bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கீழடி அடுத்து பாம்பு விழுந்தான்?

நம்மை சுட்டது நாமேதான்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.
 2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின.
இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.

இங்குதான் பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தின் மூலமே அதற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வு நடந்தது.
அத்தாக்குதலில்  இந்திய விமானப்படையைசசேர்ந்த ஆறு வீரர்கள் .உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா, "அது ஒரு மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள்கிறோம்; இது வரும் காலங்களில் மீண்டும் நடக்காது " என்று தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணை ராணுவ தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய விமானப்படை தளபதி, "நமது ஏவுகணையே, ஹெலிகாப்டரை தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

 பிப்ரவரி 14 அன்று இந்திய ஆளுகையின்கீழ் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய படை வீரர்கள் 40க்கும் மேலானவர்கள் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது,

பிப்ரவரி 26 அன்று தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.

புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அப்போது தெரிவித்தது.

"மூன்று இடங்களில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. ஆனால், அவை விரட்டியடிக்கப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை.
ஆனால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள்.
 நாங்கள் ஜனநாயக நாடு.
 நீங்கள் ஜனநாயக நாடு அல்ல என்று நிரூபித்துள்ளீர்கள்" என்று அப்போது இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு மக்கள் தொடர்பு பிரிவின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.
 
இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா,
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கீழடி அடுத்து பாம்பு விழுந்தான்?

ஆதிச்சநல்லூர்,கீழடி ,கொற்கை,ஏரல் போன்ற ஊர்களைத்தொடர்ந்து பழந்தமிழர் ஆய்வு ஆதாரங்கள் புதைந்துள்ள இடங்கள் பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி.
பரமக்குடி அருகே  பாம்புவிழுந்தான் கிராமம்தான் தன்னுள் பூமியில் தமிழர் நாகரிகத்தை புதைத்து வைத்துள்ளது.
 மண்ணில் புதைந்த நிலையில் பானைகள், எலும்புகள், ஓடுகள், சுடுமண் உறை கிணறு ஆகியவை கிடைத்துள்ளதால், அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென உள்ளூர் மக்கள் கோருகின்றனர்.

பரமக்குடி அருகே வைகை நதியை ஒட்டி பாம்புவிழுந்தான் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கே உள்ள ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளியபோது சுடுமண்ணால் ஆன உறை கிணறு ஒன்று தென்பட்டது.

இதே கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், மண்பாண்ட பொருள்கள், சிதைவடைந்த நிலையில் பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளது.

இது குறித்து  தொல்லியல் ஆர்வலர் சரவணன், "இப்பகுதிகளில் அழகிய வேலைபாடுகள் கொண்ட மண் பாண்டங்கள், உலோக தொழிற்சாலைகள் அமைந்திருந்ததற்கான சான்றாக உலோக கழிவுகள், மனித எலும்புகள் போன்ற பொருட்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கிடைத்த பொருள்களைப் போன்றே பாம்புவிழுந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இது குறித்து உள்ளுர்காரர்  இளங்கோ  "தமிழக அரசும் தொல்லியல் துறையினரும் இப்பகுதியில் முறையான ஆய்வுகளை நடத்த முன்வர வேண்டும். அதன் மூலம் இப்பகுதி மக்களின் பழைமையான வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள முடியும்" என்கிறார்.
ராமநாதபுரத்தில் உள்ள பெரிய பட்டினம், அழகன்குளம், தொண்டி ஆகிய பகுதிகளில் மாநிலத் தொல்லியல் துறை ஏற்கனவே ஆய்வுகளை நடத்தியுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகுரு, "மாநில அரசு நடத்திய ஆய்வுகளின்போது அழகன்குளம் மிக பழமையான துறைமுகமாக இருந்தது தெரியவந்தது.

அதே போல் நாங்கள் நடத்திய கள ஆய்வில் சாயல்குடி அருகே இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்களும் உத்திரகோசமங்கை, சத்திரக்குடி,தேவிபட்டிணம் பகுதிகளில் சங்க கால தடயங்களும் கிடைத்தன. இந்த மாவட்டம் முழுவதுமே பல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இங்கு மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும்" என்றார்.

 கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு தயாராகி வருகிறோம்.
 இதனால் இந்த உறைகிணற்றை நேரில் சென்று தொல்லியல்துறை சார்பில் பார்க்க முடியவில்லையென ராமநாதபுரம் தொல்லியல்துறை பொறுப்பாளர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.

"கீழடியை முழுமையாக அகழாய்வு செய்த பின்பு பாம்புவிழுந்தான் கிராமத்தை ஒட்டியுள்ள வைகை கரை பகுதிகளில் தமிழக அரசின் அனுமதி பெற்று அகழ்வாராய்ச்சி நடத்த வாய்ப்புள்ளது" என கூறினார் ஆசைத்தம்பி.
மதுரை நகருக்கு அருகில் உள்ள கீழடியில் மாநிலத் தொல்லியல் துறை நடத்திய 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது மாநிலம் முழுவதுமே தொல்லியல் அகழாய்வு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...