bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 1 ஜூன், 2019

ஒடிஷாவின் மோடி?

மோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர்.
ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது.

64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது.

ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது.

அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்..
. அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம்.
கையிருப்பு தொகை 15,000.

அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் பல குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார்.
இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும்.
 அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

 இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள்.

 இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர்.
 இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர் சாரங்கிதான்.

அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன. 

தினமலர்,தினமணி ,தமிழ்திசை ,விகடன் போன்ற  பாஜக ஆதரவு இதழ்கள் திட்டமிட்டே சாரங்கியை மகாத்மா அளவுக்கு பொய்யான உருவை உருவாக்கி வருகினற்னர்.

ஆனால் ஒடிஷாவின் மோடி என்பது சரிதான்.காரணம் ரெயிலோ எரிப்பையும்,அதைத்தொடர்ந்த கல்;கலவரத்தையம் திட்டமிட்ட செய்து குஜராத்தில் மதவெறியை கொழுந்து விட்டு எரியசெய்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுவருபவர்கள்தானே மோடி ,அமித்ஷா கும்பல்.

ஆனால் உண்மை வெளிவந்தே தீரும்.
 எல்லாமே பொய்தான்.
நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிதியமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

 இதில் ஏராளமானோர் தமிழக பாஜகவினர். இதை நம்பி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான தமிழருக்கு வாழ்த்துகள் என்றும் கூறிவருகின்றனர்.

ஆனால் இவையனைத்தும் பொய்.

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி, 1970 முதல் 1971 வரை அவர் அப்பதவியில் இருந்தார்.
 வறுமையை ஒழிப்போம் என சூளுரைக்கொண்ட இந்திரா அரசில்தான் இந்தியாவிலிருந்த 14 வணிகரீதியிலான வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

அந்த 14 வங்கிகளும் முதன்மையான வங்கிகள்.

இந்திரா கொண்டுவந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்தியா எங்கும் பரவியது. அந்த தேர்தலில்கூட இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்,
 ‘நான் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறேன், எதிர்கட்சியினர் என்னை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டார்.

 இப்படியாக பல வரலாறுகளைக்கொண்டது அவரது அந்த பதவிக்காலம். 

ஆனால் இப்போது நிர்மலாதான் முதல் நிதியமைச்சர் என்றும் கூறுகின்றனர்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நிர்மலா சென்றமுறை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.
 அப்போதும் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலர் கூறினர். 

ஆனால் 1975 களிலும், 1980 முதல் 1982 வரையிலும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் அதே இந்திராகாந்திதான். 

எல்லாமே பொய்தான். வரலாற்றை தங்களுக்கேற்றார் போல் புதிதாக எழுதுவதுதான் பாஜகவின் பனி.
அதற்குத்தான் அறிவியல் படத்தை விட சோதிடம் முக்கியமானது என்ற வரை மோடி இந்தியாவின் கல்வி அமைச்சராக்கியுள்ளார்.

அவர் வந்தவுடனே மும்மொழித்திட்டத்தை இந்தியா முழுக்க கட்டாயமாக்கியிருக்கிறார்.
இந்தி,ஆங்கிலம் கட்டாயம்.அத்துடன் மாநில மொழியை வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...