bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 17 ஜூன், 2012

நடிகர் விஜய்க்கு ஒரு மடல்,இல்லை கடிதாசி

அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்ற கடை நிலை பொது சனத்திலிருந்து தம்பி கோவணான்டியின் வேண்டுகோள் கடிதம்.
தங்களின் நேர்காண்லை ஆவியில் (ஆனந்த விகடனில்) கண்டு விட்டு நேற்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமே வரவில்லை.

தமிழகத்தின் அடுத்த காவலனுக்கா இந்த நிலை என மனசு வலித்துக் கொண்டே இருந்தது.

காவலன் படம் ரீலீஸ் ஆகக் கூடாதென சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த‌தாக மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தீர்கள். முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான் அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என்ற கேள்வியுடன் உங்களின் அரசியல் அரிதார ஆசையை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன? ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

காவலன் படம் ரீலீஸ் ஆகவில்லை அதற்கு ஆளும் கட்சி காரணம் எனவும் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அதற்கு உதாரணமாக குறிப்பிட்டிருந்தீர்கள்.....ஒட்டு மொத்த சினிமாவின் ஆதங்கம் இது. நான் சொல்லிட்டேன் நிறைய பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க எனவும் கூறியிருந்தீர்கள்......
நிற்க!

உங்களிடம் சில கேள்விகள்..........

உங்களின் படம் ரீலீஸ் ஆகவில்லை என்றவுடன் ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்ப‌டும் நீங்கள் தானே அண்ணா எங்கள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி. எங்களிடமே குளிர்பானமாக பாட்டிலில் அடைத்து கொடுத்து, எங்கள் மண்ணையும், மக்களையும் நாசப்படுத்திய பன்னாட்டு கம்பெனியுடன் சேர்ந்து எங்களை கானாவிலே கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது உங்களுக்கு தெரியவிலையா நாடே நாசமாகப் போகிறது என்று?...........

ஜெயக்குமாரின் உடல் மிதந்த வங்கக் கடலில் கடப்பாறை நீச்சல் அடித்து சுறாவாய் நீங்கள் வெள்ளித் திரையில் தோன்றிய போதும், பார்க்க முடியாத அந்தப் படத்தை சகோதர தொலைக்காட்சி வெற்றிப்ப‌டம் வெற்றிப்ப‌டம் என நிமிஷத்துக்கு நிமிஷம் விளம்பரப்படுத்தி...ஒட்டு மொத்த தமிழக மக்களும் இந்த படத்தினால் மோட்சம் அடைந்ததாக சித்தரித்ததே அப்போது உங்களுக்கு தெரியவில்லையா தமிழ்நாடே நாசமாகப் போகிறது என்று?........

என்றைக்காவது ,அத்தியாவசிய‌ப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உத்தப்புரம் பிரச்சனை. , முல்லைப் பெரியாறு பிரச்சனை. என மக்களின் பிரச்சனைக் குறித்து நீங்கள் எதாவது பேசியதுண்டா?....... இலங்கை இனப் படுகொலைக்காக உண்ணாவிரதம் இருந்தீர்கள் ஆனால் அதைப் ப்ற்றி கூட சில நண்பர்கள் வேறு மாதிரி கதைக்கிறார்கள்....உண்மை உங்களுக்கே வெளிச்சம்........ மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, உங்களின் காவலனுக்கு காவல் எனும் போது மட்டும்
ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுவது நியாயமா?

உங்களைப் போன்ற நடிக‌ர்களுக்கு ஒரு நாள் உண்ணாவிரதத்திலேயே எல்லாம் முடிந்து விடிகிறது. ஆனால் எங்களைப் போன்ற கோவணான்டிகளுக்கு மூணு வேளை உணவு என்பது கூட விரதம் தான்.

முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான், அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என பேட்டியளித்து அரசியலில் களம் காண நினைக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

இந்த கடிதத்தை எப்படி முடிப்பது என தெரியவில்லை, ஆவி நேர்காணலில் நீங்கள் கூறிய வரிகளை உங்களிடமே கடன் வாங்கி முடிக்கிறேன்..........

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பக்கத்தை படித்து விட்டு என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம்...எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம், இந்த வலைப் பக்கத்தை கரப்ட் கூட செய்யலாம்.......வாழ்க உங்களை வாழவைக்கும் ரசிக தெய்வங்கள்

அண்ணா எனது வேண்டுகோள் எல்லாம்.........
மக்களை நினை
மக்களுக்காக உழை
மக்களுக்காக வாழு நாளைய சரித்திரத்தில் மக்களே உங்களை இடம் பெறச் செய்வார்கள்.

பின் குறிப்பு.....
அண்ணா இந்த கடிதத்தை படித்து விட்டு பத்திரப்படுத்தி வைக்கவும்...... ஏனெனில் யார் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அரங்கேற்றினார்களோ அவர்களது தொலைக்காட்சியில் காவலன் வெற்றி பெற்றதற்காக‌ ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்....

ஆளும், கட்சி மீதான கோபம் போச்சா???????????அடுத்த படம் 3 இடியட்ஸ் .............புக் ஆயிடுச்சு (நன்றி ஆ.வி)

இடியட்ஸ் இந்த கோவணாண்டியும் அவன் கூட்டாளிகளும் தான்.......

நன்றி அண்ணா....
இப்படிக்கு தம்பி
கோவணாண்டி
                                                                                                                                                     நன்றி;தமிழ் குறிஞ்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...