bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வேம்பு இனிப்பு செய்தி

இன்று மிகப் பிரபலமான தாவரப் பூச்சிக் கொல்லியாக வேம்பு திகழ்கிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உழவர்கள் வேப்ப இலைகளை தானியங்களுடன் கலந்தும், சாக்குப் பைகளை வேம்புக் கரைசலில் முக்கி எடுத்துக் காயவைத்தும் தானியங்களைச் சேதம் செய்யும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து வந்தனர்.

வேப்பம் பிண்ணாக்கு பயிர்களை கரையான், மற்ற பூச்சிகளின் தாக்குதலில் இருநூது பாதுகாப்பு அளித்தது. இதனை நிலத்தில் இட்டு பயன்படுத்துவதைவிட பயிர்களுக்குத் தெளித்துப் பயன்படுத்துவது மேலும் பல நன்மைகளைக் கொடுப்பதாக இருந்தது.

வேப்ப இலைகள் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இடுவதன் மூலம் அதிலுள்ள வேதிப் பொருட்கள் நேராக பயிர்களுக்கு வேர்களின் மூலம் ஊடுருவிப் பரவி நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.

வேம்பு சுற்றுச்சூழலை பாழ்படுத்துவதில்லை. இதனைப் பயிர்களுக்குத் தெளிப்பதால் பயிர்களுடன் தொடர்பு கொள்ளும் பறவைகள், தேனீக்கள், மண்புழுக்கள், எறும்புகள், சிலந்திகள் போன்ற உயிரினங்களுக்கு எவ்விதத் தீங்கையும் விளைவிப்பதில்லை. இது நீரின் மூலமாகப் பரவி மீன்களைப் பாதிப்பதில்லை.

வேம்பில் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பது மிக எளிது, செலவு பிடிக்காதது. விவசாயிகள் தயாரிக்கும் வேப்ப எண்ணெய்க் கரைசல், பூச்சிக்கொல்லிக் கம்பனிகளால் குறிப்பிட்ட வேதிப் பொருட்களைப் பிரித்து தயாரிக்கும் பூச்சிக் கொல்லியைவிடச் சிறந்தது.

1962ஆம் ஆண்டு டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பிரதான் என்பவர், வேம்பில் பூச்சிகளை உண்ணவிடாமல தடுக்கும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அதன் பின்னர் மேலை நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் வேம்பு தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்தனர். இதன்மூலம் மேலும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

பத்து வகையான வண்டினங்கள், பத்து வகையான ஈக்கள், இருபத்தைந்து வகையான பட்டாம்பூச்சிகள், புழு இனங்கள், ஒன்பது வகையான வெட்டுக்கிளி இனங்கள், பல்வேறு வகையான அசுவிணி இனங்கள், பூஞ்சைகள், இலையைத் தாக்கும் புழுக்கள், செம்பேன்கள், நூற்புழுக்கள், கரையான்கள் போன்ற மொத்தம் 200 உயிரினங்கள் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. செடியின் பல பாகங்களை தாக்கிச் சேதப்படுத்தும் பூச்சிகள், வேம்பில் வீரியத் தன்மை காரணமாக கொல்லப்படுகின்றன. உண்ணவிடாமல் தடுக்கப்படுகின்றன. பூச்சிகள் ஊனமுற்றவையாகவும் ஆக்கப்படுகின்றன. அத்துடன் முட்டைகளும் அழிக்கப்படுகின்றன.

செயற்கை முறையில் வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள வீரியத் தன்மை உள்ள வேதிப் பொருட்கள் பூச்சிகளின் இனப்பெருக்கத் தன்மை அல்லது சுவாச மண்டலம் அல்லது நரம்பு மண்டலம் இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன. இதனால் பூச்சிகள் அந்த ஒரு அபாயத்தை எதிர்கொள்ளும் தகவமைப்பை நாளடைவில் பெற்றுவிடுகிறது.

வேம்பு மற்றும் மற்ற தாவங்களில் தயாரிக்கப்படும் கரைசல்களில் பல வேறு வகையான வீரியத் தன்மையுள்ள வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இவை ஒரே சமயத்தில் பூச்சிகளின் அனைத்து உடலியல் இயக்க மண்டலங்களையும் தாக்கிச் சேதம் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒட்டுமொத்தத் தாக்கி அழிக்கும் தன்மையை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் தன்மையை பூச்சிகள் உருவாக்கிகாள்ள வேண்டுமானால் ஒரே சமயத்தில் அனைத்துத் தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் திறனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது சாத்தியமே இல்லை. இதன் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது விவசாயிகள் வெற்றிகரமாக வேம்பை பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வேம்பைப் பொருத்தவரை ஒரு சில குறைபாடுகள் உள்ளன. இதில் உள்ள வீரியத் தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் வெயிலில் சிதைந்துவிடுவதால் அடிக்கடித் தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
 நம் தமிழகதில் எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுடையது வேப்பமரம்.அதனாலோ என்னவோ நம்மவர்கள் வேப்பமரத்தை மிக சாதாரணமாக எண்ணிவிடுகின்றனர்,அதை நம்
வீடுகளில் வளர்ப்பது கோடைவெப்பத்தில் இருந்து நம்மை காப்பற்றுவதுடன், மாசு பட்ட காற்றை
சுத்தமாக குளிர்ச்சியாகத் தருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...