நம் உடலில் உள்ள பாகங்கள் நோய்கள் மற்றும்
விபத்துகளால் பாதிக்கப்படும்போது உதவுபவை ஸ்டெம்
செல்கள்தான்.
புற்றுநோய், மாரடைப்பு, அல்சீமர்ஸ்,
எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கி,
உடல் பாகங்களுக் கான மாற்று பாகங்களை சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்வது
வரையிலான பல அதிச யங்களை நிகழ்த்தி வருகின்றன ஸ்டெம் செல்கள். உடலின்
எல்லா வகையான உயி ரணுக்களையும், உற்பத்தி செய்யும் திறனுள்ள கரு ஸ்டெம்
செல்கள் களின் ஊற்றான கருக் களை சிதைக்காமல், கருஸ்டெம் செல்களை உற்பத்தி
செய்ய முடியாது.
இதனால் கருத விர்த்த உடலின் இதர
பகுதிகளில் உள்ள ஸ்டெம்செல்களைக் கொண்டு உடலின் பல்வேறு வகையான உயிரணுக்களை
உற்பத்தி செய்வதும், தோல் உயிரணுக்கள் உள்ளிட்ட பல உயிரணுக்களில் இருந்து
ஸ்டெம் செல்களை உருவாக்கியபின் அவற்றை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதுமான
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவாரசிய மாக, தாய்ப்பால் சுரக்கும்
மார்பக திசு மற்றும் தாய்ப்பாலில் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற
ஸ்டெம்செல்கள் இருக்கின்றன எனும் ஆச்ச ரியமான அறிவியல் உண்மையை கண்டுபிடித்
திருக்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் பொடெய்னி
ஹசியா டோவ்.
இதுவரை புரதங்கள், மாவுச்சத்து மற்றும்
வைட்டமின்களின் களஞ்சியம் என்று எண்ணப்பட்டு வந்த தாய்ப்பாலில் ஸ்டெம்
செல்களும் இருக்கின்றன.என்பதை உறுதி செய்துள்ளது இந்த ஆய்வு.
கருஸ்டெம்
செல்களுக்கு நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தற்போது உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையில், இனி கருக்களை சிதைத்துத்தான் ஸ்டெம் செல்களை
எடுக்க வேண்டும் என்ற நடைமுறைச் சிக்கலுக்கு டாட்டா சொல்லி விடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் 70 சதவிகித
பெண்களின் தாய்ப்பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ள தாய்ப்பால்
ஸ்டெம்செல்களில், கரு ஸ்டெம் செல்களில் உள்ள பல மரபணுக்கள் செயல் படுவதும்
கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, சோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட இந்த
தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், எலும்பு, நரம்பு, இதயம், மற்றும் கணைய
உயிரணுக்களாக வளர்ந்து, பின் அந்தந்த தசைகளாகவும் வளர்ச்சி அடைந்தன என்பது
குறிப்பிடத் தக்கது.
இன்னும் சுவாரசியமாக, சில தாய்ப்பாலில்
உள்ள உயிரணுக்களில் சுமார் 30 சதவிகிதம் உயிரணுக்கள் ஸ்டெம் செல்களாக
இருந்ததும் தெரியவந்துள்ளது.
குரங்குகள் மற்றும் எலிகளின் மீதான
ஆய்வுகளில், இத்தகைய தாய்ப்பால் ஸ்டெம் செல்கள் ரத்தத்தில் சென்று
கலப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சரி, இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல்
களால் என்ன பயன் ?
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும்
தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், குழந்தை களின் உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு
உதவக்கூடும் என்கிறார் ஆய்வாளர் ஹாசியா டோவ்.
தாய்ப்பால் ஸ்டெம்செல்கள் மீதான மேலதிக
ஆய்வுகள் மூலம் அவற்றிலிருந்து உருவாகும் பல்வேறு வகையான உயிரணுக் கள்,
ஸ்டெம்செல் சிகிச்சைகளுக்கு தகுதியானவை என்பது முதலில் நீருபிக்கப்பட
வேண்டும்.
அதன் பிறகு, தாய்ப்பால் ஸ்டெம்செல்களைக் கொண்டு, சிதைந்துபோன இதய
தசைகளை மீண்டும் வளர்த்தெடுப்பது, நரம்புச் சிதைவு நோய்களுள் ஒன்றான
அல்சீமர்ஸ் போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ
முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், கரு ஸ்டெம் செல்களுக்கு
நிகரான வளர்ச்சி திறனுள்ள ஸ்டெம் செல்கள் என்றால் அவை விந்தகம் மற்றும்
சூலகம் ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கும் என்றே எண்ணப்பட்டு வந்தது ஆனால்
தற்போது, அத்தகைய ஸ்டெம்செல்கள் தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசு, எலும்பு
மஜ்ஜை உள்ளிட்ட உடலின் இதர பகுதிகளிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக
நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக, இதுவரை குழந்தைகளின் வளர்ச் சிக்கு
மட்டுமே பயன்பட்டு வந்த தாய்ப்பால், இனி உயிர்காக்கும் பல ஸ்டெம்செல்
சிகிச்சை களுக்கும், பயன்படப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய் தரும் "பயோக்லிட்டசோன்'
-----------------------------------------------------------
அதே சமயம், குறைந்த செலவில் கிடைத்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, கட்டுப்படுத்தி வந்தன
"பயோக்லிட்டசோன்' (Pioglitazone) வகை மாத்திரைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நடுத்தர வயது மற்றும் வயோதிகர்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய்க்கு, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின், நூற்றுக்கணக்கான மாத்திரைகள், சந்தையில் உள்ளன. இவற்றில், "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள், மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தன.
இந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் உள்ளிட்டோருக்கு, கடந்த வாரம், "நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நீரிழிவு நோய்க்கு, சந்தையில், நூற்றுக்கணக்கான மாத்திரைகள் உள்ளன. தற்போது, தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை மாத்திரையை, உட்கொண்டு வந்த நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைப்படி, மாற்று வகை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், "குறைந்த செலவில் கிடைத்து வந்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தன' என்ற கருத்தும், மருத்துவர்கள் மத்தியில் நிலவுகிறது.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதால், இம்மாத்திரைகள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
இம்மாத்திரையின் தன்மை குறித்து, பல மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையான நீரிழிவு நோயாளிகளின் பயன்பாட்டில் இம்மாத்திரை உள்ளதால், இது குறித்து வாய் திறக்கவும், சில டாக்டர்கள் தயங்குகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இம்மாத்திரை குறித்து, முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
நோய்க்கான மருந்து, மாத்திரைகளும், பலகட்ட பரிசோதனைகளுக்கு பின் தான், விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த, "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளால், நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்
வருவதாக கூறி, இதன் விற்பனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கணக்கில் இம்மாத்திரைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகள் மத்தியில், புற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்
உள்ளவர்கள் கவனிக்கவும்:கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு விடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக