மும்பையில் நடைபெற உள்ள சர்வதேசத்
திரைப்படவிழாவின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயிற்சி!
இதுவரை, ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு மட்டுமே
வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது திரைக்களத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவது பற்றி செய்தியாளர்களிடம்
கமல்ஹாசன் பேசுகையில், "
"இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது
தெரியாது" என்று கூறினார். தொடர்ந்து,"இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை
செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும்.
ஆயினும் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த
கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்து இருங்கள் இந்த
விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள்
என்று பரிந்துரை செய்யவும் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றும்
கமல் கூறினார்.
இனி அதிக இந்திப் படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
கமல்ஹாசன் வயதான நடிகர்களை விட அதிக
நாட்கள் தனது திரையுலக வாழ்வை கடந்துள்ளார்.
52ஆண்டுகள்.
அதுவே அவரை வாழ்
நாள் சாதனையாளராக்க போதுமானது என மும்பை திரையுலகினர் தெரிவித்தனர்.
சென்னை
திரையுலக 100ஆண்டுகள் ஜெயா அரசு விழாவில் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்ட
கமல்ஹாஸனுக்கு இந்திய திரையுலக மும்பை மய்யம் சரியான மரியாதையை
செய்கிறது.
அதை புறந்தள்ளாமல்கமல்ஹாசன் ஏ ற் று க் கொள்வதுதான் முறை.
அதுதான் சென்னை அதிமுக கட்சி திரையுலக கூ லிகள் நடத் திய அம்மா புகழ் பாடும்100 ஆண் டுகள் விழா அவ மானத்துக்கு தரும் பதிலடியாக
இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------உயிர் காக்க...
ஒரு பயிற்சி!
எங்கு வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.
ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே, அதை வாயுக்கோளாறு
என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த
மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச்
செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தாகிவிடும்.'
முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது
சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள்
இருக்கின்றன.
நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா,
அசிடிட்டியா?
மாரடைப்பா?
எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு
என்று நினைத்துக் கொண்டு சோடா கொடுக்கிறோம். மார்பில் தைலங்களைத் தடவி
மசாஜ் செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி வந்திருந்தால், இப்படியெல்லாம் செய்வது
ஆபத்தில் முடிந்துவிடும். இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்தம் அங்கங்கே
நின்றுவிடும்.
எனவே மாரடைப்பு ஏற்பட்டவரை அருகில் இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆம்புலன்ஸோ, வேறு வாகனங்களோ வருவதற்காகத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்
உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்பதால், விரைந்து செயல்பட
வேண்டும்.
முதலில், மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மாரடைப்பு பரம்பரையாக வர வாய்ப்புண்டு. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும்.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வரும்.
இப்படி உள்ளவர்கள் நெஞ்சு வலி என்று சொன்னால் மாரடைப்பு வர அவர்களுக்கு
அதிக வாய்ப்புண்டு என்று தெரிந்து அருகில் உள்ளவர்கள் உஷாராகிவிட வேண்டும்.
ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மாரடைப்பா?
இல்லையா?
என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால் அதிகமாக
வியர்க்கும். வாந்தி வரும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். படபடப்பு
ஏற்படும். இடது தோள், இடது கைகளில் வலிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும்.
சிலர் மயங்கி விழுந்துவிடுவார்கள்.
எனவே நெஞ்சு வலி என்று சொன்ன ஒருவரை உட்கார வைக்கக் கூடாது.
நேராகப் படுக்க வைக்க வேண்டும்.
தலையை மட்டும் ஒரு பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.
ஏனென்றால் தலை நேராக இருந்தால் வாந்தி வரும்போது அது திரும்பவும்
வாய்க்குள்ளே போய் மூச்சுக் குழாயை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு.
மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த ஒருவர் நினைவுடன் இருக்கிறாரா? இல்லையா
? என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டும்.
அதற்கு அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றால் அடுத்து அவர்
மூச்சு விடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். பிறகு கழுத்தருகே கை விரலை
வைத்து அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
ஒருவேளை நாடித்துடிப்பு இல்லையென்றால், அவருடைய நெஞ்சில் கை வைத்து,
செங்குத்தாக அழுத்துவதற்குத் தேவையான நிலையில் அவர் அருகே மண்டியிட்டு அமர
வேண்டும்.
நடு நெஞ்சில் ஒரு கையை வைத்து, அதற்கு மேல் இன்னொரு கையை வைத்து அழுத்த வேண்டும். இவ்வாறு முப்பது தடவைகள் அழுத்த வேண்டும்.
அதற்குப் பிறகு, அவர் தலையைத் திருப்பி, அவருடைய வாயில் வாயை வைத்து மூச்சுக் காற்றை அவருடைய வாய்க்குள் இரண்டு முறை விட வேண்டும்.
மாரடைப்பு வந்தவர் மூச்சுவிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும்.
மூச்சு விடவில்லை என்றால் மீண்டும் முப்பது தடவை கைகளை வைத்து அழுத்தி,
இரண்டு முறை அவருடைய வாய்க்குள் மூச்சுக் காற்றை விட வேண்டும்.
ஆம்புலன்ஸ் வரும் வரை இந்த முதல் உதவியைச் செய்ய வேண்டும். இந்த முதல் உதவியினால் மாரடைப்பு வந்தவரின் தடைபட்ட சுவாசம் சீர்படும்.
ரத்தம் ஓட்டம் நடைபெறும். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்பதற்கு இந்த முதல் உதவி உதவும்.
இந்த இதய இயக்க மீட்பு உதவி யை ஆங்கிலத்தில்
"Cardiopulmonary Resuscitation (CPR)' என்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்ட்ராய்ட் போன் வைரஸ்
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில்
பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer
Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது.
இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது.
இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு
வழுவே ஆகும். இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த
சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப்
புகுத்துகின்றன.
இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை.
பயனாளர், தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே
தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின்
அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன.
இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும்
பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.
அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும்.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.
அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும்.
நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம்.
மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும்.
நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம்.
முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள்.
கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.
நன்றி:தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக