bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 26 ஜனவரி, 2019

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ....

சார்லி சாப்லின் 2 படம் அதற்குள் இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியும் அதற்கான அதிகாரமும்,வசதியும் அரசுக்கு உண்டு.
ஆனால் படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு நிதிமன்றம்   தடை என்ற வேடிக்கையோடு முடிந்து விடுகிறது.
மற்றப்படங்களை வெளியிட நீதிமன்றம் என்ன அனுமதியா வழங்குகிறது.?
தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய முகவரியை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.அதனால் முடக்க முடியவில்லை என்கிறது அரசு.
சைபர் கிரைம் துறையை கையில் வைத்திருக்கும் அரசு இப்படி சொல்வது வேடிக்கை.
மோடிக்கோ,பழனிசாமிக்கோ மிரட்டல் வந்தால் சிலமணி நேரங்களில் கண்டு பிடிக்கும் சைபர் கிரைம் இதை மட்டும் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

புதிய படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இனிய புதிய முகவரியை சாதாரண மக்கள் கூட கண்டுபிடித்து படத்தை தரவிறக்கி பார்க்கிறார்கள்.
ஆனால்  அரசு ...?

தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு சினிமா உலகுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. 
தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரிக்காகவே இணையத்தை மொய்க்கும் கூட்டமும் அதிகரித்தபடியே இருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல… உலக சினிமாவுக்கே மிரட்டல்தான்!
 கோடிகளை கொட்டி எடுக்கப்படும் சினிமாக்களை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது.

சினிமாப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனதுமே தியேட்டர் ஊழியர்களையோ, வினியோகஸ்தர் தரப்பு ஆட்களையோ பிடித்து முழுப் படத்தையும் ‘காபி’ செய்து ஆன் லைனில் வெளியிடுவதுதான் தமிழ் ராக்கர்ஸின் வேலை.
 தமிழ் படங்களில் இருந்து ஹாலிவுட் படங்கள் வரை, எந்த மொழிப் படமும் இவர்களின் கோரப் பிடியில் இருந்து தப்புவதில்லை.

இதற்காக உலகம் முழுவதும் தங்கள் ஆட்களை வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். 
திருட்டுத்தனமாக இதில் புதுப்படங்களை பார்க்க சினிமா ரசிகர்கள் அலை மோதுகிறார்கள்.
இதனால் இந்த இணையதளத்திற்கு விளம்பரங்கள் மூலமாக வருமானம் கொட்டுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்து பலமுறை அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நீதிமன்றங்களும்கூட புதுப் படங்களை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதித்து பல முறை உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. 
எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இயங்க முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டால், உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வெப்சைட் முகவரியில் கூடுதலாக ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் லட்சக்கணக்கான திருட்டு அபிமானிகளில் ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது. 
இதனால் இந்த இணையதளத்தை முழுமையாக தடை செய்ய முடியாமல் அரசாங்க இயந்திரமே தடுமாறி நிற்பதுதான் நிஜம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் புதிய முகவரிகள் வேகமாக பறிமாறப்பட்டுவிடுகின்றன. தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணம் முதல் பாப் கார்ன் வரை தியேட்டர்காரர்களின் கொள்ளை ஆகியவற்றை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.


தியேட்டர்களில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது சரி! 
அதை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துவதுமுடியாதுதான்.

ஆனால் அதே திரையங்கு உரிமையாளர்கள்தான் தமிழ் ராக்கர்ஸுக்கு புதிய படங்களை பதிவு செய்யவும் உதவுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இதை எல்லாம் ஒழிக்கத்தான் கமல்ஹாசன் தனது படத்தை திரையரங்குகள் மற்றும் சேனல்கள் மூலம் ஒரே நேரத்தி வெளியிட்டால் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்வது தானாகவே குறைந்துவிடும்.

படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கள் வீட்டிலேயே பார்க்க முடியும்.

குடும்பம் திரையரங்குக்கு செல்வதால் ஏற்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு மீதமாகும் என்றார். கட்டாயமாக அங்குதான் வாங்க வேண்டிய தண்ணீர் பாப்கார்ன்,காபிக்கு செலவாகும் ஆயிரங்களை மீதமாக்கலாம்.

அப்போது அவரைத்திட்டித் தீர்க்காத திரையரங்கினரே கிடையாது.ஒரு ஞாயிறு நாள்தான் சானலில் படம் ஒளிபரப்பாகும் .தேவையானவர்கள் மட்டுமே பணம் செலுத்தி படம்பார்க்க முடியும்.

மற்ற நாள்களில் திரையரங்குகளித்தான் பார்க்க முடியும்.திரும்ப பார்க்க ஆவல் உள்ளவர்களும் திரையரங்குதான் செல்ல வேண்டும்.இதனால் திரையரங்குகளும்பாதிக்கப்படாது.
தயாரிப்பாளருக்கு சேனல்  மூலம் பல கோடிகளில் வருமானம் வரும்.
கமல்ஹாசனுக்கு அன்று உருவான எதிர்ப்பு அவரை மவுனியாக்கி விட்டது.

திரையுலகின் பல மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் கமல்ஹாசன்தான்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு,ஏவிட் முறை படக்கோர்ப்பு (எடிட்டிங்) ,டிடிஎஸ்,நேரடி ஒலிப்பதிவு ,ஏவியேஷன் காமிரா என்று இன்று அனைவரும் அனுபவிக்கும் வசைகளை முதன்முறை தனது படங்களில் தைரியமாக உபயோகித்து அறிமுகம் செய்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் என்பது மறுக்க முடிய உண்மை.

காலத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இடர்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பும் அதே திரையுலகில் இருந்துதான் கிடைக்கிறது.

திருடனாய்ப்  பார்த்து திருந்தா விட்டால் ....

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...