bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விஜய்[யம்]

                                           நடிகர் விஜய் பொங்கி எழுந்துவிட்டார். தமிழக மீனவர் படுகொலைக்குப் பழிவாங்கக்கிளம்பிவிட்டார். இனி இலங்கை கடல் படையினர் அவ்ளோதான்.பலகால பிரச்சினைக்கு இளையதளபதியால்தான் ஒருவிடிவு காலம் பொறக்குது.
 ஆமாம். இலங்கைபடையினரால் கொல்லப்பட்ட மீனவரைப்பார்த்து துக்கம் விசாரித்துவிட்டு அப்படியே ரசிகக் கண்மணிகளுடன் ஒரு நடை[பேரணி]போகிறாராம். இதுவரை எத்தனை மீனவர்கள் இலங்கைகாடையரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அப்போது எல்லாம் இந்த நடிகருக்கு மீசை [இருந்தால்]துடித்திருக்கவேண்டாமா.?இப்போது தான் தமிழக மீனவர் துயரம் தெரிந்ததா?ஒட்டுக்கட்சிகள்தான் இப்போது மிகவும் உணர்ச்சியாக இருக்கிறார்கள். காரணம் நெருங்கிவரும் தேர்தல். இவருக்கு  உணர்ச்சி இப்போது பொங்கக்காரணம்.?இவர் அரசியலில் குப்பைக்கொட்டும்  நேரம் நெருங்கிவிட்டதுதான்.
 கொஞ்சம் இளைஞர்கள் படம் பார்த்த வேகத்தில் ‘”தலைவா” என்று கத்திவிட்டால் போதும்.இந்த நடிகர்களுக்கு அரசியல் கிறுக்கு பிடித்து விடுகிறது அது இந்த தமிழ்நாட்டின் சாபக்கேடு.
தனது படங்கள் ஒடவில்லை.காவலன் படம் வெளியிட சில சிக்கல்கள்.
அப்பாவையும் ,மகனையும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் நிலைக்கு  தள்ளி  விட்டது அப்பாவும் ,மகனும் போய் நின்ற இடம் போயஸ். உனது படம் நன்றாக இருந்தால் தன்னாலே வெளியாகி ஒடாதா?உனக்கு பார்வையாளர் மத்தியில் வரவேற்பு இருந்தால் எவன் குறுக்கிட்டு படத்தை நிறுத்தமுடியும்.
 படம் வாங்க ஆள் இல்லை என்றால் தாமதம் ஆகத்தானே செய்யும் .
               அரசியலில் இறங்கிவிட்டு முழித்துக்கொண்டிருக்கும் பாக்கியராஜ்,ராஜேந்தர் ,முழிக்கத்தயாராகிக்கொண்டிருக்கும் விஜய்காந்த்,சரத்குமார்,கார்த்திக் பட்டியல் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்,க்கு இணையா கொடிகட்டிய அமரர் சிவாஜி இவர்களைக் கொஞ்சம் அப்பாவும் ,மகனும் நினத்துப்பார்க்கக்கூடாதா?
 எம்.ஜி.ஆர்,கதையே வேறு. காங்கிரஸ்,தி.மு.க,என்று ஆரம்பம் முதலே
 அரசியல் பின்னணி உண்டு.உன்னப்போல் குடித்து,புகைத்து நடித்தவர் அல்ல.
 படங்களில் அப்பாவை பெயர் சொல்லி மரியாதைக்குறைவாக நடிப்பவர் அல்ல.பெண்களை மிக உயர்வாகக் காண்பிப்பவர். இது போன்ற நடிப்புகளால்
 ஒட்டுமொத்த தமிழக மக்கள் அபிமானம் பெற்றவர்.
 என்னவோ, தம்பி விஜய் அரசியல் சேற்றில் கால் வைக்கும் முன் நன்கு  யோசி காரணம் அதனால் பாதிப்படையப்போவது நீ மட்டுமல்ல.உன் ரசிகர்கள்,  அவர்கள் குடும்பம் மட்டுமல்ல, இந்த தமிழகமும் தான். விஜய்காந்த்தையே சமாளிக்க தமிழகமக்கள் திண்டாடுகிறார்கள். இதில் நீவேறு சேர்ந்து,,,,,,,,,,,
 பாவம் தமிழகம் ,எங்களைப்போன்ற தமிழகமக்களைப்பார்த்து  இரக்கம்  வரவில்லையா,,,?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...