தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும். பாக்.நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் எதிர்கட்சித்தலைவராக இருக்கும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மீனவர்கள் பிரச்னையில் கடிதமாக எழுதுகிறார்.செயல் பட வில்லை என குற்றம் சாட்டினார்.இப்போது காகிதத்தையும்,எழுது கோலையும் இவர் எடுத்துக்கொண்டு கடிதம் மேல்,கடிதம் எழுதுகிறாரே?
இவரும் கருணாநிதி பாதையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டாரோ?இவர் கடிதத்தை மன்மோகன் படித்தவுடன்
மீனவர்கள் பிரச்னை தீர்ந்து விடுமா?
நல்லதே நடக்கட்டும்.ஆனால் மறு தேர்தலில் கருணாநிதி வந்து அதன் பின் இவர் வந்தாலும் மீனவர் பிரச்னை இருக்கத்தான் செய்யும்.அதற்கு பல காரணங்கள் உள்ளன.
மீனவர்கள் பிரச்னை ஒரு தீரா பிரச்னை.நம் மீனவர்களிடையும் சில குறைபாடுகள் உள்ளன.எல்லை தாண்டி போவது.இலங்கை மீனவர் பகுதிகளில் மீன் பிடிப்பது.அவைகளை நிறுத்தும் வரை இப்பிரச்னைக்கு கடிதம் எழுதி காகிதங்கள்தான் தீரப்போகிறது.மீனவர் பிரச்னை தீரப்போவதாகத்தெரிய வில்லை.
_________________________________________________________________________________________
- கமல் ஏன் உலக நாயகன்?
• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. • இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். • இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. • கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார். • கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது. • கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது. • உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். • கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். • 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன். • இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன். • 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன். • கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது. •
The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட) • சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. • டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ). • மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது. • கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. •
ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்) • கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது. • அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார். • இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27. • டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது. •
உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார். • இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான். • தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான். • ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்" • கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான். • ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது. • சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன். • கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. • கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல். • தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில் நோர்வே அரசின் பங்கு குறித்த ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகளைச் சீர்குலைப்பதில் நோர்வே பிரதான பங்கு வகித்திருக்கிறது. தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருந்தொகைப் பணம் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கும் அழிவுகளை ஏற்படுத்துவதிலும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அண்மையில் லிபியாவை ஆக்கிரமிப்பதிலும் இத் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு பிரதானமானதாக அமைந்திருந்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னார்வ நிறுவனனங்கள் சீரழிவிற்கு எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நோர்வே நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நோர்வே சமாதான முனைப்புக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக