bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 23 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவன்


மறைந்தும் மறையாத கிராமத்து கீத குரல் 



                 மிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தன் கீத குரலால் 20 ஆண்டுகள் தமிழ் மக்களை தன் வசம் இறுக்கி வைத்திருந்தவர் பாடகர் மலேசியா வாசுதேவன். கடந்த 20 ஆண்டுகளாக தான் தமிழக இசை தட்டுகளில் அவரின் குரலை அவ்வளவாக கேட்க முடியவில்லை. மற்றப்படி அவரின் கீத குரல்க்கு இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

1944ல் மலேசியாவில் பிறந்த வாசுதேவன் அங்கு நாடக நடிகராக இருந்தார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 1970ல் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த வாசுதேவன்க்கு நடிகராகும் வாய்ப்பு கிட்டவில்லை. இருந்தும் 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனுக்கான முகவெட்டு இல்லை. ஆனால் அவரின் குரல் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி க்கு பிடித்து போனதால் பின்னணி பாடகர் வாய்ப்பு தந்தார். அவரின் முதல் படமான மெட்ராஸ் டூ டெல்லி படம் வெளிவரவில்லை. இருந்தும் அவரின் குரல்க்கு உள்ள ஈர்ப்பு தன்மையை மனதில் கொண்டு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வீ. திரையில் வந்த முதல் பாடல், பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில் ஜீ.கே.வெங்கடேஷ் என்பவரின் இசையில் பாலு விக்கற பத்தம்மா என்ற கானா பாடல். அந்த கால கட்டத்தில் நண்பர்களாக கை கோர்த்தவர்கள் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர். மூவரும் ஒன்றாக தங்கியிருந்து வாய்ப்பு தேடினார்கள்.  

1976க்கு பின் இசை சாம்ராஜ்யம் நடத்திய இளையராஜா வாசுதேவனுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்புகளை தந்தார். இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் மேடை பாடகராக பல மேடைகளில் ஏறி பாடி அக்குழுவிற்க்கு புகழ் சேர்த்தார். 

பாரதிராஜாவின் 16 வயதினிலேயேவில் மலேசியா வாசுதேவன் பாடிய ஆட்டுக்குட்டி மூட்டையிட்டு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன்பு சகலாகல வல்லவனில், கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி என்ற பாடல் இன்றளவும் கிராமத்து ராக்கிங் பாடல். அதேபோல் அடி ஆத்தாடி………… என கடலோர கவிதைகள் படத்தில் பாடப்பட்ட அந்த வாய்ஸ் தான் அந்த படத்தின் உயிர் நாடியே. 



                                                                                                                                                           -ராஜ்ப்ரியன் நன்றி;நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...