இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயத்தை முன்னறி வித்து, போர்க்களத்தில் ‘பைலட் ஸ்குவாடு’ செல்வதுபோல் முன்சென்ற “தீக்கதிர்” ஐம்பதாண்டில் அடியெடுத்து வைக்கும் அரிய தருணத்தில் இன்றைய சவால்களை சற்று ஆழ்ந்து கவனிப்பது அவசியமாகும். மேற்குவங்கத்தில் நிலச்சீர் திருத்தத்தை அமல்நடத்தியதில் மார்க் சிஸ்ட் கட்சி அரசு மகத்தான சாதனை புரிந்தது; ஆனால் அதி அற்புதமான அந்தச் செயலை எந்த ஊடகமும் பாராட்டவும் இல்லை; மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இல்லை. ஆனால் நந்திகிராமம், சிங்கூர் பிரச்சனையை பூதாகரமாக்கி கம்யூனிஸ்டுகள் விவ சாயிகளின் எதிரி; நிலத்தை பறிப்பவர்கள் என்ற திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டனவே! இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுக்கான போரில் - மக்கள் ஒற்றுமைக்கான போரில் கம்யூ னிஸ்டுகளை விட அதிகம் உயிர்த் தியாகம் செய்த கட்சி எது? கம் யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட போது தமுக்கடிக்காத ஊடகங்கள், தனி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி அதில் கட்சியினரை மாட்டி வைத்து, கம்யூனிஸ்டுகளின் அரசியல் கொலைவெறி என கேரளா முழுவதும் ஆளும் வர்க்கமும் ஊடகமும் செய்யும் விஷமப் பிரச்சாரத்தை என்னென்பது? பத்தாயிரம் மலைவாழ் மக்கள் சென்னையில் பிருந்தா காரத் தலைமை யில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வென்றதை செய்தியாக வெளியிடாத ஊடகங்களே அதிகம். மேற்குவங்கமாயினும், கேரளமாயினும், கம்யூனிஸ்டுகள் வலிமையாக இருப்பது பன்னாட்டு சுரண்டல் கூட்டத்துக்கும் உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்துக்கும் மதவெறியர் களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இடதுசாரிக் கருத் துக்களை, அவர்களது செயல்பாட்டுக்கு தடையாகப் பார்க்கிறார்கள். இடதுசாரி களை ஒழித்துவிட்டால் அவர்களின் ஆதிக்கமும் கொள்கையும் தங்கு தடையின்றி நடக்கும் அல்லவா? ஆம், இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு களை அள்ளிவீச ஊடகங்களை கைப் பிள்ளை ஆக்குகிறார்கள். குறிப்பாக இடது சாரிக் கருத்துக்களின் மையப்புள்ளியாக செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொச்சைப்படுத்துவதும்; இதுவும் ஊழல் கட்சி, இதுவும் பதவி வெறியர் கூடாரம்; இதுவும் சமூக விரோதிகள் மேடை; இவர்கள் இப்போது கொள்கையை இழந்துவிட்டார்கள். காலத்துக்கு ஒவ்வாத வறட்டுக் கோ ஷங்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது என மக்களின் பொதுப்புத்தியில் விதைக்க ஊடகங்கள் படாதபாடுபடு கின்றன. நீண்ட கட்டுரைகள் ஒரு சாராருக்குப் போதும்; ஆனால் செய்திகளூடே தன் விஷமக் கருத்தையும் கலந்து விதைத் தால் எளிதாக கருத்துகள் மக்களின் பொதுப்புத்தியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்படியே செயல்படுகிறார்கள். இந்த ஊடகங்கள் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருப்பதால், தவறான கருத்து களும் திசை திருப்பும் தகவல்களும் மிக எளிதில் மக்களின் மனதில் பதி யவைக்கப்பட்டு விடுகின்றன. இதனை அழித்து சரியான சித்திரத்தைத் தீட்டு வது அவ்வளவு எளிதல்ல. ஆம், அந்த சவால்மிக்கப் பணியில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் எது? நமது சொந்த ஏடு மட்டும்தானே! ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது இயற்பியல் சக்தி யாகும் என்று மார்க்ஸ் கூறியது இப்போது சாலப்பொருந்தும்; அந்த கருத்துப்போரில் ஆளும் வர்க்க ஊடகங்களை நம்பி இறங்க முடியுமா? உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா? இதை நாம் உணர்ந்தாக வேண் டாமா? ஒரு கட்சிக்கு கொள்கையை, கருத் தை பிரச்சாரம் செய்வதைவிட முதன் மைப் பணி வேறென்ன இருக்க முடியும்? பத்திரிகை, பிரசுரங்கள் படிப்பதையும் விற்பதையும் தவிர வேறு எது தலையாயப் பணியாக இருக்க முடியும்? தீக்கதிரை பாதுகாப்போம்... தீக்கதிரை பலப்படுத்துவோம்... தீக்கதிரை செழுமைப்படுத்துவோம்... தீக்கதிர் பொன்விழாவை ஊரெங்கும் கொண்டாடுவோம். தீக்கதிரை வீடு தோறும் கொண்டு செல்வோம்! இது பொன்விழா சபதமல்ல; பொன் னுலகம் காணப் பூணும் புரட்சிகர சபத மாகும். |
சனி, 30 ஜூன், 2012
" தீக்கதிர் " -இதழ் பொன் விழா,,,,,,.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...
-
'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், 'ஹே ராம்', ...
-
இப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...
-
போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள் ஆல்பர்ட் ஜான்சன் (27) கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது, அவரது தகப்பனார், ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக