bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 17 மே, 2013

`நீர் விளையாட்டு’


                                                                                                                                                                                                             

பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடி யிருப்புகள் பற்றிய விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. “ராஜா, ராணிகளைப் போல் வாழ ஆசையா? 
 உங்கள் கனவு இல்லம் இதோ.. சொகுசான, விசாலமான குடி யிருப்புகள்.. ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு நீச்சல் குளம்..” என்ற வாசகங்கள் வண்ணமயமான பானர்களை அழகாக அலங்கரிக்கின்றன. 
ஏராளமான தண் ணீரைச் செலவழித்து நீர்ச்சறுக்கு விளை யாட்டு நடத்தும் பூங்காக்கள் முளைக் கின்றன. தண்ணீரையும் மின்சாரத்தையும் செலவழித்து பனிப்பாதைகள் உருவாக்கப் பட்டு பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கெல் லாம் தண்ணீர் பிரச்சனையே அல்ல. 
தாராளமாகக் கிடைக்கிறது. 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1972-இல் ஏற்பட்ட வறட் சிக்குப் பிறகு தற்போது வந்திருக்கும் கடும் வறட்சிப் பகுதிகளில்தான் இந்த `நீர் விளையாட்டு’ நடந்து கொண்டிருக்கிறது. 
அந்த மாநிலத்தில்தான் ஆயிரக்கணக் கான கிராமங்கள் தண்ணீர் லாரிகள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந் தால் அவை தினமும் வரும். இல்லை யெனில் வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ வரும். தண்ணீர்க் குடங்களைத் தூக்கிக் கொண்டு ஓடியபடி அவற்றை தரிசனம் செய்யலாம். 
குடியி ருப்புகளில் முளைக்கும் நீச்சல் குளங் களுக்கும் வெளியே வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கும் தொடர்பே இல்லாதது போல் “எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என்ற பாவனையுடன் மக்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக் கின்றனர். இருபதாண்டுகளுக்கு முன் தண்ணீர் பூங்காக்களும், தீம் பார்க்குகளும் எங்கும் பரவியதை மாநிலம் மகிழ்ச்சி யோடு வரவேற்றுக் கொண்டாடத் தொடங்கியது. இன்று 7000 கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடு கிறது. 
கிட்டத்தட்ட 5 லட்சம் மாடுகள் மாட்டுப் பண்ணைகளில் கிடைக்கும் தண்ணீரை நம்பியிருக்கின்றன. போதிய தண்ணீர் கிடைக்காததால் வேறு வழி யின்றி வந்த விலைக்கு மாடுகள் விற்கப் படுகின்றன. 
 பல அணைகளில் தண்ணீர் 15 சதம் மட்டுமே இருக்கிறது. 
வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட கிராமங் களுக்கு அரசு ஏற்பாடு செய்த தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. மற்ற பல்லாயிரம் கிராமங்கள் தனியார் தண்ணீர் லாரி உரிமை யாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுத் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றன. மத்திய அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கை அமுலான பிறகு அரசு தற்போது செய்துவரும் இந்தப் பணி யிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளும். 
பிறகு எல்லாமே தனியார்கள்தான்.
 ஓஸ்மனா பாத் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்னொரு காட்சி . தேவையான தண் ணீரை எங்கிருந்தாவது கொண்டு வரும் வேலை குடும்பத்தில் ஒருவருக்கு முழு நேரப் பணியாக ஒதுக்கப்படுகிறது. 
சைக் கிள்கள், மாட்டு வண்டிகள், மோட்டார் பைக்குகள், ஜீப்புகள், லாரிகள், வேன்கள், டாங்கர்கள் என பல்வேறு வாகனங்களில் தண்ணீர் கொணரப்படுகிறது. பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையிலும், இடுப்பிலும், தோள்களிலும் சுமந்து வரு கின்றனர். 
 பரத் ராட் என்பவர் நான்கு பிளாஸ்டிக் குடங்களைத் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவில் கட்டிக் கொண்டு தனது வயல்களுக்குத் தேவையான 180 லிட்டர் தண்ணீரைக் கொணர மூன்று முறை பயணம் செய்கிறார்.
 மாதம் 600 கிலோமீட்டர் பயணம் செய்து பெட்ரோ லுக்கு 800 ரூபாய் செலவழிக்கிறார். இது ஓர் உதாரணம் மட்டும்தான்.

1972-க்கும் 2013-க்கும் உள்ள ஒரே வித்தியாசம் தற்போதைய வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதுதான். 
கடந்த 15 ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான தண்ணீர் திருப்பிவிடப் பட்டது. சொகு சான வாழ்க்கைக்கு மக்களைத் தயார் செய் யும் தனியார் கம்பெனிகள் தண்ணீரை உறிஞ்சத் தொடங்கின.
 கிராமங்களி லிருந்து நகரங்களுக்கு தண்ணீர் இடம் பெயர்ந்தது. தண்ணீருக்காக கிராம மக்கள் ரத்தம் சிந்தவும் நேர்ந்தது.
 2011-இல் பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி சிஞ்ச் வாடிற்கு தண்ணீர் கொண்டுபோவதற்காக தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத் தியதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களது எழுச்சி துப்பாக்கிக் குண் டுகளை வைத்து அடக்கப் பட்டது. 
மூன்று விவசாயி கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். ‘கொலை முயற்சி’ வழக் கில் 1200 பேர் கைது செய் யப்பட்டனர்.
   இப்படிப்பட்ட தண்ணீர் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் .அதை அரசுதான் செய்ய வேண்டும் .
இந்த லட்சணத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்க மத்திய மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு வருகிறது.அதை சோதனையாக செய்து பார்த்த  பராகுவே  மக்களின் கலவரத்தாலும் ,உயிர் பலிகளாலும் தனியார் மயத்தை கைகழுவி விட்டது. இந்தியாவிலும் தண்ணீர் அரசியலை மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் ,இல்லையெனில் அதனால் மிகுந்த அபாயத்தை அரசும் -மக்களும் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்.

                                                                                                                                                                            -பேராசிரியர் கே. ராஜு
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...