==========================================
இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இ ந்நிலையில் கமல் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படம் தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் வருகிற ஜன-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்தார். ஆனால் அதேசமயம், டி.டி.எச்.இல் வெளியிடும் முடிவு குறித்து இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் கமல் அளித்துள்ள பேட்டி:
" ஒரு தொழில்நுட்ப கலைஞனாக சினிமாவில் நுழைந்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக நடிகனாகிவிட்டேன். சினிமாவில் நான் முழுமையாக திருப்தி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பேன். ஆனால் நான் திருப்தி இல்லாமல், மனநிறையற்றவனாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். நான் தேவை உள்ளவனாக வாழ்கிறேன். ஆனால் சிலர் இதை கண்டுபிடிப்பு என்றோ, சாதனை என்றோ கூறுகின்றனர். நான் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று இறங்குவதே பெரும்பாலான சமயங்களில் என்னைக் காயப்படுத்தி இருக்கிறது. ஒரு சாதனை நிகழ்ந்தால் அதனோடு ஒன்றி வாழ்வேன்.
விஸ்வரூபம் படம் பெரும்பொருட்ச் செலவில் எடுக்கப்பட்ட படம். என்னிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் கொட்டி இப்படத்தை எடுத்துள்ளேன்.
இது என்னுடைய கனவுத்திட்டம்.
எனது கனவை என்னுடன் சேர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சரியாக பணிபுரிந்து உள்ளனர் என நம்புகிறேன். விஸ்வரூபம் படம் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டியாக வேண்டும்.
அப்படி அது தாண்டவில்லை என்றால் நிச்சயம் அது தோல்விப்படம் தான். விஸ்வரூபம் வெளியான முதல்வாரத்திலேயே அந்த வசூல் இலக்கை எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். "
என்று தனது எதிர்பார்ப்பை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
நம்பிக்கைதானே வாழ்க்கை!
சாத்தியம் என்பது செயல். வெறும் வார்த்தை அல்ல.
-இது கமல் தனது ரசிகர்களுக்கு கூறிய துதான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* கமல்ஹாசன் இயக்கி, நடித்து
பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார்
போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது.இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இ ந்நிலையில் கமல் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படம் தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் வருகிற ஜன-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்தார். ஆனால் அதேசமயம், டி.டி.எச்.இல் வெளியிடும் முடிவு குறித்து இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் கமல் அளித்துள்ள பேட்டி:
" ஒரு தொழில்நுட்ப கலைஞனாக சினிமாவில் நுழைந்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக நடிகனாகிவிட்டேன். சினிமாவில் நான் முழுமையாக திருப்தி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பேன். ஆனால் நான் திருப்தி இல்லாமல், மனநிறையற்றவனாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். நான் தேவை உள்ளவனாக வாழ்கிறேன். ஆனால் சிலர் இதை கண்டுபிடிப்பு என்றோ, சாதனை என்றோ கூறுகின்றனர். நான் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று இறங்குவதே பெரும்பாலான சமயங்களில் என்னைக் காயப்படுத்தி இருக்கிறது. ஒரு சாதனை நிகழ்ந்தால் அதனோடு ஒன்றி வாழ்வேன்.
விஸ்வரூபம் படம் பெரும்பொருட்ச் செலவில் எடுக்கப்பட்ட படம். என்னிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் கொட்டி இப்படத்தை எடுத்துள்ளேன்.
இது என்னுடைய கனவுத்திட்டம்.
எனது கனவை என்னுடன் சேர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சரியாக பணிபுரிந்து உள்ளனர் என நம்புகிறேன். விஸ்வரூபம் படம் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டியாக வேண்டும்.
அப்படி அது தாண்டவில்லை என்றால் நிச்சயம் அது தோல்விப்படம் தான். விஸ்வரூபம் வெளியான முதல்வாரத்திலேயே அந்த வசூல் இலக்கை எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். "
என்று தனது எதிர்பார்ப்பை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
நம்பிக்கைதானே வாழ்க்கை!
சாத்தியம் என்பது செயல். வெறும் வார்த்தை அல்ல.
-இது கமல் தனது ரசிகர்களுக்கு கூறிய துதான்.
___________________________________________________________________________________
ஹாலிவுட் அள்ளிய 217 கோடிகள் .
இந்தியாவில் ஹாலிவுட் படங்களை
திரையிடுவதில் முன்னணியில் நிற்கிறது சோனி நிறுவனம்.
2012-ம் ஆண்டு இந்த
நிறுவனம் 12 ஹாலிவுட் படங்களை இந்தியாவில் திரையிட்டது. இந்தி, தமிழ்,
தெலுங்கு மொழிகளில் படத்தை மொழி மாற்றம் செய்து திரையிட்டதன் மூலம் சுமார் ரூ.217 கோடியை
வசூலித்துள்ளது.
இதில் 2 படங்கள் அந்த நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை
ஈட்டிக் கொடுத்துள்ளது. "தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி" படம் வெளியான முதல்
வாரத்திலேயே 34 கோடி வசூல் செய்தது சாதனை அளவாக இருக்கிறது. அதைத்
தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படமான "ஸ்கைபால்" முதல் வாரத்தில் 27.4 கோடி
வசூலித்தது.
கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் 50 சதவிகிதம் 3டி
தொழில்நுட்பத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
2013-ல் " டி ஜங்கிள்
அன்செயின்டு, ஆப்டர் எர்த், ஒயிட் ஹவுஸ் டவுன், எலிசியம், கேப்டன்
பிலிப்ஸ், ஈவில் டெத், க்ரோன் அப்ஸ்&2, தி ஸ்மர்ப்ஸ் "ஆகிய படங்களை
திரையிட இருக்கிறது சோனி நிறுவனம்.
மேற்கண்ட 217 கோடிகள் சோனி நிறுவன படங்கள் மட்டுமே .மற்ற நிறுவன ஹாலிவுட் பட வசூல் விபரம் இதுவரை தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விசுவாச விருது?
அரசு
விருதுகள் அவ்வப்போது வழங்கி தனது ஆதரவாளர்களை
குதுகலப்படுத்துகிறது.அப்போது ஆட்சியில் இருப்போர் தங்களுக்கு
விருப்பப்ப டுவோர்களுக்கு
ஏதாவது ஒரு அறிஞர் அல்லது பழையத்தலைவர்கள் பெயரில் கொஞ்சம் பணத்தையும்,ஒரு
பத்திரத்தையும் கொடுத்து கவுரப்படுத்துகிறது .அந்த வகையில் தற்பொது ஜெயா
அரசும் தனது விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்தொண்டு மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் . விருதுகள் பெறுவோர் விவரம்
வருமாறு:
திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது -
கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது-
சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன்
விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா
நந்தகுமார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர்
விருது - தா.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்படும்.
மற்றவர்கள் எப்படியோ அவர்கள் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அவர்கள் சேவை ஆற்றிய விபரம் தெரியாது.
இதில்
மணிமொழியன் கட்சிப் பேச்சாளர். அடுத்தவர் அண்ணன் தா.பா,இவரும்
கிட்டத்தட்ட கட்சிக்காரர்தான். ஆனால் வேறு கட்சிப்பெயரில் இருப்பதால்
சரத்குமார் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் .
கம்யூனிஸ்ட்
கட்சியிலேயே சாதி வாடை யுடன் நடத்துபவர் என்ற நல்ல பெயர் வாங்கியவருக்கு
அம்பேத்கர் விருது என்பது கொஞ்சம் நெடுரல் தான் .
இவரை விட மற்றொரு கட்சியின் தனது ஆதரவாளரான ராமகிருஷ்ணனுக்கு கொடுத்திருக்கலாம்.
அந்த
கட்சியிலாவது தீண்டாமை முன்னணி என்ற அமைப்பு இருக்கிறது.உத்தப்பபுரம்
போன்று பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி சிறையெல்லாம்
சென்றிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் .
ஆனால்
அவர்களுக்கு கொடுக்க முடியாத காரணமும் இருக்கிறது.அவர்கள் திடீரென
விழித்துக்கொண்டு எதிர்த்துப் பேசுவார்கள்.அந்த காரணம்தான் விருது
தா.பா.போன்ற ஜால்ரா விசுவாசிக்கு போயுள்ளது.இவர்தான் விலைவாசியை உயர்த்தி
அம்மா வரியை கடுமையாக்கினாலும்,பேருந்து கட்டணம்,பால் விலை என்று எதை
செய்தாலும் அரசை விமர்சிக்காமல் எதிரி கருணாநிதியை மட்டுமே குற்றம் சாட்டி
அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பும் பணியை திறம்பட செய்வார்.
என்ன
ஒரு குறை என்றால்,அம்பேத்கர் பெயரில் வழங்காமல் அம்மா .அல்லது அம்மம்மா
பெயரில் வழங்கியிருக்கலாம்.அல்லது விருது பெயரையே விசுவாசி விருது என்று
வைத்திருக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக