bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 16 அக்டோபர், 2013


suran


தமிழருவி மணியன் 
--------------------------------------


காந்திய மக்கள் இ யக்கத்தின்ஒரேதலைவரும்,தொண்டருமான  தமிழருவி மணியன்,இப்போது காவிக் கொள்கையில் கரைந்து விட்டார் போல் தெரிகிறது.
பாஜகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக மோடிக்கு வாக்காலத்து வாங்கி மேடைகளில் மட்டுமின்றி எழுத்துக்களிலும் மோடியாயணம் பாடி வருகிறார்.
கடந்த 2 ம் தேதி மதுரையில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க 4 - ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழருவி மணியன் பேசிய பேச்சுகளுக்கு கிடைத்த எதிர்வினையைத் தொடர்ந்து தற்போது தனது எழுத்தை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதழ் ஒன்றில் பில்டப் செய்துள்ளார்.
 என்னைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றதற்குத் துணைபோன காங்கிரஸ் அரசு கருவறுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மாற்று அரசியல் வேண்டும் என்கிறேன்.
 இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் ஒரு வருடமாகப் பேசி வந்தேன்.
திருப்பூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளையும், வைகோவையும் இணைத்து மாற்று அணியாக அறிவிக்க எவ்வளவோ பாடுபட்டேன். 
சிபிஎம் கட்சியினர் எப்போதுமே வித்தியாசமானவர்கள். மண்ணில் நடக்காமல், விண்ணில் நடக்கக் கனவு காண்பவர்கள். தனி ஈழத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை; அதனால் வைகோவுடன் இணைய முடியாது என்றார்கள்.
இந்த நிலையில் மாற்று அரசியல் அணியை, நான் எப்படி முடிவு செய்வது? அந்த சிந்தனை முற்றுப் பெற்றது. மாற்று யோசனை செய்தேன். 
பாஜக இன்று பத்து சதவிகித வாக்கு வங்கியுடன் வளர்ந்துள்ளது. 
அதேபோல வாக்கு வங்கியுள்ள தேமுதிக, மதிமுக ஆகியவை சேர்ந்தால் தமிழகத்தில் சுலபமாக வெற்றி பெறலாம். காங்கிரஸை இவர்களால்தான் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்."
- என்று தமிழருவி கூறியுள்ளார்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. காந்திய மக்கள் இயக்கத்திற்கு கூட கொள்கை என்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் நிலைப்பாட்டில் தமிழருவிக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.
அது அவர் விருப்பம். பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதைப்போன்ற கனவுடன் மண்ணில் கால் பாவாமல், விண்ணில் மிதந்து வரும் தமிழருவி மணியன், இலங்கைத்தமிழர்களுக்காக பிறப்பெடுத்தவர் போல பேசுகிறார். 
ஈழம் பற்றி யும் அதற்காகவே கருணாநிதியை துரோகி என்றும் மேடை  தொறும் திட்டி வரும் தமிழருவி மணியன் தற்பொது அடியாள் சேவகம் செய்யும் பாஜக, ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்ததை  மறந்து விட்டுப் பேசிக்கொண்டே போகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடந்த புத்தர் விழாவிற்கு வந்த இலங்கை ஜனாதிபதி இராஜபக்சேவை வரவேற்று ராஜஉபச்சாரம் செய்த சிவராஜ் சிங் சௌகான் எந்த கட்சியின் முதல்வர்? 
suran
ராஜபக்சேயை வரவேற்று அடிக்கல் நாட்டச்செய்த  ம.பி. பாஜக முதல்வர் சவுகான். 
அவர் கட்சி பாஜக தான் என்பதை மணியன் மறந்து விட்டாரா?அல்லது மறதி வியாதியா?
தமிழ் நாட்டில் அணைவரும்[தமிழருவி உட்பட ] ராஜ பக்சே இந்தியா வரக்கூடாது என்று போராடிய பொது அனைத்தையும் புறந்தள்ளி அப்போதுதான் தமிழர்கள் ரத்தத்தால் கறை பட்ட கரங்களை கொண்டு அடிக்கல் நாட்டினார் பா ஜ க முதல்வர் சிவராஜ் சௌ கான் .
தமிழருவி, இராஜபக்சேவிற்கு கறிவிருந்து வைத்த சிவராஜ் சிங் சௌகானுக்கு கறுப்புக்கொடி, வேண்டாம் கண்டனக்கொடியாவது எழுத்தில் ஏற்றினாரா? அப்படிப்பட்ட பாஜகவிற்குத் தான் தமிழருவி பல்லக்கு தூக்குகிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், சாஞ்சிக்கு இராஜபக்சே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழக வீதிகளில் வலம் வருவதற்கு தமிழருவி மணியனுக்கு தைரியம் வருகிறது என்றால் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்ற நினைப்புத்தான் காரணம்.
தமிழருவி மணியன் பேச்சாளர் மட்டுமல்ல: நல்ல படிப்பாளி.
எப் போதும் உலக நாடுகளின் தலைவர்களைப் பற்றி பேசிவிட்டுத்தான் உள்ளூருக்குள் போவார். 
அப்படிப்பட்டவர் என்ன சொல்லியுள்ளார்? 
suran
“இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்ய மாட்டேன் என்று முஸ்லிம் சமுதாயத்திடம் மோடி மன்னிப்பை வேண்டுவது தான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தி யாவின் பிரதமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்” என்று மோடிக்கு யோசனைகளை அள்ளி வீசி யுள்ளார்.
உச்சநீதிமன்றம் சொன்னதையே கேட்காத மோடி, தமிழருவி சொன்னவுடன், தாவிக்குதித்து வந்து மன்னிப்பு கேட்டிடுவாரா?
நரேந்திர மோடி ஆட்சி நடைபெறும் குஜராத்தில், நடைபெற்ற கல வரத்தில் 1044 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2548 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போனார்கள். 919 பெண்கள் கணவர்களை இழந்து விதவையானார்கள். 606 குழந்தைகள் தாய், தந்தையற்ற அனாதைகளாக்கப்பட்டனர். இது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தான். ஆனால், உண்மையான இழப்புகள் ஏராளம் என்பதே முஸ்லிம் மக்களின் கருத்தாக உள்ளது.
இத்தனை கொடுமைக்கும் காரணமான மோடி மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? 
அப்படி என்றால் இலங்கைப்படுகொலைகளுக்காக இராஜபக்சே மன்னிப்பு கேட்டால் போதுமா ?
“குஜராத்தில், கடந்த 2002- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். என்று கூறிய மோடி, “நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில்விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக் கும் இருந்தது” என்று குஜராத் படுகொலையின் போது தனது மனநிலையை தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
suran
இந்த செய்தியை அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரித்ததை தேர்ந்த படிப்பாளியான தமிழருவி மணியன் படிக்கவில்லையா? இரத்தம் குடிக்கும் பூனைகள், ருத்ராட்சம் அணிந்து வந்தாலும் அதன் இதழோரத்தில் வழிந்தோடும் குருதியின் வாசனை தேசமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தேர்தலில் ஒரு  வாக்கு கூட இல்லாத இயக்கத் தலைவர் தனது அரசியல் தரகு வேலை மூலம் தனது சுய உருவத்தை வெளிக்காட்டியுள்ளார்.
ஈழப் பிரச்னையில் கருணாநிதியை குறை கூற இவருக்கு என்னதகுதி உள்ளது.சிபிஎம் கட்சியை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது.இவரின் தரகு வேலைக்கு இன்னொரு ஈழ ஆதரவாளர் -தியாகி வைகோதான் சரியாகி உள்ளார் என்பது இன்னொரு கொடுமை.
வாக்குமூலம் அளிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு இறுதி அத்தியாயத்தை தமிழருவி எழுதி வருகிறார்.

- ப.கவிதா குமார்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு எற்றபடி எடை இந்த அ ளவு இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு.
அதை சுரு க்கமாக.பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்) என்று சொல்லுவார்கள் .அந்தக் கணக்கீட்டை வைத்து தான்  ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன்  உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். 
* 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
* 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
* 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
* 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
பருமன் கொண்டவர்கள். 


------------------------------------------------------------------------------------------------------------
கேழ்வரகு... ரொம்ப நல்லது.!
-------------------------------------------------------------
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. 
பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.
 கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். 
suran
குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்.
 இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். 
 கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.
 நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் .
 கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. 
இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். 

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். 
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன.
 கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். 
------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 14 அக்டோபர், 2013

வாழ்நாள்சாதனையாளர்" கமல்ஹாசன்"

மும்பையில் நடைபெற உள்ள  சர்வதேசத் திரைப்படவிழாவின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது திரைக்களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவது பற்றி செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், "
"இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியாது" என்று கூறினார். தொடர்ந்து,"இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். ஆயினும் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்து இருங்கள் இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று பரிந்துரை செய்யவும் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றும் கமல் கூறினார். 
இனி அதிக இந்திப் படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
suran
கமல்ஹாசன் வயதான நடிகர்களை விட அதிக நாட்கள் தனது திரையுலக வாழ்வை கடந்துள்ளார்.
52ஆண்டுகள்.
அதுவே அவரை வாழ் நாள் சாதனையாளராக்க போதுமானது என மும்பை திரையுலகினர் தெரிவித்தனர்.
சென்னை திரையுலக 100ஆண்டுகள் ஜெயா அரசு விழாவில் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்ட கமல்ஹாஸனுக்கு இந்திய திரையுலக மும்பை மய்யம் சரியான மரியாதையை செய்கிறது.
அதை புறந்தள்ளாமல்கமல்ஹாசன் ஏ ற் று க் கொள்வதுதான் முறை.
அதுதான் சென்னை அதிமுக கட்சி திரையுலக கூ லிகள் நடத் திய அம்மா புகழ் பாடும்100 ஆண் டுகள் விழா அவ மானத்துக்கு தரும் பதிலடியாக இருக்கும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

உயிர் காக்க...


ஒரு பயிற்சி!

எங்கு வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.
ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே,  அதை வாயுக்கோளாறு என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும்  ஆபத்தாகிவிடும்.'
முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா,
 அசிடிட்டியா?
 மாரடைப்பா?
 எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? 
நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு என்று நினைத்துக் கொண்டு சோடா கொடுக்கிறோம். மார்பில் தைலங்களைத் தடவி மசாஜ் செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி வந்திருந்தால், இப்படியெல்லாம் செய்வது ஆபத்தில் முடிந்துவிடும். இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்தம் அங்கங்கே நின்றுவிடும்.
எனவே மாரடைப்பு ஏற்பட்டவரை அருகில் இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆம்புலன்ஸோ, வேறு வாகனங்களோ வருவதற்காகத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்பதால், விரைந்து செயல்பட வேண்டும்.
முதலில், மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மாரடைப்பு பரம்பரையாக வர வாய்ப்புண்டு.  சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும். 
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வரும்.
 இப்படி உள்ளவர்கள் நெஞ்சு வலி என்று சொன்னால் மாரடைப்பு வர அவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு என்று தெரிந்து அருகில் உள்ளவர்கள் உஷாராகிவிட வேண்டும்.
ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மாரடைப்பா?
suran
 இல்லையா?
 என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 
மாரடைப்பு ஏற்பட்டால் அதிகமாக வியர்க்கும். வாந்தி வரும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். படபடப்பு ஏற்படும். இடது தோள், இடது கைகளில் வலிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். சிலர் மயங்கி விழுந்துவிடுவார்கள்.
எனவே நெஞ்சு வலி என்று சொன்ன ஒருவரை  உட்கார வைக்கக் கூடாது. 
நேராகப் படுக்க வைக்க வேண்டும். 
தலையை மட்டும் ஒரு பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.
 ஏனென்றால் தலை நேராக இருந்தால் வாந்தி வரும்போது அது திரும்பவும் வாய்க்குள்ளே போய் மூச்சுக் குழாயை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு. 
மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த ஒருவர்  நினைவுடன் இருக்கிறாரா? இல்லையா
? என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டும்.
 அதற்கு அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றால் அடுத்து அவர் மூச்சு விடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். பிறகு கழுத்தருகே கை விரலை வைத்து அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
ஒருவேளை நாடித்துடிப்பு இல்லையென்றால், அவருடைய நெஞ்சில் கை வைத்து, செங்குத்தாக அழுத்துவதற்குத் தேவையான நிலையில் அவர் அருகே மண்டியிட்டு அமர வேண்டும்.
நடு நெஞ்சில் ஒரு கையை வைத்து, அதற்கு மேல் இன்னொரு கையை வைத்து அழுத்த வேண்டும். இவ்வாறு முப்பது தடவைகள் அழுத்த வேண்டும்.
அதற்குப் பிறகு, அவர் தலையைத் திருப்பி, அவருடைய வாயில் வாயை வைத்து மூச்சுக் காற்றை  அவருடைய  வாய்க்குள் இரண்டு முறை விட வேண்டும்.
suran
மாரடைப்பு வந்தவர் மூச்சுவிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். 
மூச்சு விடவில்லை என்றால் மீண்டும் முப்பது தடவை கைகளை வைத்து அழுத்தி, இரண்டு முறை அவருடைய வாய்க்குள் மூச்சுக் காற்றை விட வேண்டும்.
ஆம்புலன்ஸ் வரும் வரை இந்த முதல்  உதவியைச் செய்ய வேண்டும். இந்த முதல் உதவியினால் மாரடைப்பு வந்தவரின் தடைபட்ட சுவாசம் சீர்படும்.
 ரத்தம் ஓட்டம் நடைபெறும். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்பதற்கு இந்த முதல் உதவி உதவும்.
இந்த இதய இயக்க மீட்பு உதவி யை ஆங்கிலத்தில்
"Cardiopulmonary Resuscitation (CPR)' என்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்ட்ராய்ட் போன் வைரஸ் 


ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது.
இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. 
இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
 இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும். இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன.
 இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. பயனாளர், தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. 
இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.

அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். 
நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். 
முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். 
கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.
நன்றி:தினமலர்

சனி, 12 அக்டோபர், 2013

ஜெயாவின் கைப்பாவையா" உச்ச+ நீதிமன்றம் ?

ஜெயாவும் மற்ற மூவரும் தங்களது தரப்பில் 133 சாட்சியங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறிவிட்டு, பிறகு அதனைத் திடீரென 99 ஆகக் குறைத்துக் கொண்டனர்.  இதற்கு பவானி சிங்கும் உடந்தையாக நடந்து கொண்டார் என்பதோடு, இந்த 99 சாட்சியங்களையும் அவர் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.  இதில் 99-ஆவது சாட்சியமாக இலஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சம்பந்தம் நிறுத்தப்பட்டார்.  அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வேண்டிய டி.எஸ்.பி. சம்பந்தம் குற்றவாளிகளின் தரப்பில் சாட்சியம் அளித்ததையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  ஆவணங்கள் அளித்ததையும் அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி பாலகிருஷ்ணாவும் அனுமதித்தார்.


பாலகிருஷ்ணா, பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா மற்றும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்.

ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடகா அரசு கடந்த செப்.16 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்.30-ஆம் தேதியோடு முடிவடைவதால், இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.  பவானி சிங்கை நீக்கும் கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்தும்; கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நீதிபதி பாலகிருஷ்ணாவிற்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும் இவ்வழக்கில் செப்.30 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
‘‘வழக்கை விசாரிக்க புதிய அரசு வழக்குரைஞரும் புதிய நீதிபதியும் நியமிக்கப்பட்டால், அவர்கள் 34,000 பக்கங்கள் கொண்ட  இந்த வழக்கின் சாட்சியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட காலம் எடுக்கும்; எனவே, பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என வாதிட்டது, ஜெயா கும்பல்.  இதே காரணத்தை வேறு வார்த்தைகளில், ”அசாதாரணமான சூழ்நிலையையும் பல தொகுதிகளைக் கொண்ட சாட்சியங்களையும்” கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை அளிப்பதாகக் கூறியிருக்கிறது, உச்சநீதி மன்றம். டான்சி வழக்கின் தீர்ப்பில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த உச்சநீதி மன்றம், சொத்துக்குவிப்பு வழக்கிலோ ஜெயாவின் மனம் எதை விரும்பியதோ, அதனையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.
‘‘18 ஆண்டு காலமாக நடந்துவரும் இவ்வழக்கு முடிவடையும் தருணத்தில், சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டிலுள்ள தனது அரசியல் எதிரிகள் தூண்டிவிட்டுத்தான் கர்நாடகா அரசு பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது” என வாதிட்ட ஜெயா, இதன் மூலம் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றதைத் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாகக் காட்டினார்.
suran
  ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வீசுவதில் கைதேர்ந்தவரான ஜெயா, தி.மு.க.வின் மேல் இப்படிபட்ட பழியைப் போட்டிருப்பது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்பே தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என ஜெயா கும்பல் பல சதிகளை அரங்கேற்றியதும், இதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும், வழக்குரைஞர் பவானி சிங்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்ததும்தான் உண்மை.  உச்ச நீதிமன்றம் இந்த உண்மைகளைத் தெரிந்தே புறக்கணித்து, ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட நாள் தொடங்கி கடந்த பதினேழு, பதினெட்டு ஆண்டுகளாகப் பல்வேறு சப்பையான, மோசடியான காரணங்களை முன்வைத்து மனுவிற்கு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெயா கும்பல், பவானி சிங் அரசு வழக்குரைஞராகவும், பாலகிருஷ்ணா நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட பிறகு, வழக்கை இழுத்தடிப்பதையெல்லாம் கைவிட்டு, நல்ல பிள்ளையைப் போல நடந்து கொண்டது.  எலி காரணமில்லாமல் அம்மணமாக ஓடாதே! இந்த நிலையில்தான், ”அரசு வக்கீலுக்கு உதவத் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் மனு போடப்பட்டு, அதற்கு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டது.  அதன் பிறகுதான் நீதிபதி பாலகிருஷ்ணாவும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்ட எதிர்த்தரப்பிற்குச் சாதகமாக நடத்தியிருக்கும் தகிடுதத்தங்கள் அம்பலத்திற்கு வந்தன.
பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவுடனேயே, அரசு தரப்பு சாட்சியங்களான 259 பேர் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு இரண்டு மாத அவகாசம் வேண்டும் எனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா,கால அவகாசம் அளித்தால், தான் நீதிமன்றத்தில் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்க நேரும் என்ற மொன்னையான காரணத்தைக் கூறி, அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.  பவானி சிங் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாப்பிருந்தும் அதனைப் புறக்கணித்தார்.  இதன் மூலம் ஆவணங்களைப் படித்துப் பார்க்காமலேயே இறுதி வாதங்கள் நடைபெறுவதை பவானி சிங்கும் பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து அனுமதித்தனர்.
தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைதான் இந்த வழக்கையே நடத்தி வருகிறது.  ஆனால், தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, இத்துறையைச் சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரியான சம்பந்தம், ”இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயாவிற்குச் சாதகமாக மனு போட்டு, நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  எனவே, டி.எஸ்.பி.சம்பந்தத்தை ஜெயா தரப்பு சாட்சியமாக நீதிமன்றம் விசாரித்திருப்பது வழக்கையே குழிதோண்டி புதைக்கும் தீய உள்நோக்கம் கொண்டதாகும்.
இப்படியாக இவ்வழக்கு விசாரணை குற்றவாளிகளுக்குச் சாதகமான முறையில் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டித்தான், பவானி சிங்கை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடுத்தார்.  இதன் அடிப்படையில்தான் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கர்நாடகா அரசு எடுத்தது.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டதே முறைகேடாக நடந்திருக்கிறது.  இது இவ்வழக்கில் ஜெயாவிற்குச் சாதகமாக நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய மோசடியாகும்.
பவானி சிங்கிற்கு முன்பு இவ்வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நீண்ட காலம் பணியாற்றிவந்த பி.வி. ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகுமாறு செய்தது, ஜெயா கும்பல்.  அவரது பதவி விலகல் கடிதத்தை, அப்பொழுது கர்நாடகா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விக்ரமஜித் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.  விக்ரமஜித் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிறீதர் ராவ் என்பவர்தான் ஆச்சார்யாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்; ஆச்சார்யாவுக்கு அடுத்து வேறொருவரை நியமிக்க அரசு அளித்த பட்டியலில் இல்லாத ஒருவரை – பவானி சிங்கை – அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்திருக்கிறார்.  அப்பொழுது கர்நாடகாவை ஆண்டுவந்த ஜெயாவின் பங்காளியான பா.ஜ.க. அரசு இந்த முறைகேட்டைத் தெரிந்தே அனுமதித்ததோடு, பவானி சிங்கிற்கு ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகவும் நிர்ணயம் செய்திருக்கிறது.
பவானி சிங் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அம்பலமான பிறகும், அம்முறைகேடு குறித்து விசாரிக்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது உச்ச நீதிமன்றம். இன்னொருபுறம், பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்திருப்பதன் மூலம், அவரது முறைகேடான நியமனத்தையும் அவர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதையும் சட்டபூர்வமாக்கி விட்டது.  ஜெயாவைக் காப்பாற்றப் போய், இப்பொழுது நீதிமன்றமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.  இனி, இந்த வழக்கில் நியாயமான முறையில் நீதி வழங்கப்படும் என எவரேனும் நம்ப முடியுமா?
-ஆர்.ஆர்.
  
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...