தனியார் நிறுவனங்களுக்கு லாப வேட்கை!அதிகாரிகளுக்கே ஆதாய வேட்கை!இவை இரண்டும் இணைந்தால்?
மக்கள்
நலத்திட்டங்கள் சீரழியும். மக்களின் வரிப்பணம் சூறையாடப்படும்! இந்த நிலை
மைதான், தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் சமீப
காலங்களில் நிலவி வருகின்றன!
இந்தக் கூட்டணியின் விளைவு - அரசினர் தொழிற்
பயிற்சி நிலை யங்கள் மரணத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. இதன்
விவரங்களைப் பார்ப்பதற்கு முன்னர், ஒரு சிறிய அறிமுகம். மத்திய அரசின்
தொழிற் பயிற்சித் தி;ட்டங் களை தமிழ்நாட்டில், அரசினர் தொழிற் பயிற்சி
நிலையங்களின் (ஐ.டி.ஐ.) மூலமாக நடை முறைப்படுத்துவதே தமிழக அரசின் ‘வேலை
வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை’யின் பணி யாகும். 1950களிலிருந்து
தொடர்ந்து செயல் பட்டுவரும் தொழிற் பயிற்சித் திட்டத்திற்கு ‘கைவினைஞர்
பயிற்சித் திட்டம்’ என்று பெயர்.
8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்புவரை படித்து
விட்டு, மேற்படிப்புக்குச் செல்வதற்கு வசதி வாய்ப்பற்ற ஏழை, எளிய,
நடுத்தரக் குடும்பங் களைச் சார்ந்த ஆண், பெண் இளைஞர்க ளுக்கு அரசினர்
தொழிற்பயிற்சி நிலையங் களில் உதவித் தொகையுடன், இலவசமாகத் தொழிற் பயிற்சி
அளித்து, அவர்களுக்கு வாழ் வாதாரத்தை ஏற்படுத்தித் தருவதே ‘கை வினைஞர்
பயிற்சித் திட்டம்’ ஆகும்.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதா?
சந்தேகமே வேண்டாம்.
தற்போதுவரை இந்தத் திட்டம் முழு வெற்றியுடன் செயல்
பட்டு வருகிறது. அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்
களில் எவருக்கும் வேலை கிடைக்கவில்லை என்ற நிலை இதுவரை இல்லை என்பது
உங்களால் எளிதில் நம்ப முடியாத சத்தியமான உண்மை!இப்படிப்பட்ட தொழிற்
பயிற்சித் திட்டத் திற்குத்தான் மூடுவிழா நடத்த, இந்தத் துறை யின்
அதிகாரிகள் நாள் பார்த்து வருகிறார்கள்.சரி, விஷயத்திற்கு வருவோம்!அரசினர்
தொழிற் பயிற்சி நிலையங்களை (ஐ.டி.ஐகளை) அதிகாரிகள் ஏன் கல்லறைக்கு அனுப்பிட
விரும்புகிறார்கள்?
வேறொன்று மில்லை, கட்டுரையின் தொடக்கத்தில் குறி
ப்பிட்டுள்ள தத்துவம்தான் அடிப்படை!
முறைகேடுகளின் தொடக்கம் :
ஆரம்பக் காலங்களில் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருந்த தனியார் தொழிற்
பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை பெரு கப் பெருக, குறிப்பாக, 1990களில்
இருந்து, இந்தத் துறை அதிகாரிகளின் பாசமழை, இவர் கள்பால் பொழியத்
தொடங்கியது.
தொழிற் பயிற்சி அளிப்பதற்கான, மத்திய அரசு வரையறுத்துள்ள
அடிப்படை வசதிகள் இல்லாத பெரும்பாலான தனியார் தொழிற் பயிற்சி
நிலையங்களுக்கு, மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், அகில இந்
தியத் தொழிற் தேர்வுகளின்போது தனது மாணவர்களைத் தேர்ச்சி பெறச்
செய்வதற்கும், இந்தத் துறை அதிகாரிகளின் உதவி (தயவு) தேவைப்பட்டது.
துறையில் ஊழலுக்கு வித் திட்டார்கள் தனியார் தொழிற் பயிற்சி நிலைய
முதலாளிகள்.
இன்று அது ஆல்போல் தழைத்து வேல்போல் வேரூன்றி நிலைத்து
நிற்கிறது. கூட்டணியும் வலுவாக்கப்பட்டுவிட் டது. குறிப்பிட்டுச் சொல்லப்
போனால், சமீப காலங்களில் இந்தத் துறையை நிர்வகித்து வருவது, உண்மையில்,
தனியார் தொழிற் பயிற்சி நிலைய முதலாளிகள்தான்.
தனியார் தொழிற்
பயிற்சி நிலையங்களின் மீதுகருணைப் பார்வை : அரசினர் தொழிற் பயிற்சி
நிலையங்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகச் செயல் பட வேண்டிய இந்தத் துறை,
தனியார் தொழிற் பயிற்சி நிலைய முதலாளிகளின் நலன்களுக் கான நிர்வாகஅமைப்பாக
மாறிப் போனது.
1. தொழிற் பயிற்சி அளிப்பதற்கான போதுமான வசதிகளோ, தகுதியுள்ள
ஆசிரியர்களோ இல் லாததாலும், அதிகமான கட்டணம் வசூலிக்கப் படுவதாலும்
தனியார் தொழிற் பயிற்சி நிலை யங்களில், மாணவர் சேர்க்கை சரிவடை வதைக் கண்டு
மனம் நொந்துபோன துறை யின் அதிகாரிகள், அரசின் தனியார்மயக் கொள்கைகளைச்
சரியாகவே பயன்படுத்தி, அமைச்சகத்தை எல்லாவகையிலும் திருப் திப்படுத்தி,
கடந்த ஆண்டில் (2012) தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாண
வர்களுக்கான பயிற்சிக்கட்டணத்தை அரசே செலுத்துவது என்ற பெயரில்
அரசிடமிருந்து 15கோடி ரூபாய் முதல் 33கோடி ரூபாய்வரை தனியார் தொழிற்
பயிற்சி நிலைய உரிமையா ளர்களுக்கு அரசு நிதியைப் பெற்றுத் தந் தார்கள். இது
போதாதென்று,
2. தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்களைச்
சேர்த்துத் தர வேண்டிய பணியையும், அரசினர் தொழிற் பயிற்சி நிலை யங்களே
மேற்கொள்ள வேண்டும் என்ற அரசு உத்தரவையும் பெற்றுத் தந்தார்கள். இத்த
னைக்கும், ஒவ்வொரு ஆண்டும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் ‘கைவினைப்
பயிற்சித் திட்டத்தில்’ சராசரியாக 20 முதல் 30சதவீத இடங்கள் காலியாகவே
இருந்து வரு கின்றன. இதுபற்றி அதிகாரிகள் கவலை ஏதும் பட்டதில்லை.
இதன்
உச்சக்கட்டமாகபுதிய திட்டத்தின்மூலம் கோடிக் கணக்கான பணம் தானம்
"வேலைவாய்ப்புக்கான குறுகிய காலப் பயிற்சித் திட்டம்" என்ற ஒரு மத்திய
அரசின் திட் டத்தை,
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்படுத்தி வருகிறது. இந்
தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 28கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு,
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கி வருகிறது.
இந்தப் பயிற்சியை எவ்வாறு அளிப்பது,
தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறை கள், பயிற்சியாளர்களிடமிருந்து கட்டணம்
பெறுதல், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கட்டணத் தைத் திரும்பத் தருதல்,
மதிப்பீடுகளை எவர் செய்வது, அவர்களுக்கான கட்டணம் ஆகிய வற்றிற்கான
வழிகாட்டுதல்களை அளித்த மத்திய அரசு, இவையெல்லாம் முறையாக நடைபெறுகிறதா
என்பதைக்கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல் களை நிர்ணயிக்கவில்லை.’ இந்த
இடைவெளியை மிகச் சரியாகவே துறையின் இணைஇயக்கு நர்
(கைவினைஞர் பயிற்சி) அவர்கள் (இவர் தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்து
வதற்கான அதிகாரியாக இருந்தவர்) பயன்படுத்திக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளில்
தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறு வதற்குத் துணை
புரிந்துள்ளார்.
அதாவது - பயிற்சி அளிப்பதற்கான எந்தவித அடிப் படை வசதியும்
இல்லாத தனியார் அறக் கட்டளைகள் உட்பட, பெரும்பாலான தனியார் தொழிற் பயிற்சி
நிலையங்களுக்கும், தனியார் தொழிற் பள்ளிகளுக்கும், தகுதி குறித்த எந்த வித
ஆய்வும் மேற்கொள்ளாமல் தன்னிச்சை யாகவே இந்தப் பயிற்சியை அளிக்க அனுமதி
அளித்துள்ளார் .
1. பயிற்சி அளித்ததற்கான பதிவேடுகளோ, தேர்வு நடத்தியதற்கான
சரியான ஆவணங் களோ மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் கிடையாது. பயிற்சி, தேர்வு
ஆகியவையெல் லாம் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதற்கான எந்த
ஏற்பாட்டையும் இவர் மேற்கொள்ளவும் இல்லை.
2. மதிப்பீட்டுக் கட்டணத்தை
நிறுவனங் களுக்கு அனுமதித்ததிலும் தவறுகள் நடந்துள் ளன. எடுத்துக்காட்டாக,
மத்திய அரசுப் பட்டி யலில் இல்லாத பெரும் முதலாளிகள் சங்கம் ஒன்றுக்கு
மதிப்பீட்டுக் கட்டணமாகப் பல கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பின்னர் அந்தப்
பணத்தைத் திரும்பப் பெறத் தாக்கீதுகள் அனுப்பப்பட்டன. இதில் மிகக்குறைந்த
அளவுக்கான ஓரளவு தொகை மட்டுமே இதுவரை திரும்பப்
பெறப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட துறையின் நடவடிக்கை களால், ஏழை இளைஞர்களுக்கு
வாழ் வளித்து வரும் ‘கைவினைஞர் பயிற்சித் திட் டம்’
அனாதையாக்கப்பட்டுள்ளது. கொடுமை என்னவென்றால், துறையின் தற்போதைய
இணைஇயக்குநர் (கைவினைப் பயிற்சி) அவர்கள், பதவியேற்ற 3 ஆண்டுக் காலத்தில்
ஒரு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத் திற்குக் கூடச் சென்றதில்லை
என்பதுதான்.
ஏற்கனவே, ‘திறன்மிகு பயிற்சி மையம்’ என்ற திட்டத்தின் பெயரால், 10க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவு
களில் 168 அலகுகள் கைவினைப் பயிற்சித் திட்டத்தில் மூடப்பட்டு
விட் டன. அந்த திட்டமும் முற்றி லும் தோல்வியடைந்து,
இதற்கெனக் கட்டப் பட்ட கட்டிடங்கள் நினைவுச் சின்னங்களாக் கப்பட்டு விட்டன.
இன்னும் எவ்வளவோ!
தனியார் தொழிற் பயிற்சி நிலைய முதலாளிகளுக்கே சேவை செய்து
வரும் இந்தத் துறை நடவடிக்கைகளை, குறிப்பாக, இத் திட்டத்தில் பலகோடி
ரூபாய் மக்களின் வரிப்பணம், தனியார் தொழிற் பயிற்சி நிலைய முதலாளிகளுக்கு
எந்தவிதச் சரிபார்ப்பும் இல்லாமல் வழங்கியுள்ளது குறித்தும், மதிப்பீட்டு
அமைப்புகளுக்குக் கட்டணம் வழங்கப்பட்டது குறித்தும் தமிழக அரசு முழுமையான
விசாரணை ஒன்றை நடத்திட வேண்டும். இந்தச் சூழ்நிலையில்,நம்பிக்கைக்கான
வெளிச்சம் தெரிகிறது.
அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பணியாற்றும்
தொழில்நுட்ப ஊழியர்களின், சமூக அக்கறையுள்ள ஒரு சங்கமான ‘தமிழ்நாடு தொழிற்
பயிற்சி அலுவலர் சங்கம்’ கைவினைப் பயிற்சித் திட்டத்தைப் பாது காப்பதற்கான
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின்
துணையோடு போராட்டங்களை நடத்தி வருகிறது. துறையின் நிர்வாகமோ இவர்களை
அச்சுறுத்திப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறத்தில்,
இந்திய மாணவர் சங்கம், ‘அரசினர் ஐ.டி.ஐ.களைப் பாதுகாப்போம்’ என்ற
முழக்கத்துடன், அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்றுவரும் மாண
வர்களை மாநில அளவில் திரட்டிப் போராடத் தொடங்கியுள்ளது.
இந்த இரு
அமைப்புகளும் ஒன்றிணைந்து உறுதியான போராட்டத்தை மேற்கொள்வதன் மூலமே அரசினர்
தொழிற் பயிற்சி நிலையங்களையும், கைவினைப் பயிற்சித் திட்டத்தையும்
பாதுகாக்க முடியும்.
இதற்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெளி வாகவே
தெரிகிறது!
-இரா.சோமசுந்தரபோசு
கட்டுரையாளர்; முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு
தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம்,
நன்றி:தீக்கதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக