bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 15 மே, 2013

தமிழ்" மம்மி'க்கு சிலை ?

பிள்ளையை கிள்ளி  விட்டு தொட்டிலையும் ஆட்டும் பழமொழிக்கு இப்போதைய உதாரணம்  தமிழக முதல்வர்ஜெயலலி தாதான் .

நடந்து கொண்டிருக்கும் அரசுப்பள்ளிகளில் மறைந்து வரும் தரத்தை மீட்க வழி செய்யாமல் அந்த பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை திணிக்கிறார்.
அதனால் யாருக்கும் பயன் இல்லை.

காரைக்குடியில் உள்ள தமிழ்த் தாய் சிற்பம் 
தாய் மொழிக்கல்விதான் ஒரு மாணவனை புரிந்து படிக்க செய்யும்.
ஆங்கிலம் வழி என்றால் வரும் மனனம் மட்டும்தான் செய்து மதிப்பெண்களை வாங்கி வருகிறார்கள்.
சுய புரிதல் அங்கு இல்லாமல் போய் விடுகிறது.

உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், மொழியில் வல்லுநர்கள், மக்கள் நல கல்வி இயக்கங்கள் தாய்மொழிவழி பயிற்சியே சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும் சரியான புரிதலோடு கூடிய கல்வி மேம்பாட்டிற்கும் ஏற்றது அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 தாய்மொழி அல்லாத வேறு மொழி வழியாகப் பயில்வது, திறமையான அடிமைகளை உருவாக்குமேயன்றி சுயமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களையோ, கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்காது என்பதையும் அவர்கள் ஆய்வு மூலம் தெளிவாக்கியிருக்கிறார்கள்.
 
ஆங்கில வழிக்கல்வி படித்தவர்கள் அனைவரும் முன்னேறிவிடவில்லை.தாய் மொழி தமிழில் கல்வி பயின்ற வர்கள் சோடையாகி  விட்டதுமில்லை.

இ .ஆ.ப வரை தமிழில் படித்து சாதனை  செய்து வரும் காலம்.

இந்த கால கட்டத்தில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தேவையா?ஆங்கிலம் ஒரு பாடமாக இப்போதும் உள்ளதே.அப்படி இருந்து விட்டுப்போனால் என்ன?

மாறாக அரசுப்பள்ளிகள் கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளதை கட்டிக்கொடுக்கலாம்.
கழிப்பறை வசதி இல்லாமல் 90 பகுதி பள்ளிகள் உள்ளதுஅவர்களுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கலாம்.இன்னும் ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாத பள்ளிகளில் அவைகளை செய்து தரலாம்.

இவைகளுக்கு பணம் ஒதுக்கினால் 100 கொடிகள் ஆகவே  ஆகாது.குறைவாகவே ஆகும்.
அவைகளை செய்யாமல் 100 கோடிகளை செலவிட்டு சிலை அமைக்கப் போகிறாராம்.
சுதந்திர தேவிக்கு போட்டியாம் இந்த தமிழ் தேவி .

ஒரு சிலையை வடிவமைக்க  100 கோடி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது மிக வீண்.
இங்கு  பழைய முதல்வர் கருணாநிதி கருத்துக்கள் மிக சரியானதாக உள்ளது.
''ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்துவிடும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது.

சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும்" என்று கலைஞர்  கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கில வழிக்கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்து விட்டு தமிழுக்கு சிலை என்பது சரியான செயலாக கொஞ்சம் அறிவுள்ளஅறிவுள்ள[தாக எண்ணிக்கொண்டிருக்கும்]  என்னைப்போன்றவர்கள் கூட  ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

சமச்சீர் கல்வியிலேயே அந்த ஆங்கில வழிக்கல்வி  தரம் வந்துள்ள போது அதை புறந்தள்ளியவர் இப்போது இப்படி செய்வது த மிழை அழிக்கும் செயல்தான் அதற்கு பரிகாரமாகத்தான் சிலையா?
 கண்ணகி சிலையை காணாமல் ஆக்கியவர் ,சமாதியில் இரட்டை இலையை குதிரை இறக்கை என கட்டியவர் உருவாக்கும் 100 கோடிகள் செலவிலான தமிழ்த் தாய் எப்படி இருப்பாள்.?
தங்கத்தில் செய்கிறாரா என்ன?

நிச்சயம் அம்மாவின் முகச் சாயலில் தான் இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

சூரிய வெடிப்பு.

நம் பால்வெளியில் கடந்த  48 மணி நேரத்தில் சூரியனில்  மிகப்பெரிய 4 வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அவ்வெடிப்புகளில்  இருந்து நெருப்பு ஒளிப்பிளம்புகள் சீற்றத்துடன் வெளியேறியுள்ளன.

 இந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சூரிய ஒளிப்பிளம்பு நேற்று வெளியாகியுள்ளது.
suran
இந்த நெருப்பு ஒளிப்பிளம்புகளில் இருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் பூமியை வந்தடையும்.

அப்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சூரியனின் 11 ஆண்டுகால இந்த சுழற்சி இப்போது நெருங்கிக்கொண்டிருப்பதால், சூரியனில் இருந்து இதுபோன்று நெருப்பு ஒளிப்பிளம்புகள் அடிக்கடி வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...