bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 9 மே, 2013

உங்கள் பணம்......! எங்கள் மோசடி....?

   -வெ.மன்னார்

ஊழல் சேற்றில் ஊறித்திளைக்கும் காங்கிரசு  அரசு, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற  திட்டம்தான் மானிய நேரடி பண மாற்ற திட்டம்.
 கடந்த தேர்தலில் வெற்றி பெற கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்,தகவல் பெறும் உரிமைச்சட்டம் போன்றவை கை கொடுத்தது போல் இந்த தேர்தலில் நேரடி பணமாற்ற திட்டம் உதவும் என கனவு காண் கிறது. அதற்காகவே ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற கவர்ச்சிகரமான கோஷத்தை மைய அரசு முன்வைக்கிறது.
இந்தியாவின் நலன்களை பலிகொடுத்தாவது சலுகைசார் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் மன்மோகன்சிங் அரசு, இன்று மக்கள் மத்தி யில் சகல முனையிலும் அம்பலப்பட்டு அம் மணமாய் நிற்கிறது. எனவே எப்படியாவது மக்களின் வாக்குகளை கவரவேண்டி எத் தகைய இழிநிலைக்கும் செல்ல தயாராகி விட்டது. உலக வங்கி தலைவர் ஜிம்யோங் கிம் பரிந்துரை செய்யும் இந்த திட்டம், வறுமை ஒழிப்பிற்கு பிரேசிலில் உதவியிருந்தாலும் அப்படியே இந்தியாவுக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது.
அந்தந்த நாட்டின் சூழல் மற்றும் பல்வேறு காரணிகளையும் கணக்கில் கொண்டே திட்டங்கள் வகுக்கப்படவேண் டும். இது குறித்து பல தரப்பினரிடமிருந்து வரும் விமர்சனங்களை கணக்கிலெடுக்கா மல், தானடித்த மூப்பாக இந்த திட்டத்தை அமல்படுத்த முனைகிறது மன்மோகன்சிங் அரசு. மூன்று கோடியே இருபது லட்ச ரூபாயை இந்த ஆண்டு மானியமாக தர உள்ள தாக தம்பட்டமடிக்கிறது.
 ஆனால் பட்ஜெட் டில் ஒதுக்கியதோ ஒரு கோடியே தொண் ணூறு லட்சம ரூபாய் மட்டுமே. இதுவும் தற் போதைக்கு நேரடி பணமாற்ற திட்டத்தின் கீழ் வராத கெரசின், உரம், பொதுவிநியோக உணவு தானியங்கள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்ட84,554 கோடி ரூபாயையும் சேர்த்துதான்.
ஆக முதலிலேயே கோணல்!
 நேரடி பணமாற்ற திட்டத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஏற்கனவே அர சின் பல்வேறு துறைகள் தரும் காசோலை மூலம் நடைபெறும் பணபட்டுவாடா. இனி இது நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே சேர்க்கப்படும்.
பணம் பண மாக தரப்படுவதில் இங்கு மாற்றமில்லை. அது தரப்படும் விதம் மட்டுமே மாறுகிறது. இம்முறையில் தற்போது 45 மாவட்டங்களில் அமலாக்கம் தொடங்கப்பட்டுவிட்டது.

இதை அனைவரும் வரவேற்கவே செய்கின்றனர். காலதாமதம், இடைத்தரகர்களை இது தவிர்க் கிறது. மற்றொன்று அரசு பொது விநியோக முறையில் பொருளாக தரும்போது, அதன் நிகர விலைக்கு ஈடுகட்டும் மானியத்தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக் கில் செலுத்திவிடுவது. இதன் மூலம் பய னாளிகள் பொருள்களை வாங்க பொதுச்சந் தைகளுக்கே தள்ளிவிடுவது.
இந்த முறை அமலாக்கம் எந்த நேரத்திலும் நடக்கலாம்.
 இந்த நேரடி பணமாற்றம் வெற்றிகரமாக இரண்டு முறைகளிலும் நடைபெறவேண்டு மென்றால், அனைவருக்கு வங்கிக்கணக் குடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட் டிருக்க வேண்டும். ஏனெனில் அதன் மூலமே திட்டத்தை அமல்படுத்த அரசு முடி வெடுத்துள்ளது. இதில் ஏதும் குளறுபடிகள் இருந்தால், அது இந்த திட்டத்தையே பாதிப் படையச்செய்யும் என்பதை பிரதமரே ஏற் கிறார்.
எனினும், குளறுபடிகளைப் போக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை. 61 கோடி பேருக்கு ஆதார் அடை யாள அட்டை வழங்க வேண்டுமென்று முடி வெடுத்து ரூ.7500 கோடி முதலில் ஒதுக்கப் பட்டது. பின்னர் இது ரூ.4000 கோடியாக குறைக்கப்பட்டது. இதுவரை 21 கோடி பேருக்கே ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக அதை வழங்கும் யூஐடிஏஐ நிறுவனம் கூறியுள்ளது.
 குறைந்த பட்சம் 80சதவீதம் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்ட மாவட்டத்தில்தான் இத்திட்டத்தை அமல்படுத்தவேண்டுமென்று அரசு கூறுகிறது.ஆனால் முதல்கட்டமாக அமல்படுத்தப் பட்ட 45 மாவட்டங்களில் அந்த வழிகாட்டு தல் அமலாகவில்லை. உதாரணத்திற்கு முதல் கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஹைதராபாத், ரெங்காரெட்டி மாவட்டங் களில் மொத்த நுகர்வோர் 25லட்சம் பேர் உள் ளனர்.
இவர்களில் 45 சதவீதம் பேருக்கே ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. அதிலும் வங்கிக்கணக்கு வைத்துள் ளவர்கள் 25சதவீதம் பேரே.
ஆகவேதான் 22.9 கோடி ரூபாய் ஆதார் அடையாள அட்டை மூலமும், 57.7கோடி ரூபாய் வேறு வழிகள் மூலமும் பட்டுவாடா செய்யப்பட்டுள் ளதாக அரசே கூறுகிறது. இதன்மூலம் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் போய்ச்சேரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இப்பொழுதே பயனாளிகள் தங் களுக்கு மானியப்பணம் கிடைக்கவில்லை யென புகார் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த லட்சணத்தில் 1.7.2013 முதல் மேலும் 75 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
வரும் தேர்தலுக்குள் நாட் டிலுள்ள 640 மாவட்டங்களுக்கும் விரிவு படுத்திவிடுவோம் என அரசு விளம்பரம் செய் கிறது. இப்படி அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் என்ன என் பதற்கு நாடாளுமன்ற தேர்தலில் எப்படியா வது வாக்காளர்களை கவர்ந்து விட வேண்டு மென்பதைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும். மேலும் பயோமெட்ரிக் முறை மூலம் தயா ராகும் ஆதார் அடையாள அட்டை குறித்தும் புகார் உள்ளது. எடுக்கப்படும் கைரேகை அடையாளம் 60 வயதான முதியவர்களுக் கும், கையால் எந்திரங்களுடன் சதா வேலை செய்பவர்களுக்கும் மாறுபடும் அபாயம் உள் ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத னால் தவறான நபர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பில்லையென்று இப்போதே வங்கிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஒவ் வொரு வங்கியும் அடையாளம் காண்பதற்கு தனக் கென்று ஒரு வழிமுறைய பின்பற்று கின்றன. வங்கிகளுக்கு இடையே நடை பெறும் பணப்பட்டுவாடாவில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு என்று வேறு அவைகள் தெரி விக்கின்றன. இந்தியாவின் மக்கள்தொகை யில் 84கோடி பேர் இன்னும் கிராமப்புறங் களில் வசிக்கின்றனர். இவர்கள் கணக்கு துவங்கும் வகையில் கிராமப் புறங்களில் வங் கிகள் இல்லை. இதை ஈடுகட்ட ஆ ஷா, அங் கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உத விக்குழுக்கள், தபால் அலுவலர்கள், உரக் கடை மற்றும் சிறுகடை வைத்திருப்போர் ஆகியவர்களை வங்கியின் பிரதிநிதிகளாக பயன்படுத்திக்கொள்ள ஆலோசனை தரப் படுகிறது. இது பல்வேறு ஊழல்களுக்கு வழி வகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணத்தை பட்டுவாடா செய்யும் சுமார் 10 லட்சம் நுண் ஏடிஎம் மெஷின்கள் வாங்க ஆகும் 15,000 கோடி ரூபாய், வங்கிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும், அரசின் கணக்குப்படியே 3லட்சம் கோடி ரூபாய் மானியத்தை பட்டுவாடா செய்ய நிர்வாக செலவு மட்டும் ரூ.5332 கோடி ஆகும் என்று வங்கிகள் கருத்து தெரிவிக்கின்றன. இது குறித்தெல்லாம் அரசு பரிசீலிப்பதாக தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும் கிழ வியைத் தூக்கி மனையிலே வை என்பது போல அரசின் நடவடிக்கை உள்ளது. இரண்டாவது முறையான பொருளுக் குத்தரும் மானியத்தை பணமாக வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லையென அரசு தெரிவித்துள்ளது. காரணம், மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக முதல்வர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்க டந்த பொங்கல் பண்டிகைக்கு பொருளுக்கு பதிலாக, பணமாக நூறு ரூபாய் வழங்கி வெள்ளோட்டம் பார்த்தவர்  தமிழக முதல்வர் என்பதையும் மறந்துவிட முடியாது.
 உணவுப் பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கு பதிலாக பணமாக வழங்கினால் மாதத்திற்கு ரூ.5000 வரை வரும் என்றும், எரிவாயு சிலிண்ட ருக்கு மானியத்திற்கு பதிலாக ரூ.4000வரை வழங்கப்படும் என்றும் மன்மோகன்சிங்அரசு அறிவிப்பு கொடுத்துக்கொண்டே இருக் கிறது.
இத்தகைய அறிவிப்புகளை தருவ தற்கு காரணமில்லாமல் இல்லை. மக்கள் மத்தியில் ஒர் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதை தேர்தலில் பயன்படுத்திக்கொள்ளும்உத்தியே ஆகும். மானியத்தைப் பணமாக வழங்குவதில் பல சிக்கல்களும் தீமைகளும் உள்ளன என்று நிபுணர்கள் சொல்வதை அரசு செவி மடுப்பதாக தெரியவில்லை. ·உணவு தானிய கொள்முதலை இது பாதிக்கும் நுகர்வோர்க்கு நியாயமான விலை யிலும், விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதையும் இல்லாமல் ஆக்கிவிடும்.
·பொது விநியோகத்தில் உள்ள சுமார் 5லட்சம் கடைகளில் பத்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
கடைகள் மூடலால் வேலை இழப்பு ஏற்படுவதோடு, கிராமப்புற கடைகள் மூடப்படுவதால், நகரங்களை நோக்கி கிராம மக்கள் பொருளை வாங்க போகவேண்டி நேரும்.
சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீட்டை நுழைக்கும் ஏற் பாட்டை இது வலுப்படுத்தும்.
·ஆதார் அடையாள அட்டையில் வரு மான வரி குறிக்க வருமானவரி சான்றிதழ் ஏதும் கேட்பதில்லை. அதனால் வசதியுள்ள வர்களுக்கும் மானியப்பணம் போய்ச்சேரும் ஆபத்து உண்டு.உணவு பாதுகாப்பு என்பது கைவிடப் படுகிறது. இதன்மூலம் ஊட்டச்சத்து கிடைப் பதற்கு உத்தரவாதமில்லை.
பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குழந்தைக ளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச் சத்து கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்.
பணம் கைக்கு கிடைக்கிறபோது செலவுக்கான முன்னுரிமைகள் மாற வாய்ப் புண்டு என்பதால் இந்த திட்டத்தால் தீமையே விளையும்.சந்தையில் பொருட்களை வாங்கும் பழக் கத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதே அரசின் நோக்கம்.
 முதலாளிகளிடமிருந்து லெவி சர்க்கரை வாங்கி மாநில அரசின் பொதுவிநியோக முறைக்குத்தரும் திட்டம் தற்போது கை விடப்பட்டுவிட்டது. இதனால் பொது விநி யோகத்தில் சர்க்கரையை மாநில அரசு ரூ.13.50 க்கு கொடுப்பதற்கு, மைய அரசு மானி யம் தர நிர்ணயித்துள்ள சந்தை விலை ரூ32 மட்டுமே.சந்தையில் இதற்கு மேல் விலை கூடினால் அதற்கான நட்டத்தை மாநில அரசுதான் ஏற்கவேண்டும் என்பதே மைய அரசின் நிலை. அரசுக்கே இந்த கதி என் றால், பொதுமக்கள் நிலை சொல்லவே வேண் டாம். அரசு தரும் மானியத்தைவிட கூடுதல் விலையில் சந்தையில் பொருட்களை வாங் கும் பொதுமக்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவர்.தேர்தல் நேரத்தில் ஆர்ப்பாட்டமாக அறி வித்துவிட்டு, தேர்தலுக்குப்பின் அக்கறை யோ ஆர்வமோ செலுத்தாமல், கவனிப்பின்றி எந்த திட்டத்தையும் விட்டு விடுவதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடை முறை. எடுத்துக்காட்டாக வறுமையில் வாடும் குடும்பங்களில் ஒருவருக்கு ஆண் டொன்றுக்கு நூறு நாள் வேலையை உத்தர வாதப்படுத்தும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நேர்ந்த கதிதான் இப்பொழுது அறிவிக்கிற திட்டங்களுக்கும் ஏற்படும்.இந்த திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை மத்திய கணக்கு தணிக்கைத்துறை விரிவாக சுட்டிக் காட்டியுள்ளது. யூனியன் பிரதேசம் உட்பட 28 மாநிலங் களில் உள்ள 3848 பஞ்சாயத்துக்களை பரி சீலித்து கண்டுபிடித்த விவரங்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது.
 செய்யப்பட்ட வேலை களுக்கு ரூ.2252.43 கோடி இன்னும் அனு மதிக்கப்படவில்லை.769,575 வேலைகளுக் கான பணம் ரூ.4070.76 கோடி இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை. ரூ.6547.35 கோடி செலவில் செய்யப்பட்ட வேலைகள் எந்த சொத்தையும் உருவாக்கவில்லை. 46 சதவீதம் ஏழைகள் உள்ள பீகார், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 20சத வீதம் மட்டுமே.
 2009-10ல் கொடுக்கப்பட்ட 54 நாட்கள் வேலை, 2011-12ல் 43 நாட்களாக குறைந்து போனது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்திவிட்டு, அதற்கேற்ப நிதியை ஒதுக்காமல் விளம்பரத்தை மட்டும் மன் மோகன்சிங் அரசு தேடிக்கொண்டது. ஆக இப்பொழுது அரசு அறிவிக்கும் நேரடி பணமாற்றத் திட்டம் பொருளுக்கு பதிலாக பணம் தரும் முறைக்கு அமல் படுத்தப்பட்டால், அதற்கும் இதே நிலைதான் ஏற்படும்.

இந்த திட்டம் வறுமை ஒழிப்புக்கு பயன்படுமா என்பதைவிட, வறுமைப்பட்ட மக்களை ஒழிக்க வேண்டு மானால் பயன் படும்.
எப்படியாவது வாக்குகளை வாங்கி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரஸ் எத்தகைய இழிநிலைக்கும் செல்ல தயாராக இருக்கும் என்பதை அனு பவம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.


[ஆதாரம்: தீக்கதிர், எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி, எகனாமிக் டைம்ஸ் மற்றும் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் ]
suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...